11/23/2007

ஒலிம்பிக் போட்டிகளை இன்னும் எப்படி விறுவிறுப்பாக மாற்றலாம்?

நான் பாட்டுக்கு தேமேனென்று என் கணினியின் முன்னால் அமர்ந்து ஆணிபிடுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தனது அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்த எனது கணினி குரு முகுந்தன் இப்படங்களை அனுப்பியுள்ளான். இவனைப் பற்றியும் இவனது தம்பியைப் பற்றியும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

நேற்றுத்தான் குழந்தை முகுந்தனை தட்டாமாலை சுற்றியது போல இருக்கிறது (சமீபத்தில் 1981-ல்). இப்போது என்னடாவென்றால் இவனுக்கும் திருமணம் ஆகி மனைவி வந்து விட்டாள். நாட்கள் எவ்வளவு வேகமாகப் போகின்றன?

இந்த ஒலிம்பிக் விளையாட்டு படங்களைப் பார்த்ததும் இப்பதிவு போட தூண்டுதல் ஏற்பட்டது. கூகளிட்டு பார்த்தால் இதே படங்கள் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. யாம் பெற்ற இன்பம் பெறுக தமிழ் வலைப்பதிவு உலகமும்.

கத்திச் சண்டை

லாங்க் ஜம்ப்

டைவிங்

ஸ்கீயிங் மற்றும் ஷூட்டிங்

கம்பி விளையாட்டு

வேக ஓட்டம்

மல்யுத்தம்

ரிலே ரேஸ்

கத்திச் சண்டை

படகுப் போட்டி

ஹை ஜம்ப்

குண்டு வீசுதல்

மேலே குறிப்பிட்டவற்றுள் மல் யுத்தம் ஏற்கனவே ரோமானியர்களால் செயல்படுத்தப்பட்டது. அப்போது எல்லா போட்டிகளும் இம்மாதிரி உயிருடன் விளையாடுவதாகவே இருக்கும்.

யார் கண்டது, இம்மாதிரி விளையாட்டுகள் வந்தாலும் வரலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Anonymous said...

கொழுப்புத்தானே! டோண்டு சார்!! ஏன் கலைஞர் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதாக செய்தி அடிபட்டதா? கலைஞர் மேல் அப்படி என்ன கொலைவெறியோ?


புள்ளிராஜா

dondu(#11168674346665545885) said...

கொலை வெறி உங்களுக்குத்தான் புள்ளிராஜா அவர்களே.

உங்களை வேறு ஏதோ கேள்வி கேட்க நினைத்தேன். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

செம்ம ஜோக்கு

Anonymous said...

ஹா..ஹா..ஹா..படகுப் போட்டி சூப்பரு!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஈ மெயிலில் பொழுது போகாமல் அனுப்பியதெற்கெல்லாம் ஒரு பதிவா.? நடத்துங்க.

Anonymous said...

what about politics circus acrobatics?

வால்பையன் said...

இந்த போட்டி ஒரு கற்பனை என்று தெரியும்,
என் கேள்வி எல்லாம் யாருக்கு என்ன போட்டி என்பது தான்?

வால்பையன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<=
கணினியின் முன்னால் அமர்ந்து ஆணிபிடுங்கிக் கொண்டிருந்தேன். =>
இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.நீங்கள் உங்களது வழக்கமான் வேலையைச் சொல்லியிருக்கிறீகள் என்று நினைக்கிறேன்.மென்பொருள் துறையில் தவறுகளைச் சரி செய்வதைத்தான் ஆணி பிடுங்குவது என்று சொல்கிறார்கள் என்ப்து என் எண்ண்ம்.

மென்பொருளாளர்களே, எல்லோரும் வாங்க. காப்பிரைட் வாங்கியிரலாம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது