குழலி மற்றும் ஓசை செல்லா அவர்களின் அரிய கண்டு பிடிப்பு இது. எங்கு அடித்து கொள்வது என்று தெரியவில்லை.
இதில் செல்லாவை விடுங்கள். மனிதர் ரொம்பவுமே அன்ஸ்டேபிள். மூடுக்கு ஏற்ப பேசுபவர், எழுதுபவர். அப்படித்தான் பாருங்கள், சில நாட்களுக்கு முன்னால் விடாது கருப்புவை திட்டி பதிவுகள் போட்டு, விடாது கருப்பு மூர்த்தி எதிர்ப்பதிவுகள் போட்டு என்றெல்லாம் கூத்து நடந்தது. பிறகு திடீரென எல்லாம் மறைந்தன. என்ன விஷயம் எனக்கேட்டு பின்னூட்டம் இட்டால், "வேண்டுமானால் ஓசை செல்லா ஒரு கோழை" என்று ஒரு பதிவு போட்டு கொள்ளுங்கள் என்று எதிர்வினை. பிறகு எனது பின்னூட்டமும் மிஸ்ஸிங் அவரது எதிர்வினையும் மிஸ்ஸிங். அந்தப் பதிவு கூட காக்கா ஊஷ் ஆகி விட்டது. சரி என்று நானும் விட்டு விட்டேன்.
பிறகு என்னடாவென்றால் போலி டோண்டுதான் மூர்த்தி என்ற பதிவு. நான் கூட ஃபோன் செய்து கங்ராட்ஸ் கூறினேன். அப்பதிவையும், சர்வேசன் பதிவையும் வாழ்த்தி நான் போட்ட பதிவுக்கு அப்புறம் திடீரென செல்லாவிடமிருந்து ஒரு பதிவு என்னை முன்னிறுத்தி. சரி எனது விளக்கத்தைக் கூறலாமே என்று போட்டால் அதையும் நிராகரித்து விட்டார். அது மட்டுமின்றி "பாருங்க இப்ப கூட அவரு கமெண்ட் ஒண்ணை போட்டுத்தள்ளிட்டம்ல! சண்டைன்னு வந்துச்சுன்னா தயவு தாட்சண்யம் பாக்ககூடாது" என்று எகத்தாளமா ஒரு கமெண்ட் வேறு. எதற்கும் இருக்கட்டும் என தொலைபேசினால் ஏதோ வேலைக்காரனை நடத்துவது போன்ற எகத்தாளமான பேச்சு. நான் வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமாம். பின்னூட்டம் எல்லாம் அனுமதிக்க மாட்டாராம். அது சரி அவர் விருப்பம். ஆனால் என்னை அட்ரெஸ் செய்து போட்ட பதிவில் எனது பின்னூட்டத்தை ரிஜெக்ட் செய்வது என்ன வலையுலக எதிக்ஸோ தெரியவில்லை.
ஆனால் எனக்கும் எதிர்வினை என்று ஒன்று இருக்கும் அல்லவா. ஆகவே இஸ்ரேல் பதிவு. அதற்கு அவரது எதிர்ப்பதிவு. அமெரிக்காவின் அடுத்த அணுகுண்டு இஸ்ரேல் மீதாம். இஸ்ரேல் அது வரைக்கும் பூ பறித்து கொண்டிருக்குமா என்ன? அதைத்தான் எனக்கு அனானியாக அடுத்த ஷ்டாசி பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவருக்கு சொன்னேன். அவ்வளவுதான். உடனே இந்த டோண்டு ராகவன் இருக்கும் வரை ஒன்றுமே உருப்படாது என்ற ஒரு பதிவு. அதில் கூறுகிறார், இனிமேல் சாகும்வரை எனக்கு பின்னூட்டமிடமாட்டாராம். எனக்கு சமீபத்தில் பின்னூட்டமிட்ட மாதிரி தோன்றவில்லையே என்று பார்த்தால் மேலே நான் குறிப்பிட்ட அனானி பின்னூட்டம்தான் தெரிகிறது. ஓகோ அப்படியா விஷயம் என விட்டு விட்டேன்.
இந்த குழலிக்கு என்ன வந்தது என்றுதான் தெரியவில்லை. அவரது மூர்த்தி பற்றிய பதிவில் நான் வெறுமனே "லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளீர்கள்" என்னும் பொருள்பட ஆங்கிலத்தில் இட்ட மிகச் சாதாரணப் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டது. என்ன விஷயம் என்று தொலைபேசி கேட்டால் அவரும் கூறுகிறார் நான் ஒன்றுமே செய்யாமல் மூலையில் உட்கார வேண்டுமாம். பிறகு மின்னஞ்சல் வேறு. ஆனால் ஒன்று, மனிதர் மரியாதையாகவே பேசினார். கடைசியில் ஒன்றுமட்டும் கூறினார். அவர் சொன்னதைப் பற்றி விவாதம் செய்யத் தயாரில்லை என்று. அதுதான் மனதில் இடித்தது. இவர் எனக்கு ஒன்று செய்ய வேண்டும் எனக் கூறுவாராம். நான் எதிர்வினையே செய்யக்கூடாதாம். ஆகவே அவரிடம் பேசிப் பயன் இல்லை என நினைத்தேன். ஆக, எனது இஸ்ரேல் பதிவுக்கு அவரும் ஒரு காரணம்.
இப்போது திடீரென எனக்கு மசோகிஸ்ட் என்ற பட்டம் வேறு. நானா மசோகிஸ்ட்? அப்படியிருந்திருந்தால் போலியுடன் இவ்வளவு போராடியிருபேனா? அதுவும் சில மாதங்களுக்கு முன்னால் கூட விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்று என்னுட்ன் தொலைபேசியில் பேசும்போது அடித்து சொன்னவர் குழலி அவர்கள். நான் போராளி. யுத்தம் செய்யும்போது வரும் காயங்களை பொருட்படுத்தாது யுத்தம் செய்பவன். அப்படிப்பட்டவன் எப்படி மசோகிஸ்ட் ஆக முடியும்? அதை விடுங்கள், அது அவரது கருத்து. எனக்கும் அவரைப் பற்றி கருத்துகள் இருக்கும்தானே. ஆகவே பரவாயில்லை.
அது எப்படி என்னைத் தமிழ்மணத்திலிருந்து விலக்கவேண்டும் எனப் பதிவு போடப் போயிற்று? நான் போட்டிருக்கும் 400-க்கும் மேல் பதிவுகளிலிருந்து ஏதேனும் ஒன்றையாவது நீங்கள் கூறியதற்கு ஆதாரமாகக் காட்ட முடியுமா? ஏதாவது ஆபாசமாக எழுதினேனா? யாரையாவது அவமரியாதை செய்தேனா? கருத்தில் வன்முறை எனக் கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை எனது இடுகைகளிலிருந்தோ அல்லது நான் இட்ட பின்னூட்டங்களிலிருந்தோ காட்ட இயலுமா?
இப்போது உண்மைத் தமிழனிடம் வருகிறேன். அவருக்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ. "விட்ஜட் எல்லாம் போடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று. எனக்கு முதலில் பின்னூட்டமிடுபவரின் தளத்துக்கு சென்று அவர் மட்டுறுத்தல் செய்யாது இருந்தால் செய்யும்படி ஆலோசனை கூறுவது எனது வழக்கம்.
//பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நீங்களே முதலில் சமாதானம் செய்து பின்பு அது எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று சொல்லி அதை மறுத்து மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதைப் போல் எழுத ஆரம்பித்து இதனால் போலியும் தனது சத்தியத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்து இதனால் பாதிக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல.. நாங்களும்தான்..//
மேலே கூறியதில் சில தவறுகள் உள்ளன. எனது முதல் யோம்கிப்பூர் பதிவு போட்டு ஐந்து நிமிடத்துக்குள்ளாக மூர்த்தியின் டுண்டூ பதிவில் அசிங்கப்பதிவு போடப்பட்டது. அவன் தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆக அவன் சத்தியம் ஒன்றும் செய்யவில்லை.
ஆகவே இரண்டாம் யோம் கிப்பூர் பதிவு போட்டு அவனை அலட்சியம் செய்ய ஆரம்பித்தேன். என்னைப் பற்றி ஆர்குட்டில் அசிங்க ப்ரொபைல்கள் போட்டான். இப்போது கூட அது சம்பந்தமாக பல டெலிஃபோன் அழைப்புகள் வருகின்றன.
நீங்கள் பின்னூட்டமிட்டதால்தான் அவன் உங்களை இவ்வளவு அசிங்கமாகத் திட்டினான் ஆகவே நீங்கள்தான் அவனது இச்செய்கைக்கும் பொறுப்பு எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ அதே அபத்தம்தான் என்னையும் குறை கூறுவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மற்றப்படி விட்ஜட் நீங்கள் போட்டுக் கொண்டு "டோண்டுவின் வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே அவரது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு அவர் பொறுப்பில்லை...” என்று போட்டுக் கொள்வதைப் பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை". நான் அவர் சொன்னதுபோல விட்ஜட் போட்டுக் கொண்டால்தான் மசோகிஸ்ட் என்று கூறலாம்.
மா.சிவகுமார் கூறுகிறார், "டோண்டு சார் வேண்டுமென்றே குத்திக் கிளறும் நோக்கத்தோடு எழுதும் இடுகைகளை நிறுத்தவும்". நான் தன்னிலை விளக்கம்தான் இங்கு தருகிறேன். அதுவும் உங்களிடம் தொலைபேசியதில் சோனதைத்தான் கூறுகிறேன். யாரையும் குத்திக் கிளறாது என நம்புகிறேன். அப்படி கிளறும் என்றால் அது சம்பந்தப்பட்டவர் பிரச்சினை.
டோண்டு ஆபாசமாக எதையும் எழுதவில்லையே, எப்படி தமிழ்மணத்திலிருந்து நீக்க முடியும் என்று ரமணி அவர்கள் மைல்டாக எழுதியதற்கே ஓசை செல்லாவிடமிருந்து அழுவாச்சி பதிவுகள். இத்தனைக்கும் ரமணி அவர்களும் நானும் மசோகிஸ்ட் என்றுதான் எழுதியுள்ளார். ஆனால் அது ஓசைக்கு போதவில்லை. தான் தமிழ்ப்பதிவுகளையே நிறுத்தப் போவதாக ஃபிலிம் வேறு காட்டிக் கொண்டிருக்கிறார். ஐயா ஓசை அவர்களே. ரொம்பவும் பிகு செய்து கொள்ளாதீர்கள். திடீரென எல்லோரும் சரி போங்கள் என்று விட்டால் திரும்ப எப்படி வருவீர்களாம்? நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வருகிறேன் என்று காலம் கடக்கும் முன்னால் ஒரு பதிவு போட்டு வந்து விடுவதை பற்றி யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
37 comments:
தன்னிலை விளக்கம் நன்றாக இருக்கிறது.
அனானியின் பின்னூட்டம் சற்றே எடிட் செய்யப்பட்டுள்ளது. சில அடைமொழிகள் நீக்கப்பட்டுள்ளன.
விட்டுத் தள்ளுங்க சார். விடாது கருப்பு தான் போலி அப்படீன்னு இப்போ இவங்க புதுசா கண்டு பிடிச்சதா காட்டிக்கிற ஆதாரங்களோட ஒரு வருஷத்துக்கும் முன்னாடியே இங்கே சுட்டிக்காட்டப் பட்டிருக்கு. அப்போ எல்லாம் 'அதெல்லாம் இல்லை' அப்படீன்னு பொத்திக்குட்டு உட்கார்ந்து இருந்தவங்க இப்போ என்னவோ இவங்களே புதுசா என்னவோ சாதிச்சா மாதிரி ப்லிம் காட்டுறாங்க. எதுக்காக இப்படீன்னா ஆட்டை கடிச்சு மாட்டைக் கடிச்சு கதை மாதிரி அந்த மூர்த்தி வளர்த்த கடா மார்பிலே பாயுற மாதிரி இவனுங்க மேலேயே பாய்ஞ்ச உடனே இவனுங்களால தாங்க முடியல. அடுத்தவன் குடும்பத்தை பத்தி தப்பா எழுதினா பரவாயில்லை. நானே போட்டோ, நியூஸ் எல்லாம் அனுப்பி வைப்பேன். ஆனா என்னைப் பத்தி எழுதக் கூடாது அப்படீன்ற எண்ணம் தான் இன்னைய நிலமைக்கு காரணம். வேற ஒண்ணுமில்ல.
குழலி, ரவி போன்றவங்களையெல்லாம் விட்டுடுங்க. ஓசி செல்லா, யாரு சார் அவரு? அதான் பதிவை விட்டு ஓடிப்போறேன்னு சொல்லிட்டல்ல. அப்புறம் எதுக்கு ராத்திரி முழுக்க உட்காந்து பின்னூட்டமெல்லாம் அனுமதிச்சு பதில் வேற குடுக்குற அப்படீன்னு கேட்டா பதிலைக் காணும்.
அதெல்லாம் சரி, எனக்கு ஒண்ணு புரியல. இவனுங்க தான் மூர்த்தி தான் விடாது கருப்புன்னு புதுசா கண்டு பிடிச்சு சட்டபூர்வமான நடவடிக்கைக்கு போயிருக்கானுங்களே. அப்படி இருக்கும் போது டோண்டு அது சம்பந்தமா எழுதினா பிரச்னை தீரவே தீராது அப்படீன்னு எப்படி சொல்றானுங்க? இங்கே என்ன சமாதானமா செய்யப் போறானுங்க? சட்டப் பூர்வமா நடவடிக்கை எடுக்கும் போது டோண்டு எழுதினா பிரச்னை தீரவே தீராதா? என்ன கண்றாவிடா இது?
அப்படீன்னா எப்பவும் போல அவன் கிட்ட அண்டர்கிரவுண்டு பேச்சுவார்த்தை பண்ணுறானுங்களா?
எப்பொ மூர்த்தி தான் விடாது கருப்புன்னு ஒத்துகிட்டானுங்களோ அப்பவே வந்து "நீங்க எல்லாம் முன்னாடியே சொன்னீங்க, அப்போ நாங்க நம்பல, இப்போ தான் நம்புறோம்" அப்படீன்னு சொல்லிருந்தா அவனுஙகள மனுசனா மதிக்கலாம். அப்படி இல்லாம என்னவோ இவனுங்களே என்னதையோ புதுசா கண்டுபிடிச்சு செய்யுற மாதிரி பில்டப்பு குடுக்கிறவனுங்களை மதிச்சு நீங்களும் பதில் போன், பின்னூட்டம், பதிவு எல்லாம் போடுறீங்களே, உங்களை சொல்லணும் சார்.
அந்த செந்தழில் ரவி, நேத்து வரைக்கும் போலியோட அல்லக்கையா இருந்தார். எல்லார் பத்தியும் போட்டுக் கொடுத்தார். அவனோட ஆத்தா பத்தி போலி எழுதின உடனே இவருக்கு பத்திகிட்டு வந்திடுச்சாம். போலி இந்த ரவி அனுப்பிய மெயில் அத்தனையும் வெளியிட்டிருக்கான். ஒரு வருஷமா தொடர்பு வெச்சிருக்கார் இவர். கேட்டா அவன் யாருன்னு தெரியறதுக்காக தொடர்பு வெச்சிருந்தாராம். என்னங்கடா இது?
எதாச்சும் நம்புற மாதிரி கடை விடுங்கப்பா.
மு.சுந்தரமூர்த்தின்னு ஒருவர் திடீர்னு வந்து ஓசை செல்லா பதிவுலே கருத்து சொல்லிருக்கான். டேய், போலி பிரச்னை ஆரம்பிச்ச போது நீங்க எல்லாம் எங்கேடா பதுங்க்கியிருந்தீங்க? இப்போ உங்க ஜாதிக்காரன் ஒருத்தனுக்கு பிரச்னைன்ன உடனே துள்ளிக்குதிச்சு ஓடி வர்றானுங்க.
விட்டுத் தள்ளுங்க சார். அவனுங்களையெல்லாம் மனுசனா மதிக்கவே மதிக்காதீங்க.
இதிலே ஒருவன் உங்க வயசுக்கும் அனுபவத்துக்கும் மரியாதை கொடுக்க தெரியாம 'நீ, வா, போ'ன்னு பதிவு போட்டிருக்கான். ஏற்கனவே ஒரு தடவை நான் சொல்லியிருக்கேன். நமக்கு எதிரியா இருக்க கூட ஒருத்தனுக்கு ஓரளவுக்காவது தகுதி இருக்கணும் சார். அதெல்லாம் இல்லாத அல்லக்கைகளை வளர்த்து விடாதீங்க.
பாத்தீங்களா, வழமையான புரியாத வார்த்தைகளில் என்னவோ பொலபித் தள்ளிருக்காரு பெயரிலி.
அது பெயரிலி அவர்களது கருத்து. ஆனால் அதற்காக டோண்டுவை தமிழ்மணத்திலிருந்து நீக்கு என்றேல்லாம் அடாவவடியாகப் பதிவு போடவில்லையல்லவா?
இருப்பினும் ஏன் அவர் என்னை மசோகிஸ்ட் என்று சொல்கிறார் என்பதை அறிய ஆவல். விழுப்புண்களுக்கு பயப்படாது யுத்தம் செய்யும் வீரனும் மசோகிஸ்டுதானோ. ஒரு வேளை பார்த்திபன் கனவில் வரும் மாரப்ப பூபதி மாதிரி போரைத் தவிர்ப்பதுதான் நல்லதோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வடகலை அய்யங்கார் என்று வெளிப்படையாக சொன்னதால் உங்களை இன்று பிரித்து மேயும் அல்லக்கை பரதேசிகள், நான் ஒரு வன்னியன், ராமதாசை ஆதரிப்பேன் என்று சொன்னவனை கேள்வி கேட்டார்களா? அல்லது இனியும் கேட்பார்களா? திராவிடன் சொன்னால் தவறில்லை இவர்களுக்கு!
அனானி அவர்களின் இப்பின்னூட்டம் திருத்தப்பட்டுள்ளது. உள்ளடக்கத்தில் மாறுதல் இல்லை. அனானி அவர்களே, அன் விகுதியைத் தவிர்க்கவும்.
செந்தழல்ரவி என்பவர் போலி குரூப்பில் இருந்தவர். போலியின் செயல்பாடுகளில் அவர் முழுமூச்சாக பங்குபெற்றவர். அருண்குமார், ம்யூஸ் ஆகியோர் வேலை இழக்கவும் இன்னும் பல பதிவுகளில் ஆபாசப்பின்னூட்டங்கள் இடவும் செய்திருக்கிறார். உங்களை பெங்களூரில் வைத்து கொலை செய்யவா என்று போலிக்கு மடல் எழுதி இருக்கிறார். ஆதாரம் போலி பதிவில் இருக்கிறது!
இப்போது கேட்டால், நான் போலியிடம் இருந்தேன், உண்மைதான், அது ஒரு யுத்தம் என்கிறார். டோண்டு யோம்கிப்பூர் யுத்தம் என்கிறார். நடுநிலை சார்பாளர்களாக போலியுடன் பேச்சு நடத்திய என்னிடம் போலியும் இது ஒருவகை போர் யுத்தி என்று மெயிலில் பதில் சொல்கிறார்.
ஆக இவங்க எல்லாரும் செய்வதுமே போர் யுத்தி. இதில் நீங்கள் போலியை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. மற்ற குற்றம் செய்தவர்களும் குற்றவாளிகளே!
முக்கியமாக இன்றைக்கு வீரம் காட்டும் திடீர் வீரர்கள் குழலி, செல்லா, செந்தழல்ரவி ஆகிய மூவரும் ஒருகாலத்தில் போலிக்கு வக்காலத்து வாங்கியவர்கள். போலியின் கூடாரத்தில் இருந்தவர்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.
போலிமேல் போலீஸ் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க குழலிக்கு என்ன தயக்கம்? அதனை முதலில் கேளுங்க டோண்டு சார்.
பெயரிலியே ஒருகாலத்தில் இரவுக்கழுகு என்ற பெயரில் மதி கந்தசாமியை ஆபாசமாக திட்டியவர் என்பது கூடுதல் செய்தி. இதனை மதியே எனக்கு மின்னஞ்சல் செய்து இருக்கிறார். வேண்டுமானால் உங்களுக்கு நான் பார்வர்டு செய்கிறேன். நீங்கள் அதனை படமாக உங்கள் பதிவில் போடுங்கள்.
சுந்தரமூர்த்தி என்பவர் குசும்பனை தேவையில்லாமல் பேசி இருக்கிறார். இது அவரது திராவிட பாக்டீரியா குணத்தையே காட்டுகின்றனது!
போலி தனி ஆள் அல்ல. அவனுக்கு பல சந்தர்ப்பங்களில் பலர் உதவி இருக்கின்றனர். இன்றும் போலியின் கூடாரத்தில் நிறைய ஆட்கள் இருக்கின்றனர். எனவே போலியை காவல்துறை விசாரித்தால் இன்று உங்களுக்கு எதிர்ராக கோஷம் போடும் இந்த திராவிட கோஷ்டிகளில் பல விளக்கெண்ணெய்கள் மாட்டும் டோண்டு சார்!
தமிழ்மணம் ஒரு பாசிச திரட்டி என்று நாங்கள் சொன்னபோது நீங்கள் கேட்கவில்லை. நாங்கள் அனைவரும் வெளியேற நீங்கள் மட்டுமே இங்கிருந்து கொண்டு மாரடித்தீர்கள்.
இவர்களுக்கு தேவை எல்லாம் சுய விளம்பரம். அதில் நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். இந்த வாரம் முழுதும் உங்கள் தலையை உருட்டுவார்கள்.
போனா மயிரே ஒன்னாச்சு. தமிழ்மணத்தி தூக்கி வீசிட்டு தேன்கூட்டில் எழுதுங்க சார். இந்த வயதில் ஏன் அந்த திராவிட வெங்காயங்களிடம் மல்லுக்கு நிற்கிறீர்கள்?
எழுத நமக்கு இடமா இல்லை? திரட்ட திரட்டிகளா இல்லை? தூக்கி தூர வீசுங்கள் தமிழ்மணம் பட்டையை. வாசனை எங்கிருந்தாலும் வண்டுகள் வரும். நாங்கள் எப்போதும் உங்கள் பதிவை படிப்போம். உங்களின் இந்த பிடிவாத குணத்தை தூக்கி வைத்து விட்டு எங்களைப்போல் வெளிவந்து என் பதிவில் இருக்கும் தமிழ்மண எதிர்ப்புப் பட்டையை போடுங்கள் சார்.
யாரை என்ன சொன்னாலும், செந்தழல் விஷயத்தில் நான் அவர் கூறுவதை நம்புகிறேன். அதையே அவ்ருக்கு பின்னூட்டமாகவும் இட்டுள்ளேன். ஆனால் அப்பதிவில் ஒருபின்னூட்டமும் இன்னும் இதுவரை வரவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//யாரை என்ன சொன்னாலும், செந்தழல் விஷயத்தில் நான் அவர் கூறுவதை நம்புகிறேன். அதையே அவ்ருக்கு பின்னூட்டமாகவும் இட்டுள்ளேன். ஆனால் அப்பதிவில் ஒருபின்னூட்டமும் இன்னும் இதுவரை வரவில்லை..//
எப்படி சார் வரும்? போலி உண்மைகளை படமாக எடுத்துப்போடுவான் என்று செந்தழல்ரவி நினைத்திருக்க மாட்டார். இப்போது மாட்டிக் கொண்டதும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை போல் தெரிகிறது. நீங்கள் ரவியை நம்பினாலும் நாங்கள் அவரை நம்ப தயாராக இல்லை!
இன்னொன்றும் கூற வேண்டும். போலி டோண்டுதான் மூர்த்தி என்று நான் சொல்லாததற்கு காரணமே என்னிடம் அதற்கான இணைய ஆதாரம் இல்லையென்பதே. ஆகவே பெயரைக் கூறவில்லை.
அந்த வகையில் ரவி, ஓசை செல்லா குழலி ஆகியோர் தேவையான ஆதாரம் சேகரித்தது நிச்சயம் பாராட்டத் தக்கதே. அவர்கள் மேல் வேறு வகையில் விமரிசனம் இருந்தாலும் இதில் ஒரு மாறுதலும் இல்லை. மேலும் செந்தழஒல் ரவி என்னுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு நிலைமையை இற்றைப்படுத்தி வந்தார் என்று இப்போது கூறுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திருமாலின் பிற அவதாரங்களிலெல்லாம், பிறந்து வளர்ந்து, காத்திற்காய்க் காத்திருந்து, அதர்மத்தை அழித்தான்! தர்மத்தைக் காத்தான்! ஆனால் இங்கோ, தன்னுடைய அன்பனுக்கு ஆபத்து என்று அழைத்தவுடன், பிறவாமல், வளராமல், காலத்திற்காய்க் காத்திராமல், நொடிப்பொழுதிலே தோன்றி, கணப்பொழுதிலே தன் அன்பனைக் காத்தவன் நரசிம்மன். தன் பக்தனைக் காக்க எத்தனை வேகம்! எத்துணை துடிதடிப்பு நம் நரசிம்மனுக்கு! பக்தனின் மீது இத்தனை அன்பு கொண்டுள்ள நரசிம்மனை நாம் நினையாது இருக்கலாமோ? அன்புடன் துதிப்போம் நரசிம்மனை! நெஞ்சமெல்லாம் அவன் நிறையட்டும்! ஆபத்தும், விபத்தும், பயங்கரவாதமும் அழிந்தொழியட்டும்! அமைதியும், ஆனந்தமும் எங்கும் நிலவட்டும்!
அழைத்துப் பாருங்கள் நரசிம்மனை!
ஆபத்தை வெல்லும் நரசிம்மனை!
நினைத்துப் பாருங்கள் நரிசம்மனை!
நிம்மதி தரும் நரசிம்மனை!
//அதுவும் சில மாதங்களுக்கு முன்னால் கூட விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்று என்னுட்ன் தொலைபேசியில் பேசும்போது அடித்து சொன்னவர் குழலி அவர்கள்.
//
டோண்டு ராகவன் அவர்களுக்கு பொய்யும் சொல்லத்தெரியும் என்று புரிந்து கொண்டேன்.... விடாது கருப்புவும் மூர்த்தியும் ஒன்றா என்று எனக்கு தெரியாது என்று சொன்னதை மூர்த்தி இல்லை என்று அடித்து சொன்னதாக கூறும் ராகவன் அவர்களே இது பொய்யென்று தெரியவில்லையா? உடனே சாட்டில் சொன்னேன் மெயிலில் சொன்னேன் என ஆரம்பிக்காதீர்கள் உங்களுடனான அத்தனை மெயில் பரிமாற்றங்கள் சாட் என அத்தனையும் பொதுவில் வைக்க தயாராக உள்ளேன், அதே போல் மூர்த்தி, விடாது கருப்பு என்ற மெயில்கள் சாட் என அத்தனையும் பொதுவில் வைக்க தயாராக உள்ளேன்....எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை....
//அந்த வகையில் ரவி, ஓசை செல்லா குழலி ஆகியோர் தேவையான ஆதாரம் சேகரித்தது நிச்சயம் பாராட்டத் தக்கதே.//
ஒருநாள் உங்களுக்கு ஆதரவாகப் பேசினால் உடனே நம்பி விடுவதா? சார் நீங்கள் பால் சார். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்கள்.
உங்களை பாராட்டிய அதே வாய்தான் இன்றைக்கு புழுதி வாறி தூற்றுகின்றது. பாருங்கள் ஆளாளூக்கு உங்களை வசை பாடுகின்றனர்.
இனியும் இந்த அல்லக்கைகளை பாராட்டிக் கொண்டிருக்காமல் ஆக வேண்டிய வேலைகளைப் பாருங்கள் டோண்டு சார்.
என்னைப் பொருத்தவரை போலி, செல்லா, செந்தழல்ரவி, குழலி எல்லோரும் ஒன்றுதான். போலி மறைமுகமாக உங்களை எதிர்த்தான். ஆனால் இவர்கள் தங்கள் சொந்தப்பெயருடனே உங்களைப் பற்றி ஆபாசமாக எழுதுகின்றனர். அதான் வித்தியாசம்.
//டோண்டு ராகவன் அவர்களுக்கு பொய்யும் சொல்லத்தெரியும் என்று புரிந்து கொண்டேன்.... விடாது கருப்புவும் மூர்த்தியும் ஒன்றா என்று எனக்கு தெரியாது என்று சொன்னதை மூர்த்தி இல்லை என்று அடித்து சொன்னதாக கூறும் ராகவன் அவர்களே இது பொய்யென்று தெரியவில்லையா?//
வாதத்துக்கு அப்படியே தெரியாது என்று கூறியதாகவே வைத்துக் கொள்வோம். அது மட்டும் உண்மையா? வீரமணி நிகழ்ச்சியில் மூர்த்தி வந்தானா என்பதற்கு நான் அவன் போட்டோ வேண்டுமானால் அனுப்பட்டுமா எனக் கேட்டதற்கு நீங்கள் மூர்த்தியை பார்த்திருக்கிறீர்கள் ஆகவே வேண்டாம் என்றுதானே கூறினீர்கள். அந்த மீட்டிங்கைபற்றி விகவ் எழுதிய பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டம் ஞாபகம் இருக்கிறதா?
மேலும், நான் நீங்கள் மூர்த்தியின் கூட்டாளி என்று கூறவில்லை. நமக்கு ஏன் இந்த வம்பு என்று நீங்கள் விலகியிருந்ததாகத்தான் எண்ணியுள்ளேன். ஏனெனில் பலமுறை போலியின் கமெண்டுகள் உண்மை டோண்டுவுடையது அல்ல என்று நீங்களே என்னைக் காத்துள்ளீர்கள். அதற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டவன் இந்த டோண்டு ராகவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒன்னுமெ பிரியல, யாராச்சும் சொல்லுங்க
மசோகிஸ்ட் னா என்ன?
காக்கா ஊஷ்?
ஷ்டாசி?
யோம்கிப்பூர்?
விட்ஜட்?
ஆர்குட்டி?
நிஜமாவெ பிரியல
//வாதத்துக்கு அப்படியே தெரியாது என்று கூறியதாகவே வைத்துக் கொள்வோம். அது மட்டும் உண்மையா?
//
நிச்சயமாக ஏனெனில் அப்போது சந்தேகம் மட்டுமே இருந்தது, உண்மையா என்று தெரியாது, விடாது கருப்பு பதிவில் என் பின்னூட்டத்தை மட்டும் காப்பியெடுத்து போட்டுக்கொண்டு திரிகின்றீரே அதற்கு கீழே விடாதுகருப்பு பின்னூட்டம் உள்ளதே, நான்(விடாதுகருப்பு) உங்களை(என்னை) சந்திக்கவேயில்லைய்யென்று அதை வசதியாக மறைத்ததேனோ?
டோண்டு அய்யா மூர்த்திக்கும் உங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவன் அசிங்கமாக பேசுவான் மெயில் அனுப்புவான் நீங்கள் அசிங்கமாக பேசவோ மெயில் அனுப்பவோ மாட்டீர்கள் (குறைந்த பட்சம் என்னிடத்தில்)...
இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை....
நன்றி
மூர்த்தி தான் விடாது கருப்பு என்று முன்னரே பிகேஎஸ், மாயரத்தான் போன்றோர் இதே ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறார்களே டோண்டு.
குழலி தனிப்பட்ட முறையில் வெகுவாக பாதிக்கப்பட்டவுடன் தான் வி.க. வும் மூர்த்தியும் ஒன்று தான் என்று ஒப்புக் கொள்ள மனம் வந்திருக்கிறது.
'இலைக்காரன்' என்ற பெயரில் எழுதுவது 'குழலி' தான்.
இது தெரியுமா உங்களுக்கு?
//செந்தழல்ரவி என்பவர் போலி குரூப்பில் இருந்தவர். போலியின் செயல்பாடுகளில் அவர் முழுமூச்சாக பங்குபெற்றவர். அருண்குமார், ம்யூஸ் ஆகியோர் வேலை இழக்கவும் இன்னும் பல பதிவுகளில் ஆபாசப்பின்னூட்டங்கள் இடவும் செய்திருக்கிறார்.//
i wanted to clarify this statement.
i never got problem b'cos of ravi. he is very nice guy.
of course i faced lot of problems b'cos of LuckyLook and Moorthi .Mr Dondu please publish this comment.
arun kumar
please everybody leave Dondu alone
he is a man with nice heart
I don't care about his caste religion etc...
he has right to write like others
all of them have like and dislike so what is the problem here?
Thanks
Eela tamilan
//எனக்கு முதலில் பின்னூட்டமிடுபவரின் தளத்துக்கு சென்று அவர் மட்டுறுத்தல் செய்யாது இருந்தால் செய்யும்படி ஆலோசனை கூறுவது எனது வழக்கம்.
//
is it? you didnt warn me :)
anyway, i still suggest that you don't write anymore on this topic.
Everyone understood who the Psycho is and who Moorthi is and who all helped him.
If your plan is to get more hits by improvising the psycho concept everyday, there wont be an end to the issues surrounding you.
as I said a thousand other times, let this issue to settle down and write your usual posts without touching the psycho topic.
செந்தழல் ரவி பற்றிய எனது கருத்தை வலியுறுத்துவதாகவே உங்கள் பின்னூட்டம் அமைகிறது குறித்து மகிழ்ச்சி அருண் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//'இலைக்காரன்' என்ற பெயரில் எழுதுவது 'குழலி' தான்.
இது தெரியுமா உங்களுக்கு?//
தெரியாது, தெரிந்து கொள்ள ஆசையும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
is it? you didnt warn me :)
Sorry for the act of omission.
As for the other parts in this comment of yours, what do you expect me to do if all join in condemning me and asking for my removal from Thamilmanam and all that. I just gave my side of the story.
In effect, people are asking me to desist, whereas every Tom Dick and Harry and their brothers are bent upon posting topics after topics condemning me. My patience can stretch only that long. Beyond that comes the breaking point.
Regards,
Dondu N.Raghavan
Dondu sir,
Please publish all of my comments. We are your friends from thamizbarathi.
Dondu Sir,
I am your long time reader. Now you look like a joker. All your stories prove that you are a pretty old man beyond to be educated.
Dont you understand the reason behind all your friends and wellwishers messages?
No need to ban you, Be here as an example of a moron.
Are you happy with this title?
Being an elder person than you by an year, I thought that my commonsense may make some sense to you. AM I a FOOL?
Your Wellwisher
//As for the other parts in this comment of yours, what do you expect me to do if all join in condemning me and asking for my removal from Thamilmanam and all that. I just gave my side of the story//
hmm. I just read all the related posts. I must say, I understand the reasoning behind this post.
btw, I would suggest you to write a normal, very normal, good, very good, post about some interesting topic, which will attract everyone and invite them to comment.
I just want to see how many comments you get from non-anony's.
I want to see if people really dislike you or still ignore you or is still scared about getting pervert emails. i also want to know if the pervert emails are sent only if your blog involves casteism or if the emails are sent no matter what you write :)
just a thought.
//btw, I would suggest you to write a normal, very normal, good, very good, post about some interesting topic, which will attract everyone and invite them to comment.//
அப்படியானால் இப்பதிவுக்கு முந்தையப் பதிவையே எடுத்து கொள்ளவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னுடைய பின்னூட்டம் வெளியிடப்படவில்லையே இன்னும்...
அதர் ஆப்ஷனில் போட்டிருக்கிறேன்...மேலும் அதை போட்டது நான் தான் என்று ISO 9002 நிறுவனத்தின் ஓனர் தலை மேல் சத்தியம் செய்கிறேன்...
அதில் தேவையற்ற பகுதிகள் இருந்தால் அதை எடிட் செய்துகொள்ளவும் உரிமை தருகிறேன்
அதர் ஆப்ஷனில் வந்த செந்தழல் ரவி,
சத்தியமெல்லாம் எதற்கு? எனது பின்னூட்டத்தை போட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் போடவில்லை. ஆகவே சந்தேகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Being an elder person than you by an year, I thought that my commonsense may make some sense to you. AM I a FOOL?//
ஐயா என்னை விட ஓர் ஆண்டு பெரியவரே. பெயர் போட்டு எழுத துணிவில்லாதவர்கள் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டியதில்லை.
நான் நானாகவே இருப்பேன். மண்டபத்தில் இருந்து கொண்டு எழுதித் தந்ததையெல்லாம் ஒப்பிப்பவன் நான் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முந்தைய பதிவுக்கு வந்ததை போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்...
நீங்கள் சிரித்ததாக கூறிய பின்னூட்டம் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை இன்னும்...நான் லேபில் இருக்கிறேன்...கணினியில் மட்டுமே அக்ஸஸ்...!!!
விட்ஜட் எல்லாம் போடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று எனக்கு முதலில் பின்னூட்டமிடுபவரின் தளத்துக்கு சென்று அவர் மட்டுறுத்தல் செய்யாது இருந்தால் செய்யும்படி ஆலோசனை கூறுவது எனது வழக்கம்.//
எதன் காரணமாக உங்களுக்கு விட்ஜெட் மீது நம்பிக்கை இல்லை.. உங்களது பதிவுக்கு வருபவர்கள் விட்ஜெட் எதையும் படிக்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?
வெறுமனே மட்டுறுத்தல் செய்யுங்கள் என்று மட்டும் சொன்னால் போதுமா? என் பதிவில் பின்னூட்டம் இடுவதால் உங்களது பெயரில் ஆபாசத் தளம் துவக்கப்பட்டு அதில் உங்களது குடும்பத்தினரைப் பற்றிக் காமக் கதைகள் எழுதப்படும். தொடர்ந்து இத்தாக்குதலுக்கு நீங்கள் ஆட்கொள்ளப்படுவீர்கள் என்பதை விளக்கமாகச் சொன்னீர்களா? அப்படிச் சொன்னால்தானே அந்த சைக்கோத்தனத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடியும்.. வெறுமனே மட்டுறுத்தல் செய்.. தப்பித்துக் கொள்வாய் என்றால், இப்போது அதியமானின் நிலை என்ன ஸார்..?
//மேலே கூறியதில் சில தவறுகள் உள்ளன. எனது முதல் யோம்கிப்பூர் பதிவு போட்டு ஐந்து நிமிடத்துக்குள்ளாக மூர்த்தியின் டுண்டூ பதிவில் அசிங்கப்பதிவு போடப்பட்டது. அவன் தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆக அவன் சத்தியம் ஒன்றும் செய்யவில்லை.
ஆகவே இரண்டாம் யோம் கிப்பூர் பதிவு போட்டு அவனை அலட்சியம் செய்ய ஆரம்பித்தேன். என்னைப் பற்றி ஆர்குட்டில் அசிங்க ப்ரொபைல்கள் போட்டான். இப்போது கூட அது சம்பந்தமாக பல டெலிஃபோன் அழைப்புகள் வருகின்றன.//
அவன் உங்களைப் பற்றி என்ன பேசுகிறான்? என்ன எழுதுகிறான் என்பதை வாட்ச் செய்து அதனை வலைப்பதிவர்களிடம் தெரிவிப்பதுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி என்று நினைத்தீர்களா?
//நீங்கள் பின்னூட்டமிட்டதால்தான் அவன் உங்களை இவ்வளவு அசிங்கமாகத் திட்டினான் ஆகவே நீங்கள்தான் அவனது இச்செய்கைக்கும் பொறுப்பு எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ அதே அபத்தம்தான் என்னையும் குறை கூறுவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.//
நான் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்களுடைய பதிவில் பின்னூட்டம் போடுவதால்தான் பலருக்கும் ஆபாச அர்ச்சனைகள் வந்தன. வருகின்றன.. நீங்கள் என் தளத்திற்குள் நிஜப் பெயருடன் யாரும் வராதீர்கள். அப்படி வந்தால் இத்தகைய பரிசுகள் கிடைக்கும் என்று வெளியில் சொல்லியிருந்தால் என்னை மாதிரி புதியவர்கள் மாட்டிக் கொண்டிருக்க மாட்டார்களே என்பதால்தான் இந்த நிகழ்வு உங்களது வீட்டில்(தளத்தில்) நிகழ்ந்ததால் ஒருவகையில் இதற்கு நீங்களும்தான் பொறுப்பாவீர்கள்.. தப்பிக்க நினைக்க வேண்டாம்.
//மற்றப்படி விட்ஜட் நீங்கள் போட்டுக் கொண்டு "டோண்டுவின் வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே அவரது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு அவர் பொறுப்பில்லை...” என்று போட்டுக் கொள்வதைப் பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை.//
ஆக, "எனக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை.. என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும்தான் எனக்குக் கவலை.. மற்றவர்களுக்கு குடும்பம், தாய், தந்தை, சகோதரன், சகோதரி இருக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. ஆனால் அவர்களெல்லாம் எனது வலைத்தோழர்கள்தான்.. எனக்கு பின்னூட்டம் போட வரத்தான் வேண்டும்" என்கிறீர்கள்..
வழியில் ஒரு சாக்கடையில் அடைப்பு இருந்து நாற்றமடித்தால் அதை சுத்தம் செய்யும்வரை அந்தச் சாக்கடை வழியாகச் செல்லாமல் தவிர்க்கலாம். அல்லது மூக்கைப் பொத்திக் கொண்டும் செல்லாம். ஆனால் சாக்கடை இருப்பதையோ சொல்ல மாட்டேன். விழுந்து எழுந்து துடைத்துக் கொண்டு போகிறவர்கள் போகலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
பரவாயில்லை.. நல்ல மனதுதான் உங்களுக்கு..
வாழ்க வளமுடன்..
//வெறுமனே மட்டுறுத்தல் செய்யுங்கள் என்று மட்டும் சொன்னால் போதுமா? என் பதிவில் பின்னூட்டம் இடுவதால் உங்களது பெயரில் ஆபாசத் தளம் துவக்கப்பட்டு அதில் உங்களது குடும்பத்தினரைப் பற்றிக் காமக் கதைகள் எழுதப்படும். தொடர்ந்து இத்தாக்குதலுக்கு நீங்கள் ஆட்கொள்ளப்படுவீர்கள் என்பதை விளக்கமாகச் சொன்னீர்களா?//
அதைச் சொல்லாமல் வருவேனா? போலி டோண்டு என்ற இழிபிறவியிடமிருந்து உங்களுக்கு அசிங்கப் பின்னூட்டம் வரும் என்பதையும்தான் கூறியிருக்கிறேன்.
உங்களுக்கே எவ்வளவு முறை எலைக்குட்டி சோதனை பற்றியெல்லாம் சொல்லிக் ஒடுத்தேன். பதிவர் எண்ணை அடைப்புக் குறிக்குள் போடச் சொன்னது நாந்தானே. இல்லை என்பதை உங்களால் மறுக்க முடியுமா? அதெல்லாம் நடந்த பிறகும் நீங்கள் பின்னூட்டம் இட்டது உங்கள் முடிவுதானே? மேலும் நான் அனானி ஆப்ஷன் திறந்ததுமே போலியிடமிருந்து பின்னூட்டம் போடுபவர்களை காப்பாற்றத்தானே. இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்? மேலும் விட்ஜெட்டை உங்கள் பதிவில் போடுவேன் என்பதற்குத்தான் எதிர்வினையாக தாராளமாகப் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன். இந்த விஷயத்தில் மற்ற எல்லோரையும் விட உங்கள் விஷயத்தில் மிகவும் அதிக அக்கறை எடுத்து கொண்டேன், இதுவும் போதவில்லை நான் என்ன செய்ய இயலும்?
மேலும் வலைப்பதிவர்கள் ஒன்றும் குழந்தை இல்லை, அவர்களுக்கு ஸ்பூன் ஃபீடிங் எல்லாம் செய்ய. பின்னூட்டம் இடுவத்ஹோ இடாததோ அவர்தம் உரிமை அதை முடிவு செய்ய மூர்த்திக்கு ஒரு அதிகாரமும் இல்லை என்பதை உணர முடியாத பப்பாக்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா,
தங்களது தன்னிலை விளக்கமெல்லாம் ஓக்கே தான். ஒரு (அறிவுரை அல்ல!) ஆலோசனை /வேண்டுகோள்! (ஏன் மற்றவரிடம் இந்த ஆலோசனையைக் கூறவில்லை என்று எதிர்கேள்வி கேட்க மாட்டீர்கள் என்ற சின்ன நம்பிக்கையில்!)
குறைந்த பட்சம் ஒரு பத்து நாட்களாவது, இப்பிரச்சினை குறித்து எதுவும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) எழுதாமலும், ஆள் காட்டும் / தூண்டி விடும் பின்னூட்டங்களை அனுமதிக்காமலும் இருக்கவும். இடைப்பட்ட பத்து நாட்களில், தங்களைப் பற்றி ஏதாவது தவறாக எழுதப்பட்டதாக தாங்கள் கருதினால் (யாரும் எதுவும் எழுத மாட்டார்கள் என்றும், பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்றும் நம்புகிறேன்) மீண்டும் வந்து தங்கள் "மகாபாரத" யுத்தத்தைத் தொடரவும்!!! மகரநெடுங்குழைக்காதனை மனதில் நிறுத்தி, ஒரு பத்து நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்து பாருங்களேன்!
இந்த பின்னூட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் கூறியது பற்றி யோசித்து செயல்பட்டாலே போதுமானது.
நன்றி.
எ.அ.பாலா
நீங்கள் சொல்வது ஏற்கக்கூடியதுதான் என்றென்றும் அன்புடன் பாலா அவர்களே. குறைந்த பட்சமாக பத்து நாளைக்கு இப்பதிவிலோ எனது மற்றப் பதிவுகளிலோ போலி பற்றி பேசப் போவதில்லை. பின்னூட்டங்களும் அனுமதிக்க மாட்டேன்.
இந்தப் பதிவு கூட போட்டே இருக்க மாட்டேன். தேவையின்றி வர்ஜா வர்ஜமின்றி என்னத் தாக்கிப் பதிவுகள் போட்டு பொய்களையும் பலர் பரப்பியதாலேயே இந்த தன்னிலை விளக்கச் சீறல்.
ரொம்பத் தேவைப்பட்டால் மற்றவர் பதிவுகளில் அவ்வப்போது setting the record straight.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment