நான் முன்பு குறிப்பிட்டக் கனவைப் போலன்றி இன்னமும் இது அவ்வப்போது வந்துப் போகிறது.
அதாவது நான் இன்னும் பொறியியல் பரீட்சைகள் அதனையும் பாஸ் செய்யவில்லை என்று திடீரென்று கல்லூரியிலிருந்துக் கார்டு வரும். நீங்கள் நான்காம் வருடக் கணக்குப் பேப்பர் இன்னும் க்ளியர் செய்ய வேண்டியுள்ளது. தவறுதலாக உங்களுக்கு டிகிரி கொடுத்து விட்டோம் என்று அதில் குறிப்பிட்டிருக்கும்.
நான்காம் வருடக் கணிதமா? அதில் என்னக் கற்றுக் கொண்டேன் என்பது அப்போது நினைவுக்கு வராது. அந்த நிலையில் பரீட்சை எழுதுவதாவது? சுழிதான். இதன் வேரியேஷனாக எங்கள் தமிழ் வாத்தியார் நரசிம்மாச்சாரி வேறு கனவில் வந்து, தமிழ் பரீட்சைக்குத் தயாரா என்றுக் கேட்க, பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பது கூட மறந்து விடும்.
முழித்துக் கொண்டப் பிறகு சிறிது நேரம் கழித்துத்தான் யதார்த்த நிலைக்கு வர இயலும். மறுபடி பரீட்சை எழுதியப் பிறகுதான் இக்கனவு நிற்குமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சென்னை புத்தகவிழா, ஒரு பழைய கேள்வி
-
அன்புள்ள ஜெ, சென்னை புத்தகவிழா சென்னையின் மிகப்பெரிய பண்பாட்டு நிகழ்வு.
ஆனால் என் குடும்பத்தில் எவருக்கும் அது என்ன என்றே தெரியாது. என்
நண்பர்களிலேயே பலருக...
1 hour ago
10 comments:
அட அப்போ நான் தனி ஆள் இல்லையா.....
//அட அப்போ நான் தனி ஆள் இல்லையா..... //
nichayamaa illai! naama oru koottam
கூட்டத்துல சேர்த்துக்குங்கப்பா, நான் இன்னும் +2 பரிட்சை பயத்திலேயே தூங்கறேன் :-)
ஹலோ, இப்படி ஒரு கனவு வராமல் யாருமே இல்லை என்று தோன்றுகிறது. சிறுவயதில் பயத்தின் குறியீடாய் தேர்வு ஆகிபோவதை இது விளக்குகிறதோ? பயத்தின் குறியீடாய் நம் அடிமனதின் ஆழத்தில் இது தங்கிவிட்டதோ? இதை பார்க்கும் போது தேர்வில் பெயிலானதால் தற்கொலை செய்துகொண்ட சிறார்கள் குறித்து புரிந்துகொள்ளலாம்.
தேர்வு இல்லாமல் சமூகம் சிறுவர்களை வாழ விடமுடியாதா? அதெப்படி முடியும் என்று கேட்ககூடாது. அரசன் இல்லாமல் முடியுமா என்ற கேள்வியிருந்த காலம் போய், இன்று அது ஒரு யதார்த்தம். பலர் ஒப்புகொள்ளவிட்டாலும் திருமணம்(என்ற சம்பரதாயம்) இல்லாமல் சிலர் வாழமுடிகிறது. இப்படி இந்த தேர்வையும் புதைத்துவிட்டு ஒரு சமூகம் இயங்க முடியாதா? இப்போது இதை யோசிக்க தொடங்கினால் என்றாவது சாத்தியமாகலாம் என்று தோன்றுகிறது.
வசந்த், இதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். தேர்வு என்பதை ஒரு டுபாக்கூர் சமாச்சாரமாக தான் பார்க்க முடிகிறது. நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு, பேப்பரில் வாந்தி எடுப்பதை எந்த வகையில் பார்ப்பது என்று புரியவில்லை. எனக்கெல்லாம் டிகிரி முடித்து 8 வருடங்கள் கழித்துதான் நான் என் வாழ்நாளில் எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறேன் என்று தெரிந்தது. நான் படித்த ஒரு விஷயமும் இன்றைக்கு உதவவில்லை என்பது தான் கொடுமை. இங்கே தமிழ்நாட்டில், பெருமைக்காக மாஸ்டர் டிகிரி வாங்கிய ஆட்கள் எல்லாம், போலிஸ் ஸ்டெஷனில் புகார் எழுதிக் கொடுக்க தெரியவில்லை, வங்கியின் மேலாளரோடு பேசி, வங்கி கணக்கை மாற்ற எழுதித் தர தெரியவில்லை, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாகன உரிமமிட இருக்கும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய தெரியவில்லை, இவற்றுக்கெல்லாம் மேலாக, பொதுவாழ்வில், பஸ்ஸில் காலை மெறித்தால், மன்னிப்பு கேட்கும் அடிப்படை குணத்தைக் கூட கல்வி கற்றுத் தரவில்லை. என்னத்த சொல்றது ? ஏட்டுச் சுரைக்காயெல்லாம் குழம்புக்குக் கூட உதவாது என்பதை ரொம்ப லேட்டாக, ஆனால் லேட்டஸ்டாக தான் புரிந்து கொள்ள முடிந்தது. யாரேனும் கல்வியாளர்கள், கல்வி முறை பற்றி விவாதித்தால் பங்கேற்க தயார்.
ஐயா டோன்டுஸ் அவர்களே,
Recurring dreams are quite common and are often triggered by a certain life situation or a problem that keeps coming back again and again. These dreams may recur daily, once a week, or once a month, but whatever the frequency, there is little variation in the dream content itself. It usually points to a personal weakness, fear, or your inability to cope with something in your life - past or present.
The repetitive patterns in your dream can reveal some of the most valuable information on yourself. It may point to a conflict, situation or matter in your waking life that remains unresolved or unsettled. Or some urgent underlying message in your unconscious is demanding to be understood.
Following are some tips in overcoming your recurring dreams.
1. In understanding your recurring dream, you must be willing to accept some sort of change or undergo a transformation.
2. You must be willing to look within yourself and confront whatever you may find no matter how difficult it my be.
3. You must be able to look at the dream from an objective point of view. Try to get pass the emotional and reactive elements of the dream and get down to the symbolic images. Many times dreams are masked by elements that are disturbing preventing you to delve any deeper. This is a defense mechanism that your unconscious may be putting up.
4. Be patient. Do not get discourage if these dreams still recur even after you thought you have come to understand them.
5. Learn to accept yourself truly and fully.
Often times, once you discover what your recurring dream is trying to tell you, these dreams will change or altogether disappear.
DREAM DICTIONARY
1.Home
To see your home in your dream, signifies security, basic needs, and values. You may feel at home at your new job or you finally feel settled in a new environment.
To see your childhood home in particular, suggests your own desires for building a family. It also reflects aspects of yourself that were prominent or developed during the time you lived in that home. You may experience some feelings or unfinished expression of emotions that are now being triggered by a waking situation.
2.Exam
To dream that you are taking an exam, signifies insecurities, fear of not meeting others' expectations, and fear of failure.
3.Teacher
To see your teacher (past or present) in your dream, suggests that you are seeking some advice, guidance, or knowledge. You are heading into a new path in life and ready to learn by example or from a past experience. Consider your own personal experiences with that particular teacher. What subject was taught? Alternatively, it may relate to issues with authority and seeking approval. You may going through a situation in your waking life where you feel that you are being treated like a student or in which you feel you are being put to a test.
Please visit here to know more about the Subconscious Perceptions and strange dreams.
http://members.tripod.com/~ZigZag67/index-3.html
சுவாரசியமாக இருக்கிறது காஞ்சி அவர்களே. ஆனால் ஒரு விஷயம். கனவுகளை ரசிக்கக் கற்றுக் கொண்டேன். எங்காவது ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு அவை இல்லாமல் போய் விட்டால் போர் அடிக்கும். நேற்று இரவு கூட தமாஷான ஒரு கனவு வந்தது. நினைவிலும் இருக்கிறது. எழுந்து உட்கார்ந்து சிரித்து விட்டு, வீட்டம்மா ஷ் ஷ் என்று அதட்ட மீண்டும் உறங்கி போனேன். கனவுகள் இல்லாமல் போரடிக்கும். கலாம் வேறு வருத்தப் படுவார். என்னைப் போன்ற இளைஞர்கள் கனவு காண்பதை நிச்சயம் அந்த பிரம்மச்சாரி இளைஞர் ஆதரிப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவப்
//கனவுகள் இல்லாமல் போரடிக்கும்//
You are right,Sir. Either conscious(பகல்)or sub-conscious(இரவு) dreams, we are always in a steady need of dreams.
கிடைக்கவே கிடைக்காததை எண்ணி இரவில் கனவு. கிடைக்கவேண்டியவைகளே கிடைக்காத போது அவைகளையே எண்ணி பகல் கனவு. சும்மா சொல்லவில்லை நம்ம கலாம்.
ok sweet dreams! bye
இந்தத் தேர்வு பற்றிய கனவுகள் யாரையும் விட்டுவைக்காது போலிருக்கே! :) காலையில் நடக்கப் போகும் பரிட்சைக்கு இன்னும் ஒன்றுமே படிக்காத மாதிரி கனவு அப்பப்போ வந்துட்டுதான் போகுது :( நம் தேர்வுமுறை இன்னும் எத்தனை தலைமுறையினரைப் படுத்தப்போகிறதோ!
இம்மாடிரிக் கனவு பலருக்கும் அடிக்கடி வரும்போல. டி. ராஜ் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://seeking-spring.blogspot.com/2005/10/blog-post.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment