பதிவர் சங்கமித்திரன் இட்ட தகுதியற்ற தருமிக்குப் பரிசு என்ற ஒரு பதிவு சில நாட்களுக்கு முன்னால் வெளியானது.
நான் கூட தமிழ்மண பக்கத்தில் இப்பதிவின் தலைப்பைப் பார்த்த போது அடேடே சிங்கைப் பதிவர்கள் வைத்த போட்டியில் வெற்றி பெற்ற பதிவர் தருமி மேல் இவருக்கு என்ன கோபம் என ஒரு கணம் துணுக்குற்றேன். பிறகுதான் தெரிந்தது அவர் மண்டபத்தில் எழுதிக் கொடுத்த பாட்டை எடுத்துக் கொண்டு வந்த ஒரிஜினல் தருமியைத்தான் குறிப்பிடுகிறார் என்று. அதிலிருந்து சில வரிகளைப் பார்ப்போம்.
(அரசன், அரசி) அவர்களைச் சுற்றிலும், இவ்வளவு மலர்கள் நறுமணம் வீசிக்கொண்டிருந்த போதிலும், மன்னனுக்குத் தன் அருகில் இருந்த அரசியின் கூந்தலில் தனியொரு நறுமணம்_மாறுபட்ட மணம் கமழ்வதாக உணர்ந்தான்.
“திரும்பித்தன் தேவிதன்னை நோக்கினான்
தேவி அய்ம்பால்
இரும்பித்தை வாசமாகி இருந்தது
ஈண்டுஇவ் வாசம்
சுரும்புவிற்குத் தெரியா தென்னா
சூழ்ந்து இறும்பூச தொண்டீது
அரும்பித்தைக் கியல்போ செய்கையோ
வெனஅய்யம் கொண்டான்’’
அரசனல்லவா? உடனே தனக்கு ஏற்பட்ட ஐயத்தை அறிவித்து, தீர்த்துவைப்பவருக்கு ஆயிரம் பொன் பரிசு எனக் கூறினான்.
இங்கே நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். தமிழன் எங்கே தாழ்ந்தான் வீழ்ந்தான் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை. மங்கையின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா என்று ஆராய்வது தான் ஒரு அரசனின் வேலையா? இந்த லட்சணத்தில் அவனது ஆட்சி எந்தப் போக்கில் இருந்திருக்கும்.
அறிவிப்பைக் கேட்டவர்களில், தருமி என்கிற திருமணமாகாத பார்ப்பனப் பையனும் ஒருவன். நேரே கோயிலுக்குப் போனான். புலம்பினான். நான் வேதம் படித்தவன், இல்லற வாழ்வின்றி உன்னை நான் அர்ச்சனை செய்ய முடியவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள உதவிட வேண்டும். இது பதமான நேரம். ஒரு பாடல் தந்தால் மன்னன் கருத்துக்கிசைய நான் பிழைத்துப் போவேன் என்று கேட்டான்.
உடனே, கம்ப்யூட்டர் பிரிண்டரில் இருந்து வந்து விழுவது போல ஓலைச் சுவடிப் பாட்டு ஒன்று வந்து விழுந்தது.
அவ்வளவுதான், தருமி அப்போதே தனக்கு ஆயிரம் பொன் கிடைத்து விட்டது போல மகிழ்ந்தான். இப்படிப்பட்ட நேரத்தில், இயல்பாகவே ஒரு செருக்குத் தோன்றும். அப்படிப்பட்ட செருக்கோடு, நாவலர் கழகம் நண்ணினான்!
கவிதையைக் காட்டினான். அங்கிருந்த புலவர்கள், கவிதையைப் பார்த்துவிட்டு ‘பேஷ் பேஷ்’’ என்றனர். அரசனும் ஏற்றான். தருமிக்கு ஆயிரம் பொன் வழங்க ஆணையிட்டான்.
பேராசைக்காரனான பார்ப்பான், வாங்கப் போன போது, ஒரு குரல் ‘நில்’ என்றது. ‘நேர்ந்து கீரன் நில்லென விலக்கினான். குற்றம் உள்ளது இக்கவி என்று கூறினான். இதில் ஒரு உண்மை விளங்கும். அந்த அவையில் அக் கவிதையை ஆழ்ந்து பார்த்தவர் நக்கீரர் ஒருவரே என்பது.
அவ்வளவுதான்! தருமிக்கு எப்படி இருக்கும்? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டும்முன் தட்டிவிட்டானே என்று தானே இருக்கும்.
தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு, மீண்டும் பரமசிவனிடம் போனான். அங்கே,....
“பெறுபொருள் இழந்தேன் என்றுப் பேசிலன்
யார்க்கும் மேலாம்
கறைகெழு மிடற்றோய் நின்றன் கவிக்குற்றம்
சில்வாழ்நாட்சிற்
றறிவுடைப் புலவர் சொன்னால் யாருனை
மதிக்க வல்லார்’’ என்கிறான்.
இந்தப் பாட்டின் நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். வந்து கேட்ட போது இந்தப் பார்ப்பனன் கெஞ்சிய கெஞ்சலும், கிடைக்காதபோது தூக்கி எறிந்து பேசுவதையும் கவனிக்க வேண்டும்.
“யோவ் கதியல்லாத எனக்குத்தப்பான
பாட்டைக் கொடுத்தாயே’’ என்று வசைபாடுகிறான்.
உடனே, மனித உருவில் பார்ப்பனப் பரமசிவன் வெளிப்பட்டான்; அவன் எப்போதும் புராணங்களில் பார்ப்பானாகத்தான் வெளிப்படுவான்.
‘நூலாய்ந்தோர் வைகும் திருந்தவைக் கனத்தைச் சேர்ந்தான். அங்கிருந்தவர்களைப் பார்த்து,
‘யாரை நம்கவிக்குக் குற்றம் இயம்பினாரென்றான்’
அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் கீரன்.
(இங்குதான் பெரியார் தெரிகிறார்) பின் குற்றம் யாதெனக் கீரன் சொற் குற்றம் இல்லை, வேறு பொருள் குற்றம் என்றான்
‘பொருட் குற்றம் என்ன?’’ என்றான்
“புனை மலர்ச்சார்பாலன்றி
அற்குழற்கு நாற்றமில்லை’’ என்றான்.
நீ வணங்கும் காளத்தி ஞானப் பூங்கோதைக்குமா என்கிறான் பரமசிவன். அவருடைய கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை என்கிறான். (கோயில் சிலை கல். அதற்கு இயற்கைக் கூந்தல் ஏது)
உடனே பரமசிவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. நெற்றிக்கண்ணைத் திறந்தானாம்.
‘முற்றும் நீர் கண்ணானாலும்
மொழிந்த நும்பாடல் குற்றம்’ என்றான்.
தீயின் வெப்பம் தாளாது கீரன் குளத்தில் வீழ்ந்தான். பரமசிவன் ஓடிவிட்டான்; மறைந்துவிட்டான் இதுகதை.
பரமசிவன் என்பவன், தான் எழுதிய பாட்டு குற்றமற்றது என்று விளக்கம் சொல்லிக் கேட்டவரையும், அவை யையும் ஏற்க வைத்திருக்க வேண்டும். அவனால் கீரனின் கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை. உடனே பார்ப்பனருக்கே உரிய வன்முறையில் இறங்கிவிட்டார்கள். பார்ப்பானுக்குக் கிடைக்க இருந்ததைக் கெடுத்துவிட்ட நக்கீரனைத் தீயிட்டுத் கொளுத்திவிட்டார்கள்; கொளுத்திவிட்டு ஓடிவிட்டார்கள்; இதுதான் மறைந்துவிட்டான் என்பதன் உட்பொருள்.
தருமி ‘கல்லாதவன்’ கல்லாதவனுக்கு அந்தப் பரிசு கிடைக்க உதவலாமா? பார்ப்பானுக்கு என்றால் எல்லா விதி முறைகளும் செயல்படாது. தகுதி திறமை பேசுகிற கூட்டம் தகுதியில்லாதவனுக்குக் கொடுக்க ஆசைப் படலாமா?
இறுதியில், மறைந்து இருந்து கீரனின் தமிழோடு விளையாட வந்தோம் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம், தப்பாட்டம், பார்ப்பனப் பம்மாத்து!.
ஆனாலும், இறுதியில் தகுதியற்ற தருமிக்கே பரிசு வழங்கப்படுகிறது. இதுதான்
பார்பனியம்; மனுதர்மம் கோலோச்சுவது ஆகும்.
இதுதான் புராணங்களின் கொள்கை. மொத்தத்தில், புராண இதிகாச, ஆகம, ஸ்ருதி, ஸ்மிருதி வேதங்கள் எல்லாம் ஒரு மையத்தை - பார்ப்பன நலத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டனவாகும்.
இது சங்கமித்திரனின் வாதம்.
இந்த நிகழ்வை குறித்து நானும் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்பது குறித்து ஒரு பதிவை ஏற்கனவேயே போட்டுள்ளேன். அதிலிருந்து சிலவரிகளையே சங்கமித்திரன் பதிவில் பின்னூட்டமாக போட்டு அதுவும் வெளிவந்துள்ளது சில நாட்கள் முன்னால். அதை இங்கே மீண்டும் தருகிறேன்:
சமீபத்தில் 1970-ல் நான் திருவிளையாடல் படம் பார்த்த போது யோசித்த சில விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன்.
கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா?
உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் ஒரு நொடியில் விடை கூறியிருப்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.
இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை.
ஆனால் கேனத்தனமாக அரசன் புலவர்களிடம் போய்க் கேட்டு வைத்தான். பாருங்கள், "இதனை இவனால் முடிக்கும் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பது போல வரும் குறளை மன்னன் மறந்திருப்பானோ?
எது எப்படியோ, புலவர்களிடம் கேட்டு அவர்கள் விழிக்க, தண்டோரா போடச் செய்து தருமி வந்து புலம்பி, சிவபெருமான் மண்டபத்தில் இருந்து கொண்டு எழுதித் தந்ததை கொண்டு போய் கொடுத்து, சிவபெருமானிடம் மீண்டு வந்து, "உதைக்காம விட்டாங்களே" என்று அல்ப திருப்திப்பட்டு என்றெல்லாம் கதை போகிறது.
என்னமோ சொற்குற்றம் பரவாயில்லையாம், பொருள் குற்றம்தான் தவறு என்று கூறி, இருப்பதிலேயே பெரிய பொருள் குற்றம் செய்கிறார் நக்கீரர், ஏனெனில் அவர் ப்ளஸ் டூ படிக்கவில்லை.
இப்போது இக்கதையை நான் கீழ்க்கண்டவாறு மாற்றுகிறேன்.
சிவபெருமான்: ஆக, உயர்குல மாதரின் கூந்தலில் கூட இயற்கைமணம் இல்லையா?
நக்கீரன்: இல்லை
சிவபெருமான்: தேவலோகப் பெண்டிர்கள்?
நக்கீரன்: இல்லை, நான் வணங்கும் பார்வதி தேவியிடமும் இல்லை
சிவபெருமான்: நக்கீரா இப்போது என்னைப் பார்.
நக்கீரன்: நீர் முக்கண் முதல்வனே ஆனாலும் குற்றம் குற்றமே.
அடுத்த சீன் பொற்றாமரைக் குளத்தருகில்.
பாண்டிய மன்னன்: சொக்கேசரே என்ன இது விளையாட்டு.
சிவபெருமான்: ஷண்பகப் பாண்டியனே, உமது நக்கீரன் தேவலோகப் பெண்டிர் கூந்தல் கூட இயற்கை மணம் கொண்டதில்லை என்று கூறுகிறான். அவன் என்ன நேரில் பார்த்தானா? நேரில் பார்த்தவனான என்னிடமே இவ்வாறு விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது. சரி உனக்காக நக்கீரனை பிழைக்கச் செய்கிறேன்.
நக்கீரன்: மன்னிக்க வேண்டும் சிவபெருமானே நீங்கள் வளர்த்த தமிழில் பிழை இருக்கலாகாது என்பதால்தான் வாது புரிந்தேன்.
சிவபெருமான்: அதற்காக விதண்டாவாதம் செய்தால் எப்படி? நீர் ஏதேனும் தேவலோக மங்கையரைக் கண்டீரா? நான் கண்டவன். என்னிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே முறை? இல்லையென்றால் உமது புலமைச் சக்தியால் பார்வதி தேவியிடமே பிரார்த்தித்து அவரை வரச் செய்து அவரைக் கேட்பதுதானே முறை. இல்லாமல் அனுமானத்தில் பேசினால் எப்படி?
பாண்டியன்: (தலையைப் பிய்த்துக் கொண்டு) ஐயோ கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா இல்லையா?
சிவபெருமான்: அது தெய்வ ரகசியம் பாண்டியனே.
பாண்டியன்: பிறகு எப்போதுதான் தெரிந்து கொள்வது?
சிவபெருமான்: பல நூறாண்டுகள் கழித்து தமிழ்மணத்தில் டோண்டு ராகவன் என்பவர் இது பற்றி எழுதிடுவார். பிழைத்துக் கிடந்தால் அப்போது படித்து தெரிந்து கொள்.
இப்போது டோண்டு ராகவன் பேசுகிறேன்:
ஷண்பகப் பாண்டியனே எழுதி விட்டேன். முடிந்தால் படித்துக் கொள்.
அப்பின்னூட்டம் அப்படியே இருக்கிறது. சங்கமித்திரனிடமிருந்தோ அவரது சகபாடிகளிடமிருந்தோ ஏதும் எதிர்வினை இல்லை. அவர்கள் எல்லோருமே எல்லா இடங்களிலிருந்தும் பெரியார் சமீபத்தில் 1927 வாக்கில் பேசியதை எல்லாம் கட் அண்ட் பேஸ்ட் செய்வதில் பிசியாகி விட்டார்களோ என்னவோ யார் அறிவார்?
நான் இங்கு வாதத்தை முன்வைக்கிறேன்.
எனது பின்னூட்டம் தவறு என்றால் அதை எடுத்துரைக்கலாம். அது உண்மை நிலையையே பிரதிபலிக்கிறது என்றால், பார்ப்பன பரமசிவனும் தருமியும் சொன்னது சரி என்றாகிறது. பார்ப்பனனுக்கு பரிசு போவதா என்ற பார்ப்பனனல்லாத நக்கீரன் வயிற்றெரிச்சல்படுகிறான் என்றாகிறது. ஆனால் ஒன்று எப்படிப் பார்த்தால் பொழுது போகாது இக்கேள்வியை எழுப்பி, பலரது நேரத்தை வீணாக்கிய பார்ப்பனனல்லாத அரசன் மக்கு மடையனே என்றாகிறது.
ஒரு பகுத்தறிவு சார்ந்த விவாதத்தை அதை முன்வைத்தது டோண்டு ராகவன் என்னும் பார்ப்பனன் என்பதாலேயே பதில் கூறத் தயங்குவது பகுத்தறிவு பகலவனின் சீடரான சங்கமித்திரனின் பகுத்தறிவுக் குறைவைக் கட்டுகிறது.
ஆனால் இந்தச் செயல்பாட்டிலும் அவர் தனது குரு பெரியாரையே பிரதிபலிக்கிறார். அப்படித்தான் சமீபத்தில் 1949-ல் நடந்த அவரது பொருந்தாத் திருமணத்தில் அரங்கண்ணல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க இயலாது அதை அலட்சியம் செய்கிறார்.
பெரியார் எவ்வழி, அவர்கள் சீடர்களும் அவ்வழியிலேயே.
இப்படிப்பட்டவர்களுடன் இம்மாதிரி விவாதம் புரிவதே ஒரு மொக்கையான காரியம் என்பதாலேயே இப்பதிவை மொக்கை என வ்கைப்படுத்தியுள்ளேன் என்பதை அறிக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சைவ சித்தாந்த அறிமுக வகுப்புகள்
-
சைவசித்தாந்த அறிமுக வகுப்புகளை நடத்த தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது
வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகளைப் பற்றி அறிந்துகொண்டோம். சைவசித்தாந்தம்
ஒரு ...
1 hour ago
77 comments:
//பார்ப்பன பரமசிவனும் தருமியும் சொன்னது சரி என்றாகிறது.//
பரமசிவன் பாப்பானா ? ஐயோ ஐயோ சாதியை இரட்டடிப்பு செய்ததாக செட்டியார்கள் கோவிக்கப் போகிறார்கள்.
@கோவி கண்ணன்
நான் சொல்லவில்லை, சங்கமித்திரன் சொன்னதின் அபத்தத்தைக் குறிக்கவே அவ்வாறு சொன்னேன்.
அன்புடன்,
டோண்டு ராகாவன்
//பார்ப்பனனுக்கு பரிசு போவதா என்ற பார்ப்பனனல்லாத நக்கீரன் வயிற்றெரிச்சல்படுகிறான் என்றாகிறது//
நக்கீரன் பார்பனப் புலவர்களில் ஒருவர் என்று தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். சங்கறுக்கும் குலம் எங்கள் குலம் என நக்கீரன் வசனம் பேசுவதாக என்று ஏபிநாகராஜன் எதை வைத்து எழுதினார் என்று தெரியவில்லை. :)
Dondu Sir,
MMM. Nadakattum.
-Raju
நான் ப்ளஸ்டூ படிக்கல, ஆனா கூந்தலுக்கு மணம் உண்டுன்னு நான் ஒத்துகிறேன், ஏன்னா எனக்கு மூக்கு இருக்கு!
வேலையற்ற பார்ப்பான் அடுத்தவங்க வேலையையும் கெடுப்பான் என்பதற்கு இந்த பதிவே ஒரு உதாரணம்.
"புராணங்களின் கொள்கை. மொத்தத்தில், புராண இதிகாச, ஆகம, ஸ்ருதி, ஸ்மிருதி வேதங்கள் எல்லாம் ஒரு மையத்தை - பார்ப்பன நலத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டனவாகும்" என்கிற பதிவர் சங்கமித்திரனின் வாதம் மிகச்சரியானது.
மன்னன் மனதில் இருந்தது என்ன என்பதைக் கூறினால் பரிசு என்பதுதானே போட்டி? அதை மன்னனே ஒத்துக்கொண்ட பிறகு பரிசைக்கொடுப்பதுதானே ஞாயம்? மன்னன் மனதில் இருந்தது இறைவனுக்குத் தெரியும் ஆனால் நக்கீரருக்குத் தெரியுமோ?
இதில் பார்ப்பனன் அல்லது வேறு ஜாதி எங்கிருந்து வந்தது?--
பணிவரையன்
ம்ம்ஹூம்! தலைப்பே தப்பு!
பகுத்தறிவை இழந்ததனால் தான், பார்ப்பனரைத் திட்டுவது!
அல்லது
அவர்கள் அகராதியில் ஆனா ஊனாவென்று எதற்கெடுத்தாலும் பார்ப்பனரைத் திட்டுவது தான் பகுத்தறிவு!
கொஞ்சம் பகுத்தறிவுக் குழம்பிகளான பிறகு, நாங்கள் பார்ப்பானை எங்கே திட்டினோம்? பார்ப்பனீயத்தைத் தானே எதிர்க்கிறோம்!
அப்புறம் கோவி கண்ணன்!
ஏபி நாகராஜன் எழுதினதெல்லாம் காப்பியடித்தது தான் எதுவும் ஒரிஜினல் இல்லை!
கண்ணன் உங்களுக்காகத் தான் திரு.டோண்டு அண்ணன் , முன்னொருகாலத்தில் பின்னூட்டுர் திரு.”நோ” வை வெண்ணை என்றார்.
வரலாறு ரொம்ப முக்யம் அமைச்சரே
நாட்டமை வேலைக்கு வின்னபிக்க மனு இங்கே கிடைக்குமா ????
//உடனே, மனித உருவில் பார்ப்பனப் பரமசிவன் வெளிப்பட்டான்; அவன் எப்போதும் புராணங்களில் பார்ப்பானாகத்தான் வெளிப்படுவான்.//
புராணங்களில் பரமசிவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பாடிருக்கான், தாயுமானவனாகி பிரசவம் பார்த்திருக்கான். வேடுவனாக அர்ச்சுனனனோடு சண்டை பூடிருக்கான். இன்னும் எத்தனையோ
இதுவே பதிவின் நோக்கை விளக்குகிறது. அரைகுறையா ஏதோ தெரிஞ்சு வச்சுக்கிட்டு திட்ட ஒருத்தன் கிடைச்சான்னு ... பாவம் பதிவு எழுத ஏதாவது வேணும் இல்ல .
நக்கீரன் பார்ப்பான் இல்லைன்னு முடிவு பண்ணிக்கிட்டு அவனை புகழ்ந்துட்டாங்களே.
---
வியர்வை முடிக்கு பரவி விடுதலோ, அல்லது பராமரிப்பு இன்றி அழுக்காக வைத்திருப்பதால் நாற்றம் கொண்டு இருப்பதோ இயற்கை மணம் குறித்த இந்த விவாதத்திற்கு பொருந்துமா ?
இந்த நக்கீரன், சிவா பெருமான் பாடல்கள் எந்த தொகுப்பில் வருகிறது? பெரியபுராணமா?
http://virutcham.com
//"புராணங்களின் கொள்கை. மொத்தத்தில், புராண இதிகாச, ஆகம, ஸ்ருதி, ஸ்மிருதி வேதங்கள் எல்லாம் ஒரு மையத்தை - பார்ப்பன நலத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டனவாகும்" //
இப்படி தான் சாதியும் உருவாச்சு, இன்னும் கட்டிகிட்டு அழுகுறிங்களே, அவர்கள் பூனுல் போட்ட பார்பனர்கள் நீங்கள் பூனூல் போடாத பார்பனர்கள்!
//வியர்வை முடிக்கு பரவி விடுதலோ, அல்லது பராமரிப்பு இன்றி அழுக்காக வைத்திருப்பதால் நாற்றம் கொண்டு இருப்பதோ இயற்கை மணம் குறித்த இந்த விவாதத்திற்கு பொருந்துமா ?//
பதிவை சரியாக படியுங்கள். அதில்: உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் ஒரு நொடியில் விடை கூறியிருப்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.
இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை.
ஓக்கேவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தருமி எபிசோடே சினிமாவுக்காக எழுதப்பட்டது.
அது தெரியாமால் கினற்று தவளைகள் இத்தனை தவ்வு தவ்வுகிண்றனவே.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.
இந்தப் பாடல் அகநானூறு-வில் அடக்கம்
இந்த இறையாணார் வெள்ளிவீதியார் என்ற கவிஞரின் தம்பி. இவர் குருவின் பேயர் ஆதியந்தியர்.
//இதுதான் புராணங்களின் கொள்கை. மொத்தத்தில், புராண இதிகாச, ஆகம, ஸ்ருதி, ஸ்மிருதி வேதங்கள் எல்லாம் ஒரு மையத்தை - பார்ப்பன நலத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டனவாகும்.
//
இதுதான் சங்கமித்திரனின் மட்டுமல்ல, பகுத்தறிவுக்காரர்களின் ஒட்டுமொத்தமான வாதமாகும்.
சங்கமித்திரனின் இவ்வாத்தத்துக்குத்தான் பதில் சொல்ல் வேண்டும்.
வழக்கம்போல, தனக்கு வேண்டாததை மறைக்கும் தந்த்திரத்தைக் கையாளுகிறீர்கள். ஆர் கேட்டதது பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணமுண்டாவென்று?
நேரடியாகச்சொல்லுங்கள்:
சங்கமித்திரனின் theme சரியா தவறா?
//ஆனால் ஒன்று எப்படிப் பார்த்தால் பொழுது போகாது இக்கேள்வியை எழுப்பி, பலரது நேரத்தை வீணாக்கிய பார்ப்பனனல்லாத அரசன் மக்கு மடையனே என்றாகிறது.//
அக்கால வாழ்க்கையை இக்கால வாழ்க்கையின் அளவுகோலை வைத்து நிர்ணயிக்கும் உங்களை மடையன் என்று சொல்லலாமா?
அக்காலம் மன்னர்கள் ஆண்டகாலம். அவர்கள் மக்களைச்சுரண்டி போகவாழ்க்கை வாழ்ந்தார்கள். அந்தபுரவாழ்க்கை அனைத்தையும் கொண்டது. அவனின் ஜால்ராக்களே புலவர்கள். அவர்களுக்கு வேண்டியது பணமும் பரிசுமே. அவர்களுக்கு அவன் கொடுத்தான்.
இவனின் அனைத்து அரிப்புகளையும் அவர்கள் சொறிந்து கொடுத்து தங்கள் வயிறுகளை நிரப்பி வாழ்ந்தார்கள்.
அதில் ஒரு அரிப்புதான் இது.
அவன் மடையனல்ல. அவர்களும் மடையர்களல்ல. மக்களே அன்றும் இன்றும் மடையர்கள்.
இக்கூட்டத்தில் பார்ப்பனர்கள் எப்படி? How they lived? How they propsered? etc.
பார்ப்பனர்கள் மன்னர்களுக்கு ஜால்ராத்தட்டி கோயில்களைக்கட்டிக்கொண்டு, தங்களுக்கென வாழ்க்கையைத் தேடிக்கொண்டார்கள்.
இப்படி மற்றவர்கள் எழுதினால்...அவர்களுக்குத் தனிமுத்திரை குத்தப்பட்டு, தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்கள், ஒரு ஜாதியினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டியவரகளாகவார்கள். In English, politically incorrect.
இங்கே ஒரே ஒரு கதையைத்தான் சொன்னார். பெரியார் வாணாள் முழுவதும் சொன்னாரல்லவா?
அதனால்தானே அவரைப் பார்ப்ப்னருக்குப் பிடிக்கவில்லை?
நக்கிரன் அபார்ப்பனனாக இருக்க முடியாது. அவன் கற்றறிந்தவன். அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவனாதாலே அவன் அரசவை தலைமைக்கவி ஆனான். அக்காலத்தில் கல்வி பார்ப்பனருக்கே. அவர்களில் பெரும்பாலோரே புலவர்கள். அரசனுக்கு அருகில் அமரும் தகுதியுடையோராயினர்.
நக்கீரன் ஒரு தீவிர சைவன். அவன் ஆரியக்கொள்கைகளின் வழிவந்த (for e.g முருகனைக் ஸ்கந்தனாக்கி ஆரியத்தெய்வாக்கியது) கடவுளர்களை வழிபட்டவன் மட்டுமன்றி, இறைவழிபாட்டு பாடல் தொகுப்புகளும் வரைந்தவன். for e.g திருமுருகாற்றுப்படை.
எப்படி இராவணன் என்ற தமிழ்ப்பார்ப்பனனுக்கும், இராமன் என்ற வடநாட்டு சத்திரியருக்கும் நடந்த சண்டையை, இராவணன் என்ற திராவிடனுக்கும் இராமனுக்கும் நடநத் சண்டையாக மாற்றி, தப்புவாதம் புரிந்து முட்டாள்த்தனமாக, இராவணன் என்ற தமிழ்ப்பார்ப்பனனை புகழ்ந்தார்களோ பகுத்தறிவுக்காரரகள், அதே தவறை, இங்கு சங்கமித்திரன் புரிந்து, ஒரு நக்கீரன் என்றொரு தமிழ்ப்பார்ப்ப்னனுக்கு சாமரம் வீசுகிறார்.
My fair guess is as follows:
இறையனார் ஒரு பெரும்புலவராக இருந்திருக்க்கூடும். அரசனின் நன்பதிப்பைப் பெற்றிருந்தக்கூடும். எங்கே தன்னை கவிழ்த்துவிடுவாரோ எனப்பயந்து (இங்கே கம்பர்-ஒட்டக்கூத்தன் லடாய் நினைவுகூறவும். ஒருத்தனைக்கெடுத்து இன்னொருவன் வாழ்ந்தார்ன: ஆர் சோழனுக்குப் பக்கத்தில்?
இங்கே இருவரும் பார்ப்பன்ருகள். இவனை அவன் வாரியதோடு மட்டுமல்லாமல் அவன் பையனையும் கொன்னுபோட்டுட்டான் மன்னனை வைத்து! )
Here - Nakkeeran vs Iraiyanaar - was a palace intrigue. Iraiyanaar was exiled. நாடு கடத்தப்பட்டார்.
பார்ப்பனச்சூழ்ச்சி (அருள் சொல்வதற்கு நான் சொல்லிவிடுகிறேன்) வெற்றி பெற்றது.
இறையனார் ஒளிந்து வாழ்ந்தார். தருமி அவருக்கும் நக்கீரனுக்கும் நடந்த பகையை பயன்படுத்தி, பாட்டை வாங்கினான்.
It was all conspiracy. If we remove caste factor (because, frankly speaking, it appears to be far fetched), we see ego clashes between two great and influential poets.
ஏன் இறையனாரின் பிறப்பாடல்கள் இருட்டடிக்கப்பட்டன?
ஏன் திருப்பாணாழ்வாரின் பத்துப்பாடல்களே அனுமதிக்கப்பட்டன்?
இப்படியாக தமிழக வரலாற்றில் பல கேள்விகள். பதில்களை guess கூட பண்ணக்கூடாது.
Politically incorrect.
இராகவனும் அவரது கூட்டமும் பாய்ந்து நம்மைக் குதறிவிடும்.
The safer option will be:
To sweep such questions under the carpet of:
MYSTERIES OF HISTORY?
நா பண்ணண்டாவது படிக்கல அர்கனிக் பத்தி தெரியாது. ஆனா பெண்களோட கூந்தலுக்கு மணம் உண்டு. உண்டு. உண்டு. :)
பகுத்தரிவுங்கிறது ஒன்னயுமே சரியாய் தெரிஞ்சுக்காம எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிகிறது என நினைவில் கொள்க.
//பார்ப்பனனுக்கு பரிசு போவதா என்ற பார்ப்பனனல்லாத நக்கீரன் வயிற்றெரிச்சல்படுகிறான் என்றாகிறது.
நக்கீரன் உண்மையிலேயே வாதிதிருக்கிறான். த்வேஷம் எதுவும் அவனுக்கில்லை.
இந்தப் புராணத்தைப் படிக்கும் நடுநிலையாளர்களுக்கு இதில் ஹீரோ நக்கீரர்தான் என்பது நன்றாகப் புரியும். தமிழின் மீது இருந்த பற்றால் தமிழ்ப் பாடலில் குற்றம் இருந்தால் இறைவனையே குறை கூறத் தயங்க மாட்டார் அவர் என்பதைக் காட்ட வந்த கதைதான் இது. இதில் தருமி ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே. அவன் பார்ப்பனன் என்பது இவர் சொல்லித்தான் தெரியும். நக்கீரரை சிவன் "சங்கதனை கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் பாட்டில் பழுதென்பது?" என்ற சொல்வதால் நக்கீரர் பார்ப்பனர் அல்ல என்பது தெளிவு. இப்போது சொல்லுங்கள். இந்தக் கதை பார்ப்பனனை உயர்த்திக் காட்டுவதற்காகவா வந்தது?
//
வேலையற்ற பார்ப்பான் அடுத்தவங்க வேலையையும் கெடுப்பான் என்பதற்கு இந்த பதிவே ஒரு உதாரணம்.
//
ஒனக்கு என்ன வெட்டிமுறிக்கிற வேலைன்னு இதுக்கு எல்லாம் முன்னாடி வந்து பின்னூட்டம் போடும்போதே தெரியுது.
வாயின்னு ஒண்ணு இருந்தா அதை பொத்திகிட்டு இருக்கவும் தெரியணும்.
//வேலையற்ற பார்ப்பான் அடுத்தவங்க வேலையையும் கெடுப்பான் என்பதற்கு இந்த பதிவே ஒரு உதாரணம்.//
வேலையத்த வன்னியன் மரம் வெட்ட கிளம்பிடுவான்.அதுக்கு இந்த பார்ப்பன மொக்கை எம்புட்டோ மேலு!
தமிழகத்தில் கடைசியாக எஞ்சியிருந்த பார்ப்பனர்களில் பாதி பேர் வட இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக சிதறி விட்டனர். மீதி பேர் சாம்பார் வாளியும், அர்ச்சனைத் தட்டுமாக அன்றாடங்காய்ச்சிகளாய்த் திரிகின்றனர். இதில் இவர்களுக்கு எங்கே வர்ணத்தையும், மனுதர்மத்தையும் நிலைநாட்டுவதற்கு நேரமிருக்கிறது என்று தெரியவில்லை.
ஆனால் பகுத்தறிவாளர்களும், சமூகநீதிக் காவலர்களும் நிறைந்துள்ள தமிழகத்தில்தான் உலகில் வேறு எங்கும் நிகழாத அட்டூழியங்கள் தினமும் பார்ப்பனர் அல்லாதோரால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பகுத்தறிவாளர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இன்னமும் செத்த பாம்பையே அடித்துக் கொண்டிருக்கும் மர்மம்தான் விளங்கவில்லை.
chinnu said...
// //வேலையத்த வன்னியன் மரம் வெட்ட கிளம்பிடுவான்.அதுக்கு இந்த பார்ப்பன மொக்கை எம்புட்டோ மேலு!// //
வன்னியன் வச்ச மரத்தை வன்னியன் வெட்டினா - பார்ப்பானுக்கு எதுக்கு வலிக்குது?
1987 சாலை மறியல் போராட்ட்த்தின்போது ஒரேநாளில் 21 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றது. இந்த பச்சை படுகொலைகள் தொடராமல் இருக்க சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டன.
இதில் என்ன தவறு? வன்னியரின் உயிர் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?
தற்காப்புக்காக கொலையே பண்ணலாம் என்பதுதான் சட்டம். மரத்தை வெட்டக்கூடாதா?
யதிராஜ சம்பத் குமார் said...
// //தமிழகத்தில் கடைசியாக எஞ்சியிருந்த பார்ப்பனர்களில் பாதி பேர் வட இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக சிதறி விட்டனர். மீதி பேர் சாம்பார் வாளியும், அர்ச்சனைத் தட்டுமாக அன்றாடங்காய்ச்சிகளாய்த் திரிகின்றனர். // //
The HINDU, தினமலர், நீதிமன்றம் இங்கெல்லாம் உட்கார்ந்துகொண்டு எங்க உயிரை எடுக்கிறது யாருங்க?
தேவர், மள்ளர், நாடார், வன்னியர் ஆகியோர் அரச குலங்கள். இவர்களின் கீழ் இருந்தவர்கள் படிப்பு சொல்லித்தரும் நிலையில் இருந்த பார்ப்பனர்களும், ஆச்சாரிகளும். தங்களது அரசாங்கத்தை நியாயப்படுத்தவேண்டி பூஜாரிகளை உருவாக்கினார்கள்.
ஆனால், முகலாயர் காலத்திலும் பிரிட்டிஷ் காலத்தில் இந்த தேவர் மள்ளர் நாடார் வன்னியர் ஆகியோர் தங்கள் அரசாங்கத்தையும் வலிமையையும் இழந்தார்கள். புரவலர்கள் இல்லாத இந்த புலவர்கள் யார் அப்போதைக்கு வலிமையாக இருந்தார்களோ அவர்களின் கீழ் வந்தார்கள். அதாவது பிரிட்டிஷார் கீழே வேலைக்கு போனார்கள். அதனால் பிழைத்தார்கள். தாங்கள் பதவி இழந்ததையும், தங்களுக்குக் கீழ் இருந்த பிராம்மணர்கள் வலிமை பெற்றதையும் பொறுக்க முடியாதவர்கள் பிராம்மணர்கள் மீது வெறுப்பை பிரச்சாரம் செய்தார்கள். அது அருள் வரைக்கும் தொடர்கிறது.
// Jo Amalan Rayen Fernando said...
ஏன் திருப்பாணாழ்வாரின் பத்துப்பாடல்களே அனுமதிக்கப்பட்டன்?
//
லோகசாரங்க முனிவர் thirupaanaazhwaara கல்லால் காயப்படுத்திவிட்டு அரங்கன் சந்நிதிக்கு செல்கிறார்; ஆனால் அங்கு ரங்கநாதன் கதவை சாதியோடல்லாமல் பாணரை சந்நிதிக்கு அழைத்து வர காட்டலை இடுகிறார். லோகசாரங்கர் பானாழ்வாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு திருப்பானரை தனது தோள்களை ஏற்றி கொண்டு அரங்கன் சந்நிதி நோக்கி வருகிறார். அவ்வாறு வருகின்றபொழுது அரங்கனின் பாதம் முதல் தலை வரை பாடுகிறார் (பாத்து பாசுரங்கள்). பத்தாவது பாசுரத்தில் "உன்னை கண்ட கண்கள் வேறு எதையும் இனி காண கூடாது என்று பாடிய காரணத்தால் அரங்கன் ஆழ்வாரை தன்னுடன் ஐக்கியபடுத்தி கொள்கிறான். ஆகா மொத்தம் திருப்பானாழ்வார் பாடியது மொத்தம் பத்து பாசுரங்களே.
வசதிக்கேற்ப விஷயங்களை முழுங்கிட்டு பாதிய மட்டும் சொல்லுறது சுத்த அயோக்கியத்தனம்.
புராணம் என்றாலே முழுப்புளுகு! பொய் பித்தலாட்டம் தான். எல்லா புரானமுமே அண்டப்புளுகு! ஆகாசப்புளுகு! அப்புறம் என்ன அவர் பார்பனரா இவர் பார்பனரா என்று? இது மயிரைப் பிளக்கும் வேலையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
அப்படிப் பார்த்தாலும், கூந்தலின் மணம் அதாவது மனதுக்கு மகிழ்ச்சி தரும் வாசனை அது இயற்கையானதா இல்லையா என்ற கோணத்தில் தானே விவாதம் என்பது என் வாதம்.
அடிக்கடி இப்படி பார்ப்பன எதிர்ப்பு ஆதரவு என்று ஏதாவது பதிவு போட்டு, ஆஹா கிடைச்சது வாய்ப்புன்னு திட்டறதுக்குனு ஒரு கூட்டம் இருக்கே அவங்களை வெத்தலை பாக்கு வச்சு அழைக்காத குறையா அழைச்சு அவங்க அபத்தமாவும் ஆதாரமில்லாமலும் ரொம்ப தெரிஞ்சா மாதிரி மேலும் திட்டிட்டு போவதற்கு எங்கெல்லாமோ திட்டறத வந்து எங்க வீட்டுக்குள்ளேயே திட்டு என்பது மாதிரி இந்த logic எனக்கு புரியலை.
நீங்க இங்கே அந்த சூழலுக்கு வியர்வை வாசனை என்பதை ரம்மியமான வாசனை என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கீங்க என்பது புரியுது.
ஆனா அந்த காலத்தில் அது பற்றிய அறிவு இல்லை என்று சொல்லுவது ஏற்கக் கூடியதா
வன்னியன் வச்ச மரத்தை வன்னியன் வெட்டினா - பார்ப்பானுக்கு எதுக்கு வலிக்குது?//
வன்னியன் வச்ச மரம்னு பாத்து பாத்து வெட்டினிர்களா என்ன ?
//இந்த பச்சை படுகொலைகள் தொடராமல் இருக்க சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டன.//
மரங்களை வெட்டினால் போலீஸ் சுடாதா ?
//வன்னியரின் உயிர் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?//
வன்னியர் உயிர் மட்டுமல்ல அன்னியர் உயிரும் இளப்பமல்ல!
//தற்காப்புக்காக கொலையே பண்ணலாம் என்பதுதான் சட்டம். மரத்தை வெட்டக்கூடாதா?
//
மரம் என்ன உம்மை கொல பண்ணவா வந்தது? அது பாட்டுக்கு தேமேன்னு ஓரம்மா நிக்குது
மொத்தத்தில், இறைவனே உண்மைக்கு புறம்பாக வந்தாலும் உண்மையை கூறுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையை விட்டு விட்டார் சங்க மித்திரன். இது தான் அரசனின் வேலையா என்பவர் இன்றைய அரசர்கள் கதை வசனம் எழுதுவதை பற்றி என்ன கூறியிருப்பார்? பெரியார் வழியில் சமூக தொண்டு என்றா?
// அருள் said...
1987 சாலை மறியல் போராட்ட்த்தின்போது ஒரேநாளில் 21 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றது.//
என்ன காரணத்துக்காக சாலை மறியல் செஞ்சீங்கோ. அதை சொல்லாம வசதியா மறைச்சிட்டு மத்தத மட்டும் சொல்லுறீங்க.
//தற்காப்புக்காக கொலையே பண்ணலாம் என்பதுதான் சட்டம். மரத்தை வெட்டக்கூடாதா?//
மரமா உங்கள கொலை செய்ய வந்துச்சு ? அப்பறம் எதுக்கு பசுமைதாயகமுன்னு ஒரு இயக்கம் ? ஒருவேளை அதுல எதுவும் உள்குத்து இருக்குமோன்னு உங்க வாதம் சந்தேகத்த கிளப்புது)
//அருள் said...
தற்காப்புக்காக கொலையே பண்ணலாம் என்பதுதான் சட்டம். மரத்தை வெட்டக்கூடாதா?
திருடன் ஒருத்தன் திருட போறான். உடமைக்கு சொந்தக்காரன் அத தடுத்து அவனையும் அவனதும் உடமையையும் காபாத்திக்கிற நோக்கத்தோட திருடன காயபடுத்துறான். இந்த போராட்டத்துல திருடன் தற்காப்புக்காக உடமைக்காரன கொன்னுட்டா அதுக்கு பேரு கொலை. நீங்க பண்ணுனதும் அதான்.
-மதுரைக்காரன்
நீதிமன்றம் இங்கெல்லாம் உட்கார்ந்துகொண்டு எங்க உயிரை எடுக்கிறது யாருங்க?//
K.G. பாலகிருஷ்ணன், தினகரன் போன்றோர் எல்லோரும் பார்ப்பனர்கள் என்றால் நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன்.
ஹிந்துவிற்கு கழகப் புகழும், கம்யூனிஸப் புகழும் பாடுவதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கிறது. தினமலர் தினமும் அனைவருக்கும் வர்ணாஸ்ரமத்தையும், மனுதர்மத்தையும் புகட்டுவதாகத் தெரியவில்லை. உங்களைப் போன்ற பெரும்பான்மையோருக்குத்தான் தீக்கதிர், முரசொலி, மற்றும் வீரமணியினுடைய சமூகநீதி காக்கின்ற பத்திரிக்கைகளெல்லாம் இருக்கின்றனவே? அதையெல்லாம் வைத்து சமூகத்தை சீர்தூக்கி நிறுத்தலாமே?
அய்யகோ,
இந்த அரைகுறை இலக்கிய வியாதிகளின் தொல்லை தாங்க இயலவில்லையே! திரைப்படத்தைப் பார்த்து, அதில் வரும் கற்பனை கலந்த காட்சிகளைப் பார்த்து அதையே உண்மையெனக் கருதி விவாதக் களத்தில் நுழைகின்றனரே!முதலில் இவர்கள் திருவிளையாடற் புராணம் படித்திருப்பார்களா? அப்படியே படித்தாலும் யார் எழுதிய புராணத்தைப் படித்திருப்பார்கள்? பரஞ்சோதி முனிவன் இயற்றியதா, அல்லது பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றியதா?
அதையெல்லாம் முழுமையாகப் படித்திருந்தால் இலக்கியத்துக்கொவா சாரமில்லாத இவ்விவாதத்தை புறந்தள்ள அல்லவா செய்வார்கள்? பார்ப்பானாவது, பரதேசியாவது.... அய்யோ, அய்யோ...
எதற்கும் கீழ்கண்ட சுட்டியில் உள்ள தொடரை சங்கமித்திரர்கள் படித்துக் கொஞ்சம் இலக்கியத் தெளிவும் அறிவும் பெறுவார்களாக!
http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=115&cid=45
- அருள் குமரன்
//வசதிக்கேற்ப விஷயங்களை முழுங்கிட்டு பாதிய மட்டும் சொல்லுறது சுத்த அயோக்கியத்தனம்//
கன்வர்சு!
நான் வைணவசரித்திரத்தை எழுதினால், டோண்டு ராகவன்:
‘நீ வேற ஆளு...எங்க மதத்தைப்பற்றி எழுதாதே!’
என்று சொல்லி விடுகிறார் இல்லையா? ஏன்?
நிறைய பேரு அக்னிகோத்திரம் தாத்தாச்சாரியாரை (இங்கு எழுதும் கோவி கண்ணன் உட்பட) படிச்சிட்டுத்தான் எழுதிறாங்க.
நான் அவரைப்படிக்கல்லா.
பூர்வாச்சாரியர்கள் என திருநாமமிட்டு அழைக்கப்படுபவர்களை படிச்சிட்டுத்தான் எழுத்றேன்.
யதிராஜசம்பத்குமார், கிருஸ்ணமூர்த்தி, டோண்டுக்கு எல்லாம் சேர்த்து எழுதிய பதிலை ஏன் தடுத்தார்?
History is dead. So lets not rake up the past. Ok.
But the lessons of history should be learnt.
Have Iyengaars (not all included. I include people like dondu only) learnt?
Why did Dondu raagavan stop me when I charged him, yathiraja sampath kumar and Krishnamoorthu with insult to puurvaachaariyaars? They gave caste to them.
How is Dondu Raagavan eligible to call himself an iyengaar when he worships maariamman?
When Srivaishanvam that flew from Azvaars and enthroned by Poorvaachaariyaars categorically say 'There is no caste in our religion',
HOW CAN DONDU RAAGAVAN CALL HIMSELF A FOLLOWER OF THAT RELGION IF HE SAYS HE BELIEVES IN CASTES?
Remember:
You are either a Srivaishnava or an Iyengaar (the caste people)
You cant be both.
Choose yours.
If you choose caste, write about Thiruppaannaazvaar or poorvaachaariyaars - as an intellectual or historical debate, just as I am doing.
If I am not eligible to talk about them, Dondu Raagavan and his acolytes here, are also not eligibel to talk about them. Because, the simple and obvious fact is that SRIVAISHNAVISM IS A RELIGION IN ITSELF.
I am not one in it. You are not one in it. They why do you stop me?
//தங்களுக்குக் கீழ் இருந்த பிராம்மணர்கள் வலிமை பெற்றதையும் பொறுக்க முடியாதவர்கள் பிராம்மணர்கள் மீது வெறுப்பை பிரச்சாரம் செய்தார்கள். அது அருள் வரைக்கும் தொடர்கிறது.//
அனானி!
மக்களை மக்களாகத்தான் பார்க்கவேண்டும்.
மக்களில் ஒரு பிரிவினர் அதிகாரவர்க்கத்தோடு கூட்டுசேர்ந்து - by hoot or crook - நலம் பெற்று வாழும்போது, பிறமக்கள் காழ்ப்புணர்ச்சியும் மனவேதனையும் heart burning படுவது இயல்பு.
SC/ST/OBCக்கு இடஒதுக்கீட்டுப்பற்றி ஒட்டுமொத்தமாக தமிழ்பார்ப்ப்னர்கள் heart burning கொள்கிறார்கள். இல்லயா/
அதே...அதே.
நான் இங்கு மட்டுமல்ல, எல்லாவிடங்களிலும் எழுதிவருவதென்னவென்றால்,
பார்ப்பனதுவேசம் என்பது ஒரு justifible reaction from others based on historical events.
Periyaar was just a conveyer belt.
This will go off as times moves on and society gets evened.
Or,
this will get reversed - the reverse hatred - if others get more and more, and some others like paarppanars get less and less.
History is always in flux.
New events, new conclusions.
But I dont think paarppnars can be cowed down. They will neutrailse the effects by other means. I am not referring to diaspora. For, the more they go out, the more they stay put here.
The neutralisation will take place - indeed it does - by reducing government posts, by outsourcing more and more, privatisations.
Within government itself, the power of brahmins work in subtle and innumerable ways not visible to arul. Arul, just have a glance at the secretary level posts in Government of India, and CMD's of Public Sector Banks. You know their power. If you dont know, ask Mr Devasahayam, IAS (Retd).
Whatever Arul does, or however much he cries, in the ulimtate analysis, பார்ப்பன சூழ்ச்சி வெல்லும்.
//நக்கீரரை சிவன் "சங்கதனை கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் பாட்டில் பழுதென்பது?" என்ற சொல்வதால் நக்கீரர் பார்ப்பனர் அல்ல என்பது தெளிவு//
அனானி!
I want to regale you with some reading.
நக்கீரரின்: சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரனாருக்கு ஏது குலம்’
(although it is APN's)
is used by the fishermen of Tuticorin, TN and KK districts.
அவர்களின் வெப்சைச்ட்டில் இதைச்சுட்டிக்காட்டி,
நக்கீரர் ஒரு மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர் என்கிறார்கள்.
‘சங்கறுப்பது’ என்றால்
சங்கு குளித்தல் அதாவது கடலில் சங்குகள் எடுத்து, அவற்றை அறுத்து ஆபரணக்கள் செய்வது மீனவர்களிள் தொழிலாகும்.
பாண்டியர்கள் கால்த்தில் அது தூத்துக்குடி மாவட்டத்தொழிலாகும்.
Interesting, isnt?
Virutcham!
You are willingly blind to the basic theme of Sangkamithran: namely, All puranaic stories were written with the basic motive of promoting brahmins in society.
Whether the charge is true or false, is for Dondu Raagavan and other brahmin lovers to say. He dodges it, by sidetracking it to the story element of pandian's doubt.
Attaaiaampaatti ambi has made correct observations. You may follow his e.g
"All such puranaas are fraudulent stories. No need to attach any significance'
This line will take the winds out the sails of Sangkamithran.
Why dont you take that line?
I wont take any line: because I am an observer only.
'அப்பறம் எதுக்கு பசுமைதாயகமுன்னு ஒரு இயக்கம் //
’’பொங்கு தமிழ்’’ என்ற இயக்கமும் இராமதாசு நடத்திவருகிறார். அஃது மூன்றுநாள் விழா. இரண்டாம் நாளின் காலை சைவநாயன்மார்களுக்காகவும், மாலை ஆழ்வார் பாசுரஙகளுக்காக்வும் ஒதுக்கப்படுகிறது.
மற்ற்நாட்க்ள் பிற் வழிபாட்டுக்கு.
இது தெரியுமோ?
அருள் கூட சொல்லவில்லை. நான் சொல்கிறேன்.
I have attended the பொங்குதமிழ் விழா.
Jo Amalan Rayen Fernando said...
// // Arul, just have a glance at the secretary level posts in Government of India, and CMD's of Public Sector Banks. You know their power. If you dont know, ask Mr Devasahayam, IAS (Retd). // //
நடுவண் அரசில் சுமார் 36% க்கும் மேலான 'துறைச் செயலாளர்' பதவிகளில் பார்ப்பனர்கள் மட்டும் இருப்பதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன.
பார்ப்பனர்களின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் இது 1200 % அதிகம்.
மீதி இடங்களையும் அதிகமாக ஆக்கிரமித்திருப்போர் இதர உயர்சாதியினர்தான்.
திரு. தேவசகாயம் IAS அவர்களை நான் நேரடியாக அறிவேன். எப்போதும் அவருடன் தொடர்பில் இருக்கிறேன்.
Jo Amalan Rayen Fernando said.
// //’’பொங்கு தமிழ்’’ என்ற இயக்கமும் இராமதாசு நடத்திவருகிறார். அஃது மூன்றுநாள் விழா. இரண்டாம் நாளின் காலை சைவநாயன்மார்களுக்காகவும், மாலை ஆழ்வார் பாசுரஙகளுக்காக்வும் ஒதுக்கப்படுகிறது.
மற்ற்நாட்க்ள் பிற் வழிபாட்டுக்கு. இது தெரியுமோ?
அருள் கூட சொல்லவில்லை. நான் சொல்கிறேன். I have attended the பொங்குதமிழ் விழா.// //
தமிழ் இசைதான் இந்தியாவின் மூத்த இசைமரபு.
சிலப்பதிகாரம் மிகச்சிறந்த தமிழிசை நூல். தமிழிசை மூவர் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் ஆகியோராகும்.
ஆனால் தமிழிசையை திருடி, கருநாடக இசை என்று பெயர்வைத்து - காலத்தால் பின்னால் வந்த தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரை இசை மும்மூர்த்திகள் என்று கதைவிட்டு - கடைசியில் சமற்கிருதத்திலும், தெலுங்கிலும் பாடப்படும் கருநாடக இசை உயர்ந்தது, தமிழ் இசை தாழ்ந்தது என்று பார்ப்பனர்கள் கட்டுகதை விடுகின்றனர்.
இதனை தூக்கிப்பிடிக்க மக்கள் பணத்தில் அரசாங்கம் திருவையாற்றில் வெட்கம்கெட்ட 'தியாகய்யர்' விழாவை வேறு நடத்துகிறது.
இந்த அநீதியை எதிர்த்து மருத்துவர் இராமதாசு தொடங்கியதுதான் 'பொங்குதமிழ் பண்ணிசை' விழா.
//Virutcham!
You are willingly blind to the basic theme of Sangkamithran: namely, All puranaic stories were written with the basic motive of promoting brahmins in society.//
ரொம்ப சந்தோசம். இதையே சொல்லிக்கிட்டு திரியுங்க. இப்போ செந்தமிழ் மாநாட்டில் எந்த இலக்கியங்கள் எல்லாம் முன்னிருதப்படுதுன்னு பார்ப்போம்.
புராணங்கள் கொஞ்சம் தெரிந்த ஆத்திக நாத்திக எல்லா வாதி களுக்கும் ஒரு விஷயம் யாரும் சொல்லாமலே தெரியும். அது என்ன அப்படீன்னா
புராணங்களில் முக்கிய கதா பாத்திரமாக சொல்லப் படும் நாயகர்களும் நாயகிகளும் துணை பாத்திரங்களும் எல்லா வகை மக்களையும் உள்ளடக்கியே வருகிறது.
க்ஷத்ரியனான ராமன், க்ஷத்ரியர்களால் இகழப்படும் இடையன் கிருஷ்ணன், அதற்கும் முன் மிருக அவதாரங்கள், தக்ஷனால் அவமதிக்கப்படும் சுடுகாட்டு சிவன், இப்படி எல்லா மட்டத்திலும் உள்ள எல்லா மக்களையும், ஏன் எல்லா ஜீவ்ராசிகளையுமே கூடவே இயற்கையையும் அதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் புராணங்கள் உங்கள் கண்களுக்கு இப்படித் தான் தெரியும் என்றால், அதற்குப் பெயர் பகுத்தறிவு என்றால்
இந்த மந்தரித்து விட்ட ஆடு அல்லது அதே போல் மூளை சலவை செய்யப் பட்ட மனிதர்கள் போல் இப்படியே சொல்லிக் கொண்டு இருங்கள்.
இதில் நஷ்டம் பிராமணனுக்கு அல்ல.
எல்லா தரப்பு மக்களுக்கும் கொடுக்கப் பட்ட உயர்வான இடங்களை இல்லை என்று சொல்லிக் கொள்வதாலும் , பிராமணன் தவிரே மன்னர்கள் உட்பட அனைவரும் சுய சிந்தனை அறிவு இல்லாமல் பிராமணர்கள் சொல்வதைக் கேட்டு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு எதோ திடீரன்று மூளை வந்து முழித்துக் கொண்டு விட்டது போல் இப்படி சொல்லிக் கொள்வதாலும் நஷ்டம் பிராமணனுக்கு அல்ல
என்பதை புரிந்து கொள்ளும் அடிப்படை .....
ஜோ அவர்களே
தமிழை தயவு செய்து இப்படி இவ்வளவு மோசமா தட்டச்சு செய்யாதீங்க.
---
இப்போ செம்மொழி மாநாடை ஒட்டி பெயர்கள்(பெயர் பலகைகளை ) தமிழ்படுத்தப் படும் வேலைகள் விரைவாக நடைபெறுவதாக கேள்விப்படுகிறேன்.
மித்திரன், நிதி, கிரி, தயா, கருணா ....
இப்படி ஒரு பெரிய பட்டியல் போடலாம். இதெல்லாம் தமிழ் பெயர்களா ?
Thanks for uploading all that I wrote.
I now cry off.
My dear 'Periyar' bhakthas,
Please read the following articles by D.A. Jospeh, who may not be a brahmin by birth but considered to be a 'Sri Vaishnavite' by virtue and life.
http://www.dajoseph.com/PDFs/Non-brahmin-1.pdf
http://www.dajoseph.com/PDFs/Non-brahmin-2.pdf
http://www.dajoseph.com/PDFs/Non-brahmin-3.pdf
http://www.dajoseph.com/PDFs/Non-brahmin-4.pdf
// Jo Amalan Rayen Fernando said...
Why did Dondu raagavan stop me when I charged him, yathiraja sampath kumar and Krishnamoorthu with insult to puurvaachaariyaars? They gave caste to them.
Did u insulted the poorvaachaariyars ?
//நடுவண் அரசில் சுமார் 36% க்கும் மேலான 'துறைச் செயலாளர்' பதவிகளில் பார்ப்பனர்கள் மட்டும் இருப்பதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன.// ஒதுக்கீடும் அரசு மற்றும் சமுதாய ஆதரவுமெ இல்லாமலேயே இவ்வளவு பார்ப்பனர்கள் புத்தியைக் கொண்டு பிழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தும் ஓசியில் படிக்கெ வெச்சும் புத்தியைக் கொண்டு பிழைக்கத் தெரியவில்லை என்றால் அதற்கு பாப்பானைப் பழிப்பானேன்?
//Did u insulted the poorvaachaariyars ?//
எப்படி அது டோண்டு ராக்வனின் பதிவில் அரங்கேற்றப்பட்டது மற்றும் ஆரால்? என்று எழுதட்டமா?
டோண்டு சரியென்றால் தயார்.
hayyram said...
// //ஒதுக்கீடும் அரசு மற்றும் சமுதாய ஆதரவுமெ இல்லாமலேயே இவ்வளவு பார்ப்பனர்கள் புத்தியைக் கொண்டு பிழைத்திருக்கிறார்கள்.// //
இது ஒரு கடைந்தெடுத்தப் பொய்.
அரசு ஆதரவும், பல துறைகளில் 100% இடஒதுக்கீடும் பார்ப்பனர்களுக்கு குறைந்தபட்சம் கடந்த 2000 வருடங்களாக அளிக்கப்பட்டு வந்துள்ளது.
OBC பிரிவினருக்கான அரைகுறை இடஒதுக்கீட்டின் காலம் வெறும் 20 ஆண்டுகள்தான்.
பார்ப்பனர்கள் புத்தியால் பிழைப்பதாக கூறுவது பித்தலாட்டம்.
// கடந்த 2000 வருடங்களாக அளிக்கப்பட்டு வந்துள்ளது.// அடக்கருமமே! ஏதாவது சொல்லனும்ங்கறதுக்காக கேவலமா சம்மந்தமே இல்லாம பேசுறீங்கன்னு நல்லா தெரியுது. இதெல்லாம் ஒரு பொழப்பு!
@கோ.வி. கண்ணன்:
கோ.வி. திருவிளையாடல் படத்தைச் சரியாகப் பாருங்கள். நக்கீரன் பாடுகிற பாட்டிலேயே எல்லா விளக்கமும் இருக்கிறது
"சங்கறுப்பர் எங்கள் குலம், சங்கரனார்க் ஏது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரணே உன் போல் இரந்துண்டு வாழோம்"
இதுக்கு முன்னாடி சிவன் ஒரு பாட்டப் படிப்பாரு "அங்கம் புழுதி பட அரிவாளில் நெய் பூசி சங்கதனைக் கீர் கீர் என்றறுக்கும் நக்கீரா, நீயோ என் பாட்டின் பிழை கண்டாய்" என்று வரும்.
நக்கீரர் செம்படவர் எனப்படும் கடலோடும் சாதியைச் சேர்ந்தவர். சங்கு வலம்புரியா இடம்புரியா என்பதைத் தெரிந்து கொள்ள அதன் நுனிப் பகுதியை அறுத்துப் பார்க்க வேண்டும். கடலுக்குள் நீந்தும் போது உப்பு நீரால் உடல் பாதிப்படையாமல் இருக்க நெய் பூசிக் கொள்ள வேண்டும். அதைத்தான் சிவனின் பாடலில் அறிய முடியும். ஆக சாதியை முதலில் இழுத்தது சிவன் தான்.
பதில் சொல்லும் போது நானாவது சங்கை அறுத்துப் பார்க்கிற செம்படவன். சொல்லிக் கொள்ள எனக்கென்று ஒரு சாதி இருக்கிறது. பிச்சையெடுத்து உண்ணும் சிவனே உனக்கு என்ன ஜாதி? என்று மறுத்துரைக்கிறான். இது தான் அந்தக் காட்சியின் சாரம்.
மயிறுக்குப் பொறாத ஒரு விஷயத்துக்கு என்னையும் இவ்வளவு நீளப் பின்னூட்டம் போட வைத்துவிட்டார் டோண்டு ராகவர். :)
அய்யா நக்கீரர் க்ரீமி லேயர் ஓ பி ஸி யா அல்லது க்ரீமி லேயர் எஸ் சி யா,எஸ் டி யா?
hayyram said...
// //
// கடந்த 2000 வருடங்களாக அளிக்கப்பட்டு வந்துள்ளது.// அடக்கருமமே! ஏதாவது சொல்லனும்ங்கறதுக்காக கேவலமா சம்மந்தமே இல்லாம பேசுறீங்கன்னு நல்லா தெரியுது. இதெல்லாம் ஒரு பொழப்பு!//
// //
அடக்கருமமே? பார்ப்பன வரலாறே கருமம்தான்.
சொத்துவைத்துக்கொள்ளும் உரிமை சூத்திரனுக்கு இல்லை என்று சொல்லி, மக்களின் சொத்தையெல்லாம் பார்ப்பனர்கள் அபகரித்ததற்கு எத்தனை ஆதாரம் வேண்டும்?
ஆற்றுப்பாசன, ஏரிப்பாசன நிலத்தையெல்லாம் கோயில் பெயரில் எழுதிவைத்து பார்ப்பான் பலகாலமாக கொழுக்கவில்லையா?
போரில் பார்ப்பானை, பெண்களை, பசுமாட்டை கொல்லக்கூடாதென்று பாதுகாப்பு பார்ப்பானுக்கு.
எங்க ஆளுங்க சண்டைபோட்டு வெற்றிபெற்றால் அதனைக்கொண்டாட மன்னன் நிலத்தை 'பிராமதேயமென்று' எழுதிவைத்தது பார்ப்பானுக்கு.
எந்த ஒரு இனமும் முன்னேற 'கல்வி' அடிப்படை - ஆனால் சூத்திரனுக்கு கல்வி கூடாதென்று இராஜாஜி காலம் வரை நீங்கள் கொடுஞ்சதி செய்யவில்லையா?
2000 வருடங்களாக என்ன நடந்தது என்று வரலாற்றை புரட்டிப்பாருங்கள். யாருடைய பிழைப்பு கேவலம் என்று அப்போது தெரியும். உங்களுடைய கொழுப்புக்கு பின்னால் இருப்பது எம்மக்களின் உழைப்பு.
சான்ஸ் கிடைச்சா சூத்திரன் வாயில் மலம் திணிக்கும் வன்னிய ஜாதி வெறியன் அருளெல்லாம் சூத்திரனுக்கு வக்காலத்து வாங்குறான்....நேரம் டா...
//சான்ஸ் கிடைச்சா சூத்திரன் வாயில் மலம் திணிக்கும் வன்னிய ஜாதி வெறியன் அருளெல்லாம் சூத்திரனுக்கு வக்காலத்து வாங்குறான்....நேரம் டா//
ஆ அருள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரா?ஃபோட்டோவைப் பாத்தா ஒரு சராசரி ரெள்டி போல் தானே இருக்கிறார்?
//வாயில் மலம் திணிக்கும் வன்னிய ஜாதி வெறியன் அருளெல்லாம் //
முணுக்கென்றால் எம் மக்கள் வாயில் மலம் திணிக்கும்,எம் குலப் பெண்டிரை வன் புணர்ச்சி செய்யும் வன்னிய ஜாதி வெறியர்கள் மனிதர்களா?செய்கையைப் பார்த்தால் பன்னியர்கள் என்றல்லவா சொல்லத் தோன்றுகிறது.என்று தான் எம் மக்கள் இந்த வெறியர்களிடமிருந்து விடுதலை பெறுவர்?
Anonymous said...
// //சான்ஸ் கிடைச்சா சூத்திரன் வாயில் மலம் திணிக்கும் வன்னிய ஜாதி வெறியன் அருளெல்லாம் சூத்திரனுக்கு வக்காலத்து வாங்குறான்....நேரம் டா...// //
பார்ப்பானின் அகராதியில் BC/MBC/SC/ST/சிறுபான்மையினர் எல்லோரும் சூத்திரர்கள்தான். பார்ப்பானுக்கு எல்லோரும் தீண்டத்தகாதவர்கள்தான். ஆனால், இந்த பெரும்பானமைக்கூட்டம் ஒன்றுசேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக - எல்லாசாதிகளுக்கு இடையேயும் ஏற்றத்தாழ்வை திட்டமிட்டு கட்டிவைத்திருக்கிறார்கள்.
வன்னியர்கள் தலித்துகளை தாழ்ந்தவர்கள் என்று நினைத்தால் அதற்கு பார்ப்பனீயமே அடிப்படைக்காரணம். இந்த மாயையை அகற்றவேண்டும் என்பதற்காகத்தான் பா.ம.க 'வன்னியர் - தலித் ஒருத்தாய் மக்கள்' என்கிற பரப்புரையை பலகாலமாக செய்து வருகிறது.
யார் வாயில் யார் மலம் திணித்தது? வன்னியர்கள் அப்படிப்பட்ட இழிசெயலை செய்தது இல்லை. இத்தகைய கோயபல்ஸ் கட்டுக்கதை பிரச்சாரத்தை ஆதிக்க சாதிவெறியர்கள்தான் செய்கின்றனர். இந்த பின்னூட்டங்களில் வன்னியர்களுக்கு எதிராகப் பேசும் பலரும் ஆதிக்க சாதிவெறியர்கள்தான்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் வன்னியர்கள் வசிக்கும் தெரு வழியே தலித் ஒருவரின் இறுதி ஊர்வலம் செல்லக்கூடாது என்ற போது - அங்கு தானே நேரில் சென்று தன் தோளில் பிணம் சுமந்தார் எங்கள் மருத்துவர் அய்யா.
பா.ம.க'வுக்கு முதல்முதலாக ஒரு அமைச்சர் பதவி கிடைத்தபோது அதை தலித் ஒருவருக்கு கொடுத்தார்.
இப்போதும் பா.ம.க'வின் பொதுச்செயலாளர் ஒரு அருந்ததியர்தான்.
தலித் மக்கள் வன்னியர்களை விட கீழான நிலையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு விடுதலை கிடைக்காமல் வன்னியர்களுக்கும் வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தும் விதமாகத்தான் பா.ம.க'வின் கட்சிக்கொடியில் முதல் நிறமாக 'அண்ணல் அம்பேத்கரின்' நீல நிறம் வைக்கப்பட்டுள்ளது.
தமது ஆதிக்கமும் சுரண்டலும் தொடர வேண்டுமானால், அதற்கு வன்னியர்களும் தலித்துகளும் அடித்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆதிக்க சாதிகளின் கொடுங்கனவை நாங்கள் தகர்ப்போம்.
//உங்களுடைய கொழுப்புக்கு பின்னால் இருப்பது எம்மக்களின் உழைப்பு// இவ்வளோ நோனாவட்டை பேசுறியே! உங்க ஜாதிக்காரனெல்லாம் எம்பியாகி கொள்ளையடிக்கற அளவு வளர்ந்தாகிவிட்டது. அதனால் இனி ஜாதி ரீதியான ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லத் தயாரா?
@அருள் படையாச்சி
நானும் பொறுமையாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன் எவ்வளவு தூரத்துக்குத்தான் புளுகிறீர்கள் என.
தலித் கிறித்துவருக்கு வன்னிய கிறித்துவர்கள் செய்யும் கொடுமைகள் பற்றிப் பார்க்க: http://dondu.blogspot.com/2010/06/blog-post_09.html
http://thoughtsintamil.blogspot.com/2008/03/blog-post_31.html
http://govikannan.blogspot.com/2008/04/blog-post_26.html
இன்னும் பல உரல்களை கொடுத்துக்கொண்டே போகலாம்.
மேலும் தன் மகனுக்கு ராஜ்ய சபா சீட் வாங்கும் ஒற்றை அஜெண்டாவுடன் அலையும் மருத்துவர் மாலடிமையை இன்னுமா நம்புகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //
நானும் பொறுமையாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன் எவ்வளவு தூரத்துக்குத்தான் புளுகிறீர்கள் என.
// //
நான் என்னத்த புளுகினேன் - யார் வாயில் யார் மலம் திணித்தது? வன்னியர்கள் அப்படிப்பட்ட இழிசெயலை செய்தது இல்லை' என்றென். இதில் புளுக என்ன இருக்கிறது?
சாதி ஏற்றத்தாழ்வு என்பதே பார்ப்பனர்கள் அவர்களின் சுயநலத்துக்காக உண்டாக்கியது. தலித்துகளுக்கு மேல் இருப்பதாக வன்னியர்கள் நினைத்தால் - பார்ப்பான் எல்லோருக்கும் மேலே இருந்து ஆட்டிப்படைக்கிறான்.
இதில் எந்த இடத்தில் நான் 'வன்னியர்கள் செய்யும் தவறை' ஆதரித்தேன்? வன்னியர்கள் தலித்துகளை தவறுதலாக எதிரிகள் போன்று நினைப்பதை விட்டுவிட்டு - தமது கோபத்தை ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக காட்டவேண்டும் என்பதுதான் என் கருத்து.
// //
மேலும் தன் மகனுக்கு ராஜ்ய சபா சீட் வாங்கும் ஒற்றை அஜெண்டாவுடன் அலையும் மருத்துவர் மாலடிமையை இன்னுமா நம்புகிறீர்கள்?
// //
இது பார்ப்பனர்களின் இன்னொரு 'கோயபல்ஸ்' அண்டப்புளுகு -திட்டமிட்ட கட்டுக்கதை: மருத்துவர் இராமதாசு தன் மகனுக்காக மாநிலங்களவை இடம் கேட்டார் என்பதற்கு உங்களால ஒரேஒரு ஆதாரம் காட்டமுடியுமா?
உங்களது பார்ப்பன ஊடகங்கள் எழுதுவதுதான் உண்மை என்று ரொம்ப நாட்களுக்கு ஏமாற்ற முடியாது.
"மாலடிமையை"
கரணம் தப்பினால் மரணம்.
கால் விட்டால் கன்றாவியாகிவிடும் இந்தப் பெயரை அவரே அவருக்கு வைத்துக்கொண்டாரா இல்லை நீங்கள் அவருக்கு வைத்தீர்களா ?
//
பா.ம.க 'வன்னியர் - தலித் ஒருத்தாய் மக்கள்' என்கிற பரப்புரையை பலகாலமாக செய்து வருகிறது.
//
அது வெறும் "பரப்புரை" தான் என்று ஒத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி அருள் வன்னிய ஜாதி அபிமானி ஐயா.
//மருத்துவர் இராமதாசு தன் மகனுக்காக மாநிலங்களவை இடம் கேட்டார் என்பதற்கு உங்களால ஒரேஒரு ஆதாரம் காட்டமுடியுமா?//
ஹூம் பைத்தியம் முத்திடுத்து அருளுக்கு.
டோண்டு ராகவன்
Anonymous said...
// //
//
பா.ம.க 'வன்னியர் - தலித் ஒருத்தாய் மக்கள்' என்கிற பரப்புரையை பலகாலமாக செய்து வருகிறது.
//
அது வெறும் "பரப்புரை" தான் என்று ஒத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி அருள் வன்னிய ஜாதி அபிமானி ஐயா.
// //
பிரச்சாரம் என்கிற வடமொழி வார்த்தையின் தமிழ்வடிவம்தான் பரப்புரை - குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம், தேர்தல் பிரச்சாரம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது போன்றுதான் "பா.ம.க 'வன்னியர் - தலித் ஒருத்தாய் மக்கள்' என்கிற பரப்புரையை பலகாலமாக செய்து வருகிறது" என்று சொன்னேன். இதில் என்ன தவறுகண்டீர்கள்?
பரப்பு என்றால் "ஒரு செய்தி, கொள்கை, சிந்தனை போன்றவற்றை பலரும் அறிந்துகொள்ளும் வகையிலோ ஏற்றுக்கொள்ளும் வகையிலோ பரவச்செய்தல்" என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
இதில் ""வெறும் "பரப்புரை" தான்"" என்பதை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்?
அப்படியானால், இந்த நாட்டில் அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் மேற்கொண்டதெல்லாம் வெறும் "பரப்புரை" தானா?
டோண்டு ராகவன் Said...
// //
//மருத்துவர் இராமதாசு தன் மகனுக்காக மாநிலங்களவை இடம் கேட்டார் என்பதற்கு உங்களால ஒரேஒரு ஆதாரம் காட்டமுடியுமா?//
ஹூம் பைத்தியம் முத்திடுத்து அருளுக்கு.
// //
நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் நேரடியான பதில் இல்லை.
கடந்த 30.5.2010 அன்று தி.மு.க'வின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிரைவேற்றப்பட்டதீர்மானத்தில் "நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க'வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க'வுக்கு ஒரு நாடாளுமன்ற பதவி என்றால் அது மருத்துவர் அன்புமணி அவர்களுக்குதான் என்று நீங்களாக முடிவு செய்தது எப்படி?
பா.ம.க'வினரோ, மருத்துவர் இராமதாசு அவர்களோ எந்த இடத்தில், எப்போது மருத்துவர் அன்புமணிக்காக நாடாளுமன்ற பதவி கேட்டார்கள்?
உங்களால ஒரேஒரு ஆதாரம் காட்டமுடியுமா?
//
குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம், தேர்தல் பிரச்சாரம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது போன்றுதான் "பா.ம.க 'வன்னியர் - தலித் ஒருத்தாய் மக்கள்' என்கிற பரப்புரையை பலகாலமாக செய்து வருகிறது" என்று சொன்னேன்.
//
பிரச்சாரம் செய்வதுக்கும் அதை கடைபிடிப்பதற்கு நிறைய வேறுபாடு உள்ளது. அதெல்லாம் பெரியார் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்த சோனகிரிகளுக்குப் புரிய வாய்ப்பு இல்லை.
பிரச்சாரம் என்பதையே பரப்புரை என்று தமிழ் படுத்தும் நீங்கள், எப்படி ராமதாசு/மாலடிமை ஐயா தன் பேத்திகளுக்குத் தூய தமிழ் பெயர்களான சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என்று பெயர் வைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் ?
பரப்புரைக்கும் அதைக் கடைபிடிப்பதற்கு நிறைய வேறுபாடு உள்ளது. ஏற்கனவே சொன்னது போல் பெரியார் பரப்புரையை நம்பும் உங்களைப் போன்ற ஏமாந்த சோணகிரிகளுக்கு அதெல்லாம் புரியப்போவதில்லை.
//ஏமாந்த சோணகிரிகளுக்கு அதெல்லாம் புரியப்போவதில்லை.//
ஜாதி வெறி பிடித்து அலையும் அருள் போன்றவர்கள்,ஏமாந்த சோணகிரிகள் அல்லர்.கடைந்தெடுத்த அயோகய சிகாமணிகள்.
//
பா.ம.க'வினரோ, மருத்துவர் இராமதாசு அவர்களோ எந்த இடத்தில், எப்போது மருத்துவர் அன்புமணிக்காக நாடாளுமன்ற பதவி கேட்டார்கள்?
உங்களால ஒரேஒரு ஆதாரம் காட்டமுடியுமா?
//
ஆதாரம் 1:
http://timesofindia.indiatimes.com/city/chennai/DMK-accepts-PMK-as-ally-but-refuses-RS-seat-for-now/articleshow/5992813.cms
ஆதாரம் 2:
http://expressbuzz.com/states/tamilnadu/DMK-okay-to-ties-with-PMK/177625.html
ஆதாரம் 3:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14553
ஆதாரம் 4:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10758
ஆதாரம் 5:
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1320&rid=69
இதெல்லாம் பார்ப்பான ஊடகத்தின் சதியா இல்லை. திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரமா ? என்ன ரெடிமேட் பதில் வெச்சிருக்கீங்க அருளு..
ஒங்கொய்யா ராமதாசு எம்.பி சீட்டு தன் மகனுக்கு கேட்டுருக்காரு என்பது உறுதி.
வானத்துக்கு கீழ் இருப்பதெல்லாம் பார்பனீயம் என்று யார் சொன்னது, நிறவெறியை ரேஸிஸம் என்கிறார்கள், அது என்ன எல்லாருக்கும இருக்கு, இப்படியெல்லாம் காரணம் காட்டி உங்களுக்கு பார்பனீய கூறு இல்லைன்னு மழுப்பாதிங்க அருள், நீங்க அப்பட்டமான பார்பனீய கூறு உள்ளவர்!
வன்னியர் என்றொரு சாதி உண்டு, அது எம்.பி.சி வகையில் சேரும் எனும் போதே, உங்களுக்கு மேல், பி.சி, இன்னும் மேல் எஃப்.சி,
உங்களுக்கு கீழ் எஸ்.டி, எஸ்.சி உண்டென்று ஒப்பு கொள்கிறீர்கள், இது தான் பார்பனீய கூறு, உங்களை அறியாமலேயே பார்பனனை மேல் சாதி என்று தூக்கி வைப்பதற்கு பார்பனிய சொம்பு தூக்கி என்று கூட உங்களை அழைக்கலாம்!
மொட்டை போடுவது திராவிட மரபென்றால் அது ஒரு பொதுவான காரணம் சொல்லுங்கள், ஏன் மொட்டை போடுகிறார்கள்!
Anonymous said...
// //
ஆதாரம் 1:
http://timesofindia.indiatimes.com/city/chennai/DMK-accepts-PMK-as-ally-but-refuses-RS-seat-for-now/articleshow/5992813.cms
ஆதாரம் 2:
http://expressbuzz.com/states/tamilnadu/DMK-okay-to-ties-with-PMK/177625.html
ஆதாரம் 3:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14553
ஆதாரம் 4:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10758
ஆதாரம் 5:
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1320&rid=69
இதெல்லாம் பார்ப்பான ஊடகத்தின் சதியா இல்லை. திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரமா ? என்ன ரெடிமேட் பதில் வெச்சிருக்கீங்க அருளு..
// //
பத்திரிகைகளின் சொந்தக் கருத்துக்களைதான் நீங்கள் ஆதாரம் என்று அள்ளி வீசியிருக்கிறீர்கள்.
எந்த இடத்திலும், பா.ம.க தரப்பில் 'மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு' இடம் என்று கோரப்படவில்லை. அதுகுறித்த பேட்டியோ, கடிதமோ, பேச்சோ நீங்கள் கொடுத்திருக்கும் ஆதாரங்களில் இல்லை.
நன்றாக கவனியுங்கள்: பேட்டியோ, கடிதமோ, பேச்சோ நீங்கள் கொடுத்திருக்கும் ஆதாரங்களில் இல்லை.
நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளை நீங்களே மீண்டும் ஒருமுறை படியுங்கள். அவை அனைத்திலும் பத்திரிகையாளர் எழுதும் முன்னுரையில்தான் மருத்துவர் அன்புமணிக்கு மாநிலங்களவை இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, மருத்துவர் இராமதாசு அவர்களோ முதல்வர். கருணாநிதி அவர்களோ அப்படி சொன்னதாக எங்கும் இல்லை.
அதாவது, பத்திரிகைகள் தாங்களாகவே 'மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு இடம்' என்ற பொருளில் எழுதுகின்றன. இதையெல்லாம் ஆதாரம் என்றால் உங்களுக்கு பத்திரிகை செய்திகுறித்து எதுவும் தெரியவில்லை என்பதுதான் பொருள்.
பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை ஆகாது என்று முதல்வர். கருணாநிதி ஏற்கனவே சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.
"அருள் நீ ஒரு முட்டாள்" என்று உங்களை நேரடியாக விளிப்பதைவிட "முட்டாள் தனமாகப் பேசாதீர்கள் அருள்" என்று தான் பொது மேடையான வலைத்தளங்களில் பேசுவார்கள்.
அதே மாதிரி தான் ஒங்கொய்யா மாலடிமை கேட்டதை மறைமுகமாக பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.
பத்திரிக்கையில் வருவது எல்லாமே உண்மையில்லை என்பதிருக்கட்டும். இங்கன வந்தது பொய்யென்று நிரூபிக்கவேண்டியது உங்கள் கடமை.
// // இங்கன வந்தது பொய்யென்று நிரூபிக்கவேண்டியது உங்கள் கடமை.// //
உங்களால முடிந்தால் 'உண்மை' என்று நிரூபியுங்கள்.
வால்பையன் said...
// //மொட்டை போடுவது திராவிட மரபென்றால் அது ஒரு பொதுவான காரணம் சொல்லுங்கள், ஏன் மொட்டை போடுகிறார்கள்!// //
Jo Amalan Rayen Fernando said...
// //இந்த மொட்டைபோடுற சமாச்சாரம் ஆருடையாவது இருந்தாலும் இன்று அனைத்து இந்துக்களும் ஏற்றுச்செய்கிறார்கள். இல்லயா?// //
""பௌத்த மதம் தந்த வழக்கம் தலையினை மொட்டையடித்துக்கொள்வது. வேத, புராணங்களிலோ தேவார, திவ்வியப் பிரபந்தங்களிலோ இவ்வழக்கத்தைப் பற்றிய பேச்சே இல்லை. திருப்பதி, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் சென்று மொட்டையடித்துக்கொள்ளும் வழக்கம் மட்டும் மக்களிடையே பரவலாக உள்ளது. (ஆனால் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் இவ்வழக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிக்கத்தக்கது.) தலை முடியினைப் பௌத்தத் துறவிகள் மழிகத்தியினால் களைந்து கொள்வார்கள்.
பௌத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக் கூடிய எட்டுப் பொருட்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. மதத்தின் பெயரால் தலைமுடியைப் புனிதத்தலங்களில் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைப் பௌத்தத் துறவிகளிடமிருந்து தான் தமிழ் மக்கள் கற்றுக்கொண்டனர்.""
'தமிழகப் பௌத்தம் : எச்சங்கள்' எனும் கட்டுரையில் தொ. பரமசிவன், ('பண்பாட்டு அசைவுகள்' எனும் நூல், பக்கம் 86 - காலச்சுவடு பதிப்பகம்).
இதுவன்றி - துறவிகள் செவ்வாடை அணிவது, அரசமரத்தை வழிபடுவது, பட்டிமன்றம் நடத்துவது ... இவையெல்லாம் கூட பௌத்தம் விட்டுச்சென்றவைதான்.
naan enna solhiren enral innamum parpaan parpaan enru jadhi thveshathththai
Post a Comment