10/17/2008

டோண்டு பதில்கள் 17.10.2008

அனானி (10.10.2008, மாலை 04.54-க்கு கேள்வி கேட்டவர்)
1. பார்ப்பனீயம் என்ற வார்த்தையை நீங்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிகொண்டிருப்பவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள்?
பதில்: பார்ப்பனீயம் என்னும் வார்த்தையை ஒரு பெரிய அவதூறாகத்தான் பார்க்கிறேன். அதுவும் தலித்துகள் மேன் வன்கொடுமை செய்வது வன்னியர், கவுண்டர், தேவர், பிள்ளைமார், முதலியார், நாயுடு, நாயக்கர் என்றிருக்க, எனக்கு தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பார்ப்பனர் கூட அதைச் செய்ததாக இல்லாமல் இருக்கும்போது அவ்வாறு செய்பவர்கள் பார்ப்பனீயத்தை தூக்கி பிடிப்பதாகக் கூறி ஜல்லியடிப்பது பச்சை அயோக்கியத்தனம். அதையெல்லாம் செய்யும் பல சாதியினர் இட ஒதுக்கீடு வேறு பெற்று இருப்பது கொடுமையிலும் கொடுமை.
பகுத்தறிவுவாதிகள் என பொய்யாக உதார்விடுபவர்கள் பார்ப்பனீயம் என்று கூறுவது உயர்சாதீயத்தைத்தான். எங்கே தத்தம் சாதிக்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என எண்ணி பார்ப்பனீயம் என்று செயற்கையாகவே கட்சி கட்டுவது இன்னொரு கொடுமை.

அனானி (10.10.2008, மாலை 04.57-க்கு கேள்வி கேட்டவர்)
1. வால்பையன் லக்கிலுக்கு என்ன பிரச்சினை? இருவரும் நண்பர்களாக தானே இருந்தார்கள்? ஒரு வலைபதிவர் சந்திப்பில் கூட வால்பையன் உங்கள் மூலமாக லக்கிலுக்கிடம் பேசியதாக சொன்னார்களே?
பதில்: வால்பையனுக்கு ஃபோன் செய்து கேட்டேன். அப்படி ஒன்றும் இல்லை என கூறிவிட்டார். வால்பையன் பிரச்சினைக்கு காரணமே அவர் டோண்டுவை தன் நண்பர் என கூறிகொள்வதுதான் என்று பொருள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு ஒன்றும் இது பற்றி பேச விசேஷமாக ஒன்றும் இல்லை.

அரவிந்தன்:
1. பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு, விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்?
பதில்: பிராமண ஆண்களும் வேறு சாதி பெண்களை மண்க்கின்றனரே. எனது உறவினர்கள் பலர் அவ்வாறு செய்துள்ளனர். இதிலெல்லாம் பொதுப்படையாகக் கூற ஏதுமில்லை. பிராமணர்களோ மற்றவர்களோ யாராயினும் இக்காலக்கட்டத்தில் கலப்பு மணம் செய்தாலும் அதில் பெரும்பான்மையினர் பணமுள்ள இடமாகத்தான் மணமுடிக்கின்றனர்.

வீ.எம்.
1. சாரே, முன்பெல்லாம் 3 - 4 பக்கங்கள் வரை வந்த உங்க டோண்டு கேள்வி பதில் பதிவு, இப்போது அரை பக்கமாக குறைந்துவிட்டதே, கேள்விகளுக்கு வறட்சியா? அல்லது உங்கள் பதில்கள் சலிப்படையவைக்கிறாதா பதிவர்களை?
பதில்: எனது பதில்கள்தான் சலிப்படைய செய்திருக்க வேண்டும். ஆகவே கேள்வி கேட்க ஆள் இல்லாமல் போயிற்று. ஒரு வெள்ளியன்று கேள்விகளே இல்லாததால் இப்பதிவே வரவில்லை. அதற்கென்ன கூறுவீர்களாம்? “நானே கேள்வி நானே பதில்” என போட்டுக் கொள்ள நான் என்ன லூஸா? கேள்விகள் வந்தால் பதிவு வரும் இல்லாவிட்டால் இல்லை. ரொம்ப சிம்பிள்.

அனானி (14.10.2008 பிற்பகல் 1.13-க்கு கேட்டவர். சில கேள்விகள் மிகவும் ஆட்சேபகரமாக இருந்ததால் நீக்கப்பட்டுள்ளன)
1. காவேரி கரையில் விபச்சாரிகளுடனும், மற்ற மைனர்களுடனும் தான் நடத்திய மைனர் விளையாட்டுக்களுக்கு தன் பெண்டாட்டியையே சமைத்து எடுத்துவரச் சொன்னார் அந்த ஈவேரா. அந்தப் பெண்ணின் மனது எந்த அளவு பாடுபட்டிருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டாரா?
பதில்: பெரியார் இளமை பிராயத்தில் மைனர் விளையாட்டு விளையாடியதை என்றுமே மறைத்ததில்லை. அவர் காலக் கட்டத்தில் அவரது சம அந்தஸ்தில் இருந்த பல பெரிய வீட்டு பிள்ளைகள் எல்லாம் சர்வசாதாரணமாக மைனர் விளையாட்டு விளையாடியுள்ளனர். ஆகவே இதற்காக பெரியாரை மட்டும் குறி வைப்பது என்ன நியாயம்? அதே நேரத்தில் தனது மனைவி நாகம்மையார் இறந்த சமயம் கையறு நிலையில் வெளியிட்ட இரங்கல் செய்தி கல்லையும் உருக்கும். அதுவரை அவரை வெறுமனே ஈ.வே.ரா. என்று குறிப்பிட்டு வந்த இந்த டோண்டு ராகவன் அதைப் படித்ததும்தான் அவரை பெரியார் என்று கூற ஆரம்பித்தான் என்பது இங்கு கூடுதல் செய்தி.

4. காசுக்காக ஒருவரை பாராட்டுவது, காசு கிடைக்காவிட்டால் அவரைப் பற்றி தவறாகப் பேசுவது என்று வாழ்க்கை நடத்தினார் ஈவேரா. இவருடைய ப்ளாக்மெயில் வித்தையைத்தான் சினிமா ரேட்டிங்குகளில் சன் டிவியும், கலைஞன் டிவியும், அழகிரியும் பயன்படுத்துகின்றன. இதுதான் ஈவேரா கொண்டுவந்த திராவிட கலாச்சாரமா?
பதில்: ஒரு சமயம் ஒருவரிடமிருந்து பணம் வராததால் அவரை திட்டி எழுதுமாறு அண்ணா அவர்கள் பணிக்கப்பட்டார். பிறகு அவர் பணம் தந்துவிட அவரே அண்ணாவை அதே காரணத்துக்காக எழுத விடாது தடுத்ததையும் பலர் வெளிப்படையாகவே எழுதி விட்டனர்.

6. கிருத்துவ மதம் மாற்றிகள் கொடுத்த தகவல்களை வைத்து தனக்கு பேச்சுக்களை தயாரித்துத்தர ஒரு குழுவை வைத்திருந்தார் ஈவேரா. ஆனால், தான் பேசியது எல்லாம் தனது சொந்த கருத்து என்று புருடா விட்டார். இதுதான் சுயமரியாதை உள்ள ஒரு ஆள் செய்யக்கூடியதா?
பதில்: யாராவது ஒருவர் எழுதித் தருவதைத்தானே பல தலைவர்கள் பேசுகின்றனர்? இதற்கு பணம் செலவழிப்பார்கள் மற்றவர். ஆனால் பெரியாரோ இலவசமாகவே மதம் மாற்றிகளிடமிருந்து பல விஷயங்களை புத்திசாலித்தனமாக எடுத்து கொண்டார் என்று வைத்து கொள்வதில் என்ன நட்டம்? இதில் சுயமரியாதை எங்கிருந்து வந்தது? சாமர்த்தியம்தான் தெரிகிறது.

7. காம சுதந்திரம் வேண்டும் என்று பேசிய ஈவேரா, காதல் சுதந்திரத்தைப் பற்றிப் பேசிய புராணங்களை இகழ்ந்தது ஏன்?
பதில்: பல முறை பெரியார் அவர்கள் சிந்திக்காமல் சந்தர்ப்பத்துக்கேற்ப பேசியவர். வேறு என்ன சொல்ல இருக்கிறது?

8. சமூக சேவை செய்கிறேன், சமூக சேவை செய்கிறேன் என்று பெருமை அடித்துக்கொண்ட ஈவேரா ஏதேனும் ஒரு அனாதை விடுதிக்கோ, முதியோர் இல்லத்திற்கோ ஒரு பைசா நன்கொடை கொடுத்திருப்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?
பதில்: என்னால் அவ்வாறு கூற இயலாது. பெரியார் அறக்கட்டளையில் இப்போது செய்யப்படுகிறதா என்பது பற்றியும் அறியேன். அதே சமயம் செய்தால் ஆச்சரியமும் படமாட்டேன்.

9. தனது பேச்சு முடிவில் எல்லாம், "நீயாக சுயமாக யோசித்து முடிவு செய்" என்று பேசி தன்னை ஒரு ஜனநாயகவாதியாகக் காட்டிய ஈவேரா தனது சமூக வாழ்விலும், தனது சொந்த வாழ்விலும் தான் விரும்பியதுதான் நடக்கவேண்டும் என்று ஒரு அடக்குமுறையாளனாக வாழ்ந்தது ஏன்? பேச்சும் செயலும் எதிரிடையாக இருந்தால் அப்படிப்பட்ட நபருக்கு தமிழில் என்ன பெயர்?
பதில்: அதாவது பெரியாரை ஆஷாடபூதி என்கிறீர்கள். அவ்வாறு இருந்ததன் பலன் 1949-ல் கட்சி உடைந்ததே.

10. ஆரிய இன வெறி பேசிய ஹிட்லருக்கு, திராவிட இனவெறி பேசிய ஈவேராவுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: ஹிட்லர் சொன்ன ஆரியவாதத்தை கேட்டு நடக்க பலர் தயாராக இருந்தனர். அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். நல்ல வேளையாக பெரியார் சொன்ன திராவிட வாதத்தை கேட்க தமிழகம் விடுத்த திராவிட பிரதேசங்களில் யாரும் இல்லை. மற்றப்படி ஹிட்லரையும் பெரியாரையும் ஒப்பிடுவது ரொம்ப ஓவர்.

11. கிருத்துவர்களிடமும், முஸ்லீம்களிடமும் காசு வாங்கிக்கொண்டு இந்து மதம் அழிய வேண்டும் என்று பேசி, எழுதி அவர்களின் கைக்கூலியாக ஈவேரா செயல்பட்டார் என்று பலர் சொல்லுகிறார்கள். அது உண்மையா? எங்காவது கிருத்துவ, இஸ்லாமிய மதங்கள் என்று தெளிவாக அவற்றின் பெயரைச் சொல்லி, அவை அழிய வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறாரா?
பதில்: பெரியாருக்கு தனிப்பட்ட முறையில் இந்து மதத்தை பிடிக்காது என்பதுதான் உண்மை. அதே சமயம் ஒரு முறை இசுலாமியர் ஒருவர் பொது கூட்டத்தில் இந்து மதத்தை தாக்கி பேச, அவரை பெரியார் இம்மாதிரி எல்லாம் எங்கள் மதம் பற்றி நாங்களே பேசி கொள்வோம், வெளி நபர் நீங்க்கள் கூறலாகாது என தடுத்ததாகவும் கேள்விப்பட்டேன். அதே போல அம்பேத்கர் அவர்கள் இசுலாமிய மதத்தைத் தழுவலாம் என்ற நிலை தோன்றியபோது, இசுலாமிய மதத்தில் மாற்று கருத்துக்களை கடுமையாகக் கையாளுவார்கள் என்று கூறி அவரை அவ்வாறு செய்வதை தடுத்து அவருக்கு கூறியவர் பெரியார்.

12. தன்னைப் போன்ற உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஜாதி வெறிக்கு ஆதரவாகவும், பணக்காரர்களுக்காகவும் வேலை செய்தார் ஈவேரா என்றும் பலர் சொல்லுகிறார்கள். இல்லை என்று நிறுவ தேவையான தகவல்கள் தர முடியுமா?
பதில்: பெரியாரின் எதிர்ப்பு எல்லாம் பார்ப்பனரையே முக்கியமாக குறிவைத்தது. மற்ற உயர் சாதியினருக்கு ஆதரவாகத்தான் அவர் டீஃபால்ட்டாக செயல்பட்டுள்ளார். கீழ்வெண்மணி படுககொலை விவகாரத்தில் குற்றவாளி பார்ப்பன மிராசுதாராக இருந்திருந்தால் கிழித்து கட்டியிருப்பார் அவர். குற்றவாளி நாயுடுவாகப் போகவே சவசவவென்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

14. சமூக சேவை செய்ய வந்த தான் எளிமையானவன் என்று காட்டிக்கொண்டார் ஈவேரா. காந்தியின் வழியில் மது எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொல்லிவந்தார். பணத்தில் தனக்கு ஆர்வம் கிடையாது என்று மற்றவர்களை நம்பவைக்க தனக்குச் சொந்தம் இல்லாத, ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றொருவருக்கு என்று பேசப்பட்டு வந்த மரங்களை வெட்டிவிட்டு, தனக்குச் சொந்தமான மரங்களை வெட்டிவிட்டதாகப் பொய் சொன்னது ஏன்?
பதில்: இது எனக்கு புது செய்தி. அது உண்மையா என்பதில் சந்தேகம் இருக்கிறது. அவர் வெட்டிய மரங்கள் அவருடையவே என்றுதான் நான் உறுதியாக நம்புகிறேன்.

15. மது விலக்கிற்காகப் போராடியபோதுகூட தனது மதிய சாப்பாட்டில் வெளிநாட்டு மதுவை அருந்திவந்த ஈவேரா எந்த அளவுக்கு உண்மையான காந்தியவாதியாக இருந்தார்?
பதில்: மதுவிலக்கை கொண்டு வந்த காங்கிரஸின் தலைவர் நேருவும் மது அருந்தியவர்தானே. பெரியார் அவ்வாறு செய்திருந்தால் என்ன தவறு காண முடியும்? எல்லோரும் ராஜாஜி ஆக முடியுமா?

16. விபச்சாரிகளோடும், போதை வஸ்துக்களோடும் தனது இளமை காலத்தைக் கழித்த ஈவேரா திடீரென்று சாமியாராகப் போகப்போவதாகச் சொல்லி காசிக்கு ஏன் ஓடினார்? எந்த கொலைபாதகப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க அவர் அப்படி செய்தார்?
பதில்: அவரது தந்தையுடன் அவருக்கு ஏற்பட்ட தலைமுறை இடைவெளிதான் அதற்கு முக்கியக் காரணம். நீங்கள் சொல்வது போல இல்லை.

17. எப்போது பார்த்தாலும் தனது மைனர் லீலைகளுக்காக தனது முன்னோர்கள் சொத்தை பயன்படுத்த வெட்கப் படாத ஈவேரா, காசி மடத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒழுக்கம் அற்றவர்கள் என்பதால்தான் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டார். ஈவேராவை காசியில் இருந்த துறவிகள் வெறுத்து ஒதுக்க உண்மையான காரணங்கள் என்ன?
பதில்: மறுபடியும் கூறுவேன், மைனர் விளையாட்டு என்பது அக்காலக் கட்டங்களில் சமூக ரீதியாக கண்டிக்கப்பட்டதல்ல. பொது நீர்ரோட்டத்தில்தான் பெரியாரும் இருந்திருக்கிறார். மற்றப்படி காசியில் என்ன நடந்தது என்பதை நான் அறியேன்.

18. ஈவேரா பிறக்காத, வேலை செய்யாத மாநிலங்களில் இருக்கும் தலித்துக்களின் நிலைமை, அவர் பிறந்த வேலை செய்த தமிழ்நாட்டைவிட மேம்பட்டதாக இருக்கக் காரணம் என்ன?
பதில்: தலித்துகள் நிலைமை இந்தியா முழுக்கவும் மோசமாகவேதான் உள்ளது. நீங்கள் கூறுவது போல தமிழகத்தில்தான் அதிக மோசமாக உள்ளது என்பதை நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்.

19. ஜாதி ஒழிய வேண்டும் என்று பசப்பிய ஈவேரா, தன்னை ஒருவர் சந்திக்க வந்தால் அவருடைய ஜாதி என்ன என்று ஒவ்வொருமுறையும் கேட்டது ஏன்?
பதில்: அக்காலத்து சூழ்நிலை அப்படி. ரொம்ப சாதாரணமாக புதிதாக ஒருவரை சந்தித்ததுமே “என்ன வர்ணம்” என்று வெளிப்படையாகவே கேட்டு தெரிந்து கொள்வார்கள். மற்றப்படி பெரியார் அவர்கள் யாரையும், மிகவும் தன்னைவிட இளையவர்களையும் வாங்க போங்க என்றுதான் மரியாதையாகப் பேசுவார் என்பதை ஹிந்து நிருபராக இருந்த எனது தந்தை கூறியுள்ளார்.

20. ஜாதி கிடையாது, ஆனால் ஜாதிப் புத்தி என்பது உண்டு என்று அவர் சொல்லி வந்தார். ஜாதி இல்லாவிட்டால், ஜாதிப் புத்தி மட்டும் எங்கிருந்து வரும்? இந்த வாதத்தின் அறிவுபூர்வமான தன்மையை தர்க்க நியதிகளின்படி விளக்கவும்.
பதில்: மணியம்மையார் விவகாரத்தில் அவரை திருமணம் செய்வதை தவிர்த்து பெரியார் அவரை வெறுமனே வைத்து கொண்டால் தம்பிகளுக்கு ஆட்சேபணை இருக்காது என அண்ணா கூற அப்போதுதான் பெரியார் அவர்கள் “அண்ணாத்துரை தன் ஜாதி புத்தியை காட்டிவிட்டார்” என்று கூறியது பல இடங்களில் பதிவாகி உள்ளது. அது பற்றி மேலே பெரியாரிடம் இவ்வாறு கூறலாமா என கேட்க அதற்கு அவர் ஜாதிகள் கூடாதுதான் ஆனால் ஜாதிபுத்தியும் போகாது” என்று கூறிவிட்டார்.

21. ஈவேராவைப் பற்றிய நல்ல விஷயங்கள் எல்லாம் அவர் அடுத்தவர்களுக்கு சொல்லி, அந்த அடுத்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிவந்த விஷயங்களாக இருக்கின்றன. ஆனால், ஈவேராவுடன் நேரடியாகப் பழகியவர்கள் எல்லாம் அவரைப் பற்றி மோசமாகவே கருத்துத் தெரிவித்தார்கள். இதில் யாரை நம்புவது?
பதில்: 90 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமான செயல்பாட்டோடு வாழ்ந்த ஒருவர் பல காலக் கட்டங்களில் பல கருத்துகளை ஏற்க வேண்டியிருக்கும். ஒரே விஷயத்தில் எதிரெதிர் கருத்துக்களையும் சூழ்நிலைக்கேற்ப பாவிக்க வேண்டியிருக்கும். அதே சமயம் அவருடன் பழகுபவர்களுக்கு அதெல்லாம் பிடிக்காமல் இருக்கலாம். ஆகவேதான் நீங்கள் சொல்வது போல நடக்கிறது. அதுவும் பெரியார் அவர்கள் இறந்து 35 ஆண்டுகள் நிறைவு பெறும் தருவாயில் அவரோடு நேரடியாக பழகியவர்கள் எண்ணிக்கை இன்றைய தேதியில் குறைச்சலாகத்தானே இருக்கும்?

22. ஈவேரா ஒரு அமைப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்திவந்தார். அவருடைய மிரட்டலுக்குப் பயந்து பணம் கொடுத்த பணக்காரர்கள் தவிர, அவர் உண்மையில் நல்லவர் என்று நம்பிய பல ஏழை தமிழர்களும் அந்த இயக்கத்திற்காக நன்கொடை அளித்தனர். ஆனால், அந்த அமைப்பிற்குக் கிடைத்த பணத்தை, அவருக்கு மிக நெருங்கிய இரண்டாம்நிலை தலைவர்கள் சிலர் வட்டிக்கு விட்டும், சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தியும் கொண்டனர். ஆனால், அதை ஈவேரா தட்டிக் கேட்கவில்லை. பண விவகாரத்தில் கறாரானவரான ஈவேரா இவர்கள் அடித்த கும்மாளங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? அவரை நம்பி பணம் கொடுத்த ஏழைகள் வாழ்வு எவ்விதமாவது உயர்ந்ததா? (அனானியால் திருத்தப்பட்டு கேட்ட கேள்வி)
பதில்: கேள்வியை திருத்தி கேட்டதற்கு நன்றி. எந்த ஸ்தாபனமும் நிறுவனர் மறைந்ததும் தனது மூல கொள்கைகளை மறந்துவிடும் என்பது கசப்பான உண்மை. அதுவும் கடைசி காலக்கட்டங்களில் பெரியார் அவர்கள் கடுமையான உடல் உபாதையால் அவதிப்பட்டார். அதையும் மீறி ஒரு மன உறுதியுடன் செயல்பட்டது வியக்கத்தக்கது. கும்மாளம் போட்டவர்களை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவரது நிலை இந்த விஷயத்தில் ஒரு கையறுநிலையாகவே மனதுக்கு படுகிறது.

22. வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவுடன் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கு ரகசியமாக கடிதம் எழுதி சிறை என்ற பெயரில் வசதிகளைப் பெற்றுக்கொண்டது ஏன்?
பதில்: அவ்வாறு நடந்ததாக நான் எங்குமே படிக்கவில்லை. ஆகவே இதை நான் நம்பவில்லை என்று கூறுவதற்கு மேல் வேறு பதிலளிக்க விரும்பவில்லை.

23. வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தி, வெற்றிகரமான முடிவிற்குக் கொண்டுவந்தவர்களாக அறியப்பட்டவர்கள் அங்கிருந்த வேறு தலைவர்கள். ஆனால், காங்கிரஸும் இந்த பிரச்சினையில் கலந்துகொண்டது என்று காட்ட காந்தி போகச் சொன்னதால் அங்கே சென்று, "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்" என்று சொல்லப்படுகிற ஈவேரா தனக்குத் தானே "வைக்கம் வீரர்" என்று பட்டம் கொடுத்துக்கொண்டது எந்தவகை நேர்மை?
பதில்: வைக்கத்தில் பெரியார் நிஜமாகவே பாடுபட்டு போராடியது சரித்திரத்தில் பதிவு செயப்பட்டுள்ளது. பெரியார் மேல் பல விமரிசனங்கள் எனக்கு இருந்தாலும் உங்கள் கேள்வியில் இருக்கும் குற்றச்சாட்டை நான் நம்பவில்லை.

24. அந்தக் காலத்து காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் தங்களுடைய சுகவாழ்வை விட்டுக்கொடுத்தும், சொத்துக்களை செலவழித்து தீண்டாமையை ஒழிக்கவும், ஏழைகள் முன்னேற காதி இயக்கத்திற்காக செலவழிக்கவும் செய்தனர். ஆனால், இவர்களைவிட தான் செய்ததுதான் சரியான சமூக சேவை என்று சொல்லிவந்த ஈவேராவின் சொத்துக்கள் அவர் "சமூக சேவை" செய்யவந்தபின் பலமடங்கு அதிகரித்தது. தனது சொத்தை பெருக்கிக்கொள்ள சமூகத்தை பயன்படுத்திக்கொள்ளுவதுதான் சமூக சேவையா?
பதில்: திராவிட கழகத்தில் மற்றவர்களை பற்றி தெரியாது. ஆனால் பெரியார் அவர்கள் சொந்தமாக சொத்து சேர்த்தார் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அவர் பார்த்து பார்த்து சேர்த்தது இயக்கத்துக்கு மட்டுமே.


நக்கீரன் பாண்டியன்:
1. மின்வெட்டு காரணம் யார்?
பதி: சரியாக திட்டமிடாமை, மின் திருட்டு, தவறான உபயோகம் ஆகியவையே காரணம்.

2. சரியாகுமா?
பதில்: மனதிருந்தால் சரியாகும். ஆனால் நிறைய அரசியல்ரீதியான தைரியம் தேவை.

3. அரசு பிழைக்குமா?(மக்கள் கோபம்)
பதில்: கஷ்டம்தேன்.

4. இலவச டீவி ஒரு காரணமா?
பதில்: மின்வெட்டுக்கா? கண்டிப்பாக இல்லை.

5. இங்கு மட்டும் ஏன் இந்த நிலை?
பதில்: இந்தியாவில் பரவலாகத்தன் இந்த நிலை என அறிகிறேன். ஒரு வேளை குஜராத்தில் மட்டும் அவ்வாறு இல்லாதிருக்கலாம்.

6. காற்றாலை திட்டம் என்னாச்சு?
பதில்: சுற்றுவட்டாரத்தில் வெகுதூரத்துக்கு கட்டிடங்கள் அமையக்கூடாது. அப்போதுதான் நல்ல காற்று கிடைக்கும். எவ்வளவு நாளைக்கு நடக்கும்?

7. அணுமின்சாரம் கைகொடுக்குமா?
அதுதான் இனிமேல் கைகொடுக்க வேண்டும். ஆனால் உடனடியாகக் கிடைக்காது.

8. மழை இதை சரி செய்யுமா?
பதில்: சிறிது ரிலீஃப் தரலாம். ஆனால் மழை சரியான இடங்களில் பெய்ய வேண்டும்.

9. கழகங்களின் ஆட்சி காரணமா?
பதில்: இந்தியாவில் மற்ற பல மாநிலங்களிலும்தான் மின் தட்டுப்பாடு உள்ளது. அதற்கும் கழக ஆட்சிதான் காரணமா?

10. மத்திய அரசு கைவிட்டுவிட்டதா?
எவ்வளவு மாநிலங்களுக்குத்தான் அவர்களால் உதவி செய்ய இயலும்? அதுவும் பற்றாக்குறை பரவலாக உள்ளதே.

11. அனல் மின்சாரம் என்னாச்சு?
பதில்: சுடுகிறது.

12. சென்னையில் தாக்கம் இல்லையா?
பதில்: அவ்வளவு இல்லை. தயவு செய்து கண் போடாதீர்கள்.

13. தேர்தலில் எதிரொலிக்குமா?
பதில்: கண்டிப்பாக எதிரொலிக்கும். அது எம்மட்டில் என்பதில்தான் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

14. ஹெல்மெட் போல் இன்வெர்ட்ட்டர் விற்பனை தந்திரமா?
இன்வெர்டர் என்பது சற்று விலையுயர்ந்த தெரிவு. எல்லோராலும் இயலாது. மேலும் ஹெல்மட் போல இதை யாரும் சட்டப்படி கட்டாயமாக்கவில்லை.

15. எல்லாக் கட்சிகளும் வேடிக்கை பார்க்கின்றனவா?
பதில்: அவர்களிடம் அரசு இல்லையே. மேலும் எதிர்க்கட்சி என்பது இம்மாதிரி நிலைகளை தனது லாபத்துக்குத்தானே பயன்படுத்தும்?

16. மற்ற மாநிலங்களில் எப்படி?
பதில்: பொதுவாகவே இந்தியாவில் பல மாநிலங்களில் நிலை மோசம்தான் என படித்தேன்.

17. இலவச மின்சாரம் காரணமா?
பதில்: அதுவும்தான் முக்கியக் காரணம்.

18. எப்போ சரியாகும்?
பதில்: எப்போ சரியாக வேண்டும் என்று கேட்டாலாவது கூடிய சீக்கிரம் என்று சொல்லலாம். ஆனால் எப்போ சரியாகும் என்னும் இக்கேள்விக்கு அவ்வாறு பதில் கூற இயலாது.

19. விளம்பர விளக்குகளை தடை செய்யலாமே?
பதில்: செய்ய முடியுமா? மனம் வருமா?

20. அரசியல் மாநாட்டு அலங்கார விளக்குகளை?
பதில்: பலருக்கு மாரடைப்பே ஏற்படும்.


டோண்டு ஐயாவிடம் கேள்வி கேட்போர் சங்கம்
1. பிடித்த நடிகர்?(தமிழ்)
பதில்: ஜெமினி கணேசன், கமலஹாசன்

2. பிடித்த நடிகர்?(இந்தி)
பதில்: சஞ்சீவ் குமார், காதர் கான்

3. பிடித்த நடிகர்?(ஆங்கிலம்)
பதில்: கிரெகெரி பெக், இஸ்ரேலிய நடிகர் டோபோல்

4. பிடித்த நடிகை(தமிழ்)
பதில்: சரோஜாதேவி, தேவயானி

5. பிடித்த நடிகை(இந்தி)
பதில்: ரேகா, மாதுரி தீட்சித்

6. பிடித்த நடிகை?(ஆங்கிலம்)
பதில்: டோரிஸ் டே, எலிசபெத் டெய்லர்

7 .பிடித்த எழுத்தாளர்?(தமிழ்)
பதில்: கல்கி, தேவன்

8. பிடித்த எழுத்தாளர்?(இந்தி)
பதில்: பிரேம்சந்த், பகவதி ஷரன் ஷர்மா

10. பிடித்த எழுத்தாளர்?(ஆங்கிலம்)
ழான் கே ரௌலிங், அகாதா கிறிஸ்டி

11. பிடித்த அரசியல்வாதி?(தமிழ்)
ராஜாஜி, நல்லக்கண்ணு

12. பிடித்த அரசியல்வாதி?(இந்தி)
பதில்: மோடி, சந்திரசேகர்

13. பிடித்த அரசியல்வாதி?(ஆங்கிலம்)
பதில்: மார்க்கரெட் தாட்சர், ரீகன்

14. பிடித்த ஊர்? (தமிழகம்)
பதில்: சென்னை

15. பிடித்த ஊர்?(வட இந்தியா)
பதில்: புது தில்லி


16. பிடித்த ஊர்?(உலகம்)
பதில்: ஜெரூசலம்

17. பிடித்த புத்தகம்?(தமிழ்)
பதில்: துப்பறியும் சாம்பு

18. பிடித்த புத்தகம்?(இந்தி)
பதில்: ஷத்ரஞ்ச் கே கிலாடி

19. பிடித்த புத்தகம்?(ஆங்கிலம்)
பதில்: ஹாரி பட்டர் புத்தகங்கள் ஏழும்

20. பிடித்த மொழி?
பதில்: தமிழ்


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

37 comments:

Anonymous said...

கலைஞர் ஐயா கூட பேசுவது ஏதாக இருந்தாலும்

அவர் நம்புவது

பிராமண அதிகாரிகளை,மருத்துவர்களை,தணிக்கையாளர்களை,பத்திரிக்கையாளர்களை,வக்கீலகளை

போல் தெரிகிறதே? ஏன்?

கோவி.கண்ணன் said...

உங்கள் பதிவை பார்த்ததும் தான் இன்னிக்கு வெள்ளிக் கிழமை என்றே தெரிந்தது !

:)

பெரியார் புராணம் நல்லா இருக்கிறது. பலர் மேலும் பெரியார் பற்றி பேச வாய்ப்புக் கொடுத்து இருக்கிறீர்கள். பெரியார் நாத்திகர் என்று மட்டுமே அறிந்திருந்த நான் வலைப்பதிவின் மூலமாகத்தான் பெரியார் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன்.

சில கேள்வி பதில்கள் கலைஞரின் தனக்கு தானே பாணியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. :)

Anonymous said...

superb answers excellent dondu

Thamizhan said...

தங்களுடைய பல கருத்துக்களுக்கு எதிர் கருத்துள்ளவன் நான்.
ஒரு அநாமதேயப் பொய்யனின் பல பொய்களை நாகரீகமாக மறுத்தும்,தெரியாது என்றும் ஓரளவுக்கு நாணயமாகப் பெரியார் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லியுள்ளதைப் பாராட்டுகின்றேன்.
பெரியார் ஒளிவு மறைவு இன்றிப் பேசினார்,எழுதினார்,வாழ்ந்தார்.
மேடையிலே சிங்கமாகக் கர்ஜித்தாலும்
நேரே தங்கமான மனித நேயப் பண்பாளராக வாழ்ந்தார்.
எதிரிகளை மதித்து அவர்கள் கேட்ட அத்தனைக் கேள்விகட்கும் நாண்யமாகப் பதில் சொன்னார்.அவர் கேட்ட நாணயமானக் கேள்விகட்குத்தான் இது வரை யாரும் பதில் சொல்ல வில்லை.
பார்ப்பனீயத்தை வெறுத்தாரே தவிரப் பல பார்ப்பனர்கட்கு ஜெமினி வாசன் முதல் அவரது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர விரும்பியவர்கள் வரை உதவி செய்துள்ளார்.எந்த ஒரு பார்ப்பன்ராவது அவரால் துன்பப் படுத்தப்பட்டதாகவோ,கொடுமை செய்யப் பட்டதாகவோச் சொல்ல முடியுமா?
கல்கி,ராஜாஜி,சதாசிவம்,வாசன் போன்றவர்கள் அவர்மீது மிகவும் பிரியத்துடன் இருந்தவர்கள்.
பல நண்பர்களுக்கு விருந்தில் ஊற்றிக் கொடுத்திருக்கிறாரே தவிர அவர் குடித்ததில்லை,குடிப்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.
அவருடைய சொந்த சொத்து,சேர்த்த சொத்து அனைத்தையும் யாரும கையாள முடியாதபடி சிறந்த அறக்கட்டளையாக்கி வைத்தவர்.நன்றாக வளர்ந்துள்ள அறக்கட்டளை என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள்.
அநாதைப் பெண் குழந்தைகட்குத் திருச்சியில் நாகம்மை குழந்தைகள் இல்லம் (150 பேர்) பல ஆண்டுகளாக உள்ளது.
பல கல்வி நிறுவனங்கள் முக்கியமாகப் பெண்களுக்கு உள்ளன.அவற்றிற்குச் சென்றுள்ள பலர் வி.பி.சிங்,அப்துல் கலாம்,பல துணை வேந்தர்கள்,வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம் பாராட்டியுள்ளனர்.பல விருதுகளும் பெற்றுள்ளனர்.
பெரியார் அவரைத் திட்டியவர்களைத் தான் தனது விளம்பரதாரர்களாகப் பாராட்டியுள்ளார்.தொடரட்டும் அது.

ரமணா said...

1.3G /2 G சேவை ,செல்பெசியில் விளக்குக?

2.டெண்டரில் என்ன குழப்பம்?

3.யாருக்கோ சலுகை என்கின்றனரே?உண்மையா?

4.இதிலும் அரசியலா?

5.அமைச்சர் ராஜா அவர்கள் சொல்வதை பார்த்தால் எல்லாம் சரி போல் தெரிகிறதா?

6.தயாநிதியின் தலையிடா?

7.பாரளுமன்றம் களை கட்டும் போலுள்ளதே?

8.கனிமொழி அமைச்சராவாரா?

9.அவரது ராஜினாமா பற்றி/

10.கலைஞரின் வாரிசாக வளர்ந்து அண்ணாக்களை முந்துவார் போலுள்ளதே?

dondu(#11168674346665545885) said...

//உங்கள் பதிவை பார்த்ததும் தான் இன்னிக்கு வெள்ளிக் கிழமை என்றே தெரிந்தது! :)//
சமீபத்தில் 1973-ல் நான் பார்த்த If it's Tuesday it must be Belgium என்னும் ஆங்கிலப்படம் ஞாபகத்துக்கு வருகிறது.

//பெரியார் புராணம் நல்லா இருக்கிறது. பலர் மேலும் பெரியார் பற்றி பேச வாய்ப்புக் கொடுத்து இருக்கிறீர்கள்//.
என்னதான் இருந்தாலும் பெரியார் தமிழகத்தின் சொத்து என்று கூறுவது அவரைப் பற்றிய விமரிசனங்களை இன்னமும் வைத்திருக்கும் டோண்டு ராகவன்.

//சில கேள்வி பதில்கள் கலைஞரின் தனக்கு தானே பாணியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.:)//
நேர்மையாக உங்கள் எண்ணத்தை கூறியதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

\“நானே கேள்வி நானே பதில்” என போட்டுக் கொள்ள நான் என்ன லூஸா?//

அப்ப தமிழக முதல்வர் மு.கருணாநிதி லூசா..

வீ. எம் said...

நன்றி டோண்டு சாரே, என் கேள்வி என்ன?? கேள்விகள் குறைந்ததற்கு கேள்வி வறட்சியா.. அல்லது உங்கள் பதில்கள் சலிப்பை தருகிறதா என்று கேட்டேன்.. அதற்கு உங்கள் முதல் வரி சரியாக இருந்தத்து.. ஆனால்..

//ஒரு வெள்ளியன்று கேள்விகளே இல்லாததால் இப்பதிவே வரவில்லை. அதற்கென்ன கூறுவீர்களாம்//

இதை எதற்கு சொன்னீர்கள் என புரியவில்லை..

//“நானே கேள்வி நானே பதில்” என போட்டுக் கொள்ள நான் என்ன லூஸா? //

இது எதற்கு?? நீங்களே கேள்வி பதில் போட்டுக்கொள்கின்றீர்களா என்றா நான் கேட்டேன்??

யாரை லூசு என்று சொல்வதற்கு இந்த பதில் திணிப்பு???

தானே கேள்வி தானே பதில் தருபவர்கள் எப்படி தங்களுக்கு பிடிக்காதவற்றை பற்றி குறை சொல்லியும், பிடித்தவற்றை தூக்கி பிடித்தும் பதில் தருகிறார்களே, அதே போல உள்ளது உங்கள் "வலஒப்பதிவர் கேள்விகளும், டோன் டு பதில்களும்" .. இரண்டும் ஒன்றாக இருப்பதும் இப்பொழுது தெரிகிறது.. நன்றி.

கோவியார் சொன்னது சரியாக உள்ளது..

/அப்ப தமிழக முதல்வர் மு.கருணாநிதி லூசா../

கருணாநிதி மட்டுமல்ல.. சில பதிவர்களையும் பற்றி சொல்லவே, இந்த தேவையற்ற பதில் திணிப்பு..

Krishnan said...

Dear Dondu Sir, I am following your blog regularly and admire your straightforward no-nonsense approach in your posts. I do have differences with you regarding Modi and right-wing politics.But that apart, I admire your sincerity brimming in your posts. I always wanted to ask you questions and at last asking them now :
What is your stand on Sri Lankan issue ? Do you think political parties here in Tamil Nadu are enacting a drama to save LTTE ? Do you support The Hindu's stand ? What is your opinion on the article by Ms. Malini Parthasarathy ? Here is the link for those who have not read:
http://www.hindu.com/2008/10/14/stories/2008101454490800.htm

dondu(#11168674346665545885) said...

வீ.எம். அவர்களே, இந்த கேள்வி பதில் நிகழ்வை ஒருமித்த பார்வைக்கு கொண்டுவரும் முயற்சிதான் எனது பதில் உங்கள் கேள்வியில் இல்லாததற்கும் பதிலை அளித்தது அதனால்தான்.
எனக்கே ஒரு தெளிவை கொண்டு வரும் செயல்பாடு என வைத்து கொள்ளுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Going out on an urgent errand. Will be back after a few hours and moderate afterwards.

Regards,
Dondu N. Raghavan

Anonymous said...

//Kanimozhi said...
\“நானே கேள்வி நானே பதில்” என போட்டுக் கொள்ள நான் என்ன லூஸா?//

அப்ப தமிழக முதல்வர் மு.கருணாநிதி லூசா..//


அப்ப எங்க பதிவுலக சுனாமி லக்கி லுக் ஒரு லூஸா..

pt said...

1.பங்குவணிக சூதாட்டம் பற்றிய தங்கள் கருத்து?

2.7000 க்கு போய்விடும் எனக் கணிக்கீறார்களே?

3.சரிவு என்றதும் நிதி அமைச்சர் ஓடி வருகிறாரே ஏன்?

4.அவர் பையன் நஷ்டமடையாமல் காப்பாற்ற என்ற வதந்தியில் உண்மை உண்டா?

5. இதற்குப் ( பெரும் சரிவு)பிறகும் பொருளாதாரச் சீர்திருத்தம் தேவையா?

6. கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்த பிறகும் பெட்ரோல் விலயை குறைக்க மறுக்கும் அரசின் செயல் பற்றி?

7.பின் அம்பாணிகளை எப்படி நாம் குற்றம் சொல்ல முடியும்?

8.கட்டுப்பாடான பொருளாதாரமே நம்மை போன்ற பெரிய நாட்டுக்கு உகந்தது என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்வீர்களா?


9.விஷம்போல் ஏறும் உணவுப் பொருளின் விலைஉயர்வில் மூழ்கும் நமது ஏழை இந்திய சகோதரர்களை பற்றிய எண்ணம் எல்லோருக்கும் வருமா?

10.தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம்
முழுத் தோல்வியை நோக்கிச் செல்கிறதா?

Anonymous said...

1. மைனர் என்றால் என்ன? உண்மையிலேயே தெரியாது எனக்கு. மைனர் விளையாட்டு என்பதை பற்றி உங்கள் பதிவில் இருந்து ஒரளவு விளங்க முடிந்தது. என்றாலும் மேலும் விளக்கம் தேவை. (நான் இந்தியன் அல்ல)

2. விஜய் தொலைக்காட்சியில் மாலை 6.00 ஒளிபரப்பாகும் சமய நிகழ்ச்சிகள் குறித்து உங்கள் கருத்து? மற்றய தொலைக்காட்சிகளிலும் இப்படி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் காலம் வருமா?

3. மோடி போன்ற ஒருவர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது அடுத்த 25/50 வருடங்களில் சாத்தியமா?

4. பாவாணர் கருத்துக்களை 3 பிரிக்களாம். 1. தமிழ் கருத்துக்கள் 2. வடமொழி கருத்துக்கள் 3. குமரி/முதன்மை தாய்மொழி கருத்துக்கள். இந்த முன்றில் கடைசி இரண்டும் காலத்தால் கழிக்கப்பட்டு விட்டன. அனால் பாவாணர் தமிழ் கருத்துக்கள் மிகவும் சிறந்தவை என்பது என் கருத்து, உங்கள் கருத்து என்ன?

5. தமிழில் சிறந்த கலை திரைப்படங்கள் இனிமேல் வருமா?

Anonymous said...

எனது பெரியப்பா திராவிடர் கழகத்தின் நகர செயலாளராக இருக்கிறார். எங்களது குடும்பம் திராவிட பாரம்பரியத்தில் ஊறிய குடும்பம். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளும், ஊடகங்களும் அவரின்மேல் நல்ல கருத்துக்களையே சொல்லிவருகின்றன. ஆனால், நீங்கள் தந்தை பெரியார் குறித்து அளித்துள்ள பதில்களைப் படித்த பின்பு அவர்மேல் எனக்கு இருக்கும் மரியாதை குறித்து கேள்விகள் ஏற்படுகின்றன.

அவர்மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம் பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் சாதி வெறியை நிலைநிறுத்த உதவுகிறது என்பது இப்போது பலரால் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு.

எதனால் தந்தை பெரியாரை குறித்த விமர்சனங்கள் ஒரு எல்லைக்குள் முடங்கிப்போய்விடுகின்றன என்கிற கேள்வியை எனக்குள்ளேயே நான் கேட்டுக்கொள்கிறேன்.

தந்தை பெரியார் பற்றிய எனது நம்பிக்கை இடிபட்டதில் வேதனைப்படுகிறேன். ஆனால், நீங்கள் சொல்ல வருவதுபோல அவர் அவ்வளவு மோசமனவர் இல்லை என்றே நம்புகிறேன்.

Anonymous said...

//அதுவரை அவரை வெறுமனே ஈ.வே.ரா. என்று குறிப்பிட்டு வந்த இந்த டோண்டு ராகவன் அதைப் படித்ததும்தான் அவரை பெரியார் என்று கூற ஆரம்பித்தான் என்பது இங்கு கூடுதல் செய்தி. //

புரியலீங்க்ணா.

அந்த இரங்கலை எழுதிக்கொடுத்தவரைத்தானே நீங்க உண்மையில பாராட்டணும்?

ஜெய்சங்கரு அந்த சினிமாவுல சூப்பர் வசனம் பேசிருக்காருன்னு சொல்றவுகளுக்கும் ஒங்களுக்கும் என்னங்கன்னா வித்தியாசம்?

dondu(#11168674346665545885) said...

//ஆனால், நீங்கள் தந்தை பெரியார் குறித்து அளித்துள்ள பதில்களைப் படித்த பின்பு அவர்மேல் எனக்கு இருக்கும் மரியாதை குறித்து கேள்விகள் ஏற்படுகின்றன.//
நான் கூறியவை எல்லாமே உண்மையின் அடிப்படையில்தான்.

//ஆனால், நீங்கள் சொல்ல வருவதுபோல அவர் அவ்வளவு மோசமனவர் இல்லை என்றே நம்புகிறேன்.//
அவரைப் பற்றிய அனானியின் கேள்விகளில் சிலவற்றை நான் அவை மிகவும் அவதூறாக அமைந்ததால் ஏற்கவில்லை. பெரியார் மோசமானவர் என்று நான் எங்குமே கூறவில்லையே. அதே சமயம் அவர் எலும்பும், ரத்தமும் சதையும் உள்ள மனிதர். அவ்வளவு ஆண்டுகாலம் செயலாக வாழ்ந்தவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சில சறுக்கல்களை மனித இயல்பாகத்தான் நான் பார்க்கிறேன். அவர் இறந்த போது எனக்கு வயது 27. நேரடியாகவே அவரது செயல்பாடுகளை பார்த்தவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கேள்விகள்

1) தன்னையே கொல்ல திட்டமிட்ட பிரபாகரனையும் மன்னித்து, ஈழத்தில் அவனால் கஷ்டப்படும் தமிழ் மக்கள் மீது கூட இலங்கை ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கலைஞர் பாராட்டுக்குரியவர்தானே?

2) கிழக்கிலங்கையில் இலங்கை ராணுவம் வெற்றிகொண்டபோது இவ்வளவு கூப்பாடு போடாத வெளிநாட்டு வாழ் ஈழத்து தமிழர்களும், இந்தியாவில் இவ்வளவு பிரச்னைகளை தூண்டிவிடும் ஈழத்து தமிழர்களும், வடக்கில் ராணுவம் பிரபாகரனையே நெருங்குவதாலேயே இவ்வளவு கூப்பாடு போடுகிறார்கள். ஆகையால், அடிப்படையில் யாழ்ப்பாணத்து மேலாதிக்கத்துக்காகத்தான் கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறலாமா?

3) சிங்கள பிரேமதாசா கொடுத்த பணத்துக்காக மற்ற இயக்கங்களில் இருந்த தமிழர்களை கொன்றொழித்த பிரபாகரன் துரோகியாகாமல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் துரோகியானது எப்படி?

4) நேற்றுவரை இந்தியத் தமிழர்களை கடுமையாக திட்டி வந்த ஒரு சில ஈழத்தவர்கள் (எல்லோரும் அல்ல) இன்று இந்தியாவின் ஆதரவு வேண்டி வாய் மூடி நிற்பதன் மர்மம் என்ன? வன்னியில் உண்மையிலேயே நிலைமை மோசம் என்பதாலா?

5) நேற்றுவரை புலிகளை கடுமையாக விமர்சனம் செய்துவந்த தா பாண்டியன் இன்று ஆதரவாக பேசுவதன் மர்மம் என்ன?

6) இன்னும் 4 மாதத்தில் காலியாகப்போகும் பாராளுமன்றத்திலிருந்து ராஜினாமா பற்றி பேசும் கலைஞர், தமிழகத்து சட்டமன்றத்திலிருந்து எல்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்வாரா?

கொழுவி said...

தன்னையே கொல்ல திட்டமிட்ட பிரபாகரனையும் மன்னித்து, //

:) :) :)

இது பொய்யான தகவல் என்பதை சிம்பிளாக நிறுவலாம்.

திட்டமிட்ட எதனையும் செய்யாமல் விடுவதில்லை பிரபாகரன்.

Anonymous said...

அது என்னவோ ஓரளவுக்கு உண்மைதான்.
திலீபனை கொலை செய்ததிலிருந்து கிட்டு, புலேந்திரன், மாத்தையா, சிறிசபா, பத்மநாபா, ராஜீவ், கதிர்காமர், அமிர்தலிங்கம், பிரேமதாஸா என்று நீட்டிய கரங்களையெல்லாம் கடித்து கொல்வதில் அவனுக்கு நிகர் அவனே

ஆனால் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றதாக சொல்லமுடியவில்லை. டக்ளஸை கொலை செய்ய முயற்சி, கருணாவை கொல்ல முயற்சி, சரத் பொன்சேகாவை கொல்ல முயற்சிகளிலெல்லாம் பிரபா மண்ணை கவ்வினானே?

அவற்றையெல்லாம் மறந்துவிட்டீர்களே கொழுவி அய்யா

கொழுவி said...

திலீபனை கொலை செய்ததிலிருந்து கிட்டு, புலேந்திரன், மாத்தையா, சிறிசபா, பத்மநாபா, ராஜீவ், கதிர்காமர், அமிர்தலிங்கம், பிரேமதாஸா//

இந்த லிஸ்ட்டில் சதாம்குசைனையும் சேர்த்திருக்கலாமே..

--அடுத்தது நீங்க சொல்லும் பொய்களை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று நினைத்தால் உண்மையில்லாவிட்டாலும் அறிவுபூர்வமாக கதைக்கணும். அதை விட்டுட்டு திலீபனை கொன்றார் கிட்டுவை கொன்றார் புலேந்தியை கொன்றார் என்றால்.. இதயாரோ மறை கழண்ட கேஸ் என்று புலி எதிர்ப்பாளர்களே கை விட்டு போயிடுவார்கள்.

அதனால கொஞ்சம் யோசிச்சு கதைச்சால் பிரகாரசமான எதிர்காலம் உண்டு :)

Anonymous said...

ஆமாம், பொய்களை பொருந்த சொல்வதற்கு உங்களிடமிருந்து தானே கற்றுக்கொள்ளவேண்டும்.
ராஜீவை கொன்றது யாரென்றால் உடனே தெளிவாக சொல்லிவிடுவீர்கள்தானே? :-)

திலீபனை கொன்றது பிரபாதான். தற்கொலை படையாக அனுப்பி கொன்றாலென்ன, தற்கொலை செய்துகொள்ளச்சொன்னாலென்ன? எல்லாம் ஒன்றுதானே? தியாக தீபம் பண்ண கிடைத்த ஒரு வெள்ளைப்புலி.

ஆனால் ஒன்று,
பிரபா மண்ணைக்கவ்வியதை லிஸ்ட் போட்டதும்,
திட்டமிட்ட எதனையும் செய்யாமல் விடுவதில்லை பிரபாகரன். என்று பீத்தியது நின்றதே,

கலைஞரை கொலை செய்து ஒரு புலிவாலை முதல்வராக்க பிரபா திட்டம் போட்டது கலைஞருக்கும் தெரியும். அதனால்தான் புலிவாலை துரத்தினார். இன்றும்கூட பிரபாவுக்கு ஆதரவாக ஒருவார்த்தை பேசுவதில்லை கலைஞர். ஆதரவெல்லாம் ஈழத்தமிழர்கள் என்றே கூறுகிறார். தெரிந்துதான் சொல்கிறார்.

Anonymous said...

//கொழுவி said...

தன்னையே கொல்ல திட்டமிட்ட பிரபாகரனையும் மன்னித்து, //

:) :) :)

இது பொய்யான தகவல் என்பதை சிம்பிளாக நிறுவலாம்.

திட்டமிட்ட எதனையும் செய்யாமல் விடுவதில்லை பிரபாகரன்//

பிரபாகரனால் தன் பெருத்த சரீரத்தை வைத்து கொண்டு பத்து அடியாவது ஓட முடியுமா? அனு நிமிடமும் சாவு பயம். அதான் பங்கர் வாசம். 1982 பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனை சுட்டது தான் அவர் கடைசியாக நேரடியாக தாக்குதல் செய்தது..

அதன் பின் இன்று வரை பங்கரில் தான் தோசை சுடுவது இல்லை குருவி சுடுவது. இவர் எல்லாம் மாவீரனாம். என்ன கொடுமை சார் இது .ப

Anonymous said...

சபாரத்தினத்தை கொடுமையாக நிராயுதபாணியாக வைத்து கொலை செய்தது கிட்டு. பின்னர் கிட்டுவும் படு பரிதாபமாக சயனைட் சாப்பிட்டு இறந்தார்.

இந்த இலங்கை போரில் வெற்றிகளை விட பின்னால் குத்தும் துரோகங்கள் அதிகம். கடைசிவரை இந்த துரோகங்களின் சூத்திரதாரி பிரபாகரன் பலியாமல் இருப்பது தான் கொடுமை.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>4. பாவாணர் கருத்துக்களை 3 பிரிக்களாம். 1. தமிழ் கருத்துக்கள் 2. வடமொழி கருத்துக்கள் 3. குமரி/முதன்மை தாய்மொழி கருத்துக்கள். இந்த முன்றில் கடைசி இரண்டும் காலத்தால் கழிக்கப்பட்டு விட்டன. அனால் பாவாணர் தமிழ் கருத்துக்கள் மிகவும் சிறந்தவை என்பது என் கருத்து, உங்கள் கருத்து என்ன>>

அநாநி,எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள் எனச் சொல்ல முடியுமா?

Anonymous said...

//கலைஞரை கொலை செய்து ஒரு புலிவாலை முதல்வராக்க பிரபா திட்டம் போட்டது கலைஞருக்கும் தெரியும். அதனால்தான் புலிவாலை துரத்தினார். இன்றும்கூட பிரபாவுக்கு ஆதரவாக ஒருவார்த்தை பேசுவதில்லை கலைஞர். ஆதரவெல்லாம் ஈழத்தமிழர்கள் என்றே கூறுகிறார். தெரிந்துதான் சொல்கிறார்.//


தங்கள் கருத்து இதை பற்றி?
பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?
உண்மை நிலையை விளக்கினால் நல்லது
செய்வீர்களா?

dondu(#11168674346665545885) said...

//பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?//

இதில் பல உள்விவகாரங்கள் உண்டு. கலைஞருக்கு புலிகளால் ஆபத்து என்று அவருக்கு நம்பத் தகுந்த மத்திய அரசு வட்டாரத்திலிருந்து செய்தி வந்ததாகவும், ஆகவே அவர் வைக்கோவை கட்சியை விட்டு நீக்கியதாகவும் ஒரு செய்தி அக்காலங்களில் படித்துள்ளேன். அப்போது வெளியான ஒரு தமிழ் படத்தில் கட்சித் தலைவரை அவரது மணிவிழா சமயத்தில் கொல்ல ஒரு இரண்டாம் கட்ட தலைவர் முயல்கிறார். படத்தில் அவர் பெயர் கைக்கோ. கைக்கோவாக நடித்தது ராதாரவி என்று ஞாபகம். படத்தின் பெயர் நினைவில் இல்லை.

வைக்கோவை கட்சியிலிருந்து தூக்கியதற்காக சில தொண்டர்கள் தீக்குளித்ததும், அவர்கள் நினைவை போற்றுவதாக வைக்கோ தனது வெப்சைட்டில் கூறி கொண்டிருந்ததும், பிறகு தன்னை நீக்கிய கலைஞருடன் கைகோர்த்து கொண்டு தீக்குளித்தவரது நினைவை சேதப்படுத்தியதும் பலருக்கும் தெரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சிந்தியுங்கள்..
ஏன் தமிழர்கள் புலிகளிடமிருந்து தப்பி இலங்கை ராணுவத்திடம் வருகிறார்கள் என்று.

வடிவேலுவும் , சீமானும் சினிமாவில் நடிப்பது போல கூட்டத்திலும் நடிக்கிறார்களா அல்லது விவரம் தெரியவில்லையா?

கிழக்கிலங்கையிலும் கொழும்பிலும் வன்னியில் இருப்பதை விட பல் மடங்கு தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. வன்கொடுமைகள் ஏதும் நிகழவில்லை.

சிபிஎம் கட்சி காங்கிரஸைஆட்சியை கவிழ்க்க இப்போது இதனை எடுத்துகொண்டுள்ளது. வேறு வழியின்றி கலைஞரும் ஒத்து ஊதவேண்டிய நிலை. கூடவே சினிமாக்காரர்களுக்கும் ஆட்டம் போடவேண்டிய கட்டாயம்.

--
புலிகளின் பிடியில் இருக்கும்போது சிரமங்களை அனுபவித்தோம்! புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பி வந்தோர் தகவல்.

http://www.engaltheaasam.com/page.227.htm

புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது கடுமையான அசௌகரியங்களுக்குட்பட்ட தமக்கு தற்போது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக வாழக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முல்லைதீவு பகுதியிலிருந்து தப்பி வந்துள்ள தமிழ் மக்கள் கூறியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

முல்லைதீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள முல்லிவைக்கல் பகுதியிலிருந்து தப்பி வந்த தமிழ் சிவிலியன்கள் நேற்றுக் காலை 9.30 மணியளவில் புல்மோட்டையிலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுள் பெண்களும் ஆண்களும் அடங்குவர்.

இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னதாக இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் அனைத்தும் படையினரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அங்கிருந்து தப்பி வந்து படையினரிடம் சரணடையும் வீதம் தற்போது அதிகரித்து வருகிறது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Anonymous said...

கொழுவியண்ணை,

//திட்டமிட்ட எதனையும் செய்யாமல் விடுவதில்லை பிரபாகரன்//

பத்துமுறை டக்ளஸை கொல்ல திட்டம் போட்டு, ஆளணுப்பி, பத்துமுறையும் தோல்வியாச்சே?

ஏன் சரியா திட்டம் போடலையா?

சூர்யா - மும்பை said...

பெரியாரின் வேறு பட்ட பரிமாணங்களைப் பற்றி அறிய முடிந்தது.

அன்புடன்

சூர்யா

dondu(#11168674346665545885) said...

Thanks Bombay Surya.

Unable to comment in your latest post concerning credit card defaulting. It is amazing that the bank people have spared you this long. Hope it is just a story.

Regards,
Dondu N. Raghavan

Anonymous said...

Thamizhan said...

பார்ப்பனீயத்தை வெறுத்தாரே தவிரப் பல பார்ப்பனர்கட்கு ஜெமினி வாசன் முதல் அவரது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர விரும்பியவர்கள் வரை உதவி செய்துள்ளார்.எந்த ஒரு பார்ப்பன்ராவது அவரால் துன்பப் படுத்தப்பட்டதாகவோ,கொடுமை செய்யப் பட்டதாகவோச் சொல்ல முடியுமா?//


1950-1960 களில் அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க இயக்கம் தொடங்குவதற்கு முன்னால்.
பெரியார் அவர்கள் தன் பக்தர்களுக்கு
"கடவுளை நம்போதே"
கடவுள் இல்லவே இல்லை"
கடவுளை மற மனிதனை நினை"

"பாம்ம்பையும் பார்ப்பனையும் பார்த்தால்
பாம்பை விடு விடு
பார்ப்பானை அடி"

பார்ப்பான் பாம்பை விட கொடியவன் என்ச் சித்த்ரித்தாகவும்
பூணுல் அறுப்பு போராட்டம்
பத்திரிக்கைகளில் வந்துள்ளதே.
( ஏன் இன்னும் கலஞர் அவர்களின் பேனாவும், நாக்கும் கூட " பார்ப்பணரை ஒரு கை பார்த்து விடுகிறேதே)
அறம் பாடியே

சமீபத்திய உதாரணங்கள்
1.தயாநிதி மாறன் விவகாரம்
2.cpim வரதராஜன்


ஆனால் தமிழன் வேறு மாதிரி சொல்கிறார்
உண்மையென்ன?

Anonymous said...

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தின் கீழ் வன்னிமக்களுக்கு அனுப்பும் பொருட்களை புலிகள் கொள்ளையடிக்கினறனர்!

- வன்னியூரான்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட ஏற்பாட்டில் வன்னிக்கு அனுப்பப்பட்டுவரும் உணவுப்பொருட்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதால், அவற்றை புலிகள் கையாடக்கூடிய வாய்ப்புகள் இல்லையென ஐக்கிய நாடுகள் உணவுதிட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவரது இந்த அப்பாவித்தனத்தை எண்ணி அனுதாபப்படுவதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாது. ஆனால் வன்னிக்கு வெளியில், இலங்கை நாட்டின் ஏனைய பாகங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது இரத்த உறவுகளுக்காக,உண்மையில் இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை தெரிவிக்க வேண்டியது நமது கடமையாகும். அப்பொழுதுதான் புலிகள் சர்வதேச சமூகத்தை எப்படி ஏமாற்றி வருகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். பொதுவாகவே ‘சங்கக்கடை’என்று சொல்லப்படும் பல நோக்குக்கூட்டுறவு சங்கங்களில் வேலை செய்பவர்களில் பெரும்பாலோரின் யோக்கியதை பற்றி தமிழ்மக்கள் நன்கு அறிவர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1970-77 ஆட்சிக்காலத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பெரும்தட்டுப்பாடு நிலவி, அவை இந்த சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட நேரத்தில், தமிழ் பகுதிகளில் இந்த சங்கக்கடை மனேஜர்களாக இருந்தவர்களுக்கு தான் ஆகக்கூடிய மாப்பிள்ளை சீதனம் வழங்கப்பட்டது என்றால், சங்கக்கடை மனேஜர்களது மகிமையை புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது வன்னியில் இந்த ‘கனவான்கள்’பெரும் ‘க(ள்ள)னவான்களான’புலிகளுக்கு கீழே வேலைசெய்ய கிடைத்தால் என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள்! உலக உணவுத்திட்டம் அனுப்பும் பொருட்களை சங்கங்களிலிருந்து கொள்ளையடிப்பது புலிகளைப் பொறுத்தவரை ஒரு பெரிய விடயமேயல்ல. கிராமசேவகர்களும் புலிகளின் கையாட்கள் என்றபடியால் (வன்னியில் எல்லா அரசஊழியர்களும் புலிகள் சொன்னதை செய்யும் சுப்பன்கள்தான்), அவர்கள் அகதிகள் என பதிவு செய்து கொடுக்கும் அத்தனைபேருக்கும், சங்கக்கடை மனேஜர்கள் உணவுப்பொருட்களை வாரி வழங்குவார்கள். அப்படி வரும் பட்டியலில் உண்மையில் இல்லாத பெயர்கள், புலிகள் பொய்யுக்கு போட்டுக்கொடுக்கும் பெயர்கள் இருக்கும். அந்தக் கறபனை பெயர்களுக்குரிய உரிய பொருட்கள் மூடை மூடையாக புலிகளின் முகாம்களுக்கு பகிரங்கமாகவே போய்ச்சேரும். பொதுமக்கள் இதை நேரில் பார்த்தாலும் ஒன்றுமே செய்துவிட முடியாது. அதையும் மீறி முன்பு நியாயம் பேசிய ஒன்றிரண்டு பேருக்கு என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அப்படியிருக்க ‘சூடுகண்ட பூனை’மீண்டும் அடுப்பங்கரையை நாடுமா?

இதுதவிர வன்னியில் முன்பு அரசாங்கம் 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு, ஒரு மாதத்துக்கு 1250 ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை நிவாரணமாக வழங்கிவந்தது. அதிலும் புலிகள் இதேபாணியில்தான் கொள்ளையடித்து வந்தனர். அதுவும் போதாதென்று அரசாங்கத்துக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதற்காக, அரசாங்கம் அனுப்பும் புதிய பொருட்களை தாம் எடுத்துவிட்டு, தம்மிடம் இருப்பிலுள்ள பழுதாகிபோன பொருட்களை சங்கங்களுக்கு கொடுத்து விநியோகிக்கச் சொல்வார்கள். அதனைக் கொள்வனவு செய்யும் சாதாரண, வறிய பொதுமக்கள், சங்கக்கடை வாசலில் நின்று, இலங்கை அரசாங்கத்தை மண் அள்ளித் திட்டிவிட்டுப் போவார்கள். இவை எல்லாம் புலிகளுக்கு நற்சாட்சிப்பத்திரம் வழங்கிய அந்த ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுமட்டுமல்லாது வன்னியிலுள்ள பாடசாலைகளை அரசாங்கம்தான் அபிவிருத்தி செய்துவருகிறது. ஒரு புதியபாடசாலை கட்டிடம் கட்டுவதற்கு அல்லது திருத்துவதற்கு அரசாங்கம் பணம் ஒதுக்கினால், புலிகள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் அந்த வேலையை செய்வதாக பம்மாத்துபண்ணிவிட்டு, ஒதுக்கப்பட்ட பணத்தை கையாடி விடுவார்கள். அதேபோல வன்னியிலுள்ள வீதிகளை திருத்த வரும் பணத்தை கிராம முன்னேற்றச் சங்கங்களின் பெயரிலும், குளங்கள் திருத்தவரும் பணத்தை தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் பெயரிலும், சூறையாடி தமது கஜானாவை நிரப்பிகொள்வார்கள். இந்த அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடும் மக்களுக்கு கூட பெரும்பாலும் சம்பளம் வழங்குவதில்லை. அவரவர் ஊரில் அந்த ஊர் மக்கள்தான் சிரமதான (இலவச) அடிப்படையில் வேலை செய்ய வேண்டுமெனக்கூறி மக்களிடம் வேலை வாங்கிவிடுவார்கள். அரசாங்கம் வட கிழக்கில் யுத்தத்தால் இறந்த பொதுமக்களுக்கு, நபர் ஒருவருக்கு தலா ஐம்பதினாயிரம் ரூபா வழங்கியது. இப்பணத்தைப் பெறுவதற்கு முதலில் மரண அத்தாட்சிப்பத்திரமும், கிராமசேவகரிடம் உறுதிப்படுத்தல் கடிதமும் பெற்று, அதை உதவி அரசாங்க அதிபர் உறுதிப்படுத்தியபின், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களினால் பணம் வழங்கப்படுவது நடைமுறையாக இருந்தது. புலிகள் இயக்கத்தில் இருந்து போராடிச் செத்த உறுப்பினர்களின் பெற்றோரை பிடித்து, அவர்கள் மூலமாக, புலிகள் பல்லாயிரக்கணக்கானோரின் பெயரில் அந்தப்பணத்தை எடுத்து, ஐயாயிரம் ரூபாவை மட்டும் பிள்ளையை பறிகொடுத்த அந்தக்குடும்பங்களுக்கு கொடுத்துவிட்டு,மிகுதியை தாங்கள் எடுத்துக்கொண்ட கொடுமையையும் வன்னிமக்கள் அறிவார்கள்.

வன்னியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அரசாங்கம் மருந்துப்பொருட்களை அனுப்புவது இல்லையென்ற ஒரு பொய்ப்பிரசாரத்தை, புலிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆனால் வருடத்தில் நான்கு கந்தாயங்களாக (மூன்றுமாதம் ஒரு கந்தாயம்), மருந்துப்பொருட்கள் அனுப்புவது வழமை. வன்னியிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி மருந்துப்பொருட்கள் அவ்வாறே அனுப்பி வைக்கப்படுகின்றது. சென்றவாரம் கொழும்பில் இதுபற்றி ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட,வடக்கு-கிழக்கு மாகாண சுகாதார சேவை ஆலோசகர் டாக்டர் வீ.ஜெகநாதன் அவர்கள், புலிகளின் பொய்ப்பிரச்சாரத்தை உடைக்கும் வகையில், கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் எவ்வித மருந்து தட்டுப்பாடும் இல்லையென்றும், இதுபற்றி தனக்கு கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உண்மையில் வன்னி வைத்தியசாலைகளில் சிலவேளைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதாயிருந்தால் அதற்கு காரணம், பொதுமக்களுக்கென வரும் மருந்துகளை, புலிகள் தமது தேவைகளுக்காக எடுத்துச்செல்வதால் ஆகும். வன்னி மக்களைப் பொறுத்தவரை உணவு, மருந்து, உறைவிடம் எல்லாவற்றையும்விட பெரிய பிரச்சினை, புலிகள் வன்னி மண்ணை ஆக்கிரமித்து வைத்திருப்பதால் எழுந்துள்ள பிரச்சினையே. புலிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டால் இந்த கொடியயுத்தம் அடுத்தகணமே நின்றுவிடும். எமது மக்கள் தத்தமது சொந்த இருப்பிடங்களுக்கு சென்று நிம்மதியாக வாழத்தொடங்குவார்கள்.

1995ல் இராணுவம் யாழ்பபாணத்தைக் கைப்பற்றியபோது,~துண்டைக் காணோம் துணியைக் காணோம்| என புலிகள் வன்னியை நோக்கி பின்வாங்கி ஓடிவந்தபோது, வன்னிமக்களாகிய நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் புலிகளுக்கு புகலிடம் கொடுத்தோம். அதற்கு எந்தவிதத்திலும் நன்றிக்கடன் எதுவுமில்லாமல்,புலிகள் எங்களின் நிலங்களையும், ரைக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், பணம் போன்ற சொத்துக்களை பறித்ததுமல்லாமல்,எங்களது பிள்ளைகளையும் பலவந்தமாக பிடித்து தமது படைகளில் சேர்த்து போர்புரியவைத்து செத்துமடிய வைக்கிறார்கள். எனவே இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தலையிட்டு,புலிகள் வன்னிமக்களுக்கு செய்துவரும் அநீதிகளுக்கு ஒரு முடிவு காணவேண்டும். அல்லது இலங்கை அரசாங்கம் புலிகளை ஒடுக்கி, கிழக்கு மாகாணமக்களை புலிகளிடமிருந்து பாதுகாத்தது போல, வன்னிமக்களையும் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்கவேண்டும். இதுவே வன்னிமக்களாகிய எங்களது எதிர்பார்ப்பாகும்.

Anonymous said...

உணவுக்கப்பல்கள் மீதான புலிகளின் தாக்குதல் தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் பாதகச் செயலாகும். மனித விரோத இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்

- ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலையுயர்வு இருப்பதாகவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்கள், மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கை பார்த்ததே வரலாறாக இருக்கின்றது.

ஈ.பி.டி.பி. ஆகிய நாம் வேடிக்கை பார்க்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாகப் பொருட்கள் தட்டுப்பாட்டையும், அதீத விலையுயர்வையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். உணவுப் பொருட்கள், கட்டுமாணப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றைத் தாராளமாக யாழ். குடாநாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்தோம். அதுவும் கொழும்பு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்;காகவும் நாம் பாடுபட்டோம்.

உள்நாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், பொருட்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் நாங்கள் எடுத்த பெரும் முயற்சியை மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் பொருட்களைக் கொண்டுவரும் பயணமார்க்கத்திலும், ஏற்றி இறக்கும் பணிகளிலும் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதால், நீண்டகாலத் தேவையை மனதில் கொண்டு, பெருந்தொகையான பொருட்களை யாழ். குடாநாட்டுக்கு அனுப்பிவைப்பதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம்.

யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையை மூடி புலிகள் தடுத்து நின்றபோதும், “கடல் மார்க்கமான பயணத்தினையும் தாக்குவோம்” எனப் புலிகள் அச்சுறுத்தியிருந்த போதும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்கான தேவைகளுக்கு முன்னுரிமையளித்து நாம் மக்களுக்காகச் செயற்பட்டோம். நியாயமானதும், சாத்தியமானதுமான எமது இந்த முயற்சிக்கு, ஜனாதிபதி உட்பட்ட அரச நிர்வாகத்தினரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர். இத்தகைய நெருக்கடி மிகுந்த நேரத்தில் புலிகள் இன்று (22.10.2008) இரண்டு உணவுக் கப்பல்களைத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட இரு கப்பல்களிலும், அரிசி, சீனி, கட்டடப் பொருட்கள், சீமெந்து ஆகிய பொருட்களே ஏற்றி வரப்பட்டிருந்தன. அதுவும் அரிசியைக் கொழும்பு விலையில் கிடைக்கச் செய்வதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புலிகளின் இந்த உணவுக் கப்பல்கள் மீதான தாக்குதலானது எவ்வகையிலும் இராணுவ நோக்கம் கொண்டதல்ல. இது முழுக்க முழுக்க யாழ். குடாநாட்டு மக்களின் உணவு, அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அபிவிருத்தியை இலக்கு வைத்த தாக்குதலாகும். மக்களைப் பட்டினி போடுவதன் ஊடாகவும், அபிவிருத்தியைத் தடுப்பதன் ஊடாகவும் புலிகள் தமது யுத்தப் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கவே முயற்சிக்கின்றனர்.

வன்னிக்குள் யுத்தம் வீச்சடைந்து வருகையில், அங்கிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற விடாமல், அவர்களை ஆயுத முனையில் தடுத்து நிற்கும் புலிகள், அவர்களின் அவலங்களைக் காட்டி ஆதாயம் தேடவும் முயற்சிக்கின்றனர். இன்று உணவுக் கப்பலைத் தாக்கிய புலிகள் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னர் வன்னியில் அவலப்படும் மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணியைத் தாக்கும் நோக்கத்தில் n~ல் தாக்குதலை நடத்தியிருந்தனர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இந்தச் சம்பவங்கள் புலிகளின் தொடர்ச்சியான மக்கள் விரோதச் செயல்களின் அண்மைய சாட்சியங்களாக இருக்கின்றன. புலிகள் அழிவு யுத்தத்துக்கு வழிகாட்டி வருவதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இன்று புலிகள் காட்டிய அழிவுப் பாதை, அவர்களின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது. அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, மக்களைக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதும், மக்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தடுப்பதும் புலிகள் நடத்தும் மக்கள் விரோத பயங்கரவாதத்தின் ஒரு யுக்தியாக இருக்கின்றது.

மக்களே! புலிப் பயங்கரவாதத்தின் இந்த அழிவுப் பாதையிலிருந்து நாம் விடுபட வேண்டும். புலித்தலைமை தமக்குத் தாமே வெட்டிய புதைகுழியில் மக்களையும் பலியிடத் துணிந்துவிட்டது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. புலிகளின் இத்தகையை பாசிச மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்ப்போம். எமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்ட உரத்துக் குரல் கொடுப்போம். எமது கண்டனத்தை வெளிப்படுத்த, வன்முறையைக் கையில் எடுக்காமல், ஹர்த்தால் ஒன்றை அனு~;டிப்பதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாளைய தினம் (23.10.2008) யாழ். குடாநாட்டில் சகல பகுதிகளிலும் பூரண ஹர்த்தால் அனு~;டிப்போம். நாளையதினம் கடைகள், வேலைத்தளங்கள், திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்தையும் மூடி, புலித்தலைமையின் மக்கள் விரோதச் செயலுக்கு எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை வெளிக்காட்டுவோம்!

Anonymous said...

வைகோ, சீமான், அமீர் மூவரும் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்களாமே?

உண்மையா?

Anonymous said...

//Anonymous said...
வைகோ, சீமான், அமீர் மூவரும் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்களாமே?

உண்மையா?

October 25, 2008 1:20 AM

sariyaana pathil kodukkavum

Anonymous said...

http://in.youtube.com/watch?v=2GQ76clkg-g

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது