4/07/2011

டோண்டு பதில்கள் - 07.04.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தி.மு.க. கோருகிறது, தில்லி நிறைவேற்றுகிறது: முதல்வர்

பதில்: அது போன தேர்தல் நிலவரம். நிலைமை இப்போது மாறி விட்டது என்றுதான் நினைக்கிறேன்.

2. கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி
பதில்: இம்மாதிரி கருத்துக் கணிப்பையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது எனது கருத்து.

3. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆணையமே பொறுப்பு: அழகிரி
பதில்: தினகரன் 3 ஊழியர்கள், தா. கிருட்டினன் ஆகியோரது கொலைகளுக்கு யார் பொறுப்பு? இப்போது கூட சிலர் “தா.கிருட்டினனுக்கு ஆனதுதான் உங்களுக்கும் நடக்கும்” என்று மிரட்டப்படுகின்றனரே, அந்த மிரட்டலுக்கு யார் பொறுப்பு?

4. அதிமுகவை ஆதரித்து களமிறங்கினார் நடிகர் சிங்கமுத்து
பதில்: சபாஷ் சரியான போட்டி.

5. தேர்தலில் போட்டியிடுவது நானாக விரும்பி ஏற்றதல்ல: கே.வீ. தங்கபாலு
பதில்: எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

6. 2ஜி ஒதுக்கீட்டில் நேர்மைக்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார் ராசா: குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல்
பதில்: ஊரறிஞ்ச உண்மையை சி.பி.ஐ. அதிகாரபூர்வமான குற்றச்சாட்டாக்கியுள்ளது.

7. ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு: வைகோ பங்கேற்பு
பதில்: இதைத்தானே கூறுகிறீர்கள்? வைக்கோவுக்கு பாராட்டுகள். அவர் பேசாமல் வழக்கறிஞராகவே அதிகம் செயல்படுவது நலம்.

8. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழகத்தை மீட்போம்: சிவகாசியில் ஜெயலலிதா சபதம்
பதில்: 1996-ல் அவசிய தேவை ஜெயலலிதாவை பதவியிலிருந்து இறக்குவது. இப்போதைய தேவை கருணாநிதியை இறக்குவது. அதைத் தவிர தமிழக மக்கள் வேறு என்ன செய்யவியலும்?

9.டாடா, நீரா ராடியா பிஏசி முன்பாக நாளை ஆஜர்
பதில்: டாடா அவர்கள் நன்கு ஒத்துழைத்ததாகவும் நீரா ராடியா போக்கு காட்டினார் என்றும் படித்தேன்.

10. காங்கிரஸை அதிமுகவும், தேமுதிகவும் விமர்சிக்காதது ஏன்? இல. கணேசன்
பதில்: இன்ஷூரன்ஸ்?

hayyram
11. கேள்வி பதில் பகுதிக்கு: உங்கள் நங்கநல்லூர் பஞ்சாமிர்த பகுதிகளை தொகுத்து புத்தகமாக வெளியிடலாமே செய்வீர்களா?
பதில்: யார் ஐயா படிப்பது?

thenkasi
12. பார்ப்பணியப் பத்திரிக்கைகள் ஜெ ஐ ஆட்சியில் அமர்த்த சூழ்ச்சி செய்வதாய் கலைஞரின் பகிரங்க குற்றச்சாட்டு?
பதில்: இப்படித்தான் அவர் பல பத்திரிகைகளுக்கு பூணல் கல்யாணத்தை நடத்தி வைத்த புரோகிதராக மாறி விட்டார். அதற்காக பாராட்டு விழா நடத்தினால் மனம் மகிழ்வார் (நன்றி சோ அவர்களே).

13. தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை பார்க்கும் போது காங்கிரசின் பிடி இறுகுகிறதா?
பதில்: போன தேர்தலிலேயே செய்திருக்க வேண்டியது. இப்போ லேட்தான். பலன் விளைகிறதா இல்லையா என பார்ப்போம். தெருக்குத் தெரு போஸ்டர்கள், வீட்டுச் சுவர்களில் கண்டபடி வாசகங்கள் இல்லை போன்ற விஷயங்களே நல்ல முன்னேற்றம்தானே.

14.மருத்துவர்-திருமா ஒரே அணியில்-படு சந்தர்ப்பவாத அரசியலை பார்க்கும் போது என்ன உதாரணம் நினைவுக்கு வருகிறது?
பதில்: அவர்கள் மட்டுமா சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர்? இவர்களை மட்டும் ஏன் குறிவைக்க வேண்டும்?

15. தேர்தல் கணிப்புகள் சோ அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் போலுள்ளதே?
பதில்: மேலே இரண்டாம் கேள்விக்கான பதில்தான் இங்கும்.

16. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களெல்லாம் ,குறிப்பாய் இந்துக்கள் இந்த தடவை கருணாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டினால்?
பதில்: மனிதனுக்கு இறக்கை முளைத்தால்?


Arun Ambie
கேள்வி-17. விஜயகாந்திடம் அடிபட்டவன் மஹாராஜா ஆவானாமே?
பதில்: முதலில் எம்.எல்.ஏ. ஆகிறாரா என்பதைப் பார்க்கலாமே.

கேள்வி-18. "ஆள்வது திமுகவா, நான் முதல்வரா என்றே தெரியவில்லை", தேர்தல் கமிஷன் கண்டிப்பு பற்றியது என்று சொல்லப்படும் கருணாநிதியின் இந்தப் புலம்பல் குடும்பத்தினரின் அதீத ஆதிக்கம் குறித்த அவரது கருத்து என்கிறேன் நான். Your take?
பதில்: பேண்ட் ஷர்ட்டுகளில் ரகசிய பாக்கெட்டுகள் வைப்பது தங்களது பிழைப்புக்குக் கேடு என ஜேப்படி திருடர்கள் மாநாடு போட்டதாக ஒரு வேடிக்கைக் கட்டுரையை சமீபத்தில் ஐம்பதுகளில் படித்துள்ளேன். இப்போது அது நினைவுக்கு வருகிறது.

19. 4/4/11 தேதியிட்ட தினமலரில் (டீக்கடை பெஞ்சில்) மைக் கண்ட்ரோல் செய்தவரையே விஜயகாந்த் அடித்தார் என்றும் ஆனால் வேட்பாளரை அடித்ததாக ஆளும் கூட்டணி திட்டமிட்டுப் பேசுகிறது என்றும் போட்டிருக்கிறார்களே? மைக்செட்காரரை அடித்தால் பரவாயில்லையோ?
பதில்: அது மட்டும் உண்மையாக இருந்தால், மைக்காரர் தொட்டால் ஷாக் அடிக்கும்படி மைக்கை செட் செய்து வைத்து பிறகு... சேச்சே அப்படியெல்லாம் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

20. 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ஆகியன திமுக அரசின் சாதனை என்று உள்துறை அமைச்சர் சீனாத்தானா பேசியுள்ளாரே? 108 மத்திய அரசின் திட்டமாயிற்றே? பீட்டர் அல்போன்ஸ் போல சீனாத்தானாவும் தேசியக் கட்சி காங்கிரசைத் தமிழகத்தில் ஓரம்கட்டி உட்கார்த்தி வைத்தது கலைஞரின் மாபெரும் சாதனை என்று மார்தட்டுவார் போலிருக்கிறதே? இந்த சூடு சொரணை இவற்றோடு சேர்ந்த இன்னபிற உணர்ச்சிகள் காங்கிரசாருக்குக் கிடையாதோ?
பதில்: தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சீட் கூட பெறாது இந்திரா கலைஞரிடம் காங்கிரசை சமீபத்தில் 1971-ல் விற்ற கேவலத்தை விடவா?


ரமணா
உங்களின் பாணியில் கருத்து சொல்லவும்?
கேள்வி-21. 21. திமுக/அதிமுக தேர்தல் அறிவிப்பு இலவசங்கள்
பதில்: தமிழக மக்களை பிச்சைக்காரர்களாக்குவதில் போட்டா போட்டி. சபாஷ் சரியான போட்டி.

22. தேர்தல் பிரச்சாரம்-கருணாநிதி/ஜெயலலிதா
பதில்: ஆக்‌ஷன் ரீப்ளே, எத்தனாவது முறை என்பது மறந்து போய் விட்டது.

கேள்வி-23. காங்+திமுக/அதிமுக+தேமுக கூட்டணி உள்குத்துகள்
பதில்: மேலோட்டமான அமைதி. தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, சம்பந்தப்பட்டவரிடையே சுமுக நிலை வருவது கடினம்.

கேள்வி-24. காமெடி நடிகர்களின் காசு வாங்க காமெடி பிரச்சாரம்
பதில்: அவர்களைப் பொருத்தவரை நிஜ வாழ்க்கையே பெரிய ஷூட்டிங் மாதிரித்தான்.

கேள்வி-25. ஊடகங்களின் நேர்மையற்ற கருத்து புனைவு/திரிபு பிரச்சாரம்
பதில்: இதில் என்ன புது விஷயம்? எப்போதும் இருக்கும் குலவழக்கம்தானே

கேள்வி-26. 1967 லிருந்து திமுக அரசியலை கவனித்து பார்க்கையில் கழகத்தின் தலைவர் கலைஞரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளவுக்கு யாரும் பயங்கரமாய் விமர்சித்ததாக தெரியவில்லை. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: உங்களுக்கு அப்படி தோன்றலாம், ஆனால் உண்மை இல்லை. காளிமுத்து, எஸ்.எஸ். சந்திரன் போன்றவர்கள் விமரிசனம் செய்ததை விடவா?

கேள்வி-27. விஜய்காந்த் பேச்சில் சில பகுதிகளை எடிட் செய்து பொய்யாய் ஒளிபரப்பும் சன், கலைஞர், மக்கள் தொலைகாட்சிகளை தேர்தல் கமிஷ்ன் கண்டு கொள்ளாதது ஏன்?
பதில்: அதெல்லாம் காரியத்துக்காகாது, தனிப்பட்ட அளவிலும் புகார் தர வேண்டியிருக்கும்.

கேள்வி-28. காங்கிரசின் உள்ளடி வேலை கலைஞருக்கு தெரியவில்லையா இல்லை புரியவில்லையா?
பதில்: புரியாமல் இருக்குமா? இப்போது அதை வெளிக்காட்டுவதில் பிரயோசனமில்லை.

கேள்வி-29.கலைஞருக்கு வயதாய்விட்டது அவருக்கு ஓய்வு கொடுங்கள் எனும் சீமானின் பேச்சு மக்களிடம் எடுபடுமா?
பதில்: இப்போது கலைஞரின் வயது பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது.

கேள்வி- 30. ஒருவேளை ஜெயலலிதா ஜெயித்து வந்தால் 2006 முதல் 2011 வரை தனக்கு தொந்திரவு ஏதும் (1996 லிருந்து 2001 காலத்தை போல்)தராத திமுக தலைவருக்காக ,கலைஞரின் குடும்பத்திற்கு தொந்திரவு ஏதும் தரமால் நன்றி காப்பாறா?
பதில்: 1991-96-ல் கூட ஜெயலலிதா தொந்திரவு தந்ததாக நினைவில்லை. ஆனால் 1996-2001-ல் கலைஞரும், 2001-06-ல் ஜெயும் தொந்திரவு கொடுத்தனர். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

Rajkumar said...

இனிமையாகவும் நல்ல விமர்சனமாகவும் உங்கள் பதில்கள் உள்ளன.

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: ராகுல் சூசகம்
2.குடும்ப ஆட்சியை தண்டிக்கும் தேர்தல்: ஜெயலலிதா
3.தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சிதான்: ஸ்டாலின்
4.காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்: விஜயகாந்த்
5. கள் இறக்க அனுமதிக்கப்படும்: ஜெயலலிதா

RV said...

// பதில்: 1996-ல் அவசிய தேவை ஜெயலலிதாவை பதவியிலிருந்து இறக்குவது. இப்போதைய தேவை கருணாநிதியை இறக்குவது. அதைத் தவிர தமிழக மக்கள் வேறு என்ன செய்யவியலும்? //
நச்!

pt said...

கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10
விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்
வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை
எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள்
என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட்
வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல
நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி
அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து
கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி
செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும்
கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக
இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால்
காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி
அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர்
வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி
இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி-
பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும்
கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா?
அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல.
கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம்,
கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி
மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில
அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு
கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு
விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய
அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன்
குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம்
கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு
வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள்
கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.

pt said...

கோபத்தை தவிர்த்தால் வாழ்க்கை அழகாகும்!' மனநல மருத்துவர் பத்மாவதி:

மனதை கூலாக வைத்திருப்பது, வாழ்நாளை அதிகரித்து, வாழும் நாட்களை அழகாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும்.
மனதை ஜெயித்தவர்கள், வாழ்க்கையை ஜெயித்தவர்கள் என்று சொல்லலாம்.
அந்த மனதை ஜெயிக்க, அதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.
அப்போது தான், நம் உடல் இயக்கமும், செயல் இயக்கமும் பிரச்னையில்லாமல் சீராகப் போகும்.
மன அழுத்தம், மன பதற்றம், மன சோர்வு என்று மனதை இன்னும் சிக்கலாக்குவது,
கோபம் தான். இன்றைய பரபரப்பு வாழ்க்கை முறையில், கோபம் வருவதற்கான காரணம், அளவுக்கு மீறிய வேலைச் சுமை தான். தினசரி வாழ்க்கையில், சில விஷயங்களை சரியாக கடைபிடித்தாலே, இந்த பிரச்னையிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்து விடலாம்.
அதிக வேலைப்பளு தான் பிரச்னைக்கு காரணம் என்றால்,
தினமும் குறைந்தது அரை மணி நேரம் பாட்டு கேட்பது, பிடித்த புத்தகம் படிப்பது,
போன்ற மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை செய்வது நல்லது.
நினைத்தது நடக்கவில்லை என்றால் தான், மன அழுத்தம் அதிகமாகிறது.
எந்த விஷயம் நடக்குமோ, அதற்கான எதிர்பார்ப்பை மட்டும் மனதிற்குள் வளர்த்து கொள்வது நல்லது.
நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால், பிரச்னையை ஒரு நல்ல தோழமையிடம் பகிர்ந்து கொள்வது, மனச்சுமையை குறைத்து, பிரச்னையை எதிர்கொள்வதற்கான வழிகளை சொல்லும்.
அதையும் மீறி பிரச்னை அதிகமானால், மனநல மருத்துவரை நாடுவதே சிறந்தது.

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

டோண்டு க்கு வேண்டு கோள்!! தாங்கள் தயவு செய்து எங்கள் பக்கம் வந்து ஒரு விமரிசனம் - குறைந்தது ஒரு பின்னூட்டமாவது போட அன்புடன் அழைக்கிறோம்!!!

http://sagamanithan.blogspot.com/


(interpreter& translator- DIFF மாதிரி விமரிசனம்-பின்னூட்டம் வித்தியாசம் என்ன? என்று கூட எழுதலாம்!)

hayyram said...

//புத்தகமாக வெளியிடலாமே செய்வீர்களா?
பதில்: யார் ஐயா படிப்பது? // முதல்ல வெளியிடுங்க, அப்புறம் வாசிப்பு உலகத்திலும் உங்களுக்கென்று தனியாக ஃபாலோயர்ஸ் உருவாயிடுவாங்க. எந்த முதல் எழுத்தாளரையும் யாரும் தெரிந்துகொண்டு வாசிக்க வில்லை. வாசித்த விஷயம் பிடித்துப் போக அவர்கள் எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டார்கள். சும்மா கிறுக்குறவங்களே புத்தகம் போடும் போது பழைய நியாபகங்கள், தனிப்பட்ட அனுபவங்கள் என்று இருக்கும் உங்கள் விஷயங்களை புத்தகமாக வெளியிட்டால் அதை வாசிப்பவர்கள் என்று ஒரு பக்கம் வாசகர்கள் வரட்டுமே! எதுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கு சார்! ட்ரை பண்ணுங்க.

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.ரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
7.திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள்: விஜயகாந்த்
8.ஊழலில் திமுக-அதிமுக சமம்: சுஷ்மா ஸ்வராஜ்
9.தமிழக பத்திரிகைகளுக்கு செலக்டிவ் அம்னீஷியா: சேலத்தில் கனிமொழி பேச்சு
10. லோக்பால் மசோதா வரைவுக்கான கூட்டுக்குழு குறித்து அரசாணைக் குறிப்பு வெளியிட்டது அரசு

Surya said...

டோண்டு சாரின் கேள்வி பதில் பகுதிக்காக:
1)விடுதலையில் ஒருவர் இப்படி கேள்வி கேட்கிறார்
கேள்வி: 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சி என்று கூறி அதனை ஒழித்தே தீரவேண்டும் என்று கூறிய இடது சாரிகள், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அந்த ஆட்சியைக் கொண்டு வந்தே தீருவோம் என்கிறார்களே?
_ உ, மாரிமுத்து, கச்சனம்
பதில்: இது அவர்களைப் பொறுத்தவரை சகஜம்; வெகு சகஜம், சென்ற தடவை நாம் எடுத்த நிலை தவறு என்று ஒரு வாரம் விவாதித்து முடிவு எடுப்பார்கள்_ ஒவ்வொரு முறையும்! பழைய வரலாற்றைக் கூறுகிறேன்.

வெட்கமில்லாமல் வீரமணியிடம் ஒருவர் இப்படிக் கேள்வி கேட்கிறார். வீரமணியும் தன் பேனாவை முறுக்கிக்கொண்டு இப்படி தெனாவெட்டாக பதில் அளித்துள்ளார். வீரமணி கடந்த காலத்தில் என்ன செய்தார் என்ற வரலாறு அவருக்கே மறந்து போய்விட்டது மாதிரிப் பேசுகிறாரே. எப்படி இவர்களால் வெட்கமில்லாமல் இப்படி நடந்து கொள்ள முடிகிறது?

2. இந்தக் கேள்வியும் வீரமணி சம்பந்தமானதே. கீழ்க்கண்ட கேள்வி பதில் விடுதலையில் வந்தது. தேர்தல் கமிஷனர் ஒரு முஸ்லிம். இங்கே எங்கு பூணுல் வந்தது?
கேள்வி: தேர்தல் ஆணையம் தனது அதிரடியான, வேகமான, உறுதியான நடவடிக்கைகளால், அரசியல் எத்தர்களின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டுள்ளதாக துக்ளக் எழுதியிருக்கிறதே?
- _வி.ஜெயபால், சென்னை _ 11
பதில்: அந்தக் கயிறு பூணூல் கயிறுகளாக இருந்திருந்தால் ஒழிய சோ வின் (குடுமி) பேனா சும்மா எழுதாது! புரிகிறதா
3. அன்னா ஹசாரே பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஊழலற்ற இந்தியா உருவாக அவர் செயல் ஒரு பிள்ளையார் சுழியாக இருக்குமா? அல்லது இதுவும் விழலுக்கு இறைத்த நீர்தானா?

4.உங்கள் வாக்கு யாருக்கு என்று முடிவு செய்து விட்டீர்களா?

pt said...

> பாசத்துடன் அப்பா...
>
>
>
> *அப்பா... *
>
>
>
> எப்படி எப்படி
> எல்லாமோ
> தன் பாசம்
> உணர்த்துவாள் அம்மா
> ஒரேயொரு
> கைஅழுத்தத்தில்
> எல்லாமே
> உணர்த்துவார்
> அப்பா...
>
>
>
>
>
> முன்னால்
> சொன்னதில்லை
> பிறர் சொல்லித்தான்
> கேட்டிருக்கிறேன்
> என்னைப்
> பற்றி பெருமையாக
> அப்பா
> பேசிக்கொண்டிருந்ததை...
>
>
>
>
>
> அம்மா
> எத்தனையோ முறை
> திட்டினாலும்
> உறைத்ததில்லை
> உடனே
> உறைத்திருக்கிறது
> என்றேனும்
> அப்பா
> முகம் வாடும் போது
>
>
>
>
>
> உன் அப்பா
> எவ்வளவு உற்சாகமாக
> இருக்கிறார் தெரியுமா
> என என் நண்பர்கள்
> என்னிடமே சொல்லும்
> போதுதான் எனக்குத்
> தெரிந்தது
> எத்தனை பேருக்குக்
> கிடைக்காத தந்தை
> எனக்கு மட்டும் என...
>
>
>
>
>
> கேட்ட உடனே
> கொடுப்பதற்கு
> முடியாததால் தான்
> அப்பாவை அனுப்பி
> இருக்கிறாரோ
> கடவுள்..?
>
> [image:
> cid:image010.jpg@01CAD5A6.0F0D2E90]
>
>
> சிறுவயதில்
> என் கைப்பிடித்து
> நடைபயில
> சொல்லிக்கொடுத்த
> அப்பா
> என் கரம் பிடித்து
> நடந்த போது
>
> என்ன நினைத்திருப்பார்..?
>
>
>
>
>
> லேசாக என் கால்
> தடுமாறினாலும்
> பதறுவார் அப்பா
> இன்று அவர்
> தடுமாறிய போது
> அருகில் நான் இல்லை...
>
>
>
>
>
> அம்மா செல்லமா
> அப்பா செல்லமா
> என கேட்டபோதெல்லாம்
> பெருமையாகச் சொல்லி
> இருக்கிறேன்
>
> அம்மா செல்லமான
> அப்பா செல்லம் என.
>
>
> எத்தனையோ பேர்
> நான் இருக்கிறேன்
> எனச் சொன்னாலும்
> அப்பாவை போல்
> யார் இருக்க முடியும்..?
>
>
>
>
>
> நானும் காட்டியதில்லை
> அவரும் காட்டியதில்லை
> எங்கள் பாசத்தை...
> இருந்தும் காட்டிக்
> கொடுத்த கண்ணீரைத்
> துடைக்க இன்று
> அப்பாவும் அருகில் இல்லை..
>
>
>
>
>
> அம்மாவிடம்
> பாசத்தையும்
> அப்பாவிடம்
> நேசத்தையும்
> இன்றே உணர்த்துங்கள்
> சில நாளைகள்
> அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...

ரமணா said...

தேர்தல் ஸ்பெசல் கமெண்ட்?

இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்


1.அதிமுக கூட்டணி ஜெயித்தால்!

அ.கருணாநிதி
ஆ.தங்கபாலு
இ.ராமதாசு
ஈ.திருமாவளவன்
உ.பெஸ்ட் ராமசாமி
ஊ.வீரமணி
எ.வடிவேலு
ஏ.சன்/கலைஞர்/மக்கள் டீவிகள்
ஐ.இலவச எதிர்பார்ப்பாளர்கள்/பாமர கிராம மக்கள்
ஒ.மகளிர் சுய உதவிக் குழுக்கள்
ஓ.திமுக ஆதரவு பத்திரிக்ககைகள்/வெப்தளங்கள்(தினகரன் தந்தி,விடுதலை,முரொசொலி,குங்குமம்,நக்கீரன்...)
ஓள. டோண்டு ராகவன்


2.திமுக கூட்டணி ஜெயித்தால்!
அ.ஜெயலலிதா
ஆ.விஜயகாந்த
இ.பாண்டியன்(வ.கம்)
ஈ.இ.கம் ராமகிருஷ்ணன்
உ.சோ
ஊ.விஜய்/அஜித் மற்றும் திரை உலகம்
எ.வியாபாரிகள்
ஏ.படித்த இளைஞர்கள்
ஐ.நகர வாசிகள்/உயர் ஜாதி வகுப்பினர்
ஒ.மகளிர் சுய உதவிக் குழுக்கள்
ஓ.அதிமுக ஆதரவு பத்திரிக்ககைகள்(தினமலர்,அண்ணா,தினமணி,துக்ளக்,விகடன்,குமுதம்)
ஓள. டோண்டு ராகவன்


3.யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கா விட்டால் பாதிக்கப் படும் அதிக நபர் யார் காரணம்?
அ.கருணாநிதி/ஜெயலலிதா
ஆ.ஸ்டாலின்/அழகிரி
இ.விஜயகாந்த/வடிவேலு

Arun Ambie said...

For டோண்டு பதிலகள்:
கம்யூனிஸ சீனா முதலாளித்துவத்தை தீவிரமாக அதரிக்கிறதாம்.....
http://www.economist.com/node/18527446?fsrc=scn/fb/wl/ar/marketofideas
இங்கே முதலாளித்துவம் நிர்மூலத்தின் மூலகாரணம் என்று சிவப்புத்துண்டு போட்டுக்கொண்டு முச்சந்திக்கு முச்சந்த்தி கூவும் இடது வலது கம்யூனிஸ்டுகள் என்ன செய்வார்களாம்??

ரமணா said...

4.கருத்துக்கணிப்புகள் தரும் அதிர்ச்சியால் கருணாநிதி என்ன நிலை எடுப்பார்?
5.கருணாநிதிக்கு மாற்று ஜெயலலிதா இல்லை என்ற போதும் சோ போன்றோரின் ஜெயலலிதா பாசம் சரியா?
6.கேப்டன் விஜயகாந் சமீபத்திய பேச்சுகள் அவரது மக்கள் செல்வாக்கை குறைத்து விட்டதா?
7.வருங்காலத்தில் கறுப்பு எம்ஜிஆர் விஜயகாந் ஆட்சியை பிடிப்பாரா?
8.அழகிரி திமுக,ஸ்டாலின் திமுக,தயாநிதி திமுக,கனிமொழி திமுக உதயமானால் தொண்டர்கள் யார் பக்கம் ?
9.ஜெயலலிதாவுக்கு பின்னால் அதிமுக இருக்குமா?
10.வைகோவின் எதிர்காலம் இனி?

ezhil arasu said...

//Blogger ரமணா said...

4.கருத்துக்கணிப்புகள் தரும் அதிர்ச்சியால் கருணாநிதி என்ன நிலை எடுப்பார்?//

தலைவர் கலைஞருக்கு இந்த கவனிப்பு கணிப்புகள் பற்றிய தகவல் ஏற்கனவே தெரியும்.இவைகளை எப்படி கையாள்வது என்பது அவருக்கு கைவந்த கலை.மக்களின் நாடி பார்த்து தோல்வியை எதிரிக்கு எப்படி பரிசாய் கொடுக்கப் போகிறார் என இந்திய துணைக்கண்டமே பார்க்கப் போகிறது .

மே 13 க்குப் பிறகும்- ஏன் காலம் உள்ளவரை - தமிழகத்தில் கழக ஆட்சி தான்.
பூணுல்களை நம்பி இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இனியொருமுறை ஏமாறத் தயராயில்லை.

தமிழ்ச் சமுதாயம் செய் நன்றி பாராட்டும் பண்பினர்
சத்தியம் போற்றும் ஒழுக்க சீலர்கள்

தருமனின் தனி ஆட்சி தொடரும்.

thenkasi said...

கடைசி செய்தி:

படித்தவர்கள்,பணக்காரர்கள்,
நடுத்திரவர்க்கம்,நகரத்தார்,
முன்னேறிய ஜாதியினர் ஆகியோரின் வாக்குகள் (90 %)அதிமுகவுக்கு செல்கிறதாம்!

ஏழை, எளியவர்கள்,படிக்காத பாமரர்கள்,கிராமத்தார்,பிற ஜாதியினர்,முஸ்லீமகள்,கிருத்துவர்கள்
ஆகியோரின் வாக்குகள் (90%)திமுகவுக்காம் !

இறுதியில் கலைஞர் வெற்றி பெறுவார்.
2011 லிருந்து 2016 வரை திமுக,காங் கூட்டணி ஆட்சி செய்ய போவதாய் தகவல்கள் காற்றில் மிதந்து வருகிறது!

thenkasi said...

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

thenkasi said...

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது