7/21/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 21.07.2010

ராகவேந்திரன் அவர்களது இப்பதிவு
தனது வாதங்களை அழகாக அது முன்வைக்கிறது. அதிலிருந்து சிலவரிகள்:

“நேற்று எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் மிக அருமையாக சாதியுடன் புழங்குதல் என்ற தலைப்பில் மிக நேர்த்தியாக விஜய் என்பவருக்கு பதில் கூறும் வகையில் ஒரு அழகான கட்டுரை எழுதியிருந்தார். இது குறித்து எனது நெருங்கிய நண்பர் ஒருவருடன் காராசாரமாக விவாதமும் நடைபெற்றது. அந்த நண்பர் மட்டுமின்றி நான் உரையாடும் ஏனைய நண்பர்களும் சரி வர்ணாசிரமத்தை உருவாக்கியது பிராமணர்கள் தான் என்பது போலவும், பிராமணர்கள் மட்டுமே இப்போது உள்ள ஜாதிய கூறுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம் என்பது போலவே பேசுகிறார்கள், பொதுவாக அவர்கள் கூறியுள்ளார்கள்,இவர்கள் கூறியுள்ளார்கள், என்று மேம்போக்காக பேசியே காலம் கழிக்கிறார்கள். நான்பேசிய பல நண்பர்களும் சற்று விரிவாக மனு தர்ம சாஸ்திரத்தினை முழுமையாக படித்து உள்ளீர்களா என்று கேட்டால் அதை மேற்கொள்காட்டி பெரியார் இந்த இதழில் பேசினார், அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்களே தவிர, இவர்கள் படித்து அதை அறிந்து உணர்ந்ததாக நான் அறிந்திலன்...”

“நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தற்போது தான் பிராமணர்கள் அல்லாது இதர இனத்தவர்கள் படிப்படியாக அனைத்து துறைகளிலும் உயர் பதவிகளிலும் உயர் நிலைகளிலும் அலங்கரித்துக் கொண்டு உள்ளார்கள், அவர்கள் அனைவருமே இட ஒதுக்கீட்டின் மூலமோ அல்லது அவர்களின் சொந்த திறமையின் மூலமாகத் தானே வெளிச்சத்திற்கு உயர்நிலைக்கு வந்தார்கள், ஆனால் எந்த ஒரு இட ஒதுக்கீடும் இல்லாது இப்போதும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிச்சை எடுத்தாவது உயர் கல்வி கற்று ஒரு நல்ல நிலைக்கு வந்துக் கொண்டு தான் உள்ளார்கள், ஏன் அவ்ர்களிடம் உள்ள ஒரு துடிப்பும் உத்வேகமும் இவ்வாறு துவேஷம் உள்ளவர்களிடத்தில் இல்லை,

பொதுவாக ஒரு குற்றச்சாட்டு, பிராமணர்கள் அடுத்தவர்களுக்கு உதவுவது கிடையாது, அவர்கள் சாராரருக்கு மட்டுமே உதவுகிறார்கள், அதனால் தான் இன்றளவும் வேலை வாய்ப்பு கல்வி நிலையில் முன்னேறுகிறார்கள் என்று, அய்யா இந்த குற்றச்சாட்டை சொல்பவர்கள் சற்றே மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்கட்டும், பிராமணர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீடும் கிடையாது, அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் கிடையாது, கடுமையாக படித்து மதிப்பெண் பெற்றும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் கீழ் அவர்களின் இடங்கள் தட்டி பறிக்கப்படுகின்றன, அப்படி இருக்கையில் பிராமணர்கள் எந்த வகையில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள், சற்றேனும் சிந்தித்து பாருங்கள், ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நிச்சயமாக பிராமணருக்கு பிராமணர் நிச்சயமாக உதவுவது என்பது கிடையாது, அப்படியே இருப்பினும் அவர்கள் உறவினர்களாக மட்டுமே இருப்பார்கள், இது தான் உண்மை, மற்ற வகுப்பினருடன் ஒப்பிடுகையில்”.


நல்ல பதிவுக்கு பாராட்டுகள், ராகவேந்திரன்.

ஜூனியர் விகடன், 25.07.2010 தேதியிட்ட இதழ்
சாதாரணமாக ஜூவி, ரிப்போர்டர் குமுதம் ஆகிய இதழ்களை விடாது வாங்கினாலும் அவற்றை முழுமையாக படிக்கும் முன்னரே அவை பலமுறை என் வீட்டிலேயே கைமறதியாக எங்காவது வைக்க அவை காணாமல் போவது அடிக்கடி நிகழும் விஷயம்தான்.

இன்றும் அதுதான் நடந்தது. அது பற்றிப் பிறகு.

வாங்கின ஜூவியை உடனடியாகப் படித்ததில் பல ருசியான விஷயங்கள் கிடைத்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

அ) இன்னொரு டிராஃபிக் ராமசாமி (பக்கம் 28-29)
செந்தமிழ்க்கிழார் என்பவர் ஆதம்பாக்கம் ஏரியாவில் மிகப் பிரசித்தம். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர் மக்கள் நலனுக்காகப் போராடும் சமூக ஆர்வலராக “இந்தியா டுடே” இதழ் இவரை அடையாளம் கண்டுள்ளது. இது போக, வெகுகாலமாகவே தங்களுக்காக குரல் கொடுக்கும் நாயகனாக மக்கள் இவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் செய்த ஒரே குற்றம் பல பெரிய மனிதர்கள் செய்த, செய்யும் அநியாயத்துக்கு துணை போன அதிகாரிகளை தட்டிக்கேட்டதேயாகும்.

ஆ) போலிச் சான்றிதழ் விவகாரம் (பக்கம் 30-31)
தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகளை வெளியாகின்றன. மேல் மட்ட அதிகாரிகளை இக்கட்டுரை சற்றே ரிலேக்ஸாக விட்டு விடுவது போல தோன்றுகிறது. என்னைக் கேட்டால் இம்மாதிரியான முன்முடிவுகள் கூடாது. All are guilty unless proven innocent என்ற அடிப்படையில்தான் பல விசாரணைகள் நடக்கின்றன, நடக்க வேண்டும். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ யார் கண்டது?

இ) வன்னிய இனமானக் காவலர் ராமதாஸ் நகர்த்தும் காய்கள் (பக்கம் 4, 5)
திமுகாவில் கனிமொழி, கயல்விழி என பலர் களமிறக்கப்பட, அந்த பொறுப்பை மருத்துவர் தனது மருமகள் சௌம்யாவுக்கும் பேத்க்தி சங்கமித்திராவுக்கும் தந்துள்ளார்.

சங்கமித்திரா என்றதும் அவருக்கும் அவரது சகோதரிக்கும் அவசரம் அவசரமாக தில்லியில் தமிழ் வகுப்புகளுக்கு அன்புமணி அவர்கள் ஏற்பாடு செய்த விவகாரம் பற்றி நான் இட்டப் பதிவுகள் இரண்டு செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, மேலும், அன்புமணி அவர்கள் நல்ல தந்தை என் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்போது ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் சங்கமித்திரா அவர்கள் சிறப்பாக தமிழ் பேசி எழுதுவாரா என்பதை யாராவது விஷயம் அறிந்தவர்கள் கூறுங்கள் அப்பு.

ஈ) வனவாசம் முடிந்து திரும்பும் வளர்ப்பு மகன் சுதாகரன் (பக்கம் 6,7)
மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு சில அனுபவங்கள் வரும். அதாவது ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பல ஆண்டுகள் என்னைத் தொடர்பு கொள்ளாமலேயே இருப்பார். அவர் இருக்கிறாரா இல்லையா என்று கூட என்ணும் அளவுக்கு போய் விடும். திடீரென one fine day அவரிடமிருந்து ஃபோன் வரும். அன்னேரத்தில் நான் கணினி முன்னால் இருந்தால் எனது ஆர்கைவ்சில் அவரது விவரங்களை தோண்டி எடுத்து வைதுக் கொண்டுதான் அவருடன் மேலே பிசினசே பேசுவேன். அம்மாதிரி வரும் ஃபோன் அழைப்புகள் அனேக தருணங்களில் மேலும் வேலைகளைத் தருவதால், அவை வந்தால் சந்தோஷமே.

ஆனால் சுதாகரன் 14 ஆண்டுகள் கழித்து (ஆகவே வனவாசம் என அதை அவர் அழைக்கிறார்) மீண்டும் பொதுப் பார்வைக்கு வருவது ஜெயலலிதாவுக்கு நல்லதா என்பதில்தான் எனக்கு சம்சயம். பார்ப்போம்.

ஜூவியை இப்போது வழக்கம் போலவே கைமறதியாக எங்கோ வைத்து விட்டேன், என்ன செய்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

41 comments:

கோவி.கண்ணன் said...

//ஆனால் எந்த ஒரு இட ஒதுக்கீடும் இல்லாது இப்போதும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிச்சை எடுத்தாவது உயர் கல்வி கற்று ஒரு நல்ல நிலைக்கு வந்துக் கொண்டு தான் உள்ளார்கள், ஏன் அவ்ர்களிடம் உள்ள ஒரு துடிப்பும் உத்வேகமும் இவ்வாறு துவேஷம் உள்ளவர்களிடத்தில் இல்லை, //

:)

இப்போது மட்டுமில்லை, எப்போதும் அதன் பெயர் உஞ்சவிருத்தின்னு கேள்விப்பட்டது இல்லையா டோண்டு சார்.

கோவி.கண்ணன் said...

//பிராமணர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீடும் கிடையாது, அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் கிடையாது, கடுமையாக படித்து மதிப்பெண் பெற்றும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் கீழ் அவர்களின் இடங்கள் தட்டி பறிக்கப்படுகின்றன, //

இது பழைய பல்லவி, நீங்கள் நினைப்பது போல் தற்போழுது இல்லை. இந்த இடுகையில் முதல் 13 பொது இடங்களின் பட்டியலை மருத்துவர் புருனோ வெளி இட்டுள்ளார், அதில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் கிடையாது. பார்பனர் தவிர யாரும் கடுமையாக படிப்பது இல்லை என்னும் உங்கள் கூற்று மிகப் பழையான வாதம்.

இதில் இருக்கும் வகுப்பு பட்டியலில் யாரும் பார்பன வகுப்பைச் சார்ந்தவர்கள் இல்லை, ஒருவேளை அவர்கள் சாதிச் சான்றிதழ் முறைகேடுகள் வழியாக பிற்பட்ட வகுப்பிற்கு சென்றிருக்கலாம் என்று நினைப்பதற்கும் தே(ஆ)ற்றிக் கொள்வதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. :)

கோவி.கண்ணன் said...

//ஜூவியை இப்போது வழக்கம் போலவே கைமறதியாக எங்கோ வைத்து விட்டேன், என்ன செய்வது?//

என்ன சார், இந்தவாரம் துக்ளக்கில் மேட்டர் எதுவுமே இல்லையா, ஜூவிக்கு மாறிட்டிங்க ?

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்
மருத்துவர் சொன்னது போன்று நடந்ததில் யாருக்கும் புகார் இருக்க முடியாது.

அதே சமயம் தன்னை விட வசதி படைத்த தனது நண்பன், தான் பெற்ற மதிப்பெண்களுக்கும் குறைவாகவே பெற்றாலும் இட ஒதுக்கீட்டினால் அட்மிஷன் கிடைத்ததை அனுபவித்தவருக்குத்தான் அதன் சோகம் புரியும்.

மெரிட்டில் தேர்ந்தெடுத்தால் பார்ப்பனரே அதிகம் பயன் பெறுவர் என மற்றவர்கள்தான் சொல்கின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//மெரிட்டில் தேர்ந்தெடுத்தால் பார்ப்பனரே அதிகம் பயன் பெறுவர் என மற்றவர்கள்தான் சொல்கின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அப்படி என்றால் அந்த திட்டத்தை மத்திய அரசிற்கும் பரிந்துரைக்கலாமே :) மத்திய அரசு கல்வி வேலை வாய்புகளில் கிரிமிலேயர் கேட்க யாருமே முன்வருவதில்லையே. குறிப்பாக உயர்கல்வியில்

கோவி.கண்ணன் said...

//@கோவி கண்ணன்
மருத்துவர் சொன்னது போன்று நடந்ததில் யாருக்கும் புகார் இருக்க முடியாது. //

நான் அதற்காகவே அந்த பின்னூட்டத்தைப் போடவில்லை.

//கடுமையாக படித்து மதிப்பெண் பெற்றும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் கீழ் அவர்களின் இடங்கள் தட்டி பறிக்கப்படுகின்றன,//

குறிப்பிட்ட இந்த வரிகளுக்குத்தான், கடுமையாக படித்து பொதுப்பிரிவில் இடம் பெற்றவர்களில் பார்பனர்கள் யாருமே இல்ல்லை என்னும் போது உங்கள் கூற்றே தவறு என்று சுட்டிக்காட்டத்தான் அந்த பதிவின் இணைப்பு கொடுத்தேன். மற்றவர்களும் வாய்ப்புக் கிடைத்தால் நன்றாகவே படிக்கிறார்கள் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

சீனு said...

//செந்தமிழ்க்கிழார் என்பவர் ஆதம்பாக்கம் ஏரியாவில் மிகப் பிரசித்தம். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர் மக்கள் நலனுக்காகப் போராடும் சமூக ஆர்வலராக “இந்தியா டுடே” இதழ் இவரை அடையாளம் கண்டுள்ளது. இது போக, வெகுகாலமாகவே தங்களுக்காக குரல் கொடுக்கும் நாயகனாக மக்கள் இவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் செய்த ஒரே குற்றம் பல பெரிய மனிதர்கள் செய்த, செய்யும் அநியாயத்துக்கு துணை போன அதிகாரிகளை தட்டிக்கேட்டதேயாகும்.//

கட்டப்பஞ்சாயத்துக்காக போலீஸ் கைது செய்த அதே செந்தமிழ்க்கிழாரா? இங்க கொஞ்சம் பாருங்க... :))

http://thatstamil.oneindia.in/news/2010/07/19/chennai-kattapanchayat-judge-cops-arrest.html

Karthick Chidambaram said...

//நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தற்போது தான் பிராமணர்கள் அல்லாது இதர இனத்தவர்கள் படிப்படியாக அனைத்து துறைகளிலும் உயர் பதவிகளிலும் உயர் நிலைகளிலும் அலங்கரித்துக் கொண்டு உள்ளார்கள், அவர்கள் அனைவருமே இட ஒதுக்கீட்டின் மூலமோ அல்லது அவர்களின் சொந்த திறமையின் மூலமாகத் தானே வெளிச்சத்திற்கு உயர்நிலைக்கு வந்தார்கள்//

இது நல்ல விசயமாகதானே தெரிகிறது.

அருள் said...

// //இப்போது ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் சங்கமித்திரா அவர்கள் சிறப்பாக தமிழ் பேசி எழுதுவாரா என்பதை யாராவது விஷயம் அறிந்தவர்கள் கூறுங்கள் அப்பு.// //

பூம்புகார் மாநாட்டில் பேசிய சங்கமித்ரா தமிழில்தான் பேசினார். அவர் தமிழ் நன்றாகப் பேசுவார், தமிழ் நன்றாகப் படிப்பார்.

Anonymous said...

//மெரிட்டில் தேர்ந்தெடுத்தால் பார்ப்பனரே அதிகம் பயன் பெறுவர் என மற்றவர்கள்தான் சொல்கின்றனர்//

டோண்டு, ஒரு பொய்யை திரும்ப‌ திரும்ப‌ சொன்னால் உண்மை ஆகிவிடாது. இட‌ஒதுக்கீடு பின்ப‌ற்ற‌ப்படாத‌ ம‌த்திய‌ அர‌சின் ஆராய்ச்சி நிருவ‌ன‌ங்க‌ளில் பிராம‌ண‌ர்க‌ளின் எண்ணிக்கை க‌ணிச‌மாக‌ குறைந்துள்ள‌தை ஏற்க‌ன‌வே ஆதார‌ங்க‌ளுட‌ன் எடுத்துக்காட்டி உள்ளேன். இத‌ற்கு கார‌ண‌ம் பிராம‌ண‌ர்க‌ளின் இய‌லாமையே. ந‌ட‌ன‌மாட‌ இய‌லாமைக்கு தெருவை குற்ற‌ம் சொல்லிப் ப‌ய‌னில்லை. என‌வே, குறை காணும் ப‌ழ‌க்க‌த்தை விட்டு, த‌ன்ன‌ம்பிக்கையுட‌ன் உழைத்து வெற்றிபெற‌ வாழ்த்துக்க‌ள்.
-கிருஷ்ண‌மூர்த்தி

அருள் said...

ராகவேந்திரன் Said...via டோண்டு ராகவன்

// // வர்ணாசிரமத்தை உருவாக்கியது பிராமணர்கள் தான் என்பது போலவும், பிராமணர்கள் மட்டுமே இப்போது உள்ள ஜாதிய கூறுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம் என்பது போலவே பேசுகிறார்கள்// //

சாதி ஏற்றத்தாழ்வு மற்றும் வர்ணசிரம தர்மத்தால் காலகாலமாக பயனடைந்தோர் யார்? என்பதுதான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். பயனடைந்தோர் பார்ப்பனர் அல்லர் என்பது உங்கள் கருத்தா?

// //சுதந்திரம் பெற்று இத்தனை காலமான பின்பும் பிராமணரல்லாதவர்கள் பலமுறை ஆட்சி பொறுப்பேற்றும் ஏன் இந்த அவலநிலை என்று அவர்கள் மனதை தொட்டு மனசாட்சியுடன் பதில் பெற முயற்சி செய்யுங்கள்// //

பார்ப்பனர் ஆதிக்க ஆட்சியின் காலம் 2000 ஆண்டுகள். இப்போதும் பார்ப்பனரல்லாதார் ஆட்சி எதுவும் இல்லை. நடுவண் அரசில் முழுவதாகவும் மாநில ஆட்சியில் பெருமளவும் இன்றும் 'பார்ப்பனர்' ஆதிக்கம் நீடிக்கிறது.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றுதான் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் (அதாவது நாடாளுமன்றம், சட்டமன்றம்), மற்ற மூன்று தூண்களான அதிகாரிகள், நீதிமன்றம், பத்திரிகைகள் ஆகியன இன்னமும் பார்ப்பன ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன.

எனவே, பார்ப்பனர் அல்லாத ஆட்சி நடப்பதாகக்கூறுவது கட்டுக்கதை.

// //எங்காகிலும் பிராமணர்கள் VS தலித்துகள் பிரச்சினை நடைபெறுகிறதா அல்லது பிராமணர்கள் தவிர இதர பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின்ர் VS தலித்துகள் இடையே பிரச்சினை நடைபெற்றுக் கொண்டு உள்ளதா?// //

அருகருகே இருக்கும் மனிதர்கள் இடையேதான் மோதல் வரும். ஏழை எளிய மக்களிடமிருந்து தூரமாக, சொகுசாகவும் பாதுகாப்பாகவும் வாழும் பார்ப்பனர்கள் தங்களது தலித் மற்றும் BC மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தங்களது பத்திரிகைகள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் ஏவுகின்றனர். அதாவது வன்மம் மாறவில்லை, அதன் வடிவம்தான் மாறியிருக்கிறது.

// //பிராமணர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீடும் கிடையாது,// //

பார்ப்பனர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளாக 100% இடஒதுக்கீடு இருந்து வந்தது, அதன் பயனாகத்தான் அவர்கள் உச்ச நிலைக்கு சென்றனர். இன்றும் பல கோயில்களில் 100 % வேலைவாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது.

// //பிராமணர்கள் மட்டும் தான் என்று துவேஷ காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது இந்த 20ம் நூற்றாண்டிலும் தேவைதானா என்பதை சற்றே சிந்திக்கவும் தோழர்களே// //

அதை பார்ப்பனர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

அனைத்து சாதிகளுக்கு இடையேயும் இணக்கம் வர:

1. உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்கிற ஏற்றத்தழ்வு நிலையை கைவிட வேண்டும்

2. 'சாதிகள் இனியும் இருக்கும்' என்பதால் - எந்தசாதியில் எத்தனைப் பேர் என்பதை அளந்து, எல்லாவற்றிலும் அவரவர் மக்கள்தொகைக்கான பங்கைக் கொடுத்துவிட வேண்டும்.

இதற்கு பார்ப்பனர்கள் உடன்படுவார்களா?

dondu(#11168674346665545885) said...

@அருள்
நான் ஏற்கனவேயே பலமுறை கூறிவிட்டேன், சாதிகள் உருவானது காலப்போக்கில் நிகழ்ந்தது, ஒரு குறிப்பிட்ட சாராரை மற்றும் அதற்கு பொறுப்பாக்குவது சரியல்ல என்று.

இட ஒதுக்கீடு என்று எல்லாவர்றுக்கும் போக முடியாது. வேலை கொடுப்பவன் அதற்கு திறமையானவர்களைத்தான் தேர்ந்தெடுப்பான். அவனிடம் போய் சாதியெல்லாம் பார்த்து வேலை கொடு எனக் கூறமுடியாது.

நீங்களே உங்களுக்கு டாக்டர் தேவை என்றால் திறமையான டாக்டரிடம்தான் போவீர்கள், வக்கீல்கள் தேவையென்றாலும் அதே நிலைதான். சாதியெல்லாம் அப்போது பார்க்க மாட்டீர்கள்.

முதலில் உங்கள் மருத்துவரை பதவிகளுக்கென தன் மகனையே தேர்ந்தெடுக்கும் நிலையிலிருந்து மாற்றப் பாருங்கள். ராஜ்யசபா சீட்டுக்காக கலைஞர் காலில் விழாக்குறையாக கெஞ்சியது அவரது மகன் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம்.

வீரமணி மட்டும் என்ன தைகவில் வேறு ஆட்களே இல்லையா? தன் மகனைத்தானே தேர்ந்தெடுக்கிறார்?

இப்போது நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதால் நிலைமை மாறப்போவது இல்லை.

பை தி வே, சங்கமித்திரா தமிழ் நன்கு பேசியது குறித்து மகிழ்ச்சி. ஆனால் ஒரு சந்தேகம், அவர் கல்வி தமிழகத்தில்தானே ஆரம்பித்தது? அப்போது ஏன் தமிழ்வழிக் கல்வியில் அவர் தந்தை அவரை படிக்க வைக்கவில்லை?

சரி போகட்டும் ஏதோ டேமேஜ் லிமிட்டிங் விஷயமாக தில்லியில் நடத்திய நாடகம் இந்தளவுக்காவது பயன்பட்டதே.

டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //சாதிகள் உருவானது காலப்போக்கில் நிகழ்ந்தது, ஒரு குறிப்பிட்ட சாராரை மற்றும் அதற்கு பொறுப்பாக்குவது சரியல்ல// //

பொறுப்பை விடுங்கள் - சாதியால் விளையும் கேடுகளுக்கு தீர்வைக் கூறுங்கள்.

// //இட ஒதுக்கீடு என்று எல்லாவர்றுக்கும் போக முடியாது. வேலை கொடுப்பவன் அதற்கு திறமையானவர்களைத்தான் தேர்ந்தெடுப்பான். அவனிடம் போய் சாதியெல்லாம் பார்த்து வேலை கொடு எனக் கூறமுடியாது.// //

இது உங்களது விஷமப் பிரச்சாரம்.

வேலை: அரசு பணியிடங்களில் இடஒதுக்கீடு என்பது அதிகாரப்பங்கீடு. அது வெறும் வேலை வாய்ப்பு அல்ல. மேலும், அரசு வேலைகள் எல்லாம் பார்ப்பனரின் பரம்பரை சொத்து அல்ல. அவை எல்லாமக்களுக்கும் பொது.

திறமை: பார்ப்பனர்கள் மட்டும்தான் திறமையானோர் என்பதுபோலப் பேசுவது உங்களது சாதி வெறியைக் காட்டுகிறது. திறமைசாலிகள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள்.

எனவே, இடஒதுக்கீடு என்பது அந்தந்த சாதிகளிலிருந்து குறிப்பிட்ட வேலைக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதுதானே தவிற, நீங்கள் அள்ளிவிடுவதுபோன்று - திறமை இல்லாதவர்களுக்கு வேலைக் கொடுப்பது அல்ல.

அமெரிக்காவில் உங்கள் ஆட்கள் போய் மண்டியிடும் மிகப்பெரிய நிறுவனங்கள் - மைக்ரொ சஃப்ட், IBM, ஃபோர்ட், கோககோலா, பெப்சி, வால்மர்ட் - எல்லாமே Affirmative Action-அய் செயல்படுத்துகின்றன. ஐரோப்பிய நாடுகளில் Equal opportunity நடைமுறயில் இருக்கிறாது. மலேசியாவில் கூட பூமிபுத்திரர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது. அந்த நாடுகள் எல்லாம் உங்கள் இந்தியாவைப்போன்று கேடுகெட்டா கிடக்கின்றன. அந்த நாடுகளின் நிறுவனங்களுடன் உங்கள் 'அவாள்' நிறுவனங்கள் எல்லாம் போட்டிப்போட்டு வெற்றிபெற முடியாமல் போனது ஏன்?

// //இப்போது நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதால் நிலைமை மாறப்போவது இல்லை.// //

எங்களுக்கான உரிமைகளை நாங்கள் கேட்பது வய்ற்றெரிச்சல் ஆகாது.

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //சங்கமித்திரா தமிழ் நன்கு பேசியது குறித்து மகிழ்ச்சி. ஆனால் ஒரு சந்தேகம், அவர் கல்வி தமிழகத்தில்தானே ஆரம்பித்தது? அப்போது ஏன் தமிழ்வழிக் கல்வியில் அவர் தந்தை அவரை படிக்க வைக்கவில்லை?// //

ஒரு குழந்தையை எங்கே படிக்க வைப்பது என்பது அவரவர் பெற்றோரின் உரிமை. எல்லாருக்கும் பொதுவான சட்டத்தின் செயல்பாடுதான் இச்சிக்கலுக்கு தீர்வு. தனிப்பட்ட சிலரை மட்டும் வேறுபட்டு நடக்கச் சொல்வது தேவையற்றது.

நீங்கள் அள்ளிவிடுவது போன்று பெற்றோர்கள் எல்லாம் ஆங்கில வழிக்கல்விதான் சிறந்தது என்ற நோக்கத்தில் மட்டும் அதனைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, தரமானக் கல்வி என்கிற நோக்கிலும்தான் அதனைத் தேர்வு செய்கின்றனர்.

தாய்மொழிவழிக் கல்விதான் சிறந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால், தமிழ் நாட்டில் தமிழ்வழியில் தரமானக் கல்வி அளிக்கும் பள்ளிகள் மிகமிகக் குறைவு.

எனவே, பொதுப்பள்ளி முறையை தீவிரமாகச் செயல்படுத்தி, குழந்தைகளை வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பதைக் கட்டாயமாக்கும் அண்மைப் பள்ளிமுறையாக (Neighborhood School) மாற்றும் காலத்தில்தான் அனைவருக்கும் தரமான தமிழ்வழிக்கல்வி கிடைக்கும்.

அதுவரை, ஒரளவு வசதிபடைத்தவர்கள் கூட "தரமானக் கல்வி வேண்டும்" என்கிற நோக்கத்தில் ஆங்கில வழிக்கல்வியை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை.

எப்படிப்பார்த்தாலும், தரமான தமிழ்வழிக்கல்வியை விட தரமான ஆங்கில வழிக்கல்வி என்பது - குறைவான பலனைத் தரக்கூடியதே ஆகும்.

நடுத்தர, மேல்தட்டுமக்களுக்கு இதைவிட்டால் வேறு வழி இப்போதைக்கு இல்லை.

dondu(#11168674346665545885) said...

//அதுவரை, ஒரளவு வசதிபடைத்தவர்கள் கூட "தரமானக் கல்வி வேண்டும்" என்கிற நோக்கத்தில் ஆங்கில வழிக்கல்வியை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை.//
அது எனக்கும் தெரியும். ஆனால் மருத்துவர் ஊராருக்கு மட்டும் தமிழ்வழிக்கல்வியை உபதேசித்த இரட்டை நிலையை சாடித்தான் நான் குறிப்பிட்டுல்ள எனது பதிவுகள். அங்கு போய் பாருங்கள், இப்பதிவிலேயே அவற்றுக்கு சுட்டிகள் உண்டு.

டோண்டு ராகவன்

அருள் said...

@ டோண்டு ராகவன்

1. ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக திறம்பட கற்பிக்கப்பட வேண்டும்.

2. ஆங்கிலம்/இதர மொழிப்பாடங்கள் தவிர மற்ற அனைத்து பாடப்பிரிவுகளும் தமிழ்நாட்டின் முதல்மொழியான (First Language) தமிழ்வழியாக கற்பிக்கப்பட வேண்டும்.

3. மொழிச்சிறுபான்மையனர் அவரவர் மொழியினை கற்க வாய்ப்பளிக்க வேண்டும்

என்பதே பா.ம.க'வின் மொழிக்கொள்கை.

மேலும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க - பள்ளிக்கல்வி முழுவதும் 'பொதுப்பள்ளிமுறையிலும் (Common School System), குழந்தைகளை வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பதைக் கட்டாயமாக்கும் அண்மைப் பள்ளிமுறையிலும் (Neighborhood School System) இருக்க வேண்டும் என்பது பா.ம.க கொள்கை.

இத்தகைய நடைமுறை கட்டாயமானால் - அது மருத்துவர் அவர்களது குடும்பத்தினருக்கும் பொருந்தும்.

ராம்ஜி_யாஹூ said...

பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வி இது, உங்கள் அடுத்த கேள்வி பதில் பதிவில் கூட சேர்த்து கொள்ளலாம்.

துக்ளக் பத்திரிக்கை சோ வின் ஓய்விற்கு பிறகு எப்படி இருக்கும். உங்கள் கணிப்பு என்ன

Rajagopal,Chicago said...

Mr. Kovi Kannan,

Tamilnadu Engg & medicine selection procedures are pure crap. Just cram something and vomit on the answer sheet. Questions are simple, so that everyone can score 100% in every subject. Can you go to IIT Chennai (real creamy layer is in IITs) and see how many Brahmin boys got admitted versus other Tamilians in 2010. Can you please tell me how many people in Dr. Bruno's list got into IIT JEE or in AIIMS or JIPMER. I am sure it will be zero.

My brother studied MBBS in TN and he could not get a MD seat because of foolish reservation quota. Why do we need Quota for M.D.? He had to get into Madras Medical college by writing the exam conducted by AIIMS. (25% seats for All India candidates). I.e. a Tamilian had to get into a medical college in TamilNadu through central quota.

Just visit Google (Bangalore office) and see how many Brahmin boys are there. They would have never been in Dr. Bruno's list.

Please note that I was brought up in a communist family and my Grandfather participated in Freedom fighting movement and one of the main force behind allowing Dalits inside our village temple (in 1940's it was a great achievement).

Even in my wildest dreams I have not felt any superiority for being a Brahmin. All men are created equal. All these Brahmanism & Manu are cock and bull stories.

Still I have not found an answer for the Question "Why people hate Brahmins?"

Cheers,

Rajagopal

Chicago

dondu(#11168674346665545885) said...

//2. ஆங்கிலம்/இதர மொழிப்பாடங்கள் தவிர மற்ற அனைத்து பாடப்பிரிவுகளும் தமிழ்நாட்டின் முதல்மொழியான (First Language) தமிழ்வழியாக கற்பிக்கப்பட வேண்டும்.//
அதை கூறுபவர் தன் மகனுக்கோ அல்லது பேத்திகளுக்கோ அம்முறை கல்வியை ஏன் அளிக்கவில்லை என்பதுதான் கேள்வி.

தமிழ்வழிக் கல்வி தர தமிழகத்தில் தரமான பள்ளீ இல்லை எனக் கூறுவது பொய். ஆண்களுக்காக திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளி, மயிலை பி.எஸ். உயர்நிலை பள்ளி, தி.நகர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளி போன்றவையும், பெண்களுக்காக திருவல்லிக்கேணி நேஷனல் உயர்நிலை பள்ளி, லேடி வெல்லிங்டன் உயர்நிலை பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா போன்ற பல பள்ளீகள் இருந்தும் மருத்துவர் அவற்றை நாடவில்லை.

அப்புறம் எந்த காரணத்துக்காக ஊராருக்கு மட்டும் உபதேசம் என்பதுதான் அப்பதிவுகளில் எனது கேள்வி.

டோண்டு ராகவன்

Anonymous said...

Don't worry Mr.Rajagopal. You are saying there is no one other than bramins in IIT-s and other elites institutions. The same things were told by your grandparents, for the local institutions. Soon people will catch up to you. First of all the awareness itself is not there. I knew about IIT and all after joining engineering.

I know the bramins, who got less than me were selected in MMC, not on merit but on pulling strings. But I did not get selected. You have people everywhere. You people can get things done by all means. Hope you knew about IIT selection irregularities.

I know how difficult to finish a doctorate in IIT if you are a non bramin. Not because of the capabilities problem, all because of bramin domination as you quoted.


Sridhar

Anonymous said...

Mr Rajagopal !

You don’t find answers to the question why people hate Tamil Brahmins.

You used the word, 'Still' meaning, you juxtapose the question with Engineering and Medical selections.

It is not correct to juxtapose like that.

Because, the hatred does not comes from that now, although Sridhar points out the discrimination suffered by non-brahmins in IITs etc. Rather, it comes from the ancient isolated life the Brahmins lived. They lived in agraharams so that they could practice their Brahmanism (achaarams) without the fear of being polluted. Later on, all kinds of Brahmins - both practicing and Bohemians - lived there, to continue the legacy of non-integration. Their acharams include, inter alia, the treatment of all others, not only dalits, as lower and as untouchables.

You reject manu and other scriptures as crap, don’t you? But it is these very scriptures on which they based their belief that the sudras were born to Brahmins through their concubines. The system of concubinage with sudra women continued in Kerala till 1940s, which was one reason why the Namboodris were now rejected by the society. They are now among the poorest of poor, although there is no virulent anti - Brahmanism there. The isolated life - with achaarams, unique ways of life using or abusing the religion - still continues, although there are more Bohemians among Brahmins than practising ones.

The ingrained feeling of being different from others is difficult to dispose of: it may take many, many decades for Tamil Brahmins to feel integrated with others. In Northern parts of India, Brahmins have completely changed. They are one with othersm and to identify them is difficult. In TN only, the Brahmins are adamant. They oppose everything only from their own view point. They are unable to take a general view point and say whether it is good or bad.

In a factory, in a corporation, in government offices, in TN, others identify Brahmins clearly. Brahmins, too, contribute to the identification by grouping themselves. In modern city like Chennai, they have created new agraharam like Nanganalloor. Like Muslims, they want to be with their own people. Muslims do for the same reason that their lives are different from others, which can be practiced only with fellow muslims. The Brahmins suffer from false pride. They don’t accept solatium from government. For e.g when government gives free land to the poor on the basis of poverty level only, they don’t accept. In samathuva puram, they don’t accept a land as the grant is not caste based. For fear they have to live with lower classes. This false prestige is the reason why S.V.Sekar is hated by brahmins. They think he has lowered the prestige of brahmins by harping about their low status in present society and going to Muka for grants and help. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதே பார்ப்ப்னர்களின் திமிர்.

In villages, virtually there are no Brahmins now, which made Brahmins to be far away from the 'real' Tamils. They have found it a good alibi to say they don’t quarrel with dalits. As arul has pointed out, they don’t live there, how comes the question of them quarrelling with dalits. They don’t worship the gods and goddesses of other Tamilians; in fact, they have contempt for such deities. Their religion is vedic.

Wherever they go, they don’t integrate. They may speak the local language and become masters in it. Yet, all with the feeling that we are not of you. Their attachment to Tamil language is also bogus. They treat Sanskrit dearer and sacred than Tamil. They may be great masters in Tamil contributing significantly to Tamil Lit. Yet, their loyalty to Tamil is only opportunistic. For e.g U.Ve. Sa who stood against pure Tamil movement advocating mixed variety with sanskrit. If you write about pure Tamil and its importance, you will receive heckling and teasing responses from Brahmins only.

In simple terms, an average Tamil Brahmin is a ‘stranger’ in the eyes of others.

Anonymous said...

அருள் நீங்க ஏதோ சொல்ல வாரீகன்னு தெர்யுது ஆனா என்னான்னு தெர்ல. அதனால முதல்ல இருந்து ஆரம்பிங்க பார்ப்போம்!!

கோவி.கண்ணன் said...

//Still I have not found an answer for the Question "Why people hate Brahmins?"//

பார்பனர்களை யாரும் துறத்தவில்லை,

பண்ணையார் முறை நிலவுடமை காலங்களில் அவர்களுடன் கிராமங்களிலும், கிராமம் சார்ந்த சிறுநகர கோவில்களில் பார்பனர்கள் வசித்தார்கள்.

வெள்ளைக்காரன் ஆட்சியில் அவர்களுடன் பணியாற்றினார்கள்.
வெள்ளைக்காரன் சென்ற பிறகு நகரங்களுக்கு குடிபெயர்ந்தார்கள்.

அதன் பிறகு வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். இப்படியான பார்பனர் நடைமுறை இந்தியா முழுவதும் பொதுவானது, பார்பனர்களின் இடப்பெயர்ச்சிக்கு பெரியாரோ திராவிட இயக்கமோ காரணம் என்றால் அது தமிழ்நாட்டு அளவில் மட்டுமே நிகழ்ந்திருக்க முடியும். ஆனால் அனைத்து மாநிலங்களிலுமே பார்பனர்கள் வேலை வாய்ப்புகளை நோக்கிய இடப் பெயர்வு நகர்வுகளை காலம் தோறும் செய்தே வந்திருக்கிறார்கள். சும்மா அவன் துறத்திட்டான் இவன் துறத்திட்டான் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு தாய்நாட்டின் பற்றுதல் இல்லை என்று எங்கே சொல்லிவிடப் போகிறார்கள் என்பதால் எழும் புலம்பல்கள் மட்டுமே. அதுவும் இடம் பெயராமல் எஞ்சி இருக்கும் பார்பனர்களின் பாதுகாப்பு கருதி மட்டுமே.

Anonymous said...

//
ம்மா அவன் துறத்திட்டான் இவன் துறத்திட்டான் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு தாய்நாட்டின் பற்றுதல் இல்லை என்று எங்கே சொல்லிவிடப் போகிறார்கள் என்பதால் எழும் புலம்பல்கள் மட்டுமே.
//

தமிழ் நாட்டில் கிராமங்களில் மட்டும் தான் பார்ப்புகள் மிஸ்ஸிங்....
இன்னும் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா கிராமங்களில் பார்ப்புகளும் குடும்பங்களும் சொந்த வீட்டில் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

செய்வதைச் செய்துவிட்டு நாஜி நாய்கள் போல் பாவனை எதற்கு ?

அருள் said...

கோவி.கண்ணன் said...

// //பார்பனர்கள் வேலை வாய்ப்புகளை நோக்கிய இடப் பெயர்வு நகர்வுகளை காலம் தோறும் செய்தே வந்திருக்கிறார்கள். சும்மா அவன் துறத்திட்டான் இவன் துறத்திட்டான் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு தாய்நாட்டின் பற்றுதல் இல்லை என்று எங்கே சொல்லிவிடப் போகிறார்கள் என்பதால் எழும் புலம்பல்கள் மட்டுமே.// //

மிகச்சரியாக சொன்னீர்கள். நன்றி.

"""மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக்கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் 'வகுப்புவாதி' என்றும் - 'தேசத் துரோகி' என்றும் - 'உத்யோக வேட்டக்காரர்கள்' என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமாற்ற ஈனத் தன்மையின் பயனுமே ஆகும்."""

தந்தை பெரியார் - குடிஅரசு 22.09.1940

பார்ப்பனர்கள் எதற்காக ஊரைவிட்டு ஓடுகிறார்கள் என்பதை அறிய இந்த ஆய்வை படிக்கவும்:

From Landlords to Software Engineers: Migration and Urbanization among Tamil Brahmans – by C. J. FULLER AND HARIPRIYA NARASIMHAN, London School of Economics and Political Science, Comparative Studies in Society and History 2008.

periyar said...

ஜாதி வெறி பிடித்து அலையும் டிபிகல் திராவிட தமிழ்னான கோவி கண்ணன் வழக்கம் போல் கருப்பு சட்டை கும்பலுக்கே உரிய நாஜி புத்தியுடன் உளறி விட்டார்.ஒட்டு மொத்தமாக இந்தியாவை யாரும் பேசவில்லை.

தமிழர் மாமா பெரிய பொறிக்கியாரின் திராவிட மோகினி ஆட்டத்திலும்,நாஜி தீவிரவாத பேச்சிலும் மதியை இழந்த தமிழர்களின் தாழ்ந்த நாட்டில் தான் இந்த பயங்கரவாதம் அவிழ்த்துவிடப் பட்டிருக்கிறது.வேறு எங்கும் அல்ல.

இந்த மனித உரிமை அத்துமீறல்களைப் பற்றி ஐநா சபைக்கே எடுத்து சென்று உலகத்தின் கண்களைத் திறக்க வெண்டும் என்றால் அது மிகையல்ல.

Anonymous said...

//They don’t worship the gods and goddesses of other Tamilians; in fact, they have contempt for such deities. Their religion is vedic.//

எல்லா பார்ப்பானும் அப்ப‌டி அல்ல‌. கிறுத்துவ‌ முஸ்லிம் மற்றும் வைண‌வ‌ர்க‌ளைப் பாத்து சில‌ பேர் கெட்டுப் போயிருக்க‌லாம்.

Anonymous said...

//Because, the hatred does not comes from that now, although Sridhar points out the discrimination suffered by non-brahmins in IITs etc. Rather, it comes from the ancient isolated life the Brahmins lived. They lived in agraharams so that they could practice their Brahmanism (achaarams) without the fear of being polluted. Later on, all kinds of Brahmins - both practicing and Bohemians - lived there, to continue the legacy of non-integration. Their acharams include, inter alia, the treatment of all others, not only dalits, as lower and as untouchables.
//

அட‌ என்ன‌மா எழுத‌றார் பாருங்க‌. அந்த‌ கால‌த்துல‌ பார்ப்ப‌ன‌ அக்ர‌ஹார‌ம் ம‌ட்டும் தான் இருந்ததா? ஊர‌ விட்டு ஒதுக்கி வைத்த‌ ம‌க்க‌ள‌ த‌விர‌ எல்லாரும் ஜாதி வாரியாத் தான் இருந்தாங்க‌. கோயில‌ச் சுத்தி பார்ப்ப‌ன‌ அக்ர‌ஹார‌ம். அத‌ச் சுத்தி ம‌த்த‌ அக்ர‌ஹார‌ங்க‌ள். பார்ப்ப‌ன‌ர்க‌ள் ஐ.ஐ.டி-இல் ஏமாற்றுகிறார்க‌ள் என்று பொத்தாம் பொதுவா க‌ட்டுக்க‌தைக‌ள் அள்ளி விட‌றார் பாருங்க‌. அப்ப‌டி சொன்னா தானே அங்கும் இட‌ ஒதுக்கீடு கேட்க‌ முடியும் (கேட்டாகியும் விட்ட‌து). கோயிலுக்குள் த‌லித்த‌ பார்ப்ப‌ன‌ர் விட‌ல‌ ச‌ரி. குள‌ம், குட்டை, இப்ப‌டி ம‌ற்ற‌தெல்லாம் உங்க‌ள் கையில் தானே இருந்த‌து. த‌லித்த‌ விட்டீர்க‌ளா, விட‌வில்லையே. இன்னும் உங்க‌ அக்கிர‌ம‌ம் தொட‌ர்ந்த்துகிட்டு தானே இருக்கு. அத‌ ம‌றைக்க‌த்தானே எல்லாத்துக்கும் பார்ப்பாந்தான் கார‌ண‌ம் என்று முழு பூச‌ணிக்காயை சோத்துல‌ ம‌றைக்க‌ப் பார்க்கிறீங்க‌.

Anonymous said...

//Mr Rajagopal !

You don’t find answers to the question why people hate Tamil Brahmins.//

பார்ப்பான‌ வெறுப்ப‌வ‌ரில் பெரும்பாலோர் சாதி இந்துக்க‌ள். அவ‌ர்க‌ள் வெறுப்ப‌த‌ன் கார‌ண‌ம் அப்ப‌டி செய்தால் தான் அவர்க‌ள் த‌ங்க‌ள் சாதி வ‌க்கிர‌ங்க‌ளை தொட‌ர்ந்து செய்ய‌ முடியும்.

Anonymous said...

//ஆனால் அனைத்து மாநிலங்களிலுமே பார்பனர்கள் வேலை வாய்ப்புகளை நோக்கிய இடப் பெயர்வு நகர்வுகளை காலம் தோறும் செய்தே வந்திருக்கிறார்கள். சும்மா அவன் துறத்திட்டான் இவன் துறத்திட்டான் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு தாய்நாட்டின் பற்றுதல் இல்லை என்று எங்கே சொல்லிவிடப் போகிறார்கள் என்பதால் எழும் புலம்பல்கள் மட்டுமே.//

ம‌ன‌சாட்சி என்ப‌தை இவ‌ர்க‌ளிட‌ம் கிஞ்சித்தும் காண‌ முடியாது போலிருக்கிற‌து. தாய் நாட்டை விட்டு பிற‌ நாடுக‌ளுக்கு சென்று பிழைப்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌ விஷ‌ய‌ம். அதை செய்து கொண்டிருப்ப‌வ‌ர்க்குத் தான் அதில் உள்ள‌ க‌ஷ்டம் புரியும். வேலை வாய்ப்பை நோக்கி தானாக‌ ந‌க‌ர்ப‌வ‌ர் துர‌த்தி அடிக்க‌ப் ப‌ட்டார் என்று சொல்ல‌ முடியாது என்ப‌து ச‌ரி. ஆனால் அதுவ‌ல்ல‌ த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ நிலைமை. இங்கிருக்கும் சாதியின் அடிப்ப‌டையில் உள்ள‌ ஒதுக்கீட்டின் தாக்க‌ம் இப்பொழுது பிற‌ மாநில‌ங்க‌ளிலும் அதிக‌ரிக்க‌ ஆர‌ம்பித்து விட்ட‌தால் அங்கிருந்தும் அவ‌ர்க‌ள் வெளியேறுகிறார்க‌ள். அதைத் த‌விர‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌லின் நாடி பார்ப்ப‌ன‌த் துவேசஷ‌ம் தான். என்ன‌ தான் பூசி மொழுகினாலும் பார்ப்ப‌ன‌ர் தொர‌த்தி அடிக்க‌ப்ப‌ட்டன‌ர் என்ப‌து உண்மை. அப்ப‌டித் தான் செய்வோம். நாங்க‌ள் உங்க‌ளை வெறுப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் நீங்க‌ள் தான். உங்க‌ளால் என்ன‌ செய்ய‌ முடியும்? என்று சொல்லும் அள‌விற்கு நேர்மை அருள், ஜோ அம‌ல‌ன் போன்ற‌ சாதி இந்துக்க‌ளிட‌ம் உள்ள‌து. அதுகூட‌ 'சாதி இல்லை' என்று சொல்லும் இவ‌ரிட‌ம் இல்லை.

Anonymous said...

//The Brahmins suffer from false pride. This false prestige is the reason why S.V.Sekar is hated by brahmins. They think he has lowered the prestige of brahmins by harping about their low status in present society and going to Muka for grants and help. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதே பார்ப்ப்னர்களின் திமிர்.//

பார்ப்பன‌ர்க‌ளுக்குத் தான் மீசை இல்லையே. எப்ப‌டி ம‌ண் ஒட்டும்?

கீழே விழுந்து கிட‌க்கும் பார்ப்ப‌ன‌ர் ஏன் எங்க‌ள் உத‌வியை நாட‌வில்லை என்று கேட்கிறார் இவ‌ர். த‌ள்ளி விட்ட‌தே நீங்க‌ள் தானே. அப்புற‌ம் உங்க‌ளிட‌ம் எப்ப‌டி அவ‌ர்க‌ள் உத‌வி கேட்பர்? திராவிட‌ருக்கான‌ க‌ழ‌க‌ம் தானே உங்க‌ள் க‌ழ‌க‌ம். ஆரிய‌ரான‌ பார்ப்ப‌ன‌ர் அதில் வ‌ந்து எப்ப‌டி சேர‌ முடியும்?

அது சரி(18185106603874041862) said...

அய்யா அருள்,

நீட்டி நீட்டி முழக்குகிறீர்களே தவிர, ஊருக்கு உபதேசம் செய்யும் ராமதாஸ் என்ன ****க்கு தன் பேத்திகளுக்கு தமிழ்கல்வி கற்பிக்கவில்லை என்ற கேள்விக்கு இன்னும் ஒழுங்கான‌ பதிலைக் காணோம்...

சம்யுக்தா, சங்கமித்ரா என்பது தமிழ்பெயரா? பேத்திகளுக்கு இப்படி பேர் வைத்து விட்டு, இங்கிலீஷில் கடை பேர் இருந்தால் தார் பூசி அழிக்க எத்தனை கொழுப்பு இருக்க வேண்டும்?

வன்னியர் ஓட்டி அன்னியருக்கில்லை என்று சொல்லும் ஜாதி வெறியர்களுக்கெல்லாம் எதைப் பற்றியும் பேச அருகதை இல்லை.

//
dondu(#11168674346665545885) said...
//2. ஆங்கிலம்/இதர மொழிப்பாடங்கள் தவிர மற்ற அனைத்து பாடப்பிரிவுகளும் தமிழ்நாட்டின் முதல்மொழியான (First Language) தமிழ்வழியாக கற்பிக்கப்பட வேண்டும்.//
அதை கூறுபவர் தன் மகனுக்கோ அல்லது பேத்திகளுக்கோ அம்முறை கல்வியை ஏன் அளிக்கவில்லை என்பதுதான் கேள்வி.

தமிழ்வழிக் கல்வி தர தமிழகத்தில் தரமான பள்ளீ இல்லை எனக் கூறுவது பொய். ஆண்களுக்காக திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளி, மயிலை பி.எஸ். உயர்நிலை பள்ளி, தி.நகர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளி போன்றவையும், பெண்களுக்காக திருவல்லிக்கேணி நேஷனல் உயர்நிலை பள்ளி, லேடி வெல்லிங்டன் உயர்நிலை பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா போன்ற பல பள்ளீகள் இருந்தும் மருத்துவர் அவற்றை நாடவில்லை.

அப்புறம் எந்த காரணத்துக்காக ஊராருக்கு மட்டும் உபதேசம் என்பதுதான் அப்பதிவுகளில் எனது கேள்வி.

டோண்டு ராகவன்

//

அது சரி(18185106603874041862) said...

//

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றுதான் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் (அதாவது நாடாளுமன்றம், சட்டமன்றம்), மற்ற மூன்று தூண்களான அதிகாரிகள், நீதிமன்றம், பத்திரிகைகள் ஆகியன இன்னமும் பார்ப்பன ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன.
//

அப்படியா? எத்தனை ஐபிஎஸ் அதிகாரிகள் பார்ப்பனர்கள்? எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் பார்ப்பனர்கள்? எத்தனை வி.ஏ.ஓ, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசில்தார் பார்ப்பனர்கள்? இவர்களெல்லாம் அதிகார வர்க்கமா இல்லையா?

எத்தனை நீதிபதிகள் பார்ப்பனர்கள்? தீண்டாமையை கடைபிடிக்க உரிமை கேட்டு கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறுவோம் என்று மிரட்டல் விடுத்த அந்த வன்னியர்களை இட ஒதுக்கீடு கொடுத்து நீதிபதி ஆக்கலாமா?

தினத்தந்தி,தினகரன், குமுதம் இதெல்லாம் பார்ப்பனர்கள் நடத்துவதா? , சன் டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவி, வசந்த் டிவி, மக்கள் டிவி...இதில் எந்த டி.வி. பார்ப்பனர்கள் நடத்தும் டிவி?

அட அப்படியே வைத்துக் கொண்டாலும் வன்னியர்கள் பத்திரிக்கை நடத்துவதை யார் தடுத்தது? குப்பையாக நிகழ்ச்சி வழங்கினால் மக்கள் டிவி என்று பேர் வைத்தாலும் மக்கள் குப்பையில் தான் போடுவார்கள். அதற்காக மக்கள் டிவிக்கு பார்வை நேரத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சட்டம் போட்டாலும் பிரயோஜனம் இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//
// //எங்காகிலும் பிராமணர்கள் VS தலித்துகள் பிரச்சினை நடைபெறுகிறதா அல்லது பிராமணர்கள் தவிர இதர பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின்ர் VS தலித்துகள் இடையே பிரச்சினை நடைபெற்றுக் கொண்டு உள்ளதா?// //

அருகருகே இருக்கும் மனிதர்கள் இடையேதான் மோதல் வரும். ஏழை எளிய மக்களிடமிருந்து தூரமாக, சொகுசாகவும் பாதுகாப்பாகவும் வாழும் பார்ப்பனர்கள் தங்களது தலித் மற்றும் BC மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தங்களது பத்திரிகைகள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் ஏவுகின்றனர். அதாவது வன்மம் மாறவில்லை, அதன் வடிவம்தான் மாறியிருக்கிறது.
//

அடடா...பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பனர் எவர் கையிலும் இல்லாத டிவிகளும் சொல்லி தான் திண்ணியத்தில் சில நாய்கள் தலித் மக்களின் வாயில் மலம் திணித்தனவா? உத்தபுர சுவரை கட்டியேதே பார்ப்பனர்களா?

அது சரி(18185106603874041862) said...

//

அமெரிக்காவில் உங்கள் ஆட்கள் போய் மண்டியிடும் மிகப்பெரிய நிறுவனங்கள் - மைக்ரொ சஃப்ட், IBM, ஃபோர்ட், கோககோலா, பெப்சி, வால்மர்ட் - எல்லாமே Affirmative Action-அய் செயல்படுத்துகின்றன. ஐரோப்பிய நாடுகளில் Equal opportunity நடைமுறயில் இருக்கிறாது. மலேசியாவில் கூட பூமிபுத்திரர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது. அந்த நாடுகள் எல்லாம் உங்கள் இந்தியாவைப்போன்று கேடுகெட்டா கிடக்கின்றன. அந்த நாடுகளின் நிறுவனங்களுடன் உங்கள் 'அவாள்' நிறுவனங்கள் எல்லாம் போட்டிப்போட்டு வெற்றிபெற முடியாமல் போனது ஏன்?
//

அப்படியானால் மைக்ரோசாஃப்டிலும், பெப்சி, வால்மார்ட்டிலும் வேறு ஜாதி மக்களே வேலை பார்க்கவே இல்லையா? ஆஹா...இந்த தகவல் சங்கமித்ரா அவர்களின் தாத்தா தமிழ்க்குடி தாங்கிக்கு தெரியுமா? மைக்ரோசாஃப்டில் ஜாதி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தார் பூசு போராட்டம் அறிவிக்கலாமே?

ஜாதி ஜாதி என்று இருப்பதால் தான் இந்தியா கேடு கெட்டு கிடக்கிறது. ஈக்வல் ஆப்பர்சுனிட்டி என்றால் உங்கள் அகராதியில் என்ன அர்த்தம்? இந்த ஜாதிக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டது என்று அர்த்தமல்ல...உடற்குறைபாடு, செக்சுவல் ஓரியண்டேஷன், உடலின் நிறம் போன்ற காரணிகளால் யாரும் ஒதுக்கப்பட கூடாது என்பது தான் ஈக்வல் ஆப்பர்சுனிட்டி. நான் அந்த ஜாதி, நான் இந்த ஜாதி அதனால் எனக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதல்ல.

அவாள் நிறுவனங்கள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை..கோக்க கோலாவுடனும் மைக்ரோசாஃப்டுடனும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாததற்கு(ம்) காரணம் பார்ப்பனர்கள் என்று பிஸினஸ் பற்றி எதுவும் தெரியாதவர்கள் மட்டுமே சொல்ல முடியும்.

அது சரி(18185106603874041862) said...

//
எங்களுக்கான உரிமைகளை நாங்கள் கேட்பது வய்ற்றெரிச்சல் ஆகாது
//

உரிமையைக் கேட்டால் வயித்தெரிச்சல் ஆகாது. ஆனால், வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்று ஜாதி வெறியை தூண்டி விட்டால் அது வயித்தெரிச்சல் தான்.

அது சரி(18185106603874041862) said...

//

வேலை: அரசு பணியிடங்களில் இடஒதுக்கீடு என்பது அதிகாரப்பங்கீடு. அது வெறும் வேலை வாய்ப்பு அல்ல. மேலும், அரசு வேலைகள் எல்லாம் பார்ப்பனரின் பரம்பரை சொத்து அல்ல. அவை எல்லாமக்களுக்கும் பொது.
//

அது சரி...அப்படித் தான் போலிருக்கிறது. அதனால் தான் ஒரு வேலையை முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.

அதிகாரத்தை பங்கிடுகிறார்களே தவிர பொறுப்பையும் வேலையையும் பங்கிடுவதாக தெரியவில்லை.

அரசு வேலை பார்ப்பனரின் பரம்பரை சொத்து என்று யாரும் சொல்லவில்லை. அவர்களுக்கு இத்தனை பெர்சன்ட் என்று யாரும் இட ஒதுக்கீடு, அதில் ஃபில்லப் ஆகாவிட்டா அந்த இடம் அப்படியே காலி என்றும் இருப்பதாக தெரியவில்லை.

அது சரி(18185106603874041862) said...

//
அருள் said...
2. ஆங்கிலம்/இதர மொழிப்பாடங்கள் தவிர மற்ற அனைத்து பாடப்பிரிவுகளும் தமிழ்நாட்டின் முதல்மொழியான (First Language) தமிழ்வழியாக கற்பிக்கப்பட வேண்டும்.

//

தமிழ் வழியாக கற்பதில் தவறே இல்லை. ஆனால், அதன் பின் விளைவுகளையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். முதலாவது பிரச்சினை, நல்ல காசு படைத்த ஜாதி சொல்லியே மேல வந்த சில டாக்டர்களின் மகன்களும் பேரன் பேத்திகளும் இந்தி உட்பட பல மொழி கற்று மந்திரி பதவி வரைக்கும் போவார்கள். தமிழ் கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டே எப்பொழுதும் கோட்டு சூட்டில் தான் இருப்பார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு கைத்தடியாகவோ இல்லை குவாட்டருக்கும் கோழிப் பிரியாணிக்கும் வெயிட்டிங்கிலோ இருக்கலாம்.

கம்ப்யூட்டர் எஞ்சினியரிங்கை தமிழில் படித்து கணிப்பொறி என்றால் மைக்ரோசாஃப்டிலோ, அக்கவுண்டன்சியை தமிழில் படித்து புக் கீப்பிங்கை "நூல் பேணுதல்" என்றால் சிட்டி பேங்கிலோ வேலை கிடைக்காது. அப்புறம் அவாள் போய் மண்டியிடும் மைக்ரோசாஃப்ட், சிட்டி பேங்கை நடத்துவது பார்ப்பனர்கள் என்று வயித்தெரிச்சல் தான் பட முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

அது சரி(18185106603874041862) said...

//

"""மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக்கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் 'வகுப்புவாதி' என்றும் - 'தேசத் துரோகி' என்றும் - 'உத்யோக வேட்டக்காரர்கள்' என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமாற்ற ஈனத் தன்மையின் பயனுமே ஆகும்."""

தந்தை பெரியார் - குடிஅரசு 22.09.1940
//

கவுண்டமணி காமெடி நாகேஷின் காமெடி போல் இருப்பதில்லை. வடிவேலுவின் காமெடி கவுண்டமணியின் காமெடி போல இருப்பது இல்லை. வி.கே.ராமசாமி காமெடி போல இது ஈ.வே.ராமசாமி ஸ்டைல் காமெடி.

திருநெல்வேலி நாடார் மதுரைக்கும், திருச்சிக்கும், சென்னைக்கும் போய் கடை வைக்கிறார். அது நன்றாக வந்தால் அடுத்து மும்பைக்கும் டெல்லிக்கும் போய் கடை வைக்கிறார். தைலாபுரத்திலுர்ந்து ஒரு வன்னிய டாக்டரின் பையன் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு டெல்லி போகிறார். பிள்ளை குட்டிகளை அங்கேயே படிக்க வைக்கிறார். எத்தனையோ லட்சம் பேர் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மூன்றாவது நான்காது தலைமுறையாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்று சொல்ல ராம்ஸாமியால் தான் முடியும்.

அது சரி(18185106603874041862) said...

மானமற்ற ஈனத்தன்மை உடையவர்கள் என்று ஒருவர் சொல்கிறார். அவரையும் தந்தை பெரியார் என்று எழுதி அவர் சொன்னது சரி தான் என்று ப்ரூவ் செய்கிறார்கள்... ம்ஹூம்..என்னத்த சொல்ல?

தவிர, தேச பக்தி என்றால் இவர்கள் அகராதியில் என்ன அர்த்தம்? ஒரே இடத்தில் குண்டியை தேய்த்துக் கொண்டிருப்பதா?

sundar said...

The fact is reservation has become a convenient tool for the affluent OBC to suppress the SC/ST under the garb of the social injustice purported to have been perpetrated by Brahmins.The fact is most of the Kazhaga followers do not even know that Manu Dharma shastra was given by Manu, a Kshatriya.Another irony is MK quoting Manuneedhi Chola who was famous for following Manu Dharma shastra and hence the name

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது