8/05/2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

என் கார் சென்னை பல்கலைக்கழக மெரீனா வளாகத்தை அடைந்தபோது மணி சரியாக 09.30. ஏற்கனவே இணையத்தில் பதிவு செய்தவர்கள், செய்யாதவர்கள் என்று தனித்தனை ரெஜிஸ்டர்கள் வைத்திருந்தனர். முதலாவதில் உள்ளீடு செய்து, பட்டறைக்கான காகிதங்கள், எழுதுகோல் ஆகியவற்றை பெற்று கொண்டேன். கூடவே பகல் உணவுக்கான கூப்பனையும் தந்தார்கள். நல்ல ஏற்பாடுகள், மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டு கொண்டிருந்தன.

உள்ளே அரங்கத்தில் சென்றால் பல வலைப்பதிவர்கள் ஏற்கனவே வந்திருந்தனர். அவர்களில் சிலர்: அதியமான் (அவர் நான்தான் என்று நினைத்த பலரை பொய்யாக்கி வந்திருந்தார்), ஜெயக்கமல், சரவணன், உண்மைத் தமிழன், ஜெயசங்கர், விக்கி, சிவஞானம்ஜி, லிவிங் ஸ்மைல், ஆசிஃப் மீரான், பத்ரி, மா.சிவகுமார், டெல்ஃபின், கிருபா சங்கர், லக்கிலுக், ரஜனி ராம்கி, ஓசை செல்லா, தருமி, பொன்ஸ், இராமகி ஐயா, மாலன், தருமி, நேசமுடன் வெங்கடேஷ் ஆகியோர் (நினைவிலிருந்து எழுதுகிறேன்). Last but not least செந்தழல் ரவி கொரியாவை ஒரு வழி பண்ணிவிட்டு வந்திருந்தார்.

விக்கி அவர்களின் வரவேற்புரையோடு பட்டறை இனிதே துவங்கியது. காலத்துக்கேற்ப மாறுதல் செய்து வருவதில் தமிழ் வலைப்பதிவாளர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆங்கிலம் தவிர்த்த மொழிகளில் தமிழின் முன்னேற்றம் கணிசமானது. Uncoference என்ற வார்த்தையை அடிக்கடி கையாண்டார் விக்கி அவர்கள். சாதாரண கருத்தரங்குகளில் மேடை மேல் இருப்பவர்கள், பார்வையாளர்கள் நடுவில் இருக்கும் இடைவெளி இம்மாதிரியான அன்கான்ஃபரென்சில் கிடையாது என்பதை வெளிப்படுத்தினார் விக்கி.

அதை விளக்குவது போல மாசிவகுமார் அவர்கள் தன்னிருக்கையில் இருந்தபடியே அந்த கான்சப்டை விளக்கினார். இப்பட்டறைக்கு வரமுடியாத நிலையில் வெளியூரில் இருக்கும் சிந்தாநிதி அவர்கள் "கணிச்சுவடி" என்ற தலைப்பில் உள்ள சிறு கையேட்டில் எகலப்பை என்றால் என்ன, அதை எப்படி நிறுவுவது என்பதையெல்லாம் எளியமுறையில் எழுதி அனுப்பியதையும் மாசிவகுமார் குறிப்பிட்டார்.

இப்பட்டறைக்கான பூர்வாங்க தயாரிப்பில் மிகுந்த அக்கறை எடுத்து கொண்டிருந்ததால் ஒரு குழப்பமும் இன்றி பட்டறை நடந்தது. கீழே கருத்தரங்கம், மாடியில் இரு அறைகளில் கணினிகள் வைத்து செய்முறை விளக்கங்கள் மூலம் வலைப்பதிவதை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தனர். பத்ரி சேஷாத்ரி அவர்கள் தற்போது இணையத்தில் தமிழை பயன்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள், பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்து கூறினார்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து மாடிக்கு சென்றேன். ஒரு மேஜையில் உள்ள கணினியில் தமிழில் தட்டச்சு செய்யும் முறைகளைப் பற்றி கேட்டார் ஒருவர். அச்சமயம் அக்கணினியில் எகலப்பையில்லை. அவரோ கையில் யாஹூ மெயில் ஒன்றில் வந்த தமிழ் மின்னஞ்சலை வைத்து கொண்டு அதைப் படிக்க இயலாது இருந்தார். சுரதா பெட்டியை நிறுவ முயன்றேன். கணினி இணைய பக்கங்கள் திறக்க ரொம்ப படுத்தியது. அதனுடன் மல்லாடுவதிலேயே நேரம் சென்றது. பிறகு ஜயக்குமார் என்பவர் வந்து எகலப்பையை நிறுவி ரீஸ்டார்ட் செய்தார். அதன் பிறகு உள்ளதும் போச்சடா என்பது போல இணைய இணைப்பும் அக்கணினியில் கிடைக்கவில்லை.

அடுத்த அறையில் சற்று முன்னேறிய நிலை. அங்கு சோமசுந்தரம் என்பவர் தனது வலைப்பூவை திறக்க முடியாது இருந்தார். கடவுச்சொல்லை மறந்து விட்டார். பிறகு பிளாக்கர் உதவிக்கு சென்றால் அவர்கள் தரப்பில் அதை விட சொதப்பினார்கள். சரி என்று புதிய வலைப்பூவையே திறந்தார். அதில் ஒரு கமெண்டும் இட்டேன், அனானியாக. இதிலேயே நேரம் ஆகிவிட்டது.

மணியும் மதியம் 1=15 போல ஆகிவிட்டது. உணவும் வந்தது. ஆளுக்கு இரு பொட்டலங்கள். பிரைட் அரிசி, குருமா மற்றும் தயிர்சாதம். பசிக்கு தேவாமிர்தமாக அமைந்தது. வீட்டில் பெரிய மொழிபெயர்ப்பு வேலையை விட்டுவிட்டு வந்திருந்ததால் உணவுக்கு பிறகு உடனே கிளம்ப வேண்டியிருந்தது. கிளம்புவதற்கு சற்று முன்னால் தமிழ்மணம் காசி, ஆசாத் மற்றும் பினாத்தல் சுரேஷ் அவர்களை சந்தித்தேன்.

பட்டறை பல இடங்களில் நடைபெற்றதால் எதை எடுக்க எதை விட என திக்குமுக்காடிப் போனது நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக சொல்லியுள்ளீர்கள் திரு ராகவன்.
இந்த சமயத்தில் அங்கு இல்லையே என்று ஆதங்கமாக இருந்தது.

Anonymous said...

சந்திப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. விழா நடத்திய மா சிவகுமார், விக்கி, பத்ரி, ஜெய்சங்கர் அவர்களுக்கு ்சிறப்பு நன்றிகள். உணவு எற்பாட்டுக்கு பாலபாரதிக்கு நன்றி! காமெடி அடித்த லக்கிக்கு நன்றி! முக்கியமாக நன்கொடை அளித்த நல்ல உள்ளங்களுக்கும், இந்த விழாவின் வெற்றிக்கு உழைத்த நண்பர்களுக்கும்,் பங்கேற்று சிறப்பித்த பெரியவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

dondu(#11168674346665545885) said...

//காமெடி அடித்த லக்கிக்கு நன்றி!//

கண்டிப்பாக காமெடி எல்லாம் அவர் செய்யவில்லை. ரொம்ப சீரியசாகவே பட்டறைக்காக உழைத்தார். அவரைப் போன்ற இளைஞர்கள் தமிழ் மேம்பாட்டுக்காக வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அனானியய கமெண்டு போட்டியாடா பாப்பார பயலே?

dondu(#11168674346665545885) said...

//அனானியய கமெண்டு போட்டியாடா பாப்பார பயலே?//
ஆமாம். ஆனால் இதில் என்ன விசேஷம் என்றால், அனானி கமெண்ட் போட்டு அன்புடன் டோண்டு ராகவன் என்று கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட பதிவர் கையில் என் விசிட்டிங் கார்டையும் கொடுத்து வந்தேன். அதுக்கென்ன இப்போ?

டோண்டு ராகவன்

Anonymous said...

/அவரைப் போன்ற இளைஞர்கள் தமிழ் மேம்பாட்டுக்காக வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது/

Working for this stupid pattarai equals Tamil Growth?

dondu(#11168674346665545885) said...

//Working for this stupid pattarai equals Tamil Growth?//

ஆட்சேபகரமான வார்த்தை பிரயோகம். இப்பட்டறை அற்புதமாக நடத்தப்பட்டது. அமைப்பாளர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து வேலை செய்வதைப் பார்க்க மனதுக்கு நிறைவாக இருந்தது.

இப்போதைய கல்வி சூழ்நிலையில் தமிழ் படிப்பது அரிதாகி வருகிறது. ஆங்கிலம் தமிழுக்கான சீரியஸ் மொழிபெயர்ப்புகளை செய்ய தமிழ்நாட்டிலேயே என்னை மாதிரி தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் நீங்களே தமிழின் நிலையை ஊகிக்கலாம். அதை எதிர்த்து இந்த பட்டறை வேலை செய்வது அருமையாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உனக்கு நீயே கமெண்டு போட்டுக்குறியாடா பாப்பார பயலே?

dondu(#11168674346665545885) said...

//அந்த கூட்டத்துக்கு க.ர.அதியமான் சாரும் வந்திருந்தாராம். நானூற்றுச் சொச்ச பதிவர்களில் எந்த நாதாரி அதியமான் என்று யாருக்கு தெரியும்? இவனே சும்மா குன்சா ஒரு ரீல் சுத்தினுகீறான்.//
இந்த காமெடிக்காகவே இப்பின்னூட்டத்தை அனுமதித்தேன் அனானி. மொத்தப் பின்னூட்டமே காமெடி என்பது வேறு விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இந்த காமெடிக்காகவே இப்பின்னூட்டத்தை அனுமதித்தேன் அனானி. மொத்தப் பின்னூட்டமே காமெடி என்பது வேறு விஷயம்.
///

உன் பதிவை விடவாடா வேற காமெடி இருக்கு?

Anonymous said...

டேய் பாப்பார பரதேசி,

உன் பதிவில் உள்ள எல்லா அனானி கமெண்டும் நீயே போட்டுக் கொள்வது தானே?

1000 ரூபாய் கொடுத்துவிட்டு பெருமையாக பீற்றிக் கொண்ட இழிபிறவி தானேடா நீ?

dondu(#11168674346665545885) said...

//உன் பதிவில் உள்ள எல்லா அனானி கமெண்டும் நீயே போட்டுக் கொள்வது தானே?//
எல்லோரையும் நீ என்று எண்ணினாயோ அனானி? மற்றும், அதியமானைப் பார்த்தவர்கள் ஏராளம். உதாரணம் மா.சிவகுமார். முகத்தில் வழியும் அசட்டுக்களையைத் துடைத்துக் கொள்ளவும் அனானி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Mr dondu why are you allowing stupid comments from moorthi?

K.R.அதியமான் said...

dondu sir,

i mailed about me to moorthy,
sadnyvadai and other crazies,
with my cell no and ref to MaSi
and other freinds, who can indeed
prove that i am nnot your anaanie.
posted comments that i do exist and
did attend the pattrai (as a volunter)..

lots of perverts in this blog world, just like the real world..

Anonymous said...

சார், நான் லக்கி தன்னை மொக்கை பதிவர், கும்மி பதிவர் என்று சொன்னதை காமெடி என்றேன். இதை தவிற வேறோன்றும்மில்லை. அதுகுள்ள இந்த சின்ன விசியத்தை பெரிதாக்கிய வேலையில்லாத கீழ்மகனுக்கு நன்றி!

dondu(#11168674346665545885) said...

//சார், நான் லக்கி தன்னை மொக்கை பதிவர், கும்மி பதிவர் என்று சொன்னதை காமெடி என்றேன். இதை தவிற வேறோன்றும்மில்லை.//
அதில் தவ்றுமில்லை. நாந்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார்!

நீங்க நல்லவரா கெட்டவரா சார்?
ஏன் உங்களை பாராட்டுராங்க/ ஏன் உங்களை திட்டுராங்க?

புள்ளிராஜா

Nat Murali said...

Dear Dondu Sir,
I am sorry I could not write you sooner. Still having trouble with Tamil Scripting. I have read almost all your blogs and I feel I know you and share almost all your tastes and preferences.
I was in Medan ,Indonesia and am back in Singapore (Where i Live) my "Puhunda Veedu" for past 14 years.
I have a small observation on your writings - "your Translation Psychosis of trying to be perfect" shows most of the time.
I do believe that language is meant for Effective communication and when you have trouble in finding a correct word for Web, Technology or totally a new scientific matter- I suggest pl give the transliteration in Tamil. Valaipu -Web page?. I think Sujatha ,Vali, even Vairamuthu resort into using English words -Transliterated. Tamil , unlike Sanskrit has Tatbhavam and tatsamam- Which allows importing foreign words.
Perhaps I think that is an important greatness of Tamil. Let use it.
Anbudan
Murali Natarajan
Can you pl email me at
natmurali@gmail.com to have one to one communication. Your blog space is quite crowded and more than 3 is always crowd.

Anonymous said...

yahoo mail,cant read in tamil, a solution.
dont open in the same page,right click and open in new page and change view--> encoding to udf 8.Now u can see tamil text.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது