நண்பர்களை பெற்று மற்றவர்களை தன்வசப்படுத்துவது பற்றி டேல் கார்னகி என்பவர் சமீபத்தில் 1930-களில் போட்ட புத்தகம் இன்னமும் நன்றாகவே விற்று போவதாக பலர் கூறி வருகின்றனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் எளிமையானவை, வெளிப்படையானவை. இருப்பினும் அவற்றை எத்தனை முறை திரும்பத் திரும்பக் கூறினாலும் அது மிகையாகாது என்பதை நிருப்பிப்பது போலவே பலரது செய்கைகள் உள்ளன.
“என்ன, மறுபடியும் கலைஞர் ஏதாவது செய்துவிட்டாரா” என்று கொட்டாவி விட்ட வண்ணம் கேட்கிறான் முரளி மனோஹர். இந்த முறை கலைஞரது அல்ல. இது சன் டீவியின் முறை என்றுதான் கூற வேண்டும்.
புதிதாக காமெடி சேனல் வருவதாக சன் டீவி பல நாட்களாக அமர்க்களமான விளம்பரங்களை தந்து வருகிறது. ஆனால் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் அது வேண்டுமானால் சன் டைரக்ட் இணைப்பை பெற வேண்டும். ஏதோ செட் டாப் பெட்டி மாதிரி என்று வைத்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். எது எப்படியாயினும் கிட்டத்தட்ட 1000 ரூபாய் முதற்கண் செலவாகும் என அறிகிறேன். அப்புறம் மாதம் 100 ரூபாய் மொய் வேறு தனியாம். இப்போதே அதே 100 ரூபாய்கள்தான் எனது கேபிள் ஆப்பரேட்டர் பெற்று கொள்கிறார். காமெடி சேனல் நிகழ்ச்சிகளும் அதில் தற்சமயத்துக்கு வருகின்றன. வரும் 15-ஆம் தேதிக்கு பிறகு இதில் அது அவ்வாறு இலவசமாக வராது என அறியப்படுகிறது. பிறகு ஏன் இலவசமாக இப்போது தருகிறார்களாம்?
விஷயம் என்னவென்றால், இலவசமாக நிகழ்ச்சிகளை பார்த்து அதை நாம் விரும்பி, பிறகு பணம் கொடுத்து பார்க்க வேண்டுமாம். அப்படியானால் இலவசமாக காட்டப்படும் நிகழ்ச்சிகள் தரமாக இருந்தால்தானே அவர்கள் நினைப்பது போல நடக்கும்? அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஸ்க்ரீன் எகிறுவதுதான் அதிகம். அப்படியே தெரிந்தாலும் எல்லாமே பல முறை பார்த்து அலுத்த காட்சிகள்தான். சன் டீவி மட்டுமின்றி ராஜ், விஜய், ஜயா டிவி சேனல்கள் வேறு கணிசமான அளவில் நகைச்சுவை காட்சிகள் போடுகின்றன.
மேலும் என்னைப் போன்ற கூட்டாளிகள் யூ ட்யூபுக்கு போனால் இம்மாதிரி காட்சிகள் அனேகமான அளவில் கொட்டி கிடக்கின்றன. ஆகவே முரளி மனோஹருக்கு நான் கூற விரும்புவது இதுதான். “இப்ப என்ன ஆயிடுத்துன்னு இந்த காமடி சேனலுக்காக சன் டைரக்ட் வாங்க வேண்டும்? அவர்கள் கொடுக்கும் சீன்கள் அப்படி ஒன்றும் ஆவலைத் தூண்டவில்லையே”.
வாழ்க்கையில் இம்மாதிரி பலர் சரியாக செயல்படத் தெரியாது கோட்டை விடுகிறார்கள். “அடோஸ் படோஸ்” என்னும் ஹிந்தி சீரியல் தூர்தர்ஷனில் சமீபத்தில் 1984-ல் வந்தது. அதில் ஒரு காட்சி. ஒருவன் மலிவாக கிடைத்தது என ஒரு கூடை நிறைய கீரை வாங்கி வர, தங்கமணி கோபிக்கிறாள். “இதப்பாருங்க இந்த கீரையெல்லாம் யாருக்காவது விற்று பணமாக்குங்கள். இல்லையேல் நான் பிறந்த வீடு செல்வேன்” என பயமுறுத்துகிறாள். “நிஜமாகவே செல்வாயா” என அவன் கண்களில் பல்ப் எரிந்து ஆவலுடன் கேட்க, “இந்த கீரையெல்லாம் விற்று காசாக்காவிட்டால் அடுத்த ஓர் ஆண்டுக்கு பிறந்தகம் செல்லமாட்டேன்” என்று சரேலென பிளேட்டை திரும்பி போடுகிறாள். கீரைகள் அடுத்த ஐந்து நிமிடங்களில் காலி.
ஜீ டிவியில் ஒரு க்விஸ் நிகழ்ச்சியில் முதலாம் பரிசை பெறும் நிலையில் இருந்த என் நண்பன் வேண்டுமென்றே தவறாக ஒரு பதில் சொல்லி இரண்டாம் இடத்துக்கு வந்தான். ஏனெனில் முதல் பரிசு ஏதேனும் மலைவாசஸ்தலத்தில் நான்கு நாட்கள் இலவசமாக தங்குவது. இரண்டாம் பரிசு வாஷிங் மெஷின். அவனது தேவை வாஷிங் மெஷின், அவ்வளவுதான் விஷயம்.
மீண்டும் இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம்.
ஆக, இந்த காமெடி சேனலை மக்கள் கட்டணம் கட்டி பார்க்க வேண்டும் என்பதற்காக சன் டீவி செய்த பிரமோஷன்கள் அதை நாம் அவ்வாறு செய்யலாகாது என்பதையே உணரும்படி செய்து விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
9 hours ago
18 comments:
நல்ல பதிவு சார்.
சன் குழுமம் செய்த மற்றொரு காமெடி இது. அனுபவம் இன்மை தான் காரணம். மேலை நாடுகளில் இது வெற்றி பெறலாம், வேறு பொழுதுபோக்கு வசதிகள் இல்லை.
ஏற்கனவே அம்பலம் இணையதளம் இப்படித்தான் செய்து கையை சுட்டு கொண்டது. (ஆறாம்திணை இணையதளமும்). இலவசமாக இருந்த வரை வாசகர்கள் இணையதளம் உள்ளே சென்றார்கள். பணம் என்றுடன் எல்லாரும் பின் வாங்கி விட்டோம்.
குமுதம் இணையதளம் அதனால் தான் வாடிக்கயாளர்களின் கருத்தை கேட்டது. பணம் கட்டி இணையதளத்திற்கு வருவீர்களா என்று.
சன் குழுமத்தின் இnத செயல் சட்டப்படி செல்லாது. போட்டியின்மை சட்டத்தின் படி இது குற்றம் (MRTP act). சுப்ரமண்யம் சாமியிடம் சொல்லி வழக்கு போட சொல்லலாம். what is the tamil term for monoply sir, I crack my head for 5mins unable to recollect the Tamil word.
monoply --> ஏகபோக தனியுரிமை, முற்றுரிமை, தனிக்காட்டு ராஜா என்றெல்லாம் கூறிக்கொண்டே போகலாம்.
//சன் குழுமத்தின் இnத செயல் சட்டப்படி செல்லாது//
புரியவில்லை. ஏன் செல்லாது? வெற்றியடையாது என்பது வேறு விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir, as per IB (Information & broadcasting Act & MRTP Act( each TV channel is to be given to more than one DTH operator for braodcasting.
Sun comedi thirai should be given to Tata or Airtel or Dish TV...
ESPn cant say that Triplicane people only are allowed to watch ESPN channel.
I think Comedy Thirai is not a satellite channel Its a video on demand service.
Hence Sun may not offer this service to other DTH operators.
Aravindan
Bangalore
அரவிந்தன் சரியாக சொல்லியிருக்கிறார். அதை சன் டிவி சேனல் என்று சொல்லாமல் "சேவை" என்று சொல்கிறது. அதனால் அவர்கள் அதை வேறு யாருக்கும் தரவேண்டியதில்லை.
நன்றி அரவிந்தன் மற்றும் வெண்பூ. நீங்கள் கூறுவதும் சரிதான். ஆனால் இப்பதிவு சொல்ல வந்ததே வேறுதான்.
அதாகப்பட்டது அந்த சேவையும் வாங்கிக் கொள்ள தூண்டும்படி தரமாக இல்லை என்பதுதான்.
பதிவுலகை விட்டு போகிறேன் என்றுசீன் காட்ட, சரி ஆளைவிடுங்கள் என்று மற்றவர்கள் இருந்துவிட பதறிப்போய் அசடு வழிய திரும்பி வந்த பல பதிவர்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பதிவுலகை விட்டு போகிறேன் என்றுசீன் காட்ட, சரி ஆளைவிடுங்கள் என்று மற்றவர்கள் இருந்துவிட பதறிப்போய் அசடு வழிய திரும்பி வந்த பல பதிவர்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார்கள்//
ha! ha ! ha!
நெத்தி அடி
//
பதிவுலகை விட்டு போகிறேன் என்றுசீன் காட்ட, சரி ஆளைவிடுங்கள் என்று மற்றவர்கள் இருந்துவிட பதறிப்போய் அசடு வழிய திரும்பி வந்த பல பதிவர்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார்கள்
//
கலக்கல் சார்... இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்.. :)))
///ஜீ டிவியில் ஒரு க்விஸ் நிகழ்ச்சியில் முதலாம் பரிசை பெறும் நிலையில் இருந்த என் நண்பன் வேண்டுமென்றே தவறாக ஒரு பதில் சொல்லி இரண்டாம் இடத்துக்கு வந்தான். ஏனெனில் முதல் பரிசு ஏதேனும் மலைவாசஸ்தலத்தில் நான்கு நாட்கள் இலவசமாக தங்குவது. இரண்டாம் பரிசு வாஷிங் மெஷின். அவனது தேவை வாஷிங் மெஷின், அவ்வளவுதான் விஷயம்.////
கலக்கல்
//பதிவுலகை விட்டு போகிறேன் என்றுசீன் காட்ட, சரி ஆளைவிடுங்கள் என்று மற்றவர்கள் இருந்துவிட பதறிப்போய் அசடு வழிய திரும்பி வந்த பல பதிவர்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார்கள்.//
இந்த உள்குத்து எனக்கு புரியவில்லை..
அன்புடன்
அரவிந்தன்
//மோட்டிவேட் செய்வது என்பது ஒரு கலை//
ரத்தகண்ணீர் படத்துல எம்,ஆர்,ராதா கலையை வளக்குறதுக்கு என்னமோ பண்ணுவருள்ள
//1930-களில் போட்ட புத்தகம் இன்னமும் நன்றாகவே விற்று போவதாக பலர் கூறி வருகின்றனர்.//
தலையணையை விட விலை குறைவாக கிடைக்கும்னு நினைக்கிறேன்
//ஏதோ செட் டாப் பெட்டி மாதிரி என்று வைத்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.//
நல்ல வேலை டாப்-னு இருக்கு.
நான் செட்டப்பை பெட்டி மாதிரி கூடவே வச்சுக்கலாம்னு நினைக்கிறிங்க நினைச்சிட்டேன்
இப்போது வரும் காமெடிகளை பார்த்தால் எனக்கு அழுகை தான் வருகிறது.
அப்போ அது அழுகை தொலைக்காட்சியா
1.மின்வெட்டு காரணம் யார்?
2.சரியாகுமா?
3.அரசு பிழைக்குமா?(மக்கள் கோபம்)
4.இலவச டீவி ஒரு காரணமா?
5.இங்கு மட்டும் ஏன் இந்த நிலை?
6.காற்றலை திட்டம் என்னாச்சு?
7.அணுமின்சாரம் கைகொடுக்குமா?
8.மழை இதை சரி செய்யுமா?
9.கழகங்களின் ஆட்சி காரணமா?
10.மத்திய அரசு கைவிட்டுவிட்டதா?
11.அனல் மின்சாரம் என்னாச்சு?
12.சென்னையில் தாக்கம் இல்லையா?
13.தேர்தலில் எதிரொலிக்குமா?
14.ஹெல்மெட் போல் இன்வெர்ட்ட்டர் விற்பனை தந்திரமா?
15.எல்லாக் கட்சியும் வேடிக்கை பார்க்கிறதா?
16.மற்ற மாநிலங்களில் எப்படி?
17.இலவச மின்சாரம் காரணமா?
18.எப்போ சரியாகும்?
19.விளம்பர விளக்குகளை தடை செய்யலாமே?
20.அரசியல் மாநாட்டு அலங்கார விளக்குகளை?
டோண்டு சார் காலை மணி 0715 ஆச்சு?
கேள்வி பதில் தாமதம் ?
காரணம்
மின் வெட்டா?
கேள்வி பதில் போட்டாச்சு. எழுந்தது சற்றே நேரம் கழித்து. அத்துடன் ஒருமுறை ப்ரூஃப் வேறு பார்க்க வேண்டியிருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment