இந்த மீள்பதிவுக்கு போகுமுன் ஒரு வார்த்தை, இதற்கு பின்னூட்டம் ஈட்டிய ஒருவரைப் பற்றி. அவர்தான் சங்கர நாராயணன் அவர்கள். இஸ்ரேலில் தங்கி படித்து வருபவர். என்ன வேடிக்கை பாருங்கள், இப்போது அவரும் தன் வலைப்பூவில் இஸ்ரேலை பற்றி எழுதி வருகிறார். நிற்க, இப்போது பதிவுக்கு செல்வோம். அதை அப்படியே மீள்பதிவு மட்டும் செய்யாது, தேவையானால் தெளிவாக்க வேண்டிய இடங்களில் அதையும் செய்வேன்.
எதிர்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்த்ததுதான். ஆகவே அவற்றைப் பற்றிக் கவலையில்லை. சொல்லப் போனால் அவைதான் எனக்கு சக்தி தருகின்றன.
1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்தப் பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.
யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.
இங்கோ கேட்கவே வேண்டாம். ஆ ஊ என்றால் பார்ப்பனியக் குணம் பற்றிய விமரிசனங்கள், சோ மேல் தாக்குதல்கள், தமிழ் மக்களை தான் எவ்வளவுக் கீழாக மதிக்கிறார் என்பதை வெளிப்படையாகவே பல முறை கூறியவர் காலிலேயே விழுந்துக் கிடப்பது ஆகியவை ஜாம் ஜாம் என்று நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன. நான் இப்பதிவில் கூறப் போவதாகச் முந்தையப் பதிவில் எழுதியதைக் கூறி விடுகிறேன்.
இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் என்ன, பம்பாயில் ஒரு கான்ஸுலேட் மட்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள கணிசமான முஸ்லிம்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, அரபு தேசத்தவர்களுடன் வணிகம் பாதிக்கப் படுமோ என்ற யோசனைகள் பேரில் இதற்கு மேல் செய்ய இந்திய அரசு தயாராக இல்லை. அது புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். வெளியுறவுக் கொள்கைகளின் நாட்டின் நலப் பாதுகாப்பு என்பது ஒன்றுதான் முக்கியக் காரணியாக இருக்க வேண்டும். ஆனால் நிஜமாகவே இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட்டனவா என்றுப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி அஞ்சியே காரியம் செய்ததில் இந்தியாவிம் கௌரவம் பாழாய் போனதுதான் மிச்சம்.
1956 அரபு-இஸ்ரேலிய யுத்தத்தில் பாகிஸ்தான் அரபு நிலைக்கு எதிர் நிலை எடுத்தது. ஏனெனில் அச்சமயம் அது அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டிருந்தது. ஆனாலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எப்போது பிரச்சினைகள் வந்தாலும் அரபு தேசத்தவர்கள் தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து வந்த இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானையே ஆதரித்து வந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் பாகிஸ்தான் இசுலாமிய நாடு என்பதுதான்.
ஆனால் என்ன அவமானம் பட்டாலும் இந்தியா ஒன்றும் செய்யும் நிலையில் இல்லை. நாயர் புலி வாலைப் பிடித்தக் கதையாய் விரும்பினால் கூட இஸ்ரேலுடன் தன் ராஜரீக உறவை அப்கிரேட் செய்யும் நிலையில் இல்லை இந்தியா.
இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனேகம். அறுபதுகளின் முடிவில் இஸ்ரேலியர் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலத்தில் ஒரு மசூதியில் யாரோ பயித்தியக்காரன் நாச வேலை செய்ய அரபு நாடுகள் ஒரு பெரியக் கூச்சல் இஸ்ரேலுக்கெதிராகக் கிளப்பின. அதைப் பற்றி விவாதிப்பதற்காக ராபாத்தில் ஒரு இஸ்லாமிய தேசங்களின் மகாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தானும் ஒரு இஸ்லாமிய நாடுதான், தன்னையும் அழைக்க வேண்டும் என்று நிஜமாகவே இந்தியா அடம் பிடித்துக் கெஞ்சியது. அது அவமானங்களின் ஆரம்பம். ரொம்பக் கெஞ்சியதன் பேரில் இந்தியாவுக்கு வேண்டா வெறுப்பாக ஓர் அழைப்பு அனுப்பபட்டது. பக்ருதீன் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாக ராபாட் விரைந்தார். ஆனால் என்னப் பரிதாபம். அதற்குள் பாகிஸ்தானும் ஜோர்டானுமாகச் சேர்ந்து நடவடிக்கை எடுத்து இந்த அழைப்பை ரத்து செய்வித்தனர். இந்தியப் பிரதிநிதி மாநாடு நடந்த ஹாலுக்கு வெளியேயே நிறுத்தப்பட்டார், பள்ளியில் வகுப்புக்கு வெளியே மாணவனை நிறுத்தி வைப்பது போல. பல முறை ஜாடை மாடையாக பெற்ற அவமானங்களுக்கு இது ஓர் சிகரமாக அமைந்தது. அக்காலக் கட்டத்தில் இதையெல்லாம் பத்திரிகையில் படித்து மிக வெட்கப்பட்டேன். இதுவும் இந்திரா அவர்களின் ஒரு சாதனை. ஏற்கனவே சொன்னது போல இந்திய பாகிஸ்தான் யுத்தங்கள் எல்லாவற்றிலும் பாக் ஆதரவு நிலையையே அரபு நாடுகள் செய்து வந்துள்ளன.
1972 ஒலிம்பிக் போது 11 இஸ்ரேலியத் தடகள வீரர்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டனர். அது பற்றி இந்தியாவின் கருத்துக் கேட்கப் பட்டபோது இந்தியத் தொடர்பு அதிகாரி ஒன்றுமே பேசாமல் தோள்களைக் குலுக்கினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலியர் ஒரு பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் முகாமைத் தாக்கியப் போது மட்டும் அதே அதிகாரி உரக்கவே தன் ஆட்சேபத்தை வெளியிட்டார்.
ஜூலை 1976. ஓர் ஏர் பிரான்ஸ் விமானம் உகாண்டாவுக்குக் கடத்தப்பட்டு அதில் இருந்த யூதப் பயணிகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றப் பயணிகளையும், விமானச் சிப்பந்திகளையும் விடுதலை செய்தனர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். இடி அமீனும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார். அப்போதெல்லாம் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேல் என்ன செய்தது? 4000 மைல்கள் பறந்துச் சென்று 53 நிமிடச் செயல்பாட்டுக்குப் பிறகு அத்தனைப் பேரையும் மீட்டு வந்தது, ஒரே ஒரு வயதானப் பெண்மணியைத் தவிர. ஏனெனில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை உகாந்தியர் கொன்று விட்டனர். இந்தியா இப்போது என்ன செய்தது? உகாந்தாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டது என்று கூப்பாடு போட்டது. தன்னைப் பாதுகாதுக் கொள்ள முடியாதக் கிழவியைக் கொன்றது பற்றி மூச்சுக் கூட விடவில்லை இந்தியா. என்ன வெட்கம்!
எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன்னால் நான் படித்த ஒரு கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு பயங்கரவாதியிடம் மூவர் அகப்பட்டுக் கொண்டனராம். ஒரு இந்தியர், ஒரு அமெரிக்கர், ஒரு இஸ்ரேலியர். அவர்களை கொல்ல முடிவு செய்த பயங்கரவாதி தத்தம் கடைசி ஆசையை கூறும்படி அவர்களை கேட்கிறார். இந்தியரும் அமெரிக்கரும் கடவுள் பிரார்த்தனை செய்ய ஆசைப்பட, இஸ்ரேலியரோ, பயங்கரவாதி தன்னை உதைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அவனும் அவ்வாறே செய்ய, பந்து போல ப்ரூஸ் லீ ஜம்ப் செய்து, குட்டிக்கரணம் அடித்து, தன் கைத்துப்பாக்கியால் பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விடுக்கிறார். இதை முன்னமேயே செய்திருக்கலாமே என அமெரிக்கர் கேட்க, அவ்வாறு செய்திருந்தால் இந்தியர் பயங்கரவாதியைக் கொன்ற குற்றத்துக்காக தன்னை ஐ.நா. பொதுச் சபை முன் இட்டுச் சென்றிருப்பார் என இஸ்ரேலியர் கூறுகிறார்.
இதை நான் படித்தபோது, ரொம்பத்தான் மிகைபடுத்திக் கூறுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், எண்டெப்பி விஷயத்தில் இந்தியா நடத்திய கூத்தைப் பார்த்ததும் மனம் மாறி விட்டது.
இஸ்ரேல் செய்தப் பசுமைப் புரட்சியின் தொழில் நுட்பத்தை இந்தியாவுக்குத் தர முன் வந்தது. அரபு நாட்டவர் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் இந்தியா அதை மறுத்தது. அதேபோல டேவிஸ் கப் போட்டியின் இறுதி ஆட்டம் இஸ்ரேலில் நடந்தது. நம் விஜய் அமிர்த்தராஜும் மற்ற வீரர்களும் சுலபமாக ஜெயித்திருக்க முடியும். ஆனால் நாம் போகாமல் இஸ்ரேல் வாக் ஓவரில் ஜெயித்தது.
இந்த அழகில் இஸ்ரேலின் முக்கிய எதிரியான எகிப்து அதற்கு ராஜரீக அங்கீகாரம் கொடுத்தது. அந்த நாடு தன் நலனுக்கேற்பச் செயற்பட்டது. ஆனால் இந்தியா? அதன் பிறகுதான் இஸ்ரேலுடன் தன் ராஜீய உறவுகளைப் பலப்படுத்தியது. என்ன வானமா இடிந்து விழுந்து விட்டது? முதலிலேயே செய்திருந்தால் நம் நிலைமை இன்னும் வலுவானதாக இருந்திருக்கும். பிறகு தேவையானால் அந்த உறவை அடக்கி வாசித்திருக்கலாம். அது ஒன்றுக்கும் இடமளிக்காமல் காரியம் செய்ததால் ஒரு பயல் நம்மை மதிக்கவில்லை.
இவ்வளவு ஆதரவு தெரிவித்தும் 1973-ல் மீண்டும் அவமானப்பட்டது. எண்ணை விலையை உயர்த்தி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே எண்ணை சப்ளை என்றன எண்ணை உற்பத்தி செய்த நாடுகள். அப்படி வெளியிட்ட லிஸ்டில் இந்தியா இல்லை. இம்மாதிரியாகத்தான் ஒரு கை ஓசையால் இந்தியா திரும்பத் திரும்ப அவமானத்தை சந்தித்தது.
அடுத்தப் பதிவில் இன்னும் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்
-
ஆலயக்கலை வகுப்புக்கும், சைவ வகுப்புக்கும் வந்தவர்களில் சிலர்
‘மரபுக்கவிதைகளை படித்துப் புரிந்துகொள்ளாமல் அடுத்தபடிக்குப் போகமுடியாது
போலிருக்கே’ என்று எனக்...
21 hours ago
15 comments:
இல்லை. அம்மாதிரி அமைப்பைக் கேள்விப் பட்டதில்லை. பதிவு என்னக் கூறுகிறது என்றுப் பார்த்து அதற்கு ஏதாவது கருத்து இருக்குமேயின் அதை எழுதுதல் நலம்.
சரி வந்ததுதான் வந்தீர்கள். நீங்கள் இடது சாரியா? உங்கள் எஜமானர் சோவியத் யூனியன் வாக்களித்துத் தன் சிஷ்யகோடிகளையும் ஐ.நா. சபையில் வாக்களிக்க வைத்ததால்தான் இஸ்ரேல் என்னும் அருமையான நாடு உருவானது. அதற்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
rajah simhan
I saw in your post questioning about universality of hinduism
here is the proof from Atharva Veda
""We are birds of the same nest. Wearing different skins, speaking different languages, believing in different religions, and belonging to different cultures - yet we share the same home, our Earth. Born on the same planet, covered by the same skies, gazing at the same stars, breathing the same air, we must learn to happily progress together or miserably perish together. For humans can live individually but can survive only collectively."
-Atharva Veda
I don't think anyother even come this close. Both against God and pro can live symbiotically only in India and is always tolerated.
I dont know much about history but I could relate some of the points mentioned in this blog entry to this article written by Mustafa El-Feki, former Egyptian ambassador to India about India and Israel getting together (written when Ariel Sharon visited India).
http://weekly.ahram.org.eg/2005/730/in1.htm
இஸ்ரஏலைப்பற்றிய தங்கள் கருத்து, என்னை மிகவும் கவர்ந்தது. கடந்த சில ஆண்டு காலமாக நான் இஸ்ரஏலில் தங்கிப் படித்து வருகிறேன்.
நரசிம்மராவின் அரசு செய்த நல்ல காரியங்களில் இஸ்ரஏலிய ஆதரவும் ஒன்று. பின்னர் வந்த BJP அரசு, அதை நல்ல முறையில் உறவு மேம்பட வைத்தது. இடது சாரிகளுக்கு இந்தியா முன்னேருவது ஏனோ பொருக்காது. ஆனா ஊனா என்றால், RSS VHP ஹிந்த்துவாவாதி, என்று கத்த ஆரம்பிப்பார்கள்.
அவர்கள் என்னமோ RSS, VHP ஹிந்துத்வா எல்லம் கெட்டவார்தைகள் போல் பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
போதாத குறைக்கு அவர்களின், Anti semitism வேறு.
இஸ்ரஏலுக்கு ஆதரவாக ஒரு வார்தை சொல்லி விட்டால் ஏதோ கொலைக்குற்றம் செய்தவனிடம் பேசுவது போல் ஏசுவார்கள்.
எந்த இடது சாரியும் பாலஸ்தீன தற்கொலைப் படை பற்றி பேச மாட்டான். அப்படியே பேசினாலும், அது ஏதோ அவர்கள் வேறுவழி இன்றி செய்வது போல் மாயயை உண்டாக்குவர். இங்கு வந்து பாருங்கள், தெரியும், எவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு, யூதர்களைக் கொல்வதில்.
இவர்களின் இன் நிலைப்பட்டைக் காண்கயில், இவர்களெல்லம் இந்தியாவின் உப்பைத்தின்று தான் வளர்ந்தார்களா என்று சந்தேகம் வருகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.
ஷங்கர்.
நீங்கள் இஸ்ரேலில்தான் இருக்கிறீர்களா? உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. இஸ்ரேலைப் பற்றி மொத்தம் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இஸ்ரேலில் இருப்பதினால் பொறாமையாக இருக்கிறதா? இதெல்லாம் டூ மச் டோண்டு சார் - அதுவும் இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி சொல்லுவது.
'நீங்கள் இஸ்ரேலில் இருக்கிறீர்களா? மகிழ்சியாக இருக்கிறது' என்று கூறியிருந்தீர்களேயானால், பொருத்தமாக இருந்திருக்கும்.
//Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. //
இந்த வரிகள் இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன். டெம்ப்ளேட்டில் மாற்றவும்.
டொண்டு சார்,
நீங்கள் Munich திரைப்படம் பார்த்துள்ளீர்களா?
Black Septemberஐ மைய்யமாக கொண்டு எடுக்கபட்ட படம்.
நீங்கள் அந்த படத்தை பார்த்து இருந்தால் அதை பற்றி ஒரு விமர்சனம் எழுத வேனும்.
//இந்தியாவின் உப்பைத்தின்று தான் வளர்ந்தார்களா என்று சந்தேகம் வருகிறது.
//
ஷங்கருக்கு இப்படி ஒரு சந்தேகமா?
மிட்ரோக்கின் தான் தெளிவாக எடுத்து காட்டிவிட்டாரே - இந்தியாவில் வாழும் அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் சோவியத்தின் கைகூழிகள் என்று.
சோவியத் உடைந்த நாள் முதல் சீனாவுக்கு சேவகம்.
பத்திரிக்கைகள், அரசு அதிகாரிகள், பிரதமர்கள், முதல் மந்திரிகள் இப்படி ரஷ்யாவின் உப்பை தின்று நிறைய பேர் இந்தியாவில் வளர்ந்தார்கள்.
இந்திய பத்திரிக்கைகள் எழுதுவதில் பாதி இடதுசாரி அதரவு நிலை இருப்பது அதனால் தானே!
வருடம் ஒரு முறை "பயிற்ச்சிக்காக" இந்திய கம்யூனிஸ்ட்டுகள் சீனா செல்வது வழக்கமான ஒன்று தான்.
இப்படிப் பாருங்கள் மாயவரத்தான் அவர்களே. எனக்கு இருக்கும் மொழி அறிவுக்கு ஐரோப்பாவோ, அமெரிக்காவோ போவது ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன, என்னிடம் பாஸ்போர்ட் கூடக் கிடையாது. ஆனால் நான் மேலே கூறிய இடங்களில் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அது ஒன்றும் விரும்பத் தகுந்ததாக இல்லை. ஏதாவது வெளிநாடு என்று தீர்மானித்தால் இஸ்ரேல்தான் கண் முன்னால் நிற்கிறது. அங்கு சென்று ஹீப்ரூ மற்றும் அரேபிய மொழிகள் கற்க ஆசை.
மற்றப்படி நான் இஸ்ரேலை விட அதிகம் விரும்பும் நாடு என் தாய்நாடுதான்.
இஸ்ரவேலர்கள் மேல் உள்ள எனது அன்பு பூர்வ ஜன்ம தொடர்பு போலத்தான் தோன்றுகிறது. இது பற்றி ஐந்தாம் பதிவில் எழுதியிருக்கிறேன். மீள்பதிவில் பார்த்துக் கொள்ளவும். இப்போதே கூடப் பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. //
இருந்து விட்டுப் போகட்டுமே, எதையாவது மாற்றி ஏதாவது ஆகிவிடப் போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முடிந்தால் பார்க்கிறேன், சமுத்ரா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
டொண்டு சார்,
நீங்கள் Munich திரைப்படம் பார்த்துள்ளீர்களா?
Black Septemberஐ மைய்யமாக கொண்டு எடுக்கபட்ட படம்.
நீங்கள் அந்த படத்தை பார்த்து இருந்தால் அதை பற்றி ஒரு விமர்சனம் எழுத வேனும்.
//
சமுத்ரா,
மியூன்கென் (munich தான்!) அதைப் பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன்...டோண்டு சார் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா! munich படத்துக்கு இங்கு பல எதிர்ப்புகள். இஸ்ரேலியர்களை கெட்டவர்களாக காட்டுகிறார் ஸ்பீல்பெர்க் என்று குற்றச்சாட்டு.
//
ஷங்கருக்கு இப்படி ஒரு சந்தேகமா?
//
அதை வெரும் கம்மியூனிஸ்டுகள் மட்டும் செய்வதில்லையே!! கம்மியூனிஸ்டுகள் அல்லாத பலர் இஸ்ரேலிய எதிர்ப்புக் கொள்கையய் விடாப்பிடியாக கடைபிடிக்கின்றனர். அதுவும் ஏன் என்று தெரியாமலேயே.
ஷங்கர்.
நன்றாகச் சொன்னீர்கள், பொலிடிகல்லி இன்கரெக்ட் அவர்களே. அதைத்தான் அசோக மித்திரன் அவர்களும் கூறினார். யூதர்களுக்கு நேர்ந்த கதி நமக்கு ஏற்படலாகாது என்பதில் உறுதியாக இருப்போமாக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
There is no point of left or right. But there are similarities in Parpinium and Zayonism. Both would boot polish the rich and powerful to secure their life.
//
Zionism த்துக்கு spelling கூடத் தெரியாதவர்கள், அடிக்கும் கம்மெண்ட்!!
politically_incorrect அவர்களே! மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
ஷங்கர்.
"மியூன்கென் (munich தான்!) அதைப் பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன்...டோண்டு சார் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா! munich படத்துக்கு இங்கு பல எதிர்ப்புகள். இஸ்ரேலியர்களை கெட்டவர்களாக காட்டுகிறார் ஸ்பீல்பெர்க் என்று குற்றச்சாட்டு."
ம்யுன்ஷென் படத்துக்கு விமரிசனம் எழுத எனக்கும்தான் ஆசை, ஆனால் அப்படத்தை நான் பார்க்கவில்லையே! நீங்களே அதை செய்து விடுங்கள் சங்கர நாராயணன் அவர்களே.
என்னுடைய நான்காம் பதிவுக்கு ஒரு பின்னூட்டமும் இல்லை இதுவரை. ஐந்தாம் பதிவு நாளைக்கு வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment