இது ஒரு மீள்பதிவு. எல்லோரும் சிறுகதைகளை போட்டு அசத்தும்போது, நான் எழுதிய ஒரே கதையை இங்கு போட நினைத்தேன். முக்கியமாக சிறில் அவர்களின் கதை பற்றிய பதிவைப் பார்த்ததும்தான் எனக்கும் இதை மீள்பதிவு செய்யத் தோன்றியது. இது ஒரு நீதிக்கதை. படித்துவிட்டு கோபப்படுபவர்கள் சிறில் அவர்கள் மீது கோபபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உப்பிலி சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் சமீபத்தில் 1954-55 கல்வியாண்டில் நான்காம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பூகோளப் பாட வகுப்பில் ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் உப்பிலியை எழுப்பி ஒரு கேள்வி கேட்டார். இந்தியாவின் வரைபடத்தில் அவனை காஷ்மீரைக் காண்பிக்கச் சொன்னார். உப்பிலி "எனக்குத் தெரியவில்லை சார்" என்று கூற, ஆசிரியர் கோபம் அடைந்து "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைக் கூடத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.
அவனும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டான். அவர் அவனைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு அவன் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றான். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி அவனை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார்.
வீட்டிற்குப் போக பயந்து உப்பிலி தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது போலீஸ்காரன் மணவாளனிடம் அகப்பட்டுக் கொண்டான். போலீஸ்காரன் அவனிடம் அவன் பெயர், ஸ்கூல் எல்லாவற்றையும் பற்றி விசாரித்து விட்டு அவன் ஏன் பள்ளியில் இல்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டான். அதற்கு உப்பிலி "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றான். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்கு போக பயந்து கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
இப்போது போலீஸ்காரன் மணவாளன் கோபப்பட்டான். "அவங்க செஞ்சது சரிதாண்டா. நீ இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி அவனை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தான். அங்கு உப்பிலி என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்க அங்குள்ள போலீஸ்காரன் ஷஹாபுத்தினிடம் அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேலையாக ஷஹாபுத்தின் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் பிறந்து வளர்ந்தவன். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். 1947-ல் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தவன். ஆகவே தமிழில் பேச முடிந்தது. உப்பிலியிடம் என்ன நடந்தது, அவன் ஏன் பாகிஸ்தானுக்கு வந்தான் என்பதையெல்லாம் கேட்டான். அதற்கு உப்பிலி பின் வருமாறு கூறினான்.
"சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றேன். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்குப் போக பயந்து நான் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது போலீஸ்காரன் மணவாளனிடம் அகப்பட்டுக் கொண்டேன். போலீஸ்காரன் என்னிடம் என் பெயர், ஸ்கூல் எல்லாவற்றையும் பற்றி விசாரித்து விட்டு நான் ஏன் பள்ளியில் இல்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டான். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றேன். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி. பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்கு போக பயந்து கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றேன். இப்போது போலீஸ்காரன் மணவாளன் கோபப்பட்டான். "அவங்க செஞ்சது சரிதாண்டா. நீ இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பித்தான்" என்றான்.
ஷஹாபுத்தின் தலையைச் சொரிந்தான். பிறகு சொன்னான்: "இதோ பார் உப்பிலி. இந்தியர்களுக்கும் எங்களுக்கும் ஆகாதுதான். ஆனாலும் காஷ்மீர் எங்கள் இருவருக்கும் முக்கியம். அது எங்கிருக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொள்ளாத நீ இங்கு இருத்தல் எங்களுக்கும் பிடிக்கலை" என்று சொல்லி அவனை துபாய்க்கு நாடு கடத்தினான். துபாய் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உப்பிலி சாலையைக் கடக்கும்போது லாரி மோதி இறந்து போனான்.
இக்கதையிலிருந்து நீங்கள் அறியும் நீதி யாது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
10 hours ago
21 comments:
காஷ்மீர் எங்கே இருக்குன்னு மொதல்லெ தெரிஞ்சுக்கணும்.
ஆனா 58 வருஷமா தெரிஞ்சுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோமே!
எல்லாம் சரிதான் துளசி அவர்களே. முதலில் இக்கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நீதியைக் கூறுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதே அதே. சாலையைக் கடக்கும்போது பார்த்துப் போகணும்.
"ரோட்டை க்ராஸ் பண்ணும்போது பார்த்து நடக்கணும்."
சரியான விடை.
சமீபத்தில் 1963-ல் கிண்டி பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்தபோது நான் ஸ்கூலில் கேட்ட இக்கதையை நண்பர்களுக்குக் கூறினேன். கூறும்போது மசாலா எல்லாம் நிறைய சேர்த்தேன். முதலில் சிரித்த முகத்துடன் கேட்ட நண்பர்கள் முகத்தில் போலீஸ்காரன் வரும் இடத்தில் கலவரம் மூண்டது. ஷஹாபுத்தீனைப் பற்றிப் பேசப் பேச அவர்களுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. கடைசியில் நீதியைக் கூறுமாறு கேட்டப் போது பாதிப் பேர் கழுத்து அறுந்து தொங்கிய ரேஞ்சுக்கு போய் விட்டனர். பிறகு நானே நீதியைக் கூற, வீறு கொண்டெழுந்து மைதானம் முழுக்க என்னைத் துரத்தினர். நல்ல வேளையாக கெமிஸ்ட்ரி ப்ரொஃபசர் அருட்பிரகாசம் அப்பக்கம் வந்தாரோ, அவர் பின்னால் சென்று ஒளிந்து கொள்ள முடிந்தது. "இருடி, உனக்கு அப்புறம் வச்சுக்கிறோம்" என்று கருவியபடி நண்பர் கூட்டம் அப்பால் சென்றது.
நல்ல வேளையாக அடுத்த நாள் என் நண்பன் ஆர்.எஸ். ராமனாதன் இதே கதையைக் கூறி துரத்தப்பட்டு உண்டை வாங்கினான். என் பக்கத்திலிருந்து கவனம் திருப்பப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: துளசி அவர்களின் "கொழுகொழு கன்றே, கன்றின் தாயே, தாயின் ஆயாவே..." என்றெல்லாம் செல்லும் பாட்டுதான் எனக்கு இக்கதையை ஞாபகப்படுத்தியது.
டோண்டுவின் விடை தவறு ;-))
இக்கதையின் மிக முக்கியமான நீதி, டோண்டு அவர்களிடம் இன்னொறு முறை உப்பிலி ஏன் வகுப்பில் இல்லை என்று தப்பி தவறி கூட கேட்டுவிட கூடாது.
இக்கதையிலிருந்து நீங்கள் அறியும் நீதி யாது?
காஷ்மீர் எங்கே இருக்குன்னு தெரியலேன்னா, நீங்க விசா பாஸ்போர்ட் இல்லாமலே பாகிஸ்தான், துபாய் போன்ற நாடுகளுக்கு போகலாம். ஆனா ஒழுங்கா ரோடை கிராஸ் பண்ணலேன்னா மவனே நேரா மேல்நாடுதான்!
டோண்டு சார்,
எங்க நடேசன் வத்தியாரே தேவலாம். நிமிட்டாம்பழம் வாங்குனா தொடை தான் வலிக்கும். உங்களதுள என் கழுத்தே அறுந்து தொங்குது! :)
பரவாயில்லையே, அதுக்குள்ளவா முழுக்கப் படிச்சுட்டீங்க?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"நான் கண்ட நீதி: எந்த ஒரு நீதியை சொல்லும்போது தெளிவா, ரத்தின சுருக்கமா சொல்லணும்.. இவ்ளோ பெருசா ரம்பம் போடக்கூடாது :))))"
இல்லையே நீதி ஒரு வரியில்தானே இருந்தது!
இக்கதையின் இன்னொரு நீதி என்னவென்றால், பழி ஓரிடம், பாவம் ஓரிடம். அதாவது முதல் நாள் உதையிலிருந்து நான் தப்பித்தேன், அடுத்த நாள் அப்பாவி ஆர்.எஸ். ராமனாதன் தப்ப இயலவில்லை. இத்தனைக்கும் அவனுக்கு இக்கதையைச் சொன்னது நானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரவிச்சந்திரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://vssravi.blogspot.com/2006/03/blog-post.html
CEG என்பது கிண்டி பொறியியல் கல்லூரிதானே? நான் அதிலிருந்து சமீபத்தில் 1969-ல் பட்டம் பெற்றேன்.
அக்கல்லூரியில் நான் சேர்ந்த வருடம் பலருக்கு ஒரு நீதிக் கதை சொல்லி டென்ஷன் செய்ததைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_25.html
இப்பின்னூட்டத்தின் நகலை மேலே குறிப்பிட்ட என் பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் அறிந்த நீதி,
டோண்டுவுக்கு மற்றவர் கழுத்தை அறுக்கவும் தெரியும்.
அப்பாவி ஆர்.எஸ். ராமனாதனுக்குத் தெரிந்த நீதி - டோண்டுவின் கதையை அவர் மற்றவர்களிடம் சொல்லி அடி வாங்கும்வரை, வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது.
தொடரட்டும் உங்கள் வலைப்பதிவுப்பணி.
நன்றி சிவா அவர்களே.
அப்படியெல்லாம் எல்லாரையும் அறுத்த நான் 1971-ல் ஒரு ஞாயிற்றுக் கிழமை திடீரென மாறினேன். அதைப் பற்றி நான் போட்டப் பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
"என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை". அருமையான பதிவு. 1971-லேயே நீங்கள் ஒரு duplicate டோண்ட்டுவைப் பார்த்திருக்கிறீகள் -)
நன்றி சிவா அவர்களே. டூப்ளிகேட் டோண்டு? நான் அந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை. Interesting!
அன்புடன்,
டோண்டு ராகவன்
உப்பிலி ஒவ்வொருத்தர் கிட்டேயா அவன் கதைய சொல்லுறது கொஞ்சம் அறுவை தான் சார்..... சுருக்கமாச் சொல்லித் தொலைச்சிருக்கலாம் அந்த உப்பிலி பையன்...
எனக்கு கிடைத்த நீதி : ரம்பத்தை விட சில நேரங்களில் எழுத்துக்கு கூர்மை ஜாஸ்தி :-)
"உப்பிலி ஒவ்வொருத்தர் கிட்டேயா அவன் கதைய சொல்லுறது கொஞ்சம் அறுவை தான் சார்....."
கொஞ்சம் அறுவையா? மகா அறுவை சார். ஆனால் அதுதானே கதையின் நோக்கம்.
இதே கதையை தொண்ணூறுகளில் தில்லியில் உள்ள குழந்தைகளிடம் கூறுகையில் (ஹிந்தியில்தான்) துபாயில் கூட இம்மிக்ரேஷன் அதிகாரிகளிடம் உப்பிலி இக்கதையைக் கூறுவதாக சேர்த்திருந்தேன். அதை இங்கு கருணையுடன் வெட்டி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
துபாஷ்? துபாஷி (interpreter) என்று குறிக்கிறீர்களா? சரி, சரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உப்பிலி சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் சமீபத்தில் 1954-55 கல்வியாண்டில் நான்காம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பூகோளப் பாட வகுப்பில் ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் உப்பிலியை எழுப்பி ஒரு கேள்வி கேட்டார். இந்தியாவின் வரைபடத்தில் அவனை காஷ்மீரைக் காண்பிக்கச் சொன்னார். உப்பிலி "எனக்குத் தெரியவில்லை சார்" என்று கூற, ஆசிரியர் கோபம் அடைந்து "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைக் கூடத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.
அவனும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டான். அவர் அவனைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு அவன் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றான். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி அவனை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார்.
வீட்டிற்குப் போக பயந்து உப்பிலி தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது போலீஸ்காரன் மணவாளனிடம் அகப்பட்டுக் கொண்டான். போலீஸ்காரன் அவனிடம் அவன் பெயர், ஸ்கூல் எல்லாவற்றையும் பற்றி விசாரித்து விட்டு அவன் ஏன் பள்ளியில் இல்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டான். அதற்கு உப்பிலி "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றான். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்கு போக பயந்து கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
இப்போது போலீஸ்காரன் மணவாளன் கோபப்பட்டான். "அவங்க செஞ்சது சரிதாண்டா. நீ இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி அவனை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தான். அங்கு உப்பிலி என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்க அங்குள்ள போலீஸ்காரன் ஷஹாபுத்தினிடம் அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேலையாக ஷஹாபுத்தின் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் பிறந்து வளர்ந்தவன். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். 1947-ல் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தவன். ஆகவே தமிழில் பேச முடிந்தது. உப்பிலியிடம் என்ன நடந்தது, அவன் ஏன் பாகிஸ்தானுக்கு வந்தான் என்பதையெல்லாம் கேட்டான். அதற்கு உப்பிலி பின் வருமாறு கூறினான்.
"சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றேன். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்குப் போக பயந்து நான் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது போலீஸ்காரன் மணவாளனிடம் அகப்பட்டுக் கொண்டேன். போலீஸ்காரன் என்னிடம் என் பெயர், ஸ்கூல் எல்லாவற்றையும் பற்றி விசாரித்து விட்டு நான் ஏன் பள்ளியில் இல்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டான். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றேன். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி. பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்கு போக பயந்து கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றேன். இப்போது போலீஸ்காரன் மணவாளன் கோபப்பட்டான். "அவங்க செஞ்சது சரிதாண்டா. நீ இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பித்தான்" என்றான்.
ஷஹாபுத்தின் தலையைச் சொரிந்தான். பிறகு சொன்னான்: "இதோ பார் உப்பிலி. இந்தியர்களுக்கும் எங்களுக்கும் ஆகாதுதான். ஆனாலும் காஷ்மீர் எங்கள் இருவருக்கும் முக்கியம். அது எங்கிருக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொள்ளாத நீ இங்கு இருத்தல் எங்களுக்கும் பிடிக்கலை" என்று சொல்லி அவனை துபாய்க்கு நாடு கடத்தினான். துபாய் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உப்பிலி சாலையைக் கடக்கும்போது லாரி மோதி இறந்து போனான்.
-----
இந்தக் கதையிலிருந்து அறியப்படும் நீதி என்னன்னு டோண்டு சார் கேட்டாரா.. உடனே நான் பதில் தெரியாம, என்னோட பக்கத்திலே இருந்த ப்ரெண்டுகிட்ட....

இதனால் அறியும் நீதி என்ன அப்படீன்னு கேட்டேன்.
அவருக்கும் உடனே விடை தெரியல... நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து.. அதுக்கும் பக்கத்திலே இருந்த இன்னொரு நண்பர்கிட்ட போய்...
சார்................எங்கே ஓடுறீங்க?!
மாயவரத்தான் அவர்களே,
:))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
டைரக்டர் சேரன்கிட்ட சொல்லுங்க இந்தக்கதைய... காவியமா ஒரு படமா எடுப்பார்...
வாய்ப்பே இல்லை சார். பெரியவங்க பெரியவங்கதான்.
சார் நீதி முன்பே சொன்னது மாதிரி. ரோட்டை கிராஸ் பண்ணும் போது சரியா பார்த்து கிராஸ் பண்ணனும்.
ரெண்டாவது என் இடுகை மாதிரி , இந்த இடுகை மாதிரி இடுகைகளை படிச்சிட்டு மட்டும் உடனே கிராஸ் பண்ணக்கூடாது. :)
Post a Comment