4/18/2008

டோண்டு பதில்கள் - 18.04.2008

அனானி (11.04.2008 அன்று 16.46 மணிக்கு கேட்டவர்)
1. தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்பொழுது பதிவெழுத வந்தவர்கள் கூட நட்சத்திரமாக முடிவதை நினைத்து வருந்தியிருக்கிறீர்களா?
பதில்: ஒரு முறை என்ன இரு முறைகள் நட்சத்திரமாக இருந்துள்ளேன். என்னைத் தவிர எனக்குத் தெரிந்து துளசி மேடம் மட்டும்தான் இரண்டு முறை நட்சத்திரமாக இருந்துள்ளார். இரண்டாம் முறையாக நட்சத்திரமாக இருந்த சமயம்தான் ஆண் பெண் கற்பு நிலைகள் பற்றிய சர்ச்சைக்குரிய பதிவுகள் சில போட்டேன். தேன்கூட்டிலும் என்னை சிறப்பு பதிவராக தேர்ந்தெடுத்தனர். ஆக, உங்கள் இரண்டாம் கேள்வி தேவையற்றதாகி விட்டது.

S.C.S. சுந்தர்
1) அம்பேத்கர் இயற்றிய சட்டம் தற்காலத்திற்கு சரியாக உள்ளது என நினைக்கிறிர்களா?
பதில்: அம்பேத்கரின் சட்டம் நமக்கு வரப்பிரசாதமே. ஆனால் அதை நம்ம அரசியல்வியாதிகள் போட்டு பிழிவதுதான் சகிக்கவில்லை. ஓட்டு பொறுக்கும் அரசியலுக்கு ஏதுவாக அதை ஒவ்வொருவரும் வளைப்பது நமது நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.
2) மோதி பிரதமர் ஆனால் இந்தியாவும் சிங்கப்பூர் போல கட்டுப்பாடான தேசமாக முடியும் என் நினைக்கிறிர்களா?
பதில்: ஏன் ஆகமுடியாது? என்ன மிகவும் அதிகமாக அதற்கு அவர் மெனக்கெட வேண்டும் அவ்வளவே. அவர் பதவிக்கு வரும் முன்னால் குஜராத்தும் எல்லா பிரச்சினைகளையும் தனக்குள் வைத்துத்தான் இருந்தது. நிர்வாகத்தில் பல ஓட்டைகள் வழியாக அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆட்டைகள் போட்டு வந்தன. எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைக்கவில்லையா அவர்? வெறுமனே கையூட்டுக்கு இடம் தராது வரிவசூலை செய்தாலே வேணமட்டும் பணம் கிடைக்கிறது என்பதை அவர் எடுத்து காட்டினாரே. துக்ளக் ஆண்டுவிழா கூட்டதில் மோடி பேசியதைப் பற்றி நான் எழுதியதில் ஒரு பகுதி இதோ.
"அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்றார். ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும் என்றார். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது) (பிறகு அது ஓராண்டிற்கான கணக்கு என துக்ளக்கில் படித்து அறிந்து கொண்டேன்). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்".

வஜ்ரா:
1. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்றுவிட்டால்?
பதில்: நேப்பாளத்துக்கு சங்குதான். இந்தியாவில் உள்ள சீன அடிவருடிகளுக்கு கொண்டாட்டம். வேறு என்ன சொல்வது.
2. கன்னூர், மற்றும் நந்திகிராம் பற்றி?
பதில்: கம்யூனிஸ்டுகள் தாங்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது மட்டும் மக்கள் கருத்து பற்றியெல்லாம் வாய்க்கிழிய பேசுவார்கள். அதுவே அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் கோவிந்தாதான். டைனாமென் சதுக்கம், முப்பதுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஸ்டாலினால் கொலை செய்விக்கப்பட்டது ஆகியவை போதாதா?
3. 27% OBC இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து?
பதில்:மற்றப் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் கிரீமி லேயர் எனப்படும் பணக்காரர்களை 27% இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கியது நீதிக்கு உட்பட்டே உள்ளது. அதிலும் தலித்துகளை வன்கொடுமை செய்வதில் பெரும்பாலான நேரங்களில் மேலே கூறப்பட்ட கிரீமி லேயர்களே இன்னமும் முன்னணியில் உள்ளனர். தத்தம் குழந்தைகளை மாண்ட்ஃபோர்ட் கான்வண்ட் மேட்டர்டே போன்ற நல்ல பள்ளிகளிலே படிக்க வைக்கின்றனர். ஆனாலும் இட ஒதுக்கீட்டிலும் பங்கு கேட்கின்றனர். தங்களுக்குரிய வாக்கு வங்கி பலத்தை வைத்து அட்டூழியங்கள் செய்கின்றனர். கிரீமி லேயர் என்று அழைக்கப்படுபவர்கள் ஆண்டு வருமான இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல இருக்க வேண்டும் என்றிருப்பதாகப் படித்துள்ளேன். அதாவது மாதத்துக்கு 20000 ரூபாய்க்கு மேல். எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் உட்பட பலர் இந்த இட ஒதுக்கீட்டுக்குள் வர இயலாது. நல்லது. அப்படியே ஆகட்டும்.
துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி சிந்தனையுடைய, நகரத்தில் பிறந்து வள்ர்ந்த அறிவுஜீவிகள் இந்த கிரீமி லேயரையே ஆதரிக்கின்றனர். கிராமங்களில் இந்த கிரீமி லேயர்கள் செலுத்தும் அதிகாரங்களை பற்றி இவர்களுக்கு சரியான பிரக்ஞை இல்லே என்றுதான் கூற வேண்டும்.
வன்கொடுமைகளுடன் சேர்ந்து இந்த கிரீமி லேயர்களால் இன்னொரு அநீதியும் நிகழ்கிறது. அதுதான் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் உள்ள ஏழைகள் இந்த இட ஒதுக்கீட்டை உபயோகிக்க முடியாமல் போகும் நிலை. அதில் வரும் சீட்டுகளையெல்லாம் இந்த கிரீமி லேயரே அனுபவித்து விடுகிறது. அதாவது நெல்லுக்கு போக வேண்டிய நீர் புல்லுக்கு மட்டுமே போகிறது. ஆகவேதான் களை பிடுங்கும் தருணம் வந்து விட்டது எனக் கூறவேண்டிய தருணம் வந்து விட்டது. சுப்ரீம் கோர்ட் அதைத்தான் செய்துள்ளது. இன்னும் சில பொது வார்த்தைகள் இது பற்றி கூறுவேன். தலித்துகளுக்கு மட்டும் அதுவும் பத்தாண்டுகளுக்கு லிமிட் செய்து கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு, இப்போது மண்டல் போன்றவர்களின் கைங்கர்யத்தால் ஓட்டு அரசியலுக்கு வழிவகுத்து விட்டது நாட்டின் துரதிர்ஷ்டமே. அதுவும் 1931-ன் சென்சஸ் அடிப்படையில் சாதிகளை வகுப்பதை நீதிமன்றமே முதலில் கேள்விக்குறியதாக்கி விட்டு பிறகு தீர்ப்பில் அதை கண்டுகொள்ளாமல் விட்டது போன்ற தோற்றம் வருவதை தவிர்க்க இயலாது. ஏதோ இந்த மட்டும் கிரீமி லேயரை ஒதுக்கினார்களே, அதற்கு நன்றி சொல்ல வேண்டும். இதையும் அரசியல்வியாதிகள் ஓரம் கட்டாது பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

4. சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவீர்களா?
பதில்: இதில் என்ன பிரச்சினை. என்னைப் பொருத்தவரை தமிழ்ப் புத்தாண்டு என்பது ஏப்ரல் மாதம்தான் வரும். அன்றைக்கு கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்றெல்லாம் கெடுபடி செய்தது நாதிகவாதத்தை ஆதரிக்கும் அரசு (சாய்பாபா காலில் விழுந்தது நாத்திகத்துக்கு எதிர்ச்செயல் அல்ல). இதன் பலன் என்னவென்றால் அன்றுதான் மக்கள் எல்லா இடங்களிலும் அதி தீவிரமாகப் பஞ்சாங்கம் படித்தனர். எனக்கு ஒரு சந்தேகம். மத சார்பற்ற அரசு எனக் கூறிக் கொண்டு அரசு ஏன் இந்துமதத்துக்கு மட்டும் அறத்துறை வைக்க வேண்டும்? வைத்தால் எல்லா மதங்களுக்கும் வைக்க வேண்டியதுதானே. யாராவது பொது நல வழக்கு தொடுத்தால் சுவாரசியமாக இருக்கும்.

பாலா:
1) "திராவிடீயம்" என்ற வெங்காய அல்வாவை வெற்றிகரமாக தமிழகத்தில் விற்ற தாடிக்காரருக்கு,அல்வாவை மற்ற தென் மாநிலங்களில் விற்க முடியாமல் போனதுக்கு,அந்தக் காலத்தில் தமிழன் மட்டும் தான் இளிச்சவாயனாக இருந்தான் என்பது தானே காரணம்?
பதில்: முக்கியக் காரணமே அவர் வடமொழியைத் தீவிரமாக எதிர்த்ததுதான். கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழிலிருந்து தோன்றினாலும், ஒவ்வொன்றின் அபிவிருத்தியிலும் வடமொழியின் கணிசமான பங்கும் உண்டுதானே. ஆகவே அவரது பப்பு தமிழகத்தைத் தவிர்த்து பிற இடங்களில் செல்லவில்லை.
2) இந்த வெங்காய மோசடி அல்வாவை இப்போது கூட கூவி கூவி விற்பனை செய்யும் மஞ்ச துண்டு,மானமிகு,ராசேந்திரன்,மீசை வீரபாண்டியன்(ஏன் வலையுலகத்தில் கூட கோவி.மு.க அய்யா,டி பி சி டி0,1,2,மற்றும் ம க இ க காமெடி வில்லன் பேர்வழிகள்)போன்ற அயோக்ய வியாபாரிகளின் வெற்றிக்கு காரணம், தமிழன் அப்போது மட்டுமல்ல இன்னும் கூட இளிச்சவாயனாகத்தான் இருக்கிறான் என்பதைத்தான் காட்டுகிறதா?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட நபர்களைப் பற்றி இங்கே தனியாகப் பேச விரும்பவில்லை. பொதுவான பதிலாக கூறுகிறேன். பெரியாரே ஓரிடத்தில் சொன்னது போல கன்னட பலிஜா வகுப்பைச் சேர்ந்த அவர் தமிழகத்தின் தலைவனானதற்கு காரணமே தமிழனுக்கு தலைவனாகும் யோக்கியதை இல்லையென அவனே நினைப்பதாலேயே. தமிழன் சோற்றாலடித்த பிண்டம் என்று அவ்வப்போது ஒரு தலைவர் இங்கு கூறுவதும் அதைச் சேர்ந்ததுதான்.

வால்பையன்:
சினிமா கேள்விகள்!
1.பிற மொழி படங்கள் அதாவது உங்களுக்கு தெரிந்த மொழி படங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டா?
பதில்: எங்கே, படங்கள் பார்ப்பதே குறைந்து விட்டதே. மேக்ஸ்ம்யுல்லர் பவனில் ஜெர்மானியப் படங்கள், அல்லியான்ஸ் ஃபிரான்ஸேஸில் பிரெஞ்சு படங்கள் பார்த்ததெல்லாம் இப்போது கனவு போல உள்ளது. அக்காலக் கட்டங்களில் சப் டைட்டில்களை அவாய்ட் செய்துதான் பார்ப்பேன்.
2.இன்றைக்கு நுழைவு கட்டணம் இருக்கும் நிலையில், திருட்டு விசிடியை ஒழிக்க முடியுமா?
பதில்: கஷ்டம்தான். மேலும் இப்போது இருக்கும் அவசர யுகத்தில் தியேட்டருக்கு போய் படம் பார்க்க யாரிடம் நேரம் உள்ளது? சினிமா வந்ததில் நாடகங்கள் பாதிக்கப்பட்டன. பிறகு டி.வி. வந்ததில் சினிமாக்கள் பாதிக்கப்பட்டன. இப்போது இத்தனை டிவி சேனல்களில் சினிமாக்களாக போட்டு தள்ளும்போது அவற்றின் மேல் உள்ள மோகமும் மறைந்து வருகிறது. ஆனால் ஒன்று, இப்போது பல தியேட்டர்களில் உள்ள ஒளி ஒலி ஏற்பாடுகளை வீட்டு டி.வி. திரைகளில் கொண்டு வருதல் இயலாது. அது வேண்டும் என்கிறவர்கள் தியேட்டருக்குத்தான் செல்வார்கள்.
3.சாத்தியமில்லாத விசயங்களை சினிமாவில் ஹீரோ செய்யும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
பதில்: அப்போதைக்கு மன ஆறுதலாக இருக்கும்.

பொது கேள்விகள்!
1.செண்டிமேன்டாக வைத்திருக்கும் பொருள்கள்?
(காதலியின் கைக்குட்டையை எதிர்பார்க்கிறேன்)

பதில்: காதலியே என்னுடன் இருக்கும்போது கைக்குட்டையை வைத்து என்ன செய்வதாம்?
2.மனதை அரித்து கொண்டிருந்த/கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மைகள்?
பதில்: அவற்றை ஒழித்தேயாக வேண்டும். அதற்கு முதலில் சரியான கம்பெனி வேண்டும். அதை விட முக்கியமாக குறிப்பிட்ட சிலரைத் தவிர்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக அதே தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மற்றவரைத் தவிர்க்க வேண்டும்.
3.வளர்ந்த நாடுகளில் கட்டாய ராணுவ பயிற்சி இருக்கும் பொது நம்நாட்டில் இல்லாதது பற்றி உங்கள் கருத்து?
பதில்: முக்கிய காரணம், ஜனத்தொகை. சும்மா கூப்பிட்டாலே 10 சீட்டுக்கு 10000 பேர் வருகிறார்கள் (வறுமையின் காரணமாக!), என ஏற்கனவே ஒருவர் பின்னூட்டத்தில் கூறியதில் அதிக உண்மை உண்டு. உதாரணது சி.ஆர்.பி.எஃப். வேலையில் சாதாரண கான்ஸ்டபிள் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, 100 காலியிடங்களுக்கு போட்டியிடுபவர்கள் எண்ணிக்கை லட்சக்க் கணக்கில் விண்ணப்பங்கள் இருக்கும். இன்னொரு காரணம் எதையுமே கட்டாயம் என ஆக்கினால் மொத்தமாகத்தான் குட்டிச்சுவராகும். உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு என்.சி.சி.யை கட்டாயமாக்கினர். அதிலும் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களும் அதில் இழுக்கப்பட்டனர். என்னவாயிற்று என்றால் நிஜமாகவே அதில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த ஆர்வத்தையும் இழந்ததேயாகும். நான் இரண்டாம் ஆண்டில் இருந்தபோது பரேடுகளுக்கு செல்வதை கட் செய்தவர்களே அதிகம். அதிலும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்ததும் ஹிந்தியில் ஆணைகள் தரும் இந்த அமைப்பு சுத்தமாகவே தனது ஆதரவை இழந்தது. மூன்றாம் வருடம் நான் வந்த போது இந்த கட்டாயத்தை நீக்கினர். இருப்பினும் அதில் முதலில் ஆர்வமாக இருந்தவர்கள் பெற்ற இழப்புகள் அப்படியேதான் இருந்தன. மேல் நாடுகளில் கூட கட்டாய மிலிட்டரி சேவைக்கு மாற்று ஏற்பாடுகள் உள்ளன. எனக்கு தெரிந்து நாடு முழுக்க மிலிட்டரி தயார் நிலையில் இருப்பது இஸ்ரவேலர்கள் மட்டுமே. அதுகூட இஸ்ரேல் ஆபத்தான எதிரிகளால் சூழப்பட்டு இருப்பதால்தான்.

விக்ரம்:
1) Why can't you start a special thread/post on self help topics (just like Norman Vincent Peale's Power of Positive thinking' etc) in Tamil, which will be helpful for youngsters?
பதில்: அவ்வப்போது பதிவுகள் போடுகிறேனே. தன்னம்பிக்கை, தவிர்க்க வேண்டிய நபர்கள், வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் ஆகிய லேபல்களில் பாருங்களேன்.
2) what do you think of recent SC ruling on 27% quota?
பதில்: பதில் ஏற்கனவே யே மேலே தந்துள்ளேன்.
3) what do you think of recent 'balti' of our CM on Hogenakkal issue?
பதில்: ஏதாவது புதிதான விஷயமாகப் பேசுவோமே. இம்மாதிரி யாராவது பல்டி அடித்து கொண்டேயிருந்தால் அதைப் பார்த்தாலே எனக்கெல்லாம் தலைச்சுற்றல் வந்து விடுமப்பா.
4) whenever there is some topic/comment on DK Veeramani, why do you go soft on him, for all the misdeeds he has done or doing? (I am getting lot BP to think such an "Ayokkiyan" is still indulging in his misdeeds and living happily!!!).
பதில்: வீரமணி அவர்கள் பற்றி எனக்கு விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் அதே சமயம் அவர் வயதுக்கும் மரியாதை தரவேண்டியதுதானே. பழக எளிதானவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். முறை 1965-ல் ஹிந்தி போராட்டத்தை எதிர்த்தவர் பெரியார் அவர்கள். அதை நான் இப்போது கூறும்போது பல பெரியார் பக்தர்கள் அதை நம்பவில்லை. அந்த காலத்திய விடுதலை இதழ்களை பார்க்க நான் ஆவல் தெரிவித்தபோது, நண்பர் பத்ரி என்னை நேராக வீரமணியிடமே செல்லுமாறு அறிவுரை கூறினார். சிறிதும் தயங்காமல் என்னை பெரியார் நூலகத்தில் வரச்செய்து சம்பந்தப்பட்ட விடுதலை இதழ்களை காட்டச் செய்வார் அவர் எனக் கூறினார்.

மற்றக் கேள்விகளை அடுத்தப் பதிவில் பார்ப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

37 comments:

வஜ்ரா said...

//
தில்: காதலியே என்னுடன் இருக்கும்போது கைக்குட்டையை வைத்து என்ன செய்வதாம்?
//

அப்பப்ப வழியும் அசடை துடைத்துக் கொள்ளலாம்.! :D

dondu(#11168674346665545885) said...

வஜ்ரா, அதற்கென்றே புடவைத் தலைப்பு என்ற சமாசாரம் இருக்க, கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வர வர அட்டகாசமாக போகுது கேள்வி பதில் பகுதி ,

பரதரசு

வஜ்ரா said...

//
பதில்: நீங்கள் குறிப்பிட்ட நபர்களைப் பற்றி இங்கே தனியாகப் பேச விரும்பவில்லை. பொதுவான பதிலாக கூறுகிறேன். பெரியாரே ஓரிடத்தில் சொன்னது போல கன்னட பலிஜா வகுப்பைச் சேர்ந்த அவர் தமிழகத்தின் தலைவனானதற்கு காரணமே தமிழனுக்கு தலைவனாகும் யோக்கியதை இல்லையென அவனே நினைப்பதாலேயே. தமிழன் சோற்றாலடித்த பிண்டம் என்று அவ்வப்போது ஒரு தலைவர் இங்கு கூறுவதும் அதைச் சேர்ந்ததுதான்.
//

தாழ்வு மனப்பான்மையைத் தவிற்கவேண்டும் என்று சொல்கிறீர்கள். தமிழன் தலைவனாக முடியாது என்பது ஒரு மாபெரும் தாழ்வுமனப்பான்மை தானே.
அத்தகய தாழ்வு மனப்பான்மையுடன் ஒரு தலைவன் இருந்தால் அந்த நாடு உருப்படுமா ?

அதைத் தவிற்க வழிகள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தமிழனுக்கு உண்டா ?

dondu(#11168674346665545885) said...

அம்மாதிரி தமிழனுக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதாகக் கூறியது நான் அல்ல, பெரியார் மற்றும் சில தலைவர்களே. (அவர்கள் பெயர் இங்கு வேண்டாமே).

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிஷோர் said...

1) மோடி போன்ற ஒரு மதவாதி என்னதான் ஒரு சிறந்த நிர்வாகி(எனக்கு இதில் ஆட்சேபனை இல்லை) என்றாலும். அவர் சார்ந்திருக்கும் மத அமைப்பின் சாயல் இருக்கும் வரை அவரை எப்படி ஒரு உதாரணபுருஷன் அளவிற்கு உயர்த்த முடியும்?

குஜராத்தில் பெற்ற வெற்றியை கூறாதீர்கள். அரசியல் வேறு நிர்வாகம் வேறு.

2) அப்படி அவரை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஏன் பின்லேடனை மோடியை விட சிறந்த நிர்வாகியாக எடுத்துக்கொள்ளக்கூடாது? அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை தலைமறைவில் இருந்து கொண்டே கவனித்துக்கொள்கிறானே! நிர்வாகம் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். அவனுடைய தீவிரவாதத்தை அல்ல.

3) ஒரு இந்து அமைப்பு ஒரு முஸ்லீம் அமைப்பு இரண்டுமே ஒரே பஞ்சாயத்திற்கு மோடியிடம் சென்றால் அவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும்?

bala said...

//பெரியார் மற்றும் சில தலைவர்களே. (அவர்கள் பெயர் இங்கு வேண்டாமே).//


டோண்டு அய்யா,

ஏன் வேண்டாம்?அந்த மூஞ்சிகளின் பெயர்கள் unprintable 4 எழுத்து வார்த்தைகள் என்பதாலா?

பாலா

Anonymous said...

பிரியங்கா சிறையில் போய் நளினியை சந்தித்தது,விடுதலைப் புலிகளை 'அப்பீஸ்' செய்யவே என்ற ஒரு கருத்து நிலவுகிறதே,அது பற்றி?
இந்திய அரசு இலங்கை அரசுக்கு தார்மீக ரீதியாக தரும் பல ஆதரவு உதவிகள்,புலிகளை கோபமடையச் செய்திருக்கும் இந்தச் சூழலில்,இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Anonymous said...

வாங்கும் சக்தி உயர்ந்தால் மக்களுக்கு விலைவாசி பிரச்னை தெரியாது என்று 'கருத்து' உதிர்த்திருக்கும் மு.க.பற்றி?

dondu(#11168674346665545885) said...

கிஷோர் அவர்களே, அடுத்த டோண்டு பதில்கள் பதிவுக்கான முதல் மூன்று கேள்விகளைக் கேட்டதற்கு நன்றி.

நான்காம் ஐந்தாம் கேள்விகளுக்கு நன்றி கோமணகிருஷ்ணன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Subramanian said...

அடுத்த பதிவிற்கான கேள்வி.
நேற்று(17.4.2008)ந்தேதி சட்டசபையில் பேசும்போது காந்தியைக் கொன்ற பாவிகளின் ஆட்சி வந்துவிடக்கூடாது.மீண்டுமொரு ராம ரதம்,அதவானியின் சுற்றுப் பயணம் எல்லாம் நடந்தால் நாடு காடாகி விடும்"என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளரே!
இது தொடர்பாக நீதிமன்றத்தில் விரிவாக விவாதம் நடந்து காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்.க்குப் பங்கு இல்லை என்று தீர்ப்பு வந்தபின்னரும் கூட கருணாநிதி இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவாக இருக்கும்?

Anonymous said...

மொக்கை போடும் கோமனகிருஷ்னனை எப்படி நல்ல கேள்விகள் கேட்க்க வைத்தீர்கள் டோண்டு ஐய்யா..

Subramanian said...

"இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் கிரீமி லேயருக்கான தற்போதுள்ள இரண்டரை லட்ச ரூபாய் உச்சவரம்பைத் தளர்த்திப் பத்து லட்சமாக்க வேண்டும்"என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.உண்மையிலேயே இவ்வாறு நடந்துவிட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே கேலிக்குள்ளாகி விடாதா.
(உண்மையில் இவ்வாறு தளர்த்தப்பட்டாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,எம்.எல்.ஏ.,உட்பட பஞ்சாயத்துக் கவுன்சிலர்கள் வரை யாருமே இந்த வரம்புக்குள் வர மாட்டார்களே.அவர்கள் வருமானம் இதை விட அதிகமல்லவா!)

K.R.அதியமான் said...

///நேற்று(17.4.2008)ந்தேதி சட்டசபையில் பேசும்போது காந்தியைக் கொன்ற பாவிகளின் ஆட்சி வந்துவிடக்கூடாது.மீண்டுமொரு ராம ரதம்,அதவானியின் சுற்றுப் பயணம் எல்லாம் நடந்தால் நாடு காடாகி விடும்"என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளரே!
////

Selective amenisa, eh !!!

What about DMK-BJP alliance in 1999-2004 with central minster post for Murasoli Maran in Vaajpayee cabinet (even when there was a terrible massacre in Gujarat in 2002) ????

Mu.Ka didn't feel this way in those alliance periods :)))))))))

Anonymous said...

//
மொக்கை போடும் கோமனகிருஷ்னனை எப்படி நல்ல கேள்விகள் கேட்க்க வைத்தீர்கள் டோண்டு ஐய்யா..
//

இது வேற கோமணகிருட்டினன் என்று நினைக்கிறேன்...."உண்மையான" கோமணம் தமிங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கும்.

Anonymous said...

//
3) ஒரு இந்து அமைப்பு ஒரு முஸ்லீம் அமைப்பு இரண்டுமே ஒரே பஞ்சாயத்திற்கு மோடியிடம் சென்றால் அவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும்?
//

முஸ்லீம் அமைப்புகள் பஞ்சாயத்துக்கு என்னிக்காவது கோர்ட், நீதிபதி, அல்லது முதலமைச்சரை அணுகியிருக்கிறதா ? அவர்கள் பஞ்சாயதெல்லாம் ஷரியா சட்டப்படி இமாம்கள் தான் தீர்த்துவைப்பார்கள்.

Anonymous said...

உலகம் உருண்டையா தட்டையா? கடும் விவாதம்!
http://ezhila.blogspot.com/2008/04/blog-post_5725.html

அரபியை தாய்மொழியாக கொண்டவர், குரானை ஆழ்ந்து படித்தவர், குரானின்படி, உலகம் தட்டைதான் என்று அடித்து சொல்கிறார்.

உலகம் தட்டை அல்ல, உருண்டை என்று கூட தெரியாமல் எப்படி கடவுள் இருக்க முடியும்?

அப்படியென்றால், கடவுள்தான் முகம்மதிடம் குரானை சொன்னார் என்று முஸ்லீம்கள் சொல்வது பொய்யா? அறியாமையா?

Anonymous said...

அடுதத வார கேள்விகள்:
1) படிக்காத மேதை காமராஜர் ஆட்சியியை விடவா மோடி சிறந்த முதல்வர் ஆகிவிட்டார்?

2) உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா? உங்கள் பதிவுகளில் அதன் வாடையே தென்படுவதில்லையே?

பதிவர் கூடுதுறை
http://www.blogger.com/profile/05008001111520545872

dondu(#11168674346665545885) said...

கூடுதுறை அவர்களே,

உங்கள் ஒரு கேள்வியை வெளியிட விரும்பவில்லை, ஏனெனில் இந்த நாசுக்கான தருணத்தில் இது விரும்பத்தகாத பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

கேள்வி கேட்க எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. தனிப்பட்டப் பதிவர்களை பற்றிய சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தவிர்ப்போமே.

புரிதலுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
1) மோடி போன்ற ஒரு மதவாதி என்னதான் ஒரு சிறந்த நிர்வாகி(எனக்கு இதில் ஆட்சேபனை இல்லை) என்றாலும். அவர் சார்ந்திருக்கும் மத அமைப்பின் சாயல் இருக்கும் வரை அவரை எப்படி ஒரு உதாரணபுருஷன் அளவிற்கு உயர்த்த முடியும்?
//

உங்களுக்குத் தெரிந்த உதாரணப்புருஷர்களை, நிர்வாகிகளை, முதலமைச்சர்களைக் கொஞ்சம் சொல்லுங்கள். மோடியை அவர்களுடன் ஒப்பிட்டபின் இந்த கேள்வி வந்திருந்தால் பரவாயில்லை. மொட்டையாக மோடி ஒரு மதவாதி, ஆகவே அவன் குற்றவாளி என்று முடிவுசெய்து விட்டு கேள்விகள் கேட்பதனால் உங்கள் முட்டாள் தனம் தான் வெளி உலகிற்குத் தெரியும். நீங்கள் கேட்கும் கேள்வியின் அர்த்தம் அல்ல.

Anonymous said...

1. Have you started buying Times of India - Chennai Edition
2. What Newspapers, Magazines do you read regularly. Do you plan to subscribe to Times of India..

சங்கு மாமா said...

பிரியங்கா நான் சொல்லி தான் நளினியை சிறையில் சந்தித்தார் என்று மொக்கை போடும்..டி ஆர் மாதிரி லூசு அரசியல் செய்பவர்களை பற்றி டோண்டு சார் என்ன நினைக்கிறார் ?

கிஷோர் said...

// மொட்டையாக மோடி ஒரு மதவாதி //
மன்னிக்கவும் மதவாதி என்பது சற்று அதீத வார்த்தைப்ரயோகம் தான். மத அமைப்பின் சாயல் என்பதை எடுத்துக்கொள்ளுங்களேன். இங்கு என் நிலைப்பாட்டை உணர்த்துவதை விட டோண்டு சாரின் பதில் தான் முக்கியம். நம் கச்சேரியை பிறிதொரு சமயத்தில் வைத்துக்கொள்ளலாம் vajra

ஜாம்பஜார் ஜக்கு said...

ஸாரே, இந்த மெட்ராஸ் பாஷைல இருக்கிற ஒரு இஸ்பீடு வேற தமிழ்ல ஏன் தலீவா வரமாட்டேன்னுது?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

dondu(#11168674346665545885) said...

கிஷோர் அவர்களே,

இந்த கேள்வி பதில் பதிவுகளில் அடுத்த பதிவுக்கான கேள்விகளை அவை வரவர முந்தையப் பதிவில் வெளியிடுவதன் பல நோக்கங்களில் ஒன்று அவை பின்னூட்டங்களாகவும் செயல்படும் என்பதே. ஒரு பின்னூட்டம் என்பது நானோ அல்லது பின்னூட்டமிடுபவரோ எழுதியதற்கு இன்னொரு வாசகரிடமிருந்து வரும் எதிர்வினையேயாகும். உங்கள் கேள்வியை ஏற்கனவே அடுத்த பதிவுக்கான வரைவில் ஏற்றியாகி விட்டது. இப்போது வந்தது வஜ்ரா அவர்களின் எதிர்வினை அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிஷோர் said...

நன்றி தலைவா

Anonymous said...

ஐயா,
களப்பிரர் தங்களையும் தங்கள் கேள்வி பதிலையும் மிகவும் கிண்டலடித்துள்ளார்கள்.அதை பார்க்கவும்.
டோண்டூ கேள்வி பதில்கள் - எனது வடிவில்...

தாங்காதுடா சாமி... எங்க பார்த்தாலும் கேள்வி பதில்... அப்ப நம்ம ??

அறிஞர் அண்ணா வின் கொள்கை கூட பிராமணரை எதிப்பது அல்ல அவர் கொள்கை,பிராமாணியத்தை எதிப்பது.ஏன் இவர்களின் பிராமண துவேஷம் எப்போது நீங்கும் இது.வலப்பூபதிவளார்கிடையே இந்த சச்சரவு(தற்காலத்திற்கு தேவை இல்லாத ஒன்று)நீங்கினால் தமிழர் யாவருக்கும் நன்மையன்றோ.

தனியாக ஒரு பதிவு போடவும்.அனைவரது சமதானத் தூதுவனாக.
அனைவரும் ஒன்றே
ஒற்றுமையாய் பகைவர்(தண்ணிரை மறிப்போர்)தம்மை
ஓடவைப்போம்
ஒரு தாய்(தமிழன்னை) வயிற்று பிள்ளைகளுக்குள் சண்டை தேவையா.

dondu(#11168674346665545885) said...

டோண்டுவுக்கு கேள்வி பதில்கள் போட உரிமை இருந்தால் களப்பிரருக்கு அவற்றை கிண்டல் செய்யவும் உரிமை உண்டு. அவர்பாட்டுக்கு செய்யட்டும், நான்பாட்டுக்கு கேள்விகளுக்கு பதில் அளித்து செல்கிறேன்.

முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சனை வைத்து எவ்வளவோ கிண்டல்கள் வந்து விட்டன. ஆனால் அவ்வாறு கிண்டல் செய்த ஒருவர்கூட நிக்சனின் வெளியுறவுக் கொள்கைகளை வைத்து அவரைக் கிண்டல் செய்ய இயலவில்லை. ஏனெனில் அமெரிக்க குடியரசுத் தலைவர்களில் அவர் அளவுக்கு வெளியுறவுத் துறையில் சிறப்பாகச் செயல் புரிந்தவர்கள் நிஜமாகவே அபூர்வம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பாலா அவர்களே,

உங்களது இக்கேள்விகளை நான் அனுமதிக்கவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடாது கேள்விகளை கேட்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dear Mr.dondu

Why you waste your energy in fighting 'bramanical' things instead of accepting 'stone age fact of braminical' and take different topics for discussion , like......
1-Un told story of kushbu
2-Jaya -she is a legal child?
3-wts your beauty rating of current TV actressss and which one you like most.
4-did you saw Dr.cockney's sex servoys?

Heeheehheeeeee......

Anonymous said...

எம்.கண்ணன், பாங்காக்

1. தமிழகத்தைச் சேர்ந்த தற்போதுள்ள மத்திய அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் ? உங்கள் அளவில் ? ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மார்க் போடுவீர்கள் ( Out of 10) இந்தியா டுடே பாணியில்)

2. மகர நெடுங்குழைக்காதன் இவ்வளவு ஃபேமஸ் ஆவார் இணையத்தில் (உங்கள் மற்றும் லக்கி பதிவுகளால்) என எதிர்பார்த்ததுண்டா ?

3. பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் நீங்கள், ஐடி கம்பெனிகள் ஜெர்மன், பிரெஞ்சு,
இத்தாலியன் (அவர்கள் பணியாளர்களுக்கு) சொல்லித்தர கூப்பிட்டால் செல்வீர்களா ? சென்னையில் உள்ள காக்னிசாண்ட் (CTS), இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற கம்பெனிகளிடம் இந்த மாதிரி ஒரு கன்சல்டன்ஸி வேலையை ஏற்றுகொள்வீர்களா ? அவர்களை தொடர்பு கொண்டதுண்டா?

4. ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் ?

5. இந்தக் கோடையின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள என்னென்ன உத்திகளில் இறங்கியுள்ளீர்கள் ? ஊட்டி, கோடை டிரிப் உண்டா ? இல்லை நங்கநல்லூர் மட்டுமே தானா ?

6. இந்தியாவின் மின்சார பற்றாக்குறையை தீர்க்க உடனடியாகவும், நீண்ட கால நோக்கிலும் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள் ?

திருநெல்வேலி கார்த்திக் said...

கேள்வி பதில் மூலம் தமிழ் பதிவுலக நண்பர்களின் எல்லாத் தரப்பு ஐயங்களுக்கும் சாதுர்யமாக விடை அளித்து பண்பு காக்கும் தங்களுக்கு என் நன்றிகள்.
தமிழ் வலைப்பூ பதிவாளர்களின் வலைப்பதிவுச் செய்திகளை படிக்கும் போது தமிழ் மொழி பெற்ற ஏற்றம் தெரிகிறது.
ஆனாலும் பதிவாளர்களிடையே நடை பெறும் காலத்திற்கு தேவையற்ற, பண்பு நிலை தவறிய கருத்து பரிமற்றங்கள்,தனி மனிதனை எதிர்த்து உபயோகிக்கும் கடுமையான வார்த்தைகள்,மதம்,உட்பிரிவு,இறைநம்பிக்கை,மொழிப்பற்று,சட்ட திட்டங்கள்,அரசுகளின் செயல் முடிவுகள் ஆகியவை சார்ந்த கோப தாபங்கள்.
இந்த பதிவுகளில் சில சமயம் தமிழர் நாகரிகம் மீறப் படும் சமயங்களில் இதை தவிர்ப்பது எப்படி?
தமிழ் வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவது என்பது இன்றய தேவை (ஆரோக்கியமான விமர்சனங்கள் பிறர் மனம் நோகச் சிந்தனை,பண்புகாக்கும் அன்புச் செயல்,பரஸ்பர நல்லுணர்வு, சகோதர பாச நல் இயல்புகள்,நீதிதவறா நிலை,சார்பற்ற சமநிலை)என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அதற்கான சம கருத்துள்ள நடுநிலை பதிவாளர்கள் துணை கொண்டு முதல் முயற்சிகளை தாங்கள் செயல் படுத்த வேண்டும்.செய்வீர்களா?

dondu(#11168674346665545885) said...

//அதற்கான சம கருத்துள்ள நடுநிலை பதிவாளர்கள் துணை கொண்டு முதல் முயற்சிகளை தாங்கள் செயல் படுத்த வேண்டும்.செய்வீர்களா?//
அப்படியெல்லாம் வெளிப்படையாகக் கூறாது, ஆனால் அதைத்தான் செய்ய முயலுகிறேன். எனது முயற்சி தொடரும். மற்றப்படி எல்லாம் எனது உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் சித்தம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

g said...

ஜிம்ஷா said...
///நீங்கள் குறிப்பிடும் படம் உலகம் சுற்றும் வாலிபன். அதில் எம்ஜிஆருக்கு அண்ணன் தம்பியாக இரு வேடங்கள் மட்டுமே. விஞ்ஞானி எம்ஜிஆரின் மனைவி மஞ்சுளா, தம்பி எம்ஜிஆரின் காதலி லதா, மற்றும் பல நாயகிகள். அவர்களை தம்பி எம்ஜிஆர் மீது மையல் கொள்ள அவர் மட்டும் அவர்களை சகோதரியாக நடத்த ஆனால் அவர்கள் இவருடன் சல்லாபமாக இருப்பது போல காட்சிகளை அமைத்து அவர்களை ஜூஸ்போல பிழிவதில் என்னவோ குறைவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்///


டோண்டு சார் என்ன சாதாரண ஆளா? சரியாத்தான் சொன்னீங்க டோன்டு சார். தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி.

Anonymous said...

டோண்டு அவர்களே,

உங்கள் மனைவியே காதலி என்கிறீர்களே, கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே உயர் பதவியில் இருக்கும் ஒருவன் அண்மையில் வாலாட்டினான் - தனது மனைவியே தனக்கு எல்லாம் என்றும் ஆனாலும் அந்த உறவு சிறப்பாக இருப்பதற்கு மற்ற பெண்களின் உறவும் வேண்டுமாம். இத்தனைக்கும் அவனது மனைவி எனது தோழி. இப்படியும் இருக்கிறார்களே, என்ன செய்யலாம்?

dondu(#11168674346665545885) said...

//இங்கே உயர் பதவியில் இருக்கும் ஒருவன் அண்மையில் வாலாட்டினான்//
அவனை செருப்பால் அடித்திருப்பிர்கள்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அடிக்காத குறை தான். குடும்ப நண்பன் வேறு. சற்று ஒதுங்கியே இருக்க போகிறேன். மனைவி அருமையான பெண்மணி.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது