அமெரிக்காவில் எல்லாம் பலர் தாங்களாகவே வீடு கட்டுவார்கள் என படித்துள்ளேன், எப்போது? சமீபத்தில் 1950-களில் “அமெரிக்கா அழைக்கிறது” என்னும் புத்தகத்தில் காந்திமதி என்னும் ஆசிரியை எழுதியுள்ளதை படித்ததைத்தான் இப்போது நினைவிலிருந்து கூறுகிறேன்.
அதே கால கட்டத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு ஜோக்கும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இம்மாதிரித்தான் ஒரு பெரிசு தனது அண்டை அயலார் தாங்களாகவே வீடு கட்டுவதை பார்க்கும் பழக்கம் வைத்து கொண்டிருந்ததாம். ஒரு முறை மிகுந்த தயக்கத்துடன் ஒரு இளைஞன் தன் பகுதியில் அஸ்திவாரத்துக்காக தோண்ட ஆரம்பிக்க இந்தப் பெரிசும், குடை, சாய்வு நாற்காலி, பக்கத்து ஸ்டூலில் லெமன் ஜூஸ் எல்லாம் வைத்துக் கொண்டு இவன் வேலை செய்ய ஆரம்பிப்பத்தை பார்க்க ஆரம்பிக்க, அந்த இளைஞனின் டென்ஷன் அதிகமானது.
“சார் நான் ரொம்ப மெதுவாகத்தான் வேலை செய்வேன், உங்களுக்கு போர் அடிக்குமே” என சொல்லிப் பார்த்திருக்கிறான். அதனால் என்னப்பா, எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, நான் மெதுவாகத்தான் பார்ப்பேன், எனக் கூறியதாம் அப்பெரிசு.
ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் அவ்வாறெல்லாம் நடக்கிறதா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் பிரிட்டனில் செய்கிறார்கள் போல இருக்கிறது.
ஆனால் இது முடியவில்லையென்றால் சாவகாசமாக மற்றவர் போடும் சண்டையை பார்ப்பதும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. என்ன, கட்சியெல்லாம் எடுக்கக் கூடாது. அதுவும் இரு தரப்பிலும் பார்வையாளருக்கு பிடிக்காதவர்கள் இருக்கும்போது யார் எங்கு அடி வாங்குகிறார்கள்/தருகிறார்கள் எனப் பார்ப்பதும் ஒரு பொழுது போக்குத்தானே. (உதாரணம்: பாமக, திமுக சண்டை, காங்கிரசார் பார்வையில்).
டிஸ்கி: திருவல்லிக்கேணி பிளாட்பாரம் கடையில் போன ஞாயிறு மாலை பழைய புத்தகங்கள் கடை வரிசையில் இந்த ரீடர்ஸ் டைஜஸ்டை பார்த்ததுதான் இப்பதிவுக்கு உந்துதல் தந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆலயக்கலைப் பயிற்சி
-
இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார்
நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான
கலாச்சாரநிகழ்வுகள். பெருவர...
1 hour ago
3 comments:
//ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் அவ்வாறெல்லாம் நடக்கிறதா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும்.
//
இன்னும் தாங்களாகவே வீடு கட்டுபவர்கள் இருக்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் பெருசுகள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லைங்க!!
ராகவன் ஜி,
நானறிந்த வரையில் அமெரிக்காவில் இப்போது From the Scratch தாங்களே கட்டுவதில்லை.
பெயிண்ட் அடிப்பது,டைல்ஸ் மாத்துவது, மர ஃப்ளோர், கார்பெட் மாற்றுவது போன்ற ப்ராஜகட்களை தாங்களே செய்கின்றனர்.
That said, அப்பா, மகன் இருவரும் இன்சினியர்கள்- அவர்கள் இருவரும் சில பலர் துணையோடு vacation home கட்டியது எனக்குத் தெரியும். வீட்டுக்கு சோலார் பவர் வைத்தது கூடுதல் தகவல். இவர்கள் விதிவிலக்கு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ப்ளாட்பார்ம் கடைகளில் இன்னும் புக் வாங்கி படிங்க. எங்களுக்கும் புதுசா படிக்கபதிவுகள் கிடைக்கும்.
Post a Comment