8/16/2005

மேலும் கேள்விகள்

இன்னும் சில கேள்விகளைப் பார்ப்போமா?

1. கீழ்க்கண்ட இரண்டு வாக்கியங்களைப் பார்த்து கடைசி வாக்கியத்தைப் பூர்த்தி செய்யவும்.
பாபர் அக்பரின் தந்தையின் தந்தை
ஹுமாயூன் ஜெஹாங்கீரின் தந்தையின் தந்தை.
ஹுமாயூன் அக்பரின் தந்தையின் ............

2. ஒருவன் முதுகில் சுமையுடன் மைதானத்தை நோக்கி வருகின்றான். மைதானத்தை நெருங்கும்போது தான் இறப்பது உறுதி என்பது அவனுக்குத் தெரிந்து விடுகிறது. எப்படி?

3. ஒருவன் பூங்காவில் உட்கார்ந்து பேப்பர் படிக்கிறான். கப்பலிலிருந்து கடலில் தவறி விழுந்து பெண் மரணம் என்ற செய்தியைப் பார்த்ததும் இது அப்பேண்ணின் கணவனால் நிகழ்த்தப்பட்டக் கொலை என்று புரிந்து கொள்கிறான். பூங்காவில் இருப்பவன் யார், அவனுக்கு எப்படி இது தெரிந்தது? இது நிஜமாக நடந்த செய்தி என்று என் ஷட்டகர் சௌந்திரராஜன் சத்தியம் செய்து கூறினார்.

4. ஒரு பையன் 10 விடைகளில் ஒன்பது விடை சரியாக எழுதியிருப்பினும் அவன் பெயில் என்று ஆசிரியர் தீர்மானிக்கிறார். தட்டிக்கேட்ட அவன் அன்னையிடம் அவர் அவள் மகன் பக்கத்துப் பையனைப் பார்த்து காப்பியடித்ததாலேயே அந்த நிலை என்று கூறுகிறார். சரியாக இருந்த ஒன்பது கேள்விகளின் பதில்களும் எழுத்துக்கெழுத்து பக்கத்துப் பையனின் பதில்களிலுடன் ஒன்றாக ஒத்துப்போயின என்றும் அவர் கூறினார். "ஏன், பக்கத்துப் பையன் காப்பியடித்திருக்கக்கூடாதா" என்று அன்னை கேட்டதற்கு ஆசிரியர் தெளிவான பதிலைக் கூறி அப்பெண்மணியை பேச்சிழக்கச் செய்கிறார். அவர் என்ன கூறியிருப்பார்? பரீட்சை பேப்பரைத் திருத்தும் வரை அவருக்கு அப்பையன்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆகவே யார் புத்திசாலி என்பது அவருக்குத் தெரியும் என்பதெல்லாம் பதிலாக முடியாது.

5. ஒரு காலத்தில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையிலிருந்து ஜெமினி நோக்கி வந்தால் பல சினிமா தியேட்டர்கள் வரும். உதாரணம்: அண்ணா, சாந்தி, தேவி, ப்ளாசா, அலங்கார், ஆனந்த், சபையர். ஆனால் என் நண்பன் ஸ்ரீனிவாச தேசிகன் கூறினான்:
"1983 ஜனவரி ஒன்றாம் தேதி நான் அண்ணா சிலையிலிருந்து ஜெமினி வரை நடந்து சென்றேன். ஆனால் ஒரு தியேட்டரையும் கடந்து செல்லவில்லை".
இது எவ்வாறு சாத்தியம்?

6. பறவைகளைப் பார்க்கும் விருப்பமுடைய ஒருவர் ஒரு அபூர்வப் பறவையை சந்திக்கிறார். சிறிது நேரத்தில் இறக்கிறார். என்ன நடந்தது? இது ஒரு உண்மை நிகழ்ச்சி.

7. ஒரு லாரி ஓட்டுனர் ஒருவழிப் பாதை ஒன்றில் தவறான திசையில் சென்றார். ஆனால் அவரை போலீஸ் பிடிக்கவில்லை. ஏன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

39 comments:

வீ. எம் said...

1. பெயர் அல்ல

3. பூங்காவில் இருப்பவன் தான் அந்த கனவன்

5.ஒரு தியேட்டரையும் கடந்து செல்லவில்லை..எல்லா தியேட்டருக்குள்ளும் சென்று படம் பார்த்துவிட்டு சென்றார்

7. லாரி ஓட்டுனர் நடந்து சென்றார்..லாரி ஓட்டிச்செல்லவில்லை

வீ எம்

dondu(#11168674346665545885) said...

வீ. எம். அவர்களே. 1 மற்றும் 3-ஆம் கேள்விகள் விடை தவறு. ஒன்றாம் கேள்வியில் சொதப்பி விட்டீர்கள். சரியானப் பாதையில் இருக்கிறீர்கள். ஆனாலும் இங்கு குறிப்பிட்ட விடை தவறு. 5 மற்றும் 7 சரியான விடை.

7-க்கான சரியான விடையை இரா. முருகன் அவர்கள் கூறினார், ஆனால் எஸ்.எம்.எஸ்ஸில். அது இங்கு கணக்கில் வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Badri Seshadri said...

4. பத்தாவது கேள்வி: "உன் பெயர் என்ன?" அதற்கும் காப்பி அடித்த பையன் பக்கத்துப் பையனின் பதிலை அப்படியே ஈயடிச்சான் காப்பி ஆக்கி விட்டான். அல்லது பெயர் என்ன என்பதில்லாமல், உனது பரீட்சை எண்ணின் கூட்டுத்தொகை என்ன என்பது போன்ற காம்ப்ளிகேடட் கேள்வியாகவும் இருக்கலாம்!

dondu(#11168674346665545885) said...

பத்ரி அவர்களே, உங்கள் விடை ஏற்கும்படியாகவே இருந்தது. ஆனாலும் நான் நினைத்து வைத்திருந்த விடை அதை விடச் சுவையானது. மொழியைச் சார்ந்தது. சற்று முயற்சி செய்யுங்களேன். ஆனால் ஒன்று அது வரும்வரை உங்கள் விடைதான் சரியானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இன்னும் ஒரு விஷயம். பத்தாம் கேள்வி சாதாரணமானதுதான். உதாரணம் முதலாம் பானிபட் யுத்தம் எந்த வருடம் நடந்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Badri Seshadri said...

6. எனக்குத் தெரிந்து ஒரேயொரு பறவைதான் ஒண்டியமாக மனிதனை வெட்டிக் கொல்லக் கூடியது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் காசோவாரி என்னும் பறவை, காலில் கத்தி போன்ற நகத்தை உடையது. இது மனிதர்களைக் கொல்லக்கூடியது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

வல்லூறுகள் கூட செத்தபின்னர்தான் மனித உடலைச் சாப்பிடும்... என நினைக்கிறேன். அவசரப்பட்டு அரை உயிருடன் இருக்கும் மனிதனைக் கொல்லாது?

era.murukan said...

4. A and B were taking their examinations in different subjects. A copied from B and his answers were correct - with respect to B's question paper :-)

dondu(#11168674346665545885) said...

பத்ரி அவர்களே, 6-வது கேள்வியின் விடை தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

5. அண்ணா சாலை வழியாகச் செல்லாமல் திரைப்பட அரங்குகள் இல்லாத வேறேதாவது சாலை வழியாக நடந்து சென்றிருக்கலாம்

Badri Seshadri said...

3. பெண் நீச்சல் வீராங்கனை. பூங்காவில் உட்கார்ந்து பேப்பர் படித்தவர் அந்தப் பெண்ணுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த ஆசிரியர். பெண் சாதாரணமாக கடலில் பலநேரம் நீந்திப் பிழைக்கக் கூடியவர். அவர் கடலில் தவறி விழுந்ததால் இறந்துவிட்டார் என்பதை ஆசிரியரால் நம்ப முடியவில்லை. அதனால் கணவன்தான் முதலில் மூச்சை நிறுத்தி கொன்று கடலில் தள்ளியிருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.

dondu(#11168674346665545885) said...

A and B were taking their examinations in different subjects. A copied from B and his answers were correct - with respect to B's question paper :-)
அப்படியானால் காப்பியடித்தப் பையனின் முதல் ஒன்பது பதில்கள் எவ்வாறு சரியாக இருந்திருக்கும்? அப்படியும் அவன் பெயில் என்று கூறியதுதானே ஏன் என்று கேட்டேன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

லதா அவர்களே, வீ.எம். அவர்கள் ஏற்கனவே சரியான பதிலைக் கூறி விட்டார்.

பத்ரி அவர்களே, மூன்றாம் கேள்விக்கான உங்கள் விடை தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

1. பெயர் (thanks to V.M.)

enRenRum-anbudan.BALA said...

ஹுமாயூன் அக்பரின் தந்தையின் மகனின் தந்தை :) (to be in the same format as others!)

Rest later if unanswered !!!

dondu(#11168674346665545885) said...

லதா அவர்களின் விடையே சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

2. மைதானத்தை நெருங்கியவுடன் உன்னை கொல்லப்போகிறேன் என்று முதுகில் அமர்ந்திருப்பவன் சொல்லியிருந்தான். (அடச்சே.. ராஜேஷ்குமார் கதையெல்லாம் படிச்சு எப்படியெல்லாம் தோணுது?!)

3. பூங்காவில் இருந்தது அந்தப் பெண்ணின் கணவர்.

4. உன் பின்னால் உட்கார்ந்து எழுதும் பையனின் பெயர் என்ன?

6. அவரது கடைசி விருப்பம் அது. (தூக்கு தண்டனை கைதி?!)

dondu(#11168674346665545885) said...

மஞ்சுளா மற்றும் மாயவரத்தானின் விடைகள் தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என் நண்பர் கல்யாணராமன் ப்ளாக்கர் அக்கௌன்ட் இல்லாததால் பதில் ஒன்றை மின்னஞ்சல் மூலம் அளித்துள்ளார்.
"I don't have a blogger account. So, here is the answer to Puzzle 4.

The other boy has answered the 10th question correctly too. Our boy has either written the wrong answer or given no answer at all.

Either way, this proves that he is the dud.

Kalyan Raman"

தவறான விடை கல்யாணராமன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Salahuddin said...

3. இதை முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு க்ளு: பூங்காவில் பேப்பர் படிப்பவர் டிராவல் ஏஜன்ட். சரிதானா?

dondu(#11168674346665545885) said...

"பூங்காவில் பேப்பர் படிப்பவர் டிராவல் ஏஜன்ட். சரிதானா?"

சரிதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முகமூடி said...

6. அவர் பார்த்தது பெங்குயினை குளிர் தாங்க முடியாமல் இறக்கிறார்.(பெங்குயின் பறவை இனத்தை சேர்ந்தது)

dondu(#11168674346665545885) said...

அவர் பார்த்தது பெங்குயினை குளிர் தாங்க முடியாமல் இறக்கிறார்.(பெங்குயின் பறவை இனத்தை சேர்ந்தது)

Interesting. ஆனால், சரி இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முகமூடி said...

3. அவர்கள் பயணம் செய்தது DEAD SEAல். Dead seaல் தவறி விழுந்தாலும் இறக்க மாட்டார்கள். உப்பின் அடர்த்தி காரணமாக மிதப்பார்கள். ஆகவே அது கொலைதான் என்று முடிவுக்கு வந்துவிடுகிறான்

முகமூடி said...

6. அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகிறது, அவர் வெளியே எறியப்பட்டார். கீழே விழும்பொழுது பறவையை சந்திக்கிறார் (ஒரு மில்லி செகண்ட்), கொஞ்ச நேரத்தில் தரையில் மோதி இறக்கிறார்... ச்சை... என்ன விதமான திங்கிங் இது ;0)

dondu(#11168674346665545885) said...

அவர்கள் பயணம் செய்தது DEAD SEAல்.
இல்லை. சலாஹுத்தீன் அவர்கள் க்ளூ கொடுத்திருக்கிறார். அதை உபயோகிக்கவும்.

கேள்விகள் 2, 3, 4 மற்றும் 6 பாக்கி உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

6. அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகிறது, அவர் வெளியே எறியப்பட்டார். கீழே விழும்பொழுது பறவையை சந்திக்கிறார்

கிட்டத்தட்ட நெருங்கி விட்டீர்கள். சற்றே மாற்றிக் கூற வேண்டியதுதான். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முகமூடி said...

6. அப்போ அவர் செல்லும் ஒற்றை இன்ஜின் க்ளைடர் விமானம் பறவை மோதலால் விபத்துக்குள்ளாகிறது. சரியா

லதா said...

2. அவன் முதுகில் உள்ள சுமை விரிவடையாத பாரசூட், அவன் விமானத்திலிருந்தோ எலிகாப்டரிலிருந்தோ கீழே குதிக்க நேர்ந்து பாரசூட் விரியாததால்(தான்) இறக்கப்போவது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. (நன்றி முகமூடி அவர்களே. வேறொரு கேள்விக்கான உங்களின் பின்னூட்டத்திலிருந்துதான் இந்த விடையைக் கண்டுபிடித்தேன்)

dondu(#11168674346665545885) said...

அப்போ அவர் செல்லும் ஒற்றை இன்ஜின் க்ளைடர் விமானம் பறவை மோதலால் விபத்துக்குள்ளாகிறது. சரியா

மிகவும் சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அந்த கணவன் போகும் போது 2 டிக்கெட்டும் திரும்பி வர 1 டிக்கெட்டும் அந்த ட்ராவல் ஏஜெண்டிடம் பதிவு செய்ய சொல்லி இருக்கலாம்.

100% சரியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போது 4-ஆம் கேள்வி மட்டும் பாக்கி.

இன்னும் ஒரு முறை க்ளூ தருகிறேன்.

மாணவர்களின் கேள்வித்தாளில் உள்ள 10-ஆம் கேள்வியில் பத்ரி சொன்னது போல ஒரு காம்ப்ளிகேஷனும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

.:dYNo:. said...
This comment has been removed by a blog administrator.
.:dYNo:. said...

10-ஆம் கேள்வியில் ஒரு காம்ப்ளிகேஷனும் இல்லை.

>>>> 4. Might have copied even the other person's name / roll number?

Didn't notice that V.M had already answered the 7th Q!

.:dYNo:. said...
This comment has been removed by a blog administrator.
.:dYNo:. said...

4. The first person might have used bigger font and hence would have reached the end of the answer sheet for the 10th question and answered it in the next sheet. But the person who copied might have used a smaller glyph and might have had enought space on the first sheet to answer the 10th Q but would have still used the next sheet to ansewer the 10th question.

.:dYNo:.

.:dYNo:. said...

Another guess...
4. The first guy was blind and so had inscribed the answers using the braille language.

dondu(#11168674346665545885) said...

இன்னும் முயற்சி செய்யுங்கள் டைனோ அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கஞ்சா கருப்பு said...

ஏன் எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்கிறே டோண்டு. போய் வேறு ஏதாவது உருப்படியான காரியத்தைச் செய்யலாமே.

மூர்த்தி

dondu(#11168674346665545885) said...

சரியான விடை நோக்கர் அவர்களே.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது