சமீபத்தில் 1964-ல் கிண்டி பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வழமையாக நடக்கும் மருத்துவப் பரிசோதனையில் எனக்கு ஹைட்ரோசில் இருப்பதாக மருத்துவர் கூறினார். விறைகளில் நீர் கோத்துக் கொள்ளும் இந்த நிலை ஏன் வருகிறது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. நானும் இன்று நாளை என்று சிகிச்சையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருக்கிறேன்.
என் வீட்டம்மா பிடிவாதமாக ஒரு சர்ஜனிடம் போன புதன் அன்று அழைத்துச் சென்றார். அவர் ஒரு பார்வையிலேயே அறுவை சிகிச்சைதான் எனக் கூறிவிட்டார். வியாழனன்று அறுவை சிகிச்சைக்கு முந்தையச் சோதனைகள் எல்லாம் முடிந்து சனிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெள்ளி இரவு பத்து மணி வாக்கில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்.
அடுத்த நாள் அறுவை சிகிச்சை. முதுகுத் தண்டில் ஊசி போட்டு இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்று போகச் செய்வதால் மொத்த மயக்க மருந்து கொடுக்கத் தேவையில்லை. அறுவை சிகிச்சை முழுவதும் நான் என்ன நடக்கிறது என்று கண்டுணர முடிந்தது. ஆபரேஷனுக்காக முதல் ஸ்டெப் எடுக்கும் போது சர்ஜன் மற்றும் மயக்க மருந்து நிபுணர் இருவர் முகத்திலும் அதிர்ச்சி கலந்தத் திகைப்பு. என்ன ஆயிற்று என்று கேட்க பெருங்குடலின் ஒரு பகுதி விறைக்குள் இறங்கியுள்ளது என்றும் இதற்குப் பெயர் ஹெர்னியா என்றும் கூற, திகைப்பு என்னுள்ளும் பரவியது. விரைக்குள் தேவையற்றத் திரவம் எதுவும் இல்லை என்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்தனர். சரியாக ஒன்றரை மணி நேரம் ஆயிற்று, அறுவை சிகிச்சை முடிய. இந்த 42 ஆண்டு காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்பதை உணர்ந்து எனக்குள் கடவுளின் கருணை குறித்து வியப்பே ஏற்பட்டது. என்னளவில் நான் எனக்குள்ளேயே "என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனே" என்றுத் திரும்பத் திரும்பக் கூறினேன். அவன் அருள் நிரம்பிய முகம் என்னுள்ளே மையம் கொண்டது.
பெருங்குடலை திரும்ப அது இருக்க வேண்டிய இடத்துக்குத் தள்ளி தையல் எல்லாம் போட்டு ஆபரேஷனை முடித்தனர். அப்போது கூட என்னிடம் அவ்வளவு எதிர்வினை இல்லை. அடுத்த நாளிலிருந்துதான் ரியேக்ஷன் துவங்கியது.
தன்னுடைய 70வது பிறந்த நாளன்று சுஜாதா அவர்கள் தன்னுடைய "கற்றதும் பெற்றதும்" தொடரில் எழுதியது இப்போதுதான் 100% புரிகிறது.
சர்ஜனுக்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
8 hours ago
75 comments:
நன்றி ராஜ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கண்டிப்பாக நாட்டாமை அவர்களே, கடவுள்தான் இத்தனை ஆண்டுகளும் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
இந்த சிகிச்சைகளை நீங்கள் முடிந்த அளவு முன்னரே செய்திருக்க வேண்டும் .இப்போதாவது செய்தீர்களே அது வரைக்கும் நல்லது..பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்!
O..God! When u called up on Friday for my Birthday, u didn't mention about this.
May God's blessings be ever with you!
ஆம் ஜோ அவர்களே. முன்னமேயே செய்திருக்க வேண்டும்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரஜினி ராம்கி அவர்களே, இதை நான் பெரிய விஷயமாகக் கருதவில்லை அதுதான் காரணம்.
இப்போது பதிவு போட்டதும் மற்றவர்களாவது என் மாதிரித் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I too hope so Satheesh.
Regards,
Dondu N.Raghavan
மிஸஸ் டோண்டுவிடம் சொல்லி பெரிய பூட்டா கம்ப்யூட்டருக்கு பூட்ட சொல்லுங்க. அப்பத்தான் உடம்பு குணமாகும் :-))
ராமசந்திரன் உஷா அவர்களே, நன்னா வச்சீங்களே ஒரு ஆப்பு எனக்கு. என் வீட்டம்மாவும் அதையேத்தான் கூறுகிறார்.
ஐயோ அம்மா என்று அவரிடம் தடையை எல்லாம் பிடித்து, கெஞ்சி ஒரு வழியாக சமாதானம் செய்து வைத்திருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அய்யா,
தாங்கள் பூரண குணமடைய பிரார்த்தனைகளும்,வாழ்த்துக்களும்.
உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் டோண்டு. மகர நெடுங்குழைக் காதன் துணை நிற்பான். சரண் ஆகுதி தான் ஒவ்வொரு விண்ணவப் பத்தியாளனும் வேண்டுவது.
அன்புடன்,
இராம.கி.
மிக்க நன்றி இராம கி. மற்றும் சுதர்சன் கோபால வர்களே.
ஆன்புடன்,
டோண்டு ராகவன்
Get Well Soon Dondu Sir!
என்னுடைய பதிவில் வந்த போலிப்பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்! தவறுக்கு மன்னிக்க!
நன்றி இளவஞ்சி அவர்களே. போலிப் பின்னூட்டத்தை அழித்ததற்கு நன்றி. இப்போது பார்க்கிறீர்கள் அல்லவா, நான் எடுக்கும் முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் அதீதமானதில்லையென்று?
அன்புடன்,
டோண்டு ராகவன்
get well soon dondu sir, i suggest you to keep off from Thamizmanam and computer for some time..be in bed..read books....( donot read thuglak(?)..
take care
நன்றி முத்து (தமிழினி அவர்களே).
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மிஸஸ் டோண்டுவிடம் சொல்லி பெரிய பூட்டா கம்ப்யூட்டருக்கு பூட்ட சொல்லுங்க. அப்பத்தான் உடம்பு குணமாகும் :-))//
உஷா சொன்னதேதான்.
கொஞ்சநாள் இந்த பதிவு போலி டோண்டு விவகாரங்களையெல்லாம் விட்டுவிட்டு எங்காவது சென்றுவாருங்கள்.
மனமும் உடலும் புத்துணர்வு பெறும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம்.பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.
கல்வெட்டு அவர்களே,
நீங்களும் உஷா மேடமும் கூறியதில் பாதிதான் நிறைவேற்ற முடியும், ஏனெனில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கணினி அருகிலேயே இருக்க வேண்டியக் கட்டாயம். அயர்லாந்திலிருந்து ஒரு கம்பெனி தனக்கு ஜெர்மனியிலிருந்து வரும் ஜெர்மன் மின்னஞ்சல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக எனக்கு அனுப்பும் மொழி பெயர்த்து அனுப்பிய பின்னால் அயர்லாந்துக்காரர்கள் அவற்றுக்கு பதில்கள் ஆங்கிலத்தில் போட அதையும் எனக்கு ஜெர்மனில் மொழிபெயர்க்க அனுப்புவர். ஆகவேதான் நான் கணினியை விட்டு நகர முடியாது. லட்டு மாதிரி வேலை செமத் துட்டு.
மற்றப்படி போலி டோண்டுவைப் பார்த்து இனிமேல் நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. மொத்தமாக மட்டுறுத்தல் வந்ததே அவனுக்கு படு அடி. ஆகவேதான் காசி அவர்கள் பெயரில் நான் சாகாததற்கு வருத்தம் தெரிவித்து செந்தமிழில் இப்பதிவில் பின்னூட்டமிட்டிருந்தான். குப்பையை எறிவது போல அதை நான் எறிந்து விட்டேன்.
உங்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி. பை தி வே நீங்கள் எல்லோரும் உங்கள் பதிவுகளில் நான் இடும் பின்னூட்டங்கள் நான் இட்டதுதானா என்பதை என்னுடைய 3 சோதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளவும். அதர் ஆப்ஷனை நீங்கள் எடுத்ததுபோல மற்றவர்கள் எடுத்தாலே பாதி பிரச்சினை தீரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
anpin dondu sir,
intha maathiri vishayathile ellaam " dont do " aaga irukkappaddathu.. ithilellamm "do it now" aaga iruppathu nalladhu..
paripoorana kunamadaiya en prarthanaikal.
endrendrum anbudan
seemachu...
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி சீமாச்சு அவர்களே. ரிலாக்ஸாகத்தான் இருப்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Raghavan,
Get well Soon.
Regards,
Raj Chandra
அன்புள்ள டோண்டுவுக்கு,
அனேக நமஸ்காரங்கள்.
தங்களுக்கு சிகிச்சை நல்ல முறையில் நடந்ததற்காக, ஆண்டவனுக்கு நன்றிகள்.
நீங்கள் மென்மேலும் நல்ல ஆரொக்கியம் பெற்று, நலமோடு வாழ ஆண்டவனைப்
பிரார்த்திக்கிறேன்.
- அழியா அன்புடன் அருண்
அன்பானப் பின்னூட்டத்திற்கு நன்றி அருண் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே,
எப்படி உங்கள் மருத்துவரால் Hydrocle க்கும் herniaக்கும் அடையாளம் காண முடியவில்லை ? நிச்சயம் நீங்கள் வணங்கும் மகர நெடுங்குழைகாதன் துணை இருப்பான். பூரண குணமடைய நானும் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் உடலிற்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுங்கள்.
டோண்டு சார்,
விரைவில் குணமடைய கடவுளைப் பிராத்திக்கிறேன்.
Dondu,
Get well Soon,
Usha Sonnathupola 50% aavathu muyaRsikkavum..
Mutinjsa, Click here:-)
Something tells me you havent seen yet:-)
அவர் மட்டுமல்ல எல்லா வைத்தியர்களும் ஹைட்ரோசில் என்றுதான் இத்தனை நாள் கூறி வந்திருக்கிறார்கள். ஏனெனில் ஹெர்னியா இவ்வளவு ஆண்டுகளாக சும்மா இருந்ததாகச் சரித்திரமே இல்லை என்றுதான் நான் அறிந்த வரை செய்தி.
எது எப்படியாயினும் ஆப்பரேஷன் நல்லபடியாக முடிந்ததே கடவுளின் அருள்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி மகேஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி பினாத்தல் சுரேஷ் அவர்களே. நீங்கள் சுட்டியப் பதிவும் அருமை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hi Thiru. Dondu,
Wish you a speedy recovery and all the very best.
Regards, PK Sivakumar
Get well soon....
-Ram
டோண்டு,
இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன்.
பூரண குணமடைய வாழ்த்துகளும், பிராத்தனைகளும்.
முழு ஓய்வெடுத்துக்கொண்டு வாங்க நம்ம கச்சேரிய மெதுவா வச்சுக்கலாம்:-)))) just kidding
டோண்டு அவர்களே,
இதுபோன்ற நிகழ்வுகள்தாம் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி பற்றிய எண்ணங்களைத் தூண்டுகின்றன. தாங்கள் பூரண நலமடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்!
Dear Dondu,
Get well soon!!!!
Radha
Oh forgot!! just go read penaathal suresh's recent post....hilarious!
Laughter is the best medicine and iam sure you'll enjoy the post..
and once again get well soon!!!!!
Radha
நன்றி ராதா அவர்களே,
பினாத்தலாரின் பதிவை நானும் பார்த்து பின்னூட்டமும் இட்டு விட்டேன்.
அன்புடன்,
பாண்டு சோழன்
நன்றி சோழநாடன், பி.கே. சிவகுமார், முத்து, பினாத்தல் சுரேஷ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி தங்கமணி அவர்களே,
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன சார் சொல்லவே இல்லையே..
சாரி சார்.. நானும் ஒரு வாரமா வேலை வேலைன்னு இருந்ததுனால உங்கள கூப்பிடவே முடியலை..
எப்படியோ.. ஆப்பரேஷன் வெற்றியா முடிஞ்சதே..
சீக்கிரம் நலமடையணும்னு பிரார்த்திக்கிறேன் சார்..
நன்றி ஜோசஃப் அவர்களே. சாதாரண ஆப்பரேஷந்தானே என்று தெனாவெட்டாக இருந்து விட்டேன். கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன்.
12-ஆம் தேதி வுட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் மாலை 5 மணி அளவில் ப்ளாக்கர் மீட்டிங் வைத்திருக்கிறார்கள். துளசி கோபால் அவர்களும் வருகிறார். அவர் என் வீட்டிற்கு போன வெள்ளிக்கிழமை வந்திருந்தார்.
எனக்கு தையல் 10-ஆம் தேதி பிரிப்பதால் நானும் மீட்டிங்கிற்கு வர முயற்சிப்பேன். முடிந்தால் அங்கு உங்களை நேரில் சந்திக்கவும் ஆவல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ந.ராகவன் அவர்களே!
உங்கள் உடல் பூரண நலம்பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அபூ முஹை
நன்றி அபு முஹை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள டோண்டு ராகவன் அவர்களுக்கு,
//அடுத்த நாளிலிருந்துதான் ரியேக்ஷன் துவங்கியது.//
உங்கள் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த இடத்திற்கு இது தேவையில்லை எனினும் என் மனதில் சிறு உறுத்தல் இருப்பதால் இங்கு அதனை குறிப்பிடுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உங்களின் ஒரு சில பதிவுகளுக்கு நான் கடுமையான முறையில் கருத்துக்களை தெரிவித்திருந்தேன். அவை அனைத்தும் டோண்டு என்ற மனிதனின் கருத்து/சிந்தனைகளுக்கான எதிர்வினை தானே தவிர என் சக சகோதர ஆத்மாவிற்கு எதிரான கருத்துக்களல்ல. இறைவனின் முன் நீங்களும் நானும் சகோதரர்களே, அந்த அடிப்படையில் உங்கள் மீது எனக்கு எவ்வித துவேசமோ, பகையோ,வெறுப்போ வர வேண்டிய அவசியமில்லை. என் கருத்துக்கள் அனைத்தும் உங்கள் கருத்துக்களுக்கான எதிர் வினை மட்டுமே. அது உங்கள் மனதை எவ்விதத்திலாவது பாதித்திருப்பின் என்னை மன்னிக்கவும்.
எனினும் இப்பொழுதும் நான் என் கருத்துக்களை மாற்றிக் கொள்ளவில்லை - நீங்கள் உங்கள் கருத்துக்களை மாற்றாத வரை. இது கருத்துக்களுக்கான எதிர்வினை மட்டுமே.
ஒரே குடும்பத்தில் உள்ள என் சகோதரர் என்ற வகையில் நீங்கள் பூரண குணமடைய மனதார இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்(உடன்பிறப்பு தவறான வழியில் போனாலும் அவனுக்கு ஒரு கஷ்டம் எனில் மனம் துடிக்குமே அது போல)
அன்புடன்
இறைநேசன்.
நன்றி இறை நேசன் அவர்களே.
உங்கள் கருத்து உங்கள் சுதந்திரம். உங்களைப் பற்றி நான் வெளியிட்டக் கருத்துக்களும்தான் மாறவில்லை என்பதையும் இங்கே கூறி விடுகிறேன். இது வேறு, அது வேறு.
உங்களிடம் அந்த விஷயமாக மேலும் வாதிடுவதால் பிரயோசனம் இல்லை என்பதாலேயே விலகினேனே தவிர, கூற பதில் இல்லாததால் அல்ல.
உங்கள் அன்பான விசாரிப்புக்கு மறுபடியும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
'டோண்டு' ராகவன்,
உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு பூரண சுகத்தை தருவானாக.
அன்புடன்,
மீக்க நன்றி, என் புதுக்கல்லூரி இளையவரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஐயா,
வணக்கம். தாங்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ப்ரியமுடன்,
கோபி
இதற்கு தான் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது என பெயரியவர்கள் சொல்லுவார்கள்.
உங்கள் உடம்மைப் பார்த்துக்கொள்ளங்கள் சார்.
எப்படி இவ்வளவு நாட்கள் இந்த உபத்திரவத்துடன் இருந்தீர்கள்.
நன்றி கோபி அவர்களே. அந்த 6 வயது கனவுப்பெண் எப்படியிருக்கிறார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதில் பிரச்சினையா? படுத்துக் கொண்டேதான் தண்ணிர் குடிக்கக் கூடாது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அந்த 6 வயது கனவுப்பெண்//
அருமையாய் இருக்கிறார். அவ்வப்போது கணினியுடன் சண்டை போட்டபடி... (கணினிதான் என் முதல் மனைவின்னு சொன்னா கோவம் வராதா.. சண்டை கணினியோடு என்றாலும் அடி விழுறது என்னவோ எனக்குத்தான்!)
:-)
அவரிடம் அக்கனவுப் பதிவை காண்பித்து விட்டீர்களா?
ஊடுதற் காமத்திற்கு இன்பம் ...
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன்.உடல் நலம் பெற வாழ்த்துக்கள்!
நன்றி கார்த்திக்ராமாஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Get well soon. Mr. Dondu.
by the title I thought you were talking about someone else.
Hope you are already feeling better.
நன்றி Babble மற்றும் சிறில் அலெக்ஸ் அவர்களே. உடல் வேகமாகத் தேறிவருகிறது. நேற்று மாலையிலிருந்து முன்னேற்றத்தை என்னால் நிமிடத்துக்கு நிமிடம் உணர்ந்து கொள்ள முடிகிறது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள்தான்.
Babble can you email me at Raghtransint at gmail dot com if you don't mind?
Regards,
Dondu N.Raghavan
டோண்டு,
விரைவில் உடல் நலம்பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீடு வாழவும் வாழ்த்துக்கள்
நன்றி தருமி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
உங்கள் அறுவை சிகிச்சை குறித்து இப்போதுதான் அறிந்தேன்.
இறைவனின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு கிட்ட பிராத்திக்கிறேன்.
.:dYNo:.
மிக்க நன்றி டைனோ அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தப் பதிவை நான் பார்க்கவில்லை. நேற்று நீங்கள் கூறிய பிறகே பார்த்தேன். பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.
Thanks Ramki,
Regards,
Dondu N.Raghavan
ஹேர்ணியா உயிர்போகும் நோயல்ல. ஆனால், உபாதை மிகுந்தது. முழுநலம் பெறுவதற்கு உடல்நிலையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி பெயரிலி அவர்களே. ஹெர்னியா என்பது உயிர் கொல்லும் நோய் இல்லைதான். ஆனால் அது மற்ற சிக்கல்களையும் விளைவிக்கக் கூடியது என்று என் சர்ஜன் கூறினார். எப்போது வேண்டுமானாலும் உள் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம், அது உயிருக்கு ஆபத்தானது என்று கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
இப்போதுதான் உங்களின் இந்த பதிவைப் பார்த்தேன். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!
சலாஹுத்தீன்
(மற்றொரு புதுக்கல்லூரியன்)
நம் புதுக்கல்லூரியைச் சேர்ந்த ஸலாஹுத்தீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே, தாங்கள் விரைவிலும், பூரணமாகவும் உடல் குணமடைய எனது வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் !
மிக்க நன்றி சோம்பேறி பையன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu-sir, I do not understand why you think hernia is such a complicated matter.
I have had a r-hernia surgery when I was 1 and half years old (amma solli kelvi, thzumbugal saatchi).
Later, when I was in high-school, I noticed a l-hernia. I lived with it for 5 years before I could get a surgery done. During the course, I have changed doctors and systems(allopathy and homeopathy) and have even seen one doctor mal-diagnoise it as hydrocele (syl?), just like in your case.
But it always was a kind of special condition as far as I was concerned. I had to be a little extra careful (no cycling, no kezhanghu (roots, uh? ;)), but never worried about the complications (the strangulation). Beleive me, apart from the feeling that I could get rid of it (with a surgery), there was nothing close to death, like you describe.
Why I'm writing this is that I beleive that half the treatment is psychological. When people like you make huge statements like this (did Sujatha do this too?), pl. remember that there *might* be one person out there with hernia, who might get shaken. I would say he is better off without us having scared his wits out.
Just my two cents worth!
"But it always was a kind of special condition as far as I was concerned. I had to be a little extra careful (no cycling, no kezhanghu (roots, uh? ;)), but never worried about the complications (the strangulation)."
மதன் அவர்களே நீங்கள் கூறுவது சரியே. ஆனால் நான் என்னுடைய முரட்டு வைத்தியம் - 3ல் எழுதியதைப் படித்துவிட்டு கூறுங்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3.html
"ஒரு நாளைக்கு சராசரியாக 40 கிலோமீட்டர் வீதம் ஒரு மாதத்தில் (25 நாட்கள்) 1000 கிலோமீட்டர், ஒரு வருடத்தில் 12000 கிலோமீட்டர், 6 வருடங்களில் 72000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் விட்டிருக்கிறேன். பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையில் 25000 கிலோமீட்டர்கள் என்று ஞாபகம். ஐ.டி.பி.எல்லில் எனக்கு "வன மானுஷ்" (காட்டு மனிதன் --> காட்டான்)என்று சிலர் பட்டப் பெயர் வேறு கொடுத்திருந்தனர்.
ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது, அதுவும் இப்பதிவைப் போட்ட பிறகு. சைக்கிள் ஓட்டும்போது கோமணத்தை இறுகக் கட்டியது ஒன்றுதான் நான் செய்து கொண்ட முன்ஜாக்கிரதை நடவடிக்கை. ஆனால் என்னுடன் 42 ஆண்டுகளாக இருந்த ஹெர்னியா என் உயிருக்கு அபாயத்தை உண்டு பண்ணாதது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் போட்ட பிச்சையே. இந்த அழகில் என் அப்பனை பற்றி போன வருடம் மார்ச் மாதம்தான் தெரிந்து கொண்டேன். முதல் தரிசனத்தின் போதே பல ஆண்டுகளாகவே அவனுடன் பழகிய உணர்வு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu சார் அருகாமை என்பது அருகில் இல்லாமை என்று பொருள்படும் அல்லவா?
நீங்கள் மரணத்தின் விளிம்பில் இருந்திருக்கிறீர்கள் என்றால்
அருகில் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்.
ராஜாஜி அவர்கள் கூட ஏதோ ஒரு திராவிட ப்த்திரிக்கையில்
இதே பிழையை சுட்டிக் காட்டினாராமே?
I may be wrong..
Forgive me if so...
//அருகாமை என்பது அருகில் இல்லாமை என்று பொருள்படும் அல்லவா?//
அருகாமை (பெயர்ச்சொல்):
சமீபம், அண்மை; proximity, nearness;
ஊருக்கு வெகு அருகாமையில் ஒரு சிற்றோடை ஓடுகிறது.
(நன்றி: கிரியா தமிழ் அகராதி)
அன்புடன்,
டோண்டு ராகவன்
தெளிவடைந்தேன்..
Merci beaucoup..
Post a Comment