இப்பதிவை போன வருடம் இதே மாதம் 28-ஆம் தேதி இட்டேன். அதன் பிறகு காவேரியில் நிரம்பத் தண்ணீர் போய் விட்டது. தமிழ்மணத்தில் பல புது முகங்கள் வந்து விட்டன. இருப்பினும் இப்பதிவில் கூறப்பட்ட பிரச்சினை அப்படியே இருக்கிறது. இதை இங்கு மீள் பதிவு செய்வதன் நோக்கம் இப்போதாவது ஏதாவது நல்ல விஷயம் நடக்காதா என்பதே. இப்பதிவு வந்தபோது வந்த பெரும்பான்மையானப் பின்னூட்டங்கள் எதிர்மறையாகவே இருந்தன. மீள்பதிவில் ஒரிஜினல் பின்னூட்டங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. என்னுடைய ஆசை என்னவென்றால், திருமா போன்ற தலைவர்கள் தேர்தல் வரும் இச்சமயத்தில் நான் கூறிய யோசனையை செயல்படுத்திப் பார்க்கலாம். ஏதேனும் ஓரிடத்தில் தனி டீக்கடை வந்தால்கூட நல்லதுதான். தேர்தல் நேரத்தில் தலித்துகளை விரோதித்துக் கொள்ள யாவரும் தயங்குவர். இதுவே திட்டத்தை ஆரம்பிக்க ஒரு நல்ல தருணம்.
இப்போது பதிவுக்கு போகலாமா?
இரட்டை தம்ளர் கொடுமையும் மற்றக் கொடுமைகளும் தலித்துகளுக்கு இன்னமும் பல கிராமங்களில் நடக்கின்றன என்பது தமிழர் ஒவ்வொருவருக்கும் அவமானம் என்றே கருதப்பட வேண்டும். இந்த அவமானம் ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும்.
இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் தரப்பிலிருந்தே ஏதாவது செய்ய முடியுமா? உதாரணத்துக்கு அம்மாதிரி இரட்டை தம்ளர் கடைகளில் டீ வாங்காமல் தவிர்த்தல். பொருளாதார பகிஷ்காரம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் அல்லவா? முடியுமா என்று தைரியமில்லாமல் பார்ப்பதை விட முடிய வேண்டும் என்று உறுதியுடன் இருக்க வேண்டாமா? அவர்களே தங்கள் குடியிருப்பில் ஒரு சிறு டீக்கடை அமைத்துக் கொண்டு அங்குதான் டீ குடிப்பது என்றுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்களுக்காக ஏதேனும் செய்வார்கள் என்று எதிர்ப் பார்ப்பதை விட்டு விட்டு எங்காவது ஒரு இடத்தில் துவங்கி வெற்றி பெற்றால் அதுவே அரசின் பல சட்டங்களை விட அதிகப் பாதுகாப்பு தரும் என நம்புகிறேன். இட ஒதுக்கீடு பெற்று முன்னுக்கு வருபவர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே கணிசமானத் தொகை வருமே. அவர்களின் பிரதிநிதிகள் இம்மாதிரி யோசிக்க ஆரம்பித்தாலே ஒரு உத்வேகம் பிறக்காதா?
1947 களில் பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்பட்டு அவர்கள் சாரி சாரியாக வெளியேறிய போது அவ்வரசாங்கத்துக்கு முன் ஒரு பெரிய பிரச்சினை எழுந்தது. அதாவது சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் வெளியேறத் துவங்க ஊர்களே நாற்றமெடுக்க ஆரம்பித்தன. அரசாங்கம் விழித்துக் கொண்டு அவர்களுக்கு விதி விலக்கு அளித்துப் பாதுகாப்பு கொடுத்தது என்று "நள்ளிரவில் சுதந்திரம்" என்றப் புத்தகத்தில் படித்துள்ளேன். பாதிக்கப்படுபவர் எல்லோரும் படிப்படியாக நகரங்களுக்குக் குடி பெயர ஆரம்பித்தால் பிரச்சினைக்கு ஒரு நியாயம் பிறக்கும் எனத் தோன்றுகிறது. இரட்டை டம்ளர் முறை இன்னும் இருக்கும் ஊர்களில் இதைப் பரீட்சார்த்தமாகத் துவங்கலாம். இதற்கான உந்துதல் பாதிக்கப்பட்டவரிடமிருந்தே வந்தால் பலன் அதிகமாக இருக்கும்.
மதம் மாறினால் பிரச்சினைத் தீரும் என்றால் அவ்வாறும் செய்யலாம். ஆனால் பல இடங்களில் புது மதத்திலும் அவர்கள் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றுதான் தோன்றுகிறது. மதம் மாறிய தலித்துகளும் இட ஒதுக்கீடு கேட்பதிலிருந்து இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
இவ்வளவு வருடங்கள் அரசாங்கமோ அல்லது நல்ல மனம் படைத்த மேல் சாதிக்காரரோ ஏதாவது செய்வர் என்று இருந்ததுப் போதும். தன் கையே தனக்குதவி என்று ஒரு துவக்கம் செய்தால், தானே மற்றவர்கள் சேர்ந்துக் கொள்வர். இம்மாதிரி பாதிக்கப் பட்டவர்களே செய்யத் துவங்கி வெற்றி பெற்றதற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன. ஒரு புது தேசமே உருவாயிற்று. அதுவும் இரண்டாயிரம் வருடஙள் ஒடுக்கபட்ட நிலையில் வீறு கொண்டெழுந்து இது நிறைவேற்றப் பட்டது.
காமராஜ் அவர்கள் முதல் மந்திரியாக இருந்தப் போது சென்னை ரிசர்வ் பேங்க் அருகில் ரயில்வே சுரங்கப் பாதைக்கானத் திட்டம் ஏன் நடைபெறக் கூடாது என்பதற்கு அதிகாரிகள் பக்கம் பக்கமாகக் குறிப்புகள் எழுதினர். அவை எல்லாவற்றையும் நிராகரித்து அவர் கூறினார் "உங்களைத் திட்டம் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதற்குத்தான் கூப்பிட்டிருக்கேண்ணேன். அது நிறைவேற வேண்டுமா வேண்டாமா என்பது அரசியல் முடிவுண்ணேன். அதற்குத்தான் நானும் என் மந்திரிகளும் இருக்கோம்ணேன். உங்களுக்கு அந்த முடிவெடுப்பது வேண்டாத வேலைண்ணேன். போய் திட்டத்தை எவ்வாறு நிறைவேத்தலாம்னு குறிப்பு எழுதுங்கண்ணேன்" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகக் கூற அவ்வாறே செய்யப்பட்டது.
ஒடுக்கப்பட்டவர்களே, ஆக்க பூர்வமாக வீறு கொண்டெழுங்கள். இட ஒதுக்கீட்டை உபயோகித்துப் படித்து முன்னுக்கு வந்த உங்களில் சிலரின் உயர்வு அவர்தம் முயற்சியிலேயே உருவாயிற்று. அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நீங்களும் ஏதாவது செய்யுங்கள். எப்படியாவது பிள்ளைகளைப் படிக்கச் செய்யுங்கள். தீர்வு பெரும்பாலும் உங்கள் கையிலேயே உள்ளது.
உயிர்ப் பிரச்சினையாக இது இருக்கும் போது தேவையற்ற மற்ற விஷயங்களைப் பிடித்துத் தொங்காமல் இருப்பதே இப்போது முக்கியம் என்று நான் கூறுகிறேன். நீங்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
10 hours ago
57 comments:
இருள் இருள் இருள் என்று சத்தம் போடுவதைவிட ஒரு தீக்குச்சியைக் கொளுத்த முயல்வது மிகப் பயன்தரும். உங்கள் பதிவைப் படித்தவுடன் எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது. நல்ல பதிவு.
//மதம் மாறிய தலித்துகளும் இட ஒதுக்கீடு கேட்பதிலிருந்து இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. //
இட ஒதுக்கீடு ஈராயிரம் வருஷங்கள் ஒதுக்கப்பட்டதற்காக என்றால் மதம் மாறிய தலித்துகளும் அதன் அடக்கம்தானே?
// இட ஒதுக்கீடு பெற்று முன்னுக்கு வருபவர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே கணிசமானத் தொகை வருமே//
நல்ல வசதியிலிருந்தும் இட ஒதுக்கீடு பெறுவோரால்தான் அவர்களில் வசதியில்லா சக இனத்தவர் பாதிப்பு அடைகின்றனர் .. 'என் இனத்தவன் மலம் சுமக்கிறான்.. எனக்கு டாக்டர் சீட் கொடு ' இதுதான் இப்ப ட்ரெண்டு .
ராகவன்
தனிகடை விரிப்பார்களேயானல் அது மீண்டும் பழைய வழக்கத்திற்கு தள்ளிவிடாதா? அவர்கள் மட்டும் அல்ல, எல்லோரும் பகிஷ்க்கரிக்க வேண்டும். அப்போது மட்டும் தான் மாற்றங்கள் வரும்.இது எல்லோருடைய பிரச்சினையும் தானே. நீங்கள் இஙகு குடிக்க முடியாது. தனி கடை வைத்து கொள்ளுங்கள். உங்களில் படித்தவர் உதவட்டும் என்பதைவிட அரசின் திட்டங்களும், மற்றவரின் மன மாற்றமும், இது போல் குற்றம் இழைப்போரை தண்டிப்பதும் தேவை என்பது என் கருத்து.
தனிக்கடை ஆரம்பிப்பது, பகிஷ்கரிப்பது இது எதுவும் பிரச்சனை தீர உதாவாது. தலித்களுக்கு தனி கிளாஸ் என்பதூபோல் தனிக்கடை வேண்டுமானால் வரக்கூடும்.
ஒரு டீக்கடையில் எல்லோரையும் போல் டீ குடிப்பது ஒருவருடைய உரிமை. பொதுவில் கடை வைத்த பிறகு 'இது என் கடை, என் இஷ்டப்படிதான் நடக்கும்' என்று சொல்ல கடைக்காரனுக்கு கூட உரிமை கிடையாது. உதாரணமாய் ஒரு ஆட்டோகாரர் *சட்டப்படி*, வாடிக்கையாளர் அழைக்கும் இடத்திற்கு போயாகவேண்டும்.
ரெட்டை கிளாச் முறை சட்டப்படி குற்றம். அராசாங்கம் சட்டத்தை கறாராய் நிறைவேற்றி, நடவடிக்கை ஒழுங்காய் எடுப்பதும், அதற்கு வற்புறுத்துவதும், அது குறித்து பேசுவது மட்டுமே அர்த்தமுள்ளதும், தேவையானதும் ஆகும். வேறு எந்த வகையிலும் தீக்குச்சியை கொளுத்த முடியாது.
"தனிகடை விரிப்பார்களேயானல் அது மீண்டும் பழைய வழக்கத்திற்கு தள்ளிவிடாதா? அவர்கள் மட்டும் அல்ல, எல்லோரும் பகிஷ்க்கரிக்க வேண்டும். அப்போது மட்டும் தான் மாற்றங்கள் வரும்.இது எல்லோருடைய பிரச்சினையும் தானே."
யாருக்குத் தேவையோ அவர்கள்தான் செய்வார்கள். தற்போதைய நிலைமை உங்களைப் பாதிக்காதவரை நீங்கள் ஏன் செய்யப் போகிறீர்கள்? எல்லோரும் பகிஷ்கரிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அவ்வாறு எதிர்பார்த்து இவ்வளவு ஆண்டுகளை வீணாக்கியது போதாதா? தயவு செய்து இம்மாதிரி ஆரம்பத்திலேயே பேசி பாதிக்கப்பட்டவர்களின் உறுதியைக் குலைக்காதீர்கள். மறுபடி கூறுகிறேன். செய்ய வேண்டும் என்றத் துடிப்பு சம்பந்தப் பட்டவரிடமிருந்தே வர வேண்டும். எல்லோரும் செய்யுங்கள் இல்லையென்றால் ஒருவருமே செய்யாதீர்கள் என்று இருந்தால் நிலைமை இப்படித்தான் இருக்கும். நீங்கள் இஙகு குடிக்க முடியாது என்று கடை முதலாளிகள் கூறவில்லை, கூறவும் மாட்டார்கள். நீங்கள் இங்குக் குடியுங்கள், காசு கொடுங்கள் ஆனால் அவமரியாதை செய்யப்படும் என்பதுதான் இப்போதைய நிலை. என்ன சட்டம் வந்தாலும் அது தீர்ந்ததா? எவ்வளவு பேர் தண்டிக்கப் பட்டனர்? போடா ஜாட்டான் நாங்கள் எங்கள் கடைகள் வைத்துக் கொள்கிறோம் என்றுத் துணிந்து செல்வதுதான் முதல் படி. ஊர் உன்னை ஒதுக்கி வைத்தால் நீ ஊரை ஒதுக்கி வைத்து விடு என்பதே தாரக மந்திரம்.
எம்.ஜி.ஆர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன்" நூலில் இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி சித்தரிக்கப் பட்டது. எல்லோரும் உணவருந்தும் இடத்தில் உயர் சாதியினர் மற்றவரைத் தனியாக உட்கார்த்தி வைக்க, வீறு கொண்டு எழுந்த எம்.ஜி.ஆரும் மற்றவர்களும் தங்களுக்கென்று தனியாக மெஸ் அமைத்துக் கொள்ள, மேல் சாதியினர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்களுக்கு மெஸ் வைத்துக் கட்டவில்லை. மேல் சாதியினர் வழிக்கு வந்தனர். பொருளாதார பகிஷ்கரிப்பு ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். கிராமத்தில் அவமானப் படுத்தப்படும் நாவிதர் நகரத்துக்கு வந்து சலூன் வைத்தால் மதிக்கப்படுகிறார். அத்தொழில் பிடிக்கவில்லையா, வேறு தொழில் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு நிலையில் மதிப்புக் குறைவாகக் கருதப்படும் ஆனால் அத்தியாவசியமான சுத்திகரிப்பு வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் ஒன்று கூலியை உயர்த்தி மரியாதையுடன் நடத்துவர் அல்லது யந்திரங்களை அறிமுகப் படுத்தி மனிதன் இத்தொழில்களை செய்யும் நிலை வராமல் பார்த்துக் கொள்வர். இயந்திரங்களை இயற்றவும் ஆட்கள் தேவைப்படுவர். அவ்வாறு வருபவர் மரியாதையாக நடத்தப்படுவர்.
தன் கையே தனக்குதவி. முயற்சிதான் செய்துப் பாருங்களேன். பாதிக்கப் பட்டவர்கள் இழப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை, அவர்கள் கால் விலங்குகளைத் தவிர.
இதையெல்லாம் ஏன் செய்ய முடியாது என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதினாலும் அது செய்யப் படவேண்டும் என்று உறுதியாக இருப்பதுதான் நன்மை பயக்கும். உடனடித் தேவை ஒரு ஆரம்பம், மன உறுதி அவ்வளவுதான். மற்றவை தானே வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"தலித்களுக்கு தனி கிளாஸ் என்பதுபோல் தனிக்கடை வேண்டுமானால் வரக்கூடும்." அப்படி வந்தால் குறைந்த பட்சமாக சுயமரியாதை வரும் அல்லவா? சட்டம் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பேர் இதில் தண்டிக்கப்பட்டனர்? நல்ல எண்ணத்தில்தான் நீங்கள் கூறுகிறீர்கள். அது புரிகிறது. ஆனால் நல்ல எண்ணங்களே சில சமயம் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன. நரகத்துக்குச் செல்லும் வழி நல்லெண்ணங்கள் மேல் விரிக்கப்படுகிறது என்னும் ஆங்கிலப் பழமொழியை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன்.
நானே பரிசோதித்து வெற்றியடைந்ததைப் பற்றி இங்குக் கூற ஆசைப் படுகிறேன். ஐ.டி.பி.எல்லில் அப்போது வேலை பார்த்து வந்தேன். தலைமை அலுவலகமும் தொழிற்சாலையும் குர்கானில் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக இருந்தன. தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களை அழைத்துச் செல்லும் பஸ் எங்கள் வீடு இருந்தத் தெருவில் சென்றது. தொழிற்சாலையில் இருந்த நான் அந்த பஸ்ஸில் அலுவலகம் செல்வது வழக்கம். அதற்கு ஆட்சேபணை எழுப்பினர் தலைமை அலுவலக யூனியன்காரர்கள். தங்கள் கேட் மீட்டிங்கில் எஙளைப் போன்றவர்களைத் தடுக்கப் போவதாகக் கூறினர். நான் என்ன செய்தேன் தெரியுமா? ஒரு சைக்கிள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து அலுவலகம் 20 கிலோமீட்டர். போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் என்று 40 கிலோமீட்டர் பயணம் தினசரி. அப்போது எனக்கு வயது 42. சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் தலைமை அலுவலகத்துப் பொது மேலாளர் P.G. Zalani என்னை நேஷனல் ஹைவேயில் வியர்வையுடன் சைக்கிள் செலுத்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னைக் கூப்பிட்டு விசாரிக்க நான் அவரிடம் யூனியன்காரர்கள் செய்ததைக் கூற, உடனே அவர் அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்துக் கேட்டிருக்கிறார். அவர்களோ தாங்கள் ராகவனைக் குறித்துப் பேசவில்லை அவர் எப்போது வேண்டுமானாலும் பஸ்ஸில் வரலாம் என்றுக் கூறினர். இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. "இதை ஒரு உடற்பயிற்சியாகச் செய்துக் கொள்கிறேன், நன்றி" என்றுக் கூறி விட்டேன். அதனால் என் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. அவ்வாறு செய்யாமல் நான் என்னை பஸ்ஸில் அனுமதியுங்கள் என்றுக் கேட்டிருந்தால் வெற்றியடைந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா?
மற்றவர்களை நம்பாதீர்கள். ஏதாவது செய்ய ஆரம்பியுங்கள். உதவி தானே வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இட ஒதுக்கீடு ஈராயிரம் வருஷங்கள் ஒதுக்கப்பட்டதற்காக என்றால் மதம் மாறிய தலித்துகளும் அதன் அடக்கம்தானே?"
தலித் கிறிஸ்துவர்கள் அவமானப்படுத்தப்படுவது உங்களுக்குத் தெரியாதா? பலர் திரும்ப இந்து மதத்துக்கு மாறியதைக் கேள்விப்படவில்லையா? பொருளாதார முன்னேற்றம் ஒன்றுதான் வழி. ஆரம்பம் பாதிக்கப்பட்டவரிடமிருந்துதான் வர வேண்டும். பொதுப்படையாகப் பேசி அவர்களை அதைரியப்படுத்தாதீர்கள் என்றுக் கேட்டுக் கொள்கிறேன். ஆக்க பூர்வமான ஆலோசனைகளைக் கூறலாமே.
நந்தர்களால் சிறை வைக்கப்பட்ட சந்திரகுப்தனும் அவன் உறவினர்களும் செய்தது என்ன.? எல்லோரும் பட்டினியிருந்து சந்திரகுப்தனை மட்டும் உணவருந்த வைத்து ஒருவர் பின் ஒருவராக மடிந்தனர். சந்திரகுப்தன் வெளியில் வர முடிந்தது.
நான் கூறுவது என்னவென்றால் இட ஒதுக்கீட்டு மூலம் முன்னுக்கு வந்தவர்கள் தங்கள் சக ஜாதிக்காரருக்கு அவர்கள் முயற்சியில் உதவி செய்யலாம் என்பதே. ஆனால் முதலில் முயற்சி வர வேண்டும். வரத் தேவையில்லை என்றுப் பேசி அவர்களை சோம்பலில் ஆழ்த்துவதை விட எந்தெந்த முயற்சிகள் செய்யலாம் என்று யோசிப்பது அதிகப் பலன் தரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு விஷயம் தெரியுமா? சர்தார்ஜிகளில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது மிக அபூர்வம். அவ்வளவு கட்டுப்பாடு அவர்களுக்குள். குருத்வாரக்களில் நடக்கும் கரசேவை மிகப் பிரசித்தி பெற்றது. நன்கொடைகள் பண ரூபத்தில் மட்டும் இல்லாது உடல் உழைப்பாகவும் அளிக்கப்படுகின்றன. டில்லியிலும் பம்பாயிலும் நான் பார்த்தப் பிச்சைக்காரர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்தான் என்பது வெட்கக் கேடான விஷயம். அதே போல டில்லியில் உள்ள சேலத்துகாரர்கள் தங்கள் உடல் உழைப்பால் நல்லப் பெயர் பெற்று ஊரில் உள்ள உறவினர்களையும் டில்லிக்கு வரவழைத்துக் கொண்டு முன்னேறுகின்றனர். கேரளாக்காரர்களின் கூட்டு முயற்சிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இரட்டை டம்ளர் என்னும் அவமானம் தரக்கூடிய முறையை தங்கள் சொந்த முயற்சியால் ஒழித்தாலே பாதிக்கப்பட்டவர் முன்னேற்றத்துக்கு ஒரு நல்ல ஆரம்பம். நான் கூறிய பொருளாதார பகிஷ்கரிப்பு ஒரு ஆலோசனையே. இவர்களிடம் நம் பப்பு வேகாது என்ற நிலை ஏற்பட்டு விட்டால் கடைக்காரர்களே அதை ஒழித்து விடுவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள ராகவன்
உங்களின் எண்ணமும் ஆசையும் புரிகிறது. போராட்டமும், உண்ணாவிரதங்களும் எனக்கு புதிது அல்ல. போராட்டததில் ஈடுபடும் அனைவரும் கட்டு கோப்பாக இருக்கவெண்டியது அவ்சியம். பொருள், செல்வாக்கு இல்லதோர் மற்றவரை புறக்கணிப்பது எளிது அல்ல. ஊரே ஒதுக்கும் போது ஒரு தனி குடும்பம் படும் அல்லல்களும் சிறியது அல்ல. அனுபவித்திருக்கிறேன். காலப்போக்கில் வெற்றி நம்மை தேடி வரும் என்றாலும் பொறுமை அவசியம். தனிமனிதன் செய்ய முடியாத்தை சட்டமும் தண்டனையும் செய்யும்.
"தனிமனிதன் செய்ய முடியாத்தை சட்டமும் தண்டனையும் செய்யும்." எங்கு செய்தது? இப்படி நினைத்தே 57 ஆண்டுகள் ஆகி விட்டனவே. ஊர் பகிஷ்கரித்தால் இடத்தைக் காலி செய்துப் போவதையும் பரிசீலிக்கலாம் அல்லவா? ஒரு சொத்தும் இல்லாதவர்கள் இடம் பெயர்ந்துச் செல்வதும் ஒரு தீர்வில்லையா? ஒரு காலனியில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு டீக்கடை வைக்க முடியாதா? முடியாது என்று ஏன் முடிவுரை கூற வேண்டும்? எங்கே முடியுமோ அங்கே செய்யலாமே? ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் மற்ற இடத்தில் முயற்சிக்க மாட்டார்களா? "என்னத்த முயற்சி செஞ்சுன்னு" என்னத்தக் கன்னையா மாதிரி இருக்க வேண்டுமா? அக்னிக் குஞ்சொன்றுக் கண்ட பாரதி வெந்துத் தணிந்தது காடு என்று ஆவேசப்படவில்லையா? உடனே யாராவது காட்டை எரிப்பது காடுகள் பாதுகாப்புச் சட்டப்படிக் குற்றம் என்று பின்னூட்டமிட்டு விடப் போகிறார்கள்! சிறுதுளி பெரு வெள்ளம் என்ற அர்த்தத்தில்தான் கூறினேன் ஐயன்மீர்.
வார்த்தைகளுக்கு பலம் உண்டு. அவை ஆக்க பூர்வமான எண்ணங்களை வளர்க்கின்றன. பொறுத்தது போதும் என்று பொங்கி பாதிக்கப்பட்டவர்கள் எழுந்தால் மற்றவை அதது தேவைப் படும் நேரத்தில் நடக்கும். பாதிக்கப்பட்டவர்கள் காமராஜ் மனப்பான்மையுடன் இருந்தாலே நன்மை. தங்களுக்காக மற்றவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது எல்லோரும் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கேட்கத்தான் நன்றாக இருக்கும். காரியத்துக்குதவாது. பாதிக்கப்பட்டவர்கள் செய்தால்தான் அவர்கள் சுயமரியாதை காப்பாற்றப்படும். தாகம் எடுப்பவன்தான் தண்ணி குடிக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார், நீங்கள் சொன்ன பல கருத்துக்களின் நியாயத்தை ஒப்புகொள்கிறேன். சந்தர்பங்களை பொறுத்தே அணுகுமுறையும் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். தலித் மீதான வன்கொடுமைகள் செய்யும் பிறபடுத்தபட்டவர்களும், மற்ற ஆதிக்க ஜாதியினரும் மிக பெரும்பான்மை வகிக்கின்றனர். தனியாய் கடை நடத்துவது, அதன் மூலம் (பொருளாதார) பிரச்சனையை உண்டாக்குவது(அதுதான் முக்கியம்), என்பது எவ்வளவு சாத்தியம் என்று புரியவில்லை. அதில் மேலும் சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம்.
எது எப்படியிருப்பினும், ஒரு டீக்கடையில் டீ குடீப்பது அடிப்படை உரிமை, அதற்கு நேரடியாய் போராடுவதும், அது மறுக்கப்படும் போது நடவடிக்கை எடுக்க அரசை வறபுறுத்துவதும் முக்கியமானது. இதை எந்த கட்டத்திலும் மறக்க கூடாது.
அன்புள்ள ரோஸா,
உங்களுக்கும் எனக்கும் நோக்கம் ஒன்றுதான். அதை நாம் எப்படி அடையப் போகிறோம் என்பதில்தான் வேறுபடுகிறோம். பெரும்பான்மையினர் மேல் ஜாதியினராக இருக்கும் நிலையில் சட்டத்தின் துணை கொண்டு புகார் செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தால் அப்புறம் தலித்துகள் அவ்வூரில் இருக்க இயலுமா? அதற்குப் பதிலாக தாங்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு மாற்று ஏற்பாட்டுக்கு முயற்சிப்பதுதானே ஏற்புடையதாக இருக்கும்? தேவையற்ற மோதலைத் தவிர்த்து ஒதுங்கிப் போய் சுய மரியாதையுடன் மாற்று ஏற்பாடு செய்துக் கொள்வதை ஏன் பரிசீலிக்கக் கூடாது?
எது எப்படியாயினும் இத்தனை ஆண்டுகள் சட்டம் உதவி செய்யும், மேல் சாதியினரில் நல்லவர் உதவி செய்வர் என்று ஒரு சமூகம் முடமாகிக் கிடப்பதுதானே நடக்கிறது?
என்னுடைய சிறிய அளவில் என் கம்பெனியில் எனக்கு நிகழ இருந்த அவமானத்தை முன்கூட்டியே தவிர்த்ததில் என்னுடைய சுயமதிப்பு விண்ணளவுக்கு உயர்ந்தது. உலகத்தையே ஜெயிக்கலாம் என்றத் தன்னம்பிக்கை வந்தது. சிறிதேயாயினும் சாதனை செய்த உணர்வுக்கு இவ்வளவு சக்தி என்பதைப் பார்க்கையில் நான் கூறிய வழியை சம்பந்தப்பட்டவர் பரிசீலித்தாவது பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.
தயவு செய்து ஏதாவது புதிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கூறுங்கள். பாதிக்கப்பட்டவர் அவநம்பிக்கைக் கொள்ளச் செய்யாதீர்கள்.
ஆட்டோக்காரன் கூப்பிட்ட இடத்துக்கு வர வேண்டும் என்பது சட்டம்தான். ஆனால் நடைமுறையில்? இது சம்பந்தமாக டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்குக் கூறுவேன். நிஜாமுத்தீன் ரயில் நிலையம். நான் போக வேண்டிய இடம் பட்பர்கஞ்ச், யமுனையின் கிழக்குக் கரையில். டாக்ஸிக்காரர்கள் சூழ்ந்துக் கொள்ள, நான் உரக்க ஹிந்தியில் கூவினேன். "பட்பர்கஞ்சில் ஷெட் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வாருங்கள் (மணி இரவு 9.30). வேறு யாரும் தேவையில்லை". இரண்டு பேர்தான் மிஞ்சினர். அவர்களிடம் மறுபடி கூறினேன் "ஒரே இடத்தைச் சேர்ந்த நீங்கள் எவ்விதச் சண்டையும் போடாது, கலந்துப் பேசி யார் வருவது என்பதை முடிவு செய்துக் கொள்ளுங்கள் எப்படியாயினும் மீட்டர்படித்தான் கட்டணம் லக்கேஜுக்கு வழமையான எக்ஸ்ட்ரா". எல்லோருக்கும் திருப்தியளிக்கும் முறையில் காரியங்கள் நடந்தன. வீட்டிற்குச் செல்லும் வழியில் ஓட்டுனருடன் பேச்சுக் கொடுத்து, இம்மாதிரி வாடிக்கையாளர்களைப் பங்கு போட்டுக் கொண்டால் காலியாக வண்டி செலுத்துவதைத் தவிர்க்கலாமே என்றதற்கு அவர் கூறினார் "எண்ணம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யார் இதைத் துவங்குவது?" அதற்குள் வீடு வர பேச்சு நின்றது.
தங்கள் சுயமுயற்சியால் சுயமதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். ஒன்றன் பின் ஒன்றாகக் காரியங்கள் நடக்கும். தன் கையே தனக்குதவி என்றிருப்பவருக்குக் கடவுள் துணை நிச்சயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir,
I completely agree with all your comments and touched by your feelings for fellow human beings. It is true that those who suffer should start their own shops. One more thing is that they should never depent upon their so-called political leaders for it. Their performance appraisal shows that they are not trust worthy. Dalits should stand on their own legs like Nadars and get the respect and honour due to them.
I also like to say that apart from those who have benefitted with quota system all the high caste people should contribute and make a point to visit only such a shops that treat human beings as human beings. This is what Mahakavi Bharathiar did. He drunk tea in a Muslim’s tea shop. Such actions by veterans like Bharathiar, VVS Iyer, Rajaji etc. has taken the people of their caste out of their limited vision and made them worthy of their claim as high caste.
There is another method. When people born in high caste encounter such a situation, they should demand the same treatment given to the schedule class people. This would make this practice meaningless.
You said:
உயிர்ப் பிரச்சினையாக இது இருக்கும் போது தேவையற்ற மற்ற விஷயங்களைப் பிடித்துத் தொங்காமல் இருப்பதே இப்போது முக்கியம் என்று நான் கூறுகிறேன். நீங்கள்?
My comments:
What Dondu sir? If we start to bother about real issues, then what will happen to our modern politicial trend and integrity? All the "intellectuals" will sneer at you.
ஆதிரை அவர்கள் தன் பதிவாம் உள்ளலில் இரட்டை டம்ளர் முறை பற்றி எழுதியுள்ளார். அப்பதிவுக்கு நான் இட்டப் பின்னூட்டத்திலிருந்து:
"போட்டித் தேனீர் விடுதி வைப்பதால் எது கிடைக்கிறதோ இல்லையோ. சுய மரியாதை கிடைக்கும். அது கிடைத்த பின்னால் சாதித்த உணர்ச்சி கிடைக்கும். அது கிடைத்த உடன் அடுத்த நடவடிக்கைகள் தானே வரும். இதெல்லாம் யார் செய்யப் போகிறார்கள்? மற்ற சாதியினர் மனம் மாற வேண்டும் என்றுக் கூறுவதெல்லாம் படிக்க நன்றாக இருக்கும். ஆனால் இது பாதிக்கப்பட்டவர் அடுத்த அடி எடுக்க விடாமல் ஒரு மனப் பூட்டு போடு விடுகிறது என்பதுதான் நிஜம்.
டீக்கடை வைப்பது கடினமா? நானே வைத்து நடத்தியிருக்கிறேன். வருடம் 1978. அப்போது நான் பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்தேன். வேலை செய்த இடம் ஆவடியில் உள்ள மத்திய ரிஸர்வ் போலீஸ் முகாம். கட்டுமானப் பணிகள் நடை பெற்று வந்தன. அருகில் இருந்த டீக்கடைக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். எனக்கு ஒரு திடீர் எண்ணம். அதாவது அலுவலக அளவிலேயே ஏன் ஒரு காபி க்ளப் ஆரம்பிக்கக் கூடாது? எங்கள் அலுவலகம் சிறியது. மொத்தம் ஏழு பேர்தான். ஒரு உதவிப் பொறியாளர், நான்கு இளநிலைப் பொறியாளர்கள், ஒரு எழுத்தர், ஒரு பியூன். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் வசூலித்தேன். 70 ரூபாய் வந்தது. வென்னீர் வைத்துக் கொள்ளவென்று ஒரு ஹீட்டர், கெட்டில் ஆகியவை ஏற்கனவே இருந்தன. லாக்டோஜன், ப்ரூ பொடி மற்றும் சர்க்கரை ஆகியவை வாங்கி வேலையை ஆரம்பித்தோம். தயார் செய்யும் வேலையை நானே ஏற்றுக் கொண்டேன். கணக்கும் நானே வைத்துக் கொண்டேன். எல்லோரையும் வைத்துக் கொண்டு சில முடிவுகளைக் கூறினேன். அவற்றில் முக்கியமானவை சில: அவரவர் க்ளாஸை அவர்களே கழுவிக் கொள்ள வேண்டும். பியூனும் க்ளப்பில் சம உரிமையுள்ள உறுப்பினர். அவரை மற்றவர் க்ளாஸை கழுவ விடக் கூடாது. அவரும் பணம் செலுத்த வேண்டும். முதல் மாதம் ஆன செலவுகளைக் கணக்கிட்டு அதற்கு மேல் ஒரு சிறு தொகையை லாபமாக வைத்து உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய தொகை கணக்கிடப் படும். அவர்கள் எடுத்துக் கொண்ட காப்பி ஒவ்வொரு வேளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிக்கப்படும். முதல் மாத முடிவில் கணக்கு பார்த்த போது ஒரு கப் காப்பி 25 பைசாவுக்கு வந்தது. யாருக்காவது விருந்தினர் வந்தால் அவர்களுடைய காப்பிக் கணக்கு சம்பந்தப் பட்டவர் கணக்கில் ஏற்றப்பட்டது. அதாவது எதில் எல்லாம் பின்னால் கருத்து வேற்றுமை ஏற்படும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் கவர் செய்தேன். பிறகு போர்ன்விடாவும் சேர்த்துக் கொண்டேன். பணத்தை ஒரு பெரிய கவரில் வைத்து அதன் மேல் பகுதியில் பேங்க் பாஸ்புக்கைப் போல வரவு செலவு கணக்கு எழுதப்பட்டது. இதெல்லாம் ஒரு ஒழுங்கு முறையில் செய்ததால் அதிக நேரம் பிடிக்கவில்லை. பக்கத்து அலுவலகங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இரட்டைக் கட்டணம்.
பியூனை மற்றவர் க்ளாஸைக் கழுவச் சொல்லக் கூடாது, அவரும் பணம் செலுத்தும் உறுப்பினர் என்றெல்லாம் ஆனதில் எங்கள் அலுவலகத்தில் டென்ஷன் இல்லை. அவ்வப்போது காலியாகும் டின்களை விற்றதில் தேவையானப் பணம் வந்தது.
நான் என் பதிவில் கூறிய ஆலோசனை நிறைவேற்ற முடியாதது அல்ல. மற்றவர் மனம் மாற வேண்டும் என்று யோசிப்பது பாதிக்கப்பட்டவர் முதல் அடி எடுத்து வைப்பதைத் தடுக்கும். அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து இரட்டை டம்ளர் கடைகளைப் புறக்கணித்துப் பெறும் வெற்றி அவர்கள் பெறப் போகும் மற்ற வெற்றிகளுக்கு அடிகோலும்."
இது வரை கூறலாமா வேண்டாமா என்றுத் தயங்கிய விஷயத்தை இப்போது கூறுவேன். எங்கள் அலுவலக பியூன் ஒரு தலித். அது எனக்கு அப்போது தெரியாது. நான் பொதுப்படையாக பியூனை க்ளாஸ் கழுவச் செய்யக் கூடாது என்று கூறியதற்கு முக்கியக் காரணம் எல்லோரும் சம உரிமை பெற்ற, பணம் செலுத்தும் உறுப்பினர்கள் என்பதே. பியூனுக்கு இலவசமாக காப்பி கொடுத்து கிளாஸ் கழுவச் சொல்லலாம் என்ற எதிர் யோசனை வைக்கப் பட்டப்போது, அதற்கு நான் க்ளப் அமைக்கும் யோசனையையே விட்டு விடத் தயார் என்று சிறிது கடுமையாகக் கூறினேன். உதவிப் பொறியாளர் எனக்கு ஆதரவு தெரிவித்தார். பியூனும் தான் பணம் செலுத்துவதையே விரும்புவதாகக் கூற எல்லாம் சுமுகமாக முடிந்தது. 1981-ல் ஐ.டி.பி.எல்லில் வேலை கிடைத்து நான் செல்லும் போதுதான் பியூன் தான் ஒரு தலித் என்பதையும், இரட்டை டம்ளர் முறை தங்கள் கிராமத்தில் இருந்தது என்றும், பணமும் செலுத்தி க்ளாஸையும் கழுவி வைக்க வேண்டியிருந்தது என்பதைப் பற்றியும் என்னிடம் கண்கலங்கக் கூறினார். எங்கள் க்ளப் விதி முறையால் தன் சுய மதிப்பு உயர்ந்ததாகவும் கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நானும் இதைப் போலவே, செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிகளைப் புறந்தள்ளி, 'விதிக்கப்பட்ட' தொழில்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு தடம் மாறவேண்டும் என்று கூறி வருகிறேன்; ஏனோ தெரியவில்லை கேட்பார் யாரும் இல்லை. நானும் இந்தக் கருத்து ஒரு 'அக்கினிக் குஞ்சு' என்று நினைத்து ஊதி...ஊதிப் பார்க்கிறேன்...தீப்பிடிக்க மறுக்கிறது.
தருமி அவர்களே,
மனம் தளராதீர்கள். முயற்சி செய்து கொண்டே இருப்போம். வெற்றி உண்டாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிமுலேஷன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_113984133578973329.html
ராஜாஜி அவர்களை விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
இன்னொரு விஷயம். ஒரு சென்ஸிடிவான விஷயத்தைத் தொட்டுள்ளீர்கள். வெறுமனே லிஸ்ட் போடுவதில் பயன் இல்லை. ஒவ்வொருவரும் என்ன செய்தனர் என்பதை இந்தத் தலைமுறையினருக்குக் கூற வேண்டும். இதற்கு பல பதிவுகள் போட வேண்டும், குறைந்த பட்சமாய் ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவு என்ற கணக்கில்.
முக்கியமாக தீவிர எதிர்ப்பை சந்திக்க வேண்டும். முடியுமா?
இந்தப் பின்னூட்டமும் என்னுடைய இந்தப் பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிளாக்கர் இல்லாத என் இணைய நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இதோ:
"டோண்டு சார், கீழே சொல்லும் விஷயங்கள் என் தாத்தா எனக்குக் கூறியது.
தீண்டாமைக் கொடுமையை எதிர் கொண்டு வெற்றி கொண்ட சமுதாயம் உள்ளது.
இன்று தமிழகத்தில் நாடார் சமுதாயம் மற்றவர்கள் மதிக்கக் கூடிய நிலையில் இன்று உள்ளது.
ஆனால் 150 வருடங்களுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. நாடார்களுக்கும் இரட்டை டம்ளர்தான்.
அப்போது சமுதாயத்தை முன்னேற்ற நினைத்த சமூகப் பெரியவர்கள் ஒரு கூட்டம் கூட்டி
ஒவ்வொறு ஊரிலும் உள்ள நாடார்கள் ஒருங்கினைந்த குழுக்களாக
ஒற்றுமையாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுவது என முடிவெடுத்தனர். இதன் முதல் முயற்சியாக
ஒவ்வொறு ஊரிலும் நாடார்கள் உறவின்முறை என்ற அமைப்பு ஏற்படுத்த்ப்பட்டது.
பின்னர் அவர்கள் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில் கட்டப்பட்டது.
பின்னர் சில விதிகள் வகுக்கப்பட்டன.
1.அந்த ஊரில் உள்ள நாடார்கள் அந்தந்த உறவின் முறைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
2.எந்தப் பிரச்சினையையும் உறவின் முறையில் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். போலீசுக்குப் போகக் கூடாது.
3.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உறவின்முறை நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படுவார்கள்
4.திருமணமான அனைத்து ஆண்களும் உறவின்முறை வரி செலுத்த வேண்டும்
இப்படிப் பல.
இந்த செயல்பாடுகள் வெற்றியடைந்ததும் பல இணைப்புச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன(விருதுநகர்-சென்னை நாடார்கள் சங்கம்)
இதில் முக்கியமான விஷயம் எதுவெனில் இதில் எந்தச் சங்கமும் அரசியலில் ஈடுபடவில்லை.
சமூக மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டன.
பின்னர் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து 100
ஆண்டுகளுக்கு முன்பே உறவின் முறைகளின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் தற்போது கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு
இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
தொழிலை முன்னேற்ற சில வங்கிகளில் கடன் கேட்ட போது தர மறுத்ததால், தனியாக வங்கி ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டது.
நிற்க,
இன்று திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர்கள் அரசியலை விட்டு சமூகப் பணியில் ஈடுபட்டால்
அடுத்த 100 வருடங்களில் அவர்களின் சமுதாயமும் தலை நிமிர்ந்து நிற்கும்.
அதைவிட்டு ஒரே நாளில் அனைத்தையும் மாற்ற வேண்டும் எனில் என்ன செய்வது?"
ஆக நான் கூறியது ஒன்ரும் நடக்க முடியாதது அல்ல என்பது தெளிவாகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆட்சி,அதிகாரத்தில் பங்கு பெற்றால் நிச்சயம் இந்த நிலை மாறும்.அதற்காகத்தான் திருமாவளவன் போன்றோர் போராடிக் கொண்டு உள்ளனர்.
சித்தன் அவர்களே. இது வரை தலித்துகள் மந்திரிகளாக வந்ததே இல்லையா? என்ன பேசுகிறீர்கள். நாடார் சங்கங்களின் வெற்றிகரமான செயல்பாட்டைப் பார்த்துமா இதை கூறுகிறீர்கள்?
அரசியல் அதிகாரம் ஒரு புறம், சமூக மேம்பாடு ஒரு புறம். இரண்டு முனையிலும் போராட வேண்டும்தானே. தன் கையே தனக்குதவி என்று இருப்பதில் என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாருங்கள் நாட்டாமை அவர்களே. எந்த பிரச்சினையானாலும் பாதிக்கப்பட்டவர்களே செயல்பட்டால் அதன் வீரியமே தனி.
யாருக்குத் தேவையோ அவர்கள்தான் செய்வார்கள். தற்போதைய நிலைமை உங்களைப் பாதிக்காதவரை நீங்கள் ஏன் செய்யப் போகிறீர்கள்? எல்லோரும் பகிஷ்கரிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அவ்வாறு எதிர்பார்த்து இவ்வளவு ஆண்டுகளை வீணாக்கியது போதாதா?
தங்களுக்காக மற்றவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது எல்லோரும் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கேட்கத்தான் நன்றாக இருக்கும். காரியத்துக்குதவாது. பாதிக்கப்பட்டவர்கள் செய்தால்தான் அவர்கள் சுயமரியாதை காப்பாற்றப்படும். தாகம் எடுப்பவன்தான் தண்ணி குடிக்க வேண்டும்.
நாடார்களின் வெற்றிக்குப் பிறகுமா இவ்வாறு பேச வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் கருத்தை நன்றாகவே புரிந்து கொள்கிறேன் நாட்டாமை அவர்களே. நானும் கண்டிப்பாக புறக்கணிப்பேன் என்பது உண்மையே. (பை தி வே பியூன் தலித் என்பது பிறகுதான் தெரிந்தது. முன்பே தெரிந்திருந்தாலும் என்னுடைய செயல்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது என்பதும் நிஜமே.) ஆனால் அது எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும்?
ஒரு சிறு டைவர்ஷன். பிரபல் அமெரிக்க யூத எழுத்தாளர் இஸாக் அஸிமோவ் எழுதிய ஒரு விஷயம். அவரிடம் பேசிய ஒரு யூதப் பெண்மணி ஹிட்லர் 60 லட்சம் யூதர்களைக் கொன்றபோது உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று பொரும, அசிமோவ் அவர்கள் அவரிடம் மெதுவாக அமெரிக்க நீக்ரோக்களுக்காக பாடுபடும் மார்ட்டின் லூதர் கிங்கைப் பற்றி அப்பெண்மணியின் அபிப்பிராயம் என்ன என்று கேட்டார். அதற்கு பட்டென்று அப்பெண்மணி பதில் கூறினாராம். "அவர் பிரச்சினை அவருக்கு, எனக்கு என் பிரச்சினைகள் தலைக்கு மேல் உள்ளன" என்று.
யூதர்களே முனைந்துதான் இஸ்ரேலை உருவாக்கினார்கள். டேவிட் பென் குரியன், மெனாஷெம் பெகின், கோல்டா மைய்யர் போன்றவர்கள் செய்த காரியம் பழைய ஏற்பாடுகளில் வரும் அரசன் தாவூது, அரசன் சாலமன் ஆகியோரது செயல்பாட்டிற்கு குறைந்ததல்ல என்பதையும் இந்த டைவர்ஷனை உபயோகித்து கூறிவிடுகிறேன்.
மழை பொழிந்துதான் தண்ணீர் கஷ்டம் தீர வேண்டும், பனி பெய்து அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சத்தியமான வார்த்தைகள் நாட்டாமை அவர்களே. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை (சோவியத் ஒன்றியத்தையும் மறக்கக்கூடாது) முயற்சி செய்து ஹிட்லரை ஒழித்தனர் என்பது 100% கரெக்ட்.
பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரித்த தீர்மானம் சோவியத் யூனியன் இல்லையென்றால் நிறைவேறியிருக்காது என்பதும் நிஜமே. ஒரு தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் என்னும் முறையில் இதையெல்லாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறவன் நான்.
ஆனால், ஜியோனிஸத்தை உருவாக்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பூர்வாங்க வேலைகள் செய்து இஸ்ரேல் உருவாவதற்கான நிலையை உருவாக்கியவர்கள் யூதர்களே. இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் தாய்நாட்டுக்கு செல்லும் கனவைப் பேணி, தங்கள் மொழியை திரும்பவும் கொண்டு வந்த அவர்கள் சுய முயற்சி இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
நாம் இருவரும் ஒரே குறிக்கோள் கொண்டுள்ளோம். ஆனால் பிரச்சினையை இரு கோணங்களில் அணுகுகிறோம் என்று எனக்குப் படுகிறது. இந்த விவாதமும் நல்லதுதான். எப்படியாவது பிரச்சினை தீர்ந்தால் சரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தொடங்கியாயிற்று ! இனி ஒரு சுற்று வருவோம்1 நன்றி!
ப்ளாக்கர் இல்லாத நண்பர் ஒருவர் எனக்கிட்ட மின்னஞ்சலை நான் இங்கே தருகிறேன். அவருக்கு என் நன்றி.
Dear Mr. Ragavan,
I am not a blogger and am unable to post in your blog!
Can you do something?
நல்ல பதிவு.
தனிக்கடை மட்டும் அல்ல; அங்கு வரும் அனைத்துப் பேருக்கும் பேதமின்றி ஒரே மாதிரி டம்ளரில் பரிமாறவும் வேண்டும்.
"அவர் நாண நன்னயம் செய்து விடல்"
'அவர்கள்' வருவார்களா என்று கேட்கிறீகளா?
நான் வருவேன்![இந்தியா வரும் போது!]
anbudan,
SK
"LOVE ALL; SERVE ALL; BE HAPPY!!"
மிக்க நன்றி SK அவர்களே. மின்னஞ்சலில் நான் அளித்த ஆலோசனையை மதித்து ப்ளாக்கர் கணக்கை துவக்கியதற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி திரு 'நாட்டாமை' அவர்களே!
இதற்கான பாலபாடம் எங்கே படிக்க வேண்டும்?
ஆனால் நாட்டாமை அவர்களே, நான் அங்கு சென்று காஷன் செய்வதற்குள் போலி டோண்டு என்னும் இழிபிறவி எஸ்.கே. அவர்கள் பதிவில் எச்சமிட்டு விட்டது. இருப்பினும் நான் அவருக்கு எலிக்குட்டி சோதனை பற்றி எல்லாம் கூறியுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எஸ்.கே. அவர்களே,
உங்களை காஷன் செய்வதற்காக உங்கள் பதிவுக்கு ஓடி வந்தால் போலி டோண்டு என்ற இழிபிறவி முதலிலேயே அங்கு வந்து விட்டது என்பதைக் காண்கிறேன்.
என்னுடையப் பதிவில் பின்னூட்டம் இட்டதைப் பொறுக்காது வந்து ஊளையிடும் அந்த இழிபிறவியைக் கண்டு கொள்ளாதீர்கள். உண்மை டோண்டுதான் பின்னூட்டம் இடுகிறான் என்பதைப் பார்க்க Dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயர் மேல் எலிக்குட்டியை வைட்ர்ஹ்துப் பார்க்கவும். திரையின் கீழே இடது பக்கத்தில் என் சரியான ப்ளாக்கர் எண் 4800161 தெரிய வேண்டும். இப்பின்னூட்டத்தில் அதை செய்தால் அவ்வாறு வரும். ஆனால் போலி டோண்டுவின் டிஸ்ப்ளே பயரில் அச்சோதனை செய்தால் அவன் ப்ளாக்கர் எண்ணான 11882041தான் தெரியும். அப்பின்னூட்டத்தை அழித்து விடுங்கள்.
பின்னூட்ட மட்டுறுத்தலையும் செயல்படுத்தவும். பிரச்சினை இருக்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டாமை அவர்களே,
எஸ்.கே. அவர்கள் சுதாரித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள விடாமுயற்சி மலைக்க வைக்கிறது. தளராத எழுத்துப்பணிக்கு வாழ்த்துக்கள்
நன்றி சாணக்கியன் அவர்களே. உங்கள் போன்ற இளைஞர்களின் ஆதரவு இருக்கும்வரை எனக்கென்ன குறை இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்வெங்கட் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க: http://domesticatedonion.net/tamil/?p=17
வெங்கட் அவர்களே,
மிக நல்ல பதிவை அளித்துள்ளீர்கள். தங்களுக்கு கிடைக்கும் அவமானங்களிலிருந்து மீண்டு வர தலித்துகளே முயற்சி செய்ய வேண்டும் என்பதைக் கூறும் முகமாக நான் தலித்துகளை முதலில் இரட்டை தம்ளர் முறை செயலில் இருக்கும் டீக்கடைகளை பகிஷ்கரித்து தங்களுக்கான டீக்கடைகளை தாங்களே அமைத்துக் கொள்ளும்படிக் கூறினேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
அதற்கு வந்தப் பின்னூட்டங்கள் முக்கால்வாசி எதிர்மறையாகவே இருந்தன. இத்தனைக்கும் நான் கூறிய யோசனைக்கு ரொம்ப முதலீடு எல்லாம் தேவையில்லை. இருப்பினும் இதெல்லாம் நடக்காத காரியம் என்றே பலர் பின்னூட்டமிட்டு அரசுதான் தீர்வு தர வேண்டும் என்று கூறினர். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நீங்கள் கூறுவது போல இயந்திரங்களை உபயோகித்து வேலை செய்தால் அவ்வேலைகளை செய்ய பலர் முன்வருவார்கள் என்றுதான் தோன்றுகிறது. இங்கு கூட எக்ஸ்னோரா அமைப்பு மூலம் குப்பை அள்ளுவதை தனியார்மயமாக்கியதற்கு நகராட்சியில் வேலை செய்யும் பல ஸ்வீப்பர்கள் தங்கள் வேலை வாய்ப்பு போய் விடுவதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தனியாரிடம் வேலை செய்யத் தயாராக இல்லை. ஏனெனில் அரசு ஊழியர் என்ற பெயரை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. பிரச்சினைதான்.
பேங்குகளில் கணினி அறிமுகமானபோதும் இவ்வாறுதான் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இப்போது பல பேங்குகளில் தேவையற்ற ஸ்டாஃப் குறைந்தாலும், வேலை பாட்டுக்கு நடக்கிறது. அதே நிலை மற்ற இடங்களிலும் நடக்கும் என்றே எதிர்பார்ப்போம்.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்ட இரட்டை தம்ளர் பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பவெங்கட் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க: http://domesticatedonion.net/tamil/?p=17
"மற்றபடி இரட்டைத் தம்ளர் முறை போன்ற அபத்தத்தின் உச்சகட்டத்தை அரசின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுதான் மிகச் சரியானது. இதில் எனக்கு மாற்று கருத்தில்லை."
நீங்கள் சொன்ன இந்த முறையை கடந்த 55 ஆண்டுகளாக செயல்படுத்த முடிந்ததா? நான் கூறியது லேட்டரல் திங்கிங் என்ற குறுக்கு வெட்டு முறையில் யோசிப்பதேயாகும். ஏற்கனவே நாடார் சமூகங்கள் செய்ததுதான். அவர்கள் செய்ததை ஏன் மற்றவர்களும் சிந்திக்கக் கூடாது? நேரடியாக எதிர்ப்பது பலன் தரவில்லையென்றால் வேறு வழிகளில் சிந்திப்பதுதானே முறை?
யுத்தம் என்று வந்தால் எல்லா வழிகளிலும் செய்து பார்ப்பதுதான் முறை. குதிரைக்கு கண் பக்கம் கூடு போடுவதுபோல இருக்கக் கூடாது.
இந்தப் பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்ட இரட்டை தம்ளர் பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
"பசிப்பவனுக்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கத்துக் கொடு" என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. இடஒதுக்கீடு என்பது பசிப்பவனுக்கு மீனை கொடுப்பதைப் போலத்தான்.
சீனு.
பின்னூட்டத்துக்கு நன்றி சீனு அவர்களே.
ஆனால் இந்தப் பதிவு இட ஒதுக்கீடு பற்றி அல்ல. தலித்துகள் தங்கள் சுய மரியாதையை தாங்களே உயர்த்திக் கொள்வது பற்றித்தான் நான் இங்கு பேச வந்தேன். காசு கொடுத்து டீக்கடைகளில் அவமானப்படுவதை விடுத்து தாங்களே டீக்கடை அமைத்துக் கொள்வதை பற்றித்தான் இங்கு பேச்சு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
இந்தப் பின்னூட்டமும் ஒரு மீள்பதிவே. இப்பின்னூட்டத்தை http://domesticatedonion.net/tamil/?p=17
- அங்கிருந்து 'லவட்டிக் கொண்டு'வந்திருக்கிறேன். நான் முழுமையாக இப்பின்னூட்டத்தோடு உடன்படுவதால் இதை இங்கே அப்படியே தந்துள்ளேன். வெங்கட்டிற்கு இதில் உடன்பாடாயிருக்குமென்றே நினைக்கிறேன்.
venkat (blog author) says:
Added on March 13th, 2006 at 10:21 pm
டோண்டு, நான் சொல்ல வந்ததைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் ஒருப்போதும் தலித்துகளுக்கான தீர்வை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல மாட்டேன். (இரட்டைத் தம்ளர் முறையை அவர்களாகவே புறக்கணித்து வெற்றி காணமுடியாது). ஆண்டாண்டு காலமாக அடக்கிவைக்கைப்பட்டிருந்த தலித்துகளுக்கு பிற சமுதாயங்கள் நேரடி உதவியளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன (அந்த உதவியை அளிக்க முற்படுவதன் மூலம் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்படும் சிலபல இழப்புகளையும் உள்ளிட்டு).
என் பதிவில் நான் தெளிவாகச் சொல்லியிருப்பது “அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் வற்புறுத்த வேண்டும்”. இதில் எங்கும் அவர்களாகவே எல்லா கருவிகளையும் உருவாக்கிக் கொண்டு உய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்தக் கருவிகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் கடமை என்பது என் தீர்வு (உருவாக்கிக் கொடுப்பது என்று எழுதும்பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது. அதை ஏன் உருவாக்கி ‘தலித்துகள் கையில்’ கொடுக்கவேண்டும் என்ற நிலையே அபத்தமானது. ஆனால் இது வலிதரும் உண்மை. தீர்வின் முதல்கட்டமாக மட்டுமே நான் இதைப் பார்க்கிறேன். அதாவது இப்பொழுதிருக்கும் தொழிலாளிகளிடம் கருவிகள் கொடுப்பது. கருவிகள் வரவர இத்தொழில்களின் இழிவு குறைந்து பிற சமூகங்களும் பங்கெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்).
மற்றபடி இரட்டைத் தம்ளர் முறை போன்ற அபத்தத்தின் உச்சகட்டத்தை அரசின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுதான் மிகச் சரியானது. இதில் எனக்கு மாற்று கருத்தில்லை. இதில் எந்தவிதமான தார்மீகத் தவறுகளும்கூட இல்லையென்றுதான் நான் நம்புகிறேன்.
வாருங்கள் தருமி அவர்களே. நீங்கள் இங்கு நகலிட்ட வெங்கட் அவர்களின் பின்னூட்டத்துக்கு நான் கொடுத்த பதில் இன்னும் மட்டுறுத்தப்படவில்லை. அது மேலே இப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்பட்டுள்ளது. அதை முதலில் பாருங்கள்.
இப்போது சில விஷயங்களை க்ளியராக பேசிடுவோம்.
"ஆண்டாண்டு காலமாக அடக்கிவைக்கைப்பட்டிருந்த தலித்துகளுக்கு பிற சமுதாயங்கள் நேரடி உதவியளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன (அந்த உதவியை அளிக்க முற்படுவதன் மூலம் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்படும் சிலபல இழப்புகளையும் உள்ளிட்டு)."
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதே அணுகுமுறையைத்தானே கடந்த 55 வருடங்களாகப் பார்த்து வந்திருக்கிறோம்? என்ன முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது?
மேலே இன்னொரு பின்னூட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"தீண்டாமைக் கொடுமையை எதிர் கொண்டு வெற்றி கொண்ட சமுதாயம் உள்ளது.
இன்று தமிழகத்தில் நாடார் சமுதாயம் மற்றவர்கள் மதிக்கக் கூடிய நிலையில் இன்று உள்ளது.
ஆனால் 150 வருடங்களுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. நாடார்களுக்கும் இரட்டை டம்ளர்தான்."
அவர்களும் மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருந்தால் அதே இழிந்த நிலையில்தான் இருக்க வேண்டும் அல்லவா? அது பற்றி என்ன கூறுவீர்கள்?
இஸ்ரேல் வந்த உதாரணத்தையும் கூறினேனே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214
அப்பிடிப்போடு அவர்களே,
"அரசியல் துறவறம் மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர்களையெல்லாம் மீண்டும் அழைத்து வந்து போட்டியே இல்லாமல் சிம்மாசனத்தில் அமர வைத்தார் ஒரு தமிழர். இது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு உதாரணம் என்பதால் சொல்கிறேன். அவரை அன்றிலிருந்து இன்று வரை இராஜாஜிதான் பிடிக்காவிட்டாலும் இராஜாஜி பிடிக்காத தலைவர் என்றுதான் எழுதுதிக்கொண்டிருக்கிறோம்., பிடிக்கவில்லையென்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என எழுதுகிறார்களே., அவர்களைப் போல் இராசகோபாலச்சாரியார் என எழுதவில்லை."
அந்த நேரத்தில் காங்கிரஸை காப்பாற்ற அவரின்றி வேறு வழியில்லை என்றுதான் ராஜாஜி அவர்கள் நீங்கள் குறிப்பிடும் தமிழராலும், நேரு அவர்களாலும் மற்றவர்களாலும் வரவழைக்கப்பட்டார். இரண்டு வருடம் திறமையாக பணியாற்றிய அந்தக் கிழவரை காங்கிரஸில் இருந்த அதிருப்தி கோஷ்டியனர் எவ்வாறு படுத்தினர் என்பதை நான் அக்காலத்தில் வெளியான கல்கி பத்திரிகைகளை சமீபத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.
இராஜகோபாலாச்சரியார் என்றோ ஈவேரா அவர்கள் என்றோ எழுதுவதில் என்ன தவறு இருக்க முடியும்? அது சரி, ராஜாஜி அவர்களை குல்லுக பட்டர் என்று திமுகவினர் அழைத்தனரே அதை ஏன் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்?
தலித்துகள் முன்னேற வேண்டும் என்றுதானே நானும் கூறுகிறேன். அவர்கள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து எவ்வாறு செயல்படுவது என்று பதிவு போட்டுள்ளேனே, பார்க்கவில்லையா? அதில் வரும் பின்னூட்டங்களையும் பாருங்கள்.
"முன்னேறுங்கள் அடுத்தவர்களை மிதிக்காமல், அவமானப்படுத்தாமல்."
எங்களவர்களுக்கு படித்து முன்னேருவதுதான் முக்கியம். வெட்டித்தனமாக மற்றவரை மிதிக்கவோ அவமானப்படுத்தவோ எங்களிடம் நேரம் இல்லை.
"தாழ்வு மனப்பான்மை??!! அப்படின்னா என்னா??"
ஓபன் காம்பெடிஷன் என்றாலே சிலிர்த்து பார்ப்பன எதிர்ப்பு கோஷங்களை வைக்கிறீர்களே, அதுதான் தாழ்வு மனப்பான்மை.
நீங்கள் வெளிநாட்டில் உள்ளீர்கள். இந்த ஊர் மூன்றாம்தர அரசியல்வாதிகள் செய்வதுபோல எல்லா கஷ்டங்களுக்கும் பார்ப்பனரே காரணம் என்று திசை திருப்பாதீர்கள். உங்கள் வீட்டுப் பெரியவர்களையே கேளுங்கள், அவர்கள் ஊரில் யார் அதிகம் ஜாதி பார்க்கிறார்கள் என்று. அது சம்பந்தமாக ஏதோ பதிவு போடுவதாகக் கூறினீர்களே, இன்னும் நேரம் வரவில்லையோ?
இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தலித்துகள் அவர்ககளே தனிக்கடை வைத்துக்கொள்வது அவர்களுக்கு உதவலாம். ஆனால் திரும்பவும் யாரை எதிர்த்து கடை வைத்தார்களோ அவர்களுடைய தயவில்தான் தான் தினசரி வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது - அவர்களிடம்தான் வேலை செய்து பிழைக்க வேண்டியுள்ளது. தலித்துகள் தன் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும்போதும் பொருளாதாரத்தில் மற்றவர்களைச்(உயர் சாதி) சார்ந்து இல்லாமல் இருக்கும்போதும்தான் இது சாத்தியமாகும்.
நிற்க.
15-20 வருடத்திற்குமுன் நடந்தது. எங்களூரில் நாங்கள்தான் பெரும்பான்மையினர். அடி,தடி,காவல் நிலையம் என்று போகத் தயங்குபவர்கள்.ஆனால், சினிமா தியேட்டர் முதலாளிகளெல்லாம் வேறு சாதியினர். இதற்கெல்லாம் அஞ்சாதவர்கள். அவர்கள் எப்போதாவது தகராறு செய்தால், யாரும் அவர்களுடைய சினிமா தியேட்டர்களுக்கு போகக் கூடாது என்று ஊர் கட்டுப்பாடு வைத்து விடுவார்கள்.மீறிப்போவர்களுக்கு அபராதம்தான்.
அப்புறம் என்ன, சம்பத்தப்பட்ட தியேட்டர் முதலாளி மன்னிப்பு கேட்டு அபராதம் கட்டிவிட்டு ஊர் கட்டுப்பாடை மீட்டுச் செல்வார்..இப்போது கேபிள் டிவி வந்தபின் நிலைமை எப்படி என்றூ தெரியவில்லை
கடந்த பல வருடங்களாக 3 தனி(Reserve) பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் கேலிக்க்க்கூத்தாகத்தான் நடக்கிறது.
இதற்க்கும் அதே காரணம்தான்.
திரும்பவும் இரட்டை தம்ளர் பிரச்னைக்கு வருகிறேன்.இதில் தலித்துகள் தாங்களாகவே எதைச் செய்தாலும்,வயிற்றுப் பிழைப்புக்கு மற்றவரை(உயர் சாதி) சார்ந்து இருக்கும்வரை தன்னிச்சையாக எதுவும்செய்ய இயலாது என்பது என் கருத்து.
தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214
"ஆகா அடுத்தத ஆரம்பிச்சாச்சா?., தேர்தல்ல நின்னு வென்று வந்தாரா?. எத்தனை வருடம் அவர் காங்கிரஸைக் காப்பாற்றினார்?. 16 ஆண்டு காலம் தலைவராக இருந்து காங்கிரஸின் சொத்தாக இருந்தார்., நீங்கள் பெயர் கூட குறிப்பிட விரும்பாத தமிழர். அதையாவது ஒத்துக் கொள்வீர்களா? இல்லை…"
ஏற்கனவே சொன்னதுதான். கவர்னர் ஜெனரலாக இருந்துவிட்டு வந்தவரை இவர்கள்தான் காலில் விழுந்து அழைத்து வந்தனர். இரண்டு வருடம் காப்பாற்றினார். கட்சிக்காரன் யாரும் தேவையின்றி கோட்டைக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அந்த இரண்டு வருடத்தில் பலமுறை அதிருப்தியாளர்கள் டெல்லிக்கு காவடி எடுத்துப் பார்த்தனர். நேரு அவர்கள் போட்ட போட்டில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என திரும்ப ஓடி வந்தனர்.
சென்னை நகரம் புதிதாக உண்டான ஆந்திரப் பிரதேசத்துக்கு போய் விடாமல் காப்பாற்றிக் கொடுத்தவர். மேலும், நான் மட்டுமா அந்தத் தமிழரின் பெயரைக் கூறவில்லை? நீங்களும்தான் கூறவில்லை. 1954-லிருந்து அந்தத் தமிழர் செய்த தொண்டை யாரால் மறுக்க முடியும்?
"யாரும் கட்டளையிட்டு என்னால் எதுவும் செய்ய முடியாது., போடும் போது வந்து படித்துக் கொள்ளுங்கள்."
அப்படியே செய்தால் போயிற்று. உங்கள் வீட்டுப் பெரியவர்கள் ஆணாதிக்கம் செய்தவர்கள் என்பது நீங்கள் எழுதிய பதிவுகளிலிருந்தே புலப்பட்டு விட்டது. இப்போது ஜாதி விஷயத்தில் என்ன கதை விடப் போகிறீர்கள் என்பதையும் பார்த்து விடுவோமே.
இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
"திரும்பவும் இரட்டை தம்ளர் பிரச்னைக்கு வருகிறேன்.இதில் தலித்துகள் தாங்களாகவே எதைச் செய்தாலும்,வயிற்றுப் பிழைப்புக்கு மற்றவரை(உயர் சாதி) சார்ந்து இருக்கும்வரை தன்னிச்சையாக எதுவும்செய்ய இயலாது என்பது என் கருத்து."
செய்வது சுலபம் என்று யார் கூறியது. அதனால்தான் சண்டை போடாமல் அமைதியாக உங்கள் இடத்தில் கடை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஒரு காரியம் ஏன் செய்ய முடியாது என்பதற்கு பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் அந்தக் காரியம் செய்யப்பட வேண்டும். எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் 58 ஆண்டுகளாக இருக்கும் நிலைதான் தொடரும்.
நாடார்கள் முன்னேறியதைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளத்தான் ஆலோசனை கூறினேன். தியேட்டர் முதலாளி வழிக்கு வந்த கதையும் நீங்கள் எழுதியதுதானே சிவா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிவனடியார் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://sivanadiyar.blogspot.com/
யாரும் யாருக்கும் கட்டளை போடவில்லை சிவனடியார் அவர்களே.
"கட்டளை என்பது வீரம் அவர்களுக்கு தெரியாது அவர்களிடத்தே கிடையாது.அவர்கள் இங்கு செய்யும் வேலையின் பெயர் "சொறிதல்"
ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு எல்லா தலித் பிரச்சினைக்கும் பார்ப்பனரே காரணம், மற்ற உயர்சாதியினர் இல்லை என்று ஜல்லியடிக்கிறீர்களே, அதுதான் சொறிதல்.
இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214
குடுகுடுப்பை அவர்களே,
தனிமனிதத் தாக்குதலா, என் தரப்பிலிருந்தா? சத்தியமாக அப்படியெல்லாம் இல்லை. அப்படிப் போடு அவர்களின் பதிவிலிருந்தே நான் மேற்கோள் காட்டுகிறேன்:
"எங்கள் பக்கத்தில் (திண்டுக்கல், தேனி, கம்பம், போடி பகுதிகளில்)சொந்தத்தை காரணம் காட்டியோ... சொத்தை காரணம் காட்டியோ., குடும்பத்தில் உள்ள வயதானவர்களை உறவினர் அல்லாது வெளியில் எடுக்கும் பெண் பேண (கவனிக்க) மாட்டார் என்றோ , வயதென்பதையும் அப்பெண்ணின் உணர்வென்பதையும் மறுத்து நடக்கும் திருமணங்கள் அதிகம் (அதிகமென்ன? முக்கால்வாசி அப்படிப்பட்டதுதான்). சிறிய பெண்ணை பாசம் என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தி., வயதானவர்களுக்கோ அல்லது குடித்து குடல் வெந்து போன ஒருவனை வெளியில் இருந்து யாரும் மணம் செய்ய வரவில்லையெனில், சொந்தமாவது கைவிடக்கூடாது என்ற நோக்கிலோ தெரிந்தே படு குழியில் தள்ளுவதைப் போல மணம் செய்து தருகின்றனர். இதில் படித்த குடும்பம், படிக்காத குடும்பம் என்றெல்லாம் பிரிவில்லை. இந்த சாபக்கேடு இன்று வரை தொடர்வது மனதைக் தைக்கும் வேதனை. அதை எதிர்த்து கேட்கும் துணிவிருந்தும்., சொந்தங்களை மறுத்த குற்ற உணர்வு தடுக்கின்றது. எல்லாவற்றையும் மீறி, தொலை பேசும் போது "அம்மா...!, நல்லாருக்கியாடா சாமி?" என்கிற கரகரப்பான, நெகிழ்ச்சிக் குரலைக் கேட்டு கண்டிக்க முடியவில்லை. கண்ணீரே வருகிறது."
பார்க்க: http://tamilkudumbam.blogspot.com/2005/12/blog-post_26.html
இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு கே.ஜி. சுப்பிரமணியன் என்பவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை கீழே தருகிறேன். அவர் த்ங்கிலீஷில் தட்டச்சு செய்ததி தமிழுக்கு மாற்றியுள்ளேன்.
Dear Dondu,
நான் ஒரு தமிழ்மணம் ரசிகன். (கடந்த மூன்று மாதங்களாக)
தங்களின் பல பதிவுகளை ரசித்திருக்கிறேன்.
இந்தப் பதிவில் தாங்கள் இரட்டை டம்ளர் முறை பற்றி பேசினாலும், இது சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றம் பற்றிய உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக, அதற்கான ஒரு செயல் முறையாக இதை முன் வைக்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன்.
இவ்வாறு கீழ்நிலையில் உள்ளோர் பெருமளவு முன்னேற்றம் காண முடியாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்று நான் கருதுவது லஞ்ச ஊழல்தான் (CORRUPTION).
அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதன் பலன்கள் உரியவருக்கு போய் சேராமல், வழிலேயே சுருட்டப்பட்டுவிடுவது, இவர்களின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
அரசு செய்வது போதாது என்பது உண்மை. ஆனால் இதுவரை செய்யப்பட்ட முயற்சிக்கும் கிடைத்த பலனுக்கும் சம்பந்தம் இல்லை என்னும் அளவுக்கு நிலைமை இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் லஞ்ச ஊழல்தான். (I remember that Rajiv gandhi once commented that only 15% of the money allocated/spent on such schemes actually reach the true beneficiaries)
கல்வி, அதன் மூலம் கிடைக்கக் கூடிய அறிவு, வாய்ப்புகள், இவற்றின் பலனாக பெறக்கூடிய பொருளாதார முன்னேற்றம் ஆகியவையே, இம்மக்களின் முன்னேற்றத்துக்கும, அவர்களின் நிலை உயர்வதற்கும் வழி செய்ய முடியும்.
சாதி சான்றிதழ் வாங்குவது முதல், கிராம சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருப்பதற்கு, பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது என்று கல்வி, உடல்நலம் போன்ற அடிப்படை வசதிகூட இவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.
40 ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழகத்தில் லஞ்ச ஊழல் ஒரு அருங்கலையாக பரிணாமித்திருக்கிறது. இப்பிரச்சினை குறித்துப் பேசுவோர் ஏன் இதைபற்றிப் பேசுவதில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அதே நேரத்தில் அவரவர் முன்னேற்றத்துக்கு அவரவர்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். மற்ற முன்னேறியவர்கள் (எந்த சாதியாக இருந்தாலும்) அதற்கான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.
எல்லோரும் வாழட்டும். இந்தியா வளமான, வலிமையான நாடாக உருவெடுக்கட்டும்.
K.G.Subbramanian
டோண்டு அவர்களே, தாங்கள் யோசனை மிக்க சரியானதே. அதனால்தான், எங்களூரில் நடந்தவற்றையும் என் பின்னோட்டத்தில் சேர்த்தேன். என்னிடம் ஒரு பழக்கம் - எதையுமே செயல்படுத்துதலில் உள்ள கஷ்ட்,நஷ்டங்களை பார்ப்பது.அவ்வளவுதான்.
நான் நேற்று இட்ட பின்னூட்டத்தின்
தொடர்ச்சி[நேற்றுநேரமாகிவிட்டபடியால்
தொடற முடியவில்லை].அதனால் இதை
அதன் தொடற்சியாகப் போடவும்.
நீங்க சொன்ன வழிமுறை இத்தனை
வருடங்களாக தலித்துகளுக்கு தெரியாமல்
போயிருக்குமா?
எல்லா இடங்களிலும் தலித்துகள் பலவீனமாக இருக்கும்போது ஆதிக்க சாதியினரை எதிர்த்து செயெல்படுத்துவது எப்படி சாத்தியாமாகும்?
வெங்கட்டின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். எங்கும் பாதிக்கப்பட்டவர்தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதில் 2வது கருத்து இல்லை
நீங்கள் கூறும் கஷ்டங்கள் இல்லாமல் இல்லை சிவா அவர்களே. ஆகவேதான் என்னுடைய ஆலோசனையை இம்மாதிரி முன்வைத்தேன்:
"இந்த அவமானம் ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும்.
இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் தரப்பிலிருந்தே ஏதாவது செய்ய முடியுமா? உதாரணத்துக்கு அம்மாதிரி இரட்டை தம்ளர் கடைகளில் டீ வாங்காமல் தவிர்த்தல். பொருளாதார பகிஷ்காரம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் அல்லவா? முடியுமா என்று தைரியமில்லாமல் பார்ப்பதை விட முடிய வேண்டும் என்று உறுதியுடன் இருக்க வேண்டாமா? அவர்களே தங்கள் குடியிருப்பில் ஒரு சிறு டீக்கடை அமைத்துக் கொண்டு அங்குதான் டீ குடிப்பது என்றுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்களுக்காக ஏதேனும் செய்வார்கள் என்று எதிர்ப் பார்ப்பதை விட்டு விட்டு எங்காவது ஒரு இடத்தில் துவங்கி வெற்றி பெற்றால் அதுவே அரசின் பல சட்டங்களை விட அதிகப் பாதுகாப்பு தரும் என நம்புகிறேன். இட ஒதுக்கீடு பெற்று முன்னுக்கு வருபவர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே கணிசமானத் தொகை வருமே. அவர்களின் பிரதிநிதிகள் இம்மாதிரி யோசிக்க ஆரம்பித்தாலே ஒரு உத்வேகம் பிறக்காதா?"
இதையும் சொன்னேன்:
"என்னுடைய ஆசை என்னவென்றால், திருமா போன்ற தலைவர்கள் தேர்தல் வரும் இச்சமயத்தில் நான் கூறிய யோசனையை செயல்படுத்திப் பார்க்கலாம். ஏதேனும் ஓரிடத்தில் தனி டீக்கடை வந்தால்கூட நல்லதுதான். தேர்தல் நேரத்தில் தலித்துகளை விரோதித்துக் கொள்ள யாவரும் தயங்குவர். இதுவே திட்டத்தை ஆரம்பிக்க ஒரு நல்ல தருணம்."
பின்னூட்டமிட்டப் பலரும் அரசே சட்டத்தை இன்னும் கடுமையாகச் செயல்படுத்தவேண்டும் என்று கூறினர். அவர்களுக்கு நான் கூறுவது இதுதான். "57 ஆண்டுகளாக செய்யாததையா இப்போது அரசு செய்யும் என எதிர்பார்க்கிறீர்கள்."
ஏற்கனவே நாடார்களின் உதாரணம் கண்முன்னால் இருக்கும்போது என்ன தயக்கம்?
தனி டீக்கடையை ஒரு சண்டையின்றி மௌனமாக செய்வதே பலன் தரும்.
நீங்கள் கூறுகிறீர்கள்: "எங்கும் பாதிக்கப்பட்டவர்தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதில் 2வது கருத்து இல்லை."
அதைத்தான் நானும் கூறினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"டீக்கடை போடலாம்; ஆளையும் சேர்த்தேல்லே கொளுத்திப் போடுவாங்க!!!!,பொலிசும் அவங்க பக்கம் தானே; தற்கொலை என்னு கேஸ் முடிங்சுடும். டீக்கடைக் குடும்பம் தெருவில்."
அப்படிங்களா. நாடார்கள் முன்னேறினார்களே அதே இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து. அவர்களை கொன்றா போட்டுவிட்டார்கள்?
கஷ்டம் என்று பார்த்தால் எல்லாமே கஷ்டம்தான். காரியத்தில் முதலில் இறங்கவேண்டும் அல்லவா. டீக்கடை என்பது போராட்டத்தின் ஒரு குறியீடே. சுயமரியாதையைப் பெற என்ன செய்யவேண்டுமோ அதை செய்யாமல் ஒன்றும் நடக்காது.
தலித் தலைவர்கள் முதலில் மனம் வைக்க வேண்டும். ஏதேனும் ஓரிடத்தில் சிறிய துவக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தின் கண் முழுக்க அத்துவக்கத்தின் மேல் இருக்கட்டும். அப்போது பார்க்கலாம், யார் கொளுத்துகிறார்கள் என்று.
இரட்டை டம்ளர் டீக்கடைகளை தவிர்ப்பது சண்டை இல்லாமல் செய்தாலே பாதி பிரச்சினை தீருமே. முடிந்த வரைக்கும் அவர்கள் நகரங்களுக்கு வரட்டும். கிராமப் புறங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் குறைந்தாலே இருப்பவர்களை இழக்க பயந்து அவர்களின் நிலையை உயர்த்தலாம் அல்லவா. அடிமை வாழ்வைத் தவிர கிராமங்கள் அவர்களுக்கு வேறு என்ன தருகின்றன?
இந்த இடத்தில் சங்கராச்சாரியாரை எதற்கு இழுத்து பிரச்சினையை திசை திருப்ப வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போதுதான் விவாதம் சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது
\\\\ முடிந்த வரைக்கும் அவர்கள் நகரங்களுக்கு வரட்டும். கிராமப் புறங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் குறைந்தாலே இருப்பவர்களை இழக்க
பயந்து அவர்களின் நிலையை உயர்த்தலாம் \\\
ஆஹா! மிக நல்ல யோசனை. ஏற்கனவே நகரத்தில் அந்த வேலையைச் செய்து கொண்டிருப்பவர் எங்கே போவார்?
அரசாங்கத்தால் அதே மாதிரி வேலையை கொடுக்க முடியாது. ஏற்கனவே, நகராட்சி,ஊராட்சிகளால்(நகர சுத்தி தொழிலாளர்களுக்கு) சம்பளம்
கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிக்கிறார்கள்.
மெத்தப் படித்த நமக்கு வேண்டுமானால், வேறு வேலை தேடி வேறு ஊறுக்குச் செல்வது எளிதாக இருக்கலாம்.
உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மொழி பெயர்ப்பாளர் வேலை நன்றாகத் தெரிந்து இருந்தும், அதில் கிடைக்கும் வருமானம்
அரசாங்க வேலையைவிட மிக அதிகம் என்று தெரிந்து இருந்தும், உங்களால் அரசாங்க வேலையை விட்டு விட்டு அதை முழு நேர வேலையாக
செய்ய முடியவில்லையே. ஏன்? உங்கள் கூற்றுப்படி டெல்லியிருந்து சென்னைக்கு வருவதற்கு தயக்கம் இருந்ததுதானே? ஏனெனில், அப்போது,
சென்னையில் client யாரும் தெரியாது.Internet/Email இருந்ததால் பிழைத்தீர்.இல்லையேன்றால், (client வேலையின் இரகசியம் காக்க) டெல்லிக்கு
விமானத்தில் சென்றுதான் வேலை செய்ய வேண்டி இருந்துதிருக்கும்!
இந்தியாவில் 60-70% மக்கள் கிராமங்கலில்தான் வசிக்கிறார்கள்.இது தமிழகத்துக்கும் பொருந்தும். பெரும்பாலும் சென்னைக்குத்தான் போக வேண்டும்.
ஏற்கனவே சாலை,குடிநீர் என்று ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்கியிருக்கும் சென்னைக்கு இது தேவைதான்!!! அதனால்,மக்கள் கிராமங்களிலிருந்து
நகரங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்க,கிராமங்களிலேயே வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கும், ஒரு மாற்று இருக்கிறது. சமத்துவபுரம் மாதிரி தனியாக நகரத்தை சென்னைக்கு அருகில் அமைத்து, எல்லா வசதிகளையும் செய்து தர
வேண்டும். வேறு யார்? அரசாங்கம்தான்.
சென்னையில் அதிகப்படியான மக்களை குறைக்க, ஏற்கனவே சென்னையில் இருப்பவர்களை, கிராமத்துக்கு அனுப்ப வேண்டியதுதான்.அப்படி
அனுப்பப்படுபவர்களில் முதல் குழுவுக்கு நீங்கள்தான் தலைவர் என்று சொல்ல வேண்டியது இல்லை!!!
நீங்கள் சொல்வது
\\\\ நாடார்கள் முன்னேறினார்களே அதே இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து. அவர்களை கொன்றா போட்டுவிட்டார்கள்? \\\\
இது எப்படி நடந்தது என்று முழு விபரங்கள் தெரியாமல்,அதையே தலித்துகளுக்கும் பொருத்தி பார்ப்பது சரியல்ல. நாடார்களின் எண்ணிக்கை
மற்றும் தொழில்(வியாபாரம்) காரணமாக இருக்கலாம்.
சிவா அவர்களே, நீங்கள் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். வாதத்தில் வெற்றிபெறுவது இங்கு நோக்கம் இல்லை. தலித்துகள் முன்னேற வேண்டும், அவ்வளவுதான்.
"நீங்கள் சொல்வது
\\\\ நாடார்கள் முன்னேறினார்களே அதே இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து. அவர்களை கொன்றா போட்டுவிட்டார்கள்? \\\\
இது எப்படி நடந்தது என்று முழு விபரங்கள் தெரியாமல்,அதையே தலித்துகளுக்கும் பொருத்தி பார்ப்பது சரியல்ல. நாடார்களின் எண்ணிக்கை
மற்றும் தொழில்(வியாபாரம்) காரணமாக இருக்கலாம்."
உங்களுக்கு மட்டும் முழு விபரம் தெரிந்து விட்டதா என்ன? இருக்கலாம் என்றெல்லாம் கூறுவதைவிட அதை செயல்படுத்துவதுதான் முக்கியம். ஒரு காரியத்தை ஏன் செய்யக்கூடாது என்று பக்கம் பக்கமாகக் குறிப்புகள் எழுதுவதைவிட, அக்காரியம் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று மட்டும் கூறவும் என்று காமராஜ் அவர்கள் கூறியதைப் பற்றி நான் இப்பதிவில் போட்டிருப்பதைப் படிக்கவும்.
நாடார்கள் என்ன செய்தார்கள் என்பதை பற்றி நான் மேலே இட்டப் பின்னூட்டத்தைப் பார்க்கவும். (March 08, 2006 7:24 PM).
கிராமத்தை விட்டு வரவேண்டும் என்று நான் கூறுவது அவர்கள் நிலையில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக. எல்லோரும் உடனே வந்துவிடப்போவதில்லை. இது அதன் போக்கிலேயே நடக்க வேண்டியதுதான். நகரத்தில் இருப்பவர் எங்கு போவார் என்பது பற்றி கிராமத்தில் இருப்பவர் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரைப் பற்றி இதுவரை யாராவது கவலைப்பட்டார்களா என்ன? முதலில் ஏதாவது நடக்கட்டும் பிறகு பிரச்சினைகள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.
"சென்னையில் அதிகப்படியான மக்களை குறைக்க, ஏற்கனவே சென்னையில் இருப்பவர்களை, கிராமத்துக்கு அனுப்ப வேண்டியதுதான்.அப்படி
அனுப்பப்படுபவர்களில் முதல் குழுவுக்கு நீங்கள்தான் தலைவர் என்று சொல்ல வேண்டியது இல்லை!!!"
அவ்வாறு நடக்க இது என்ன போல்பாட்டின் கம்போடியாவா என்ன? திறமை இருப்பவன் பிழைத்துக் கொள்கிறான். அது பற்றி இங்கு எதற்கு பேச வேண்டும். தலித்துகளின் அவமானமான இரட்டை கிளாஸ் முறை ஒழியவேண்டும். அதற்கு நான் ஆலோசனை கொடுத்தேன். ஏற்கனவே செயல்படுத்தப்பட்டதே என்பதையும் காட்டியாகி விட்டது. அவர்கள் எங்கே நான் கூறிய மாதிரி செய்து முன்னேறிவிடப் போகிறர்களே என்று நீங்கள் கவலைப்படுவதாகத்தான் எனக்கு இப்போது படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதில் உனர்ச்சிவயப்படுவதற்க்கு என்ன இருக்கிறது? எப்படி செய்ய வென்டும் என்பது முக்கியம்தான். நம்மாலே ஒரு காரியம்(Changing Job/Shifting Residence from one town to other) முடியாதபோது அதையே அடுததவரை செய்யச் சொல்வது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி.நமக்கு ஒரு நியாயம். அடுததவர்க்கு ஒரு நியாயமா?
என்னால் முடியாதவற்றை நன் எப்போதுமே யோசனையாக சொல்லமாட்டேன்.
நீங்கள் கூறுகிறீர்கள்
////*
அவர்கள் எங்கே நான் கூறிய மாதிரி செய்து முன்னேறிவிடப் போகிறர்களே என்று நீங்கள் கவலைப்படுவதாகத்தான் எனக்கு இப்போது படுகிறது. ***////
நல்ல வேடிக்கை
தலித்துக்கள் நகரத்துக்கு வந்தால் என் போன்ரவற்களுக்குத்தன் வேலை போகப்போகிறது.
அதனல்தான் நான் கவலைபடுவதக எடுத்துக்கொள்ளுங்கள்
"நமக்கு ஒரு நியாயம். அடுததவர்க்கு ஒரு நியாயமா?"
இந்தப் பதிவு தலித்துகள் இரட்டை டம்ளர் முறையில்ருந்து எப்படி மீண்டு வருவது என்பது பற்றி. நான் கூறியது அதிலிருந்து வெளி வர பாதிக்கப்பட்டவர் முயற்சி செய்ய வேண்டும் என்பது. எதிர் கருத்துடையவர்கள் கூறுவது அரசுதான் எல்லாம் செய்ய வேண்டும் என்று. நான் கூறுவது அவ்வாறு 57 ஆண்டுகளாகப் பார்த்து என்ன முன்னேற்றம் வந்தது என்று.
நான் மேலும் இப்போத்கு கூறுவது, உங்களிடம் ஏதாவது புது யோசனை இருந்தால் கூறுங்கள் என்று. அதை விடுத்து என்னுடைய உதாரணத்தை எல்லாம் ஏன் இழுக்க வேண்டும்? நான் இப்போது கூறுகிறேன், நான் மேற்கொண்ட இட மாற்றம் வேலை மாற்றம் எல்லாமே நான் என் நலனுக்காக எடுத்த முடிவுகள்தான். ஐ.டி.பி.எல்லில் இருக்க முடிந்த வரை இருந்ததும் என்னுடைய நலன்களுக்கு ஏற்ப எடுத்த முடிவுதான். நான் எங்குமே ஒடுக்கப்படவில்லை.
நான் செய்தது என்னவென்றால் அசௌகரியமான சூழ்நிலை வந்தபோது அதை எனக்கு சாதகமாகவே மாற்றிக் கொண்டதுதான்.
டீக்கடை யோசனை கூறியதன் காரணமே குறைந்த முதலீட்டில் செய்யலாம், இரட்டை டம்ளர் அவமானத்தைத் தடுக்கலாம் என்பதாலேயே. கிராமத்தை விட்டு நகருக்கு வந்து சலூன் வைத்த நாவிதர்கள் ஒகோ என்று பொருள் ஈட்டுகிறார்கள். நகரத்திற்கு வந்து என் வீட்டின் அருகில் இஸ்திரி போடும் வண்ணார் ஜாதியினர் ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு குறைவில்லாது டர்ண் ஓவர் சாதிக்கிறார்கள். செலவு போக கண்டிப்பாக 400 ரூபாய்கள் தேறும். எங்கு முன்னேற முடியுமோ அங்கு செல்லுங்கள் என்றுதான் கூறுவேன். அவர்கள் நகரத்துக்கு வந்தால் இங்கிருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதெல்லாம் மேக்ரொ கவலைகள். முன்னேறத் துடிப்பவர்கள் படவேண்டியக் கவலைகள் அல்ல.
மறுபடியும் கூறுவேன். தலித்துகள் முன்னேற வேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் கூறிய யோசனை முதலில் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று. இழிவு செய்யும் கிராமச் சூழ்நிலையை விட்டு விலகுங்கள். எதுவாயினும் பாதிக்கப்பட்டவர்களாக எதாவது செய்தால்தான் முன்னேற முடியும் என்று நான் அவர்களிடம் கூறுவேன். அது வேண்டாம் மற்றவர்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் சோர்ந்திருப்பாராயின் ஒன்றும் காரியத்துக்காகாது என்பதுதான் நான் கூற விரும்புவது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\\\\ மேற்கொண்ட இட மாற்றம் வேலை மாற்றம் எல்லாமே நான் என் நலனுக்காக எடுத்த முடிவுகள்தான். ஐ.டி.பி.எல்லில் இருக்க முடிந்த வரை இருந்ததும் என்னுடைய நலன்களுக்கு ஏற்ப எடுத்த முடிவுதான். நான் எங்குமே ஒடுக்கப்படவில்லை. ....\
நீங்கள் ஒடுக்கப்பட்டீர்கள்.அதனால்தான் அவ்வாறு செய்தீர்கள் என்று நான் சொல்லவில்லை.
உங்களுக்கு சுய நிர்ப்பந்தங்கள் இருந்த மாதிரி தலித்துகளுக்கும் இருக்கும்தானே.
அப்பாடா! இனிமேல் அடுத்த வருடம் இதையே நீங்கள் மீள் பதிவு செய்யும்போது பின்னூட்டம் இட்டால் போதும்! நிறைய வேலை இருக்கிறது. மற்ற பதிவு பின்னூட்டத்திற்கெல்லாம் பதில் போட வேண்டும்!
"உங்களுக்கு சுய நிர்ப்பந்தங்கள் இருந்த மாதிரி தலித்துகளுக்கும் இருக்கும்தானே."
So what? That is life, struggling against the odds, the more there are problems, the more resolute one should be.
You may have thousand and one reasons for not doing a thing to uplift yourself but at the end of the day, you will suffer if you don't look after yourself.
Regards,
Dondu N.Raghavan
தருமி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
தலித்துகள் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மையே. அதே போல 19/ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடார்கள் அடக்குமுறைக்கு உள்ளானதும் சரித்திர உண்மையே. இப்போது பார்ப்பனர்கள் உள்ளாவதும் நடக்கிறதுதான்.
அதை சம்பந்தப்பட்ட சாதியினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் பார்ப்போமா?
முதலில் நாடார்கள். அவர்கள் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தில் சமுதாய பிரக்ஞை என்றெல்லாம் ரொம்ப கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்குவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்றது. அந்தக் காலக் கட்டத்தில் மிகக் கொடுமையான முறையில் அடக்கப்பட்ட நாடார்கள், இனிமேல் அடங்கிக் கிடப்பதில்லை என தீர்மானித்தனர். தனிப்பட்ட மன வேறுபாடுகளைக் கண்டுகொள்ளாமல் ஒன்றுபட்டனர். தங்கள் சமுதாய விஷயங்களைத் தாங்களே தீர்த்துக் கொள்ளத் தலைப்பட்டனர்.
நான் ஏற்கனவே இட்ட, காமராஜ் அவர்கள் பற்றிய ஒரு பதிவில் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற அவாவில் ஒவ்வொரு நாடார் குடும்பத்தினரிடமும் ஒரு பிடியரிசி தினமும் பெற்று அதை சேர்த்து, விற்று, பள்ளிகளை நிறுவியதை குறிப்பிட்டுள்ளேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் படித்தது இப்பள்ளியில்தான். பல பத்தாண்டுகள் போராடி வந்த நாடார்கள் இப்போது இருக்கும் நிலையைப் பாருங்கள்.
பார்ப்பனர்கள் விஷயம் வேறு. அவர்கள் அதிகம் ஒடுக்கப்பட்டது தமிழகத்தில் மட்டுமே. அதுவும் ஏனைய உயர்சாதியினர் தாங்கள் தலித்துகளை வன்கொடுமை செய்வதை மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்புவதே அதன் முக்கிய நோக்கம். ஆனால் பார்ப்பனர்கள் இந்த விளையாட்டுக்கு வரத் தயாராயில்லை. இங்கு வாய்ப்புகள் குறைவா போடா ஜாட்டான் என்று வேறு இடங்களுக்கு செல்கின்றனர். நான் எனது இப்பதிவில் கூறியது போலத்தான் நடக்கிறது.
ஆனால் தலித்துகள்? முதலில் அவர்கள் ஒன்றுபட வேண்டும். அவர்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. அதை மறக்க வேண்டும். நிலைமையின் தீவிரம் புரிந்து செயலாற்ற வேண்டும். தன் கையே தனக்குதவி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுதாரணமாக நாடார்கள் உள்ளனர். பெருநகரங்களில் வாழும் பொருள் வசதி படைத்த தலித்துகள் கிராமங்களில் ஒடுக்கப்படும் தங்கள் சகோதரர்களை மறக்கலாகாது. அவர்களையும் நகரங்களுக்கு குடிப்பெயரச் செய்து வேலை தேட உதவி புரிய வேண்டும். முக்கியமாக இவை எல்லாம் நட்க்கும்வரை குடிப்பதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பல இடங்களில் பிள்ளைகளை, பெண்களை வேலைக்கனுப்பி அவர்கள் கூலியை குடித்தே அழிக்கும் ஆண்கள் திருந்தவேண்டும்.
அவமானங்களை ஒருக்காலும் பொறுக்கலாகாது. இரட்டை தம்ளர் முறையை எதிர்க்கொள்ள நான் போட்ட பதிவை படித்த ஒரு தலித் என்னிடம் அரசே அந்த டீக்கடைகளை பொதுப் பணத்திலிருந்து நிறுவித் தர வேண்டும் என்று கூறினார். இது அவர்களது கௌரவத்துக்கு அழகல்ல என்று நான் கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு வந்த பின்னூட்டங்களும் எல்லாமே மற்றவர்கள்தான் செய்ய வேண்டும் என்று தலித்துகளை அவமானப்படுத்துவது போன்ற பின்னூட்டங்களையே தந்தனர். ஆக, தலித்துகள் முன்னால் இருக்கும் பிரச்சினை மிக பயங்கரமான அளவில் உள்ளது.
மறுபடியும் கூறுவேன். தலித்துகள் முன்னேற வேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் கூறிய யோசனை முதலில் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று. இழிவு செய்யும் கிராமச் சூழ்நிலையை விட்டு விலகுங்கள். எதுவாயினும் பாதிக்கப்பட்டவர்களாக எதாவது செய்தால்தான் முன்னேற முடியும் என்று நான் அவர்களிடம் கூறுவேன். அது வேண்டாம் மற்றவர்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் சோர்ந்திருப்பாராயின் ஒன்றும் காரியத்துக்காகாது என்பதுதான் நான் கூற விரும்புவது.
இப்பின்னூட்டத்தின் நகலை இரட்டை தம்ளர் முறை பற்றி இட்ட எனது பதிவில் பின்னூட்டமாக இடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பொருளாதாரத்தில் முன்னேறிய தலித் அதே இனத்தை சேர்ந்த பொருளாதரத்தில் பின்தங்கியவர்களை அடிமை மனப்பான்மையோடு நடத்தும் சூழ்நிலையில் போராட்டத்தை யாரை நோக்கி தொடர்வது.மேலும் பெரும்பான்மையோரிடம் உள்ள சோம்பேறிதனமே அடிமைகளை எப்படி உருவாக்குவது என்று சிந்திக்க தூண்டுகிறது என நினைக்கிறேன்.விலங்குகளை தவிர இழப்பதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணம் வராமலிருக்கக் காரணம் விலங்குகளை தவிர்த்தும் ஏதோ இருக்கிறது என்பதாகத் தானே இருக்கும்.நீங்கள் வளர்ந்த விதம் உங்களை பகிஷ்கரிப்பு போன்ற அகிம்சை வழியில் சிந்திக்கத் தூண்டுகிறது.இதற்கு சைக்கிளிலேயே வருகிறேன் என்று ஒரு சம்பவத்தில் கூறியதை உதாரணமாக கொள்ளலாம்.அதனை உடற்பயிற்சியாய் எடுத்துக் கொள்ளலாம் என நீங்கள் சமாதானாமாக்கி கொண்டீர்கள்.இந்த மனநிலை பாதிக்கப் படுபவர்களிடம் குறைவுதானே.பின்வாங்குதல் அவமானதாக கருதப்படுகிறதே ஒழிய அதுவும் ஒரு போர்தந்திரம் என கற்பிக்க படவில்லை.இலக்கை நோக்கிய தொடர்ச்சியான அகிம்சை போராட்டம் இழப்பு குறைந்த ஒரு போர் என நான் நினைக்கிறேன்.இலக்கை நோக்கிய பயணம் சீர்குலையும் வண்ணம் இடையில் மாமிசம்,மது,மாது என எத்தனை இடைஞ்சல்களை உருவாக்கியுள்ளது வர்ணாசிரமம்(கோபம் கொள்ளாதீர்கள்). இப்போது எனக்கே தெரியவில்லை எதனை நோக்கி இந்த பின்னூட்டத்தை எழுத ஆரம்பித்தேன். இப்போது எங்கே நிற்கிறேன் என்று.பொருளாதாரத்தில் வரும் "vicious circle of poverty" போன்றது தான் இதுவும்.சுகத்திற்கு அடிமை பட்ட மனம் அடிமை தனத்தினை ஆதரிக்கவே செய்யும்.இது இட ஒதுக்கீட்டினால் மேன்மையடைந்த தாழ்த்த பட்டோர்களிடமும் இருக்கிறது.தாழ்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளம்,பணி உயர்வு போன்றவற்றிக்கு அணிதிரண்டு போராடுவது போல் தங்கள் இன உயர்விற்கு அணி திரள்கிறார்களா?.
Post a Comment