எனது பதின்ம வயதுகளை நினைத்துப் பார்க்கும்போது எனக்கும் என் தந்தைக்கும் இடையே பல விவாதங்கள் நடந்துள்ளதை உணர்கிறேன். முக்கால்வாசி எல்லா விவாதங்களும் இடதுசாரி வலதுசாரி பற்றிய விவாதமே.
உண்மையான அமெரிக்கன் என என் தந்தையே என்னைக் கிண்டலாக குறிப்பிடும் அளவுக்கு நான் அமெரிக்க தனிநபர் பொருளாதாரத்தை விதந்தோதியிருக்கிறேன். என் தந்தையோ உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்தவர். முதலில் எக்ஸ்பிரசில் வேலை பார்த்திருக்கிறார். அப்போதிலிருந்து ராம்நாத் கோயங்காவை அவருக்கு பிடிக்காது. அதுவும் தினமணி, எக்ஸ்பிரஸ் (சென்னை எடிஷன்) ஆகியவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கும் கோயங்காவிற்கும் ஏழாம் பொருத்தமே.
தினமணியிலிருந்து பலர் விலகி நவமணி என்னும் பத்திரிகை ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தொழிலாளர்களால் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை என்று வேறு கூறப்பட்டது அப்போதெல்லாம். என்ன, சம்பளம் மட்டும் இரு மாதத்துக்கொரு முறை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை என போட்டு வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு முறை என தந்தை திடீரென ஒரு நாள் கூறினார், “நல்ல வேளை தினமணி மூடிய நேரத்தில் நான் எக்ஸ்பிரஸ் குரூப்பில் இல்லை”. அவ்வாறு இருந்திருந்தால் தனக்கும் அதே கதிதான் என்பதில் அவருக்கு ஐயமேதுமில்லை. இதை அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். என் மரமண்டைக்கு அது எட்டாமல் யூனியன் விஷயங்களில் அவர் அதிகமாக ஆழ்ந்து போவதை அட்டாக் செய்திருக்கிறேன். அவருக்கே நான் கூறியதில் விஷயம் இருக்கிறது என்பதால் மேலே பேசவில்லை.
ஆனால் தந்தை மகன் இடையில் மகன் தந்தையை வெல்வது போன்ற சோகம் ஏதுமில்லை. சிறு வயதில் எங்களுடன் ஓட்டப் பந்தயம் பீச் மணலில் வைப்பார். அவர்தான் வெற்றி பெறுவார். ஆனால் வயதாக ஆக அவரது உடல் பலம் குறைந்து ஒரு நாள் நான் வின் செய்ததில் பிறகு எனக்குத்தான் அவ்வ்வ் என அழும்போல ஆகிவிட்டது. தந்தையின் ஆரோக்கியம் குறைகிறது என்பது மகனுக்கு எப்போதுமே அதிர்ச்சியைத்தான் தரும்.
சற்றே திசை திரும்பி விட்டேன், இருப்பினும் எழுதியது எழுதியபடியே இருக்கட்டும்.
1969-ல் நான் பொறியியல் பட்டம் பெற்றபோது வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அச்சமயம் மின்வாரியத்தில் இஞ்சினியர்கள் ஸ்ட்ரைக் வர, பேப்பர்களில் இஞ்சினியர்கள் கேட்டு விளம்பரம் வந்தது. எனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் அப்ளை பண்ண என் தந்தை எனக்கு அனுமதி திட்டவட்டமாக மறுத்தார். ஒரு வேலை நிறுத்தத்தை உடைக்கும் செயலுக்கு துணைபோவது துரோகம் என்பதே அவரது நிலைப்பாடு. அவரது உறுதியைப் பார்த்து நானும் அப்ளை செய்யாமல் விட்டுவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையறியாமலேயே நானும் ஒரு மகத்தான காரியம் செய்திருக்கிறேன் என்பதை உணர மகிழ்ச்சியாக உள்ளது.
1967, 1968-ல் தொடர்ந்து இரு ஸ்ட்ரைக்குகள் ஹிந்துவில் நடந்தன. ரிப்போர்டர்கள் எல்லோரும் மேனேஜ்மெண்டுக்கு துணையாக நிற்க, என் தந்தை மட்டும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். அதனால் பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன. உதவி தலைமை ரிப்போர்டர் பதவி அவருக்கு சீனியாரிட்டி மூலம் கிடைக்கவிருந்த நேரத்தில் அந்த போஸ்டையே நீக்கினார்கள். அதேர் போல அவர் தலைமை ரிப்போர்டராக வரவிருந்தபோது அப்போதைய தலைமை ரிப்போர்டருக்கு வேண்டுமெனவே ஓராண்டு நீடிப்பு தந்தனர். அதனால் எல்லாம் மனம் தளரவில்லை என் தந்தை. அவர் ரிட்டையரானதும் நிம்மதியாக தனது வழியில் ஆக்டிவாக இருந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.
இக்கால கட்டங்களில் அவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் புதுப்புது அசைன்மெண்டுகள் பெற்று வாழ்கின்றனர். அவரது காலகட்டத்தில் அத்தனை வாய்ப்புகள் இல்லை, கூடவே அவரும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அவருக்கு பொருளாதாரச் சுமைகள் ஏதும் இல்லை என்பதுதான் நிஜமே. சொல்லி வைத்தது போல எனக்கும் மத்தியப் பொதுப்பணி துறையில் வேலை கிடைத்ததும் உதவியாக இருந்தது.
மொத்தத்தில் எனது தந்தை பொருளாதார வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க வகையில் செல்வம் ஈட்டவில்லையானாலும் அவருக்கு பத்திரிகை உலகில் நல்ல பெயர் இருந்திருக்கிறது. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னும் நான் எதிர்ப்பாராத தருணங்களில் அவரது பழைய நண்பர்களுடன் எனக்கு சந்திப்பு ஏற்படுவதில் எனக்கு மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆலயக்கலைப் பயிற்சி
-
இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார்
நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான
கலாச்சாரநிகழ்வுகள். பெருவர...
1 hour ago
12 comments:
antha kaala reporterkal thannai reporter enru pothuveliyil sollikkolla maattaarkal.1.seythikal kidaikkaathu.2.seythi varumbothu thaakkappadalaam.ippothu nilama thalaikeezh.
If you consider yourself as a 'chip of the old block' let us know his name.
@cnsone
His name is R. Narasimhan. But I am not a trade unionist like him, and that is the point of this entire post.
Regards,
Dondu N. Raghavan
1.கனிமொழிக்கு கடைசியில் ஜாமீன்?
2.கருணாநிதியின் சோனியாவை சந்திக்க மாட்டேன் எனும் சபதம் உடைந்தது ஏன்?
3.தேமுதிகவின் படுதோல்வி?
4.மருத்துவர் இனி என்ன செய்வார்?
5.காங்கிரசின் எதிர்காலம் இனி யார் கையில்?
6.அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்திய விதம் எப்படி?
7.ரஜினி மீண்டும் திரை வானில்?
8.இனி சட்ட சபை களை கட்டுமா?
9.பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ளதா?
10.3ஜி உரிமம் இல்ல்லாமல் சில தனியார் கம்பெனிகள் 3 ஜி வியாபாரம் செய்யும் விச்யம் அடுத்த ஸ்கேமா?
11.ஒரு உண்மையான தொழிற்சங்க வாதியின் அன்பு மகனாய் வளர்ந்த நீங்கள் அமெரிக்காவின் வலதுசாரி கொள்கையின் கண்மூடி ஆதரவளராய் இருப்பதின் அடிப்படை காரணம் என்ன?
12.அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியா வில் உள்ள வசதி இல்லாத மக்களின் எழுச்சியை பார்த்த பிறகவாது மன மாற்றம் வருமா?
13.அரசியல் சொல்வக்குடன்,இல்லாத பொல்லாத செயல்கள் எல்லாம் செய்து பொருள் குவிக்கும் வல்லான்களை எப்பொழுது வசை பாடுவீர்கள்?
14.லஞ்ச லாவண்யத்தின் தயவால் நடத்தப்படும் ஆட்சி, அதிகாரம்,வணிகம் ,கொள்ளை லாபம் பற்றி?
15.பொருள் வர்த்தக வணிகம் மூலம் பரமபதம் விளையாடும் வர்த்தக சூதாடிகளை எதிர்ப்பீர்களா?
உங்கள் இந்த பதிவும் சென்ற பதிவும் மனதை நெருடும் வண்ணம் உள்ளன (வெவ்வேறு விதங்களில்)நன்றி
தீபாவளி வாழ்த்துக்கள்!
தந்தையை பற்றிய பழய நினைவுகள் நல்லா இருந்தது.
If you consider yourself as a 'chip of the old block' let us know his name.//
Dondu Ragavan cant be called so because he and his father are two different personality types - as we understand from the recall.
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
உளம் கனிந்த தீபாவளி நல் வாழத்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அலுவலகப் பணி முடித்து வந்த பின் தான் சொந்த வேலைகளை கவனிக்க முடியும். தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
அருண்.
நண்பர்கள் எல்லொருக்கும் எனது தரப்பிலிருந்து தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment