pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருந்த தேயிலை, இப்போது அவமானத்தைத் தேடித் தருகிறது என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை
பதில்: இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? அதில் வந்த ஒரு பின்னூட்டம் கூறுகிறது: திரு மன்மோகன் சிங் அரசு இதில் யாருக்கு எவ்வளவு கமிஷன் பார்க்கிறதோ இன்னும் ஐந்து ஆண்டுகள் இவர்களிடம் ஆட்சி கொடுத்தால் இந்தியாவை விற்று விடுவார்கள் மக்கள் எப்போதுதான் விழிப்பார்களோ தெரியவில்லை. அதுதான் என் கருத்தும்.
கேள்வி-2. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் சந்தித்துப் பேசுகின்றனர்.
பதில்: ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா பதவியில் இருக்க இயலாமல் போன போது கொஞ்ச நாட்கள் டம்மி முதல்வராக இருந்தார். மன்மோகனும் டம்மிதான், சோனியாவுக்காக பிரதமரே. டம்மிகள் சந்திப்பு, பலே பலே.
கேள்வி-3. தயாநிதி வீட்டில் "எக்சேஞ்ச்': ஆவணங்களைக் கேட்கிறது சிபிஐ
பதில்: டெலிஃபோன் எக்சேஞ்சுடன் ஏன் நிறுத்த வேண்டும்? அதன் பின்னணியில் உள்ள பண எக்சேஞ்சையும்தான் கேட்க வேண்டும்.
கேள்வி-4. தூக்கு தண்டனை விவகாரம்: மூவரையும் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி
பதில்: அரசியலில் இது ஜகஜம்.
கேள்வி-5. ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்
பதில்: மகிழ்ச்சி.
கேள்வி-6. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் : ஸ்டாலின்
பதில்: தேர்தலில் ஊழல் செய்து திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்த திமுகாவே இப்போது அதெல்லாம் நடக்கக் கூடாது எனக் கூறுவதே மாற்றம்தானே. இதில் என்ன ஏமாற்றம்?
கேள்வி-7.உள்ளாட்சி தேர்தலில் கரை ஏற கட்சிகள் வியூகம் : ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கவும் முயற்சி
பதில்: உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் கலந்து கொள்ளக் கூடாது சுயேச்சைகள் மட்டுமே என எதிர்பார்க்கும் ஆதர்ச நிலை வராத வரைக்கும் இதெல்லாம் நடப்பதை கண்டு வியப்படைய ஒன்றுமேயில்லை.
கேள்வி-8. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் "தகிடு தத்தம்' திட்டம் தடுக்கப்படுமா?
பதில்: நான் என்ன ஆளும்கட்சிக்கு குத்தகை எடுத்துள்ளேனா? ஆளும்கட்சியை எதிர்ப்பது எதிர்கட்சியின் கடமை. திட்டம் வெற்றி பெற்றால் எதிர்கட்சியினர் அதை நல்ல திட்டம் என்பார்கள், ஆளும் கட்சியினரோ அதை தகிடு தத்தம் என்பார்கள். அவ்வளவே.
கேள்வி-9. இலவச திட்டத்தால் அதிகரிக்கும் மின் தேவை: சமாளிக்குமா தமிழக அரசு?
பதில்: அந்தளவுக்கா மிக்சி கிரைண்டர் எல்லாம் தரப்போகிறார்கள்?
கேள்வி-10. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவு
பதில்: எனக்கு தெரிந்தவரை அது வழமையான நடைமுறைதான். பங்குச் சந்தையில் வருவதும் போவதுமாக இருக்கும் நிலையில் அன்றாடம் நடக்கும் அதிகரிப்பு குறைப்புக்கு ஓரளவுக்கு மேல் முக்கியத்துவம் தரலாகாது என நினைக்கிறேன். நிலைமையை அவதானம் செய்ய இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.
BalHanuman
கேள்வி-11. கருணாநிதி இப்படி மாற்றி மாற்றி பேசி மக்களை முட்டாள்களாக்கக் காரணம் என்ன? முதலில் தி.மு.க. தோல்விக்கு தேர்தல் கமிஷனின் பாரபட்சம் தான் காரணம் என்றார். பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தது தான் காரணம் என்றார். பின்னர் தான்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இப்போது கட்சியினர்தான் காரணம் என்கிறார்.
பதில்: ஏதாவது பேசி அப்போதைய நிலையை சமாளிக்கும் வேலையை மட்டும் செய்து நீண்ட கால பார்வை ஏதுமின்றி செயல்படுபவர் கருணாநிதி.
ஹிந்தி எதிர்ப்புக்காக அரசியல் சட்ட நகலை கொளுத்த, அவர்களை எம்.ஜி.ஆர். அரசு கைது செய்ய, “நாங்கள் பேப்பரைத்தான் கொளுத்தினோம்” என திமுக உறுப்பினர்கள் மன்றாடியது கலைஞரின் டிராஃப்ட்படி என்பது எல்லோருக்கும் தெரியுமே. அதன் பிறகு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ. பதவியும் பறிமுதல் ஆனதாக நினைவு. அப்போது எம்.ஜி.ஆர். சாடிஸ்ட் என டரியல் ஆனதும் கருணாநிதியே.
தேர்தலில் தோல்வியுற்றால் தமிழன் சோற்றுப் பிண்டம் என்பாரே வழக்கமாக? இம்முறை அதை இன்னும் கூறவில்லை போலிருக்கிறதே. அல்லது அதையும் கூறிடுவாரோ? நான் என்ன கண்டேன்?
கேள்வி-12. இந்த சிறிய தொகையை (2,645 கோடி) மத்திய கணக்குத் தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறதே முரசொலி? 2,645 கோடி இவர்களுக்குச் சிறிய தொகையா?
பதில்: ஒப்பிட்டு நோக்கினால், கணித லாஜிக்படி முரசொலி கூறுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், மத்திய கணக்குத் தணிக்கை குழு பொருள் நஷ்டத்தை மட்டும் குறிப்பிடவில்லை. தவற விட்ட லாபத்தின் சாத்தியக் கூற்றையும் பார்த்தது. எது எப்படியாயினும் திருட்டு நடந்ததை மறுக்கவியலாது.
ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொல்லவில்லை, வெறுமனே 40 லட்சம்தான் என ஒரு பிரகஸ்பதி அக்காலத்தில் கணக்கு கூறுவதை போல முரசொலி பேசுகிறது என்பதும் நிஜமே.
கேள்வி-13. நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை, திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எதேச்சாதிகாரமாக, மக்களின் பொதுக் கருத்தை மதிக்காமல் கருணாநிதி நிறுத்தியிருக்கிறாரே?
பதில்: தமிழன் சோற்றாலடித்த பிண்டம் என்பதை அவர் கூறாமல் கூறுகிறார்.
கேள்வி-14. சமீபத்தில் தமது வீடுகள், அலுவலகங்கள் முதலியவற்றில் சிபிஐ சோதனை நடைபெற்ற மாறன் சகோதரர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு' என்கிறாரே கருணாநிதி?
பதில்: முரசொலி மாறன் ஒரு வேளை அவர் கனவில் வந்து அவரை மிரட்டியிருப்பாரோ?
Arun Ambie
கேள்வி-15. தமிழ் வலைப்பூக்களால் வசூல் வருவதில்லையாமே?
பதில்: சுலபமாக வருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் தாய் மொழியில் எழுதுவதில் வரும் இன்பத்துக்கெதிரில் இதெல்லாம் என்னைப் பொருத்தவரை தூசுதான்.
என்.எச்.எம் போன்ற நிரல்கள் இருக்கும்போது தமிழில் எழுத ஒரு கஷ்டமும் லேது.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆலயக்கலைப் பயிற்சி
-
இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார்
நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான
கலாச்சாரநிகழ்வுகள். பெருவர...
1 hour ago
5 comments:
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்
2."மக்கள் என்னை வீட்டுக்கு அனுப்பினாலும், நாட்டுக்குச் செய்யும் கடமையை மறந்துவிடவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
3.திராவிட கட்சிகளை வேரறுப்பதுதான் தலையாய நோக்கம்: ராமதாஸ்
4.மத்தியில் அடுத்து தே.ஜ., கூட்டணி ஆட்சி தான்: அடித்துச் சொல்கிறார் அத்வானி
5.தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது
I hold the same view as yours that political parties should not be allowed to participate for local body elections. Only independents should be allowed to stand for these elections. Independents with their local knowledge should be able to address the problems effectively.
Your reply to Qn. No.12 on the perception of 2G scam loss is absolutely right.
Chennai city is in a pathetic condition, with most of the roads in the suburbs inundated by drainage water.
The basic needs of the population are clean water, clean air, dust free roads, sanitation, and adequate medical help by the Govt run hospitals.
Political paries will do a yeoman service to public by staying away from civic bodies and help elect only such people who will concentrate on doing immediate help to the needy citizens.
We need clean chennai, not singaara chennai.
subbu
you may also see
http://bullandbearfight.blogspot.com
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.ம.தி.மு.க., அதிக இடங்கள் கைப்பற்றும்: சொல்கிறார் வைகோ
7.அதிகாரிகள் வெளியில் நடமாட முடியாது: ராமதாஸ் எச்சரிக்கை
8.மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
9. * ராமதாஸ் எச்சரிக்கை 10.சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
1.உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு இரண்டாவது இடமாமே?
2.திருச்சியில் திமுக ஜெயித்தால்?
3. முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செல்வாக்கு இப்போது?
4. வைகைப்புயல் வடிவேலு ?
5.மாவீரன் அழகிரியின் அதிரடி அரசியல் ?
6.பேராசை கொண்டோரை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்?
7.எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிக்கல்?
8.சன் டீவி விவகாரம் /400 பிஎஸ் என் எல் போன்கள்/ ஏர்செல் ?
9.அரசு டீவியில் சன் டீவி சாத்யமா?
10.உலகமயமாக்கம் தோல்வியை நோக்கியா?
Post a Comment