9/29/2007

அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனே

அறுபதுகளில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ல்லாய்ட் சி. டக்லஸ் மிகவும் முக்கியமானவர். அவரது ஆங்கில நடை எளிமையாக இருக்கும். மனதைக் கவரும். எல்லாவற்றையும் விட முக்கியமாக கதைகளின் கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் எழுதிய நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது 1929-ஆம் ஆண்டு அவர் எழுதிய Magnificent Obsession என்னும் நாவல்.

கதை சுருக்கம் பின்வருமாறு.

ராபர்ட் மெர்ரிக் என்னும் இளைஞனுக்கு படகு விடும்போது விபத்து ஏற்படுகிறது. அவனுக்கு திறமை வாய்ந்த மருத்துவக் குழு அவசர சிகிச்சை அளித்து அவனைக் காப்பாறுகிறது. ஆனால் அதே சமயம் சற்று அருகிலேயே இருத நோயால் அவதிப்பட்ட மருத்துவர் ஹட்ஸனை அக்குழுவால் காப்பாற்ற சமயமின்றி அவர் இறக்கிறார். ஹட்ஸன் சிறந்த மூளை சிகிச்சை நிபுணர். ராபர்ட்டோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் பணக்கார இளைஞன். வேலை செய்யாமலேயே வாழ்நாள் முழுதும் கழிக்கும் அளவுக்கு பணம் படைத்தவன். மருத்துவர் ஹட்ஸன் இறந்த அதே மருத்துவ மனையில்தான் உயிர் பிழைத்த ராபர்ட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தான். மருத்துவருக்கு பதிலாக இவன் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் இவன் காதுபடவே பேசுகின்றனர்.

முதலில் கோபப்பட்ட ராபர்ட், பிறகு ஹட்ஸனின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு துணுக்குறுகிறான். மற்றவர்கள் ஆதங்கப்பட்டதின் உண்மை அவனுக்கு உறைக்கிறது. நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன செய்வது என யோசிக்கிறான். ஹட்ஸன் இறந்ததால் பல நோயாளிகளின் நிலையில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என அவனுக்கு தோன்றுகிறது. இதே நிலைமையில் பலர் மருத்துவ மனைக்கு பெரிய நன்கொடையாகக் கொடுத்து தங்கள் மன நெருடலை நீக்க முயற்சித்திருப்பார்கள். ஆனால் இவன் சற்று வித்தியாசமாக சிந்தித்தான். ஹட்ஸன் இடத்தில் இன்னொரு மருத்துவர் அதே திறமைகளுடன் தேவை. இதை மனதில் இருத்தி தானும் ஹட்ஸன் மாதிரியே மூளை சிகிச்சை நிபுணனாக வேண்டுமென தீர்மானிக்கிறான்.

இடையில் இவனிடம் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டயரி கிடைக்கிறது. ஆனால் அதை டாக்டர் ஹட்ஸன் முழுக்க முழுக்க சங்கேதக் குறிகளாலேயே நிரப்பியுள்ளார். பிறகு அதனுடன் போராடி அதற்கான திறவுகோலை கண்டுபிடிக்கிறான். டாக்டர் ஹட்ஸனின் ரகசிய உலகுக்குள் பிரவேசிக்கிறான். அற்புத உலகம் அது.

ராபர்ட் மருத்துவ கல்லூரியில் சேருகிறான். தன்னை விட பல ஆண்டுகள் சிறிய மாணவர்கள் மாணவிகளுடன் கல்லூரிக்கு செல்கிறான். பலரது ஏளனத்துக்கு ஆளாகிறான். மனம் தளறாமல் படிக்கிறான். பலருக்கு பல உதவிகள் செய்கிறான். பொருள் ரூபத்திலோ, உடல் உழைப்பாகவோ அவன் செய்யும் உதவிகள் பலரது வாழ்வில் வசந்தத்தை மலரச் செய்கின்றன. உதவி அளிக்கும்போது ஒரே ஒரு நிபந்தனைதான் விதிப்பான். அது என்னவென்றால் தான் உதவி செய்தது, செய்வது செய்யப்போவது எல்லாமே ரகசியமாக இருக்க வேண்டும் என்பதே அது.

சில காலங்களுக்கு பிறகு அவனிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுடன் பிரதியுபகாரம் செய்ய வரும்போதோ, பெற்று கொண்ட பொருள் வசதிகளைத் திரும்பத் தர முயலும்போதோ ஒன்றே ஒன்றுதான் கூறுவான். "நான் இதை எப்படித் திரும்பப் பெறுவேன்? அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனே"! என்று. அதற்கு மேல் கூற மாட்டான். விளக்கம் கேட்டாலும் சொல்ல மாட்டான்.

நாவலிலும் முதலில் விளக்கம் தரப்படவில்லை. வாசகனான நான் தலைமயிரைப் பிய்த்க்து கொண்டேன். நாவல் படித்து முடிந்ததும்தான் விளங்கிற்று.

எல்லாவற்றுக்கும் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டைரிதான் காரணம். அவர் பலருக்கு ரகசியமாக உதவிகள் செய்து வந்தவர். தன் பெயர் எக்காலத்திலும் வெளியில் வரலாகாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அவ்வாறு அவர் காரியங்கள் செய்து கொண்டு போகப் போக அவர் முனைப்புடன் செய்ய முயன்ற காரியங்களில் வெற்றி தேவதை சர்வ சாதாரணமாக அவருக்கு துணை இருக்க ஆரம்பித்தாள். தர்மத்தின் புண்ணிய பலன் அடுத்த பிறவி வரை காத்திராது இப்பிறவியிலேயே கிடைத்து விடும் என்பதுதான் கதையின் அடிநாதம். இதை உணர்ந்ததாலேயே அவர் பிரதியுபகாரங்களை மறுத்து வந்த்தார்.

வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியலாகாது என்னும் சொலவடையை இக்கதை விளக்குகிறது என்பதையே நான் புரிந்து கொள்கிறேன். மகாபாரதத்தில் வரும் கர்ணன் செய்த கொடைகளின் பலனாய் அவன் மேல் விடப்பட்ட பார்த்தனின் அம்புகள் பலனின்றி கீழே விழ, பார்த்தசாரதியாம் கண்ணன் அதைக் கண்டுணர்ந்து போரை நிறுத்தி விட்டு கர்ணனிடம் கிழ ரூபம் தரித்து தானம் கேட்கிறார். கர்ணன் ஒரே ஒரு வேண்டுகோளையே அவரிடம் விடுக்கிறான். "என்னால் மரணத்தின் வாயிலில் நிற்கும் இத்தருணத்தில் தரக்கூடியதையே கேளுங்கள்" என்கிறான். கண்ணனும் அவனது தானதருமங்களின் பலனைத் தருமாறு அவனிடம் யாசிக்கிறார். "எனது எல்லா தருமங்களின் பலனையும் தந்தேன். அத்தருமங்களுள் நான் இப்போது செய்யும் தருமமும் அடங்கக் கடவது" என்று கூறி தானம் அளிக்கிறான் கௌந்தேயனான கர்ணன்.

பிறகு கர்ணன் மாண்டதும் குந்தி மட்டும் அழவில்லை. தரும தேவதையுமே வந்து கதறுகிறாள், தான் இனி யாரிடத்தில் குடி கொள்வது என்று.

பிரதியுபகாரம் எதிர்ப்பார்க்காது உதவி செய்ய வேண்டும், ஆனால் அதே சமயம் அவ்வாறு செய்வது வேறு யாருக்கும் தெரியக் கூடாது. சற்று கஷ்டமான காரியமே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

34 comments:

Anonymous said...

உள்குத்து புரியிலியே :)

dondu(#11168674346665545885) said...

உள்குத்து ஏதும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// பிறகு கர்ணன் மாண்டதும் குந்தி மட்டும் அழவில்லை. தரும தேவதையுமே வந்து கதறுகிறாள், தான் இனி யாரிடத்தில் குடி கொள்வது என்று. //

Impeccably put that. Fantastic !
Although there are various facets for dharma - altruism is fundamental and superior than others!

Nowadays nobody can understand this - altruistic motives are ridiculed and pathetically fail against selfishness.

Anonymous said...

ராபர்ட் மெரிக் - கோயமுத்தூர்காரர்
டாக்டர் ஹட்சன் - நங்கநல்லூர்காரர்

இப்படி புரிஞ்சிகிட்டேன் அய்யா. சரியா?

சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

//altruistic motives are ridiculed//

இல்லை. எனது வாழ்க்கையிலேயே பல முறை நான் அப்புத்தகத்தின் பாதிப்பில் செயல்பட்டுள்ளேன். முழுக்கவே உபயோகமும் செய்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ராபர்ட் மெரிக் - கோயமுத்தூர்காரர்
டாக்டர் ஹட்சன் - நங்கநல்லூர்காரர்

இப்படி புரிஞ்சிகிட்டேன் அய்யா. சரியா?//
இதுதான் உள்குத்து போல படுகிறது. யார் அது நங்கநல்லூர்காரர்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//ராபர்ட் மெரிக் - கோயமுத்தூர்காரர்
டாக்டர் ஹட்சன் - நங்கநல்லூர்காரர்

இப்படி புரிஞ்சிகிட்டேன் அய்யா. சரியா?

சிங்கமுத்து//

சிங்கமுத்து/டோண்டு அய்யா,

நல்ல கதை;ஆனால் அளவுக்கு அதிகமாக சுருக்கப்பட்ட கதை;முக்கியமா மடிப்பாக்கம் வில்லன் காரெக்டரை தூக்கிட்டாங்க.மூலக்கதைய வச்சி தெலுங்கில சூர வில்லனுடு ன்னு ஒரு சினிமா எடுத்தாங்க.அந்த மடிப்பாக்கம் வில்லனை உசுப்பிவிட்டு வேடிக்கைப் பாக்க, ஒரு தாடி வச்ச சகுனி தாத்தாவும்,தாத்தாவுக்கு எடுபிடியா ஒரு மஞ்ச துண்டு போட்ட அடியாளும் வருவாங்க;தெலுங்கு சினிமா வில்லன் கூட்டம் நல்ல காமெடியா அயோக்யத்தனம் பண்ணுவாங்க;இந்த சுவாரஸ்யமான சமாசாரத்தையெல்லாம் டோண்டு அய்யா சொல்லாம விட்டுட்டாரு.மத்தபடி சுருக்கின கதை சூப்பர்.

பாலா

dondu(#11168674346665545885) said...

//இந்த சுவாரஸ்யமான சமாசாரத்தையெல்லாம் டோண்டு அய்யா சொல்லாம விட்டுட்டாரு.மத்தபடி சுருக்கின கதை சூப்பர்.//
என்ன கொடுமை இது சரவணன்? லாய்ட் சி டக்லஸ் உயிருடன் இருந்து இதை தமிழறிந்து படித்தால் தற்கொலை செய்து கொள்வார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//என்ன கொடுமை இது சரவணன்? லாய்ட் சி டக்லஸ் உயிருடன் இருந்து இதை தமிழறிந்து படித்தால் தற்கொலை செய்து கொள்வார்.//

டோண்டு அய்யா,

அய்யோ.இதைப் படித்தாலேவா?அப்போ அந்த தெலுங்கு சினிமாவைப் பார்க்கும் பாக்யம் கிடைத்தா?நினைக்கவே நெஞ்சம் பதறுதே.

பாலா

அரவிந்தன் said...

அன்புள்ள டோண்டு,

கதையில் வரும் ராமர்ட் போன்று நீங்கள் எப்பொழுதாவது மற்றவர்க்கு தெரியாம உதவி செய்து இருக்கீங்களா

அன்புடன்
அரவிந்தன்

dondu(#11168674346665545885) said...

//கதையில் வரும் ராமர்ட் போன்று நீங்கள் எப்பொழுதாவது மற்றவர்க்கு தெரியாம உதவி செய்து இருக்கீங்களா.//
ஆம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இதுதான் உள்குத்து போல படுகிறது. யார் அது நங்கநல்லூர்காரர்? //

ஹைய்யோ..ஹைய்யோ...ஒரே தமாசு! எப்படி இவ்வளவு சரளமாக நகைச்சுவை கைவருகிறது உங்களுக்கு?!

dondu(#11168674346665545885) said...

//ஹைய்யோ..ஹைய்யோ...ஒரே தமாசு! எப்படி இவ்வளவு சரளமாக நகைச்சுவை கைவருகிறது உங்களுக்கு?!//
நிஜமாகவே கூறுகிறேன். நீங்கள் குறிப்பிடும் நங்கநல்லூர்க்காரரை இதுவரை நேருக்கு நேர் சந்தித்ததே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

என்னது உங்கள் பதிவில் உள்குத்து இல்லையா??

dondu(#11168674346665545885) said...

//என்னது உங்கள் பதிவில் உள்குத்து இல்லையா??//

இல்லை ராபெர்ட் மெரிக்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நிஜமாகவே கூறுகிறேன். நீங்கள் குறிப்பிடும் நங்கநல்லூர்க்காரரை இதுவரை நேருக்கு நேர் சந்தித்ததே இல்லை.//

அதானே! கண்ணாடியில் கூடவா?!

dondu(#11168674346665545885) said...

//அதானே! கண்ணாடியில் கூடவா?!//

கண்ணாடியில் பார்ப்பது நேருக்கு நேர் இல்லை. கண்ணாடியில் இருப்பவரும் முன்னே இருப்பவரும் ஒன்றல்ல. முன்னவர் இடக்கை பழக்கமுடையவர், பின்னவருக்கு வலக்கை பழக்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Radha Sriram said...

லாயிட் சி டக்லஸ் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். அவருடைய எழுத்துக்கள் பல பேரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்னையும்தான்.Forgive our tresspasses படித்திருக்கிரீர்களா??

K.R.அதியமான் said...

annihale,

mudinjaa udavi paanunga. illieena unga velaiyai paarkkavum. waste of time all these exchanges and pointless.

dondu(#11168674346665545885) said...

Forgive our tresspasses எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். நான் படித்த அவரது மற்ற புத்தகங்கள்
Precious Jeopardy;
Green Light;
White Banners;
Disputed Passage;
Invitation To Live;
Doctor Hudson's Secret Journal; The Robe;
The Big Fisherman.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நான் படித்த அவரது மற்ற புத்தகங்கள்
Precious Jeopardy;
Green Light;
White Banners;
Disputed Passage;
Invitation To Live;
Doctor Hudson's Secret Journal; The Robe;
The Big Fisherman.//

இன்னாது? ரூம் போட்டு படிப்பீங்களோ? பட்டியலை பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இந்த வலைப்பதிவு உலகத்தில் வந்து 'மாட்டிய' (சரி..சரி...!) பிறகு படிப்பதற்கு நேரம் கிடைக்கிறதா? புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்வதைப் பற்றி 'சமீபத்தில்' அந்த நங்கலல்லூர்காரர் ஏதாவது பதிவு எழுதியிருக்கிறாரா? இன்றைய 'இளம்' பதிவர்கள் (ஒரு சில பேர் தவிர) படிப்பதை விட எழுதுவது அதிகமாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பதிவுலகின் இன்றைய "constipation of thoughts amidst a diarrhea of words" என்கிற நிலமைக்கு அதுதான் காரணமோ?

dondu(#11168674346665545885) said...

நான் இந்த ஆசிரியரின் புத்தகங்கள் எல்லாம் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் படித்தவை. நீங்கள் நினைப்பது போல தற்சமயம் அவ்வளவாக புத்தகங்கள் படிக்க இயலவில்லைதான்.

நேரம் இல்லை எனக் கூற மாட்டேன். என் முன்னுரிமைகள் மாறி விட்டன என்பதுதான் உண்மை.

புத்தகம் படிப்பதை பற்றி நான் போட்ட பதிவுகள் சில:
1
2 (இப்பதிவில் குறிப்பிட்ட புத்தகம் லாய்ட் சி டக்ளசின் "அங்கி" (The Robe) என்னும் புத்தகம்.
3

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கெவின் ஸ்பேஸி நடித்த 'பே இட் ஃபார்வேர்ட்' படம் பார்த்ததுண்டா? அது கூட இக்கருத்தை வலியுறுத்தும் வகைதான்!

dondu(#11168674346665545885) said...

நன்றி அதர்மன் அவர்களே,

உங்கள் தகவலுக்கு நன்றி. உங்களால் இப்பக்கத்துக்கு சென்று பார்த்தேன். நன்றி. நீக்கள் கூறுவது உண்மைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"ராபர்ட் மெரிக் - கோயமுத்தூர்காரர்
டாக்டர் ஹட்சன் - நங்கநல்லூர்காரர்

இப்படி புரிஞ்சிகிட்டேன் அய்யா. சரியா?

சிங்கமுத்து"

டோண்டு சார். ஓரிரு முறை உங்களுக்கு பின்னூட்டமிட்ட (under communism/socialsm related threads) சிங்கமுத்து ( நான் ) இந்த பின்னூட்டம் இடவில்லை. இது வேறு. நிஜமாகவே வேறு ஒரு சிங்கமுத்து இருக்கிறாரா, அல்லது சும்மா தமாசுக்கு என் பெயரை பயன்படுத்தியுள்ளாரா என்பது தெரியவில்லை. Is me a mild harmless poli??!!!!! :)

சிங்கமுத்து (original)

dondu(#11168674346665545885) said...

சிங்கமுத்து ஒரிஜினல் அவர்களே,

நீங்கள் எனக்கு இன்னொரு இழையில் (தில்லியில் சைக்கிள் ரிட்சா பற்றிய பதிவு) இட்டப் பின்னூட்டம் கூட அனானி ஆப்ஷனில்தான் வந்தது. வேறு எங்காவது படத்துடன் பிளாக்கராக இட்டீர்களா? இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்போது நீங்கள் சுட்டும் இன்னொரு சிங்கமுத்துவும் அதே பெயரை உடையவராக இருக்கலாம். ஆகவே போலி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. நான் இன்னொரு இழையில் உண்மைத் தமிழன் அவர்களுக்கும் இதே மாதிரி பதிலைத்தான் தந்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Ayya
Regarding Karnan dedicating his dharmic merits to Krishna

All the dharmam we are supposed to do should not be taken as belonging to oneself.Everything is supposed to be dedicated at the feet of God as we are not supposed to take credit for anything.That is why, after doing prayers, we are supposed to dedicate all the goodness that comes out of it to God.

I read this in Valmiki Ramayana
http://www.valmikiramayan.net/aranya/sarga5/aranya_5_frame.htm
when Rishi Sarabhanga dedicates everything to Rama.

Quote
======
Comment: The sage is dedicating all his achievements of penance unto god, without any ahamtva buddhi , mine-ness. This is called phala samarpaNa. The fruits of pious achievements are to be dedicated in the divine without the concept 'I am the doer thus I shall enjoy...' Even in the daily worship we are supposed to dedicate all that we have done, with oblating water saying ' karomi yad yat sakalam parsmai naaraayaNaayeti samarpayaami... 'Whatever is done, in all its entirety, I dedicate it unto the Supreme...' And Govindaraja observes, whatever that is acquired by the sage is his wealth. So the heavenly abodes are his only wealth as of now, and they all are surrendered to Rama, as guest-worship.
unquote
*****************************

Vetirmagal said...

That was an excellent book which shaped my thinking in my formative years. I still think of my iirend Uma who made me read those books in my collage days.

Reading your blog sent me down the memory lane in a nostalgic trip. Thanks for sharing your views and kindling new thoughts in readers.

dondu(#11168674346665545885) said...

//That was an excellent book which shaped my thinking in my formative years.//

You mean "Magnificent Obsession"? That is great.

Regards,
Dondu N.Raghavan

Anonymous said...

நல்ல பதிவு
டோண்டு அய்யா
உங்கள் பதிவுகளின் சமூகத்தை சுட்டு எரிக்கும் பார்வைகைள் கொண்ட பதிவுகளை தற்போது காண கிடைப்பதில்லையே ஏன்?

Anonymous said...

உங்களது ப்ளாக்கில் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் காமெண்டை அனுமதிக்கிறீர்கள்.

ஆமாம். அந்த வால்மீகி ராமாயணம் பற்றிய கமெண்டைத்தான் சொல்லுகிறேன்.

இப்படி மறைமுகமாக இந்துத்துவவாதிகளின் கருத்துக்களை அனுமதிப்பது என்னதான் பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டாலும், ஜாதிப்புத்தி போகாது என்பதற்கு நிரூபணம்.

பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் (அவருக்கு எதிர்க்கருத்துகளைக் கொண்டவர்கள்கூட) பெரியாரைப் பற்றிச் சொல்கிற சம்பவங்கள் சிலவற்றைக் கேட்கிற வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைக்கும். அப்படிக் கேட்ட பெரியார் வாழ்வின் நிகழ்ச்சி ஒன்று. இதை முன்னரே எங்கேயோ எழுதிய ஞாபகம். அதனால் என்ன, திரும்ப நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த நேரம். கண்ணீர்த் துளிகள் அந்த முடிவை எதிர்த்தார்கள். அவர்களில் ஒருவர், "தேவையென்றால், கல்யாணம் எதற்கு, வைத்துக் கொள்ளலாமே?" என்று சொன்னாராம்.

அதைக் கேள்விப்பட்ட பெரியார் மிகவும் கோபமுடன், "என்ன இருந்தாலும் ஜாதிப்புத்தி போகுமா?" என்று திட்டினாராம்.

அப்போது அருகில் இருந்த தொண்டர்களில் ஒருவர் எழுந்து, "அய்யா, ஜாதி இல்லை இல்லை என்று சொல்கிற நீங்களே ஜாதிப்புத்தி என்று திட்டுகிறீர்களே, அது சரியா" என்று கேட்டாராம்.

அதற்குப் பெரியார், "ஜாதிதான் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். ஜாதிப்புத்தி இல்லை என்று சொல்லியிருக்கிறேனா?" என்று பதிலுக்குக் கேட்டாராம்.

அந்த ஜாதிப்புத்தி உங்களுக்கு மட்டும் போய்விடும் என்று நான் எதிர்பார்க்கலாமா? அதிலும் உங்கள் குழுவிற்கு அது போகவே போகாது.

இந்த கமெண்டை வெளியிடக்கூட உங்கள் ஜாதிப்புத்தி உங்களை அனுமதிக்காது.

பிறவியிலேயே புத்திசாலிகள் இல்லையா நீங்கள் எல்லாம்?

dondu(#11168674346665545885) said...

//ஆமாம். அந்த வால்மீகி ராமாயணம் பற்றிய கமெண்டைத்தான் சொல்லுகிறேன்.//
எங்கே?

பெரியார் சாதிபுத்தி என்று சொன்னது அறிஞர் அண்ணா பற்றித்தான் என்றும் படித்திருக்கிறேன்.

எது எப்படியானாலும் பெரியார் அவர்களது பகுத்தறிவு சிந்தனைகளெல்லாம் தனக்கு எதிராகவே போனபோது அவற்றை ரசிக்கவில்லை என்பதும் உண்மையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

The mentioned story about karnan is only in movie. In any where it does not mentioned original vyasa bharatham.
Our whole problem is that to see some movies or hear somethings and start to discuss big things on that.......

+Ve அந்தோணி முத்து said...

ஒரு பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த பதிவு டோண்டு சார்.

கர்ணனைக் குறித்து இன்னும் நிறைய எழுத ஆவல்.

நன்றிகள்..!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது