ஈராக் குவைத்தை அபகரித்து தனது மாநிலங்களில் ஒன்றாக அதை மாற்றியதால் வந்தது வளைகுடா யுத்தம். கொடுங்கோலன் சதாம் அமெரிக்கா தன்னை தாக்கினால் தனது தாக்குதல் இஸ்ரேல் மீதுதான் என்பதை தெளிவுபடுத்தினான். அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. இஸ்ரேலை அவன் தாக்கினால் அது ஈராக்கை செருப்பால் அடிக்கும். அதை காரணம் காட்டி மற்ற அரபு தேசத்தினர் அமெரிக்காவுக்கு துணை போக மாட்டார்கள் என்பது அவன் கணக்கு. அதில் விஷயம் இல்லாமல் இல்லை.
மற்ற நாடுகள் (இந்தியா உட்பட, அஹிம்சாவாதம்?) இந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் இஸ்ரேலை சீண்டிய அண்டை நாடுகள் உதை வாங்காமல் இருந்ததில்லை. 1976-ல் யூத பயணக் கைதிகளை உகாண்டா எண்டெப்பெ விமான நிலையத்திலிருந்து அது மீட்டு வந்தது தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்த பலமான அடியாகும். 1982-ல் லெபனானிலிருந்து தொல்லை கொடுத்த பாலஸ்தீன தீவிரவாதிகளை பெல்ட் அடி கொடுத்து அங்கிருந்து விரட்டியதை யாரால் மறந்திருக்க முடியும்?
ஆக இந்த விஷயத்தில் அமெரிக்கா ஏகத்துக்கு கவலைப்பட்டது. இஸ்ரேலிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அப்படியே ஏதேனும் தாக்குதல்கள் வந்தாலும் எதிர்வினை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இஸ்ரேலின் பாதுகாப்புக்குக்கு முழுபொறுப்பு ஏற்று கொண்டது. சொன்னதுபோலவே பாதுகாப்பும் பேட்ரியாட் ஏவுகணைகள் ரூபத்தில் கொடுத்தது. சதாமின் கணக்கு பொய்த்தது. இஸ்ரேலை சாக்காக வைத்து அரபு நாடுகளின் ஆதரவை பெற இயலவில்லை. இன்று குவைத் நாளை நாம் என்ற பயத்திலேயே அவை அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தன. பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.
இப்போது இஸ்ரேலுக்கு வருகிறேன். அது எப்போதுமே தனது பாதுகாப்பை தானே பார்த்து கொள்ளும். ஆனாலும் இம்முறை மிக கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டது. ஆனாலும் யுத்தத்தில் மறைமுகமாக பல உதவிகள் செய்தது. உதாரணத்துக்கு:
· அப்பிராந்தியத்திலேயே இஸ்ரேலிய படை மட்டுமே ஈராக்கிய படையை வெற்றிகரமாக சமாளித்திருக்க முடியும். இந்த எண்ணமும் சதாம் மற்ற தேசங்களை ஆக்கிரமிப்பதிலிருந்து தடுத்தது.
· ஈராக்கிய படைகள் ஜோர்டானுக்குள் நுழைந்தால் தனது போர் நடவடிக்கையை தொடங்கும் என்ற எச்சரிக்கையால் ஜோர்டான் தப்பித்தது.
· அமெரிக்கா இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட Have Nap வான் ஏவுகணைகளை தனது B52 விமானங்களில் பொருத்தி கொண்டது. அமெரிக்க கடற்படையும் இஸ்ரேலின் பயனீயர் விமான ஒட்டி இல்லாத drones வானூர்திகளை வேவு வேலைக்கு பயன்படுத்தியது.
· இஸ்ரேலின் கண்ணிவெடி நீக்கும் கலப்பைகளை உபயோகித்தது அமெரிக்கா.
· இஸ்ரேலின் கணினி தொழில்நுட்பம் அளித்த ஆலோசனையின்படி பேட்ரியாட் ஏவுகணைகளின் மென்பொருளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.
· இஸ்ரேலிய விமான தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட எரிபொருள் டேங்குகள் மூலம் F15 விமானங்களின் வீச்சை அதிகரிக்க முடிந்தது.
· எல்லாவற்றையும் விட முக்கியமாக இஸ்ரேல் 1981-லேயே ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலையத்தை அழித்ததால் பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்காவும் நேச நாடுகளும் ஈராக்கை தாக்கியபோது அது அணுசக்தி உள்ள நாடாக இல்லை. 1981-ல் இஸ்ரேலை இதற்காக குறை கூறிய பலநாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன.
இன்னும் கூறிக் கொண்டே போகலாம். தேவையானால் இந்த உரலுக்கு செல்லவும்.
இப்போது பதிவின் கருப்பொருளுக்கு வருகிறேன். நேரடி நடவடிக்கைகளை எடுக்காது அடக்கிவாசிப்பதும் ஒரு போர் யுக்தியே. ஆனால் இதுதான் மிகக்கடினம். என்ன செய்வது, பலன் வேண்டுமானால் அதையும் செய்ய வேண்டும்.
Disclaimer: Any resemblance to events in the Tamil blogging world is purely intentional.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
19 comments:
//1976-ல் யூத பயணக் கைதிகளை உகாண்டா எண்டெப்பெ விமான நிலையத்திலிருந்து அது மீட்டு வந்தது தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்த பலமான அடியாகும். 1982-ல்//
'சமீபத்தில்'னு போடலியே :-)))
கொஞ்சம் அடங்குய்யா! தற்பெருமை அடிப்பதற்கும் ஒரு அளவில்லையா? பெரிய போராம் யுக்தியாம், சும்மா பொளப்பத்துப்போயி...
Disclaimer: Any resemblance to events in the Tamil blogging world is purely intentional.
:)
Nice post
//'சமீபத்தில்'னு போடலியே :-)))//
:)))))
வேணும்னுதான் போடவில்லை. இஸ்ரேலின் இந்த தீரச் செயல் வேறு எந்த நாட்டாலும் செய்திருக்க முடியாது. சமீபத்தில் 1973-ல் பம்பாயில் இருந்தபோது ஒரு நாவல் படித்தேன். அதில் பணயக் கைதிகளை பக்கத்தில் இருந்த ஜோர்டானுக்குள்ளிலிருந்து இஸ்ரேல் மீட்டு வந்ததாக எழுதப்பட்டிருந்தது. நான் இஸ்ரேல் அபிமானியாக இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் என்றுதான் அப்போது நினைத்தேன். ஆனால் 1976-ல் இஸ்ரேல் செய்தது எனக்கு பிரமிப்பையே தந்தது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட சாம்சன் பிலிஸ்தினியர்களுக்கு எதிராக தன்னந்தனியே ஒரு கழுதையின் தாடை எலும்பை வைத்து யுத்தம் செய்து பல எதிரிகளை கொன்றது போன்ற நிகழ்ச்சிக்கு இந்த 1976 நிகழ்ச்சி எவ்வகையிலும் குறைந்ததல்ல. பழைய ஏற்பாட்டின் தரத்துக்கான இந்த நிகழ்ச்சியையும் அவாறே கருதினேன் எனக் கூறி சமாளித்து..., யாரப்பா சோடா எங்கே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
first sort out your problems, my friend.
You are diverting your topic. We are not interested.
Kavitha
//We are not interested.//
உங்களுக்கு அக்கறை இல்லை என்பதை பற்றி எனக்கும் அக்கறை இல்லை.
டோண்டு ராகவன்
"Some people's idea of free speech is that they are free to say what they like, but if anyone says anything back, that is an outrage" THESE ARE THE GOLDEN WORDS FROM WINSTON CHURCHILL.
FOR KAVITHA THIS FITS WELL.
"We are not interested"
WHO IS THAT 'WE' IS SHE TRYING TO DRAG SOMEBODY ALSO INSIDE THAT 'WE'
"உங்களுக்கு அக்கறை இல்லை என்பதை பற்றி எனக்கும் அக்கறை இல்லை"
FINALLY A FITTING REPLY FROM MR.டோண்டு ராகவன். CHEERZ!
YES. YOUR BLOG HAS GOT RESEMBLENCES WITH THE ONGOING WAR ON POLI. YET IT IS NOT AGAINST POLI, BUT THIS IS A SARCASM AGAINST THOSE WHO SIDED WITH POLI IN THE LATER'S WAR AGAINST MR. DONDU AND OTHER SO-CALLED-RIGHT WING TAMIL BLOGGERS.
I APPRECIATE THIS BLOG FOR HIGHLIGHTING THIS APTLY QUOTING ISRAEL, YOUR FAVORITE COUNTRY (I WILL NOT BE SURPRISED IF SATRUMUN.BLOGSPOT.COM SAID THAT MR.DONDU WAS GIVEN CITIZENSHIP BY ISRAEL). HAHAHA HAHAHA. I WAS ONLY LAUGING OUT LOUD. PLEASE DO NOT MISTAKE ME. I TOLD THIS ONLY IN LIGHTER VEIN.
MR.DONDU YOU ARE VERY VERY VERY VERY VERY CLEVER. AND THAT IS THE REASON WHY YOU HAVE GOT MOST NUMBER OF FANS IN TAMIL BLOGGERS CLUB THAN ANY OTHER TAMIL BLOGGER. DESPITE DIFFERENCES WITH YOU, PEOPLE ARE COMING TO VISIT YOUR BLOG. WHETHER THEY LIKE YOU OR NOT, WHETHER THEY LIKE YOUR BLOGS OR NOT, YOU ALWAYS FIGURE AS AN ICON WORTH ENOUGH TO NOT ONLY TO BE APPLAUDED BUT ALSO TO BE CRITICIZED.
UNFORTUNATELY OR FORTUNATELY, I AM ALSO BESTOWED WITH SOUND MEMORY BY THE GOD OF THREE WORLDS AND SO I COULD NOT STOP FROM ASKING THIS QUESTION TO THE GREAT TAMIL AND GERMAN AND ENGLISH BLOGGER MR.DONDU - THAT QUESTION IS: WHERE WERE YOU WHEN KASI ARUMUGAM WAS ATTACKED BY POLI? AND WHEN ICARUS PRAKASH WAS ATTACKED BY POLI?
ANBUDAN
A DIE HARD HINDU
Anonymous said:
//Moorthy has abused pons as recently as August 9th.//
Edited out the link given by anony.
Regards,
Dondu N.Raghavan
//WHERE WERE YOU WHEN KASI ARUMUGAM WAS ATTACKED BY POLI? AND WHEN ICARUS PRAKASH WAS ATTACKED BY POLI?//
I was under heavier attack myself.
Regards,
Dondu N.Raghavan
சதாமின் குவைத் ஆக்கிரமிப்பு தவறு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.ஆனாலும் ஆக்கிரமிப்பின் கால கட்டத்தின் இறுதி நெருப்பிடும் நொடி வரை அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் இயங்கியது.சதாம் செய்த ஆக்கிரமிப்பிற்கும் அமெரிக்காவின் ஈராக்கின் ஆக்கிரமிப்பிற்கும் வித்தியாசங்கள் அதிகம்.போரின் குரூரங்களை அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பிலேயே காணலாம்.தலைப்பு வளைகுடா யுத்தமும் அமெரிக்காவும் என்றிருக்க வேண்டும்.
"I was under heavier attack myself
"
I BELIEVE THAT.
ANYHOW, THE BATTLE AGAINST POLI HAS FINALLY COME TO AN END.
CHELLA, KUZHALI AND RAVI MUST HAVE REALISED WHO IS FRIEND AND WHO IS FOE. A FRIEND IN NEED IS A FRIEND INDEED.
BUT AGAIN I REPEAT: IN POLITICS, NOBODY IS PERMANENT FRIEND AND NOBODY IS PERMANENT ENEMY. IN TAMIL BLOGSPHERE TOO THIS IS APPLICABLE, I FEEL. MR.DONDU, AM I RIGHT?
ANBUDAN
A DIE HARD HINDU
எப்படியோ போலி ஒழிந்தான் என்று இன்றாவது நிம்மதியாகத் தூங்குங்கள். அவன் இனி எந்த ரூபத்தில் வந்தாலும் பழைய மாதிரி உதார்விட முடியாது. அப்படியே விட்டாலும் யாரும் பைசாப்பெறாத பையன் உளர்ரான்னு உதாசீனப்படுத்திவிடுவார்கள். குட் நைட் நண்பரே. ஆனால் இனிமேல் நீங்களும் பொறுப்புணர்ந்து எழுதுங்கள்.
- பேர் வேண்டாம்.
என் மனைவிக்குப் பயந்து, போலி மூர்த்திக்கு பயந்து அல்ல
நேரம் கிடைக்கும்போதெல்லாம் உமக்கு பி/புன்னூட்டம் இடுவேன் . எனக்கு அதில் விருப்பமில்லாவிட்டாலும்கூட. இதுவரை உம் வலைப்பூ பக்கம் எட்டிப் பார்க்காத்தற்கு உம்மைப் போன்றவர்களை பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என்பதும் ஒரு காரணம். பருத்தி வீரன் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
நிற்க, போலியின் இறப்பை உறுதி செய்ய அசலை நோண்டித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
---------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
இதெல்லாம் ஒரு பொலப்பா?
வளைகுடா யுத்தத்தின் போது ஒரு வேடிக்கை. இஸ்ரேல் கட்டுப்பாடிலிருந்த ஆயிரக்கண்ணக்கான பாலஸ்தீனர்கள் 'சத்தாம் சீக்கிரம் வா, இஸ்ரேல் மீது ஏவுகணை வீசசு' என கோஷமிட்டு ஆர்பரித்தனர். சில நாட்களில் சத்தாம் ஹுசைன் ரசாயன ஆயுதம் தாங்கிய ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது வீசலாம் என தெரிந்தவுடன், இஸ்ரேலின் உச்ச நீதிதலத்திற்க்கு சென்று, இஸ்ரேலிய அரசாங்கம் மற்ற இஸ்ரேலிய குடிகளைப் போல தங்களுக்கும் ரசாயனபுகை பாதுகாப்பு முகமூடிகளை தரவேண்டும் என கோரினர். இஸ்ரேலை சத்தாம் அழிக்க வேண்டும், அதே சமயம் சத்தாமின் ரசாயன கணை தாக்குதலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களை காப்பாற்ற வேண்டும். அதுதான் பல பாலஸ்தீனர்களில் அவா. ஆங்கிலத்தில் சொல்லும் schozoprenia என்பது (பல) பாலஸ்தீனர்களுக்கு பொருந்தும். சதாமிற்க்கு ஆதரவு கொடுத்ததால் ஆயிரக்க்கணக்கான பலஸ்தீனர்கள், சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளிலிருந்து விரட்டப் பட்டனர். குவைத் விடுதலை ஆனவுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களும் உள்ளூர்காரகளால் விரட்டப்பட்டனர்.
நண்பர்களின் ஆலோசனை பேரில் இப்பதிவிலும் முந்தைய பதிவிலும் மூர்த்தி என்னும் போலி டோண்டு மற்றும் அல்லக்கைகள் பற்றிய பின்னூட்டங்கள் இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டாது.
அதே சமயம் இஸ்ரேல் மற்றும் ஷ்டாஸி பற்றிய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Sir,
I am very happy to see the Reality in History from your blog.I 've previously known some of the incidents what is mentioned here from the books. Many times I puzzled why Our Govt of India is making unstable decissions? But now only I know that Our Govt alwys make this kind of decission particularly on Middle East issue from 1947. I am very eager to know more on "ISRAEL". Thank you
மற்ற நாடுகள் (இந்தியா உட்பட, அஹிம்சாவாதம்?) இந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் இஸ்ரேலை சீண்டிய அண்டை நாடுகள் உதை வாங்காமல் இருந்ததில்லை.
Congrats for your writing sir..
GOOD VERY GOOD
நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே.
From today I will support you sir..
Bse I love இஸ்ரேல்
Post a Comment