3/02/2007

அசிங்கமெனக் கருதப்படும் தொழில், ஆனால் மகிழ்ச்சி அசிங்கமல்ல

அருமை நண்பர் ஜயகமல் அவர்கள் எனக்கு இன்று காலை இட்ட மின்னஞ்சலில் வந்த கட்டுரை என்னை இப்பதிவு போடச் செய்தது.

Filthy Rich Businesses, Want to be disgustingly happy? Start a disgusting business என்ற நீண்ட தலைப்பில் Geoff Williams என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை மிகவும் அருமை. இங்கு அதை முடிந்த அளவில் தமிழில் தருவேன்.

Jay Villemarette என்னும் மனிதர் எலும்புக் கூடுகளை சுத்திகரிக்கும் வேலை செய்பவர். இது அவருக்கு சாப்பாடு போடும் தொழில். சாப்பாடு என்ன விருந்தே தரும், தனம் தரும், செல்வம் தந்திடும் தொழில் என்பதிலே அவர் அடையும் மகிழ்ச்சி மிக உண்மையானது. செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்கிறார் அவர்.

வேலை ரொம்ப சுவாரசியமானது என்று அவர் கூறுவது நம்பத் தகுந்ததே. இன்று கொரில்லாவின் எலும்புகள், நாளை காண்டா மிருகம், இன்னொரு நாள் மனித எலும்புக் கூடு என்று வியாபாரம் செல்கிறது.

அப்படி இதில் ஏதேனும் விரும்பத்தகாதது உண்டென்றால் அவரைப் பொருத்த வரை மனித எலும்புக் கூட்டை சுத்தம் செய்வதுதான் என்கிறார் அவர். ஏனெனில் மனிதன் தன் வாழ்நாளில் கண்டதை உண்கிறான். பல உணவுப் பொருட்கள் வெவ்வேறு வகை கொழுப்புகளாக எலும்புகளில் படிகின்றன. கெட்டுப் போன உணவின் வாசனை அந்த எலும்புகளில் என்றும் கூறுகிறார்.

ஆகவே ஒரு மனித எலும்புக் கூட்டை சுத்தம் செய்ய 7500 அமெரிக்க டாலர்கள் கேட்கும் அவர் ஒரு கரடியின் எலும்புக்கூட்டுக்கு அவ்வளவு சார்ஜ் ஆகாது என்கிறார்.

இவரது இந்த வேலை, சாக்கடை சுத்தம் செய்யும் வேலை, குப்பை வாரும் வேலை ஆகியவை சாதாரணமாக அசிங்கம் எனக்கருதப்படுபவை. ஆனால் சரியாக நடத்தினால் பணம் அள்ளலாம். ஏனெனில் இவை மனித நாகரிகத்துக்கு மிக முக்கியமானவை. பணம் மட்டுமா அள்ளலாம்? இத்தொழில்களை சந்தோஷமாகவும் உணரலாம் என்பது Jay Villemarette அவர்களின் கட்டுரையிலிருந்து அறிய முடிகிறது. நாம் பெறும் சந்தோஷத்தை விட அதிக சந்தோஷம் அவர்கள் பெறலாம் என்றும் தெரிகிறது.

Skulls Unlimited International என்ற அவரது கம்பெனியின் பெயரே அதைக் குறிக்கிறது. இதில் unlimited என்ன வேண்டியிருக்கிறது என்றும் சிலர் கேட்கலாம். ஆனால் கூர்ந்து நோக்கின், அதன் நியாயம் புரியும். மியூசியம், மிருக மற்றும் மருத்துவ கல்லூரிகள் போன்றவைக்கு இவற்றின் தேவை மிகவும் அதிகம். எல்லாம் சந்தையை சரியாக படித்து தேவையை பூர்த்தி செய்யும் கலைதான்.

இவரைப் பொருத்தவரை எல்லாம் விளையாட்டாகவே ஆரம்பித்தது. ஒரு நாயின் மண்டையோட்டுடன் ஆரம்பித்த இவர் ஆர்வம் பல மிருகங்களின் மண்டையோடு மற்றும் எலும்புகள் என்று பரவி (ஒரு வேளை இவர் தாயார் "அடேய் கடங்காரா என்ன வேலை செய்யறே நீ? அந்த கருமாந்திரத்தையெல்லாம் தூக்கிப்போட்டு, கைகால் கழுவிவிட்டு உள்ளே வா சனியனே" என்று கூட திட்டியிருக்கலாம் என்று இந்த டோண்டு ராகவனுக்கு இப்போது தோன்றுகிறது), தற்சமயம் இவ்வளவு பெரிய பிசினசாக வளர்ந்துள்ளது.

தன் வேலை அசாதாரணமானது என்பதை Skulls Unlimited International அதிபர் உடனே ஒத்துக் கொள்கிறார். "என் மனைவிக்கு இது குறித்து முதலில் தினமும் அழுகைதான்" என்று அவர் நகைச்சுவையாக குறிப்பிடுகிறார். (நகைச்சுவையாக என்று நம்பிக் கொள்ளத்தான் வேண்டும்). ஆனால் அவர் என்னமோ சந்தோஷமாகத்தான் உள்ளார்.

Mike Rowe என்பவர் Dirty Jobs என்னும் நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் தொகுத்து அளிப்பவர். அவர் கூறுகிறார்: இந்த Villemarette அவர்களைப் போலவே பலரும் உள்ளனர். அசிங்கம் என கருதப்படும் தொழிலை செய்தாலும் அவர்கள் அதில் சந்தோஷமாகவே உள்ளனர்".

என்றைக்கு எந்த புது அனுபவம் கிட்டும் என்று தெரியாத நிலைதான் இமாதிரியான வேலைகள் செய்பவர்களுக்கு ஒரு த்ரில்லை கொடுக்கிறது என்றும் ஒரு கருத்து உள்ளது. புதிதாக கற்பதால் நகைச்சுவை உணர்வும் அதிகரிக்கிறது என்றும் இக்கட்டுரை கூறுகிறது. எப்படி? அதை இப்போது பார்ப்போம்.

இப்போது நான் எனது அபிமான அமெரிக்க, யூத, விஞ்ஞான, நகைச்சுவை எழுத்தாளர் இஸாக் அசிமோவைப் பற்றி கூறுவேன். நான் எனது இப்பதிவில் குறிப்பிட்ட அதே அசிமோவ்தான் ஐயா. அவர் எழுதிய சயன்ஸ் ஃபிக்சன் பற்றி பலரும் அறிவர். ஆனால் ஜோக் புத்தகம் கூட எழுதியுள்ளார். அதிலிருந்து இப்பதிவுக்கு ஏற்ற ஒரு ஜோக்.

சாவு காரியங்களை நடத்தவென்று அமெரிக்காவில் அண்டர்டேக்கர்கள் (undertakers) உண்டு. அப்படிப்பட்ட ஒருவரிடம் இந்த வாலிபன் பயிற்சியாளராகச் சேர்ந்தான். அவன் வீட்டாருக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. "எனது கிளப்பில் என் பிள்ளை என்ன வேலை செய்கிறான் என்று என் சினேகிதிகள் எமிலியும் சாராவும் கேட்கிறார்களே, என்னவென்று சொல்வது" என அன்னை அலுத்து கொள்ள, "எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான், ஐயா இப்படி துள்ளுகிறார்" என்று பேப்பரை புரட்டிக் கொண்டே தந்தை கூற என்று ஒரே கலாட்டா.

அந்த வாலிபன் முதல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து தந்தையிடம் "இந்த வேலை ரொம்ப சுவாரசியமாக உள்ளது" என்று கூற, அவரோ 'ஹூம்' என பெருமுச்சு விடுகிறார். "இல்லையப்பா, நான் சொல்றதை கேளுங்கள்" என்று பையன் மேலும் சொல்கிறான்.

"நான் இப்போது வேலை செய்வது ஒரு சிறிய நகரம். அதில் இரண்டு பணக்காரக் குடும்பங்கள். ஒன்றுக்கொன்று ஜன்மப்பகை. அவற்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆடவன் ஒருவனும் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த நங்கை ஒருத்தியும் காதல் கொண்டனர். ஆனால் தங்கள் காதல் நிறைவேறாது என்ற விரக்தியான நிலமைக்கும் வந்தனர். ஆகவே அவர்கள் அந்த நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பனிரண்டாவது மாடியில் அறை ஒன்று எடுத்துக் கொண்டு கடசி முறையாக கூடினர். அந்த நிலையிலேயே விஷம் அருந்தி பிணமாயினர். இப்போது பிரச்சினை நான் பயிற்சி பெறும் நிறுவனத் தலைவரிடம் வந்தது. அப்பிணங்கள் ஒன்றுக்கொன்றுடன் உடலால் கூடிய நிலையில் இருந்தன. அவற்றைப் பிரித்து, தனித்தனியாக அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்புவிக்க வேண்டும், தனித்தனியாக சடங்குகள் செய்து வெவ்வேறு இடுகாடுகளில் புதைக்க வேண்டும். ஆனால் பத்திரிகைகளுக்கு ஒன்றும் தெரியக்கூடாது.

தலைவர் என்னை மட்டும் கூட்டிக் கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்றார். எங்களை தனி லிஃப்டில் 12 வது மாடிக்கு அழைத்து சென்றார்கள். அறைக்குள்ளே நானும் தலைவர் மட்டும் பிரவேசித்தோம். கண்ட காட்சி மனதையே உருக்கிவிட்டது. இரு உடலகளும் ஒன்றை நோக்கி ஒன்று படுத்த நிலையில் இணைக்கப்பட்டிருந்தன. இந்த அழகில் ரிகர் மார்ட்டிஸும் (ரிகர் மார்ட்டிஸ் என்றால் என்ன என்பதை ரஷ்யா ராமனாதனிடம் கேட்கவும் - டோண்டு) ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது போல இருந்தது. ஆனால் தலைவர் அசரவில்லை. தனது வாக்கிங் ஸ்டிக்கை இரு உடல்களுக்கும் இடையில் சொருகினார். பிறகு 1, 2, 3 என்று எண்ணி விட்டு கில்லியை கீழே வைத்து தாண்டை ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அடிப்பது போல வாக்கிங் ஸ்டிக்கை பட்டென்று அடித்தார். பளக் என்று உடல்கள் பிரிந்தன".

தன்னையும் மீறிய சுவாரசியத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த தந்தை ஆர்வத்துடன் குறுக்கிட்டார். "அப்பாடா இந்த ரிகர் பிரச்சினையாவது தீர்ந்ததே" எனப் பெருமூச்சு விட்டார். "இல்லையப்பா நாங்கள் சென்றது தவறான அறைக்கு" என்று விளம்பினான் பையன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

30 comments:

Anonymous said...

இதானே வாணாங்கறது. சாக்கடை வாரறவன் அதிலேயே இருக்கணும்னுதானே நெனக்கிறீங்க? ஏன் சார் இந்த புத்தி?

செந்தில்

Gopalakrishnudu(#07148244463938149692) said...

//இல்லையப்பா நாங்கள் சென்றது தவறான அறைக்கு"//

Ha ha ha ha ha.

Fantastic joke.

Goplakrishnudu

dondu(#11168674346665545885) said...

இல்லை செந்தில் அவர்களே. நான் கண்டிப்பாக அப்படி கூறவில்லை. எக்ஸ்னோரா அமைப்பைப் பாருங்கள். லாபம் ஈட்டவில்லையா? எவ்வளவு பேருக்கு அதனால் வேலை என்று தெரியுமா? சுலப் சவுச்சாலயை பாருங்கள். அதுவும் நல்லபடியாக நடக்கும் நிறுவனம்தானே?

அகாதா க்ரிஸ்டியின் நாவல் 4.50 From Paddington. அதில் துப்பறிபவராக மிஸ். மார்ப்பிள் என்னும் 70 வயது பெண்மணி வந்து தூள் கிளப்புவார். அக்கதையில் லூசி என்ற பெண்மணி கணிதத்தில் எம்.ஏ. படித்தவர். அவர் மார்க்கெட்டை கூர்ந்து கவனித்து எடுத்த வேலை ஹவுஸ்கீப்பிங்தான். அதில் நல்லபடியாகச் செயல்பட்டு வந்ததில் அவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட். அவரை புக் செய்ய பெரிய கியூவே இருந்தது. சில நாட்களுக்கு மட்டும்தான் ஒவ்வொரு அசைன்மெண்டுகளும் எடுத்து கொள்வார். எங்கும் முழுநேர வேலைக்கு போக மாட்டார். என்னை மாதிரி ஃப்ரீலேன்ஸ் என்று வைத்து கொள்ளுங்களேன். அமெரிக்காவில் ஒரு பிளம்பர் அல்லது கொத்துவேலை செய்பவர் பேராசிரியரை விட அதிகம் சம்பாதிப்பார் என்பதை அறிவீர்களா?

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களது மதிப்பு உங்களுக்கே தெரிய வேண்டும். மலிவாக விலை போய்விட கூடாது.

அதைத்தான் இப்பதிவின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட கட்டுரை காட்டுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Darren said...

//இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களது மதிப்பு உங்களுக்கே தெரிய வேண்டும். மலிவாக விலை போய்விட கூடாது//

நல்ல கட்டுரை

Anonymous said...

நாலு நாளில் ஊரு நாறாமல் காப்பவர் மன்ற உருப்பினர் கூறியது

/* எங்க தொழிலை பற்றி சரியாக சொன்னிங்க சாமி. படிப்பு இல்லை எதோ எங்க பொழப்புக்காக செய்யுரொம், ஆனா மத்தவங்களுக்கு உதவியா இருக்குன்னும் போது சந்தோசம்தான். புள்ளைங்கள படிக்க வெச்சிட்டா அவுங்க முன்னுக்கு வந்துருவாங்க. அரசு ஒழுங்கா பள்ளிகூடம் நடத்த மாட்டேன்குது, அதான் ரொம்ப கவலையா இருக்கு.

எங்கள வெச்சி அரசியல் பன்னி வோட்டு வாங்க பாக்கிராங்க சில அரசியல்வியாதிகள் மற்றும் கட்சிகள். இந்த அரசியல்வாதிகள மட்டும் நம்பவே நம்பாதிங்க அய்யா! * \


-உருப்பினர்
நாலு நாளில் ஊரு நாறாமல் காப்பவர் மன்றம்

dondu(#11168674346665545885) said...

//எங்க தொழிலை பற்றி சரியாக சொன்னிங்க சாமி.//
ஏன் இந்த சாமியெல்லாம் கூறுகிறீர்கள். வேண்டாமே. இவ்வளவு பெரிய சக்தி உங்களிடம் உள்ளது. நாலு நாட்கள் உங்கள் வேலையில்லை என்றாம் ஊரே நாறிவிடும். பின்பு ஏன் தேவையில்லாது மரியாதை?

பிள்ளைகளை படிக்க வைக்கவும். அதே சமயம் இத்தொழிலில் அதிக வருமானம் வருமா என்பதையும் பார்க்கவும். யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்ற மனபாவம் முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நம்மூரில் இவர்கள் ஸ்ட்ரைக் பண்ணினால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்ல?

dondu(#11168674346665545885) said...

//நம்மூரில் இவர்கள் ஸ்ட்ரைக் பண்ணினால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்ல?//
ஸ்ட்ரைக் செய்தால் மட்டும் போதாது. கடைசி வரை அதை நடத்தும் மனவுறுதியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அரைகுறையாக போகும் ஆபத்து உண்டு. அது அவர்களுக்குத்தான் தீங்கு.

முதலில் அவர்கள் தங்களை குறைவாக மதிப்பிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். அவமரியாதைகளுக்கு நிலைமைக்கேற்றமாதிரி பதிலடி தரவேண்டும்.

போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

The entire concept of twist lies with the last sentence,very humorously!
subramanian.s.k.

dondu(#11168674346665545885) said...

//The entire concept of twist lies with the last sentence,very humorously!//
அதுதான் இஸாக் அசிமோவ். இன்னும் அவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு போட வேண்டும்.

ஜோக்குகளில் பார்வைக் கோணம் திடீரென்று மாறுவதுதான் பஞ்ச் லைன் என்பதுதான் அவரது அந்த புத்தகத்தின் அடிநாதம். இந்த ஜோக்கிலும் அந்தப் பார்வைக் கோணம் அற்புதமாக மாறுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

கட்டுரை எப்படியோ. ஆனா கடைசியாய் வந்த நகைச்சுவை :)

//நம்மூரில் இவர்கள் ஸ்ட்ரைக் பண்ணினால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்ல?//

பல இடங்களில் பெரிய வித்யாசமொண்ணும் தெரியாது.

dondu(#11168674346665545885) said...

//பல இடங்களில் பெரிய வித்யாசமொண்ணும் தெரியாது.//

அதாவது சரியா வேலை செய்யலைன்னு சொல்றீங்க. அதுக்கு முக்கியக் காரணமே அடிமாட்டு அளவில் தரப்படும் சம்பளமும், செய்யப்படும் அவமரியாதையும்தான். அதை சரி செய்யத்தான் இப்பதிவில் ஒரு யோசனை வைக்கப் படுகிறது.

எந்தச் சேவையையும் அளிக்கும் விததில் அளித்தால் அதன் மதிப்பு கூடும். உதாரணத்துக்கு கிராமங்களில் நாவிதராக இருந்து சில படி அரிசிகள் பெற்று செல்பவர்கள் நிலைக்கும் பியூட்டி பார்லர்கள் நடத்துபவர்கள் பொருளாதார நிலைக்கும் உள்ள வித்தியாசத்தையே பாருங்கள். அதே போல கிராமத்து வண்ணார்களுக்கும் நகரத்தில் டிரை கிளீனிங் நடத்துபவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தெருவோரம் அமர்ந்து வேலை செய்யும் சக்கிலியருக்கும் பாட்டா கம்பெனிக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு எல்லாமே கூர்ந்து கவனிக்கத் தக்கவை.

இப்போது இரட்டை தம்ளர் முறை சம்பந்தமாக நான் இட்ட இப்பதிவைப் பாருங்கள். http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jay said...

"அதுக்கு முக்கியக் காரணமே அடிமாட்டு அளவில் தரப்படும் சம்பளமும், செய்யப்படும் அவமரியாதையும்தான். அதை சரி செய்யத்தான் இப்பதிவில் ஒரு யோசனை வைக்கப் படுகிறது.

எந்தச் சேவையையும் அளிக்கும் விததில் அளித்தால் அதன் மதிப்பு கூடும்."

இந்தியாவில் இந்த வேலைக்கு சம்பளம் குறைவுதான், ஆனால் இந்தியாவில் எல்லாத்துக்குமே சம்பளம் குறைவு, ஒரு வேள்ளகாரன் சம்பளத்தில் இங்க பத்து சாஃப்டுவேர் இன்ஜினியரை வேலைக்கு வெக்கிரான்.

சரி அத விடுங்க சார். வேற விஷியத்துக்கு வருவோம், மான்புமிகு ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மாநகராட்சியின் குப்பைகள் அகற்றும் பணியை தனியார்மையம் ஆக்கினார். ஓனிகஸ் என்ற நிறுவணம் இந்த பணியை ஏற்றுகொண்டது. இதில் வேலை செய்பவர்க்கு சம்பளம் குறைவாக இல்லாமல் சுமாராக இருந்தது. ஆனால் இவர்களுக்கு அவமரியாதை இல்லாமல் ஒரளவுக்கு மரியாதை உள்ளது. ஏன்? அளிக்கும் விததில் அளித்ததால், ஒழுங்கான யுனிஃபாம் உடை, கை கிளவுஸ் போன்றவை etc. பயன்படுத்தி பணி செய்கின்றனர். வேலையும் சுத்தம், மக்களுக்கும் நிம்மதி.

ஆனால் என்னதான் செய்தாலும் சம்பளம் மேலை நாடுகளின் ஆள்வுக்கு உடனே உயாராது. ஏன்? 'இது போன்ற வேலைகளுக்கு இந்தியாவில் தேவையை விட அதிகமாக அளிப்பு உள்ளது, அதனால் குறைவான் ஊதியம்'. வேளிநாடுகளில் இது தலைகீழ்.

சரி வேளிநாடுகளில் ஏன் தலைகீழ்?

அங்கு படிப்பறிவு (லிட்ரெசி ரேட்) 99%. இங்கு 59%.இங்கு எப்படி படிப்பறிவை உயர்த்துவது?

அதற்கு பள்ளிகள் வேண்டும்.

அது இந்தியாவில் இல்லையா?

இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று A School , இரண்டு B Schoolஅதென்ன A School, B School?

Aவில் படிப்பு இலவசம், ஆனாலும் ரூ.1500 - 4000 செலவு. இதில் படித்தால் எல்லோரும் முழுமையாக தேர்ச்சி பேற முடியாது. பாதி பேர் அப்பப் அப்பிட் அயிடுவாங்க.

Bயில் படிக்க கைல காசு வேண்டும், கிட்டதட்ட அதே ரூ.1500 -4000 செலவு. இதில் பெரும்பாலும் தேர்ச்சி பேற்றுவிடுவர்.

எதனால A இப்படி மோசமா இருக்கு?

Aவில் ஆசிரியர்கள் வகுப்பரைக்கு வருவதில்லை. நடத்தாவிட்டாலும் சம்பளம். No Accountabilty. Unionism

இப்ப A எது B எதுன்னு தெரியுதா?

A - அரசு பள்ளி, ஒரு மாணவனுக்கு சுமார் ரூ.4000 வரை செலவு செய்தும் படிக்க வைக்க முடியவில்லை.

B - தனியார் பள்ளி.

அரசு பள்ளி செலவு செய்வது பெரும்பாலும் வீனாக போகிறது. அரசு பள்ளிகள் இப்படி உருப்படாத நிலைமையில் இருப்பதால், வேறு வழியின்றி தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். இந்தியாவில் 53% குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர்.

தனியார் பள்ளி ப்டிக்க வைப்பது மிகவும் கஷ்டம் தானே?

ஆம், சராசரி மனிதனுக்கு கடினம்தான்.வேறு வழி என்ன?

அரசு பள்ளிகள் கட்டி பணத்தை வீனடிப்பத்ற்கு பதிலாக இதை பெற்றோர், மாணவர் கைகளில் கொடுத்துவிட்டால் அவர் அவர் தேர்ந்தெடுத்து நல்ல பள்ளியில் செரலாம், கல்வி கற்கலாம்.

அதனால்தான் அரசை 'Fund Students not Schools' என்று வலியுருத்த வேண்டும். பிறகு எல்லொருக்கும் நல்ல கல்வி கிடைக்கும், கல்வியின் பயன் கிடைக்கும். ஏற்றத்தாழ்வுகள் குறையும், ஜாதி ஓழியலாம்!

====================================================

மேலும் படிக்க

http://schoolchoice.in/choice/index.php?p=11

http://schoolchoice.in/choice/index.php?page_id=9

http://schoolchoice.in

http://www.swaminomics.org/et_articles/et20040601_money_cant_teach_kids.htm

http://www.swaminomics.org/articles/20021103_lion_rabit.htm

http://www.swaminomics.org/articles/20021124_asen.htm

http://timesofindia.indiatimes.com/Things_that_matter/articleshow/322660.cms

dondu(#11168674346665545885) said...

//இந்தியாவில் இந்த வேலைக்கு சம்பளம் குறைவுதான், ஆனால் இந்தியாவில் எல்லாத்துக்குமே சம்பளம் குறைவு,..//
அவ்வளவு சிம்பிள் இல்லை. இந்திய சுழலுக்கே இந்த கஷ்டமான வேலையின் சம்பளம் அடிமாட்டு ரேட்தான். ஆனால் நீங்கள் சொன்னிர்களே, அது போல, அளிப்பு மிக அதிகம். ஆகவே இந்த நிலை.

இதற்கு ஒரே வழி வேறு நல்ல வேலைகளுக்கும் வழிபார்க்க வேண்டியதுதான்.

இங்குதான் நாடார்களின் உதாரணம் வருகிறது. அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்பாட்டுடன் உயர்த்திக் கொண்டனர். அதே சமயம் வணிகத்தில் அதிக கவனம் செலுத்தினர். இப்போது மளிகை வியாபாரம் அவர்கள் கையில். ஒரு பேங்கே திறந்துள்ளனர். அவர்கள் படிப்புக்கு நேரத்தை அதிகம் செலவழிக்கவில்லை. இந்த மாடலும் கவனம் கொள்ளத்தக்கது.

நாடார்கள் முன்னுக்கு வந்ததற்கு முக்கிய காரணங்கள் உழைப்பு, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, தங்களுக்குள் ஒற்றுமை, வியாபார நாணயம் ஆகியவைதான்.

படிப்பும் முக்கியம் ஆனால் நான் கூறியதையும் கவனிக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<--- போல, அளிப்பு மிக அதிகம். ஆகவே இந்த நிலை. --->
எல்லாவற்றுக்கும் இதுதான் காரணம். எல்லாமே சப்ளை டிமாண்டைப் பொறுத்துதான்.

Jay said...

last 4 links are broken. Here are the links in same order.

1. Money can't teach kids to read & write
The Economic Times, June 01, 2004
http://tinyurl.com/34xzb4

2.A lion’s looks, a rabbit’s liver
The Times of India, November 3, 2002
http://tinyurl.com/36x6qv

3.Amartya Sen revisited
The Times of India, November 24, 2002
http://tinyurl.com/2wqvlo

4.Capitalism and our schools
GURCHARAN DAS - TOI
http://tinyurl.com/2jt7hu

Have a look at Schoolchoice.in. You can contribute to them in many ways not just money. Please do visit these links .

http://schoolchoice.in/choice/index.php?p=11

http://schoolchoice.in

http://schoolchoice.in/choice/index.php?page_id=9


Thanks for listening

Muse (# 01429798200730556938) said...

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களது மதிப்பு உங்களுக்கே தெரிய வேண்டும். மலிவாக விலை போய்விட கூடாது.

சரியாகச் சொன்னீர்கள்.

விஷயம் தெரியாத ப்ரொஃபஸரை விட கக்கூஸை தூய்மையாக வைத்திருக்கும் பணியாள் மேன்மையானவர். அப்படிப்பட்ட ப்ரொஃபஸரைவிட டாய்லட் தூய்மை செய்பவருக்கு சம்பளம் அதிகம் கொடுக்கவேண்டும். மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கவேண்டும்.

சமுதாயத்தின்மீது அக்கறை உள்ளவர்களாக என்ஜிஓ நடத்தி பிழைப்பு நடத்துபவர்களைவிட, சுயவிளம்பர வலைப்பதிவு பகுத்தழிவு கோத்திரத்தாரைவிட, சமுதாயமும் அதிலுள்ள அத்தனை பிரிவுகளும் முன்னேற தாங்கள் சொல்லிவரும் அறிவுரைகள் மதிப்பு வாய்ந்தவை. என்ன செய்வது? உங்களைப்போல உருப்படியான யோசனை சொல்லுபவர்களைவிட வெறுமே ஓலம் போடும் ஜல்லிகளுக்கு அந்த ஓலத்திற்காகவே காசும், மரியாதையும் கிடைக்கிறது.

யதார்த்தவாதி பொது ஜன விரோதி.

dondu(#11168674346665545885) said...

நன்றி வினோத் துவா. பீட்டாவுக்கு மாறிவிட்டீர்கள் போலும். உங்கள் டிஸ்ப்ளே பெயரை Muse(#01429798200730556938) என்று மாற்றிக் கொள்ளவும். பழைய எண் செல்லுபடியாகாது. நான் சொல்கிற மாதிரி போட்டால்தான் எலிக்குட்டி சோதனை அர்த்தத்துடன் இருக்கும்.

//சமுதாயமும் அதிலுள்ள அத்தனை பிரிவுகளும் முன்னேற தாங்கள் சொல்லிவரும் அறிவுரைகள் மதிப்பு வாய்ந்தவை. என்ன செய்வது? உங்களைப்போல உருப்படியான யோசனை சொல்லுபவர்களை விட..//
உங்களுக்கே இது ஓவரா தோணல்லியா? :))) இருந்தாலும் என் மேல் இவ்வளவு அன்பு வைத்துருப்பதற்கு மிக்க நன்றி.

நெகோஷியேஷன் செய்யும்போது எதிராளிக்கும் நம்மைப் போலவே ஐயங்கள், பயங்கள் எல்லாம் உண்டு என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

Will change the blogger ID soon. Thank you very much for pointing this one.

To me many of your suggestions seem really valuable.

For example, the following one is more important for a practical life:

நெகோஷியேஷன் செய்யும்போது எதிராளிக்கும் நம்மைப் போலவே ஐயங்கள், பயங்கள் எல்லாம் உண்டு என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.

dondu(#11168674346665545885) said...

ம்யூஸ் அவர்களே, இந்த நெகோசியேஷன் விவரத்தை வேறு காண்டக்ஸ்டில் எனக்கு சமீபத்தில் 1974-ல் விளக்கியவர் எனது நேர் மேல் அதிகாரி வீரப்பன் அவர்கள். அவர்களைப் பற்றி எனது இன்னொரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன்.

"நான் திரு. வீரப்பன் என்ற உதவி பொறியாளரின் அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளனாகச் சேர்ந்தேன். அங்கு மொத்தம் 4 இளநிலைப் பொறியாளர்கள். வீரப்பன் அவர்கள் எனக்கு பல உபயோகமான விஷயங்களைக் கற்றுத் தந்தார். அவற்றில் முக்கியமானது மற்றவருடன் வாதம் புரியும்போது மனதில் பயம் இருப்பினும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான். முக்கியமாக சிவில் தரப்பில் ஸ்லாப் போடும் நேரத்தில் எங்களுக்கு நெருக்கடி வரும். அந்த நேரம் பார்த்து எங்கள் எலெக்ட்ரிகல் காண்ட்ராக்டர் சுணங்கிவிட்டால் ரொம்பக் கஷ்டமாகிவிடும். நாள்கணக்கில் சிவில் தரப்பில் முன்னேற்றம் இருக்காது. திடீரென நினைத்துக் கொண்டு விறுவிறுவென்று வேலை நடந்து ஸ்லாப் கம்பி கட்ட ஆரம்பிப்பார்கள். அதாவது இனிஷியேடிவ் அவர்களிடம்தான் இருந்தது. எங்களை மிரட்ட ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் வீரப்பன் அவர்கள் வீறு கொண்டு எழுவார்.

அவர்கள் ஒரு கடிதம் குறைகூறி எழுதினால் இவர் 4 கடிதங்கள் திருப்பி எழுதுவார். அவர்கள் வீக் பாயிண்டுகளாகப் பார்த்து தாக்குவார். அப்போது என்னிடம் ஒருமுறை கூறினார், அதாவது நமக்கு பயம் இருப்பது போல எதிராளிக்கும் இருக்கும். ஆகவே சீறவேண்டிய இடங்களில் சீறவேண்டும் என்பதே அது".
பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/cpwd-3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jay said...

"சமுதாயத்தின்மீது அக்கறை உள்ளவர்களாக என்ஜிஓ நடத்தி பிழைப்பு நடத்துபவர்களைவிட"

நீங்க எந்த என்.ஜீ.ஓ'வை பத்தி சொல்லுரிங்க மியுஸ் அவர்களே.

பொன் வானவில் said...

"சீறவேண்டிய இடங்களில் சீறவேண்டும்"

இந்தக் கருத்தில் எனக்கு மிகவும் உடன்பாடு உண்டு டோண்டு அவர்களே. சரியாகச் சொன்னீர்கள். இந்தக் காலத்தில் அமைதியாக இருந்து விட்டால் பலர் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்துக் கொள்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேராசியரியர் சொன்ன கருத்து: "சாலையை கூட்டும் வேலை செய்தாலும் அதை செம்மையாகச் செய்ய வேண்டும்."

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராஜாமணி அவர்களே. தமிழ் பதிவுலகத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன் வானவில் said...

நன்றி. ஆனால் விரும்புகின்ற அளவுக்கு எழுத முடிவதில்லை, படிக்கவும் முடிவதில்லை. அந்த ஒரு வருத்தம் தான். உங்கள் அனுபவக் கதைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

Muse (# 01429798200730556938) said...

என் ஜி ஓ தொழிலால் லாபம் சம்பாதிக்கும் பெரும்பாலான பகுத்தழிவுவாதிகள், கம்யூனலிஸவாதிக்களைதான் சொன்னேன் ஜே அவர்களே.

Jay said...

மறுமொழிக்கு நன்றி ! சரியான விளக்கம் மியுஸ்

Anonymous said...

டோண்டு ராகவன், இது போல நிறைய பதிவு போடுங்கள் ்.சூப்பரா இருக்கு!

bala said...

//அசிங்கமெனக் கருதப்படும் தொழில்,ஆனால் மகிழ்ச்சி அசிங்கமல்ல//

டோண்டு அய்யா,

ரொம்ப கரெக்டா சொல்லியிருக்கீங்கய்யா.
எங்க புரட்சிகர ம க இ க கட்சியின் டாப் லீடர்ஸ்,ஏழை மக்களிடமிருந்து சந்தா வசூல் செய்து,தினம் சில்லி பீஃப் சாப்பிட்டு,சாராயம் குடித்து,எம் மக்கள் கையில் மலம் கொடுத்துவிட்டு கும்மாளம் போடுகிறார்கள்.அவங்க செய்யற தொழில் என்னமோ கேவலம் தான்.ஆனா மகிழ்ச்சி,அது நிசம்,அசிங்கமல்ல.அட்லீஸ்ட் அவங்க அதை அசிங்கமா நினைக்கல.ரொம்ப கமிட்மென்ட்டோட தொழில் செய்யறாங்க.

பாலா

K.R.அதியமான் said...

dondu sir,

one correction about the Nadar community. They are maintaining and
running excellent schools and collages for many many years all over the South. From being a marginalised caste in the 19th cent
they have come up the hard way, shunning caste clashes. migrated to all over TN, pioneered into
groceries and trade.hard working and ambitious, they have prospered in many fields. they have a good and positive sense of community. until recently the nadars intermarried with nadar christians(converted). it was common to find daughter-in-lwas from chritian and hindu nadars in the same family !

their sense of unity and ambitious
determination reminds us of Jews and Brahmins. Hat's off to their
achivements in less than 70 years.
If only the other castes follow them in their development actions and path, it would be wonderful..

by the way their achivements are not due to the leadership of Kamaraj. they started long before his period. and Kamaraj is wrongly being projected as a leader of
nadars alone. he was a mass leader
of all TN and India...

anbudan
athiyaman.blogspot.com

Anonymous said...

டோனண்டு சார்!! பலருக்கு முதுகெலும்பு இல்லை என்கின்றார்கள். இவருடைய முகவரியை தெரிந்தால் நம்ம அ.தி.மு.க அரசியல்வாதிகளும் வாங்கிக் கொள்வார்களே!

புள்ளிராஜா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது