வெண்ணிற ஆடை நிர்மலா வருமான வரி வழக்கில் அவரை இவ்வளவு ஆண்டுகாலம் இழுக்கடித்து விட்டு இப்போது அவரது சிறை தண்டனையை ரத்து செய்துள்ளார்கள். விவரங்கள் இப்பதிவில்.
இதில் பல விஷயங்கள் உண்டு. அதாவது வெண்ணிற ஆடை நிர்மலா எம்.எல்.சி.யாக இருந்தார். அவர் ஒரு முறை மஞ்சள் கடுதாசி கொடுத்தவர். அப்படிப்பட்டவர் எம்.எல்.சி.யாக இருக்க முடியாது என்பது பொது விதி. இதை வைத்து பெட்டிஷன் கோபாலன் என்ற சைதாப்பேட்டைக்காரர் ரிட் பெட்டிஷன் போட, நிர்மலாவின் பதவி பறிமுதல் ஆனது. அதே சமயம் கருணாநிதியும் எம்.எல்.சி.யாக இருந்தார். இப்போது எம்.ஜி.ஆர். ஒரு காரியம் செய்தார். லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலையே ஒழித்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். தன் சினேகிதி இல்லாத கவுன்சிலை அழித்தது. அதே சமயம் அதில் மெம்பராக இருந்த தனது விரோதி கருணாநிதியையும் மட்டம் தட்டியது. இந்த மாதிரி தனிமனித மட்டம் தட்டல்கள் எல்லாம் அக்காலத்தில் சர்வ சாதாரணம். உதாரணத்துக்கு அதிமுக பத்திரிகையில் கருணாநிதியை சூச்சூ, பிப்பீ என்றெல்லாம் குறித்து விட்டு அவர் கையில் நாதஸ்வரம் கொடுத்து கார்ட்டூன் வரைவார்கள். திமுக பத்திரிகையில் எம்ஜிஆரை ராத்திரி வண்டி எனக் குறிப்பிட்டு (மலையாளி), அவர் கையில் டீ கெட்டில் எல்லாம் கொடுத்து கார்ட்டூன் போடுவார்கள்.
சரி, வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் திரும்ப வருவோம். அவர் மஞ்சக்கடுதாசி கொடுத்த களங்கத்தை துடைக்கவே எம்ஜிஆர் அவர்கள் அவருக்கு பணம் கொடுத்தது. ஆனால் அது அப்போதைக்கு பிரயோசனப்படாது போயிற்று. பதவி போனது போனதுதான், மஞ்சக் கடுதாசி கொடுத்தது கொடுத்ததுதான் என நிலை எடுக்கப்பட்டது. ஆனால் கொடுத்த பணம்? இங்குதான் வருமான வரிக்காரர்கள் உள்ளே புகுந்தார்கள். பத்தாயிரத்துக்கு மேல் காசோலை சட்டம் எல்லாம் வேறு துணைக்கு வந்தது. கேஸ் நடந்தது. 1987-ல் எம்ஜிஆர் மறைய சிக்கல் அதிகமாகியது. பிறகு நடந்தது மேலே சுட்டிய பதிவில் கூறப்பட்டது போலத்தான். அதே போல நடிகை சாவித்திரி நொடித்துப் போய் படுத்த படுக்கையாக இருந்த காலத்திலும் அவரது பழைய பாக்கிக்காக இந்த துறை தொந்திரவு ரொம்ப கொடுத்தது. அதெல்லாம் ஒரு மோசமான காலக்கட்டம். இப்போது நிலைமை எவ்வளவோ தேவலை.
ஒரு தொலைக்காட்சி பேட்டி இது சம்பந்தமாக வெண்ணிற ஆடை நிர்மலா அளித்துள்ளார். பாவம் ரொம்பவே நொந்து போயிருந்தார். இரண்டு ஆண்டுகால சிறை தண்டனை அவர் தலைக்கு மேல் தொங்கிய கத்தியாக இருந்தது. அது ரொம்ப கொடுமையானது. இப்போதாவது அது விலகியதே என்று நிம்மதியாக இருந்தாலும் அந்த நல்லப் பெண்மணி இதுவரை பட்ட துயரங்களுக்கு என்ன சமாதானம் கூற முடிய்ம்?
மனது கனமாகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிறகு சேர்க்கப்பட்டது:
வெண்ணிற ஆடை நிர்மலா எம்.எல்.சி. இல்லை, ஆக முயன்றவர் என திருத்திய அனானிக்கு நன்றி.
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்று இருப்பேன்
-
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்று (5 டிசம்பர் 2024) மாலையில் விஷ்ணுபுரம்
பதிப்பகம் அரங்கில் இருப்பேன். வாசகர்கள் சந்திக்கலாம். சேலம் புத்தகத்
திருவிழா நவம...
30 minutes ago
37 comments:
வெர்ரிற ஆடை பாப்பாத்தியா?
அப்படி இருந்தாதானே நீ ஆதரிப்பே?
என்ன நான் சொல்றது சரிதானே?
வெண்ணிற ஆடை நிர்மலா சவுராஷ்டிரர்
-நாட்டாமை
(பிளாக்கர் சொதப்புவதால் அனானியாக)
//என்ன நான் சொல்றது சரிதானே?//
இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கெழட்டு ஃபாடு மறுபடியும் கெளம்பிருச்சிடோய்!
வெண்ணிற ஆடை நிர்மலா செவுராஸ்டிரர் என்பதால் ஆதரிக்கிறே. ஏன் தெரியுமா? கால்கரி சிவா ஜாதி என்பதால். ஏன்னா கால்கரி உனக்கு ஜால்ரா போடுறான்ல, அதான்.
வெண்ணிற ஆடை நிர்மலா /செவுராஸ்டிரர் என்பதால் ஆதரிக்கிறே. ஏன் தெரியுமா? கால்கரி சிவா ஜாதி என்பதால். ஏன்னா கால்கரி உனக்கு ஜால்ரா போடுறான்ல, அதான்./
நடேசன் முதலியாரை டோண்டு ஆதரித்ததற்கு என்ன காரணம் ??.
-நாட்டாமை
//நடேசன் முதலியாரை டோண்டு ஆதரித்ததற்கு என்ன காரணம் ??//
அப்படியே வெங்கடாச்சல முதலியார், வெங்கடாச்சல செட்டி, வெங்கடாச்சல நாயக்கர், காசிச் செட்டி, கலவைச் செட்டி, கோபதி நாராயண செட்டி அல்லோரையும் சேத்துக்கோங்க.
நாமக்கல் வே. ராமலிங்கம் பிள்ளை
Your report has a major factual error. Vennira Aadai Nirmala was never a member of TN legislative council. She was chosen as a candidate by MGR for the post of a member in the council. She filed her nomination and objection was raised for its acceptance citing the fact that she was an insolvent. MGR immediately arranged to remit the income tax arrears payable by her and tried to nullify insolvency. IT dept slapped tax again for the amount paid. Since she was insolvent at the time of filing her nomination, it was rejected and MGR abolished the council in a fit a rage.
எச்சக்கலை நாய் ஒன்னு பிச்சைச்தனமா பின்னூட்டம் போட்டுதுனா, அதை ஏன் அனுமதிக்கிறீங்க. ரிஜக்ட் செய்யவேண்டியது தானே மிஸ்டர் டோண்டு.
//Your report has a major factual error.//
I stand corrected. Thanks.
Regards,
N.Raghavan
//எச்சக்கலை நாய் ஒன்னு பிச்சைச்தனமா பின்னூட்டம் போட்டுதுனா, அதை ஏன் அனுமதிக்கிறீங்க.//
அனுமதிக்கல்லேன்னாக்க அது எச்சக்கலை நாயிங்கறது மத்தவாளுக்கு தெரியாம போயிடுமே.
:)))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெங்களூர் அ.மு.க உங்களை காட்டுத்தனமாக ஆதரிப்பதாக செய்தி வந்துள்ளது. மெய்யாலுமா
என் வயதையொத்தவர்களுக்கு வெண்ணிற ஆடை நிர்மலா விவகாரம் அவ்வளவாகத் தெரியாது. பின்னணியுடன் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி!!!
நல்ல பதிவு.
விவரங்களை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது.
வருமான வரித்துறையின் பேராசை நான் அறிந்ததுதான். சம்பந்தமில்லாமல் டிமாண்ட் செய்வதும், தங்கள் கலெக்ஷன் நிறைவேற வேண்டும் என்பதற்கு சும்மா நோட்டீஸ் விட்டு வரிகட்டச்சொல்வதும் புதிதல்ல.
வருமான வரித்துறையை அரசியல்கட்சிகள் தனக்கு வசதிக்கு ஏற்றாற்போல் உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள் - எப்போதும் என்பதுதான் உண்மை.
சட்டம் ஒரு கழுதை என்பதற்கு இந்த வழக்கே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
செக்காகத்தான் பெரிய வரவு-செலவுகள் இருக்க வேண்டும் என்று சொல்வதன் காரணம் அது கள்ளப்பணமாக இருக்கலாம் என்பதுதான். கொடுத்தவரும், வாங்குவரும் அறிமுகப்படுத்தப்பட்டால் இதில் என்ன பிரச்சனை வந்துவிட போகிறது. ஆனால், சட்டம் எப்படி குருட்டுத்தனமாக இயங்குகிறது பாருங்கள்?
மேலும், நாலு லட்சம் பணமாக வாங்கியதற்கு நாலு லட்சம் அபராதமாம். அதாவது வாங்கிய அந்த பணத்தை அப்படியே பேட்டை ரௌடி மாதிரி அரசாங்கம் பறித்துக்கொள்ளுமாம். சரியான கூத்து.
//மேலும், நாலு லட்சம் பணமாக வாங்கியதற்கு நாலு லட்சம் அபராதமாம்.//
நீங்க வேற. பத்து லட்சம் கேட்கல்லியேன்னு சந்தோஷப்படுங்க. ஒரு காலத்தில் குறிப்பிட்ட அளவுக்குமேல வருமானம் இருந்தா வரிவிகிதம் 100% கூட தாண்டும். எழுபதுகள் ஆரம்பத்தில் ஆண்டு வருமானம் 10 லட்சம்னாக்க வரி போக மீதி இருந்தது 35000 ரூபாய் மட்டுமே. இதுக்கு என்ன சொல்லரீங்க? ஏழையை பணக்காரன் ஆக்க முடியல்லே ஆகவே பணக்காரனை ஏழையா ஆக்கறேன்னு சொஷலிசம் பேசினவங்க இருந்த காலம் அல்லவா அது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வருமான வரித்துறையின் பேராசை நான் அறிந்ததுதான். சம்பந்தமில்லாமல் டிமாண்ட் செய்வதும், தங்கள் கலெக்ஷன் நிறைவேற வேண்டும் என்பதற்கு சும்மா நோட்டீஸ் விட்டு வரிகட்டச்சொல்வதும் புதிதல்ல.//
அமெரிக்காவில் ஐ.ஆர்.எஸ். எனப்படும் வருமான வரி இலாக்கா செஞ்ச கொடுமையை விடவா?வரிவிகிதம் இந்தியாவுல அப்ப இருந்த அளவுக்கு இல்லங்கறது தவிர, மத்தப்படி செஞ்ச கொடுமைக்கு குறைவே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய நீதி தேவதைக்கு கண்களை கறுப்புத் துணியால் கட்டினாலும் பிரயோசனம் இல்லை. அது எப்படியோ உயர்ந்தவன் / தாழ்ந்தவனை மட்டுமல்ல, பணத்தையும் சரியாக கண்டுபிடிச்சு தீர்ப்பை சொல்லிடுது.
நல்ல தீர்ப்பு வேண்டுமானால் முதல்ல நீதி தேவதையின் கண்ணை புடுங்கிடனும்.
புள்ளிராஜா
வருமான வரி துறை, ஐ.ஆர்.எஸ் போண்ற அமைப்புகள் எல்லாம் அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகளை, பொதுமக்களை பழிவாங்க பயன்படுத்தும் ஆயுதங்கள். இப்படி அரசு எதிர்ப்பை குறைக்க பல துறைகள் இருக்கின்றன. அரசிடம் வரம்பு மீறிய சக்தி இப்போது இருக்கிறது. இதன் நேரடி பாதிப்பு சமுகத்தில் ஊழல், லஞ்சம் தலை விரித்தாடுவது. அரசு், அரசியல்வாதியின் சக்தியை கட்டுபடுத்தி வைப்பது நல்லது.
//அரசிடம் வரம்பு மீறிய சக்தி இப்போது இருக்கிறது.//
நீங்க சொல்வது சரிதான் தியாகராஜன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள்! நம்மளை மாதிரி அப்பாவிகளுக்கும் அன்றாடங்காச்சிகளுக்கும் அவ்வளவு பிரச்சினை கிடையாது!
//என் வயதையொத்தவர்களுக்கு வெண்ணிற ஆடை நிர்மலா விவகாரம் அவ்வளவாகத் தெரியாது. பின்னணியுடன் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி!!!//
இப்ப கூட உனக்கு என்ன பெரிய வயதாகி விட்டது லக்கி?இன்னமும் லாக்டெஜென் குடிக்கும் குழந்தை தானே நீ?என்ன கொஞ்சம் விவரமான குழந்தை,விபரீதமா யோசிக்கும்,செயல்படும் குழந்தை.
//எல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள்!//
எல்லாம் சீட்டுக்கட்டு மாளிகை போல பொலபொலவென்று உதிர்ந்தது. வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு பேசாமல் வேறு ஏதாவது பொறுப்பைக் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து மஞ்சக்கடுதாசி கொடுத்ததை மாற்ற நினைத்தார்.
ஆனால் ஒன்று, அவரும் நல்லது செய்வதாக நினைத்துத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அந்தச் செயல் 25 ஆண்டுகளாக அப்பெண்மணியை பாதித்துள்ளது. அதுதான் வருத்தமாக உள்ளது.
கண்ணதாசன் வேறொரு சூழலுக்கு எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது. "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி"
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி"//
கண்ணதாசன் கரெக்டா சொல்லியிருக்காரு.மஞ்ச துண்டு கடவுள் செய்த குற்றம் தான்;கடவுளைத் தவிர இப்படி பிரமாண்டமான குற்றத்தை யார் செய்ய முடியும்?
//மஞ்ச துண்டு கடவுள் செய்த குற்றம் தான்;//
இஃதென்ன கொடுமை சரவணன்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கண்ணதாசன் வேறொரு சூழலுக்கு எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது. "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி"//
"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை, வரி-துறை செய்த கோலமடி, நீதி-துறை செய்த குற்றமடி, அரசு உனக்கு செய்த பாவமடி" என்று பாடினால் இந்த விவகாரத்தில் சரியாக இருக்கும்.
மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். எம் ஜி ஆர் கொடுக்கும் பணத்தை டிடியாக கொடுத்து இருக்கலாம். 4 லட்சம் சரி பிரபாகரன் ஆண்டன் பாலசிங்கத்துக்கு எம் ஜி ஆர் 4 கோடி கொடுத்தாரே அப்ப இந்த வருமான வரி துறை எங்கே போனது
//எம் ஜி ஆர் கொடுக்கும் பணத்தை டிடியாக கொடுத்து இருக்கலாம்.//
இப்போது பார்க்கும்போது எல்லாமே சுலபமே. அப்போது அது தோன்றவில்லை என்பது ஒரு சோகமே. பல கழுகுகள், நரிகள் தப்பித்தன. வெ.ஆ. நிர்மலா போன்ற சிட்டுக் குருவிகள் சிக்கின. பரிதாபம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//4 லட்சம் சரி பிரபாகரன் ஆண்டன் பாலசிங்கத்துக்கு எம் ஜி ஆர் 4 கோடி கொடுத்தாரே அப்ப இந்த வருமான வரி துறை எங்கே போனது//
ரசிகா அரசியல் அனுபவம் கம்மியா. வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு கொடுத்த பணம் வெள்ளை பணம் (accounted) ஆண்டன் பாலசிங்கத்துக்கு கொடுத்ததாக சொல்வது கருப்பு பணம் (கணக்கில் வராதது - unaccounted money) .
//வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு கொடுத்த பணம் வெள்ளை பணம் (accounted) ஆண்டன் பாலசிங்கத்துக்கு கொடுத்ததாக சொல்வது கருப்பு பணம் (கணக்கில் வராதது - unaccounted money)//
மிகச்சரியாகச் சொன்னீர்கள் தியாகராஜன். கணக்கில் வராத பணத்தின் சௌகரியமும் அதுதான். அதே சமயம் நினைத்தாலும் அதன் விஷயத்தில் டிடி எல்லாம் தர முடியாது. கொடுத்தவன் மாட்டிக் கொள்வான்.
அசாம் பொதுப்பணித்துறையில் ஒரு கோட்டகப் பொறியாளர் வீட்டில் பெரிய திருட்டு நடந்தது. திருடன் பிடிபட்டான் அவ்வீட்டில் திருடிய லட்சக்கணக்கான ரூபாய்களுடன். திருடனுக்கு சிறை தண்டனை.ஆனால் கொட்டகப்பொறியாளர் பல தொல்லைகளை சந்திக்க வேண்டியிருந்தது, வருமானத்துக்கு மேலே சொத்து குவிப்பு வகையில். வேலை போனது, சிறை தண்டனை வேறு. சொத்து அபகரிப்பு அதற்கும் மேல்.
ஆகவே பல இடங்களில் திருட்டு போனாலும் வாயை பொத்தி கொண்டு இருந்து விடுகின்றனர்.
பினாமிகள் விஷயத்தில் இன்னொரு தொல்லை. பினாமியே சொத்தை அழுத்திக் கொண்டு போனது உண்டு. பல பினாமிகள் கொல்லப்பட்டது இதற்காகவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அனுமதிக்கல்லேன்னாக்க அது எச்சக்கலை நாயிங்கறது மத்தவாளுக்கு தெரியாம போயிடுமே.
:)))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அதில் ஒரு எச்சக்கலை நாயி கிழட்டு நாய். சரிதானே?
நான் சொல்வது ஒரே ஒரு எச்சக்கலை நாய். அது கிழ நாய் அல்ல.
டோண்டு ராகவன்
உனக்கு நீயே பின்னூட்டம் போட்டுக்கடா பாப்பார பரதேசி.
Dondu Sir,
Income tax rates were very high (and still so) in India. Comparituvely, India is the one of the over taxed nations. (IT and other indirect taxes, plus EB cross
subsidy on indutry and commerce, plus the hidden taxation of inflation of some 7 % p.a). hence
all of us try to evade tax if we can. as a businessman i try to do it, other wise, i will never be able to sace and imrprove.
IT rates (highest bracket) was some
98 % in 1971 plus 8 % wealth tax.
Evasion has created black economy and destrolyed our morals. that is, once we cheat on a law (and justify it) then we loose respect for all laws slowly. and corrupts the system totally.
Unless tax rates are made minimal,
things will remain the same. But to do that we have to drastically
curtail govt expenditure, esp in defence (93,000 crores p.a).
ministry of culture, broadcasting ,etc. lots of fat and
top heavy burecracy, etc.
more later.
Anbudan
Athiyaman
//உனக்கு நீயே பின்னூட்டம் போட்டுக்கடா பாப்பார பரதேசி.//
இப்ப நீ எனக்கு போட்டியே பின்னூட்டம்? அப்ப நீதான் நானா, சொல்லுடா சோம்பேறி.
டோண்டு ராகவன்
//Unless tax rates are made minimal,
things will remain the same. But to do that we have to drastically curtail govt expenditure, esp in defence (93,000 crores p.a).//
அதியமான் ஸார்,
நீங்க சொல்வது சரியானதே. இந்தியாவின் பட்ஜேடில் கிட்டதட்ட 50% டிபன்ஸ் செலவுகள், இது ரொம்ப அதிகம். இந்த செலவை கண்டு நம்ம திராவிட பொருளாதார நிபுணர்களும், அரசியல்வாதிகளும் நொந்துபோய் உள்ளனர். நம்ம நாடு செழுமையான நாடாக மாறுவதற்கு இரண்டு முக்கிய விசயஙகள் செய்ய வேண்டும். 1. அரசு செலவை குறைப்பது. 2. குறைந்த வரிகள் மற்றும் Flat-tax முறையை பின்பற்றுவது.
அரசு செலவை குறைப்பது என்றவுடன் பலர் "அது முடியாது, பிறகு எழை மக்களை எப்படி காப்பாதுவது" என்று கேள்வி எழுப்புவர், அதற்கு பதில் மேம்பாட்டு செலவுகள், சமுக செலவுகளை அப்படியே வைத்துகொண்டு பாதுகாப்பு (defence) போன்ற பெரிய செலவுகள் மற்றும் சில வீண் செலவுகளை குறைத்தாலே போதும், நாடு உருப்படும்.
உங்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குபவர்களுக்கெல்லாம் ஏன் சார் பின்னூட்ட அனுமதி கொடுக்கிறீர்கள்..? வாசிக்கும் எங்களுக்கே கஸ்டமாயிருக்கு.
Post a Comment