4/14/2006

ஒரு தமிழனின் பார்வை: எனக்கு யார் ரோல்மாடல்?

ஒரு தமிழனின் பார்வை: எனக்கு யார் ரோல்மாடல்?

மேலே சுட்டியுள்ள முத்து (தமிழினி)அவர்களின் இப்பதிவை நான் எனது தந்தையைப் பற்றி இட்ட அப்பா அன்புள்ள அப்பா என்றப் பதிவுடன் லிங்க் செய்ய நினைத்ததன் பலன், அந்த முயற்சியே தனிப்பதிவாக வந்து விட்டது. இம்மாதிரி தனிப்பதிவாக வந்ததையே நான் உணரவில்லை. திடீரெனப் பார்த்தால் என் இனிய நண்பர் நாட்டாமை அவர்கள் இட்டப் பின்னூட்டம் வந்திருக்கிறது. கூகள் டாக்கில் Nattamai has left a comment in your blog என்ற அறிவிப்பு மேலெழுந்ததும் முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தேன். பிறகு பார்த்தால் இந்தப் பதிவு.

முத்து அவர்கள் தன் தந்தையைப் பற்றி எழுதியிருந்தப் பதிவு நெஞ்சைத் தொட்டது. உடனே அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். அப்போது அவர் கூறினார், நான் என் தந்தையைப் பற்றிப் போட்ட பதிவுதான் அவருடைய இந்தப் பதிவுக்கு இன்ஸ்பிரேஷன் என்று. இரட்டிப்பு மகிழ்ச்சி.

நான் எதிர்ப்பாராத வண்ணம் தமிழ்ப் புத்தாண்டன்று என்னுடையப் புதுப்பதிவு ஒன்று வந்திருக்கிறது. நாட்டாமை மற்றும் முத்து (தமிழினி) எனக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வேறு தெரிவிக்கின்றனர்.

தமிழ்மண சக வலைப்பதிவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: தலைப்பை மாற்றப் போவதில்லை. ஏனெனில் இப்பதிவு அந்தத் தலைப்பில் தமிழ்மணத்தால் திரட்டப்பட்டுள்ளது, இனிமேல் தலைப்பை மாற்றினால் ஏதெனும் 404 அண்ட் 403 என்று நம்பர்கள் வரலாம். எதற்கு வம்பு?

9 comments:

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி நாட்டாமை அவர்களே. உங்களுக்கும் எங்கள் தரப்பிலிருந்து வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வல்லிசிம்ஹன் said...

sir. puthaandu nal vaazhthukkal yellaam nallathey nadakka vendukiren.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ஏழிசை நரஹரி அவர்களே. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,\
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் தினகர் அவர்களே. நேற்று இரவு 11 மணி வரை மொழிபெயர்ப்பு வேலை ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு. இப்போது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 11 ஸ்லைடுகள் அடங்கிய பவர் பாயிண்ட் கோப்பை மொழிபெயர்க்கும் வேலை. தமிழ்ப் புத்தாண்டன்று தமிழில் தட்டச்சு செய்யும் வாய்ப்பு.

அவ்வப்போது தமிழ்மணத்துக்கு வருகை. அனாமத்தாக இந்தப் பதிவு வந்ததைத்தான் நான் இங்கு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேனே.

வாழ்க்கை அற்புதமயமானது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருள்!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

தருமி said...

உங்கள் உள்ளங்கவர் கள்வன், அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருள் என்றும் உங்களோடு இருக்க --புத்தாண்டு வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி தருமி அவர்களே. தூய அன்னை மேரியும் அவர் கையில் தவழும் குழந்தை சேசுவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரியட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணியன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Prabhu said...

Iniya thamizh puthaandu vaazhthukkal ungalukum ungal veetaarukum.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி பிரபு அவர்களே,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தரப்பிலிருந்து இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது