12/05/2008

தீவிரவாதத்துடன் டோண்டு ராகவனின் மொக்கை தொடர்புகள்

சமீபத்தில் 1981 அக்டோபர் மாதம் ஐ.டி.பி.எல் வேலையில் சேர தில்லி சென்றேன். அடுத்த கிட்டத்தட்ட 20 வருடங்கள் அங்குதான் இருப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதுபற்றி இப்பதிவு இல்லை. கிட்டத்தட்ட அக்காலக் கட்டத்தில்தான் தீவிரவாதிகள் பற்றிய பயம் தில்லியை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது.

சினிமா தியேட்டர்களில் சினிமா பார்க்க வருபவர்களை உடலைத் தடவி, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என சோதித்து அனுப்புவார்கள். இது 1982 காலக் கட்டத்தில் ஆரம்பித்தது. அன்று ஹோலி. எல்லோருடனும் ஹோலி விளையாடினேன். “ஹோலி முபாரக் ஹோ” என்று ஒருவருக்கொருவர் முகமன் கூறி கட்டித் தழ்வுவார்கள். சான்ஸ் கிடைத்தால் சில ஃபிகர்களையும் தழுவலாம். ஆனால் அது இப்பதிவின் விஷயம் அல்ல சப்ஜெக்டுக்கு வா என முரளி மனோஹர் அதட்டுவதால் பதிவின் விஷயத்துக்கு வருகிறேன்.

ஹோலி விளையாடிவிட்டு விட்டு சங்கம் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றேன். தில்லிக்கு சென்று நான் பார்க்கும் முதல் படம் அது. தியேட்டருக்கு உள்ளே செல்லும் இடத்தில் ஆண் போலீசார் மற்றும் பெண் போலீசார் முறையே ஆண்களையும் பெண்களையும் உடல் சோதனை செய்தபிறகு உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர். இம்மாதிரி சோதனை நடப்பதை நான் முதலில் கவனிக்கவில்லை. கையில் ஒரு நாவல் வைத்து படித்து கொண்டே கியூவில் முன்னேறிக் கொண்டிருந்தேன். எனது முறை வந்ததும் அந்த போலீஸ்காரர் என் தோள்களை அணைத்து முதுகு பக்கம் தடவிப் பார்க்க, நான் யதார்த்தமாக அவரை அணைத்து “ஹோலி முபாரக் ஹோ” என்று ஸ்பஷ்டமாகக் கூறினேன். ஒரு நிமிடம் ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம். அடுத்த நிமிடம் குபீர் சிரிப்பு. என்னால் அணைக்கப்பட்ட போலீஸ்காரனுக்கோ படுகடுப்பு. “அடச்சீப் போய்யா சாவு கிராக்கி, நானே ஹோலி அன்னிக்கு டியூட்டி போட்டாங்கன்னு வெறுப்பிலே இருக்கச்ச ரொம்பத் தேவை நீ வந்து கட்டிக்கிறே, போய்யா அந்தண்டை” என்றெல்லாம் சரமாரியாக ஹர்யாணவி ஹிந்தியில் கத்த ஆரம்பித்தான். பக்கத்தில் இருந்த பெண் போலீஸ் தன் இடுப்பைப் பிடித்து கொண்டு சிரித்தது காணக்கண்கொள்ளா காட்சி. ஏதோ சமாளித்து தியேட்டர் உள்ளே போனேன் என்று வைத்து கொள்ளுங்கள். கூட வந்த ஜனங்கள் பார்வையை தவிர்த்தவாறு நான் சீட்டில் போய் அமர்ந்தேன். நல்ல வேளையாக படம் ஆரம்பிக்க, விளக்குகளும் அணைக்கப்பட்டன. பிறகு அடுத்த நாள் ஐ.டி.பி.எல். சென்று நண்பர்களிடம் நிகழ்ச்சியை பற்றிக் கூற எல்லோரும் சிரித்தனர். நண்பன் சிவதாசன் கூறினான், “நல்லவேளை தப்பித்தாய் ராகவா, நாடு இருக்கும் நிலையில் போலீஸ்காரன் உன்னை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றவுடன்தான் எனக்கு நிகழ்வின் சீரியஸ்நெஸ் புலப்பட்டது.

ஏதோ கொஞ்ச நாளைக்கெல்லாம் நிலைமை சரியாகி இம்மாதிரி சோதனைகள் எல்லாம் இருக்காது என நினைத்தேன். அது அப்படியே பொய்யானது. இன்னமும் நீடிக்கிறது. தீவிரவாதத்துடன் எனது அடுத்த தொடர்பும் சற்றே அபாயகரமானதுதான்.

சமீபத்தில் 1993 ஏப்ரல் மாதக்கடைசியில் சைக்கிளில் வழக்கம்போல் ஆபீசிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். வழியில் போலீசார் சோதனைகளுக்காக எல்லா வண்டிகளையும் நிறுத்தினர். எனது சைக்கிளையும் நிறுத்தினர். அந்த போலீஸ்காரர் நல்ல முகபாவத்தில் இருந்தபடியால் அவருடன் சைக்கிள்களுக்காவது விதிவிலக்கு அளிக்க வேண்டும் என ஆர்க்யூ செய்தேன். சைக்கிளில் வந்து எந்த மடையன் குண்டு எறிந்து விட்டு தப்பியோட இயலும் என்றும் கேட்டேன். அவரும் எனக்கு சரிசமமாக பேசினார். பிறகு எல்லா சோதனைகளும் முடிந்து அங்கிருந்து மேலே செல்ல அரை மணியாயிற்று.

அடுத்த முறை மே மாத துவக்கத்தில் அப்பக்கமாக சைக்கிளில் சென்றபோது அதே போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு, “அன்னிக்கு அவ்வளவோ பேசினீங்களே, இப்ப என்ன சொல்லுவீங்க” என்று கேட்டார். என்ன செய்வது, அசடு வழிய வேண்டியதாயிற்று. ஏனெனில் சில தினங்களுக்கு முன்னால்தான் மே தின கொண்டாட்டம் சமயத்தில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஒரு புலிகள் தற்கொலைப்படை வீரனால் கொல்லப்பட்டிருந்தார். அந்த வீரன் சைக்கிளை ஓட்டி வந்தான் என்று கூறினார்கள்.

ஏதோ இம்முறையும் தப்பித்தேன். ஒன்று கற்று கொண்டேன். நடக்காது என்று உலகில் எதுவுமே இல்லை. வாழ்வின் அபத்தத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

Vijayashankar said...

Moral of the story is?

Be prepared!

Anonymous said...

//ஏதோ இம்முறையும் தப்பித்தேன். ஒன்று கற்று கொண்டேன். நடக்காது என்று உலகில் எதுவுமே இல்லை. வாழ்வின் அபத்தத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்//

டோண்டு சார் நாளை மார்ச் திங்கள் 6 ம் நாள்.பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்ததாக சொல்லப்படும் தீவிரவாதிகள் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரம் ஆண்டவனுக்கே தெரியும்.கடந்த இரண்டு நாட்களாக ஹைதிரபாத்திலும்,டெல்லி விமான நிலையத்திலும் சல சலப்பை ஏற்படுத்தியது யார் என்று தெரியாத‌ சமயத்தில்,தென்திருப்பேரை மகர‌ நெடுங்குழைக்காதர் நம்மை காப்பார் எனும் நம்பிக்கையுடன் இருப்போம்.

சரியான சமயத்தில் அனைவரயும் எச்சரிக்கை உணர்வோடு இருக்கச் செய்யும் உங்களின் பதிவுக்கு நன்றி.


ராமசாமி

வால்பையன் said...

//தீவிரவாதத்துடன் டோண்டு ராகவனின் மொக்கை தொடர்புகள்//

உங்க மொக்கை தாங்காமயே அவனுங்க ஓடிருப்பானுங்களே

வால்பையன் said...

//சான்ஸ் கிடைத்தால் சில ஃபிகர்களையும் தழுவலாம்.//

அப்பப்ப நீங்க குசும்புகாரர்ன்னு நிறுபிக்கிறிங்க

வால்பையன் said...

//வாழ்வின் அபத்தத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.//

ஆம், காக்கவில் கூட குண்டு கட்டி அனுப்புவார்கள் அந்த மடையர்கள்,
எதையும் விட்டு வைக்க கூடாது,
சோதனையின் போது முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.
அப்போது தான் அனைவரும் சமம் என்ற எண்ணமும், சில அரசியல் அடிவருடிகளின் ஆணவமும் அழியும்

வால்பையன் said...

எங்க ஆளக்கானோம்!
வெளியே எங்கேயும் போயிட்டிங்களா என்ன?

Sethu Raman said...

THE YEAR 1946 = the riots in Calcutta. the Bank where I worked downed shutters around 2 because of the riots - no transport at all, you know calcutta - hadto walk back home in Lake Road, and there were militarymen all through - nearing bhowanipur one of the militia aimed his gun at me and asked me to stop and I was shivering all the way - then he asked me questions as to why I was on the road - with my halfbaked Hindi I answered him then he drove me out --only after reaching home I knew I had a wet pant!!

dondu(#11168674346665545885) said...

@Sethuraman
Interesting experience. Well, my Hindi is perfect and the police man was actually affected by my outpourings in Hindi.

By the way do you knoww one Mr. R.K. Chari who was living in 9C, Lake Road? He was working in SAE India and was in Calcutta from 1943 to 1976, presumably in the above address throughout the above period. He was active in Calcutta Tamil Sangham work.

Regards,
Dondu N. Raghavan

Sethu Raman said...

Dondusir - down memory lane - do not know this gentleman by name - i myself was Librarian of the Bharathi Tamil Sangam in 45 and then Assistant Secretary till 46 when I returned South. SD Srinivasan, K Subramaniam, Sarma, Samarapungavan, Krishnan, Singaram and Panathi P.N. Thiagarajan are the names I well remember. I maintained touch with the Sangam, accompanied KVJ for the Bharathi festival,in 48, happily sent A.Srinivasaraghavan, Ma.Po.Si and
R.S.Desikan inthe subsequent years for paarticipation in the festival.

dondu(#11168674346665545885) said...

@Sethuraman
P.Na. Thiagarajan was a very good friend of this gentleman R.K. Chari (1924 born). He was called Kittu for short (R. Krishnamachari). In 1946 he was a bachelor.

By the way he was the younger brother of my father-in-law.

Regards,
Dondu N. Raghavan

dondu(#11168674346665545885) said...

@Anony
//நாளை மார்ச் திங்கள் 6 ம் நாள்.//
You mean Dec. 6?

Regards,
Dondu N. Ragahavn

Madhu Ramanujam said...

இன்னைக்கு நாடு இருக்கிற நிலைக்கு ஏரோப்ளேன்ல வந்து வேணாலும் குண்டு போட்டுட்டு போவார்கள் தீவிரவாதிகள். அடுத்தது.... பாக் அல்லது வங்கதேசத்திலிருந்தோ அல்லது ஏதாவது ஒரு சிறிய கப்பலில் இருந்தோ ஏவுகணைகள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

Anonymous said...

//மதுசூதனன் ராமானுஜம் said...
இன்னைக்கு நாடு இருக்கிற நிலைக்கு ஏரோப்ளேன்ல வந்து வேணாலும் குண்டு போட்டுட்டு போவார்கள் தீவிரவாதிகள். அடுத்தது.... பாக் அல்லது வங்கதேசத்திலிருந்தோ அல்லது ஏதாவது ஒரு சிறிய கப்பலில் இருந்தோ ஏவுகணைகள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை//

ithai konjam padikkavum.
courtesy:
http://sandhainilavaram.blogspot.com/2008/12/blog-post_05.html

அமெரிக்க அரசும் அதன் கூட்டணி நாடுகளும் உரிய மற்றும் கடும் நடவடிக்கை உடனடியாக எடுக்காவிட்டால் இன்னும் ஐந்து வருடங்களில் பாகிஸ்தான் திவிரவாதிகளுக்கு அணுகுண்டு போன்ற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய பலம் வந்து விடும் என அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது. விவரங்கள் கீழே.


பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்க பாராளுமன்றம் (காங்கிரஸ்) ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்த குழு உலகெங்கும் சுற்றுபயணம் செய்து பல நாடுகளில் சுற்றுபயணம் செய்து மற்றும் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமார் ஆறு மாதங்கள் ஆய்வுக்கு பிறகு சென்ற வாரம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது (மும்பை தாக்குதலுக்கு முன்னரே).


அந்த அறிக்கையில், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளான ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளில் பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப் படுவது, அமெரிக்க பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் தற்போதைய மேற்கொள்ளப் படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல (அமெரிகாவிலேயா? அப்ப இந்தியாவின் நிலை) எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

Anonymous said...

இந்தியாவில் நிலவும் பயங்கிரவாதிகளின் அச்சுறுத்தலால் நிலவும் அசாதரண சூழ்நிலையை சமாளிக்க -துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் "சோ" -இதில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்கா மற்றும் உங்களுக்கு மிகவும் பிடித்த இஸ்ரவேல் நாட்டின் வல்லுணர்களின் உதவியை பெற வேண்டும் என அருமையாய் துக்ளக்கில் எழுதியுள்ளார் படித்தீர்களா?உங்கள் கருத்து ?

http://idlyvadai.blogspot.com/2008/12/blog-post_04.html

Anonymous said...

இந்த வருடம் டிசம்பர் 6 பொதுவாக அமைதியாய் இருந்ததற்கு அனைவருக்கும் நன்றி சொல்வோம்.

உண்மையான மத நல்லிணக்கம் போற்றுவோம்.
சாதி பூசலற்ற சமத்துவ பூங்கா அமைப்போம்.
அமைதி, ஆனந்தம் பெருகட்டும்.

வால்பையன் said...

இந்த பொண்ணு என்னமோ சொல்லுது யூ-டியூப் விடியோவில என்னான்ன கேட்டு சொல்லுங்களேன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது