5/11/2009

Good touch, bad touch

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்திரவுகள் பற்றி இன்று (10.05.2009) மாலை நாலரை மணியளவில் கிழக்கு பதிப்பகத்து மொட்டை மாடியில் கலந்துரையாடல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை வழிநடத்துவதற்கு டாக்டர் ருத்ரனும் டாக்டர் ஷாலினியும் அன்புடன் ஒப்புதல் தந்திருந்தனர். தீபா என்னும் பதிவரின் முன்முயற்சிக்கு பதிவர்கள் லக்கிலுக், நர்சிம், அதிஷா ஆகியோர் ஒத்துழைத்து, பத்ரி அவர்கள் நல்ல மனதுடம் இடம் தந்து உதவினார்.

நான் சரியாக மாலை நான்கரை மணிக்கு எல்டாம்ஸ் ரோடில் இருந்த கிழக்கு பதிப்பகத்துக்கு சென்றபோது, அங்கு அக்கினி பார்வை, லக்கிலுக், இஸ்மாயி, அதிஷா ஆகியோர் கீழே நின்று எல்லோரையும் மாடிக்கு அனுப்பியவண்ணம் இருந்தனர். மாடியில் நர்சிம், முரளிகண்ணன், கார்க்கி, நரேஷ் ஆகியோர் ஏற்கனவே குடியிருந்தனர். மாடியின் இன்னொரு மூலையில் பத்ரியும், உழவனும் பேசி கொண்டிருந்தனர். பிறகு பைத்தியக்காரன், மருத்துவர் ப்ரூனோ, கேபிள் சங்கர், ஹசன் ராஜா, சிந்தாமணி, அமிர்தவர்ஷினி அம்மா, ஆகியோர் இருந்தனர். திடீரென வால் பையனிடமிருந்து ஃபோன் வந்தது. ரம்யா என்னும் பதிவர் இரு பொன்னாடைகள் கொண்டு வந்ததாகவும், அவற்றை ருத்ரன் மற்றும் ஷாலினிக்கு அணிவிக்க உடவி புரிய வேண்டுமென கேட்டு கொண்டார். ரம்யா அவர்களைப் பார்த்து பொன்னாடைகளை அவரிடமிருந்து பெற்று, பத்ரியிடம் தந்து, சரியான நேரத்தில் அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு அணிவிக்க வேண்டுமென கேட்டு கொண்டேன். திடீரென கோவி கண்ணன் வர அவரைக் கட்டித் தழுவி வரவேற்றேன். இமுறையும் 1000 ரூபாய் ஷேவிங் செய்து கொண்டாரா என அவரை கலாய்க்க, அவர் அதை ஸ்போர்டிவாக எடுத்து கொண்டார்.

டாக்டர்கள் ருத்ரன் மற்றும் ஷாலினி வந்தவுடம் கலந்துரையாடல் மாலை ஐந்தேகால் மணிக்கு தொடங்கியது. பத்ரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துமாறு பதிவர் கிருத்திகாவை கேட்டு கொண்டார். அவரும் குழந்தைகளுக்கு செய்யப்படும் பாலியல் அத்துமீறல்களை பட்டியலிட்டு, அவற்றை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் முன்னால் உள்ள பிரச்சினை. அவ்வாறு செய்வதை அறிந்து குழந்தைகளையும் எச்சரிப்பது எப்படி என்பதை பார்க்கவே இந்த உரையாடல். முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் இவ்வகை பாலியல் தொந்திரவுகள் அவர்ககள் உடலை கண்ட இடங்களில் தொடுவதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒன்றும் அறியா குழந்தைக்கு அதை கற்றுக் கொடுக்க ஆரம்பிப்பதுதான் good touch, bad touch (நல்ல தொடுகை, கெட்ட தொடுகை) பற்றி குழந்தைகளிடம் கூறுதல். அதை இன்னும் விரிவாக விளக்கி கூறவே ஷாலினியும் ருத்ரனும் வந்துள்ளனர். இதை ஒரு செமினார் என கூறுவதை விட கலந்துரையாடல் எனச் சொல்வதே அதிகப் பொருத்தமாக இருக்கும் எனக்கூறி அவர் தனது அறிமுகப் பேச்சை முடித்து கொண்டார்.

பத்ரி இப்போது ஷாலினியை பேசுமாறு கேட்டு கொள்ள, அவரும் பேச ஆரம்பித்தார். தமிழில் பேசுவதா ஆங்கிலத்தில் பேசுவதா என அவர் கூடியிருந்தவர்களை கேட்க, பெரும்பான்மையோர் தமிழுக்கே முன்னுரிமை தந்தனர். இது பற்றி தான் பேச வேண்டும் என பலர் கேட்டுள்ளனர் என்று கூறிய அவர் ஜெர்மனியிலிருந்து குமார் என்பவர் ஆற்றிய பங்கையும் குறிப்பிட்டார். மே 10-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி ஃபிக்ஸ் செய்யப்பட்டதும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ருத்ரன் அவர்களும் வருவது தனக்கு பிறகுதான் தெரியும் எனவும் அவர் சொன்னார்.

தான் மட்டும் பேசிக்கொண்டே போகாமல், ஏதோ நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் ரீதியிலேயே அவர் பேசி, அவ்வப்போது ஆடியன்சிடமிருந்து கேள்விகள் கேட்டு பதிலும் பெற்றார். பாலியல் தொந்திரவுகளுக்கு பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் ஆளாகின்றனர் என்று அவர் தனது உரையை ஆரம்பித்தார். அவ்வாறு வயது வந்த ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் ஆண் குழந்தை, தன்னை ஓரின ஆர்வலனவாகவே கற்பனை செய்து கொண்டு, அப்படியே ஆகியும் விடுகிறான் என கூறி, self-fulfilling prophecy என அதை விவரித்தார்.

இவ்வாறு பாலியல் தொந்திரவுக்கு ஆளான பெண் குழந்தைக்கு வேறுவித பிரச்சினைகள். அவர்கள் செக்ஸ் என்பதையே வெறுக்க ஆரம்பிக்கின்றனர். தங்களது அனுபவத்தை ஒன்று சைக்கியாட்ரிஸ்டுகளிடம் கூறுகின்றனர், அல்லது ஒரு காலகட்டத்தில் ஆண் நண்பனிடமோ கணவனிடமோ கூறுகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆண் துணை அவர்களை அதற்காக நிராகரிப்பதுதான் பல தருணங்களில் நடக்கிறது என்றும் கூறினார்.

இங்கு நாம் கூடியிருப்பது prevention is better than cure என்னும் கோட்பாட்டுக்கேற்ப, அவறை சம்பந்தப்பட்ட பெற்றோர்களாக எவ்வாறு தடுப்பது என்பதை விவாதித்து கண்டறியவே என்பதை தெளிவுபடுத்தினார். ஒரு பெண் குழந்தை அதிககாலத்துக்கு குழந்தையாகவே காட்சியளிக்கிறாள். ஆண் குழந்தையோ குரல் உடைதல், மீசை முளைத்தல் ஆகிய காரணங்களால் சீக்கிரமே குழந்தை தோற்றத்தை இழக்கிறான். மேலும் பல ஆண்கள் குழந்தை முகமுடைய பெண்களையே விரும்புகின்றனர் எனக் கூறி, சில நடிகைகளின் பெயர்களை உதாரணமாகக் கூறினார் (ஜோதிகா, த்ரிஷா etc.). பொதுவாக ஆண்களுக்கு வேறு எந்த நடிகைகளை பிடிக்கும் என அவர் கேட்க, ஒருவர் தமன்னா பெயரை கூற, நானோ நமீதா பெயரை கூறினேன். நமீதாவுக்கும் குழந்தை லுக்தான் என அவர் கூற, ஆனால் அவரிடம் நான் நமீதாவை விரும்பும் வேறு இரு முக்கிய காரணங்களை வெளியில் கூறாது தவிர்த்ததன் காரணமே, விவாதம் திசை திரும்பக்கூடாது என்ற நல்ல எண்ணத்தாலேயே. :)))

அவ்வாறு குழந்தை முகமுடைய பெண்களை விரும்பும் சில ஆண்களில் சிலர் குழந்தைகளையே விரும்ப ஆரம்பிக்கின்றனர் என்றும் அவர் கூறினார். ஒரு வயது வந்த பெண்ணை அணுகி தனது விருப்பத்துக்கு அவளை மயக்கும் திறமை தன்னிடம் இல்லை என நினைக்கும் பல ஆண்கள் சுலபமாகவே பெண் குழந்தைகளை செக்ஸ் கண்ணோட்டத்துடன் பார்க்க தொடங்கி விடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஒரு 27 வயது பெண், நிரம்பப் படித்தவள், கல்யாணம் செய்ய மறுத்து, வேண்டுமானால் நண்பர்களாகவே இருந்து விடலாம் என்றும், உடலுறவு எல்லாம் வேண்டாம் என்றும் கூறும் அளவுக்கு போன உதாரணத்தையும் அவர் குறிப்பிட்டார். அவள் 13 வயதாக இருக்கும் போது பிடி மாஸ்டர் அவளை பாலியல் தொந்திரவுக்கு ஆளாக்கினார் என்பதை கூறிய அவர், அதற்காக பிடி மாஸ்டர்களே வேண்டாம், டியூஷன் வாத்தியார்களும் வேண்டாம் என இருந்துவிட இயலுமா எனவும் கேள்வி எழுப்பினார். அதே சமயம் 24 மணி நேரமும் குழந்தைகளுடன் பெற்றோரால் இருக்கவியலாது. என்ன செய்வது. இங்குதான் குழந்தையுடன் பேசுவது முக்கியமாகிறது. அதற்கு உடலின் பல்வேறு பாகங்களின் பெயரை கூறி, அவற்றின் உபயோகங்களை கூறும் அதே தருணத்தில் பிறப்புறுப்புகள் பற்றி பேச வேண்டியிருப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தான் ரொம்ப பிசி என்றெல்லாம் பெற்றோர்கள் இருக்கலாகாது என்பதையும் அவர் கூறினார்.

பாலியல் தொந்திரவுகளை குழந்தைக்கு தருபவர்களில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. ஆனால் ஆண்களின் எண்ணிக்கை அதிகம். அதற்கு முக்கியக் காரணம் அவர்களது ஹார்மோன்களே (டெஸ்டரோன்). பெண்களுக்கோ இயல்பாகவே அடக்கி வாசிக்கும் குணம் உண்டு. ஏனெனில், பல ரிஸ்குகளை அவர்கள் உணர்கின்றனர்.

குழந்தைகளை தலையில் தொடலாம், தோள்களை தொடலாம், ஆனால் பாலுறுப்புகளை தொடுவது என்பதை அலவ் செய்யவே கூடாது. அவை பேட் டச் கீழே அழுத்தம் திருத்தமாக வருகின்றன. அவ்வாறு தொடும் ஆண்கள் குழந்தைக்கு நெருங்கிய உறவினர்களாகவும் அமைந்து விடுகின்றனர். பக்கத்து வீட்டு மாமா, எதிர் வீட்டு அங்கிள் என்றெல்லாம் சாத்தியக்கூறுகள் விரிகின்றன. சில சமயம் அப்பாக்களும் தாத்தாக்களும் இங்கு குற்றவாளிகள் ஆகின்றனர். அவ்வாறு நடக்கும்போது, குழந்தை அதை பெற்றோர்களிடம் கூறும்போது அவர்கள் அதை பொறுமையாக கையாள வேண்டியிருக்கிறது. அப்பாவே அதை செய்யும்போது என்ன கூறி தவிர்ப்பது என கேள்வி எழுந்தபோது, நான் தேவிபாலா அவர்களது ஒருகதையில் பெண்ணின் பாட்டி அவளிடம் “அரைகுறையாக ஆடை உடுத்தி உன் அப்பா முன்னாலும் வரக்கூடாது, ஏனெனில் அவன் முதலில் ஒரு ஆம்பளை” என கூறியதை எடுத்துரைத்தேன்.

மேலும் குழந்தைக்கு 16 வரைதான் child abuse என்பது சாதாரணமாக வருகிறது. ஒரு குழந்தை, அதுவும் பெண்குழந்தை, 16 வயதுக்கப்புறம் தானே சிந்திக்கும் திறன் பெறுகிறது என சட்டம் தீர்மானிக்கிறது.

ஆண் குழந்தைகளுக்கான சிக்கல் வேறு வகை. அம்மாவின் கண்ட்ரோலில் இருக்கும் மகன் நண்பர்களால் பொட்டை, ஒம்போது என்றெல்லாம் ஏசப்படுகிறான். அவர்களுக்கும் சுய மரியாதை குறைந்து ஓரின ஆர்வலராகவே மாறி விடுகின்றனர். ஷாலினி அவர்கள் சென்ற ஒருகிராமத்தில் ஆண்குழந்தைகள் அதிகத் தயக்கம் காட்ட பெண்குழந்தைகளுக்கு அந்த பிரச்சினை இல்லை என்பதை தான் கண்டதையும் அவர் குறிப்பிட்டார். ஆணை இன்னும் கருணையோடு கையாள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவர்கள் சாதிக்க வேண்டியது அதிகம். அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இவ்வாறு தமது சுயத்தை இழப்பது சமூகத்துக்குத்தான் இழப்பு. ஏனெனில் சாதிக்கப்பட்ட பலவிஷயங்கள் ஆண்கள் மூலமே நடந்துள்ளன. பெண்ணை பொருத்தவரை அவள் சரியாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலே போதும் என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனால் ஆண்களோ பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இது ஏன் என அவர் ஆடியன்ஸை பார்த்து கேள்வி கேட்டபோது, because man's ego gets hurt very easily என நான் சொன்னதை ஷாலினியும் ஏற்று கொண்டார்.

வெற்றியை உணரும் ஆண்களின் ஹார்மோன்கள் அதிகச் செயல்பாட்டுடன் இருக்கும்போது, தோல்வி மனப்பான்மையில் இருக்கும் ஆண்களோ ஹார்மோன் குறைவால் பீடிக்கப்படுகின்றனர். பிறருடன் அதிகம் பழகாத ஆண் வெகுவிரைவில் செக்ஸ் டாக்டர்களின் வலையில் வீழ்கிறான். மற்றவர்களுடன் சுலபமாக நட்பை உருவாக்கும் ஆற்றல் பெற்ற ஆணோ தனது பிரச்சினை தன்னுடையது மட்டுமல்ல, கிட்டத்தட்ட தனது எல்லா சமவயது ஆண்களுக்குமே இதுதான் பிரச்சினை என அறிந்து தெளிவு பெறுகிறான் என்றும் அவர் கூறினார். அவ்வாறு தெளிவில்லாதவர்கள் தங்களை gay என அடையாளம் கண்டு கொண்டு, பிரச்சினை மேலும் தீவிரமாகிறது என்றும் அவர் கூறினார்.

ருத்ரன் அவர்கள் பேசும்போது ஏற்கனவேயே ஷாலினி பலவிஷயங்களை தொட்டுவிட்டதால் தனது உரையை interactive ஆக வைத்து கொள்ளும் எண்ணத்தை வெளியிட்டார். What is good touch, what is bad touch என்பதை பார்க்கும்போது, பெற்றோர்கள் குழந்தையை கொஞ்சுகின்றனர். குழந்தைக்கும் அது பிடித்துள்ளது, அதுவும் அதை எதிர்பார்க்கிறது. வேறு யாராவது கொஞ்சினாலும் அதற்கு விகல்பமாக தெரிவதில்லை. எப்படியும் ஒட்டு மொத்தமான பாதுகாப்பு என்பது இயலாத காரியமே. ஆகவேதான் நல்ல தொடுகை, கெட்ட தொடுகை ஆகியவற்றின் அறிவை குழந்தைக்கு தர வேண்டும். ஷாலினி சொன்னதுபோல குழந்தையுடன் நல்ல தகவல் தொடர்பு தேவை.

வெளியாரிடம் பேசும்போதும், பழகும்போதும் அளவுடனேயே பேசி, ப்ழக வேண்டும். ஆனால் அந்த அளவு என்ன என்பதில்தான் பிரச்சினை. பல சமயங்களில் பெற்றோருக்கே அது தெரியாது. ஆகவே குழந்தைகளுக்கு சொல்லித்தரும் முன்னால் பெற்றோர்கள் அதை கற்பது முக்கியம். ஆனால் நாம் அதை செய்வதில்லை. அதைத்தான் ஷாலினி குறிப்பிட்டார் எனவும் அவர் கூறினார். இப்போதெல்லாம் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்கின்றனர். குடும்பமும் அளவில் மிக சுருங்கி விட்டது.

பாலுறுப்புகளை மற்றவர் தொட அலவ் செய்யக்கூடாது என்பது போலவே குழந்தையும் தனது பாலுறுப்பை அளவுக்கு அதிகமாக கையாளுவதும் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அதை நாசுக்காக செய்ய வேண்டும். குழந்தையை ஒரு காரியம் செய்யாதே என்றால் அதைத்தான் செய்யும். ஆகவேதான் நாசுக்கு அவசியம். குழந்தைத்தனமாக பேசுவதை பெரியவர்கள் தவிர்க்க வேண்டும். Call a spade spade என்பது போல செயல்பாடுகள் வேண்டும். ஆனால் அதெல்லாம் சம்பந்தப்பட்ட குழந்தையின் மனப்பாங்கு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுவதால், ஒட்டுமொத்தமாக இதுதான் சரி என கூறப்படும் எந்த விஷயமுமே இல்லை. இதை ஒரு ரோல் ப்ளே மூலம் ஷாலினி விளக்கினார்.

ருத்ரன் அவர்கள் இன்னொரு உதாரணம் கூறினார். தான் ஒரு குழந்தைக்கு முத்தம் கொடுக்க, அதை விரும்பாத அக்குழந்தையின் அன்னை, அதை குழந்தைக்கு எப்படி தெரியப்படுத்துவார் என கேட்க, ஒரு பெண் பார்வையாளர் மாமாவின் தாடிக்குள் தேள் இருக்கிறது என கூறுவேன் எனக் கூற, அப்போ தாடியில்லாத அங்கிள் முத்தமிடலாமா என மடக்கினார். கடைசியில் ஷாலினி தேவையின்றி வெளி ஆண்களுடன் ஈஷக்கூடாது என ஒரு பெண்குழந்தைக்கு தெரிவிக்க, அவளை பற்றிய உதாரணமாக இல்லாது கதைகள் மூலமாக வேறு யாருக்கோ நடந்தது போலக் கூறுவதுதான் அதிகப் பலனை அளிக்கும் எனக் கூறினார். இப்போது ஷாலினி Good touch, bad touch என்று தான் வகைப்படுத்தாததை பார்வையாளர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தார். எதுவுமே ஒரேயடியாக நல்லதோ கெடுதலோ எனக் கூறிவிட்டு, சில சமயங்களில் இம்மாதிரி பாலியல் சீண்டல்களே குழந்தைக்கு செக்ஸ் கல்வியாக அமைந்து விடுகிறது எனக் கூறிவிட்டு அதை மேலே விவரிக்காமல் விட்டுவிட்டார். அந்த ஆஸ்பெக்டை இங்கு மேலும் பேசுவது திசைதிருப்பலாக ஆகிவிடும், ஆகவே வெறுமனே தொட்டுவிட்டதோடு நிறுத்தி கொண்டார் என்பது எனது கருத்து. தவறாக இருந்தால் அதை திருத்தி கொள்கிறேன். ஷாலினிதான் கூற வேண்டும். ட்ரைபல்ஸ்களிடம் இந்த பிரச்சினை இல்லையெனவும் எல்லாவற்றையும் சரியான காலத்தில் யதார்த்தமாகவே குழந்தைகள் கற்று கொள்கின்றனர் என்பதையும் அவர் சுருக்கமாக கூறி விட்டுவிட்டார்.

அதற்காக செக்ஸ் என்பதே கூடாது என்றும் இருக்க முடியாது. 16 வயது பெண்ணிடம் அவள் அன்னை இதையெல்லாம் பெண் தனது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே பலனளிக்கும் என அவளிடம் கூற வேண்டும் என்று ஷாலினி சொன்னார். பல விஷயங்கள் பல permutations and combinations-ல் வருவதால் இப்பிரச்சினை கேஸ் பை கேஸ் டீல் செய்யப்பட வேண்டியது என ருத்ரனும் கூறினார்.

தனது பெற்றோரால் பல விஷயங்களை அறிந்துகொள்ளும் குழந்தை அவற்றை பலருக்கு முன்னால் பேசும்போது, “இவ்வாறா குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது” என அண்டைவீட்டார் கூறினால் என்ன செய்வது என ஒருவர் கேட்க, ஆகவேதான் இம்மாதிரி அணுகுமுறைகள் பரவலாக்கப்பட வேண்டும் என ஷாலினி பதிலளித்தார்.

ஆடியன்சில் ஒரு பெண்மணி தனது இரு பிள்ளைகள் பற்றி பேச ஆரம்பித்தார். “மூத்தவனுக்கு வயது 17+, இளையவனுக்கோ 10+. பெரியவனிடமிருந்து சிறியவனை எப்படி பாதுகாப்பது, இருவரும் ஒரே அறையில் தூங்குகின்றனர்” என்றார் அவர். அப்படி ஒரேயடியாக பெரியவன் பேரில் தப்பான அபிப்பிராயம் வரும் வகையில் சிறியவனிடம் பேசலாகாது, நாசுக்காகத்தான் கையாள வேண்டும் என்றார் ஷாலினி.

தன் மேல் தன் 9 வயது பெண் காலைப்போட காலிலேயே அடித்தார் தனது மனைவி. பெண்ணோ அதை எதிர்த்தாள். மனைவி கணவன் மேல் காலைப்போடும்போது பெண் அதை நீக்கினாள் என ஒருவர் கூற, பெண்ணுக்கு காலை உயர்த்தி வைத்துக் கொள்வது சௌகரியமாக இருந்திருக்கும் ஆகவே அவளுக்கு பக்கத்தில் தலையணையை வைக்கலாம் என ஷாலினி ஆலோசனை கூறினார். வெகுளியாக குழந்தை இருந்தால் தேவையற்ற விவரங்கள் தருவது வேண்டாம் எனவும் அவர் கூறினார். யார் மேலும் காலை போடக்கூடாது என்பதை மட்டும் குழந்தைக்கு கூறினால் போதுமானது என ருத்ரன் அவர் பங்குக்கு கூறினார்.

தன்னால் குழந்தையுடன் அதிக நேரம் கழிக்காத நிலையில் ஏதேனும் குறுக்கு வழி இருக்கிறதா என ஒரு பெண்மணி கேட்க, அப்படியென்று எதுவும் இல்லை என ஷாலினி கூறினார். குழந்தைக்கு முன்நிபந்தனையற்ற அன்பைத் தரவேண்டும். அம்மாவிடம் எதையுமே கூறிடலாம் என்ற நம்பிக்கை குழந்தைக்கு அவசியம் என்றும் அவர் கூறினார். அதே சமயம் சில குழந்தைகள் வேண்டுமென்றே தனக்கு பிடிக்காத பெரியவர்களை போட்டுத்தரலாம் என்றும், ஆகவே தீர விசாரித்தே ஒவ்வொரு பிரச்சினையையும் கையாள வேண்டும் எனபதையும் ஷாலினி கூறினார்.

மைக்கை வாங்கிய பத்ரி இப்போது சற்றே மாறுபட்ட கேள்வியை வைத்தார். பெண்களுக்கு அலுவலகங்களில் ஏற்படும் பாலியல் தொந்திரவு பற்றி கேட்டார். மேலும் குழந்தைகள் செக்ஸ் கல்வி விஷயத்தில் பள்ளிகளின் பங்கேற்பு பற்றியும் கேட்டார். Off-color பேச்சுக்களே பாலியல் தொந்திரவாக கருதப்படலாம் என ஆரம்பித்த ஷாலினி, பெண்கள் தன்னம்பிக்கை இதில் முக்கியம், ஆனால் பல இடங்களில் இயலாது போய்விடுகிறது என்றார். ஸ்கூல்கள் பற்றி பேசும்போது கத்தோலிக்க நன்களால் நடத்தப்படும் பள்ளியில் தன்னை ஒருமுறை குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி தருமாறு அவர்கள் கேட்டதகவும், தானும் ஒருமுறை பேசியதாகவும் கூறிய ஷாலினி, ஆனால் இதற்கான மனிதவளம் போதாது எனவும் கூறினார். போகிற போக்கில் பள்ளிகள் இதை கூறுவதே போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பொது ஊடகங்களில் இதைக் கையாண்டால் பள்ளிகளுக்கும் அவை போய் சேரும் என்றார்.

ட்ரைபல் குழந்தைகள் இவ்விஷயங்களை போகிற போக்கில் கற்கின்றனர். செக்ஸ் ஒரு பெரிய விஷயமே இல்லை. எல்லா உயிரினங்களூமே அதில் ஈடுபடுகின்றன என்றும் ஷாலினி கூறினார். ஆனால் பல டிவி நிகழ்ச்சிகள் இவற்றை மிகைபடுத்திக் காட்டி குழந்தைகளை குழப்புகின்றன. இலை மறைவு காய் மறைவாக குழந்தைகள் இதை அறிந்து கொள்ள வேண்டும் எனக்கூறிய நான், இது சம்பந்தமாக ஜெயகாந்தன் எழுதிய கதையையும் குறிப்பிட்டேன். ஷாலினி நான் சொன்னதை ஆமோதித்தார்.

நான் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைத் தொட்ட லக்கிலுக் அப்பாக்கள் பெண் குழந்தைகளை குளிப்பாட்டலாமா என கேட்க, சம்பந்தப்பட்ட அப்பா தாய்மை உணர்வுடன் இருந்தால் அதில் தவறில்லை எனக் கூறினார். ஒரு குட்டி சாமியார் வாழ்க்கையின் பல தத்துவங்கள் பற்றி பிரசங்கம் செய்ததாகவும், அதில் அடல்ட் விஷயங்களும் இருந்தன எனக்கூறிய ஒருவர் அந்த வயது குறைந்த சாமியார் கூறுவதை ஒத்துக் கொள்ளலாமா எனக் கேட்க, “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என தயக்கமின்றி ஷாலினியிடமிருந்து புல்லெட் கணக்கில் பதில் வந்தது. சிவ்னே முருகனிடம் பயபக்தியுடன் உபதேசம் பெறும் போது நமக்கென்ன சிக்கல் எனவும் அவர் கேட்டார்.

குழந்தையே பெரிய விஷயங்களை பேசினால் அதை யதார்த்தமாக டீல் செய்வதே நன்று எனவும் அவர் கூறினார். Sex abuse நடந்தால் போலீசில் சொல்வதே முறை என்பதில் ஷாலினி தெளிவாகவே இருந்தார். (அது எப்போதுமே சாத்தியம் இல்லை என்பதை நான் கூற விரும்பினாலும் சந்தர்ப்பம் அமையவில்லை. உதாரணத்துக்கு பெண்ணின் தந்தை அவ்வாறு செய்ய, போலீசில் சொன்னால் அவன் சிறை செல்ல நேரிடும், குடும்பத்தை வறுமை மற்றும் கெட்ட பெயரிலிருந்து காப்பாற்றுவது யார்? இப்பதிவை ஷாலினியோ ருத்ரனோ படித்தால் பதிலளிப்பார்கள் என நினைக்கிறேன்).

ரமேஷ் வைத்யா “சில சமயம் குழந்தையே செக்ஸ் உறவை தூண்டுகிறது, அப்போது என்ன செய்வது” எனக் கேட்டார். அக்குழந்தைக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் என ஷாலினி கூறினார். பாலியல் தொடுகை அதற்கு பிடித்து போயிருகலாம் என்பதையும் அவர் கூறினார். இதே காண்டக்ஸ்டில் ஏழுவயது குழந்தை கார் ஓட்டுவது போன்று பெரியவர்கள் செயல்களை செய்வது ஊக்குவிப்பதா என ஒருவர் கேட்க, கார் ஓட்டுவது என்பது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது. ஆகவே ஊக்குவிக்கலாகாது என பதில் வந்தது. இந்த விஷயத்தில் ஒரு டாக்டர் தம்பதியின் மகன் ஆப்பரேஷன் செய்த விஷயத்தை நான் கூற அதுவும் கூடாது எனக் கூறப்பட்டது.

அதே சமயம் வீணை காயத்ரி, மகதி போன்ற மழலை மேஹைகளுக்கு பிற்காலத்தில் சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இம்மாதிரி திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் நல்ல தொடுகை, கெட்ட தொடுகை ஆகியவற்றை எப்படி விளக்குவது என கேள்வி எழ, அது மிகவும் கடினம் என்பதை ருத்ரன் ஒத்து கொண்டார். அம்மாதிரி குழந்தைகளுக்கு செக்ஸில் அதிக நாட்டம் இருக்கிறது என கூறப்படுவதை நான் சொன்னேன்.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும் சரி, அதிக மூளை வளர்ச்சி உள்ள குழந்தைகளும் சரி சமவயது குழந்தைகளால் தனிமைப்படுத்தப்படுகின்றன என்பதையும் ஷாலினி சுட்டிக் காட்டினார். பின்னவர்களை அதைரியப்படுத்தக்கூடாது என்றும் அவர் சொன்னார். ஒரு குடும்பத்தில் பெண்குழந்தைகளை ஒதுக்கினால் அது தன்னிடம் கருணையாக பேசும் எந்த ஆணையும் நம்பி விடுகிறது. ஆகவே அந்த ஆண், குழந்தையை அசந்தர்ப்பமாகத் தொட்டாலும் அது வெளியில் சொவதில்லை, பல சமயங்களில் அதற்கு அது பிடித்தும் விடுகிறது என்றார் ஷாலினி. ஆகவே குடும்பத்தில் எல்லா குழந்தைகள் ஒரே மாதிரியாக ட்ரீட் செய்ய வேண்டியது அவசியம்.

சமூகத்தில் ஆண்கள் பங்களிப்புதான் அதிகம் இருக்கிர்றது என்பதை ஷாலினி முதலில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய ஒருவர் இது ஆணாதிக்கத்தை ஆதரிக்கவில்லையா என கேட்க, 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரை நிலைமை அப்படித்தான் எனக் கூற, ஒரு பெண்மணி அதை மறுத்து பல பெண் சாதனையாளர்களின் பெயர்களை சரித்திரத்திலிருந்து எடுத்து கூறினார். இப்போது ஷாலினி மனித சரித்திரத்தில் எவ்வாறு முதலில் பெண்ணாதிக்கமே இருந்தது என்றும், ஆண்கள் எவ்வாறு அதை எதிர்த்து மேலாதிக்கம் பெற்றார்கள் என்பதையும் விளக்கினார். இந்த இடத்தில் நான் இதை கூறுவதை விட ஷாலினியே பின்னூட்டத்தில் விளக்குவது நன்றாக இருக்கும். தனது ஆதிக்கத்தை எப்படி ஆண் நிலைநிறுத்தினான் என ஷாலினி கேள்வி கேட்க, நான் “Keep her barefoot and pregnant” என்றளித்த பதிலை அவர் ஏற்றுக் கொண்டு மேலே விளக்கினார். இதை பெண்களிடம் மட்டுமின்றி சக ஆண்களுக்கும் கூறி அவர்களையும் இந்த மனநிலைக்கு கொண்டுவந்ததையும் ஷாலினி கூறினார்.

நேரம் கடந்து விட்டபடியால் பத்ரி நன்றி கூறினார், ருத்ரனும் தனது நன்றியைக் கூறினார். ரம்யா கொண்டு வந்த பொன்னாடைகள் போர்த்தப்பட்டன. விவாதங்களுக்கிடையே செவிக்குணவுடன் வயிற்றுக்கும் ஈயப்பட்டது. ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி.

ஷாலினியிடம் கூட்டம் முடிந்ததும் நான் பேசினேன். ஆண்பெண் கற்பு நிலைகள் பற்றி நான் இட்ட பதிவுகளை அவர் பார்த்து தனது கருத்துக்களை கூற வேண்டும் எனக்கேட்டுக் கொண்டேன், அவரும் சம்மதித்தார்.

முதலில் என்னுடன் ஈரோட்டிலிருந்து தொலைபேசிய வால்பையன் இக்கூட்டம் பற்றி மிக விரிவான பதிவு போடும்படி கேட்டு கொண்டார். அவ்வாறே செய்துவிட்டேன் வால்பையன். ஓக்கேவா?

பதிவை நேற்று இரவு 9.45-க்கு ஆரம்பித்தேன். தூக்கமும் கண்களை தழுவியதால் அப்போது தூங்கி இன்று அதிகாலை 3 மணியளவில் ஆரம்பித்து 4.20 அளவில் முடித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
இது பற்றி நர்சிமின் பதிவு:

பத்ரி ஆடியோவை வலையேற்றியுள்ளார்.

60 comments:

அக்னி பார்வை said...

காலை வணக்கம்..ராத்திரியே எதிர்பார்த்தேன்

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் ராகவன் ஸார்,

என்ன ஒரு ஈடுபாடு. உங்களிடமிருந்து இதைத் தான் எதிர்பார்த்தேன். உங்களுக்கு மிக்க நன்றிகள். இயன்றால் இங்கே வந்து உங்களின் கருத்தை கூறவும்.


http://wiki.pkp.in/forum/t-154821/49-o 49-O என்னும் உதவாக்கரை சட்டம் !!!


with care and love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

பழமைபேசி said...

ஐயா,

நெடுநேரம் எடுத்து, மிக விபரமாகவும் தொய்வில்லாமலும் அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

மேலும் உங்கள் கடமையுணர்ச்சி எங்களுக்கு ஒரு படிப்பினை!!

அறிவிலி said...

வழக்கம் போல் டோண்டு எக்ஸ்ப்ரஸ், சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது.

மிக்க நன்றி.

பயனுள்ள கூட்டம் சிறப்பாக நடந்தேறியதற்கு வாழ்த்துகள் - அனைவருக்கும்

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது அக்னி பார்வை. கண்கள் தூங்கட்டுமா என கெஞ்ச ஒரேயடியாக மறுக்கவியலது அல்லவா? மேலும் முடிந்தவரை எல்லா விஷயங்களையும் கவர் செய்ய வேண்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆகாய நதி said...

அருமையாக விளக்கிவிட்டீர்கள்!
எங்களைப் போன்று அங்கு வர இயலாமல் வெளியூரில் இருக்கும் பெற்றோர்கள் சார்பாக நன்றி!

:)

Kasi Arumugam said...

வேகமாக இடுவது பெரிதில்லை, விவரமாக எழுதினீர்களே, அது பெரிது. நன்றி.

புருனோ Bruno said...

//. இப்போது ஷாலினி மனித சரித்திரத்தில் எவ்வாறு முதலில் பெண்ணாதிக்கமே இருந்தது என்றும், ஆண்கள் எவ்வாறு அதை எதிர்த்து மேலாதிக்கம் பெற்றார்கள் என்பதையும் விளக்கினார்.//

Polyandry --> Polygamy --> Monogamy என்று ஒரு evolution theory இருக்கிறது

அதைத்தான் அவர் கூறினார்

முரளிகண்ணன் said...

நல்ல கவரேஜ். அசத்திட்டீங்க டோண்டு சார்.

கோவி.கண்ணன் said...

நல்ல கவரேஜ்,

எனக்கும் உங்கள் அனைவரையும் பார்த்தது எதிர்பாராத சந்திப்பாக அமைந்தது

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல கவரேஜ் டோண்டு.

ஒரு தேவையான நிகழ்வை தவறவிட்டுவிட்டேன் போல இருக்கிறது. எம்பி3 ரெக்கார்டிங் இருக்கும்தானே?

குடுகுடுப்பை said...

மிக அருமையான விளக்கப்பதிவு. ஒரு பெண் குழந்தையின் தந்தையான எனக்கு ஓரளவிற்கு புரிதல் தந்தது.

பிராட்வே பையன் said...

Good coverage.. thanks.

Please read mine also.

Hassan raja.
http://broadwaypaiyan.blogspot.com

Suresh said...

மிக நேர்த்தியான விளக்கமான பதிவு, நேரில் சென்று இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தது போல் இருந்தது...

இந்த நல்ல விஷியத்திற்க்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி :-)

Unknown said...

Nice detailed post. ;-)

Thanks.

Anonymous said...

ராகவன் சார்,

உங்கள் கவரேஜ் சூப்பர்.

அது என்ன சைல்ட் அப்யூஸ் செய்பவர்கள் எல்லாம் ஆண்களாக தான் இருப்பர்களா? மாமா சித்தப்பா எதிர் வீட்டு அங்கிள் என?

பெண்கள் இதில் ஈடுபட மாட்டார்களா? அதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே?

நான் பத்துவயது சிறுவனாக இருக்கும் பொழுது என்னை ஒரு 25 வயது பெண் செய்ததை வெளியே சொல்ல முடியாது.

ஒரே வார்த்தையில் சொல்லுவதென்றால் சின்னவயதில் ”நசுக்கப்பட்டேன்” அதன் வடு இன்னும் மனசில் மட்டும் இல்லை...

dondu(#11168674346665545885) said...

@அனானி
பெண்களும் செய்கிறார்கள் என கூறப்பட்டதையும் எழுதியிருந்தேனே. என்ன, அவர்களது எண்ணிக்கை குறைவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jackiesekar said...

நான் பத்துவயது சிறுவனாக இருக்கும் பொழுது என்னை ஒரு 25 வயது பெண் செய்ததை வெளியே சொல்ல முடியாது.

ஒரே வார்த்தையில் சொல்லுவதென்றால் சின்னவயதில் ”நசுக்கப்பட்டேன்” அதன் வடு இன்னும் மனசில் மட்டும் இல்லை..

அழறதா சிரிக்கிறதாதான்னு தெரியலை தலைவா

Jackiesekar said...

தலைவரே கவரேஜ்ல பின்னிட்டிங்க

anujanya said...

நேரில் வரமுடியாத என் போன்றவர்களுக்கு உங்க பதிவு மிகவும் பயனானது. உங்க commitment & dedication in writing and posting this - அதுக்கும் ஒரு சல்யூட்.

அனுஜன்யா

butterfly Surya said...

கண்டிப்பாக வரவேண்டும் என்று நீண்ட நாள் எதிர்பார்த்து கடைசியில் மிஸ் பண்ணி விட்டேன். வெளியூர் சென்று விட்டு இன்று தான் திரும்பினேன்.

Exclusive Coverage. Xlent informations. Thanx Sir...


பகிர்விற்கு நன்றி.

லக்கிலுக் said...

கூட்டத்துக்கு ஐம்பது பேர் வந்தார்கள் என்பது முக்கியமல்ல. ஐம்பது பேர் மூலமாக எவ்வளவு பேரிடம் கருத்துக்கள் பரவலாக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

தங்கள் மூலமாக எப்போதுமே விரைவாக விரிவாக பரவலாகுகிறது. நன்றி. விரைவில் ஒலிப்பதிவை பத்ரி வலையில் ஏற்றுவார் என்று நம்புகிறேன். அதற்கும் இப்பதிவில் லிங்க் கொடுத்து விடுங்கள்.

Anonymous said...

கெட்ட வார்த்தைய அடிக்கடி உபயோகிக்கும் வயோதிகர்களைப் பற்றி கேள்வி கேட்பீர்கள் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் கேட்கவே இல்லை.

iniyavan said...

உங்களின் இந்த பதிவு, நானே நேரில் கலந்துகொண்டதைப்போல உணர்வை அளித்தது.

www.narsim.in said...

நன்றி சார்.

Indian said...

அருமையான இடுகை. தங்களின் அர்பணிப்புக்குப் பாராட்டுகள்.

yrskbalu said...

like this only i expecting from you.

keep it up.

this giving live experience.

thanks

Rafiq Raja said...

டோன்டு சார், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி இருந்தேன், வழக்கம் போல சோம்பல் காரணமாக மிஸ் பண்ணி விட்டேன். உங்கள் பதிவு மூலம் நிதர்சனமாக கலந்து கொண்டது போல இருக்கிறது.

நிகழ்ச்சியில் ஒலி நிரல் கிடைத்தால் கட்டாயம் இப்பதிவுடன் சேருங்கள்.

ÇómícólógÝபி.கு.: // ஒரே வார்த்தையில் சொல்லுவதென்றால் சின்னவயதில் ”நசுக்கப்பட்டேன்” அதன் வடு இன்னும் மனசில் மட்டும் இல்லை... //

இந்த அனானியை கூட்டத்தில் பங்கெடுக்க வைத்திருக்கலாம். ஜாக்கி கூறியபடி என்ன சொல்றதினே தெரியலே :)

Venkatesh said...

//வேகமாக இடுவது பெரிதில்லை, விவரமாக எழுதினீர்களே, அது பெரிது. நன்றி.//

உண்மை

சுந்தர் said...

மிக உபயோகமான நிகழ்ச்சி , அதை நீங்கள் விளக்கிய விதம் மிக அருமை, நன்றி

ஜோ/Joe said...

நன்றி டோண்டு சார்!

தீப்பெட்டி said...

நானும் கலந்துகொண்டதைப்போல இருந்தது. சிறந்த பதிவு. நன்றிகள் பல..

"உழவன்" "Uzhavan" said...

கிழக்குப் பதிப்பக மொட்டைமாடியில் (மொட்டை என்றால் எதுவும் இல்லை என்றுதானே பொருள். எதுமே இல்லாத இடமா இந்த கிழக்குப் பதிப்பக மொட்டைமாடி? இந்த மொட்டைமாடியில்தான் எத்தனை சந்திப்புகள்; கலந்துரையாடல்கள்... மொட்டைமாடி என்ற பெயரை மாற்றிவிடலாம்:-) நடைபெற்ற கலந்துரையாடலை மிகத் தெளிவாக, இரவோடு இரவாக பலருக்குப் பயன்படவேண்டும் என்கிற எண்ணத்தில் நீங்கள் சூடாக பதிவு போட எவ்வளவு மெனக்கிட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி
உங்களின் இந்தப் பதிவைப் படித்தபின்புதான், ஓ இவர் வந்திருந்தாரா! அவர் வந்திருந்தாரா!! யாரென்று தெரியாதலால் நம்மால் சந்திக்க முடியாமல் போனதே.. என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. கலந்துரையாடல் நிறைவுற்ற பின்னர், பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பெயர்களை மட்டுமாவது சொல்லி அறிமுகம் செய்திருந்தால், பெயர்களை மட்டுமே அறிந்த பலரால், அவரைப் பார்த்து பேசி மகிழ்ந்திருக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கும்.

Anyway.. பதிவிட்ட உங்களுக்கும், இதனைச் சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

அன்புடன்
உழவன்

Unknown said...

Nice coverage Dondu Sir.

Rajesh Keyaar said...

உங்களின் இந்த பதிவு, நேரில் கலந்துகொண்டதைப்போல உணர்வை அளித்தது.

வால்பையன் said...

//முதலில் என்னுடன் ஈரோட்டிலிருந்து தொலைபேசிய வால்பையன் இக்கூட்டம் பற்றி மிக விரிவான பதிவு போடும்படி கேட்டு கொண்டார். அவ்வாறே செய்துவிட்டேன் வால்பையன். ஓக்கேவா?//

டபுள் ஒகே!

Rajesh Keyaar said...

உங்களின் இந்த பதிவு, நேரில் கலந்துகொண்டதைப்போல உணர்வை அளித்தது.

Cable சங்கர் said...

அருமையான டெடிகேடட் பதிவு சார்..

அரவிந்தன் said...

கமிட்மென்ட்டே!!! உன் மறுப்பெயர் டோண்டு இராகவனா...

நல்லபதிவு....உளங்கனிந்த பாராட்டுக்கள்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

அகநாழிகை said...

டோண்டு சார்,
அருமையாக தொகுத்துள்ளீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அமர பாரதி said...

நல்ல கவரேஜ் டோன்டு சார். பொதுவாக குட் டச் மற்றும் பேட் டச் போன்றவற்றை குழந்தைகள் மூன்றாம் வகுப்பு செல்வதற்குள் சொல்லிக்கொடுக்க வேண்டும். அமெரிக்காவில் அதைத்தான் செய்கிறார்கள். அந்த வயதில் சொல்லிக் கொடுத்தால்தான் சைல்ட் அப்யூஸைத் தடுக்க முடியும். இது செக்ஸ் கல்வி அல்ல. குழந்தைகளுக்கு "மல மல" பாட்டுக்கு டேன்ஸ் ஆடுவதைச் சொல்லிக்கொடுக்கும் நம் கலாச்சாரம் அதை ஒத்துக்கொள்வதற்கு பல காலம் எடுக்கும். இது போன்ற நிகழ்ச்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அதுவே நிகழ்ச்சியின் வெற்றி.

பாலகுமார் said...

மிக பயுனள்ள பதிவு.. மிக்க நன்றி டோண்டு சார்.

தேவன் மாயம் said...

அருமையான தொகுப்பு!

தேவன் மாயம் said...

ஒரு பதிவுக்கு தாங்கள் உழைக்கும் உழைப்பு அபாரம்!!

Unknown said...

அருமையான பதிவு....!!!

குப்பன்.யாஹூ said...

நேரில் நான் கலந்து கொள்ள வில்லை என்ற குறையை உணர வில்லை உங்கள் padhiவை படித்த பின்பு.

கோடானு கோடி நன்றிகள். உங்களின் உழைப்பிற்கும், நேரம் ஒதுக்கியதலுக்கும் நன்றிகள் பல.

குப்பன்_யாஹூ

RAMYA said...

நீங்கள் குறிப்பெடுக்கும்போதே நினைத்தேன், இரவே பப்ளிஷ் பண்ணிடுவீங்கன்னு.
ரொம்ப விளக்கமாக எழுதி இருக்கின்றீர்கள்.

இந்த சந்திப்பில் கழுந்துகொள்ள முடியாதவர்கள் விவரங்களை உங்கள் பதிவின் மூலமும், மற்றும் நம் நண்பர்கள் பதிவின் மூலமும் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

நன்றி நன்றி நன்றி !!

ஊர்சுற்றி said...

எப்போதும்போல் உங்களுக்கே உரித்தான விவரிப்பு. நன்றி டோண்டு சார்.

Dr N Shalini said...

மிக சிறப்பான தொகுப்பு. நன்றி!

பீர் | Peer said...

நிகழ்ச்சியை தவரவிடுகிறோமே என்றிருந்த கவலையை மறைத்தது இந்த பகிர்வு. நன்றி சார்.

யு.எஸ்.தமிழன் said...

கூட்டத்தில் அமர்ந்து கேட்டபடியே இருந்தது உங்கள் விவரனை. நல்ல தகவல்களை தொகுத்துத்தந்தமைக்கு நன்றி!

கோவி.கண்ணன் said...

டோண்டு சார்,

திருமணத்திற்கு முன் வயது வந்தவர்களில் பாலியல் உணர்வு, பாதுகாப்பான உடலுறவு - இது பற்றி இருவரும் பேசாதது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லையா ?

GNU அன்வர் said...

டோண்டு சார் தங்களதுஇந்த பதிவு விகடன் வந்து உள்ளது http://youthful.vikatan.com/youth/index.asp

"உழவன்" "Uzhavan" said...

இது பற்றிய என் பதிவு
http://tamiluzhavan.blogspot.com/2009/05/good-touch-bad-touch.html

eniasang said...

வர முடியாமல் போனவர்களுக்கு இது உதவும். நன்றிகள் பல.

குடந்தை அன்புமணி said...

வரமுடியாத குறைய உங்கள் பதிவு தீர்த்துவிட்டது. விரிவான பதவிற்கு மிக்க நன்றி டோண்டு சார்!

dondu(#11168674346665545885) said...

//திருமணத்திற்கு முன் வயது வந்தவர்களில் பாலியல் உணர்வு, பாதுகாப்பான உடலுறவு - இது பற்றி இருவரும் பேசாதது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லையா//

ஏன் ஏமாற்றம் அளிக்க வேண்டும்? கூட்டம் அது பற்றி இல்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

நல்ல கவரேஜ். அசத்திட்டீங்க டோண்டு சார்.

SK said...

அருமையா தொகுத்து இருக்கீங்க.

பேசினவங்களே சொல்லிடாங்க.. அப்பறம் நான் என்ன வந்து சொல்றது :)

மங்களூர் சிவா said...

அருமையான விரிவான பதிவு.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது