என் நண்பன் ஒருவன் தன் கணினியைத் திறக்கும்போது எதேச்சையாக நானும் அருகில் இருந்தேன். அவனது டெஸ்க்டாப்பைப் பார்த்து ஆடிப்போனேன். எண்ணற்ற கோப்புகளால் அது நிறைந்திருந்தது. என்னடா எனக் கேட்டால் அவன் டவுன்லோட் செய்வதெல்லாம் டெஸ்க்டாப்புக்குத்தானாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்தேன்.
அதே சமயம் ஏதேனும் கோப்பை அப்ப்டேட் செய்து வெளியில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமானால் தாவு தீர்ந்து விடுகிறது என்று வேறு மூக்கால் அழுதான். “வேறு எதையடா எதிர்ப்பார்த்தாய் மடையா” எனக் கூறி அவன் தலையில் செல்லமாகக் குட்டினேன். பிறகு அவனுக்கு நான் சொன்னதை இங்கும் பதிவாகப் போடுகிறேன், ஏனெனில் அவனைப் போலவே பலரும் இருக்கிறார்கள் என அவன் அல்ப திருப்தியுடன் குறிப்பிட்டான்.
வழ்க்கம் போல எனது உதாரணங்களையே கூறுவேன். என் நண்பன் செய்வது போல எல்லாம் நான் எல்லாவற்றையும் டெஸ்ட்டாப்பில் லோட் செய்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு வாடிக்கையாளர் ஒரு கோப்பை மொழிபெயர்ப்புக்காக அனுப்பியதும் நான் சரியான முறையில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் சுலபமாக அதை அடைய முடியும்.
டெஸ்க்டாப்பில் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் அதில் சேமிக்கப்படுபவை எல்லாமே C டிரைவில்தான் இருக்கும். திடீரென புதிதாக ஃபார்மாட்டிங் செய்தால் முதலில் போவது டெஸ்க்டாப் கோப்புகளே என்பதை மறக்கக் கூடாது. சி டிரைவில் புரொக்ராம் கோப்புகள் மட்டுமே இருப்பது நலம். கணினியின் ரீபூட்டுக்கான வசதிகளும் அதில் இருக்க வேண்டும். தேவையின்றி வேறு எதுவும் இருக்கக் கூடாது.
நான் கோப்புகளை எவ்வாறு சேமிக்கிறேன் என்பதை இப்போது கூறுகிறேன். மொழிபெயர்ப்புக்காக வரும் வாடிக்கையாளர் கோப்புகளை நான் F டிரைவில் சேமிக்கிறேன். E டிரைவில் நான் டவுன்லோட் செய்யும் மென்பொருள்கள் இருக்கும். அவற்றை இன்ஸ்டால் செய்யுபோது அது ஆட்டமேடிக்காக சி டிரைவில்தான் இன்ஸ்டால் ஆகும். அதே போல ரீஃபார்மாட்டிங் செய்யும்போது இ டிரைவிலிருந்து நிரலிகளை தேர்ந்தெடுத்து வழமையான முறையில் இன்ஸ்டாலும் செய்து கொள்ளலாம்.
எஃப் டிரைவில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனி ஃபோல்டர். அந்த ஃபோலட்ருக்குள் வாடிக்கையாளர் அனுப்பும் ஒவ்வொரு வகை கோப்புக்கும் (வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், பிடிஎஃப் ஆகியவை) தனித்தனி ஃபோல்டர். உதாரணத்துக்கு எனது ஒரு வாடிக்கையாள்ர் விஷயத்தில் இவ்வாறு 7 துணை ஃபோல்டர்கள் உண்டு. ஒவ்வொரு துணை ஃபோல்டரிலும் இன்னும் பிரிவினை தொடரும். கோப்பை டவுன்லோட் செய்யும் தேதியை தலைப்பாக வைத்து அதனுள் அக்குறிப்பிட்ட கோப்பை வைப்பது. அக்கோப்பின் மொழிபெயர்ப்பும் அதிலேயே வரும்.
ஒரு மாதிரி குன்ஸாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.
இதற்கு இணையாக எனது மின்னஞ்சல்களையும் அடுக்க வேண்டும். ஜிமெயில் பாவிப்பதால் எதையும் அழிக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கான பதிலோ அல்லது ஆக்ஷனோ நடந்து விட்டால் அதை உடனே ஆர்கைவ்சில் போட வேண்டும். சாதாரணமாக எனது இன்பாக்ஸ் காலியாகத்தான் இருக்கும். பிறகு தேவையான மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் சர்ச் போட்டு தேடிக் கொள்ளலாம். (பலரது இன்பாக்ஸில் நூற்றுக்காண மின்னஞ்சல்கள் இருப்பதையும் பார்த்துள்ளேன்).
ஒரு வாடிக்கையாளர் நீண்டகால மௌனத்துக்கு பிறகு என்னை அணுகினால் ஆர்கைவ்ஸை வைத்து அவரது பழைய மின்னஞ்சலைப் பார்த்து அதிலிருந்து எனத் எஃப் டிரைவில் உள்ள அவரது ஃபோல்டருக்கு போவதெல்லாம் இடது கை விளையாட்டுதான். ஆகவே முந்தைய ரேட் என்ன என்பதை பார்த்து அதற்கேற்ப கோட் செய்வதும் நடக்கும். அவர்களில் சிலர் தான் பழைய வாடிக்கையாளர் என்றெல்லாம் சீன் போட்டு ரேட்டை குறைக்க நினைத்தால், “ஐயா நீங்கள் கடைசியாக எனக்கு வேலை அனுப்பியது சில ஆண்டுகளுக்கு முன்னால் பலான தேதியில்” எனக்க்கூறி அவர் சீன் போடுவதைத் தடுப்பேன்.
நான் மேலே கூறியவை மிக எளிதாக எல்லோராலும் செய்யவியலும்.
நான் முதலில் குறிப்பிட்ட தோழனிடம் இந்த இடுகை பற்றி கூறியபோது அவன் இன்னொரு பீதியைக் கிளப்பினான். லேப்டாப் எல்லாம் இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல் நிரலியுடன் வரும்போது ஒரே ஒரு சி டிரைவ்தான் இருக்கும் என்கிறான். கூடவே டி டிரைவில் கோஸ்ட் பேக் அப் இருக்கும் அவ்வளவே என்கிறான்.
நல்லா பீதியை கிளப்பறாங்கப்பா. ஏம்பா அது உண்மையா? யாராவது சொல்லுங்கப்பூ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆலயக்கலைப் பயிற்சி
-
இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார்
நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான
கலாச்சாரநிகழ்வுகள். பெருவர...
1 hour ago
9 comments:
yes , its true, but it can be change..
Your friend is correct. My laptop has 250 GB in C drive, but the one D drive has utility only as a back up, which it does on its own. There is no other drive, nor is it necessary. However. i always take a back up of important documents on my usb pendrive by inserting a 2 gb.
subbu rathinam
ya... ipo lam apdi sir than varthu... 4 system partition potu kuduthranga.. somewat diffclt 4 novices to reconfigure..
ஓக்கே. ஆனால் கோப்புகளையெல்லாம் நான் சொன்னது போல சேமித்தால் பிரச்சினை இருக்காதுதானே.
ஒரேயடியாக எல்லாவற்றையும் குப்பையாக டெஸ்க்டாப்பிலா போடுவது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
If your laptop or PC came with one logical drive (C & D which is a hidden recovery partition), you could create another partition and name it E or F etc.
If you want to reinstall the OS, hit F11 key or ctrl + F11 (depends on brand) key when you turn on the PC it will show you the options reformat & install, install OS files only etc ... and it will install the OS from the hidden partition.
பேப்பர் கால அலுவலகப் பண்பே நமக்கு கணினி காலத்திலும் தொடரும்
சில ஊழியர்கள்/மீளலர்களின் மேசையில் அதிகம் பேப்பர் இறைந்து கிடைக்காமல், அழகாக அடுக்கி, வைக்கப் பட்டிருக்கும்.
சில ஊழியர்கள் மேசை முழுதும் கோப்புகள், பேப்பர்களைப் பரத்தி வைத்து இருப்பார்கள்.
டோயோடாவின் தணிக்கை முறையில், முதல் செக் பாய்ண்டே எங்களுக்கு இதுதான்.
எந்த ஊழியரின் கணினி தேச்க்டாப்ப் எளிமையாக இருக்கிறது என்பதே.
அவரு இருந்தால் அவர் ஒழுங்கு அமைப்பாக (oraganised way)வேலை செய்கிறார் என்று அனுமானித்துக் கொள்ளலாம்.
சில பன்னாட்டு நிறுவனங்கள் ஒரே ஒரு பார்டிஷன் மட்டுமே தருவர். நாமாகப் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் ஏதாவது பிரச்சினை என்று போனால் வன்பொருளுக்கு (Hardware) மட்டுமே இலவச சேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரச்சினை என்றால் நான் கொடுத்தது போல இல்லை, உங்கள் இஷ்டத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளீர்கள். அதனால் காசு கொடுத்து சிறப்புச் சேவை பெறுங்கள் என்பார்கள். பழுதான பாகங்களை மாற்றித் தர மட்டும் விற்ற கம்பெனி போதும் மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் என்ற தில் இருப்பவர்கள் நம்மிஷ்டத்துக்கு பார்ட்டிஷன்கள் செய்து கொள்ளலாம். என் கணினியில் 5 பார்டிஷன்கள், 2 ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் வைத்திருந்தேன். அலுவலகக் மடிக்கணினியில் தலைவிதியே என்று ஒரே பார்டிஷனில் ஓடுகிறேன். ஆனாலும் சி டிரைவிலேயே பல ஃபோல்டர்கள் போட்டு எனது பல்வேறு ப்ராஜெக்ட்டுகளின் விவரங்களைப் (கோப்பு, மின்னஞ்சல் etc) பராமரிக்கிறேன். zip செய்து சேமிப்பது இடத்தை அதிகம் ஆக்கிரமிக்காது. தர ஆய்வில் (Lean 6 Sigma) கோப்புப் பராமரிப்பும் ஒரு சோதனைப்புள்ளி. ராம்ஜி சொல்வது போல முதல் சோதனைப் புள்ளி என்றால் எங்களுக்க்க்கு 95% QA failure தான் வரும்;)
கோஸ்ட் பேக்கப் பற்றி சொல்ல விட்டுவிட்டேன். அது பல நிறுவனங்களில் கணினியோடு வரும். ஆனால் trialware ஆக மட்டுமே வரும். அதற்குத் தனியாகக் காசு கட்டினால் மட்டுமே முழு மென்பொருள் தருவார்கள். ஆனாலும் பல கோஸ்ட் பேக்கப் மென்பொருட்கள் சொதப்பலே. பாதுகாப்பானது ஒரு External HDD வைத்துக் கொண்டு நாமே அவ்வப்போது பேக்கப் எடுப்பது மட்டுமே.
1.அஜித் சிங்கின் வருகை அழகிரிக்கு சிக்கலா?
2.பருவ மழை இந்த ஆண்டு எப்படி?
3.டெல்லியில் தீபாவளி குடிகாரர்களில் 40 % பெண்களாமே?
4.அடுத்த தேர்தலில் உதிரிக்கட்சிகளின் நிலை?
5.வைகோ திருந்தவில்லை எனும் திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டு பற்றி?
6.உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை என சொல்லும் உண்மைத் தமிழன்?
7.கேப்டலிஸம் தோல்வியை நோக்கியா?
8.விலை வாசி குறையுமா?
9.மக்கள் பெருக்கம் இப்படி போனால் பூமி தாங்குமா?
10.ஊரை ஏமாற்றி பகல் கொள்ளை அடிக்கும் வல்லான்களுக்கு வால் பிடிக்கும் ஊழல் சக்திகளுக்கு இனி எதிர்காலம்?
Post a Comment