மகாபாரதம் யுத்தம் முடிந்தது. யுதிஷ்டிரர் மன்னராகிறார். பாண்டவர்கள் தம் மனைவி துரோபதி பின்தொடர,பீஷ்மர் சாய்ந்திருக்கும் அம்புப் படுக்கைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு ஆசியளித்த பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு பல நல்ல விஷயங்களை உபதேசிக்கிறார். அப்போது துரௌபதி தன்னையும் அறியாது கேலிப் புன்னகை செய்கிறாள்.
பீஷ்மர் தான் கூறுவதை நிறுத்திவிட்டு துரோபதி அவள் ஏன் புன்னகை புரிந்தாள் எனக்கேட்க, அவள் கூறுகிறாள்.
"பிதாமகரே, இத்தனை நல்ல விஷயங்கள் கூறுகிறீர்களே, அவற்றில் ஒன்றுகூட நான் சபையில் மானபங்கம் செய்யப்பட்டபோது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா"?
பீஷ்மர் கோபப்படாது பதிலளிக்கிறார். "அம்மா, அச்சமயம் நான் துரியனின் உப்பைத் தின்று வந்தேன். அதனால் எனது ரத்தத்தில் அவனது கெட்ட எண்ணங்கள்தான் ஆட்சி புரிந்தன. நானும் சும்மா இருந்து விட்டேன். ஆனால் இப்போது அந்த கெட்ட ரத்தத்தை எனது அருமை அருச்சுனனின் பாணங்கள் வெளியேற்றி விட்டன. இப்போது நல்ல புத்தி திரும்பியது".
ஆனால் இந்த இடத்தில் நான் வேறு ஒரு விஷயத்தைப் பார்க்கிறேன். இந்த தர்மசங்கடம் பீஷ்மராகத் தேடிக்கொண்டது. அவரது தந்தை சந்தனு சத்யவதி என்னும் பெண் மேல் ஆசைப்பட, அவளை அவருக்கு மணமுடிக்க வேண்டுமென்றால் அவளுக்கு அவரிடம் பிறக்கும் மகனுக்குத்தான் பட்டம் என்று அவள் தந்தை நிபந்தனை விதிக்கிறார். தனது மகன் தேவவிரதன் இருக்க, இம்மாதிரி தாம் செய்வது தகாது என சந்தனுவும் அரண்மனைக்கு திரும்பிவிடுகிறார். இந்த விஷயத்தை தேவவிரதன் மூன்றாமவர் மூலமாக அறிந்து சத்யவதியின் தந்தையிடம் அவளை தன் தந்தைக்கு மணம் முடித்துத் தருமாறு கேட்கிறார். பட்டமும் சத்யவதியின் மகனுக்கே எனக் கூறுகிறார்.
ஆனால் சத்யவதியின் தந்தை ஒரு முன்ஜாக்கிரதை முத்தண்ணா. அவர் கூறுகிறார். "இளவரசே, நீங்கள் வாக்கு தவறாதவர். அது எனக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு பிறக்கும் மகன்களைப் பற்றி நான் ஏதும் கூற இயலுமா? அவர்கள் பிற்காலத்தில் எதிர்த்தால் என்ன செய்வது"?
இப்போதுதான் தேவவிரதன் கடுமையான சபதம் செய்கிறார், தான் எக்காரணம் கொண்டும் திருமணமே செய்யப்போவதில்லை என்று. வானத்திலிருந்து புஷ்பமாரி பொழிகிறது. பீஷ்மா என்று அவர்க்கு பெயரும் மாறுகிறது. அக்கதை மகாபாரதம் தெரிந்த கிட்டத்தட்ட எல்லோருமே அறிவர். ஆனால் அந்த சபதத்தால் அவருக்கு என்னென்ன தர்மசங்கடங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தால் மலைத்து போவீர்கள். சத்திய்வதியின் புதல்வன் விசித்திரவீர்யனுக்காக பெண்ணெடுக்கப் போன இடத்தில் குளறுபடி ஆரம்பிக்கிறது. அதுபற்றி விரிவாக இன்னொரு முறை கூறுகிறேன். ஆனால் இது சம்பந்தமாக அம்பையின் விரோதம் ஏற்பட்டு அவள் அடுத்த பிறவியில் சிகண்டியாக வந்து அவரது மரணத்துக்கு காரணமாகிறாள். அதுவும் வேறு கதை. இச்சிக்கல் வந்ததன் காரணமே பீஷ்ம பிரதிக்ஞைதான் என்று கூறினால் மிகையாகாது.
விசித்திர வீரியன் வாரிசின்றி இறக்க, சத்யவதியின் தந்தையே தனக்கு பீஷ்மர் செய்து தந்த சத்தியத்திலிருந்து அவரை மீட்டு, அவர் விசித்திர வீர்யனின் விதவைகளை மணம் புரிய வேண்டும் எனக் கேட்க, அப்போதும் மறுப்பது பீஷ்மர் தனக்குத்தானே வைத்து கொண்ட கட்டுப்பாடே. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, பொது நலனுக்குகந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்ள அவர் தவறியதே மகாபாரதப் போருக்கு அடிவகுக்கிறது.
யுதிஷ்ட்ரர் சூதாடியதும் அவர் செய்த ஒரு பிரதிக்ஞை காரணமே என்பதை எவ்வளவு பேர் அறிவீர்கள்? குல நாசம் ஏற்படப் போகிறது என்று தௌம்ய முனிவர் கூறிவைக்க, உறவினர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றப் போவதாக இவர் சபதம் செய்து தொலைக்க, துரியன் கேட்டுக் கொண்டபடி சூதாட்டம் ஆடத் துவங்க என்றெல்லாம் கதை போகிறது.
மீண்டும் பீஷ்மர். கௌரவ அரசவையில் துரோபதைக்கு அவமானம் செய்தது துரியன். அவனையும் துச்சாசனையும் செவுளில் நாலு அறை விட்டு துரோபதையைக் காத்திருக்கலாம் பீஷ்மர். ஆனால் செய்யாததற்கு காரணம் அத்தினாபுரத்து அரசனுக்கு துணையாக இருப்பதாகவும் அவர் கொடுத்த வாக்கு அவரது மூல சபதத்தின் ஒரு பகுதி.
இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். யுத்தம் என்று வரும்போது உங்கள் யுக்திகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். "முன்பு நீங்கள் வேறுமாதிரி செய்தீர்களே, இப்போது இம்மாதிரி செய்கிறீர்களே" என்று விஷயம் புரியாதவர்கள்/புரிந்தவர்கள் கேட்டாலும் அதை புறம் தள்ளிப் போகத் தெரிய வேண்டும். முக்கியமாக உங்களை ஒருவரும் டைப்காஸ்ட் (typecast) செய்ய இடம் தரலாகாது.
யுத்தம் என்று மட்டுமல்ல. எப்போதுமே டைப்காஸ்ட் ஆகாமல் தவிர்க்கவும். நீங்கள் நல்ல முறைகளைப் பிரயோகிப்பது உங்கள் நலனுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். மற்றவருக்கு தீமை செய்யலாகாது என்று இருப்பதன் முக்கிய நோக்கமே தனக்கும் அதே நிகழாலாம் என்ற பயமேயாகும்.
முக்கிய நோக்கம் இறுதி வெற்றி. அது வரும் வரைக்கும் நீங்கள் திசை திரும்பலாகாது. நாலு பேர் என்ன கூறுவார்களோ என யோசித்து கொண்டிருந்தால் அதோகதிதான். ஏனெனில் எதிரி அவ்வாறெல்லாம் யோசித்து நேரம் வீணாக்க மாட்டான்.
இதைச் சொன்னதும் நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. டாமும் ஹாரியும் நண்பர்கள். அவர்களது மனைவியரும் தோழிகள். நால்வருமாகச் சேர்ந்து உல்லாசப் பயணம் செல்கின்றனர். ஹோட்டலில் இரண்டு அறைகள் ஒவ்வொரு தம்பதிக்கும் புக் செய்துள்ளனர். போன இடத்தில் மழை. நால்வரும் ஹோட்டலுக்கு ஓடி வருகின்றனர். மின்சாரம் வேறு ஃபெயில் ஆக, எங்கும் இருட்டு. தட்டுத் தடுமாறி தத்தம் மனைவியருடன் டாமும் ஹாரியும் அறைகளுக்கு திரும்புகின்றனர். டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஐந்து நிமிடம் அதில் செல்ல, பிரார்த்தனை முடியவும் மின்சாரம் திரும்ப வரவும் நேரம் சரியாக உள்ளது. இப்போதுதான் டாமுக்கு தெரிகிறது தன்னுடன் தன்னறையில் வந்தது ஹாரியின் மனைவி என்று. துடிப்பாக கதவை நோக்கி அவன் ஓட ஹாரியின் மனைவி கூறுகிறாள். "டூ லேட் டாம். ஹாரி பிரார்த்தனையெல்லாம் செய்வதில்லை".
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
8 hours ago
23 comments:
ஐந்து நிமிடத்தில் என்ன செய்திருப்பான் ஹாரி.?}}}
// டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வது வழக்கம். //
இது டாமின் மனைவிக்கு தெரியும் பட்சத்தில், வந்துள்ளது அவளின் கணவன் இல்லையென்று தெரியாதா... ?
Ayya
Bhishmar was a realized soul.He was someone who had already understood para brahmam.He could choose his time of death.No wonder Lord Krishna himself asked Yudishtra to seek advice from bhishmar.Bhishmar also recites Vishnu Sahasranama lying on bed of arrows.Also, he was the first one in mahabharatham to announce to the world that Krishna was avatharam of Maha vishnu.This happened when Krishna was honoured by yudishtra during his aswamedha yagam.
Bhishma did save pandavas once.When shakuni & duryodhana were planning to kill pandavas by deceit , he comes to know of this and threatens to destroy both of them if they try to carry out.Though he was forced to fight for Hastinapura throne, he himself tells yudishtra that he can be killed only if a woman stands in front of him in war.Otherwise, he is invincible
Since he is a realized soul(jivan muktha), he exists only to do his duty in this mortal world.He never cares for the results,even if it means his own death because he is above such things and is not attached to any thing
In philosophical view,He is much better than Draupadi who is very vengeful and attached to worldly things
பீஷ்மரை நான் இங்கு குறைத்து மதிப்பிடவேயில்லை. அதே சமயம் அவரது சுயகட்டுப்பாடுகளே அச்சமயம் பல கேடுகளுக்கு வழிவகுத்தது. ஹஸ்தினாபுரத்து மன்னனுக்கு சேவை புரிவது ஒரு புறம் இருக்கட்டும். சூதாட்டம் நடந்த சமயம் இந்திரப் பிரஸ்தம் ஹஸ்தினாபுரம் என்று பிரிந்ததே ஒரே தேசத்திலிருந்துதான். ஆக, பீஷ்மர் யுதிஷ்டிரருக்கும் சார்பாக செயல் பட்டிருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தருமத்துக்கு சார்பாகச் செயல் படுவதே கூட போதுமானதாக இருந்திருக்கும். அதைக்கூட அவர் செய்யவில்லை. அதை செய்ய விகர்ணன் வரவேண்டியிருந்தது. அவன் ஒருவன் மட்டும் தைரியமாக எழுந்து பாண்டவர்களுக்கு ஆதரவாகப் பேச அப்போது பல பெரியவர்கள் குதூகலித்தனர். அச்சமயம் வெறுமனே விகர்ணன் கூறியதையாவது ஆமோதித்திருந்திருக்கலாம். பீஷ்மர் அதைக்கூட செய்யவில்லை. இது அவரது குழப்பத்தைத்தான் காட்டுகிறது.
எந்த நொடியிலும் "அடச்சே நான் கூறுவதைக் கேளுங்கள்" என்று அவர் வீறுகொண்டு எழுந்திருந்தால் துரோணர் மற்றும் கிருபரின் பின்தொடர்தலும் நடந்திருக்கும். அதை செய்யவில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
இது டாமின் மனைவிக்கு தெரியும் பட்சத்தில், வந்துள்ளது அவளின் கணவன் இல்லையென்று தெரியாதா... ?
//
பொறாமை பெண்களுக்கே உரியது. தன் தோழியுடைய பொருளை அபகரிப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்கள் பெண்கள்.
பீஷ்மர் அதை செய்திருக்கலாம் இதை செயதிருக்கலாம் என்று சொல்லுற நீ பீஷ்மரை விட அறிவில் சிறந்தவன் என்று சொல்ல வருகிறாயா? மறு பிறவி என்றெல்லாம் எழுதியிருக்கிறாயே, நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் அறிவியல் வளர்ச்சி என்ன? அப்போதைய மக்கள் தொகை இப்போதைய மக்கள் தொகையின் விகிதாசாரம்? டேய் நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களா? இல்ல இது போல பழம் கதை கற்பனை பேசி மக்களை அடிமைபடுத்த திரும்பவும் திட்டமிடுறீர்களா?
இத்தால் டோண்டு சார் அறியத்தருவது யாதெனில்....
பிரார்த்தனை செய்து வாழ்வில் கிடைக்கும் அரிய வாய்ப்புக்களை இழக்கவேண்டாம்.
புள்ளிராஜா
இறந்து பதினாறாம் நாள் தான் திதி வைக்க வேண்டும்; அடடே, லீவு இல்லையா? பதினோராம் நாளில் கூட வைக்கலாம்; அதுவும் இல்லையா, ஐந்தாம் நாள் கூட ஓகே தான்; ம்ம்ம்ம், சரி மூன்றாம் நாளில் வைக்கலாம்னு அதர்வண வேதத்தில் ஒரு இடத்தில் சொல்றா; அட இதுல என்னங்க, எல்லாம் மனசு தான், பெரியவர் சாகிறப்போ சாகட்டும்; நீங்க திதி இப்பவே கொடுத்திட்டு ஊர் போய்ச் சேருங்கோ, எல்லாம் பகவான் பார்த்துப்பா என்று சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.
கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, பொது நலனுக்குகந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்ள அவர் தவறியதே மகாபாரதப் போருக்கு அடிவகுக்கிறது.///
Good!
<== ....ஓட ஹாரியின் மனைவி கூறுகிறாள். "டூ லேட் டாம். ஹாரி பிரார்த்தனையெல்லாம் செய்வதில்லை".==>
=)))
//சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.//
வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதுதான் தேவை என்று ஒருவர் சொல்வதால்தானே இந்த பேச்செல்லாம் வருகிறது.
சம்பந்தப்பட்டவர் குற்ற உணர்ச்சி இல்லாது ஊருக்கு போய் சேரட்டுமே என்ற நல்ல எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.
வேண்டுமென்றால் நீங்கள் ஊருக்கு செல்லும் உங்களுக்கு அம்மாதிரி சந்தர்ப்பம் நேர்ந்தால் 16 நாள் காரியங்களையும் செய்து, ஒவ்வொரு மாதமும் மாஸ்யம் செய்து ஆண்டிறுதியில் வருஷாப்த்திகம் செய்து விட்டுப் போங்களேன். யார் வேண்டாம் என்கிறது?
டோண்டு ராகவன்
மகா பாரத கதையை விட ஹாரியின் கதை தன் அருமை,
எங்க சார் புடிபிங்க இதையெல்லாம்,
மகாபாரதம் கற்பனை என்று நான் நினைக்கிறேன்.
//RATHNESH said...
இறந்து பதினாறாம் நாள் தான் திதி வைக்க வேண்டும்; அடடே, லீவு இல்லையா? பதினோராம் நாளில் கூட வைக்கலாம்; அதுவும் இல்லையா, ஐந்தாம் நாள் கூட ஓகே தான்; ம்ம்ம்ம், சரி மூன்றாம் நாளில் வைக்கலாம்னு அதர்வண வேதத்தில் ஒரு இடத்தில் சொல்றா; அட இதுல என்னங்க, எல்லாம் மனசு தான், பெரியவர் சாகிறப்போ சாகட்டும்; நீங்க திதி இப்பவே கொடுத்திட்டு ஊர் போய்ச் சேருங்கோ, எல்லாம் பகவான் பார்த்துப்பா என்று சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.//
தான் பிச்சையாக போடும் பணத்தில் வாழும் பார்பான் என்று எண்ணி கொண்டு வாழ் நாள் முழுதும் வயித்தேரிச்சல் பட்டு வாழும் இனத்தை சேர்ந்த ஒரு ஜந்து இது. வழக்கம் போல கேடி குண்ண்ன் கண்டபடி ஏகப்பட்ட எழுத்து பிழையோடு எழுதும் பிதற்றல்களோடு இந்த ஜந்து தன் கருத்துகளை நிறுத்தி கொள்ளட்டும்.இவரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என்ன செய்ய நல்ல பதிவில் கூட தன் ஜாதி வெறியை கொண்டு வந்து மூக்கை நுழைக்கும் இது போல மெண்டல்களை என்ன செய்ய?
//சம்பந்தப்பட்டவர் குற்ற உணர்ச்சி இல்லாது ஊருக்கு போய் சேரட்டுமே என்ற நல்ல எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.//
ஆகா!! ரொம்ப நல்ல எண்ணம்!
//வேண்டுமென்றால் நீங்கள் ஊருக்கு செல்லும் உங்களுக்கு அம்மாதிரி சந்தர்ப்பம் நேர்ந்தால் 16 நாள் காரியங்களையும் செய்து, ஒவ்வொரு மாதமும் மாஸ்யம் செய்து ஆண்டிறுதியில் வருஷாப்த்திகம் செய்து விட்டுப் போங்களேன். யார் வேண்டாம் என்கிறது?//
ரத்னேசு ஒரு தபா திதி பண்ணி புரோகிதருக்கு தண்டம் அழுவதே அனாவசிம்ன்னு சொல்லுறார்.. நீங்களோ மேலும் புரோகிதர் பிசினஸுக்கு மார்கெட்டிங் பண்ணுறீங்களே.. இது என்ன லாஜிக்?
டோண்டு சார்,
சமரசமே சாதிக்க நினைப்போரின் குறுக்கு வழி என்று சுற்றி வளைத்து தாங்கள் சொல்ல வந்ததை, படிப்போர் நெஞ்சில் பச்சக் என்று புரிய வைக்க நடைமுறை உதாரணத்தை நான் சொன்னேன். அவ்வளவு தான்.
//வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதுதான் தேவை என்று ஒருவர் சொல்வதால்தானே இந்த பேச்செல்லாம் வருகிறது.
சம்பந்தப்பட்டவர் குற்ற உணர்ச்சி இல்லாது ஊருக்கு போய் சேரட்டுமே என்ற நல்ல எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.
வேண்டுமென்றால் நீங்கள் ஊருக்கு செல்லும் உங்களுக்கு அம்மாதிரி சந்தர்ப்பம் நேர்ந்தால் 16 நாள் காரியங்களையும் செய்து, ஒவ்வொரு மாதமும் மாஸ்யம் செய்து ஆண்டிறுதியில் வருஷாப்த்திகம் செய்து விட்டுப் போங்களேன். யார் வேண்டாம் என்கிறது?
டோண்டு ராகவன்//
தங்கள் பதிலின் முதல் இரண்டு பத்திகளில் என் கருத்துக்கு பதில் சொல்லும் பொறுப்பு தெரிகிறது. அதற்கு நன்றி.
தங்களுடைய அடுத்த வாக்கியங்களில் என்ன தெரிகிறது என்பதை நீங்களே சாதாரண மனநிலையில் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
நான் சுட்டிக் காட்டியது சமூக நிலை. அதற்கு இப்படிப்பட்ட பதில்கள் தங்களிடமிருந்தும் அனானி சாரிடம் இருந்தும் வருவது அதற்கான ஒப்புதல் போல் தெரிகிறது.
மேலாண்மைக் கட்டுரை / சுய முன்னேற்றக் கட்டுரை, எழுதுபவருக்கு சமூக நிதர்சனத்தை விருப்பு வெறுப்பு இன்றிப் பார்த்து, அதையும் கட்டுரைப் பொருளாக்கி (முடிந்தால்)தீர்வு சொல்லத் தெரியும் பக்குவம் வேண்டும் என்பது என் கருத்து. நிதர்சனங்களை எதிர் கொள்ளவே இவ்வளவு தன்னிலை மறந்த கோபமும் தரம் இறங்கிய வார்த்தைக் கொப்பளிப்பும் வருவது, 'உயர்ந்த வேதக் கருத்துக்களையும், கடவுட் செய்திகளையும் வெறும் வாய் வார்த்தைகளாக மட்டுமே உபயோகித்து போலிக் கௌரவம் தேடிக் கொண்டவர்கள்' என்கிற பொதுவான கருத்தினை ஊர்ஜிதப் படுத்துவதாக அமைந்து விடாதா என்பது என் ஆதங்கம். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
//சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.//
சாதாரணமான மேலாண்மைப் பதிவில் வந்து பதிவிட்டவரின் ஜாதியை இவ்வாறு தாக்கினால் தாக்கினால் வேறு என்ன எதிர்வினை எதிர்ப்பார்க்கிறீர்கள்?
//மேலாண்மைக் கட்டுரை / சுய முன்னேற்றக் கட்டுரை, எழுதுபவருக்கு சமூக நிதர்சனத்தை விருப்பு வெறுப்பு இன்றிப் பார்த்து, அதையும் கட்டுரைப் பொருளாக்கி (முடிந்தால்)தீர்வு சொல்லத் தெரியும் பக்குவம் வேண்டும் என்பது என் கருத்து. நிதர்சனங்களை எதிர் கொள்ளவே இவ்வளவு தன்னிலை மறந்த கோபமும் தரம் இறங்கிய வார்த்தைக் கொப்பளிப்பும் வருவது,..//
அப்படியா சார். நானும் நிதர்சனத்தைத்தான் எழுதினேன். கருமம் செய்ய வேண்டியவன் தனக்கு லீவ் இல்லை என்று அவசரப்படும்போது இம்மாதிரி சமாதானங்கள் எல்லாம் தேவைப்படுகிறது. அதுதான் நிதரிசனம். அதெல்லாம் ஒன்றும் கருமம் எல்லாம் செய்ய வேண்டாம் என்று விட்டு விலக தில் இருந்தால் செய்து விட்டு போக வேண்டியதுதானே.
இப்படித்தான் இன்னொரு பதிவர் தனது தந்தைக்காகக் கருமம் செய்தபோது செய்துவைத்த பார்ப்பனர் தன்னை மரியாதையுடன் நடத்தவில்லை என்று சண்டைபோட, அவரும் சரி என்று, வாங்கையா, உட்காருங்கையா என்றெல்லாம் மரியாதையாகப் பேச, அதையும் அவமரியாதையாக எடுத்து கொண்டு இங்கு பதிவும் இட்டாரே. அவருக்கும் நான் கூறியது, கருமம் செய்யும் நம்பிக்கை இல்லாவிட்டால் செய்யாதீர்கள், அது அதற்கு ஒரு முறை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினேன்.
நான் இப்பதிவில் கூறுவது இதுதான். உங்கள் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். கருமம் செய்ய இஷ்டமில்லையெனில் அதற்கு சாக்குபோக்கு இன்னொருவரிடம் தேடினால் இம்மாதிரித்தான் நடக்கும்.
சாதாரணமான பதிவில் ஜாதியை இழுத்தது நீங்களே. நான் பலமுறை கூறியுள்ளது போல ஆ ஊ என்றால் பாப்பானை மட்டமாகப் பேசினால் இந்தப் பாப்பான் வந்து கேள்வி கேப்பான்.
டோண்டு ராகவன்
அல்லக்கை நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பார்க்கலியோ
//அல்லக்கை நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பார்க்கலியோ//
பார்த்தேன், சிரித்தேன். வேறு என்ன செய்ய முடியும். எனக்கென்னமோ வேறு வேலையில்லாதது போல இவரைத் திட்டுகிறேனாம். அனானிப் பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறேனாம். அப்போது அவரது இந்தப் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்களைப் போடுவது யாராம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
வேறொருவருடன் உங்களுக்கு என்ன அனுபவம் என்பது எனக்கு அவசியம் இல்லாத ஒன்று.
//நான் இப்பதிவில் கூறுவது இதுதான். உங்கள் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். கருமம் செய்ய இஷ்டமில்லையெனில் அதற்கு சாக்குபோக்கு இன்னொருவரிடம் தேடினால் இம்மாதிரித்தான் நடக்கும்//
இது ஆரோக்கியமான விவாதக் கருத்து. மிகச் சரி.
//சாதாரணமான பதிவில் ஜாதியை இழுத்தது நீங்களே.//
தவறு. நான் ஜாதியைக் குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை. நான் சுட்டிக்காட்டிய செய்கையை, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சிலர் செய்வதற்கு மொத்த ஜாதியையும் சொன்னதாக அர்த்தம் எடுப்பது முதிர்ச்சியற்ற தவறு.
//நான் பலமுறை கூறியுள்ளது போல ஆ ஊ என்றால் பாப்பானை மட்டமாகப் பேசினால் இந்தப் பாப்பான் வந்து கேள்வி கேப்பான்//
ஒரு பொதுக் கருத்தைக் கூட ஜாதிச் சாயம் பூசாமல் பார்க்க முடியவில்லை என்றால் உங்களுக்காக நான் இரக்கப்படுகிறேன்.
//சாதாரணமான மேலாண்மைப் பதிவில் வந்து பதிவிட்டவரின் ஜாதியை இவ்வாறு தாக்கினால்//
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த விரல்களுக்கு மதிப்பு தந்து நான் பின்னூட்டம் இட்டது டோண்டு ராகவன் என்கிற மானிடரின் பதிவுக்கு; ஜாதி அடையாளத்துடன் மட்டுமே தான் ஐடண்டிஃபை ஆக வேண்டும் என்கிற அழுத்தமான எண்ணத்தில் இருக்கும் ஒருவருக்கு அல்ல.
//தவறு. நான் ஜாதியைக் குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை. நான் சுட்டிக்காட்டிய செய்கையை, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சிலர் செய்வதற்கு மொத்த ஜாதியையும் சொன்னதாக அர்த்தம் எடுப்பது முதிர்ச்சியற்ற தவறு.//
அப்படியா? ஒரு உதாரணத்தைக் கூறும்போது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும் வெளிப்படையாக குறித்து, அதையும் இழிவு தரும் செய்கையாக நிலைநிறுத்த முயற்சிப்பது ஜாதி துவேஷமில்லாமல் வேறு என்னவாக இருக்கும்? அதிலும் கருமம் செய்ய வேண்டியவரின் செய்கையை விமரிசனம் செய்யாது இருந்தது ஏன்? அதற்குத்தான் பதில் கூறினேன், முதல் பதிலில். இப்போதாவது அது ஆரோக்யமான விவாதக் கருத்து என்று கூறியதற்கு நன்றி.
நான் முதல் பதிலில் கடைசி பாராவில் குறிப்பிட்டதும் அதே நிலையில்தான் பார்க்கப்படவேண்டியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//போட்டிருக்கு பார்க்கலியோ//
பார்த்தேன், சிரித்தேன். வேறு என்ன செய்ய முடியும். எனக்கென்னமோ வேறு வேலையில்லாதது போல இவரைத் திட்டுகிறேனாம். அனானிப் பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறேனாம். அப்போது அவரது இந்தப் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்களைப் போடுவது யாராம்?//
I think Poli dondu's allakkai luckylook is suffering from guilty complex!!
//யுத்தம் என்று மட்டுமல்ல. எப்போதுமே டைப்காஸ்ட் ஆகாமல் தவிர்க்கவும்.//
இதுதான் மையக் கருத்து! டைப்காஸ்ட் ஆகிறாவர்கள் மிகச் சீக்கிரத்தில் காணமல் போய்விடுகிறார்கள். திரைப்படத்துறை ஒரு சிறந்த உதாரணம்! அதே நேரத்தில், ஒரு டைப்காஸ்ட் மாயைக்குள் நின்று மாற்றங்களைப் புகுத்துபவர்கள் மிகப் பெரிய வெற்றியை அடைகிறார்கள்: எம்ஜிஆரும், ரஜினியும் பின் சொன்ன முறைக்கு சிறந்த உதாரணங்கள்!
ரஜனி மற்றும் எம்.ஜி.ஆர். பற்றி நீங்கள் கூறியது இமேஜ் வட்டத்துக்குள் வரும். நான் கூறுவது வேறு. அதாவது, உங்கள் ரியேக்ஷன்கள் எதிராளியால் எதிர்ப்பார்ப்படாமல் இருக்க வேண்டும் என்பதே.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நீங்கள் எவ்வாறு எதிர்வினை புரியப் போகிறீர்கள் என்பது கடைசி வரை சஸ்பென்சாகவே வைத்திருக்க வேண்டும்.
யுதிஷ்டிரன் இன்னின்ன மாதிரி ரியேக்ட் செய்வான் என்பதை சகுனியால் ஊகிக்க முடிந்ததாலேயே அவனால் சூதில் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment