இன்று நவம்பர் 7, 2005. வலைப்பூவில் என் முதல் ஆண்டின் கடைசி நாள். போன வருடம் 8-ஆம் தேதி முதல் பதிவு போட்டேன். இப்பதிவு 173-ஆம் ப்திவு என்று ப்ளாக்கர் கூறுகிறது. நூறாம் பதிவு வந்ததை கவனிக்கவில்லை.
இந்த ஒரு ஆண்டில் பல விஷயங்கள் நடந்து விட்டன. அவற்றைப் பற்றி ஒரு நீள் பார்வை இப்போது. போன ஆண்டு அக்டோபர் ஹிந்துவில் தமிழ் ப்ளாக்ஸ் பற்றி படித்தேன். கூக்ளேயில் "Tamil blogs" என்று சர்ச் போட்டதில் http://tamilblogs.blogspot.com/ என்ற உரல் கிடைத்தது. ஒவ்வொரு வலைப்பூவாகப் போய் சுட்டியதில் பல வலைப்பூக்கள் படிக்கக் கிடைத்தன. அவற்றில் என்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவு முக்கியமானது. அவரது திருவல்லிக்கேணி நினைவுகள் என் மனத்தைக் கவர்ந்தன. அவற்றுக்கு பின்னூட்டம் இடலாம் என்றால் ப்ளாக்கர் கணக்கு திறக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. சரி என்று திறந்து வைத்தேன். இருப்பினும் தமிழில் தட்டச்சு செய்ய ஏதுவாக என்னைத் தயார் செய்து கொள்ள சில நாட்கள் பிடித்தன. என் முதல் பதிவு போன நவம்பர் 8-ஆம் தேதிதான் வந்தது.
வந்த புதிதில் நான் நிறைய நேரம் மற்றப் பதிவுகளை பார்ப்பதில் செலவிட்டேன். பிறகு மெதுவாக என்னைப் பற்றியும் என் மொழிபெயர்ப்பு அனுபவங்களையும் பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணத்தில் இணைத்துக் கொண்டதில் பலர் என் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தனர்.
இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து என் பதிவுகள் சூடு பிடிக்க ஆரம்பித்தன. சோ, ராஜாஜி ஆகியோரைப் பற்றி நான் போட்டப் பதிவுகள் பலவகையான எதிர்வினைகளைக் கொண்டு வந்தன. ஆனால் என்னுடைய இப்பதிவு வந்ததும்தான் நிலைமை முற்றிலும் மாறியது. இதற்கு 308 பின்னூட்டங்கள் வந்தன. பல பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டன, அவை இந்த எண்ணிக்கையில் சேர்த்தி இல்லை. முக்கியமான விளைவு போலி டோண்டு வந்ததே. அவன் அடித்த/இன்னும் அடிக்கும் கூத்தை தமிழ்மணமே அறியும். அது சம்பந்தமாக நான் சில பதிவுகள் போட வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இப்பதிவு. நான் எங்குப் பின்னூட்டமிட்டாலும் அதன் ஒரு நகலை இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அது இன்னும் தொடர்கிறது. இன்றையத் தேதி வரை 477 பின்னூட்டங்கள், and still going strong.
போலி டோண்டு வந்ததில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அது மற்றவர்களிடமிருந்து எனக்கு கிடைத்த மாபெரும் மாரல் சப்போர்ட். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். மற்றப்படி எல்லாம் என் உள்ளம் கவர் கள்வன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் திருவுள்ளப்படியே.
வரும் நாட்களிலும் என் வலைப்பூவை தொடர்ந்து நடத்துவேன் என்று கூறி இது வரை தந்த, இனிமேல் தரப்போகும் ஆதரவுக்காக நன்றி கூறி இப்பதிவை முடிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: பேய் மழை காரணமாக வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து கொண்டிருக்கிறது. இப்போதே கணுக்கால் அளவு தண்ணீர் ஏறி விட்டது. ஒரு வேளை நாளை பதிவு போட முடியுமா எனத் தெரியவில்லை. ஆகவே சிறிது முன்கூட்டியே இப்பதிவை போட்டு விடுகிறேன். 7-ஆம் தேதி இது வெளி வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்.
மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்
-
ஆலயக்கலை வகுப்புக்கும், சைவ வகுப்புக்கும் வந்தவர்களில் சிலர்
‘மரபுக்கவிதைகளை படித்துப் புரிந்துகொள்ளாமல் அடுத்தபடிக்குப் போகமுடியாது
போலிருக்கே’ என்று எனக்...
21 hours ago
77 comments:
பாராட்டுக்கள் டோண்டு அவர்களே. கணுக்கால் அளவு தண்ணீர் என்றால், சமாளிக்க முடியும்தானே.
நன்றி தேன்துளி அவர்களே. சமாளித்து விடலாம் என்றே நினைக்கிறேன்.
இப்போதுதான் காசி அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. அவருக்கும் என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெள்ளத்துடன் நடந்த போட்டியில் கூற மறந்தது. இந்த ஒரு ஆண்டில் இரண்டு முறை நட்சத்திரமாகத் தேர்வு செய்யப்பதேயாகும். முதல் முறை சொதப்பினேன். இரண்டாம் முறை தயாராக இருந்து பதிவுகளை ரெடியாக வைத்திருந்ததில் ஒப்பேற்ற முடிந்தது.
காசி மற்றும் மதி அவ்ர்களுக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
der Glückwunsch :-)
Herzlichen Glückwunsch zum Geburtstag!
der Glückwunsch :-)
Herzlichen Glückwunsch zum Geburtstag!
Was für eine angenehme Überraschung, meine Herren Kusumban und L.L Das! Dankeschoen!
Mit freundlichen Gruessen,
Dondu Raghavan
// --L-L-D-a-s-u---//
das Konzept ;-)
உங்கள் முந்தைய பின்னூட்டம் டோண்டு அவர்களை வாழ்த்திதானே. .. பழக்கதோஷத்தின் கட் அன்ட் பேஸ்ட் பண்ணிவிட்டேன் .(ஞான் சாஃப்ட்வேராக்கும்!!).. இப்போ மாட்டிக்கிட்டேன்.. திட்டவில்லைதானே ;) .. இது என்ன மொழி ?
Machen Sie sich keine Sorgen Dondu!
Gott segne Dich!!!
தாசு அவர்களே, ஜெர்மனில் நீங்களும் குசும்பனும் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அதற்கு நான் கொடுத்த ஜெர்மன் பதிலின் தமிழாக்கம் இதோ.
"என்ன இனிய ஆச்சரியம் குசும்பன் மற்றும் தாசு அவ்ர்களே. மிக்க நன்றி.
நட்பு கலந்த வாழ்த்துக்களுடன்,
டோண்டு ராகவன்
Machen Sie sich keine Sorgen Dondu!
Gott segne Dich!!!
நன்றி குசும்பன் அவர்களே. கடவுளின் அருள் எல்லையற்றது. கேட்டவருக்கெல்லாம் கிடைக்கும்
அன்புடன்,
டோண்டு ராகவன்
die große Furcht --L-L-D-a-s-u---???
:-)
Herr Dondu, Beste Wünsche. Morgens, das auch mein Glück mit deutschem nach Herrn Kusumban und Herrn LL Das ausprobiert. Mindestens dieses ist nicht Kopie und Paste. Dieses ist von der google.-Hoffnung, die Sie sich nicht um die Grammatik kümmern.
ирония????
Vergaß, dieses in meiner letzten Anmerkung hinzuzufügen.
:)))
Upparwala comment manam REsunatharikini kusumban தாழ்மையுடன் ...
Hmmmm.....
für sich selbst sprechen ;-(
Raghavan,
Thanks for remembering :-)
vAzththukkaL !
மிக்க நன்றி ராமனாதன் அவர்களே. Drastvitya.
ирония???? என்றால் ஐரனிதானே ராமனாதன் அவர்களே?
Vergaß, dieses in meiner letzten Anmerkung hinzuzufügen.
:)))
ஓக்கே, நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Ну господин Кусумбаре,
Что Я ещё могу сделать когда не понимаю о чём идёт речь?
:)
ராமனாதன் அவர்களே, ரஷ்யனைப் பயில ஆரம்பித்து பாதியில் விட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே நீங்கள் குசும்பரே என்று விளிப்பது மற்றும் புரிகிறது, மற்றவை தெரியாமல் விழிப்பதுதான் இப்போது நடக்கிறது. தயவு செய்து தமிழுக்கே வரவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி பாலா அவர்களே. இதற்கு முந்தையப் பதிவிலும் உங்களை பற்றி எழுதியுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ein bißchen das Wissen. Russian & German.
Lassen Sie es mich versuchen!
//ирония???? என்றால் ஐரனிதானே//
அதே தான்..
குசும்பரே,
இங்க என்ன நடக்குதுன்னே புரியாத போது, நான் வேறென்ன செய்வது. :)
தமிழுக்கே வந்தாச்சு.
நன்றி ராமனாதன் மற்றும் குசும்பன் அவர்களே. தமிழே நமக்கு போதும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Congratulations sir!
समझना ;-)
நன்றி ரஜினி ராம்கி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆஹா தார் டின்னோட அது யாருப்பா? ;-)
தமிழே போதும். உங்க பதிவ இந்த மாதிரி ஹைஜாக் பண்றதுக்கு மன்னிக்கவும். கடசி ரஷ்யப் பின்னூட்டம். :)
Кусумбаре,
Эсли будем продолжить, то на верно гос.Донду будет читать нас, как спам-мери! Закончиваем здесь. Согласен? продолжаем на э.почте. адрес знаете, да? Я ещё удивлен что знаете русский. пишите. :)
Донду = டோண்டு?
மீதி ஒன்றும் புரியவில்லை. Согласен= புரிந்ததா என்று பொருள் வருமா?
அவ்வளவுதான் அம்பேல்.
समझना ;-) புரிந்து கொண்டேன். ஷுக்ரியா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
НАСТОЯЩИЙ ТРУДНЫЙ
In vivek style das Ausströmen
НАСТОЯЩИЙ ТРУДНЫЙ நல்லது. வேறு என்ன கூற முடியும், புரிந்தால்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சரி, இனிமே விளையாட்டு வேணாம்.
குசும்பரே,
இனியும் இங்கே இப்படி தொடர்ந்தோமானால், திரு. டோண்டு நம்மை spammers என்று எண்ணக்கூடும். அதனால் தனிமடல் போடுங்கள். ஐடி தெரியுந்தானே? Agreed? எழுதுங்க.
//НАСТОЯЩИЙ ТРУДНЫЙ
//
நிஜமாவே கஷ்டமானது. எங்கேர்ந்தோ translator யூஸ் பண்றீங்கன்னு புரியுது :)
Neigung Google irgendwie scheinen, zu übersetzen, was Vivek sagte. Diese Spitze ist auf Deutsch, also kann ich halten mein... Brunnen... Sie wissen ;)
நன்றி ராமனாதன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தன்யவாத் சாப்ஜி!
ஆஜ்கா குசும்பு கதம்ஹோகயா !!!
Gute Nacht!!! bonne nuit !!!
:-)
கணுக்கால் அளவு தண்ணிரிலும்., பதிவிட்டு கலக்கிவிட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
Bonne nuit, Monsieur Kusumban.
நன்றி அப்பிடிப்போடு அவர்களே. இப்போது என் அறை தரை தெரிகிறது.
இதற்கு அடுத்தப் பதிவும் போட்டு விட்டேன். ஹோமில் சுட்டினால் அதை பார்க்கலாம். தமிழ்மணம் இன்னும் திரட்டவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள்
Herzlichen Glückwunsch.
:-))
நன்றி தர்சன் அவர்களே
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு,
ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
(எல்லாரும் மொழிப்பெருமை காமிச்சதாலே இங்கே 'முழி' பிதுங்கிருச்சுங்க.)
வாழ்த்துக்கள் டோண்டு அவர்களே! 173 பதிவுகள். சாதனை தான். தொடருங்கள்.
உங்கள் வீடு தாழ்வான பகுதியா அல்லது அதிக மழையின் காரணமா.பொருட்களை உயரமான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்களும் தான்.
நன்றி சார்
நன்றி துளசி, சிவா மற்றும் என்னார் அவர்களே. நான் கூறியது போல முதலில் உயர்வான மட்டத்தில் இருந்த வீடு தெரு இந்த 36 ஆண்டுகளில் உயர்ந்ததில் கீழ் மட்டத்துக்கு போய் விட்டது. எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு சார்!
நன்றி ஜோ அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
お祝い及びよい願い。
Congratulazioni ed auguri
Συγχαρητήρια και καλύτερες ευχές
எல்லாரும் மண்டை காய வைக்கிறாங்களேன்னு, என் பங்குக்கு கொஞ்சம் ஜப்பானீஸ், இத்தாலியன், க்ரீக்குன்னு ஏதோ எனக்கு தெரிஞ்ச பாஷைங்கள்ல... மத்த்படி
ஒன்னும் பயப்படாதீங்க... இதைத்தான் சொன்னேன்..
Glückwünsche und beste Wünsche
நன்றி முகமூடி அவர்களே. இத்தலியனில் எழுதியது மட்டும் புரிந்தது. Everything else was Greek and Latin to me!
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
தேசிகன்
http://www.desikan.com/blogcms/
நன்றி தேசிகன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள்.
நன்றி காசி அவர்களே. நேற்று தொலைபேசியில் வெள்ள நிலையை பற்றி விசாரித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு சார்...
தமிழ் வலைப்பதிவுலகத்தையே சிலவேளைகளில் பரபரப்புக்குண்டாக்கிய பெருமை உங்களையே சாரும்!
நன்றி அன்பு அவர்களே,
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துகள் டோண்டு அவர்களே!
வீட்டில் வெள்ளம் என்பது கஷ்டமான ஒன்று (அனுபவம்தான்), நிலைமை விரைவில் சீரடையட்டும்.
ஒரு வயதைக் கடந்து விட்ட 'மூத்தவருக்கு'
வாழ்த்துக்கள். மேலும் எழுதி வளர, வளர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே. ஒரு "வயசுப் பையனுக்கு" வாழ்த்து கூறிய தருமிக்கும் என் நன்றி உரித்தாகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு அவர்களுக்கு ,
வாழ்த்துக்கள்.உங்களுடைய பதிவுகளை தவறாமல் படித்துவரும் வாசகர்களில் நானும் ஒருவன்.
ஆங்காங்கே நான் பின்னுட்டம் இட்டாலும் ,கடந்த ஓர் ஆண்டுகளாக பதித்துக் கொண்டிருப்பத்து பெரிய விஷயம் தான்.
எனக்கு உங்கள் எழுத்தில் பிடித்தது என்னவென்றால் ,உங்களுடைய துணிச்சல்..வாதத்திறமை..மற்றவர்கள் மனம் நோகாமல் எழுதும் பண்பு.யார் என்ன சொன்னாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் போல எதிர் நடை போட்ட(போட்டு வரும்) உங்கள் எழுத்து நடை.மேலும் மற்றவர்களிடம் நீங்கள் இடும் பின்னுட்டம்..தவறுகளை சொல்லும் முறை..
உங்களிடமிருங்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது ஜயா..
வாழ்த்துக்கள் உங்களுக்கு..என் நன்றிகள் உங்கள் குடும்பத்திற்க்கு..(அவர்கள் நேரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டதால்).
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.
வாருங்கள் பெருங்குளம் மாயக்கூத்தன் கிருஷ்ணன் அவர்களே. ஏற்கனவே என்னுடைய இன்னொரு பதிவில் பின்னூட்டமிட்டு உங்கள் ஊரை ஊகிக்கச் சொன்னீர்கள் அல்லவா?
அதற்கப்புறம் நான் மறுபடியும் நவதிருப்பதிகளுக்கும் வந்து உங்கள் ஊர் கோவில் பெருமாளையும் சேவித்தேன். இரட்டைத் திருப்பதிகள் மட்டும் சேவிக்க முடியவில்லை.
எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதனின் திருவிளையாடலே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி கல்பனா அவர்களே. இன்றுதான் ப்ளாக்கர் கணக்கு துவக்கினீர்கள் போலிருக்கிறது. உங்கள் வரவு நல் வரவாகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு வருடமாய் எழுதிவரும் உங்களுக்கு ஒரு மாதமாய் எழுதிவரும் பொடியனின் வணக்கங்கள்....வாழ்த்துகளுடன்.
நன்றி குமரன் அவர்களே. யார் பொடியன்? 11 குதிரைகள் மேல் ஒன்றாகச் சவாரி செய்யும் நீங்களா? எப்படி சமாளிக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பேய் மழை காரணமாக வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து கொண்டிருக்கிறது. இப்போதே கணுக்கால் அளவு தண்ணீர் ஏறி விட்டது.
சென்னையில் கூட நிறைய இடத்தில் இப்படித்தான் ஆகிவிட்டதாம். சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கத்தில் படகுச்சவாரி எல்லாம் வந்துவிட்டதாமே?
ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைப் படித்து முடித்ததும் பின்னூட்டங்களைப் படிக்க இந்த show/hideஐ க்ளிக் பண்ன வேண்டி இருப்பது எனக்கு ரொம்ப சோம்பலாக இருக்கிறது என்பதை நான் தெரிவிக்காவிட்டாலும் நான் சோம்பேறிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
http://www4.brinkster.com/shankarkrupa/blog
நன்றி கிருபா. இந்த காட்டு/மறை வசதியை பார்த்தவர்கள் அனைவரும் சிலாகித்தனரே? ஹல்வாசிடி விஜய் கூட தன் பதிவுக்கு அதை பொருத்தினாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே,
அடுத்த முறை அங்கு போகும் போது கிருஷ்ணாபுரம்,கருங்குளம் போன்ற ஊர்களை பார்க்கத் தவறாதிர்கள்.
கிருஷ்ணாபுரம் திருந்ல்வேலீயிலிருந்து திருச்செந்தூர் போகிற வழியில் உள்ளது.கோவில் சிற்பங்கள் அருமையாக இருக்கும்.இரண்டுமே பெருமாள் கோவில்கள்.
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.
நன்றி மாயக்கூத்தன் அவர்களே. திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் மற்றும் கருங்குளத்தை சரியாக ஓரியென்ட் செய்து கூற முடியுமா? say with respect to Srivaikundam bridge turning?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொல்கிறேன்..
முதலில் கிருஷ்ணாபுரம்.திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில்
முதலில் வருவது.பாளையங்கோட்டை தாண்டியவுடன் ஒரு 5 KM ல் வரும்.முன்பு சொன்னது போல் கோவிலில் உள்ள சிற்பங்களின் அழகு மற்றும் அதன் சிறப்பு சொல்லி மாளாது.
கருங்குளம் அடுத்தாற்போல் வருவது.சுமார் 10- 15 KM தாண்டியவுடன் ஸ்ரிவைகுன்டம் திற்கு முன்னால் வரும்.இங்கே உள்ள பெருமாள் வருடத்திற்க்கு ஒரு முறைதான் மலை மீது இருந்து கீழே வருவார்.சித்ரா பொளர்னமி அன்று இது நடக்கும்.ஆனால் இந்தக் கோவில் நவ திருப்பதிகளில் வராது.
இரண்டுமே பார்க்க வேண்டிய கோவில்கள்.
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.
நன்றி மாயக்கூத்தன் அவர்களே. அதாவது, திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் சென்றால் முதலில் வருவது கிருஷ்ணாபுரம், பிறகு கருங்குளம் அதன் பிறகே ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏனைய 8 திருப்பதிகள். சரிதானே?
தெளிவான வழிக்காட்டலுக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு
நன்றி கிருபா. இந்த காட்டு/மறை வசதியை பார்த்தவர்கள் அனைவரும் சிலாகித்தனரே? ஹல்வாசிடி விஜய் கூட தன் பதிவுக்கு அதை பொருத்தினாரே.
ஓ, தொழில்நுட்பம் என்று பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு பயனராகப் பார்க்கும்போது அவ்வளவு வசதிப்படவில்லை. நீங்களே சொல்லுங்களேன், ஒரு வலைப்பதிவைப் படிச்சு முடிச்சதும் ஒடனே பின்னூட்டங்களையும் அப்படியே படிக்கறது சுலபமா இல்லாட்டி மறுபடியும் மறுமொழிகளைப் படிக்க ஒரு முறை மௌசை அப்படியே கொண்டுபோய் சொடுக்கியைப் பயன்படுத்துவது சுலபமா?
சரி, defaultஆக மறுமொழி தெரிவது மாதிரியும் வேண்டாமென்றால் மறைக்கும் மாதிரியும் செய்துவிட்டால் சுலபமாகவும் இருக்கும், இந்த ஜாவாஸ்க்ரிப்டைப்பயன்படுத்திய மாதிரியும் இருக்கும் இல்லையா? ஒரு வேளை அப்படி நீங்கள் பண்ண நினைத்தால், உங்கள் டெம்ப்ளேட்டில் <span class="commenthidden" என்று இருப்பதை <span class="commentshown" என்று மாற்றினால் போதும்.
பின்னூட்டம் இடுவதற்கும் Post a comment சுட்டியைப் பயன்படுத்தாமல் இங்கேயே ஒரு தகவல்பெட்டி வைத்தால் இன்னும் நலம். :-)
சோம்பேறிக்கு சோம்பேறி (King of Kings மாதிரி வைத்துக்கொள்ளுங்கள்),
க்ருபா
கிருபா அவர்களே, நீங்கள் கூறுவதும் பாயிண்ட்தான். யோசிக்கிறேன்.
உங்கள் உடல் இப்போது நலமா? நீங்கள் லீவில் இருப்பதாக பத்ரி கூறினார். உங்கள் செல்பேசி நம்பரை அழுத்தினால் சேவை தற்காலிகமாக இல்லை என்ற தகவல் வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி கல்பனா அவர்களே. நானும் உங்களைப் போலவே பாலா அவர்கள் பதிவில் பின்னூடமிடவே ப்ளாக்கர் கணக்கு துவங்கினேன். அது என்னை எங்கேயோ கொண்டு சென்று விட்டது.
தமிழில் தட்டச்சு செய்ய e-kalappai version 2.0 இறக்கி உங்கள் வன்தகட்டில் நிறுவிக் கொள்ளுங்கள். பிறகு alt+2 அடித்து தமிழ் தட்டச்சுக்கு வாருங்கள். அப்புறம் ஒரே ஜாலிதான். உதாரணத்துக்கு ammaa என்று ஆங்கில எழுத்துக்களைத் தட்டினால் அம்மா என்று திரையில் வரும். ஆங்கிலம் வேண்டுமென்றால் alt+1. டிஸ்கியில் அடிக்க alt+3 இப்போதெல்லாம் நான் எவ்வளவு வேகமாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது தெரியுமா.
சுரதா பெட்டியும் இறக்கிக் கொள்ளலாம். பார்க்க: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
மேல் பெட்டியில் ஆங்கில எழுத்துக்களை அடித்தால் அவற்றின் உச்சரிப்புக்கேற்ப தமிழ் எழுத்துக்கள் கீழ் பெட்டியில் வரும். அப்பெட்டியின் அடியில் உள்ள copy பட்டனைத் தட்டினால் தமிழ் பாரா நகலெடுக்கப்படும். அதை கொண்டு வந்து உங்கள் பதிவில் ஒட்டிக் கொண்டால் தீர்ந்தது பிரச்சினை.
நீங்கள் சென்னையில் இருந்தால் என்னுடன் தொலை பேசலாம். என் தொலைபேசி எண்கள் 22312948 மற்றும் 9884012948. சந்தேகம் ஏதேனும் இருந்தால் தீர்த்துக் கொள்ளலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லது கல்பனா அவர்களே,
alt+2- க்கு பதிலாக alt+3 அழுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன் அல்லது இ கலப்பை பதிவு 1.0 இறக்கிக் கொண்டிருக்க வேண்டும். வெர்ஷன் 2.0 தான் உங்களுக்கு ஏற்றது. எது எப்படியாயினும் டிஸ்கியில் அடித்திருக்கிறீர்கள். வலைப்பூவில் யூனிகோடில் அடிப்பதே நல்லது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்...11 குதிரைகள் மேல் சவாரி செய்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது...ஆனால் எப்படியோ எழுத ஆரம்பித்த ஆறு வாரத்தில் 50 பதிவுகள் போட்டாச்சு.
http://koodal1.blogspot.com/2005/11/50.html
வாழ்த்துக்கள் குமரன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment