9/02/2007

Staatssicherheit (Staasi)

Staatssicherheit (Staasi) ஷ்டாஸி என்ற பெயரில் பயத்துடன் உச்சரிக்கப்பட்ட இது சமீபத்தில் 1990-ல் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தஜெர்மன் ஜனநாயக் குடியரசின் உளவுத் துறை ஆகும். இக்குடியரசு இருந்தவரை இது அந்நாட்டின் முடிசூடா மன்னனாகவே இருந்தது.

சமீபத்தில் 1949-ல் உருவான இக்குடியரசு முதலிலிருந்தே பலப்பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளது. அங்குள்ள வறுமை, கொடுங்கோன்மை பொறுக்கமுடியாது பலர் மேற்கு ஜெர்மனிக்கு ஓடினர். முக்கியமாக கிழக்கு பெர்லினிலிருந்து மேற்கு பெர்லினுக்கு. நிலைமை சமாளிக்க முடியாது போகவே அப்போது அந்நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த Walter Ulbricht பெர்லின் சுவர் எழுப்பினார். 28 ஆண்டுகள் இருந்த அச்சுவர் 1989-ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜெர்மனிகளின் இணைப்பு மேற்கு ஜெர்மனியின் தலைமையில் உருவாயிற்று.

இப்பதிவில் அவற்றைப் பற்றி எழுதப்போவதில்லை. ஷ்டாஸிதான் இப்பதிவுக்கான விஷயம். அதிலும் முக்கியமாக அதன் ஆவணங்களில் வெளியான பல ரகசியங்கள். இவ்வமைப்பு ஒரு பெரிய தகவல் மையத்தையே தன்னுள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அதற்கு செய்தி அளித்தவர்கள் நாட்டின் குடிமக்களில் கணிசமான பகுதியினர். பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் தத்தம் வீடுகளில் பெற்றோர் எந்த டிவி சானலை பார்க்கின்றனர், என்னென்ன ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்கின்றனர். வீட்டில் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனர், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் கூறினர். அதே போல பக்கத்து வீட்டு மாமா, எதிர்வீட்டு சித்தப்பா என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டன. நண்பன் மேற்கு ஜெர்மனி பேப்பர்களுக்கு தனது பின்னூட்டத்தை மாற்றுப் பெயரில் கடிதங்களாகப் போட்டதும் இந்த உளவு விஷயங்களிலிருந்து தப்பவில்லை. வெளிநாட்டுகாரர்கள் கிழக்கு ஜெர்மனிக்காக உளவு செய்ததும் வெளிவந்தன.

சோவியத் யூனியன் மறைந்து கே.ஜி.பி. கலைக்கப்பட்ட போது கூட கேரள கம்யூனிஸ்டு தலைவர்கள் சோவியத் யூனியனிடமிருந்து பணம் பெற்றதும் வெளியில் வந்ததையும், அதை அக்காலக் கட்டங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்ததையும் இங்கு போகிறபோக்கில் குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இப்பதிவின் முக்கியக் கருப்பொருளுக்கு வருகிறேன். ஷ்டாஸி ரகசியங்கள் வெளியானதும் பல குடும்பங்கள், நண்பர்கள் வட்டாரங்களில் பூகம்பங்கள் ஏற்பட்டன. யாரைத்தான் நம்புவதோ எனத்துவண்டான் ஒருவன், அவன் பெயரும் இன்னொரு ஷ்டாஸி ஆவணத்திலிருந்து வெளிவரும் வரை. பிறகு அசடு வழிந்தான். ஓரளவுக்கு மேல் எதுவும் பழகிப் போகும், ஊரே சிரித்தால் கல்யாணம் என்ற கோட்பாட்டில் மறப்போம் (ரொம்ப கஷ்டம்) மன்னிப்போம் (சற்றே சுலபம்) என மனதைத் தேற்றிக் கொண்டனர். அதுதான் முக்கியம். வேவு பார்த்தது என்னவோ உண்மைதான், கண்டனத்துக்குரியதுதான். ஆனால் முக்கிய எதிரி ஸ்டாஸிதான், அதுவும் அதை உருவாக்கிய கிழக்கு ஜெர்மன் அரசும் ஒழிந்தன என்பதே முக்கியம் என்பதை மக்கள் நல்ல வேளையாக நினைவில் வைத்துக் கொண்டனர். ஆகவே பைத்தியமாகாமல் பலர் தப்பித்தனர். வாழ்க்கை தொடர்ந்தது. பொருளாதார சிக்கல்களை சமாளிக்கவே நேரம் இல்லாத போது இதையெல்லாம் எவ்வளவு நேரத்துக்குத்தான் பார்த்து கொண்டிருப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

Anonymous said...

You are not changing your attitude, you are creating more problems.
It is bcos of you many bloggers are having problems

Anonymous said...

unnidam neRru rajvanaj pesinaana ? paarppom

:-)

Vehrmacht team member

dondu(#11168674346665545885) said...

//You are not changing your attitude, you are creating more problems.
It is bcos of you many bloggers are having problems//

நேரடியாக சொந்தப் பெயரில் கூற என்ன பயம்? உங்களை மாதிரி பயந்தாங்கொள்ளிகள்தான் பிளாக்கர்களின் பிரச்சினைகளுக்கு காரணம்.

ஷ்டாஸியின் ரகசியங்கள் வெளிவராமலா போயின?

ஒன்று செய்யுங்கள். இப்பதிவு ஊசிப்போன பதிவு என்ற பெயரில் வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் கூறிக்கொள்ளுங்கள்.

டோண்டு ராகவனுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதற்கு பங்கம் விளைவிப்பவர்கள் கூறுவதை கேட்க மாட்டான். அவ்வகையில் அவன் எப்போதுமே மாறமாட்டான்.

நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

இஸ்ரேலை அடக்க முயன்ற அமெரிக்காவுடனான தனது நட்பு ஒப்பந்தத்தையே ஒரு முறை நிராகரித்த நாடு அது.

ஈராக்கை இஸ்ரேல் முதலில் எதிர்த்தபோது அது கம்யூனிச எதிர்ப்புப் பாசறையில் இருந்தது, ஆகவே அது கெடுதலாக இருக்காது என்று ஆதரித்தது அமெரிக்கா. அது சரித்திர உண்மை.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//unnidam neRru rajvanaj pesinaana ? paarppom//
அது என்ன அவமரியாதையான அன் விகுதி?

ஆம் பேசினார். அதுக்கென்ன இப்போ. அரசியல் கருத்துகளில் என்னுடன் மாறுபட்டாலும் மரியாதைக்குரிய நபர் அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வேவு பார்த்தவ சில வெங்காயங்கள் இப்போ அமைதியாக இருக்கு பாருங்க...அதுக்கு ஸாடசி-புடாஸின்னு பேரு சொல்லுங்க....

இதுல இன்னுமொரு கூத்து என்னன்னா, சிங்கப்பூர்லிருந்து குழலி எதிர்த்து பதிவெழுதரார், அவருடன் கூட இருக்கும் கோவி, தனக்கு ஒன்றுமே தெரியாதுன்னு படம் போடராரு.

கருப்பு சொல்லும் அந்த 5 பேரில், மிச்சம் 4 யார்?.....இதில் சம்மந்தமே இல்லாததுபோல தற்போது அமைதிகாக்கும் சில பட்டணத்து பாசறைச் சிங்கங்கள் தாம். அதுக்கும் ஸாடாசிக்கும் ஏதானும் சம்மந்தம் உண்டா டோண்டு சார்? :-)

dondu(#11168674346665545885) said...

எடிட் செய்யப்பட்ட பின்னூட்டம் இது. பெயர் மட்டும் மறைக்கப்பட்டது.

"வேவு பார்த்தது என்னவோ உண்மைதான், கண்டனத்துக்குரியதுதான். ஆனால் முக்கிய எதிரி ஸ்டாஸிதான், அதுவும் அதை உருவாக்கிய கிழக்கு ஜெர்மன் அரசும் ஒழிந்தன என்பதே முக்கியம் என்பதை மக்கள் நல்ல வேளையாக நினைவில் வைத்துக் கொண்டனர். ஆகவே பைத்தியமாகாமல் பலர் தப்பித்தனர்.

வாழ்த்துக்கள்

அன்புடன்,
xxxxx"

ramachandranusha(உஷா) said...

டோண்டு சார்,
நான் யாரூக்கும் என்று அறிவுரை சொல்வது இல்லை. மேலும் நீங்கள் என்னை விட வயதிலும்
அனுபவத்திலும் மூத்தவர். ஒரு சிறிய விண்ணப்பம். கொஞ்ச நாட்களுக்கு "போ" வில் ஆரம்பித்து "லி"
யில் முடியும் மேட்டரைப் பற்றி நேரிடையாகவோ, மறை முகமாகவோ எந்த பதிவும் எழுத வேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பல முறை இவ்விஷயம் கிளறப்பட்டும் ரிசல்ட் என்னவோ தோல்விதான். நீங்கள் அனுமதிக்கும் பின்னுட்டங்களில் அனானிமஸ் மற்றும் புது புது புனை பெயர் சூட்டிக் கொண்டு பின்னுட்டம் மூலம் பிரச்சனையை பெரியதாக்குக்கிறார்கள். பல முறை அசிங்கப்படுத்தப்பட்டவள் என்ற முறையில் இந்த விண்ணப்பம். பிறகு உங்கள் விருப்பம்.

Anonymous said...

//அவருடன் கூட இருக்கும் கோவி, தனக்கு ஒன்றுமே தெரியாதுன்னு படம் போடராரு. //

நல்லாச்சொன்னய்யா, இதுல இன்னுமொரு கூத்து ஞாபகம் வருது....கோவியின் கூட்டணித்தலைவர் விஎஸ்கே தனது சிங்கை விஜயத்தில் மூர்த்தி@சதீஷ் பார்க்க முயற்சித்தது.....பின் விரமணி விஜயத்தில் கருப்புடன் இழைந்த கும்பலில் யாரெல்லாம் இருந்தார்கள்?...பின் அவர்கள் போட்ட பதிவுகளை இப்போ டெலிட் பண்ணிவிட்டார்களா?....

என்னதான் பாமாக எனக்கு பிடிக்காத கட்சி என்றாலும், குழலி இந்த விஷயத்தில் பாராட்டப் படவேண்டியவரே.....அவருக்கு முன்னமே தெரிந்திருந்தாலும், 2-3 பேர் நேரடியாக எதிர்க்க ஆரம்பித்தவுடன் தானும் களத்தில் குதித்துவிட்டார்......சிலரைப் போல முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலாமல்....

வாழ்க பதிவுலக அரசியல்.....
வாழ்க தந்தை பெரியார், அண்ணா நாமம் வாழ்க, கருணாநிதி குடும்ப புகழ் ஓங்குக...

dondu(#11168674346665545885) said...

வேவு பார்த்தவர்களை விட ஷ்டாஸி மறைந்ததே முக்கியம். ஆகவே யார் பெயர் வெளிவந்தாலும் அதிர்ச்சி அடைய மாட்டேன், அவர்களை முன்கூட்டியே மன்னித்து விடுகிறேன் என்பதைக் கூறுவது டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

விஜயன் said...

பரபரப்பா எப்பவும் எதுவும் வேணும்ல. நெருப்பு அணைஞ்சுட்டா குளிர் காய முடியாதில்ல.

அணைய விடாம பாத்துக்கணும். அணைஞ்சுட்டா நமக்கு எழுதறதுக்கு வேற எதுவுமே இல்ல.அதுல தான் நம்ம வெற்றியே.

நமக்கு யுத்தம் தான் முக்கியமே ஒழிய யுத்த முறை இல்ல. வாலிய கொன்ன மாதிரி.

அப்பதான் நாம 'ஹிட்' ஆக முடியும்.

சூப்பர் டோண்டு அய்யா.

(பேரோட போட்டுட்டேன்)

dondu(#11168674346665545885) said...

பேரோட வந்ததுக்கு நன்றி விஜயன் அவர்களே.

உங்களது http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html -ல் என் பதிவிலிருந்து context -லிருந்து பிரித்து, திரித்து பதிவிட்டவர்தானே நீங்கள். அவ்வாறு பிரித்தெழுதியதை ஒத்துக் கொள்ள நேர்மை இருந்த உங்களுக்கு காண்டக்ஸ்ட் அளித்ததும் கருத்து கூற மனமில்லையே.

மற்றப்படி நீங்கள் இங்கு கூறியது உங்கள் கருத்து என்ற அளவில் மனதளவில் குறித்து கொண்டேன். அவற்றுடன் ஒத்துக் கொள்ளவில்லை என்பதையும் கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வணக்கம் ராமச்சந்திரன் உஷா அவர்களே. ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்கள் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. போலி நிஜமாகவே ஒழிந்தான் என்ற களிப்பையும் ஏற்படுத்துகிறது.

நிற்க. இப்போது நடந்த நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்தது போன்ற உணர்வைத் தருகின்றன. விளக்குகிறேன்.

இதே போல தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியபோது என்னைத் தாக்கி பல பதிவுகள் வந்தன. காசி அவர்களுக்கு நன்றி தெரிவித்து நான் போட்ட பதிவு பலமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டது. டோண்டு இருந்ததால்தானே மட்டுறுத்தல் வந்தது என்று பல தாக்குதல்கள் தொடர்ந்தன. அப்போதும் எல்லோருக்கும் பதிலளித்தேன். நாளடைவில் நான் கூறியதே உண்மை என்ற நிலை ஏற்பட்டதும்தான் தாக்குதல்கள் குறைந்தன.

இப்போதும் நிலைமை கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. உங்கள் அறிவுரையை மனதில் கொண்டேன். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SurveySan said...

I think Usha is right. lets not make a mockery of this topic.

enough attention has been gained and lot of termites are coming out of the woods.
Thenkoodu has removed the problem blogs and some other good things have also happened.

Lets wait till this thing settles down.

Some of us have already complained and some will be complaining in the next 2 weeks.

So, give it some time and continue the usual posts and not do special mentioning and make things more awkward. Its a mess as it is.

If you continue to get the emails, please forward me the contents as-is without altering the email.

thanks

dondu(#11168674346665545885) said...

//Lets wait till this thing settles down.//

No problem Surveysan. I made my point. You and Usha are of course right. Already I have rejected many further comments in this connection.

What provoked me was the way this Osai Chella went about dictating to me. He wrote a blog post on me referring to me by name and when I gave a decet comment, he not only rejected it but also referred to it in a hectoring (எகத்தாளமாக) manner in his further comments in that blog post. He tried to order me about and this I cannot tolerate. Again his latest blog post about me is full of contempt for me. Let me hasten to add that the feeling of contempt is mutual.

When I was fighting a lone battle against this Moorthi, this Osai Chellaa was nowhere in picture. And I dont care for such comments from the likes of him.

Regards,
N.Raghavan

dondu(#11168674346665545885) said...

நண்பர்களின் ஆலோசனை பேரில் இப்பதிவிலும் முந்தைய பதிவிலும் மூர்த்தி என்னும் போலி டோண்டு மற்றும் அல்லக்கைகள் பற்றிய பின்னூட்டங்கள் இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டாது.

அதே சமயம் இஸ்ரேல் மற்றும் ஷ்டாஸி பற்றிய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இரண்டாம் சாணக்கியன் said...

I think this is another one combination work at present situation. But misunderstanding about the spys..

dondu(#11168674346665545885) said...

ஆம் இரண்டாம் சாணக்கியன் அவர்களே. ஷ்டாஸி போனால் என்ன, கே.ஜி.பி. போனால் என்ன. அவற்றின் இடத்தில் வேறு உளவு அமைப்புகள் வரும். உண்மை கூறப்போனால் உளவு அமைப்புகள் இன்றியமையாதவை. அவை இல்லாது அரசு இல்லை என்பதை திருவள்ளுவரே பொருட்பாலில் கூறியுள்ளார்.

கஷ்டம் எப்போது வரும் என்றால், ஆளும் வர்க்கத்தினர் தங்கள் நலத்துக்காக நாட்டின் அமைப்புகளை வளைப்பதுதான். இதுதான் பழைய கிழக்கு ஜெர்மனியிலும் சோவியத் யூனியனிலும் நடந்தது. முக்கியமாக சர்வாதிகார நாடுகளில் இந்த தவறான உபயோகம் மிகவும் அதிகம். உதாரணம் ஈராக், ஈரான் ஆகியவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது