4/12/2011

ஓட்டு போடும் முன்னால் யோசிக்கவும்

தமிழக வாக்காளர்களுக்கு முன்னால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பார்த்துத்தான் ஒட்டு போடுவது நலமாக இருக்கும்.

ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மறு பக்கம் ஆளும் திமுக கூட்டணி. இரு கூட்டணிகளிலும் உள்ள பிரதான கட்சிகள் இரண்டிலுமே பல குறைகள் உண்டு. இரு கட்சிகளுமே ஆட்சி செய்துள்ளன. 1991 முதல் மாற்றி மாற்றித்தான் அவை ஆட்சி புரிந்துள்ளன. ஆளும் கட்சி ஜெயிப்பது கடந்த இருபது வருடங்களில் குறைந்த பட்சம் பொது தேர்தல்களில் இல்லை.

1991-96-ல் அதிமுக ஆட்சி அதனுடைய அடாவடி போக்குக்காகவே மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்பது காலத்தின் கட்டாயம். 1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
அதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே.

தமிழக மக்கள் கடந்த 20 ஆண்டுகால ரிகார்டை வைத்துப் பார்க்கும்போது திமுக ஆட்சியை இம்முறை அகற்றுவதே தமிழகத்துக்கு நல்லது.

என்ன செய்வது? மோதி போன்ற பேர்வழி நம் தமிழக அரசியலில் செயலுடன் இல்லையே. இருந்திருந்தால் தமிழகமும் இன்னொரு குஜராத்தாக மாறியிருக்குமே. அதை விடுங்கள் கிட்டாததை பேசினால் டென்ஷன் அதிகமாவதே மிச்சம்.

முதலில் சொன்னதையே மீண்டும் கூறுவேன்.

தமிழக வாக்காளர்களுக்கு முன்னால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பார்த்துத்தான் ஒட்டு போடுவது நலமாக இருக்கும்.

இப்போது திமுக ஆட்சி போக வேண்டிய கட்டாயத்தில் தமிழக நலன் அதிமுகவுக்கு ஓட்டளிப்பதிலேயே உள்ளது.

நான் வசிக்கும் ஆலந்தூர் தொகுதியில் விஜயகாந்த் கட்சியின் வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன் நிற்கிறார். சாதாரணமாக அவருக்கு நான் ஓட்டு போட விரும்பாவிட்டாலும் இப்போதைய தேவைக்கு அவருக்குத்தான் ஓட்டு போட வேண்டிய கட்டாயம். எனது அபிமான கட்சியான பாஜக சார்பில் நிற்பவர் மருத்துவர் சத்திய நாராயணா. அவர்தான் நான் ஏற்கனவேயே இட்ட 42 ஆண்டுகளாக மரணத்தின் அருகாமையில் என்னும் பதிவில் குறிப்பிட்ட சர்ஜன். அவர் மட்டுமே இப்போதைய இத்தொகுதிக்கான வேட்பாளர்களிலேயே மிகச் சிறந்தவர். இருந்தாலும் அவருக்கு ஓட்டுப் போடும் நிலையில் நான் இல்லை. தேவையற்று திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதுதான் அதனால் நடக்கும்.

ஆகவே நண்பர்களே, நன்கு யோசித்து ஓட்டு போடுங்கள் என நான் கூறுவது மதில் மேல் இருக்கும் வாக்காளர்களுக்காகவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

27 comments:

சுழியம் said...

திமுக எதிர்ப்பு ஓட்டு ஓட்டுப் பிரியும் என்று கணக்குப் போட்டு, விஜய்காந்த் கட்சிக்கு ஓட்டுப் போடுவதன் மூலம் குட்டையில் உள்ள புதிய மட்டையைத்தான் தேர்ந்தெடுக்கிறீர்கள். அதற்குப் பதிலாக யார் நல்லவர், நமக்கு நல்லது செய்வார் என்று தோன்றுகிறதோ அவருக்கு ஒட்டுப் போடுங்கள்.

போனமுறை விஜய்காந்த் தோற்றாலும், அவர் பெற்ற ஓட்டு சதவீதம்தான் அவரை இந்த அளவு வரவழைத்தது.

வெற்றியைக் கொடுக்க வழி இல்லாவிட்டாலும், ஓட்டு சதவீதத்தைக் கூட்ட ஓட்டுப் போடுங்கள்.

ஓட்டுப் போடுங்கள் பாஜகவிற்கு.

சுழியம் said...

தமிழ் இந்துவில் ஆலந்தூர் மள்ளன் என்ற பெயரில் கலக்கலாகக் கதைகள் எழுதுவது நீங்கள்தானா?

உங்கள் தொகுதி ஆலந்தூர் என்று சொல்லி இருப்பதால்...

கிருஷ்ண மூர்த்தி S said...

திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பது அவசியம் தான்!

ஆனால், பண்ருட்டி மாதிரி சகுனிகளை ஜெயிக்கவைப்பதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லையே!

திமுக அதிமுக இரண்டு அணிகளிலும் உள்ள உதிரிக்கட்சிகளை நிராகரிப்பதும் கூடக் காலத்தின் கட்டாயம் தான்!

ஆனால், அதை சாதிக்க நம் ஜனங்களுக்குத் தெரிய வேண்டுமே!

radhakrishnan said...

my case is quite similar to yours.ur sugestion is accepted.
radhakrishnan,madurai.

Suresh Ram said...

""இப்போது திமுக ஆட்சி போக வேண்டிய கட்டாயத்தில் தமிழக நலன் அதிமுகவுக்கு ஓட்டளிப்பதிலேயே உள்ளது.""
2011 இல் Donxdu

இப்போது அதிமுக ஆட்சி போக வேண்டிய கட்டாயத்தில் தமிழக நலன் திமுகவுக்கு ஓட்டளிப்பதிலேயே உள்ளது.

2016 இல் Dondu

dondu(#11168674346665545885) said...

@Suresh Ram
I told this too, have u forgotten?

//1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
அதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே. //

Regards,
Dondu N. Raghavan

thenkasi said...

டோண்டு அவர்கள் சொல்வது மிகச் சரியான அறிவுரை.
எதிர்ப்பு வாக்குகள் பிரிவது தமிழகத்தை இன்னும் இலவச படு குழியில் தள்ளிவிடும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொடுமை தொடரச் செய்யும்.

நிச்சயமாய் ஜெயலலிதா கருணாநிதிக்கு மாற்று இல்லை தான் இருந்த போதிலும் வேறு வழியில்லாச் சூழல்.

மீண்டும் திமுக ஆட்சி தொடர்ந்தால் நினைக்கவே பயமாய் இருக்கிறது.இது எல்லா அலுவலகங்களிலும் பெரும் பான்மையினரால் பேசப் படும் செய்தி. 1968 காலத்து திமுக அனுதாபிகளே ஆட்சி மாற்றம் தேவை என கருதுகின்றனர்.

இலவசங்களால் பயன் பெற்றோரின் வாக்கு வங்கியை திமுக அள்ளி செல்கிறது.

ஓட்டுக்கு 500 முதல் 1000 வரை கொடுக்கபடும் பணத்திற்கு சத்தியம் காக்க போடப்படும் ஓட்டுக்கள்.

எனவே நடு நிலையாளர்கள் தங்கள் வாக்குகளை தங்கள் தொகுதியில் நிற்கும் நல்லவர்கள் எவராயிருந்தாலும்,எந்தக் கட்சியாய் இருந்தாலும் அவர்களுக்கு இந்ததடவை அருள்கூர்ந்து போட வேண்டாம்.அவர்களின்,பாஜகவின் ஓட்டு சதவிகிதத்தை கூட்டு செயலை அடுத்த தேர்தலுக்கு ஒத்தி வைக்கவும்.


அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சிறப்பாய் இல்லாவிடாலும் .வேறு வழி இல்லை .
டோண்டு அவர்கள் சொல்வது போல்
அதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளித்து மக்கள் சக்தி பண சக்தியை விட பெரியது. என சாதிப்போம்.


நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

thenkasi said...

/dondu(#11168674346665545885) said...

@Suresh Ram
I told this too, have u forgotten?

//1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
அதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே. //

Regards,
Dondu N. Raghavan/

திமுக ஆதரவு பதிவர்கள் குழப்புவார்கள்.

பிராமண துவேஷத்தை கிளப்புவர்.

எதிர்ப்பவர் எல்லோருக்கும் பூணுல் மாட்டி அழகுபார்ப்பார்கள்
கலங்காமல் ஆட்சி மாற்றம் தேவை என முழங்குவீர் நடுநிலையாளர்களே.
திமுகவே படித்தவர்களை பார்த்து பயம் கொண்டுதான் எம்ஜிஆரின் பாணியை பின்பற்றி கிராமங்களை நோக்கி சென்றுள்ளது.


டோண்டுவின் பதில் விளக்கம் நெத்தி அடி

hayyram said...

//விஜய்காந்த் தோற்றாலும், அவர் பெற்ற ஓட்டு சதவீதம்தான் அவரை இந்த அளவு வரவழைத்தது. வெற்றியைக் கொடுக்க வழி இல்லாவிட்டாலும், ஓட்டு சதவீதத்தைக் கூட்ட ஓட்டுப் போடுங்கள்.// யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் இப்போது ஏதோ அவசரத் தேவையில் இருக்கிறோம். பாஜக விற்கு ஓட்டு போட்டு அவர்கள் சதவீதத்தை அதிகரிக்கச் செய்து எதிர்காலத்தில் பாஜக ஆட்சி தமிழகத்தில் வரவழைப்பது என்பது ஹோமியோபதி வைத்தியம் போன்றது. உதிரிகள் ஜெயித்தாலும் பரவாயில்லை என்று ஜெ யையும் அவர்கள் கூட்டனியையும் ஜெயிக்க வைத்து தி மு க தோற்பதற்கு வழிவகுப்பது அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தும் அல்லோபதி வைத்தியம் போன்றது. தற்போது நமக்கு தேவை அல்லோபதி வைத்தியம் தான். கருணாநிதி போனதற்கு பிறகு ஹோமியோபதிக்கு மாறிக்கொள்ளலாம்!

Arun Ambie said...

ஆக பண்ருட்டியார் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறீர்கள். ஜெ ஆட்சிக்கு வருவது ஆட்சியாளர் மாற்றம் என்பது தவிர்த்து பெரிய அளவில் ஆட்சிமுறை மாற்றங்களைத் தந்துவிடப் போவதில்லை.
ஜெவுமே முதலைக்கு உணவளித்து உணவாவதைத் தள்ளிப் போடும் appeaser தான்.
பாஜக இல்லையென்றால் 49 ஓ. இதுவே என் முடிவு.

thenkasi said...

/Arun Ambie said...

ஆக பண்ருட்டியார் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறீர்கள். ஜெ ஆட்சிக்கு வருவது ஆட்சியாளர் மாற்றம் என்பது தவிர்த்து பெரிய அளவில் ஆட்சிமுறை மாற்றங்களைத் தந்துவிடப் போவதில்லை.
ஜெவுமே முதலைக்கு உணவளித்து உணவாவதைத் தள்ளிப் போடும் appeaser தான்.
பாஜக இல்லையென்றால் 49 ஓ. இதுவே என் முடிவு.//

அருண் அம்பிக்கு ஒரு திறந்த மடல்

இந்துக்களை திருடன் என்று வசைபாடியவர்,பாஜக கட்சியை பண்டாரம் கட்சி என்று எள்ளி நகையடியவர்,பிராமண குலத்தை கேலியும் கிண்டல் செய்து மகிழும் கபட வேடதாரி,தன்னை சூத்திரன் எனச் சொல்லி அனைவரையும் ஏமாற்றும் மனிதருக்கு அவர் எண்ணிய வஞ்சக விலையில் விழ வேண்டாம் என கேட்டுகொள்வது ஒவ்வொரு இந்துவின் கடமை.
அவர் இது மாதிரி பிராமண வாக்குகளை குழப்ப வேண்டும் என எண்ணித்தான் பாஜகத்லைவர் திரு இல கணேசனின் பிறந்த நாளூக்கு சென்று போலி மரியாதை செய்தார் கருணாநிதி என நடுநிலை பத்திரிக்கைகள் எழுதியதை மறந்து விட்டீர்களா?

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் திமுகவின் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு
ஏதுவாக உங்கள் வாக்குகளை வீணாக்கமல் பதிவு செய்ய நடு நிலையாளர்களின் கோரிக்கை படி நடக்கவும்..

கருணாநிதியின் அரசியல் தந்திரத்திற்கு பலியாகவேண்டாம்.

பாஜகவுக்கோ ,சுயோச்சைக்கோ,49 ஓ க்கோ போடும் வாக்கு திமுகவை மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் செயலுக்கு துணை போனதாகிவிடும்.

அருண் அம்பி அவர்களே அறிவுஜீவி சுயநலக் கலப்பில்லா திரு.சோ அவர்களின் அறப் போராட்டத்திற்கு ஆதரவு செய்யவும்.

thenkasi said...

அருண் அம்பி அவர்களே இந்த தளத்தை பார்க்கவும்.

சோ மற்றும் டோண்டு அவர்களின் அறப் போராட்டம் ஜெயிக்கட்டும்.


http://savukku.net/

http://savukku.net/home/715-2011-04-12-09-57-37.html

Saha, Chennai said...

//என்ன செய்வது? மோதி போன்ற பேர்வழி நம் தமிழக அரசியலில் செயலுடன் இல்லையே. இருந்திருந்தால் தமிழகமும் இன்னொரு குஜராத்தாக மாறியிருக்குமே. //

எப்படி, மற்ற சமுதாயத்தினரை கொன்று குவித்து, அவர்களின் பிணங்களின் மீதேறி செய்யும் ஆட்சியா?

மக்களின் பணத்தை அவர்களுக்காக பயன்படுத்தாமல் (உலக) வங்கிகளில் குவித்து வைத்தால் அது நல்லாட்சியா?

சமூக நீதி, அது எக்கேடு கேட்டால் என்ன?

Unknown said...

//தேவையற்று திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதுதான் அதனால் நடக்கும்//

டோண்டு ஸார்,
மிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
இம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.

thenkasi said...

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் கடைசியில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

காலையில் ஓட்டுச் சாவடிகளில் வாக்களப் பெருமக்கள் பேசிக் கொள்வதை பார்த்தால் சோவின் கணிப்பும்,பத்திரிக்கைகளின் கருத்துகணிப்புகளும் உண்மையாகி.............

நல்லது நடந்தால்
மாற்றம் நடந்தால்
இது இறைவனின் தீர்ப்பாகும்

தேர்தல் கமிஷனுக்கு அனைவரும் ஓ போடலாம்.


எம்ஜிஆரின் பாட்டு:

அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே

thenkasi said...

அடுத்த வருடத்திலிருந்து 14-1-2012

சித்திரை முதல் நாளை இறை நம்பிக்கையுள்ள பெரும்பான்மையோரின் விருப்பப்படி தமிழ் புத்தாண்டாய் இந்துக் கோவில்களில் கொண்டாட காலம் கை கொடுக்குமா?

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அறங்காவலர்களாய்போட்டு அடிக்கப்படும் கூத்துக்கள் நிறுத்தபடுமா?

சினிமாஉலகம் சுதந்திரமாய் செயல்பட விடப் படுமா?

அரசு அலுவலகங்கள் ராஜாஜி/காமராஜ்/அண்ணா காலம் போல் நேர்மையாய் செயல் பட அனுமதிக்கப் படுமா?


காலிமனை விலைகள் கட்டுப்படுத்தப்படுமா?

இந்திய மீனவர்கள் வாழ்வு காக்கப்படுமா?
அமைதி மீண்டும் திரும்புமா?

thenkasi said...

டோண்டு ஸார்,
மிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
இம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.

டோண்டு ஸார்,
மிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
இம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.

டோண்டு ஸார்,
மிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
இம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.

Gokul said...

//என்ன செய்வது? மோதி போன்ற பேர்வழி நம் தமிழக அரசியலில் செயலுடன் இல்லையே. இருந்திருந்தால் தமிழகமும் இன்னொரு குஜராத்தாக மாறியிருக்குமே. //

டோண்டு சார்,
உங்களுக்காகவே எழுதின மாதிரி இருக்கு இந்த பதிவும் அதன் பின்னூட்டங்களும்.

http://paraneetharan-myweb.blogspot.com/2011/04/blog-post_05.html

வஜ்ரா said...

பகுத்தறிவுவியாதிகளெல்லாம் தான் பதிவுலகில் நிறைய இருக்கிறார்கள். அதற்காக அந்த முட்டாக் கூமுட்டைகளுக்கு பதில் சொல்லிகிட்டு திரிஞ்சிட்டு இருந்தோம்னா நம்ம வாழ்க்கை வெளங்கிடும்.

hayyram said...

மோடிக்கெதிராக பேசும் முஸ்லீம் கூட்டத்தினர் மதக்கலவரம் ஒன்றை மட்டும் வைத்தே தூற்றி வருகிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் குஜராத்தில் நடந்தது என்றால் இந்துக்களை ரயிலில் வைத்து முஸ்லீம்கள் கொளுத்தினார்கள் என்ற ஆரம்பத்தினால் தானே என்கிறது செய்திகள். நீதிமன்ற தீர்ப்புகளும் இந்துக்கள் முஸ்லீம்களால் திட்டமிட்டே கொளுத்தப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. நிஜம் அது தானே. ஆனால் முன்னதாக நடந்த ரயில் எரிப்பு சம்பவம் பற்றி எந்த முஸ்லீமும் வாய் திறக்க மாட்டான்.

இதில் ஒரு அயோக்கியத்தனம் என்னவென்றால் கோத்ரா ரயிலை மோடியே கொளுத்தினார் என்று மீட்டிங் கேசுகின்றனர் முஸ்லீம் மதவெறி அமைப்புக் கூட்டத்தினர்.

கோத்ராவை விடுங்கள்... அமெரிக்காவின் ட்வின் டவரை முஸ்லீம் கூட்டத்தினர் விமானத்தாக்குதல் நடத்தினார்கள் என்பது உலகறிந்த செய்தி. அதையும் நம்மூர் மதவெறியர்கள் அமெரிக்காவே திட்டமிட்டு விமானத்தில் குண்டுகளைச் சுமந்து சென்று ட்வின் டவரை இடித்து விட்டது என்கிறார்கள்.

பாவம் முஸ்லீம்கள் எல்லாம் வாயில் வைத்தால் கூட கடிக்கத்தெரியாத குழந்தைகள் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள். ஆக முஸ்லீகள் சுற்றும் பூவை அப்படியே நம்பி ஏமாந்து போகும் கூட்டம் தமிழ்க்கூட்டம் என்று அவர்களும் இந்து , மோடி எதிர்ப்பாளர்களும் நினைத்தால் அது அவர்களது வெகுளித்தனம். அதைத்தவிற மோடி ஆட்சி பற்றி வேறு விமர்சனமே வைக்கத்தெரியாது.

கேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் ஒருவர் மோடியின் ஆட்சியை நேரில் கண்டு புகழ்ந்து விட்டதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவு காழ்பு கொண்ட மனிதர்கள் தான் இங்கிருப்பவர்கள். அவர்களால் வேறென்ன செய்ய முடியும்?

முஸ்லீம்களின் கொடூர மத வெறியை பார்த்த பின்னும் மோடி மீது மோடி மஸ்தான் குற்றச்சாற்றை சொல்ல முஸ்லீம்களுக்கு அருகதை இருக்கிறதா என்று யார் வேண்டுமானாலும் கேட்கலாம்! பாருங்கள் மத வெறி கொடூரத்தை..

http://hayyram.blogspot.com/2011/02/blog-post_20.html

இவர்களுக்கு மோடியை மதவெறியர் என்று கூற என்ன அருகதை இருக்கிறது? இந்தியாவில் சிறுபான்மை என்கிற ஒன்றை உணர்வால் இவர்களது உட்பிரிவினை வாத கொடூரங்கள் வெளியே தெரிவதில்லை. மற்ற படி மதவெறி கொடூரத்தில் முதன்மையானவர்கள்....

அருள் said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

hayyram said...

இந்திய வரலாறு என்பதே பெரும்பாலும் வெள்ளையர்களாலும் நேரு போன்ற வெள்ளைப் பிரியர்களாலும் மாற்றம் செய்யப்பட்ட வரலாறு. ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம் என்கிற பாரம்பரிய பக்தி பாடலைக் கூட இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று கூறி அதில் ஈஸ்வர அல்லா தேரே நாம்
சபுகோ சன்மதி தே பகவான் என்ற வரியை சேர்த்து ஒரு ராமர் பாடலில் அல்லாவைக் கலந்தவர்கள் இந்திய அரசியல் வாதிகள்.

இவர்களின் பிரிவினை வாத செயல்களால் இந்துக்கள் பாதிக்கப்பட்டதை விட வேறாரும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
இந்து பக்தி மார்கமும் பாரம்பரியமும் பாதிக்கப்பட்டதை போல வேறு மதக்காரர்களின் பாரம்பரியம் பாதிக்கப்பட்டிருக்காது. இன்னும் இவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்...

ஹொ.வெ.சேஷாத்ரி எழுதிய 'தேசப் பிரிவினையின் சோக வரலாறு' என்கிற புத்தகத்தைப் படிக்கலாம். காலக்கிரமமாக 'சக்தி புத்தக நிலையம்' 1, எம். வி. தெரு, சேத்துப்பட்டு, சென்னை-31 என்ற முகவரியிலிருந்து வெளிவருகிறது. மோடியைப் பற்றி குறை கூறும் முன்னர் மூஸ்லீம்கள் பற்றியும் தெரிந்து கொள்வது நலம் என்பதால் கூறுகிறேன்.

hayyram said...

கேரள முதல்வரான அச்சுதானந்தன் முஸ்லீகள் கேரளத்தை முஸ்லீம் நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இதே மோடி கூறியிருந்தால் இங்கிருக்கும் பதிவர்கள் முதல் மதக்கூட்டங்கள் இந்து எதிர்ப்பாளர்கள் மோடி எதிர்ப்பாளர்கள் என்று பலரும் வரிந்து கட்டி நிறைய எழுதியிருப்பார்கள். இத்தாலி சோனியா கூட கண்டனம் தெரிவித்து மேடை போட்டிருப்பார். தொலைக்காட்சி ஊடகங்களும் பர்காதத் போன்றவர்களும் நிறைய மோடிக்கெதிராக பேசியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு கூறியவர் அச்சுதானந்தன் என்கிற கம்யூனிஸ்ட் என்பதால் யாரும் வாய்திறக்காமல் ஓட்டைகளை மூடிக்கொண்டார்கள். கீழ்கண்ட சுட்டிகளையும் தாண்டி இன்னும் நிறைய சுட்டிகள் கூகுளிட்டால் கிடைக்கிறது முஸ்லீம் மதவெறியர்களின் கொட்டங்கள் பற்றி!

http://undhimmi.com/2011/02/14/valentines-special-the-love-jihad-poster/

http://www.hindujagruti.org/news/11336.html

http://islamicterrorism.wordpress.com/2009/03/10/love-jihad-in-kerala-how-islamofascists-trap-hindu-girls-and-convert-them/

http://www.youtube.com/watch?v=SXiE3ZPe3rI

http://in.christiantoday.com/articles/church-warns-of-love-jihad-in-kerala/4623.htm

pt said...

1.what is your comment about the actor vadivelu and his support to DMK?
2.Is it true that all forward cast journals are acting against DMK ,because it is headed by a obc?
3.It is reported in blogs that Being a iyenkar man you are also acting against DMK ?
4.Whether BJP is indirectly supporting DMK?
5.what will happen, if AIADMK is voted to power ,in respect of cong,dmk relation and 2g scam case?

hayyram said...

// சமூகநீதித் தமிழன் // அருள் பினாமி பேர்ல வந்திட்டார் போல இருக்கே! அரசியல் வாதிங்கறத ப்ரூவ் பன்றாரு போல

Arun Ambie said...

//thenkasi said...
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சிறப்பாய் இல்லாவிடாலும் .வேறு வழி இல்லை .
டோண்டு அவர்கள் சொல்வது போல்
அதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளித்து மக்கள் சக்தி பண சக்தியை விட பெரியது. என சாதிப்போம்.//
இலை துளிர்க்கத் தண்ணீர் ஊற்றியாகிவிட்டது, தென்காரியாரே! தண்ணீர் விட்டு வளர்த்தோமே சர்வேசா, கண்ணீர் வழிய வைப்பது நீதியோ என்று புலம்ப வைக்காது இருப்பார் இரட்டைஇலை நாயகி என்று நம்புவோம்.

இந்துக்கடவுளை (மட்டுமே)மறுத்து உருவான பகுத்தறிவுக் கயவாளிக் கட்சிகளிடம் இந்துக்கள் தாமரை இலை நீர்போல இருப்பதே எதிர்காலம் சிறக்க வழி.

thenkasi said...

April 13, 2011 6:25 PM
Blogger Arun Ambie said...

//thenkasi said...
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சிறப்பாய் இல்லாவிடாலும் .வேறு வழி இல்லை .
டோண்டு அவர்கள் சொல்வது போல்
அதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளித்து மக்கள் சக்தி பண சக்தியை விட பெரியது. என சாதிப்போம்.//
இலை துளிர்க்கத் தண்ணீர் ஊற்றியாகிவிட்டது, தென்காரியாரே! தண்ணீர் விட்டு வளர்த்தோமே சர்வேசா, கண்ணீர் வழிய வைப்பது நீதியோ என்று புலம்ப வைக்காது இருப்பார் இரட்டைஇலை நாயகி என்று நம்புவோம்.

இந்துக்கடவுளை (மட்டுமே)மறுத்து உருவான பகுத்தறிவுக் கயவாளிக் கட்சிகளிடம் இந்துக்கள் தாமரை இலை நீர்போல இருப்பதே எதிர்காலம் சிறக்க வழி.//

நன்றி.

தங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
உங்கள் கருத்தை போல் ஒருவர் சொன்ன செய்தி

தேள் கடித்தால் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு ஆனல் கொடிய நாகம் தீண்டினால்!

ஒவ்வொரு விழாவிலும் கருணாநிதிக்கு ஆஹா ஒஹோ வென புகழாரம் சூட்டிய ரஜினியே கடைசியில் ஓட்டுப் போடும் போது!

இதையும் மீறி திமுக ஆட்சி தொடர்ந்தால் !

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது