இப்பதிவின் ஐந்தாம் பாகத்துக்கு செல்லும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். நேருவின் திருமகள் இந்திரா காந்தி அவர்களின் லெகசியை இப்போதெல்லாம் இந்திய அரசு குடும்ப திருச்செல்வர் ராகுல் காந்தி நன்றாகவே உணர்த்தி வருகிறார். எப்படி? இசுலாமிய செண்டிமெண்டை வைத்து நாட்டைத் துண்டாடியவர்களுக்கு செருப்படி கொடுப்பது போல பாக்கிஸ்தானை இரண்டாக பிளந்தது தன் பாட்டி என்று பெருமிதப்பட்டு பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷுடனான நமது உறவை ஓகோ என்ற லெவலுக்கு உயர்த்தியச் செம்மல் இவரே. அவர்தான் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாம். எங்கு அடித்து கொள்வது? சரி அதை சரியான தருணத்தில் கவனிப்போம். இப்போது நமது வரிசைக்கு செல்வோம்.
1969-மே மாதத்திலிருந்து 1971 மார்ச் வரை
மே மாதம் 3-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் மறைந்தார். இந்தச் சம்பவம் இந்திய சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயலில்தான் காங்கிரசின் உட்கட்சிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்திரா காந்திக்கு சஞ்சீவரெட்டி குடியரசுத் தலைவராவதில் விருப்பம் இல்லை. ஆனால் மற்ற தலைவர்கள் பெங்களூரில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெரும்பானமை பலத்தில் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். அவர் பெயரை இந்திரா காந்தியே பிறகு முன்மொழிய வேண்டியதாயிற்று.
இது இந்திரா அவர்கள் மனதை மிகவும் உறுத்தியிருந்திருக்கிறது. தற்காலிக ஜனாதிபதியாக இருந்த துணை ஜனாதிபதி வி.வி. கிரி அவர்களும் தானே ஜனாதிபதியாகலாம் என்ற தனது எண்ணத்தில் மண் விழுந்தது கண்டு மனம் புழுங்கினார். ஆகவே அவர் சுயேச்சையாக தேர்தலுக்கு நின்றார். கிரியை ஆதரிக்க முடிவு செய்தார் இந்திரா காந்தி. அது பற்றி பிறகு.
காமராஜ் அவர்களும் ஒதுக்கப்பட்டார். இப்போது மெதுவாக இந்திரா தனது அரசியல் நகர்வுகலை நிகழ்த்தத் துவங்கினார். அப்போதுதான் மன்னர்களின் மான்யத்தில் கை வைத்தார். ஒரேயடியாக அவற்றை ஒழித்தார். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல சுதேசி மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்கள் பிரிட்டிஷாரின் செல்லப் பிள்ளைகள். சுதந்திரம் வந்த சமயத்தில் பிரிட்டன் அம்மன்னர்களுடன் தான் போட்ட ஒப்பந்தங்களை ஒரு தலை பட்சமாக செல்லாக்காசாக்கி விட்டு பாக்கிஸ்தானுடனோ அல்லது இந்தியாவுடனோ சேருங்கள் அல்லது முடிந்தால் தனியாக இருந்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு பைய நழுவி விட்டது. பிறகு படேல் அவர்கள் பாடுபட்டு 600க்கும் மேலான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கச் செய்தார். நேரு தன்னால் ஆன உதவியாக காஷ்மீர் விஷயத்தை சொதப்பி இன்னும் அது நமக்கு தலைவலியாக இருந்து வருவதை நான் முதல் பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
படேல் அவர்கள் மன்னர்களுக்கு மானியம், அந்தஸ்து எல்லாம் தர ஏற்பாடு செய்து, இந்தியாவில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தார். அந்த மானியங்களும் மன்னர்களது ஒவ்வொரு தலைமுறையும் வயதுக்கு வரும்போது குறையும் அளவிதான் கணிக்கப்பட்டிருந்தது. ஆக, தானாகவே மறைந்திருக்க வேண்டிய இதை இந்திரா அவர்கள் திடீரென வெட்டினார். இதனால் அரசுக்கு மிச்சம் ஆனது என்று ரொம்பவெல்லாம் இல்லை. இந்தியாவின் வாக்கு நம்பிக்கையுரியதல்ல என்ற அவப்பெயர்தான் மிச்சம். இதை அவர் செய்ததும் அரசியல் காரணமே. ஏனெனின்ல் மன்னர்கள் அரசியலில் ஈடுபட்டு தமது தனி பலத்தில் பாராளுமன்ற மெம்பர்கள் எல்லாம் ஆனார்கள். சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜயப்பூர் மகாராணை காயத்ரி தேவி 1962 தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற பத்து வேட்பாளர்களையும் டிபாசிட் இழக்கச் செய்தார். அதில் காங்கிரஸ் வேட்பாளரும் அடக்கம். ஒரிஸ்ஸாவிலோ மன்னர்களை உறுப்பினராகக் கொண்ட சிங் தியோவின் சுதந்திரக் கட்சி ஆட்சியையே கைபற்றியது.
ஆகவே மன்னர்களை மட்டம் தட்டவே அதை இந்திரா செய்தார். அதுவும் உச்ச நீதிமன்றத்தால் செல்லாதென அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசியல் சட்டத் திருத்த பிரேரணை ஒரெ ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. அந்த ஒரு ஓட்டு லட்சிய நடிகர் என அழைக்கப்படும் நமது எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுடையது (பூம்புகார், காக்கும் கரங்கள், அவன் பித்தனா ஆகிய படங்களில் நடித்தவர்). பாவம் மனிதர் வயிற்றுக் கடுப்பில் பாத்ரூம் சென்று திரும்புவதற்குள் பார்லிமெண்ட் கதவை சாத்தி விட்டார்களாம். Very costly stomach disorder indeed!
பிறகு ஏதோ படாத பாடுபட்டு அதை நிறைவேற்றினார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு காரியம் வங்கிகளை அரசுடைமையாக்கியது. அதற்கு ஆறு நாள் முன்னால் உதவிப் பிரதமர் மொரார்ஜி தேசாயிடமிருந்து ஒருதலை பட்சமாக நிதித் துறையை பறித்து கொள்ள, அவர் உடனடியாக உதவிப் பிரதமர் பதவியையும், மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஜூலை 21-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
வங்கிகள் நாட்டுடைமையாக்கியதையும் உச்ச நீதி மன்றம் நிராகரித்தது. அதற்காக மறுபடியும் அரசியல் சட்டத் திருத்தம் எல்லா கொண்டு வர வேண்டியிருந்தது. பல அரசு வங்கிகள் காங்கிரசுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் கடன், வேலை எல்லாம் தரும் சத்திரங்களாகப் போயின. ஜனார்த்தன் பூஜாரி என்ற மகானுபாவர் இல்லாத சாமியாட்டம் எல்லாம் ஆடினார். என்ன செய்வது நாட்டின் தலைவிதி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் பட்டவர்களால் பாதிக்கப்பட வேண்டுமென்று. இந்தத் தருணத்தில் நம்ம ஜோசஃப் சார் இட்ட இப்பதிவையும் அதற்கு அடுத்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.
இதிலெல்லாம் சங்கடங்களை சந்தித்த இந்திரா காந்தி அவர்கள் ஒரேயடியாக தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கட்சியிலிருந்து ஓரம் கட்ட நினைத்தார். அதற்கு அவர் எடுத்து கொண்ட அஸ்திரம் சுயேச்சையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நின்ற வி.வி. கிரிக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு. தானே முன்மொழிந்து கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவ ரெட்டியை நிறுத்திய இந்திராவே தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தத்தம் மனசாட்சியின்படி ஓட்டளிக்க சொன்னார். நிகழ்கால அரசியலில் இதற்கு முன்னால் நடக்காத நிகழ்ச்சி அது. காங்கிரஸ் கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஸ்தாபன காங்கிரஸ், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்று இரண்டானது. இரண்டாவதின் தலைவராக இந்திரா விளங்கினார். வெவ்வேறு துறையில் வேலை செய்த எளிய மக்களை வாடகைக்கு எடுத்த லாரிகளில் வரவழைத்து, பிரியாணி அளித்து தனது இல்லத்துக்கு முன்னால் தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வைத்தார். இச்செயல் முறை பிற்காலத்தில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளாலும் வெவ்வேறு சமயங்களில் இன்னமும் நடத்தப்படுவதும் இந்திரா அவ்ர்களின் லெகசிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா? திடீரென 1971-ல் ஒரு ஆண்டுக்கு முன்னாலே பாராளுமன்ற தேர்தலுக்கு வழி செய்தார். இந்திராவின் தயவில் பதவிக்கு வந்த கிரி அவர்கள் இம்மென்றால் பத்து கையெழுத்துகள் போடவும் தயாராக இருந்தார். ரப்பர் ஸ்டாம்ப் என்ற செல்லப் பெயருக்கும் பாத்திரமானார்.
அதே சமயம் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த தி.மு.க.வும் அதே மாதிரி சட்ட சபை தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்தது. இப்போது நடந்ததுதான் வேதனை தரும் செயல். சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளிலேயே இந்திரா குறியாக இருந்தார். இதற்கு பிறகு காங்கிரசோ மற்ற தேசீய கட்சிகளோ தமிழகத்தை பொருத்தவரை செல்லாக் காசாகவே போயின. இதற்கு முக்கியக் காரணமே இந்திராவின் அப்போதைய சுயநல அடிப்படையில் எடுத்த முடிவுகளே. ஆக, இந்த லெகசியும் தமிழ்நாட்டை பொருத்தவரை இந்திராவுடையதுதான்.
1971-ல் இந்திரா காந்தி பெற்றது அமோக வெற்றி. நேரு அவர்களின் காலத்தில் கூட இவ்வளவு பெரிய வெற்றியில்லை என்றுதான் கூறிட வேண்டும். இந்திராவால் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் அதனால் இந்திராவின் செயல்பாடுகளில் முரட்டுத்தனம் ஏற்பட்டு அது அவருக்கே தீங்காக முடிந்தது பற்றி வரும் பதிவுகளில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மெய்யியலின் பகுத்தறிவு
-
நான் தீவிர இலக்கியத்துக்குள் நுழைந்தபோதே ஆன்மிகம் –
இந்தியத்தத்துவத்துக்குள்ளும் நுழைந்துவிட்டேன். என் பெரியப்பாவின் மகன்
முகுந்தன் அண்ணா நீர்ப்பாசனத்துறை ...
8 hours ago
29 comments:
About Bangladesh, I think what Rahul Gandhi says is true. What do you say to that?
As a person claiming that you love truth, what would you say to this?
Curious
Very costly stomach disorder indeed! //
yes indeed..
டோண்டு சார்,
சூப்பர் பதிவு, திரு.டி.பி.ஆர் அந்த அமைச்சர போட்டு தாக்கி இருக்கார். திரு.டி.பி.ஆர் நேர்மையான, தைரியமான மனிதர். இந்த அரசியல்வாதிங்க மக்கள் நலத்திற்கு மேல் தங்கள் சுயநலத்துக்கு முக்கியதுவம் தருவதற்கு இந்த நிதி அமைச்சர் ஒரு உதாரணம். இத படிச்சியும் மக்கள் திருந்தலனா, இந்த நாட்டை ஆண்டவனல கூட காப்பாத்த முடியாது.
ஏங்க, எப்பவுமே வலப்பதிவர்கள் சந்திப்புன்னாலே நீங்க போண்டா, வடை சாப்பிட்டு ஒரு ஃபோட்டோவுடன் பதிவு வருமே, சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு நீங்க போகல்லியா ? மா. சியின் வலைப்பதிவர் சந்திப்பு பதிவுலயும் உங்களப்பத்தி எதுவும் இல்லையே ?
உங்க பதிவுலயும் அந்த மீட்டிங் என்று போட்ட பொம்மை இல்லையே ?
ஏன் சார் ?
போன சந்திப்பிலேயே என்னை வேண்டாத விருந்தாளி என்று ஓரம் கட்டிய பிறகு எனக்கு இந்த சந்திப்புக்கு போக எந்த பிரமேயமும் இல்லை. முதலிலேயே இந்த முடிவை எடுத்து விட்டேன்.
மேலும் எண்ண அலைவரிசைகளில் திராவிடப் பதிவர்களுக்கும் எனக்கும் சுருதி பேதம் அதிகமாகி விட்டது.
அவ்வளவுதான் விஷயம். வேணும் அளவுக்கு மீட்டிங்குகள் சென்றாகி விட்டது. எனக்கு வேறு உருப்படியான வேலைகள் காத்திருக்கின்றன.
இருக்கட்டும், இந்த உப்புப் பெறாத விஷயத்தை தூக்கி எறியுங்கள். நேருவின் லெகசி இந்தப் பதிவில் அதற்கான உங்கள் எண்ணங்களை பின்னூட்டமாக இடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு டோண்டு ஐய்யா,
மன்னர்களுக்கு மானியம் நிறுத்தபட்டதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இந்த விசயத்தில் எல்லொருக்கும் ஒரு பாடம்.
governmental power to give is also the power to take away.
நமக்கு அளிப்பதற்க்காக சக்தியை கொடுத்தால் அதே சக்தி வைத்து பிடுங்கிவிடும் - அரசு.
##
சுதந்திர கட்சியை அழித்து இந்திராதானா. மேலும் இந்திரா Comptroller and Auditor General மற்றும் Election Commisson போன்ற அமைப்புகளின் சுதந்திரத்தை, அதிகாரத்தை குறைத்தாரா?
மொராஜி தேசாய் முத்திரம் குடித்தது உன்மையா?
//மன்னர்களுக்கு மானியம் நிறுத்தபட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.//
//governmental power to give is also the power to take away.//
விஷயம் அவ்வளவு எளிமையானதல்ல. விளக்குகிறேன். காஷ்மீரையே எடுத்து கொள்ளுங்கள். அதன் மன்னர் இந்தியாவுடன் சேர ஒப்புதல் தந்ததை வைத்துத்தான் நாம் Hague-ல் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளோம். இவ்வாறு ஒரு தலைப் பட்சமாக இந்தியா ஒப்பந்தத்தை முறித்துள்ளது. காஷ்மீர மன்னர் அந்த நீதி மன்றத்தில் இந்த ஒருதலைப் பட்சமான செயலால் ஒப்பந்தம் தன்னையும் கட்டுப்படுத்தாது என்றும், ஆகவே தான் இப்போது பாகிஸ்தானுடன் இணைவதாகவும் அறிக்கை கொடுத்திருந்தால் இந்தியாவின் நிலைமை சந்தி சிரித்திருக்காதா?
காஷ்மீர மன்னர் கரண் சிங் இந்திரா அரசில் ஒரு மந்திரி என்பதால் அவ்வாறு நடக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இப்படியாக தனது ஒப்பந்தத்தை தானே மீறுவது இந்தியா போன்ற தேசத்துக்கு அழகா?
//நமக்கு அளிப்பதற்க்காக சக்தியை கொடுத்தால் அதே சக்தி வைத்து பிடுங்கிவிடும் - அரசு.//
இம்மாதிரி நினைப்புகள்தான் அப்போதைய இந்திரா அரசுக்கு மாறா அவப்பெயரை தேடித் தந்தன.
//சுதந்திர கட்சியை அழித்து இந்திராதானா.//
இல்லை. ராஜாஜி அவர்கள் 1972-ல் இறந்ததும் மெதுவாக சுதந்திரக்கட்சி, பழைய காங்கிரஸ் ஆகியவை பல விதங்களில் இணைந்து கடைசியில் ஜனதா கட்சியாக உருவெடுத்தனர். ஆக அதில் இந்திரா அதில் ஒன்றும் செய்யவில்லை.
//மேலும் இந்திரா Comptroller and Auditor General மற்றும் Election Commisson போன்ற அமைப்புகளின் சுதந்திரத்தை, அதிகாரத்தை குறைத்தாரா?//
ஆம். அதிலும் எலக்ஷன் கமிஷனின் அதிகாரம் முழுமையடைய நம்மூர் சேஷன் வரவேண்டியதிருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மொராஜி தேசாய் முத்திரம் குடித்தது உண்மையா?//
அது ஒருவித சிகிச்சை முறை. அதற்கு எதிராகவும் சாதகமாகவும் பல கருத்துகள் உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//போன சந்திப்பிலேயே என்னை வேண்டாத விருந்தாளி என்று ஓரம் கட்டிய பிறகு எனக்கு இந்த சந்திப்புக்கு போக எந்த பிரமேயமும் இல்லை. முதலிலேயே இந்த முடிவை எடுத்து விட்டேன்.//
அப்பாடி, கொஞ்ச நஞ்சம் ரோஷம் இருக்கு...பரவாயில்ல....
ஆமாம், எ.அ.பாலாவும் போக்வில்லையாமே, அதுவும் மான-ரோஷம் சம்மந்தமாத்தானா?
//இப்படியாக தனது ஒப்பந்தத்தை தானே மீறுவது இந்தியா போன்ற தேசத்துக்கு அழகா? //
ஒப்பந்த்ததை மீறுவது தவறான செயல்தான். இருந்தாலும் ஒப்பந்த்ததை மீறுவது தனக்கு நன்மை என்றால் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதி தயங்க மாட்டான்/ள். அவனுக்கு/அவளுக்கு தனது பதவியை தக்க வைத்துக்கு கொள்வதுதான் முக்கியம். கொடுத்த வாக்கை மீறுவது, நம்பிக்கை துரோகம் செய்வது எல்லாம் நமது அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலைதானே.
அதனால்தான் இதை நான் சொன்னேன்.
governmental power to give is also the power to take away.
அரசு எதாவது அளிக்கும் என்று நம்பி அதற்கு அதிகாரம் அளிப்பது நல்லதல்ல, அரசின் அதிகாரத்தை கட்டுபடுத்தி வைப்பதே நல்லது.
கேள்விகளுக்கு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி, டோண்டு ஐய்யா.
dondu sir
Konjam unga appa , amma patri meendum konjam blog podungale!!!
nandri
//அப்பாடி, கொஞ்ச நஞ்சம் ரோஷம் இருக்கு...பரவாயில்ல....
ஆமாம், எ.அ.பாலாவும் போக்வில்லையாமே, அதுவும் மான-ரோஷம் சம்மந்தமாத்தானா?//
மதியாதார் வாசலை மிதியாதே என்று ஔவை எப்போதோ கூறிவிட்டாரெ.
பாலா எப்பவுமே சந்திப்புகளுக்கு சென்றதில்லை. அவ்வளவுதான் விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களுக்கோர் நற்செய்தி
http://sankarmanicka.blogspot.com/2007/04/blog-post_25.html
Dear Sir,
CGI Bangalore is looking for a French-English translator who can do technical documentation as well.
Posting will be in Bangalore. Candidate should have excellent proficiency in MS-Office applications.
//
ஆகவே மன்னர்களை மட்டம் தட்டவே அதை இந்திரா செய்தார்.
//
Her real intention was to please the fallen 'gods' of "socialism".
The same mistake is being made again with Sonia at the helm of affairs and CPIM enjoying VETO on every issue today.
Congress's obsession for socialism is the root cause of india's failiure every where. From tackling poverty to mosquito population explosion at gooduvanchery taluk :D.
YOU ARE NOT A HISTORY TEACHER. ONONE CAN STUDY FROM YOUR WRITINGS.
//ONONE CAN STUDY FROM YOUR WRITINGS.//
என்ன கூற வருகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Anonymous said...
YOU ARE NOT A HISTORY TEACHER. ONONE CAN STUDY FROM YOUR WRITINGS.
என்ன தம்பி இஸ்கூல் படிகிறியா?
இது பெரியவங்க மேட்டர் இத்த அப்புறம் கத்துகலாம், உட்டுக்கு போய் பாடம் இருந்தா படி, இன்னா.
Dear Sir,
We are looking forward to French Translators. Please recommend suitable candidates to us.
Thanks and Regards
Balachandar Ganesan.
1. Go to the URL http://gotranslators.com/
2. Check French for the source language box, check English for the target language box and check India for the country box.
3. You will get a list of translators. Select one from amomng them.
Regards,
Dondu Raghavan
எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகனும் சாமி! நேரு நல்லவரா கெட்டவரா?
புள்ளிராஜா
//எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகனும் சாமி! நேரு நல்லவரா கெட்டவரா?//
இப்படியும் ஒரு சந்தேகமா? நேரு மிகவும் நல்லவர்தான்.
ஆனால் ஒன்று, ஒரு தலைவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் மக்கள் நலனுக்காகவே அவன் செயல் வினைகள் இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யாருமே முழுமையாக நல்லவரோ அல்லது கெட்டவரோ கிடையாது. அதெப்படி சொல்ல முடியும்? மனிதன் சூழ்நிலைக்கேற்ப, சுற்றியிருக்கின்ற மனிதர்களுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறான்.
அது இருக்கட்டும் டோண்டு சார், ஒரு சந்தேகம். உங்கள் நமீதாவை இப்போதெல்லாம் காண முடியவில்லையே? அடுத்து ஷில்பா தான் வருவாள் என்று நினைக்கிறேன், சரியா?
//யாருமே முழுமையாக நல்லவரோ அல்லது கெட்டவரோ கிடையாது. அதெப்படி சொல்ல முடியும்? மனிதன் சூழ்நிலைக்கேற்ப, சுற்றியிருக்கின்ற மனிதர்களுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறான்.//
மிகவும் உண்மை. இருந்தாலும் அரசு செய்பவர்கள் விஷயமே வேறு. அவர்கள் இம்மாதிரி விமரிசனத்துக்கு உட்பட்டே ஆகவேண்டும்.
அதுவும் இச்சமயம் நான் எனது மனைவியின் அத்தையன்பர் எழுதிய திருக்குறள் ஆங்கில உரையை பிழை பார்த்து தட்டச்சு செய்து வருகிறேன். இப்போது 56 வது அதிகாரமாம் கொடுங்கோன்மை பார்த்து வருகிறேன். சில குறள்கள் அப்படியே நெருக்கடி நிலையின் அவலத்தைப் படம் பிடித்து காட்டுகின்றன.
அதிலும் ஒரு குறள்:
"நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்"
இதைச் சொல்லிய பிறகே ஜயலலிதாவின் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அரசின் செயல்பாடு சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார் சம்பந்தப்பட்ட நீதிபதி அமரர் மா.சீனுவாசன் அவர்கள்.
இங்கு ஜயலலிதாவோ இந்திராவோ நல்லவரா அல்லது கெட்டவரா என்றெல்லாம் பிரச்சினையில்லை. நான் ஏற்கனவே கூறியபடி நேரு நல்லவரே, ஆனாலும் அவர் செய்த சொதப்பல்கள் இன்னும் இந்தியாவை பீடித்து வருகின்றன.
//அது இருக்கட்டும் டோண்டு சார், ஒரு சந்தேகம். உங்கள் நமீதாவை இப்போதெல்லாம் காண முடியவில்லையே? அடுத்து ஷில்பா தான் வருவாள் என்று நினைக்கிறேன், சரியா?//
ஏன் மச்சமச்சினியே பாட்டுக்கு அழகான நடன அசைவுகள் தந்த மும்தாஜ் வந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu sir...
unga pathivukku vandaalee vaai vittu sirikka mudikirathu!!!
Ofcourse a good flow is maintained. well written stuff though i have a difference in many assumptions like Banking Nationalisation. Indira Gandhi was guided! You have forgotten the socialist lobby (of Nehru) inside the Congress and the Gandhian lobby of Desai.
//i have a difference in many assumptions like Banking Nationalisation. Indira Gandhi was guided! You have forgotten the socialist lobby (of Nehru) inside the Congress and the Gandhian lobby of Desai.//
இந்திரா காந்தி வழி நடத்தப்பட்டார் என்பது உண்மையே. அந்த வழி நடத்தல் அவர் நேருவின் மகள் என்பதே. நீங்கள் கூறிய சோஷலிஸ்ட் லாபியும் நேருவாலேயே உருவாக்கப்பட்டது. அந்த லெகசியைப் பற்றியும் இங்கே பேசுவேன்.
ஆனால் ஒன்று. எல்லா சோஷலிச மாயைகளும் தோல்வியடைந்து மூதறிஞர் ராஜாஜி சமீபத்தில் 1959-ல் சொன்னதுதான் சரி என்று ஏற்கப்பட்டது 1991-க்கு அப்புறம். அந்தக் காலக்கட்டத்துக்கு வரும்போது அந்த கச்சேரியை இன்னும் தீவிரமாக வைத்து கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
i cant understand what rahul gandhi said about bangladesh. i dont think so his comment make difficalt relation between banglades.indira gandhi never comment any word about us. any one translet what rahul say?
Post a Comment