இது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் பின்னூட்டத்தில் மகிழ்ச்சியே தெரிவித்தார். இப்போது மீள்பதிவு செய்வதற்கான காரணங்களைப் பார்ப்போம். சில நாட்களாக அவர் வாழ்க்கை வரலாறுக்காக எடுக்கவிருக்கும் திரைப்படத்தில் குஷ்பூ மணியம்மையாராக நடிக்கலாமா என்பது குறித்து ஒரு பெரிய விவாதம் நடை பெற்று வருகிறது. அதே போல, அவர் சிலைக்கு யாரோ சந்தனம் பூசி பொட்டிட்டு, மாலை அணிவித்து ஊதுவத்தி எல்லாம் கொளுத்தி வழிபட்டதாக ஒரு செய்தி அல்லோல்லகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பகுத்தறிவு சிங்கங்கள் அதை ஒரு பெரிய அவமரியாதையாகக் கருதி பார்ப்பனர்கள்தான் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் சீற்றத்துடன் குறிப்பிட்டனர். பிறகு அது சம்பந்தமாக கைதையிருக்கும் இருவரில் ஒருவர் படையாச்சி இன்னொருவர் நாடார் என்றானதும் சங்கடமான மௌனம் கடைபிடிக்கின்றனர்.
ஈவேரா அவர்கள் கற்பு சம்பந்தமாகக் கொண்டிருந்த, அடிக்கடி வெளிப்படுத்திய கருத்துக்களைத்தான் குஷ்புவும் வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார் என்பதைப் பார்க்கும்போது அதற்காகவே அவர் மணியம்மையாக நடிக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
இப்போது மீள்பதிவு செய்யப்பட்டதிற்கு செல்வோம். சில ஸ்பெல்லிங் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. மற்றப்படி மாற்றம் ஏதுமில்லை. பழைய பின்னூட்டங்களும் அப்படியேயுள்ளன.
Please read the following posting by Kanchi Films carefully.
'ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'
இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர்
கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்' என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.
"நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக்
கொண்டிருந்த எண்ணம் இதுதான்:
1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்
2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்
3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்
4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்
இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.
அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம், ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர், கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக் காட்டியிருப்பதையும் படித்தேன்.
அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ - அந்தக் கருத்துக்கு - அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடிமறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டு வந்திருக்கிறேன்.
இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால்அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும்." மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் -
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு, இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள், ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை, சொல்லும் செயலும் முரணானவையே, வரலாற்றுத் திரிபுகள், தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா?, வைக்கம் போராட்டம் - ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும், ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம், தேசப்பற்றில்லாத ஈவேரா,பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும், சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும் என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார் ஆசிரியர் வெங்கடேசன்.
பிற்சேர்க்கையாய் 'ஈவேராவைப் பற்றி இவர்கள்' என்று முத்துராமலிங்கத் தேவர், பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.
'ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு' என்ற முதல் அத்தியாயத்தில் இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.
"ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில் பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது."
ஈவேரா தமிழரா?
"ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர் என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்ஹ்தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர் தலைவர்' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே - அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?
'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர்' (பெரியார் ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்."
'நான் கன்னடியன்' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன்' என்று சொல்லிக் கொண்டே ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது கொஞ்சநஞ்சமல்ல.
'தமிழும் தமிழரும்' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:
''இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன், 3.கம்பன்.
இம்மூவரில்,
1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்."
20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:
"அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்."
இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை. தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!
தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும் துரோகிதானே?
இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர் பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின் பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.
இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957'ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார். பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:
"தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும்" என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால், அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, "வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு" என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா
பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள். அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.
(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)
In what way Jinnah is not a North Indian? How is the names Jinnah and Robinson so sweet to you Sir? How is the name of poor Tilak so bitter to you Sir? I am not
able to understand.
ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்
அல்லவா?
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது? அதற்கு மேல் "வடநாட்டான் திராவிட நாட்டை
சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம்" என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.
டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்
'டால்மியாபுரம்' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?
ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த சௌந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.
ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.
அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய்? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது
சொல்லலாம்.
வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா''செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய
ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.
'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம்' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே' என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம்' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய
போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
'ரோமாபுரி ராணி' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை? எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி? ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல்' என்று ஒரு கதை எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய். அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே? வேறு என்ன?
இதுவா தமிழ் நாகரீகம்?
சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். -உரை முடிந்தது-
இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது.
தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'. -விஸ்வாமித்ரா- viswamitra12347@rediffmail.com
திண்ணையிலிருந்து சுட்டது : http://www.thinnai.com/ar0311053.html
காஞ்சி ஃபிலிம்ஸின் இந்தப் பதிவைப் பாருங்கள். அடடா என்ன அற்புதம்! விஸ்வாமித்ராவுக்கு நன்றி. காஞ்சி ஃபிலிம்ஸின் பதிவை சுட்டியிட்டுக் காட்டாது முழுதும் எடுத்துப் போட்டது காரணமாகத்தான். ஒரு வேளை அப்பதிவு ப்ளாக்கர் சொதப்பலில் திடீரெனக் காணாமல் போய் விட்டால்? மேலும் நான் கூற நினைப்பது இதோ.
அறுபதுகளில் ராமாயண எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது பெரியார் ஒரு அரியக் கருத்தை வைத்தார். நினைவிலிருந்து எடுத்துக் கூறுகிறேன் என்பதையும் இப்போதே கூறி விடுகிறேன்.
"ராமாயணம், வால்மீகி ராமாயணம் மற்றும் கம்ப ராமாயணம் என்று ஒரு தாளில் எழுதி அதை எரித்து விடுங்கள். இம்மூன்று நூல்களும் கெடுதியானவை." ராமாயணம் என்றுத் தனிப்பட்ட நூல் இல்லை என்பது கூட இந்தப் பகுத்தறிவுப் பகலவனுக்குத் தெரியவில்லை.
1930-களில் தான் எதிர்த்த அதே ஹிந்தியைத் தாங்கி 1965-ல் விடுதலை கட்டுரைகள் வெளியிட்டது? ஏன்? அப்போது அவர் காமராஜ் ஆதரவாளர். அதாவது அவருடைய சமுதாய சீர்திருத்தச் செயல்கள் என்றுக் குறிப்பிடப் பட்டதெல்லாம் அவர் அரசியல் சார்பைப் பொருத்தே இருந்து வந்துள்ளது என்பது வெளிப்படையாகிறது அல்லவா?
தான் யாரை வேண்டுமானாலும் திட்டலாம், ஆனால் தன் முரண்பாடுகளை எதிர்த்துக் கேட்டால் அது தேசத் துரோகத்துக்கு சமம் என்றுதான் அவர் இயங்கி வந்துள்ளார் என்பதற்கு அவர் அரங்கண்ணலைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே சாட்சி. "பெருமாள் போட்ட சோத்தைத் தின்று, பெருமாளுக்கு எதிராகவே காரியம் செய்வது" என்பதை வேறு எவ்வாறு புரிந்துக் கொள்வது? பெண்ணுரிமைக்காகப் பேசிய அவர் தன் முதல் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்த உத்தமப் பெண்மணியின் மனத்தை நோகடித்தது எங்கனம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மாணவர்களின் காந்திய நடைபயணம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு, முனை அமைப்பின் சார்பில் நாங்கள் நடத்திய நேர்வழி
விழாவில் கலந்து கொண்டமைக்கு நன்றி. விழாவில் அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை
அன்று ஒ...
16 hours ago
57 comments:
'அய்யா'
அய்யா பற்றி புதிதாய் ஏதாவது இருந்தால் அவிழ்த்து விடுங்கள்!
அரைத்து-அரைத்தது புளித்தும் போய்விட்டது.
நன்றி.
வாசன்
// இதை எழுதியிருப்பவர்
கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.
நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்'//
இந்த தகவல் புளுகு என்று நினைக்கிறேன். காஞ்சி ஃபில்ம்ஸில் என் பின்னூட்டத்தை பார்க்கவும்.
மற்ற புளித்த மாவு, காய்ந்து போன மலம் குறித்து டோண்டுவிடம் பேச எதுவுமில்லை.
கூறியவர் தாழ்த்தப்பட்டவரா இல்லையா என்பதா பிரச்சினை? எது எப்படி என்றாலும் அது உண்மையா இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள். 1965 பற்றி ஏற்கனவே கூறி விட்டேன். 1967-க்கு வருவோம். பெருந்தன்மையாக அண்ணா அவரிடம் சென்று ஆசி பெற்று தன் மேன்மையை நிரூபித்தார். சிறிது காலம் கழித்து ஒரு பத்திரிகையில் (குமுதமா விகடனா என்று ஞாபகம் இல்லை) பெரியார் காமராஜருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் அண்ணா அவர்களுடன் இருக்கும் புகைப் படம் ஒன்றும் ஒன்றன் கீழ் ஒன்றாகக் காண்பிக்கப்பட்டன. இரண்டிலும் பெரியார் புன்னகை செய்துக் கொன்டிருந்தார். காமராஜரைப் பார்த்துத் தான் புன்னகை செய்தது மனப்பூர்வமானதாகயில்லை என்றும் அண்ணாவைப் பார்த்துப் புன்னகை செய்ததுதான் மனப்பூர்வமானது என்றும் கூறினார் பெரியார். நினைவிருக்கட்டும் நானே படித்தது. இரவல் தகவல் அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன், பெரியாரை இதைவிட நேர்மையாக விமர்சித்த புத்தகங்கள் இருக்கின்றன. பரிதாபகரமாக மிகவும் மேலோட்டமாக, சிறுபிள்ளைத்தனமாக எழுதப்பட்ட புத்தகத்தை ஒரு விமர்சனமாக முன் வைக்கும் உங்கள் உற்சாகம் பெரியாரைப் பற்றிய உங்கள் அறிவையும், உங்கள் உள்நோக்கத்தின் தன்மையையும் காட்டுகிறது. இது பெரியாரை நன்கு அறிந்தவர்களுக்கு எந்த புதிய செய்தியையும் தராது. உங்களைப் பற்றிய செய்திகளைத் தான் தருகிறது.
இதோ ஆரம்பித்தாகி விட்டது அடுத்த வெடிப்பு. அய்யா! இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த விசயங்கள் வலைப்பதிவில் ஆங்காங்கே உருட்டப்படும், குத்தப்படும், அடிக்க படும். செயின் ரியாக்ஷன் ஆரம்பித்து வைத்த நல்ல பதிவு. அப்புறம் இத வச்சே நாங்க நாலு நாளைக்கு பதிவை ஓட்டனுமே....
போங்கைய்யா இந்த மாதிரி பதிவுகளை படிக்கவே வெறுத்துப் போகிறது.
எது எப்படியொ....ஆனால் தமிழகத்தில் சாதிகளின் தாக்கம் குறையவும், மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் இங்கு பெயருக்குப் பின்னால்
தங்களது சாதி பெயரை எழுதுவது தவிர்க்கபட்டதிர்க்கும் பெரியாரின் பங்கு மிகமுக்கியமானது என்பதை மறுக்க முடியது
இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள் விஜய். அடுத்த முறை சென்னை வரும்போது அவசியம் வீட்டுக்கு வரவும், முடிந்தால் மனைவி மற்றும் குழந்தையுடன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெரியாரை, யார்? என்று கேட்கும் இந்த தலைமுரையினருக்கு, பெரியாரை அரிமுகம் செய்ய இப்படியான எதிர்விமர்சன நூல்களே தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த விமர்சன நூலுக்கு அமையப்போகும் பதில்கள், பெரியாரை கொஞ்சம் தான் தெரியும் என்று சொல்லும் என்னை போன்றவர்களுக்கு, பெரியாரை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே பொல் இந்த நூலை எழுதியவரின் அடையாளம் நமக்குத் தேவையில்லை. அதை யார் உயர்த்தி பிடித்துள்ளார்கள் என்பதை தான் கவனிக்க வேண்டும். சோ.ராமசாமிக்கு ஜால்ரா போடும் விசுவாமித்ரன் என்பது ஒன்றே போதும் இந்த நூலின் நோக்கத்தை புரிந்துகொள்ள. அனால் இந்த நூல் பெரியாரின் பெரியாரிசத்தை இன்னும் உச்சிக்கு கொண்டுபோகும் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். கீதையின் மறுபக்கத்திற்கு எதிர்வினை என்று நினைத்து யானை தன் தலையிலேயே மண்ணைவாரி போட்டு கொண்டுவிட்டது. இந்த நூலுக்கு நாம் ஒரு வகையில் நன்றி செலுத்தியாகதான் வேண்டும்.
என்னுடைய பதிவை முழுவதுமாக மீண்டும் ஒரு முரை வெளியிட்டதற்கு நன்றி திரு.ராகவன். காஞ்சி பிலிம்ஸ்க்கு இருக்கும் வாசகர் supportடை விட உங்களுக்கு அதிகம்.
// இதை எழுதியிருப்பவர்
கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.
நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்'//
கண்டிப்பாக அதில் சந்தேகம் இல்லையென்பேன்.தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த ஒருவரை விட்டே இந்த நூலை எழுத வைத்த "அவாளின்" சாணக்கியதனத்தை புரிந்துகொள்ள "மற்ற" சமூகத்திற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டு காலம் பிடிக்குமோ ?
(corrected few spelling mistakes)
//After having several ugly fights once upon a time in Thinnai forum, //
Not true! I never had a single fight with this guy! Never intended to talk even.
//I dont visit any of the blogs that you mentioned too.//
Not true! Read the rest of his comments, which clearly proves the opposite!
//The author Ma.Venkatesan himself declares that he is a dalit. //
Eventhough I am against Dondu, I will believe him. If he exactly quotes, I mean exactly word by word quotes, what Venkatesan has said. Anyway mine is only a doubt, based on the lies this guy has said in other places, and because the party is Forward Bloc. Anyway even if my doubt becomes false, that doesn't prove anything. I will agree that my guess is wrong!
//As those perverts have nothing to dispute the contents of that book,//
The point is, not able to see any content.
//It was clearly photographed when Cho was dexterously handling those acid bottles. //
The main evidence(i have) is the Thuglak, which describes the event. I was a regular reader of thuglak then. It doesn't say any such thing. Nor it contains any photos of "Cho dexterously handling those acid bottles". Does n't say cho catches acid bottles like a cricket player(forget whether it is possible to catch bottles containing acid, and throw somewhere).If one takes cho and (that particular)thuglak into account, that will imply this guy's narration is a lie.
//There was no need for me to project Cho as a hero or a cricketer. Indeed he was a cricketer was another fact.//
In thinnai what he says is the following ...
"...அவற்றில் ஒன்று வெடித்திருந்தாலும் சோ அன்று காலியாகியிருப்பார். ஒரு திறமையான கிரிக்கெட் ஃபீல்டருக்குரிய லாவகத்துடன் சட் சட்டென அனைத்தையும் பிடித்து சோ, கீழே மன்ணில் மீது எறிந்து கொண்டிருந்தார். ...
http://thinnai.com/le0311056.html
So he has a need, and he has said. But unfortunatley this was neither reported in Dinamani, nor (more importantly) in the Thuglak issue I am talking about. So this proves what I said about his lie regarding the acid attack.
//Again I dont indulge in spreading rumors or breathing on filthy language as 'Asadu', 'Paappaan', 'Arupen' , "adipen', 'Moothiram', 'Malam', 'Abishtu', 'Ambi', ' thevadia mavan' etc etc. //
This proves what he says in the starting that he doesn't visit 'those' blogs is another lie.
I don't have any intention to talk with this guy. I am ready to talk with Dondu (anything under the sun except politics, especially not periyar or Cho), and never to argue anything.
Thanks!
தங்கமணி, காஞ்சி என்னிடம் ஏதோ கேட்ட மாதிரி இருந்ததால் பதில் சொன்னேன். அப்போது சொல்லிவிட்டதால் இப்போது சொல்கிறேன். மற்றபடி வேலையத்து இதற்கு பதில் சொல்ல மாட்டேன்.
நீங்களும் "பெரியாரை இதைவிட நேர்மையாக விமர்சித்த புத்தகங்கள் இருக்கின்றன.." என்று தொடங்கி சொல்வதெல்லாம் எதற்கு? யாருக்கு புரிய போகிறது? சும்மா ஜாலியாய் எடுத்துகொள்வோமே!
சாதி வேறுபாடுகள் ஓரளவேனும் ஒழிய பெரியார் தான் காரணம் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை.
நீங்களும் உடன்படுவீர்கள் என நினைக்கிறேன்.
பெரியாரும் ஒரு காரணம் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். அவருக்கு முன்பே பலர் இக்காரியத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
பெரியாரிடம் இருக்கும் குறைகளில் முக்கியமானதாக நான் கருதுவது அவருடைய பார்ப்பன துவேஷம்தான். எல்லா சாதிகளிலும் சாதி வெறியர்கள் உண்டு. தலித்துகளுக்கெதிரானக் கொடுமைகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத மற்ற "உயர் சாதி"யினர்தான் செய்தனர். ஆனாலும் பெரியாரோ அவர் சீடர்களோ எல்லாவற்றுக்கும் பார்ப்பனரே காரணம் எனப் பிரசாரம் செய்தனர். இப்போது கூட வலைப் பூக்களில் ஆ ஊ என்றால் பார்ப்பனர் செய்தக் கொடுமை என்றுப் பேசப் புறப்பட்டு விடுகிறார்கள்.
இவ்வளவு ஏன். வாஞ்சி நாதனின் வித்வைக்குப் பென்ஷன் தரக்கூடாது என்று விடுதலை அக்காலக் கட்டத்தில் கட்டுரையே எழுதிற்று. வாஞ்சி நாதன் பார்ப்பனன் என்பதே அந்த ஆட்சேபத்துக்குக் காரணம். அதை இணையத்தில் நான் சுட்டிக் காட்டியப் போது ஆஷ் துரையை மஹாத்மா ரேஞ்சுக்கு உயர்த்தினர். அவர் ஜாதி ஒழிப்புக்குப் பாடுபட்டாராம் ஆகவே வாஞ்சிநாதன் அவரைக் கொன்றாராம். அதற்கு நான் கொடுத்த பதில் இதோ:
"அறுபதுகளில் வாஞ்சிநாதனின் விதவைக்குப் பென்ஷன் தரக்கூடாது என்பதற்கு விடுதலை பத்திரிகை வைத்த வாதங்களை நானே படித்ததைத்தான் எழுதினேன். இது வாய் மொழிச் செய்தி அல்ல. நேரடிச் செய்தி ஆகும். ஆஷ் துரை கொலை சமயத்தில் வெளி வந்த ஜஸ்ட்டிஸ் கட்சி சார்பு பத்திரிகையின் (பெயர் நினைவில்லை) குறிப்பு சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன். நான் சாதாரணமாக எல்லாப் பத்திரிகைகளையும் வாங்குவதால் இதன் பெயரும் சரியாக நினைவில்லை. ஆனால் அக்குறிப்பும் நான் அறுபதுகளில் நேரடியாகப் படித்ததுடன் ஒத்துப் போனதால் அதையும் குறிப்பிட்டேன். வாதம் ஏன்? சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட விடுதலை இதழைப் பார்த்துக் கொள்ளுங்கள். அக்குறிப்பு வந்த சில நாட்களிலேயே அந்த ஏழை விதவை இறந்துப் போனார். அதிலிருந்து குறிப்பிட்ட இதழின் தேதியைக் கணிக்கலாம். அதே போல ஆஷ் துரையின் கொலை சம்பந்தமாக ஜஸ்டிஸ் கட்சிச் சார்பு பத்திரிகைகள் என்ன எழுதின என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்.
முக்கியமாக பார்ப்பன எதிர்ப்புப் பத்திரிகைகளில் ஏதாவது செய்தியில் குற்றம் பிராம்மணரால் இழைக்கப்பட்டிருந்தால் உடனே பார்ப்பனக் குற்றவாளி என்றெல்லாம் எழுதுவார்கள். அதுவே வேறு ஜாதியனராக இருந்தால் வெறுமனே பெயரை மட்டும் போட்டு அவர்கள் என்ன ஜாதி என்பதை எழுத மாட்டார்கள். அப்போது அதற்குப் பதில் இல்லை. இப்போது வருமோ என்னவோ, பார்க்கலாம். பார்க்க: http://arunviews.blogspot.com/2004/11/blog-post_12.html
இவ்வளவுக்கும் காரணமானப் பெரியாரயும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்கையில்தான் தெரிகிறது அவர் எவ்வாறு பகுத்தறிவுக்கு விரோதமானக் காரியங்களைச் செய்து வந்தார், தன் கொள்கையையே எப்படிக் குழிதோண்டிப் புதைத்தார் என்று. பகுத்தறிவுப் பகலவன் என்றப் பெயருக்கு அவர் உரியவரா?
சோ அவரைப் பற்றி எழுதியது என் ஞாபகத்திலிருந்து. "இ.வ.ரா. பெரியார்" என்றுத் தோன்றும் வண்ணம் அவர் சில சமயம் நடந்துக் கொண்டாலும் 'இவர்களா பெரியார்கள்' என்று அவர் சிலரைப் பற்றிக் கேட்டதும் நியாயமாகவே இருந்தது." அவ்வாறு நடு நிலையில் எழுதுவதுதான் சோ!
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார், இந்த 'தாயதிக்காரா' என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
ரோஸா அவர்களே,
நான் அறிந்தவரை, தாயாதி என்றுத் தாய் வழி உறவினரையும் பங்காளி என்றுத் தந்தை வழி உறவினரையும் கூறுவார்கள்.
வீடணன் சீதையை விட்டு விடும்படி ராவணனுக்கு அறிவுரை கூறிய போது ராவணன் அவனிடம் யானைகள் உதாரணம் கூறினான். அதாவது பழகிய யானையை வைத்துத்தான் காட்டு யானையைப் பிடிப்பார்களாம். ஆகவே காட்டு யானை ஒன்று இவ்வாறுக் குறை கூறியதாம், :இந்தத் தாயாதி யானைகளின் தொல்லை தாங்கவில்லை" என்று. இதெல்லாம் நான் சமீபத்தில் 1956-ல் ராஜாஜி கல்கியில் எழுதி வந்த வாரத் தொடரான "சக்கரவர்த்தித் திருமகனில்" படித்தேன்.
வேறு ஏதாவது சந்தேகம்? எப்போது உங்கள் மாமனார் ஊருக்கு வருகிறீர்கள்? நிறையப் பேச வேண்டியுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிகவும் நன்றி டோண்டு ஸார்! ரொம்ப நாளாய் சந்தேகம், சுவாரசியமாக பதிலளித்திருந்தீர்கள்.
செப்டம்பர் இறுதியில் கிளம்பிதான் இந்தியா வர முடியும். நிச்சயம் சந்திப்போம்! அரசியல் தவிர மற்றவற்றை பேசலாம்!
பெரியார் தினமும் பல் தேய்க்க மாட்டார், மூக்கு பொடி போடுவார் - இது போன்ற ஒன்னாங்கிளாஸ்
கட்டுரை கிடைக்கவில்லையா?
வைக்கத்தில் கலந்து கொண்டவர்களின் பேரமார்களும் வலையில் இருக்கிறார்கள்.
ஆகவே அளந்து புளுகவும்.
ஒன்று மட்டும் தெரிகிறது. பெரியார் போய் இத்தனை வருடங்கள் ஆகியும் பெரியார் பெயரைச்
சொன்னால் நிறைய பேருக்கு வயிற்றில் புளி கரைக்கிறது. இல்லையெனில் , இந்த குப்பையெல்லாம் பிரசுரிக்கவேண்டிய
அவசியம் என்ன? அதுவே பெரியாரின் வெற்றி.
"ஒன்று மட்டும் தெரிகிறது. பெரியார் போய் இத்தனை வருடங்கள் ஆகியும் பெரியார் பெயரைச் சொன்னால் நிறைய பேருக்கு வயிற்றில் புளி கரைக்கிறது. இல்லையெனில் , இந்த குப்பையெல்லாம் பிரசுரிக்கவேண்டிய அவசியம் என்ன? அதுவே பெரியாரின் வெற்றி."
இதில் என்ன வெற்றி கண்டீர்கள் ஆதிரை அவர்களே? நான் எழுதியதின் சாரம் இதோ:
சமயத்துக்கேற்ப தன் கொள்கையானப் பொருந்தாத் திருமண எதிர்ப்பைத் தானே மீறியவர். அதை எடுத்துக் காட்டியவர்களைக் கண்ணீர் துளிகள் என்றுக் கேலி செய்தவர். அதற்காகக் கட்சியையே உடைத்தவர். 1965-ல் ஹிந்தியை ஆதரித்துக் கட்டுரை வெளியிட்டவர். அக்காலக் கட்டத்திலேயே அவற்றை நான் படித்தவன் என்றுக் கூறியுள்ளேன். ராமாயணம், கம்ப ராமாயணம் மற்றும் வால்மீகி ராமாயணம் என்பவற்றைத் தனிதனி நூலாக அடையாளம் கண்டவர். ராமாயணம் என்றுத் தனியாக இல்லை. அது அதன் ஆசிரியர் பெயருடன் சேர்த்து அறியப்படும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர். ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழி என்றுப் பார்ப்பன த்வேஷத்தை வளர்த்தவர். இதில் எல்லாம் எங்கே பகுத்தறிவு வந்தது?
ஒன்றே ஒன்றுதான் இங்குத் தெளிவாகிறது. பகுத்தறிவு என்று பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் அவர் சாயம் ஒரு நிமிடத்தில் வெளுத்து விடும் என்பதுதான் அது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் முத்துராமலிங்கத் தேவரின் மறுபக்கம் என்ற பெயரில் நூல் எழுதினால் அதனையும் ஃபார்வார்டு பிளாக் கட்சி வெளியிடும், ம. வெங்கடேசன் நூல் அறிமுகம் செய்வார் என்று நம்புகிறேன்.
(avar 500 kalyanam panninalum enakku prachinai illai.)
அப்போது பெரியார் ஒரு அரியக் கருத்தை வைத்தார். நினைவிலிருந்து எடுத்துக் கூறுகிறேன் என்பதையும் இப்போதே கூறி விடுகிறேன்.
ninaivilirunthu kuuraamal aatharaththai vaiththaal pesalam.
dinamalar vasakar pol ezuthiyirupathai vaithu enna pesuvadhu. avar ezhudhiya katuraigak evvalavo ullana. ungaludaya ninaivai vaithudhan periyarin arivai therindhukolla venduma?
periyar illamal irundhal indha puthagathai ezudhiyavar palliku sendrirukka mudiyuma, theruvil seruppu anindhu nadanthirukka mudiyuma, indru indha puthagamdhan dhan eludhi irukka mudiyuma?
ரோஸா அவர்களே,
டிஸ்கியில் எழுதியதை ஒரு புது வோர்ட் கோப்பில் நகல் எடுக்கவும். பிறகு வியூ மெனுவில் பார்மாட்டிங்கை செக் செய்து விடவும். கோப்பில் உள்ள டெக்ஸ்டை தெரிவு செய்து எழுத்துரு ஃபீல்டில் டிஎஸ்சி_ஆவாரங்கலை தேர்ந்தெடுக்கவும். டெக்ஸ்டை இப்போது தமிழில் படிக்கலாம். நான் அவ்வாறுதான் என்னுடையப் பதிவுகளை வன் தகட்டில் சேமித்துக் கொள்கிறேன். சிறிது முயற்சி செய்வதில் என்னப் பிரச்சினை? தேவையானால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை அளித்தால், நான் சேமித்து வைத்ததை பிடிஎஃப் ஆக மாற்றி அனுப்புகிறேன். ஒரு நிமிட வேலை அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ராகவன், பெரியாரை இதைவிட நேர்மையாக விமர்சித்த புத்தகங்கள் இருக்கின்றன. பரிதாபகரமாக மிகவும் மேலோட்டமாக, சிறுபிள்ளைத்தனமாக எழுதப்பட்ட புத்தகத்தை ஒரு விமர்சனமாக முன் வைக்கும் உங்கள் உற்சாகம் பெரியாரைப் பற்றிய உங்கள் அறிவையும், உங்கள் உள்நோக்கத்தின் தன்மையையும் காட்டுகிறது."
தங்கமணி அவர்களே, புத்தகத்தை நீங்கள் முழுக்கப் படித்தீர்களா? நானும் படிக்கவில்லை. ஆனாலும் படித்தவரை ஆதாரம் காட்டித்தான் எழுதப் பட்டதாகத் தோன்றுகிறது. புத்தகத்தில் தவறுகள் இருந்தால் அவற்றைக் குறிப்பிட்டுக் காட்டலாமே?
உற்சாகம்? அதில் என்ன சந்தேகம் ஐயா? கொச்சை வார்த்தைகளால் பார்ப்பனரையும், தமிழர்களையும், தமிழையும், தமிழ் நூல்களையும், இந்துக் கடவுள்களைப் பற்றியும் எழுதி வந்தவர் பெரியார். அவருடைய மறுபக்கத்தை வெளிச்சம் காட்டுவதை விட எனக்கு வேறு எது உற்சாகத்தைத் தரும் என நினைக்கிறீர்கள்? கடவுள் சிலைகளை உடைத்தவரின் பிம்பத்தை உடைப்பதை விட எனக்கு வேறு என்ன வேலை? ஆனால் அதை செய்யும்போது அவரைப் போல நான் கொச்சையாக எழுதவில்லை என்பதைக் கவனிக்கவும். அவர் வீட்டிற்கு வருபவர்களை மிக்க மரியாதையுடன் வரவேற்று எதிர்க் கருத்துடையவரிடம் கூட இனிமையாகப் பேசுவார் என்பதை நானே எடுத்துக் காட்டியுள்ளேனே.
"இது பெரியாரை நன்கு அறிந்தவர்களுக்கு எந்த புதிய செய்தியையும் தராது." அதாவது எல்லாம் தெரிந்துக் கொண்டே அவர் பகுத்தறிவுப் பகலவன் என்றுக் கூறுவதோடு மற்றவர்களும் அதை நம்ப வேண்டும் என்றுப் பிரசாரம் செய்கிறீர்கள். நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒன்று மட்டும் புரிந்துக் கொண்டேன். மூட நம்பிக்கை என்பது எல்லாத் தரப்பிலும் உள்ளது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று 2050 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வள்ளுவர் கூறியுள்ளார் (1955-ல் வள்ளுவர் 2000 ஆண்டுகள் முன்னால் இருந்தவர் என்று எங்கள் 5-ஆம் வகுப்பு வாத்தியார் ரங்கா ராவ் கூறியிருக்கிறார்).
கடவுள் பக்தியை மூட நம்பிக்கை என்றார் பெரியார். அவர் மீது இப்படி கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்ததும் மூட நம்பிக்கை என்று நாங்கள் கூறுகிறோம்.
இத்தருணத்தில் நான் கேள்விப்பட்ட இன்னொன்றையும் இங்கு முன் வைக்கிறேன். பெரியார் அவர்கள் சமாதியில் சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து மொட்டைப் போடுவதாகவும் கேள்விப் பட்டேன். இன்னும் அந்தப் பக்கம் நான் போய் பார்க்கவில்லை. இதில் சிறிதும் உண்மையில்லை என்று யாராவது கூறினால் அவருக்கு நன்றி சொல்வேன். இது உண்மையாக இருப்பின் அதை விடப் பெரியாரின் நினைவுக்கு அவமதிப்பு இருக்க முடியாது என்பதையும் கூறி விடுகிறேன்.
அதே நேரத்தில் எதையாவது நம்பாமல் மக்களால் இருக்க முடியாது என்பதும் மனித இயல்பே. காந்தியை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தினார்கள். அதையே பெரியாருக்கும் செய்கின்றனர்.
பணம் படைத்தவன் படத்தில் ஒரு பாட்டு வரும். அதில் "தனக்கொரு வழி செல்லாது என் தலைவன் வழி நடப்பான்" என்று இன்னும் பிறக்காத மகனுக்காகப் பாடுவார் எம்.ஜி.ஆர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுட்டிப் பையரே, முத்துராமலிங்கத் தேவரின் மறுபக்கம் என்றுப் புத்தகம் எழுதினால் அதைப் போடுவது விடுதலைக்காரர்களே. முடிந்தால் எழுதுங்கள். யார் தடுத்தது?
ஆதிரை அவர்களே. என் நினைவிலிருந்து எழுதுவதில் என்னக் குறை கண்டீர்கள்? நான் அவற்றையெல்லாம் படித்தது அறுபது அல்லது எழுபதுகளில் என்பதை நினைவில் கொள்ளவும். என் நினைவுத் திறன் இன்னும் நன்றாகவே உள்ளது, சமீபத்தில் 1952-ல் என்னும் கூறும் அளவுக்கு. (1952-ல் எனக்கு ஆறு வயது). ஆனால் 2005-ல் அவற்றைக் காண்பிக்க வேண்டும் என்று நிச்சயமாக அறுபதுகளில் எதிர்ப்பார்த்திருக்க முடியாது.
ஹிந்து நிருபர் என் தந்தை. அவர் செய்தியைப் போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தே போடும்படி ஹிந்துவால் பயிற்சி அளிக்கப்பட்டவர். அவர் மகன் நான் அவர் பெயரைக் கெடுக்க ஒரு போதும் விரும்ப மாட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
Very interesting posting, equally amusing replies.
Few things I have found when I argue with my friends, esp. those who are extreme left on their political leanings.
They call themselves atheist, but follow and worship their leader as 'God' and his teachings as Word of God (really weird); everybody has to toe in by the leader’s word. Any different thoughts or disagreement are not at all welcome, they get physical and verbally abusive. Very much like a Cult group.
Yet they expect others to tolerate their ramblings
to me these folks comes through as equally religious in fact ‘fanatic’ is the right word, as a believer, they are also worshippers and idolaters if not of an unknown God, but their own leaders.
Note: personally I believe every individual has the right to believe in whatever they want; after all we live in a free democratic society.
நான் இது குறித்து முதலில் பேசித் தொலைத்த பாவத்தால் இப்படி விளக்கங்களை கொடுக்க வேண்டுயுள்ளது.
இந்த ஆசாமி டிஸ்கியில் எழுதியுள்ளதை (முதலில்) படிக்க மூடியவில்லை. சோ விஷயம் குறித்து.
மீண்டும் தான் சொன்னதையே திருப்பி சொல்லியிருக்கிறதே ஒழிய ஆதாரம் எதுவும் இல்லை. நான் சொன்னது'சோ கிரிக்கெட் ஃபீல்டர் போல் பாய்ந்து பாய்ந்து பாட்டிகளை பிடித்தார்' என்று இவர் சொன்னது ஒரு உண்மை சம்பவத்தின் மேல் மசாலா சேர்க்கப்பட்ட பொய். அதற்கான என் ஆதாரம் சோ வின் விவரணை, அன்று வெளிவந்த துக்ளக். அவர் சொன்னது போல் (சோ பீல்டிங் செய்யும்)போட்டோக்கள் எதுவும் கிடையாது. அதுவும் பொய்.
நான் தினமலர் படிக்கவில்லை. அதில் வந்ததாக இந்த ஆசாமி சொல்வதும் நம்பகமானது இல்லை. மேலும் துக்ளக் சொல்வதை விட்டு, பொய் செய்திகளை தரும் தினமலரை நம்ப ஆதாரம் இல்லை.
//Both Chinnakaruppan's post and my reply are in thinnai for anybody to browse through. //
ஆமாம்! நான் குறிப்பிடும் துக்ளக் ஒருவேளை டோண்டுவிடம் இருக்கலாம்.
//If people can manipulate clearly on what is available on the net and print like this, what extent they can manipulate other issues?
I leave that to the imaginations of the readers here. //
ஆமாம்!
//I can give evidences from thinnai to prove that how indcent and nasty the fights tutned out in thinnai forums. There should be some limit for fraud and utter lies. //
பாரட்டுகளுக்கு நன்றி. எடுத்துகாட்டினால் வெட்டி ஒட்டும் வேலை எனக்கு மிச்சம்.
இன்னும் சோ 'கிரிகெட் ஃபீல்டர்..' என்று சொன்னதற்கு ஆதாரம் தராததை கவனிக்கவும்.
வீட்டில் ஜப்பானிய ஆபேரெடிங் ஸிஸ்டம் இருப்பதால் என்னால் டிஸ்கியில் எழுதியதை (முதலில்) ஒட்டி பார்க்கமுடியவில்லை. இப்போது அலுவலகம் வந்தே படிக்க முடிந்தது.
முதலில் இந்த ஆசாமி சொல்வது போல் 'அச்சடித்த எதையும்' படித்து நான் திரிக்கவில்லை. இவர் மற்ற இடங்களில் சொன்ன பொய்களின் அடிப்படையிலும், பார்வர்ட் ப்ளாக் கட்சி என்ற அடிப்படையிலும் சந்தேகம் வந்தது. நான் நேரடியாய் படிக்காத காரணத்தால் அது சந்தேகம் மட்டுமே.
மற்றபடி இவர் சோ விஷயத்தில் நான் பொய் என்று சொன்னதை, பொய் என்றே மேலே ஆதாரம் தந்திருக்கிறேன். அதற்கு ஆதாரம் அன்று வெளிவந்த துக்ளக். ஆயினும் இப்போது இவரது மேற்கோளை நம்புவதை தவிர வேறு வழியில்லாததால், என் சந்தேகம் தவறு என்று ஒப்புகொண்டு, சந்தேகப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
மற்றபடி வாசிப்பவர்கள், நான் எழுதியதையும் அந்த ஆசாமி எழுதியுள்ளதையும் ஒப்பிடவும். யாரிடம் எத்தனை வசை வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன. யார் வசைப்பாடிவிட்டு மற்றவர் மீது அதே குற்றச்சாட்டை சொல்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஒரு குற்றசாட்டை இங்கே சந்தேகம் என்ற வகையில் முன்வைத்ததற்காக இதை எழுத வேண்டியதை என் கடமையாய் நினைத்து எழுதுகிறேன். இனி எதுவும் எழுத மாட்டேன். டோண்டு ஸார் 'தாயதிக்காரா' விளக்கத்திற்கு மிகவும் நன்றி, வெகுநாளய சந்தேகம் தீர்ந்தது.
பி.கு. அதாவது இவர் எழுதியதை நம்பி மேலே மன்னிப்பு கேட்டுள்ளேன். எனக்கு நம்பிக்கை உள்ள யாராவது ஒருவர் உறுதிபடுத்தினால் நல்லது.
எழுத்து பிழைகள், மற்ற பிழைகள் திருத்து மீண்டும் (பழையதை நீக்கி) இட்டுள்ளேன்.
ஆரம்பித்தது பெரியாரின் மறுபக்கத்தைப் பற்றி. ஆனால் பின்னூட்டங்களோ திசை மாறி சோ இழுக்கப்பட்டு விட்டார்.
ரோசா அவர்களே, என்னிடம் பழைய துக்ளக் காப்பிகள் இல்லை. என் வீட்டம்மா இரண்டு மாதங்களுக்கொரு முறை எல்லாவற்றையும் எடைக்குப் போட்டு விடுவார். (ஒரு பொருள் விலை குறைகிறதென்றால் அது பழைய பேப்பர்களுக்கு நமக்குக் கிடைக்கும் விலையே என்று நான் நினைக்கிறேன்).
ஆனால் ஒன்று கூறுவேன். தான் கேட்ச் பிடித்த விவரங்களை சோ அவர்கள் கண்டிப்பாக எழுத மாட்டார். அவரை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அவர் தற்பெருமை அடித்துக் கொள்ள மாட்டார் என்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொள்வதில் மன்னர் அவர்.
விஸ்வா கூறியதைப் போல தின மலரில் பாருங்கள். அவர் நேரடி சாட்சி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவர் பொய் கூறுபவர் அல்ல. அவரை நான் அவர் எழுத்துக்கள் மூலம் நன்கறிவேன்.
அது சரி இப்போது பெரியாரின் விஷயத்துக்கு வருவோம். எழுதிய விஷயங்களைப் பற்றிப் பேசாமல் எழுதியவர் ஜாதியைப் பார்க்கப் புகுந்ததிலேயே தெரிந்து விட்டது அவை உண்மையே என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காஞ்சியாரின் "ரஜினியா வாலியா" என்றப் பதிவுக்கு சில நிமிடங்களுக்கு முன் நான் இட்டப் பின்னூட்டம் இப்பதிவும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கும் இடுகிறேன்:
"ஒருவரைப் பற்றி கூறும் பொழுது அவர் இந்த சாதியைச் சார்ந்தவர் என்று கூறுவது மிகவும் அநாகரிகமான செயல் இந்த காஞ்சி பிலிம்ஸ் தொடர்ந்து அதேமாதிரி செய்துகொண்டு வருகிறார்."
ஒரு சிறு திருத்தம். பார்ப்பனராக இருந்தால் மட்டும் ஜாதிப் பெயர் வரும். இவர் தேவலை என்றுக் கூறும் வண்ணம் அப்பதிவுக்குப் பின்னூட்டம் இட்டவர்கள் எழுதி விட்டனர். இதில் சோ வேறு இழுக்கப்பட்டார்.
ஆதி சங்கரர் கதையில் அவர் ஒரு கிருஹஸ்தருடன் வாதிட முற்படும்போதுக் கலைவாணியின் அம்சமாகியவரான அந்த கிருஹஸ்தரின் மனைவி நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்தார். தன் கணவர் மற்றும் சங்கரருக்கு மாலை அணிவித்து வாதிடச் சொன்னார். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என்பது விதியாகக் கூறப்பட்டது. வாதத்தில் தோற்கத் தொடங்குபவர் கோபம் அடைய, அவர் அணிந்த மாலை கோபச் சூட்டில் வாடும் என்பதே இவ்விதியின் அடிப்படை. கணவர் மாலை வாடத் துவங்க அவரைக் காப்பற்ற அவர் மனைவியே வாதத்தைத் துவங்குகிறார். அது வேறு கதை. இப்பதிவுக்கு இதுவரை கதை போதும்.
நான் கூறுகிறேன், இங்குப் பலரின் மாலைகள் வாடத் துவங்கி விட்டன. ஆகவே ஜாதியெல்லாம் இழுக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, பெரியாரைப் பற்றி என்னுடைய மற்றும் காஞ்சியார் பதிவுகளிலும் இதே நிலை. பகுத்தறிவு பற்றிப் பேசுபவர்கள் இவ்வாறு செய்வது அழ்கல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சரித்திரத்துக்கு முந்தியப் பறவை அவர்களே,
ஈவேரா அவர்கள் மட்டுமல்ல, அக்காலத்தில் இருந்த கிட்டத்தட்ட எல்லா பகுத்தறிவுப் பாசறை வீரர்கள் வீடுகளிலும் இதே கதைதான். அவர்கள் பிள்ளையார் சிலைகளை உடைக்க அவர் வீட்டம்மாக்கள் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு கடமைகளை நிறைவேற்றுவார்கள். பிள்ளையார் சிலையை உடைப்பவர்களுக்கு இதில் ஆட்சேபணை இருக்காது, மகிழ்ச்சிதான் ஏனெனில் அவர்களுக்கும் மனத்துள் உதறல்தானே. எல்லாமே தமாஷ்தான் போங்கள்.
அதே போல அவர்கள் யாரும் தங்களுக்குள் சாதியையெல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்களாக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இட்லி வடை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://idlyvadai.blogspot.com/2006/09/8.html
காப்பி பேஸ்ட் செய்வதில் குழலி அவர்களும் அவசரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் சுட்டிய பெரியாரின் பேச்சு ஒரு திருமண விழாவில் பேசியது. அங்கு போய் மணப்பெண்ணிடம் கள்ள புருஷன் வைத்துக் கொள் என்று சொன்னால் அவரை அங்கேயே கட்டி வைத்து உதைக்க மாட்டார்களா?
மேலும் பெரியார் சொன்ன டிஸ்க்ளைமர் (குழலி இதை தடித்த எழுத்தில் கொடுத்துள்ளார்) அப்பா குதிருக்குள் இல்லை என்ற வகையில், தன்னை யாராவது முன்பு பேசியதற்காக எங்காவது கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களே என்பதால் கொடுக்கப்பட்டது.
அதே பதிவில் ரோசா வசந்த் இட்ட இந்தப் பின்னூட்டத்துக்கு குழலி பதிலே அளிக்கவில்லை.
"At 4:44 PM, ROSAVASANTH said…
//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்.//
தடித்த எழுத்துக்களில் காரணமாக தந்துள்ளீர்கள். சரி, இப்படி சொன்ன பெரியார், 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலில் பலதாரா மணம் உள்ளிட்ட பல 'ஒழுக்கக் கேடுகளுக்கு' சார்பாக எழுதியுள்ளாரே? ஆண்களுக்கு சொல்லப்படும் அத்தனையும் (பல தாரம், பலருடன் உறவு) பெண்களுக்கும் பொருந்தும் என்று முடித்திருப்பாரே? அதை எப்படி எடுத்துக் கொள்வது.
இந்த உரை ஒரு கூட்டத்தில், அதில் பங்குகொள்ளும் கேட்பவர்களை மனதில் வைத்து பேசியது. ஆனால் நூல் என்பது தன் கருத்துக்களை எந்த வாசக சமரசமுமின்றி எழுதப்படுவது. இதில் எதை பெரியாரின் பார்வையாக எடுத்துக் கொள்வது.
(பெரியாரின் பார்வை எதுவாக இருந்தாலும், நாம் அதை எப்படி எடுத்து கொள்வது, நமது பார்வையை எப்படி உருவாக்கி கொள்வது என்பது வேறு விஷயம்.)
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை பெரியார் பற்றிய எனது இப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஈவேராவின் மறுபக்கம்" என்கிற புத்தகம் என்னிடம் உள்ளது. ஆசிரியர் தன்னை தலித் என்று குறிப்பிட்டுள்ளதும் நிஜம்தான். ஆனால், கற்பனை உலகில் இருப்பவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. "அவாள்கள்"தான் இதுபோல் எழுதவைத்திருப்பர், எழுதவைத்திருப்பர் என்பதை அறிவுஜீவி போதையினால் விளைந்த தெளிவின்மையாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது என்ன இருந்தாலும் ஒரு தலித்தால் இப்படியெல்லாம் எழுத முடியாது என்று நினைக்கிற உயர்ஜாதி ஆணவமாகவும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது இந்த விஷயத்தில் தன்னுடைய புரிதல் மட்டுமே சரியானது என்கிற பகுத்தறிவும் காரணமாக இருக்கலாம்.
உயிருடன் ஸமகாலத்தில் வாழும் ஒருவரின் இருப்பைப் பற்றியே ஸந்தேகப்படுமளவு தமிழர்களின் பகுத்தறிவை ஆக்கியது ஈவேராவின் மிகப்பெரிய சாதனை.
வெங்கடேசனின் அந்த புத்தகம் ஒரு உயர்ந்த இலக்கிய தரம் கொண்ட ஒன்று இல்லை. மோசமான ப்ரிண்ட்டுடன், எழுத்துப்பிழைகளுடன் உள்ளது. பொருள் குற்றம் இல்லை.
புத்தகத்தின் உபயோகிப்பாளர்களாக ஆசிரியர் குறிவைத்திருப்பது ஈவேரா மாயையில் இருக்கும் த்ராவிட தொண்டர்கள்தான். அவர்களுக்கு இந்த புத்தகத்தின் தரம் சற்று அதிகம்தான். ஆனால் தேவையானது.
த்ராவிட தலைவர்களுக்கோ, அறிவுஜீவிகளுக்கோ இந்த புத்தகம் இடது கையால் விலக்கி வைக்கப்பட வேண்டிய விஷயம். ஒத்துக்கொண்டால், தலைவர்கள் பணம் சம்பாதிக்கமுடியாது. அறிவுஜீவிகளுக்கு அவர்கள் வாழும் மாய உலகத்தில் சுகமிருக்காது.
எது எப்படியொ....ஆனால் தமிழகத்தில் சாதிகளின் தாக்கம் குறையவும், மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் இங்கு பெயருக்குப் பின்னால்
தங்களது சாதி பெயரை எழுதுவது தவிர்க்கபட்டதிர்க்கும் பெரியாரின் பங்கு மிகமுக்கியமானது என்பதை மறுக்க முடியது
உண்மை இதற்கு எதிரானது. ஈவேராவின் நோக்கம் நேர்மையானதாக இருந்திருக்கிறது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஜாதி வெறியை தமிழர்களின் தனி அடையாளமாக மாற்றிவிட்டதில் அவரது கொள்கைகளுக்கு பெரும் பங்குண்டு. ஒழுக்கம் திணிக்கப்படும் இடங்களில் களவு அதிகரிப்பதுபோல, இது ஒரு எதிர்பாரா எதிர்வினையாக இருக்கலாம்.
தமிழகத்தின் அரஸியலை ஜாதி அரஸியலாக மாற்றியது ஈவேராவின் காலத்தில் தீவிரமானது.
ஈவேரா பிறக்காத மற்ற தென்னிந்திய (உதாரணத்திற்கு, கேரளாவில் இந்த அளவு ஜாதிவெறி இல்லை. கம்யூனிஸத்தால் நடந்துவரும் சில நல்ல விஷயங்களில் அதுவும் ஒன்று.), பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் இருக்கும் ஜாதிவெறியைவிட தமிழகத்தில் ஜாதிவெறி அதிகம்தான்.
ஒரு ஜாதி உயர்வு என்றோ தாழ்வென்றோ கருதப்படும் நிலை மாறுவதுதான் ஜாதிவெறி ஒழிய சரியான வழி.
ஒரு குறிப்பிட்ட ஜாதியை தன் அரஸியல் பிழைப்பிற்காக அழிக்க நினைப்பதற்கும் பெயர் ஜாதிவெறிதான்.
டோண்டு ஸார்,
லாஜிக்கில் அதிக ஈடுபாடு உள்ள உங்களிடம் ஒரு கேள்விக்கான பதிலும், சில விளக்கங்களும் எதிர்பார்க்கிறேன்.
முதலில் விளக்கம் வேண்டி:
உங்களிடம் வந்து ஒருவர் ஒரு முடிந்துபோன விஷயத்தைப்பற்றி கருத்தை சொல்லுகிறார். அதை சொல்லி முடித்தவுடனேயே முடிந்துபோன விஷயங்களைப்பற்றி உங்களிடம் சொல்லுவதற்கு தன்னிடம் எந்த கருத்தும் இல்லை என்கிறார்.
அப்படியானால் அவர் முதலில் சொன்ன கருத்தை அவர் சொல்லவில்லை என்றாகிவிடுமா? அல்லது,
முதலில் அவர் சொன்னது தவறு என்றாகிவிடுமா?
இப்போது நான் கேட்கவிருந்த கேள்வி:
அமானுஷ்ய லாஜிக் என்றால் என்ன?
"புத்தகத்தின் உபயோகிப்பாளர்களாக ஆசிரியர் குறிவைத்திருப்பது ஈவேரா மாயையில் இருக்கும் த்ராவிட தொண்டர்கள்தான். அவர்களுக்கு இந்த புத்தகத்தின் தரம் சற்று அதிகம்தான். ஆனால் தேவையானது."
மிகவும் உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"உண்மை இதற்கு எதிரானது. ஈவேராவின் நோக்கம் நேர்மையானதாக இருந்திருக்கிறது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஜாதி வெறியை தமிழர்களின் தனி அடையாளமாக மாற்றிவிட்டதில் அவரது கொள்கைகளுக்கு பெரும் பங்குண்டு. ஒழுக்கம் திணிக்கப்படும் இடங்களில் களவு அதிகரிப்பதுபோல, இது ஒரு எதிர்பாரா எதிர்வினையாக இருக்கலாம்"
யோசிக்க வேண்டிய விஷயமே
அன்புடன்,
டோண்டு ராகவன்
"உங்களிடம் வந்து ஒருவர் ஒரு முடிந்துபோன விஷயத்தைப்பற்றி கருத்தை சொல்லுகிறார். அதை சொல்லி முடித்தவுடனேயே முடிந்துபோன விஷயங்களைப்பற்றி உங்களிடம் சொல்லுவதற்கு தன்னிடம் எந்த கருத்தும் இல்லை என்கிறார்.
அப்படியானால் அவர் முதலில் சொன்ன கருத்தை அவர் சொல்லவில்லை என்றாகிவிடுமா? அல்லது, முதலில் அவர் சொன்னது தவறு என்றாகிவிடுமா?"
நான் இங்கு புரிந்து கொள்வது என்னவென்றால் இனிமேல் இதில் கூற தன்னிடம் ஏதுமில்லை என்று அவர் சொல்ல நினைக்கிறார் என்பதே. மேலும் இது சம்பந்தமாக அவர் எனது எதிர்வினைகளை கேட்கவும் ஆவலின்றி இருக்கிறார் என்றும் நான் புரிந்து கொள்வேன்.
"இப்போது நான் கேட்கவிருந்த கேள்வி: அமானுஷ்ய லாஜிக் என்றால் என்ன?"
அமானுஷ்ய லாஜிக் என்பதை இரண்டு வகையில் பார்க்கலாம். ஒன்று non-human logic எனப்படுவது. முக்கியமாக செயற்கை அறிவை சார்ந்ததாக இருக்கும்.
இன்னொன்று inhuman logic அதாவது மனிதத் தன்மையற்ற லாஜிக். சரி தவறு என்பது clear cut-ஆக இருக்கும். யார் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் பார்ப்பதற்கில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
WoW! As a lover of Periyar and his all round skills i would like to give my contra views ...
1) Periyar is the only revolutionary of those years ..who said, "Dont follow my words just because it is uttered by me". So he taught us to have our OWN views! never thrust his words on the next generation! His topmost priority is SELF RESPECT!
2)He never bothered about changing his strategies to counter the only racist religion in the world Hinduism / brahminism. From the DReam time religion of australian oborigins to recent ISLAM or more recent BAHAI ... no religion created its own untouchable! no religion obstructed the entry of their holy places. He fought for the dalit entry .. it doesnt mean he asked people to go to temple!! Your poor understanding!
3) Two people gone wild over this racist Hinduism and mainly the base.. brahminism... one is Periyar and the other one is OSHO. one is an aethist and the other is a spiritualist. Both are my inspiration and they were the one removed the masks of all your incest mongering gods!
4) Writing about a story of love on her sister is to be condemned but having sex with ones own daughter to be glorified in the name of Hinduism.
5) Hinduism gone further... fucking a dead horse is Ashwametha Yaaga! is that means Hinduism practised ANIMAL SEX!?
6) then hope you would have known the father daughter love of Freudian pshycology!? it is a fact!
7) atlast we have some reservation on saying he is a kannadiga or telungan... he is talking honestly about his nonbrahmin Dravidian races. When we talk about Tamil Saathis we tell i am mudaliyar or pillai or chettiar! when the notion is Dravidian.. it is not a crime to say I am a telugu man!
8) he is a bold experimentalist unlike hypocrites! he enjoyed his stay in western nudist camps! So come on MR Raghavan ... see his impact on recent thinking generation like me!
9) Brahmins are always famouse for their SINDU MUDITHAL! they wont show their true faces boldly. that is why you quote A DALIT author so happily!! But will it be effective!? Sorry! Periyar is a stalwart of indian rationalism and anti brahmin / hindu racism !
10) as a lover of Periyar i always like the boldness and you have all the right to have your own views!! but also you will register our objection with the same spirit!
With love and regards
OSAI Chella
இணைய நாடோடி
"4) Writing about a story of love on her sister is to be condemned but having sex with ones own daughter to be glorified in the name of Hinduism."
Please be more specific. I take this opportunity to tell you that Maniyammai used to call him அப்பா only in the initial stages, before the marriage. That is one of the reasons as to why Periyar's then followers were outraged at this manifestation of incest, as they perceived it at the time of this பொருந்தா திருமணம்.
"as a lover of Periyar i always like the boldness and you have all the right to have your own views!! but also you will register our objection with the same spirit!"
Did you ever doubt that I will not permit this comment?
"he is a bold experimentalist unlike hypocrites! he enjoyed his stay in western nudist camps! So come on MR Raghavan ... see his impact on recent thinking generation like me!"
Where did I find fault with him about these things? On the other hand, have you read my topics on ஆண் பெண் கற்பு நிலை?
Regards,
Dondu Raghavan
1) I simply quoted ... "if Brahma married his own daughter .. it is not incest? "
2)three of my views on his marriage
2a: He should not have listened to his Brahmin friend's opinion!LOL! You know whome i refer!?
2b: You said.. maniammai called him appa! He is per se against marriage as a holy institution!LOL! It is more of a human way of ARRANGEMENT. His marriage has got nothing to do with his sexual insticts. He married her for legal aspects and his money management! He is hundred times better than sleeping with naked girls at the old age .. i mean your great mahatma.. who suppressed sex after child birth!! We all know about periyar's MINOR life and how his innocent wife supported thos PLAYBOY life. all in the public domain.
2c. From a web resource In 1949, Periyar’s party split over his decision to marry a young woman, Maniammai. Her parents were Periyar’s followers. Manniamai was opposed to her parents plan to get her married to a relative. Hence she left the house. When Periyar came to know about this, he brought Manniamai to his house in Erode. She functioned as his secretary cum nurse. Six years later they were married. He was seventy, and she was thirty-one at that time. Their marriage lasted for 21 years, and she outlived Periyar only five years. There were many reasons cited for this odd marriage. However, insiders insist that Periyar – who had accumulated large wealth in his name - did not want this money to go to his relatives. He wanted the money to be used for the Dravidian cause, and felt that the only person whom he could trust was his nurse cum secretary. moreover no relative can pursue legal battles if SHE BECOME A WIFE than a STEP/ADOPTED DAUGHTER!
----
WHY DONT YOU DISCUSS THE "MAIN PAKKAM" of periyar than his "MARU PAKKAM!" LOL!? Voyeuristic pleasure! ? no issue! it is there in humans!lol!
I solute PERIYAR for the following versus... a guideline for every human being
* I am a plain person. I have merely spoken out my mind. I do not say you should believe what I have said because it alone is certain. Accept such ideas as can be accepted, with the help of your reason, after a sound enquiry. Reject the rest.
* Do not for any reason bestow upon me any traits that are beyond human characteristics. If I were to be considered divine, people will not inquire into my words.
* I will not subject you to a restraint, in the manner of scriptures and ancient works, by stating that you should trust what I say, that my words are Apocalyptic; and that if you do not believe me, you will become atheists and go to Hell. If what I say is not agreeable to your instinct, knowledge, experience and inquiry, reject it.
* Every one has the right to refute any opinion. But no one has the right to prevent its expression.
# Till the end of my life, I shall never canvas for a vote. I shall not even expect a word of praise from any quarter.
# I am under no necessity to permanetly support anyone for gaining selfish ends. I see no wrong at all in supporting that person who does good to us, Who strives for the removal of our social degradiation even if he is a foreigner.
More over his bold analysis of LOVE is available here..
SO DWELL ON THE BIGGER ASPECTS too! Nothing more to add on this topic...
With regards
Chella
இணைய நாடோடி
என்னடா தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது இந்த பதிவுல இருந்து தானா :))
"கடவுள் மறுப்பு இயக்கம் தீவிர எழுச்சியுடன் பரவியது. கோவில்களை அடக்கியாண்ட சில இனத்தாருக்கு வருமானமும் அதிகாரமும் பறிபோனது."
பிள்ளையார் சிலைகளை உடைத்தார். தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் முளைத்தன. ஆத்திகர்கள் எண்ணிக்கை பெருகியது. அவரது ஆதரவாளர்கள் பலர் பிற்காலத்தில் பெரிய ஆத்திகர்களாக மாறினர்.
"கடவுள் இல்லை என்று சொன்னதற்காக அவரே கூட கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருப்பார் என்றுகூட நம்ப வேண்டியதில்லை."
ஆக, உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
அதெல்லாம் இருக்கட்டும் அவர் தலித்துகளுக்காக ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை என்று இப்புத்தகம் கூறுகிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நிறைய ஆதாரங்கள் எல்லாம் தந்திருப்பதாகக் கூறப்படுகிறதே, அதை பற்றி என்ன கூறுவீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"என்னடா தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது இந்த பதிவுல இருந்து தானா :"
அதுல ஒரு விசேஷம் பாருங்க, நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் சமீபத்தில் 1965-லே பிறக்காதவர், என்னமோ பெரியார் அப்போதும் ஹிந்தி திணிப்பை எதிர்த்தவர்தான், தன்னுடைய நிலைப்பாட்டை ஹிந்தியை பொருத்தவரை எப்போதுமே மாற்றிக் கொண்டதில்லைன்னு சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரு. அப்புறம் அவரோட கூட்டாளிங்களாமே அவரோட அந்த கருத்துக்கு ஆப்பு வைக்க, இது பற்றி தனிபதிவு போடறேன்னு கூறி கிழுமத்தூருக்கு எக்ஸ்பிரஸ் வண்டியிலே போனாரு. ஒண்ணும் பண்ணதா தெரியலை. அவரோட பதிவு போடற அந்த ஐடியாதான் இப்போ புளிச்சு தமிழ்மணமே மணக்குதுன்னு சொல்றாங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"WHY DONT YOU DISCUSS THE "MAIN PAKKAM" of periyar than his "MARU PAKKAM!" LOL!?"
To discuss his main pakkam, there are slavish followers of his (not you of course).
"He should not have listened to his Brahmin friend's opinion!LOL! You know whome i refer!?"
His friendship with Rajaji is really great. You should have seen how E.V.R. wept at the burial ground when Rajaji was cremated. And he died exactly one year afterwards by date. Let us not dwell on this friendship. It is much above all of us.
The reason his marriage was opposed was the fact that he himself at that time was heading a movement against just such unsuitably matched marriages.
"If what I say is not agreeable to your instinct, knowledge, experience and inquiry, reject it."
Very admirable words. But he became quite angry when his followers took him up on this statement and oppsed him. Read what I have pointed out in this post:
"தான் யாரை வேண்டுமானாலும் திட்டலாம், ஆனால் தன் முரண்பாடுகளை எதிர்த்துக் கேட்டால் அது தேசத் துரோகத்துக்கு சமம் என்றுதான் அவர் இயங்கி வந்துள்ளார் என்பதற்கு அவர் அரங்கண்ணலைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே சாட்சி. "பெருமாள் போட்ட சோத்தைத் தின்று, பெருமாளுக்கு எதிராகவே காரியம் செய்வது" என்பதை வேறு எவ்வாறு புரிந்துக் கொள்வது? பெண்ணுரிமைக்காகப் பேசிய அவர் தன் முதல் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்த உத்தமப் பெண்மணியின் மனத்தை நோகடித்தது எங்கனம்?"
Regards,
Dondu N.Raghavan
//
I am ready to talk with Dondu (anything under the sun except politics, especially not periyar or Cho), and never to argue anything.
//
ஹி ஹி ஹி....அய்யா டோண்டு பாயிண்ட் எடுத்துவுட்டா ரோசா காலி!!
-வஜ்ரா என்ற கடவுள்
//
தமிழ்மணத்தில ஒரு புளிச்ச மணம் வருதேன்னு அது இந்த பதிவுல இருந்து தானா :))
//
அப்பவே நெனெச்சேன்...மகேந்திரன் படிவைப்பார்கும் போதெல்லாம் நாத்தம் கொடலைப்புடுங்குதேன்னு...அதுக்குத்தான் அந்தப் பொண்ணு மூக்கெ மூடிகின்னு இருக்கு படத்துல கூட!! :D
"ஹி ஹி ஹி....அய்யா டோண்டு பாயிண்ட் எடுத்துவுட்டா ரோசா காலி!!"
எங்கள் இருவருக்குமே இந்த விஷயங்களை பொருத்தவரை காம்ப்ரமைஸே இல்லாத எதிர்மறை கருத்துக்கள் இருப்பதாலும், அவை பேசித் தீரும் விஷயங்கள் இல்லை என்பதாலும் அவ்வாறு அவர் நடந்து கொள்கிறார் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கோயிலுக்குச் செல்லும் போது தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்த உத்தமப் பெண்மணியின் மனத்தை நோகடித்தது எங்கனம்?
ரௌடிகளைவிட்டு கலாட்டா செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை இரண்டிற்கும் வித்யாஸம் இல்லாமலிருக்கலாம்.
மற்றபடி தன்னுடைய கருத்தை அநாகரீக, நியாயமற்ற முறையிலேனும் மற்றவர்கள் ஏற்றுக்கொண்டுவிடவேண்டும் என்கிற நோக்கம்தான் இந்நிகழ்ச்சியின் மூலம் புலப்படுவது.
எல்லோருடைய மறுபக்கமும் இருப்பது அவரவர் முதுகு தான்.... தங்கள் முதுகு எப்படியிருக்கிறது என்பதை திரும்பிப் பார்க்க முடியாதவர்களே அடுத்தவர் முதுகை அசிங்கமாகப் பேசுகிறார்கள்.....
(குறிப்பு : என் முதுகை நான் கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக் கொள்கிறேன்)
"தங்கள் முதுகு எப்படியிருக்கிறது என்பதை திரும்பிப் பார்க்க முடியாதவர்களே அடுத்தவர் முதுகை அசிங்கமாகப் பேசுகிறார்கள்....."
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் லக்கி லுக் அவர்களே. அவ்வாறு அசிங்கமாகப் பேசுபவர்கள் மற்றவர்களால் தமது முதுகு பேசப்படும்போது மிகவும் கோபப்படுகிறார்கள். அதே மாதிரித்தான் ஈவேரா அவர்களும் தனது முரண்பட்டை தனது சீடர்களே 1949-ல் விமரிசனம் செய்த போது ரொம்பவே கோபப்பட்டு தனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்களே போதும் என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதை எடுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி லக்கிலுக் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிராமணனுக்கென்று ஒரு செல்வாக்கு இருந்தது. அது அவர்களது ஆச்சாரத்திற்கும், அனுஷ்டானங்களுக்கும் கிடைத்த மரியாதை. அது ரொம்ப காலத்திற்கு முன்னர். இன்று, பிராமணசமூகத்தினருக்கு எந்த ஆச்சாரமும், அனுஷட்டானம் பற்றிய அக்கரை எதுவும் இல்லை. பிராமணர்-பிராமணரல்லாதார் பிளவு ரொம்ம்ப அதிகமாக உள்ளது. உங்கள் வாதங்கள் எதுவும் எடுபடாது. இரண்டாவது, சாதி, மதம், குறித்த விவாதத்தில் ஈடுபட விரும்பாத ஒரு moderateஆகக் காலம் தள்ளிவிடுவதுதான் இன்றைய பிராமணசமூகத்திற்கு நல்லது. இன்று, ஆள்பலம், பணபலம் இருப்பவர்தான் செல்வாக்குப் பெற முடியும். போப் பெனடிக்ட்டே மன்னிப்புக்கேட்கும் வகையில் ஏதாவது நடக்கவேண்டுமென்றால், நீங்கள் தீவர மத உணர்வுமிக்கவராக இருக்கவேண்டும். இங்கு, குறிப்பாகத் தமிழகத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை.....
"பிராமணனுக்கென்று ஒரு செல்வாக்கு இருந்தது. அது அவர்களது ஆச்சாரத்திற்கும், அனுஷ்டானங்களுக்கும் கிடைத்த மரியாதை. அது ரொம்ப காலத்திற்கு முன்னர். இன்று, பிராமணசமூகத்தினருக்கு எந்த ஆச்சாரமும், அனுஷட்டானம் பற்றிய அக்கரை எதுவும் இல்லை. பிராமணர்-பிராமணரல்லாதார் பிளவு ரொம்ம்ப அதிகமாக உள்ளது."
உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் பார்ப்பனர்களை அவதூறு செய்யும் எழுத்துக்களை கண்டிக்காமல் இருக்க முடியாது. அதைத்தான் நான் எனது வழியில் செய்கிறேன். மனதுக்கு பிடித்திருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_25.html
அவ்வளவு தூரம் லை னை, ணை என்ற எழுத்துக்களை சீர்திருத்துவதைப் பற்றிப் பேசிய அதே ஈ.வே.ரா அவர்கள்தான் தன் கடைசி நாட்கள் வரை தன் கைப்பட எழுதியதில் பழைய முறையையே பாவித்து வந்தார். கம்பாசிட்டர்கள்தான் அவற்றைத் திருத்த வேண்டியிருந்தது. ஆக, சினிமாவில் சத்யராஜ் இவ்வாறு பழைய முறையில் அந்த எழுத்துக்களை அவர் எழுதி வந்ததையும் காண்பிக்கலாம்.
தன்னை நாடி வந்த வறிய புலவர் ஒருவரிடம் பாலறுந்தக் கொடுத்து விட்டு அவரிடம் தமிழ்ப்புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள் எனக் கூற கதிரேசன் என்னும் பெயருடைய அந்த ஏழைப்புலவர் மனம் நொந்து "உம்மிடம் போய் வந்து நின்றேனே" எனக் கூறிவிட்டு தன் தொண்டையில் விரலை விட்டு முழுக்க வாந்தியிட்டு, மறம் பாடி விட்டு சென்ற நிகழ்ச்சியைப் பற்றி பெரியார் பிற்காலத்தில் எழுதும்போது கதிரேசன் என்னும் வாயாடிப் புலவர் என்று குறிப்பிட்டு தன் தமிழ்பற்றையும் வெளிப்படுத்தினார் என்பதையும் இப்படத்தில் காட்டுவார்கள என நம்புவோமாக.
இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_25.html
"டோண்டு இராகவன் என்கிற ஆதிக்க கருதில் ஊறிய பெரியவரே (இப்படி அழைக்க விருப்பமில்லை)!"
ஈவேரா என்பவர் மேல் கண்மூடி நம்பிக்கை வைத்திருக்கும் திரு என்பவரே, ஈவேரா கதிரேசன் என்னும் அந்த வறிய புலவரை அவமானம் செய்ததை சௌகரியமாக ஒதுக்கிவிட்டீர்ரே? வெறுமனே கஞ்சத்தனத்துக்காக லை னை எல்லாம் போட்டவரை தமிழ் சீர்த்திருத்தவாதி என்று கூறும் உங்கள் அறியாமைதான் சிரிப்பை வரவழைக்கிறது.
பிள்ளையார் சிலைகளை உடைத்தார், தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள்.
"ராமாயணம், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம்" ஆகிய மூன்று நூல்கள் என்று கூறிய பகுத்தறிவு பகலவனுக்கு ராமாயணம் என்று தனியாக ஒரு நூல் இல்லை, என்பதுகூடத் தெரியவில்லை. அவ்வளவுதான் பொது அறிவு.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தபால் கார்டு காலணாவுக்கு விற்றது இப்போது அரையணாதான், ஆகவே ஊதிய உயர்வு அந்த முப்பது ஆண்டுகளில் இரட்டிப்பாக இருந்தால் போதும் என்று திருவாய் மலர்ந்தருளியவரின் பொருளாதார அறிவுதான் என்னே?
ஈவேராவுடைய பல அபத்தங்களைப் பட்டியலிட இடம் தரும் இந்தப் பதிவை நானும் வரவேற்கிறேன்.
இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_25.html
"தமிழை காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்டதும், நா. கதிரைவேற் பிள்ளை பற்றிய குறிப்பும் இக்கட்டுரைகளில் உள்ளன. டோண்டு ராகவன் அப்போது ஆரம்பித்து அரை அரையென்று அரைத்துக்கொண்டிருப்பதில் கதிரைவேற் பிள்ளை கதிரேசன் ஆனதைத் தவிர வேறென்று நடக்கவில்லை"
வறிய நிலையில் பசியோடு வந்த புலவரை அவமதித்தது ஒரு விதத்தில் கொலையே. அதை நீங்கள் பெரியார் செய்தார் என்பதற்காக நியாயப்படுத்தக் கூட செய்யலாம். ஆனால் இம்மாதிரி நடந்து கொண்டது பண்புள்ள செயலா என்பதைக் கூறுங்கள். அதே காட்சி அப்படியே பெரியார் படத்தில் வந்தால் பார்ப்பவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் என்பதையும் கூறிவிடுங்கள்.
ஆக அம்மாதிரி பெரியார் கையால் அவமானப்பட்டது கதிரேசன் என்றதற்கு இல்லை கதிரைவேற்பிள்ளை என்று குறிப்பிட்டு விட்டால் நியாயமாகிவிடும் என்பது என்ன பகுத்தறிவின் கீழ் வருகிறது என்பதையும் கூறிவிடுங்கள்.
நீங்கள் சுட்டிய பதிவுகளிலேயே நான் எழுப்பிய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.
1. 1965-ல் அவரது ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்த நிலை. நினைவு கொள்ளுங்கள் அந்த ஆண்டு ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்த எவருமே ஹிந்திக்கு ஆதரவாளர்களே. அது புரிய வேண்டுமானால் 1965 ஜனவரி 26ம் தேதியின் முக்கியத்துவம் தெரிந்திருக்க வேண்டும்.
2. மற்ற இடங்களில் தமிழை அவர் புகழ்ந்து பேசியிருப்பார் என்று அப்பதிவுகளில் கூறப்பட்டதற்கு ஆதாரம் கேட்டேன். அதையும் நீங்களோ உங்கள் நண்பர் குழாமோ தரவில்லை.
3. பெண்ணுரிமை அவ்வளவு பேசிய அவர், உத்தமப் பெண்ணான தன் முதல் மனைவியை தம் ரௌடி நண்பர்களை விட்டு கோவிலுக்கு செல்லும்போது கேலி செய்வித்ததை உங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்தக் காட்சி கூட ராஜசேகரன் அவர்கள் தனது படத்தில் சேர்க்கலாம்.
இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment