இது ஒரு சங்கிலி போல சென்று கொண்டிருக்கிறது. அந்தாதி மாதிரி என வைத்து கொள்ளுவோமே. முதலில் ஒரு பதிவர் எனக்கு இக்கேள்விகளை அனுப்பினார், அவரிடம் எனது இயலாமையை கூறி தப்பித்தேன். ஆனால் இப்போது கேட்பது எனது அருமை நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா. முதலில் அவருக்கும் மறுப்பைத்தான் தெரிவித்தேன். இருப்பினும் அவர் அன்புடன் வற்புறுத்துகிறார். அவரிடம் மேலும் மறுப்பு சொல்ல எனக்கு மனது இல்லை. ஆகவே இப்போது நானும் ஆட்டத்தில் வருகிறேன்.
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
பதில்: இது என் தாய் தந்தை வைத்தது. எனது தாத்தாவின் பெயர் ராகவன், ஆகவே அவரது பெயரைச் சொல்லும் பேரனான நான் ராகவன் ஆனேன். எனது பெரியப்பா பிள்ளையும் ராகவனே. எங்கள் பாட்டியால் அப்பெயரை கூப்பிட இயலாது என்பதால் அவன் அம்பியானான், நான் டோண்டுவானேன்.
என் அன்னைக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு என்று ஏதாவது ஒன்றிருந்தால், அது இப்பெயர் சம்பந்தமாகத்தான் இருக்கும். என் தந்தை அது ஒரு மராட்டிப் பெயர் என்றும். நான் பிறந்த செய்தி அவர் பம்பாய் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு வந்தது என்றும் கூறிக்கொள்வார். எனது அன்னையோ டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது.
வலையுலகிலோ இந்திய கூகளின் தேடுபெட்டியில் டோண்டு என யூனிகோட் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் இன்றைய தேதிக்கு (16.06.2009) 54,600 ஹிட்ஸ் வருகின்றன. அதில் கணிசமானவை என் சம்பந்தப்பட்டவையே.
2) கடைசியா அழுதது எப்போது?
பதில்: என் தந்தை சமீபத்தில் 09.09.1979 அன்று இறந்தபோது எனக்காக அழுதேன். அதற்கு முன்னாலும் பின்னாலும் சினிமா/நாடகங்கள்/நாவல்கள் ஆகியவற்றில் வரும் பல சோகக் காட்சிகளில் அழுதிருக்கிறேன்.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பதில்: மொழிபெயர்ப்பு 2002 வரை கையால்தானே எழுதினேன். லட்சக்கணக்கான பக்கங்கள் இருக்குமே. அதுவும் பலமுறை அவற்றை கையெழுத்திலேயே தந்தவன் ஆயிற்றே. எனது கையெழுத்தை ஒரு குழந்தையால் கூட படிக்க இயலுமே.
4) பிடித்த மதிய உணவு?
பதில்: கேரட் தான் போட்ட மோர்க்குழம்பு, சேனைக் கிழங்கு கறியமுது, மைசூர் சாத்தமுது, மாங்காய் பச்சடி, தயிர், ஊறுகாய் மிளகாய் ஆகியவற்றுடன் கூடிய எளிய ஐயங்கார் ஆத்து சாப்பாடு, அதுவும் என் வீட்டம்மா செய்ததாக இருத்தல் அவசியம்.
5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
பதில்: ஓ, வெச்சுப்பேனே.
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
பதில்: அமாவாசை, கிரகணம் ஆகிய காலங்களில் கடலில் குளித்துள்ளேன். அது ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் 1954-ல் திருப்பதி போயிருந்தபோது அங்கிருந்த பாபவிநாசம் அருவியில் குளித்தது பிடித்திருந்தது.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
பதில்: அவர் நம்முடன் எப்படி பழகுகிறார் என்பதை கவனிப்பேன். அவரது உடல் மொழி பார்ப்பது மிகவும் அவசியமே.
8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பதில்: நான் சுலபமாக உணர்ச்சிவசப்படுவேன். பிடித்த விஷயமும் அதுதான், பிடிக்காத விஷயமும் அதுதான். அவ்வப்போது ஏற்படும் விளவுகளை பொருத்தது.
9) உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பதில்: அவர் அவராகவே இருப்பது பிடித்த விஷயம். எவ்வாளவு தேடினாலும் பிடிக்காத விஷயம் எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம்.
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
பதில்: நான் இப்படி மொழிகளில் விளையாடுவதை பார்க்க எனது தாய் தந்தையர் உயிருடன் என்னுடன் இல்லையே என்பதில்தான் வருத்தம்.
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
பதில்: அரையில் ஒரே ஒரு லுங்கி. உள்ளாடைகள் ஏதும் இல்லை. சட்டை கூட போடவில்லை. இந்த லுங்கி திருப்பாற்கடல் என்னும் வைணவ தலத்துக்கு சென்றபோது உள்ளூர் தறி ஒன்றில் காரை நிறுத்தி வாங்கியது.
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
பதில்: பக்கத்து அறையிலிருந்து வரும் டி.வி ஓசைகள். சரியாக 8 மணிக்கு எங்கே பிராமணன் தொடர் வருமே. அதைப் பார்க்க வேண்டும்.
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
பதில்: கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு.
14) பிடித்த மணம்?
பதில்: திருவல்லிக்கேணி கடற்கரையில் வரும் மீன் வாசனை. மழை பெய்யும் சமயம் மண் வாசனை.
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
பதில்: யாரையும் அழைப்பதாக இல்லை. ஏற்கனவே பலர் அழைக்கப்பட்டுள்ளனர், ஆகவே அழைக்காதவர்களை தேடும் வேலை போர்.
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பதில்: அதையெல்லாம் அருமை நண்பர் என்றென்றும் அன்புடைய பாலா என்னும் பதிவில் போட்டு விட்டேன். அவர்தான் எனது வலையுலக இன்ஸ்பிரேஷன் என்பதை ஏற்கனவே டைம் பத்திரிகையில் போட்டு விட்டார்கள்.
17) பிடித்த விளையாட்டு?
பதில்: டென்னிகாய்ட் எனப்படும் ரிங் டென்னிஸ். நன்கு ஆடுவேன்.
18) கண்ணாடி அணிபவரா?
பதில்: வயது 42 வரை கிட்டப்பார்வை கண்ணாடி போட்டேன். பிறகு தூரப்பார்வை வந்து ரெண்டும் கேன்சலாகி விட்டன. இப்போ கன்ணாடி லேது.
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
பதில்: நல்ல குடும்பப் படங்கள் ஹாஸ்ய ரசத்துடன்.
20) கடைசியாகப் பார்த்த படம்?
பதில்: அருந்ததீ
21) பிடித்த பருவ காலம் எது?
பதில்: குளிர் காலம்
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
பதில்: Leon Uris எழுதிய "A God in ruins". முன்னைப் போல ஒரே மூச்சில் படிக்க முடிவதில்லை. ஹாரி பாட்டர் புத்தகங்கள் விதிவிலக்கு.
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
பதில்: சமீபத்தில் 2002 பிப்ரவரியில் கணினி வாங்கினேன். அன்றிலிருந்து நங்கநல்லூர் ஆஞ்சனேயர் படம்தான் டெஸ்க் டாப்பில். அதை மாற்றினால் என் பெண் என்னை வீட்டை விட்டு துரத்தி விடுவாள்.
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பதில்: மெலடி சினிமா பாடல்களின் இசை, வேத கோஷம். பிடிக்காதது குத்தாட்ட பாடல்கள் சத்தம்.
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
பதில்: பத்ரிநாத்.
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
பதில்: என்னிடம் நினைவு தெரிந்த நாள் முதலே இருந்து வரும் திறமை, அறியாமல் ஒட்டிக் கொண்ட திறமை மற்றும் மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை ஆகியவை பற்றி பதிவுகள் போட்டுள்ளேன்.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பதில்: எவ்வளவு லாஜிகலாக பேசினாலும் அதை புரிந்து கொண்ட பின்னரும் எதிராளி மொண்டித்தனமாக விவாதம் செய்வது.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பதில்: முன்கோபம்.
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
பதில்: ஜெரூசலம். பாஸ்போர்ட் இல்லை, ஆகவே போக முடியாதுன்னு தெரியும், ஆனாலும் ஆசை விடவில்லையே.
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
பதில்: தன்னம்பிக்கை இழக்காமல் இருக்கணும்.
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
பதில்: பதிவிடுதல். அவருக்கு அதில் சுவாரசியம் இல்லை.
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
பதில்: உலகே மாயம், வாழ்வே மாயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
8 hours ago
27 comments:
Me the First.
இந்த பதிவு உங்களிடம் நேரிடையாக பேசுவது போல உள்ளது.
நன்றி.
//கறுப்புத்தான்//
அப்படியா சொல்லவேயில்ல
உங்கள் பதில்களை ரசித்தேன்... வித்யாசமா இருந்தது.
முக்கிய்மா மோர்குழம்பில் பூசணி, வெண்டைக்காய் போன்றவற்றைப் போட்டுத்தான் சாப்பிட்டு இருக்கேன். காரட் இப்போதுதான் கேள்விப் படுகின்றேன்.
// சேனைக் கிழங்கு கறியமுது,//
நல்லா பொடிப் பொடியா நறுக்கி அதை டீப் ப்ரை செய்து சாப்பிட்டால் நல்லா இருக்கும். (என்னா செய்வது இங்கு சேனைக் கிழங்கு கிடைக்கவில்லை...)
சட்டி கருணை என்பார்களே அதுதானே சேனைக் கிழங்கு?
// 32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
பதில்: உலகே மாயம், வாழ்வே மாயம். //
நிதர்சனமான பதில்.
1.தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் செயல் பாடு எப்படி இருக்கும் என எண்ணுகிறீர்கள்?
2.பா.ம.க மீண்டும் பல்டி அடித்து திமுக பக்கம் போனால் ஜெ என்ன பேசுவார்?
3.கம்யூனிஸ்டுகள் கலைஞர் பக்கம் தாவாத் தயாரயிருப்பது எதில் சேர்த்தி?
4.கொட நாட்டு அரசியின் சகாப்தம் அவ்வளவுதானா?
5.திமுகவின் வெற்றிக்கு வி.காந்த் கட்சியின் எம்ஜிஆர் ஓட்டுவங்கி பிளப்பும் ஒரு காரணமா?
6.ராகிங் கொடுமை தீரவே தீராதா?
7.தயாநிதியின் ஆரமப செயல் பாடுகள் கனஜோராய்?
8.ரஸ்யாவுக்கு இந்தியாவின் பொருளாதார உதவி ?
9.மத்திய பட்ஜெட் மத்திய தர வர்க்கத்திற்கு இனிக்குமா/கசக்குமா?
10.பெட்ரோல் விலை ஏறினால் யாருக்கு கொண்டாட்டம்/திண்டாட்டம்?
11.தொழில் போட்டியில் கொலைகள் பற்றிய செய்திகள்?
12.கல்லூரிகள்/பள்ளிகள் அடிக்கும் பகல் கொள்ளை (கட்டண்ங்கள் அதீத உயர்வு)?
13.கேரளா, தமிழ்க குமரி மாவட்ட கிராமத்தை கபளிகரம் பண்ண முயலுவது ?
14.மகாத்மாவை விமர்சித்த மயாவதி?
15.மும்பை தாக்குதல் விசாரணை-ராஜிவ் கேசு மதிரிதானா?
16.இலங்க கடற்படையினரின் தாக்குதல் தமிழக மீனவர் மீது?
17.பெரியாறு அணையில் கேரளா அரசின் பிடிவாதம், அடக்குமா மத்திய அரசு?அடங்குமா கேரளா?
18.ஆஸ்திரேலியாவிலும் நமக்கு(மாணவ்ர்கக்கு) அடியா?
19. பிசாசு பர்மூடா முக்கோணம் உண்மையா?
20.சேது சமுத்திரத் திட்டம் வருமா?
21.கனிமொழியின் அடுத்த திட்டம் என்னவாய் இருக்கும்?
22.மம்தாவின் செயல் பாடு லல்லுவை பின்னுக்கு தள்ளுமா?
23.ரயில்வேயில் மலிவு விலை சாப்பாடு திட்டம் வெற்றி பெறுமா?
24.சென்னையில் பன்றிக்காய்ச்சல் உண்டா?
25.சென்னையில் போக்குவரத்து நெரிசல் இப்போது குறைந்துள்ளதா?
26.சமத்துவபுரங்களின் உண்மையான நிலை என்ன?
27 உழவர் சந்தை களுக்கு பழைய மெளசு இருக்கா?\
28.சென்னையில் ஹெல்மட் கட்டயாமா?
29.அமெரிக்காவில் வங்கிகளின் தொடர் திவால்?
30.அரசு பென்ஸன் பெறுபவ்ர்கள் நிம்மதியாய் உள்ளனரா?
31.அது என்ன பாம்புக் கடி சிக்கன்?
32.மருத்துவ காப்பீடு திட்டம் தரும் கம்பெனிகளில்( சொந்த அனுபவம்) எது பரவாயில்லை?
அடங்கொன்னியா ....!!! பன்றி காய்ச்சல விட வேகமா பரவுதே இந்த 32 கொக்கி காய்ச்சலு ....!!!
நெம்ப தெவுரியம் சாரே உங்குளுக்கு.....!!! எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிபோட்டீங்களே.....!!! வாழ்த்துக்கள்......!!!!!
ராகவன் சார்,
நன்றி. வெளிப்படையான பதில்கள் !
//அதுவும் என் வீட்டம்மா செய்ததாக இருத்தல் அவசியம்.
//
//எவ்வாளவு தேடினாலும் பிடிக்காத விஷயம் எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம்.
//
ஜால்ராவுக்கும் ஒரு அளவு வேண்டாமோ ? ;-)
//இந்த லுங்கி திருப்பாற்கடல் என்னும் வைணவ தலத்துக்கு சென்றபோது உள்ளூர் தறி ஒன்றில் காரை நிறுத்தி வாங்கியது.
//
வைணவ தலத்தில் லுங்கி வாங்கிய முதல் மனிதர் நீங்களாகத் தான் இருப்பீர்கள் :) ஆனாலும், ஸ்ரீரங்கத்திலேயே 'துலுக்க நாச்சியார்' உண்டே !!
ஆமாம், திருப்பாற்கடல், பூவுலக திவ்ய தேசத்தில் வராதே ??
//அதையெல்லாம் அருமை நண்பர் என்றென்றும் அன்புடைய பாலா என்னும் பதிவில் போட்டு விட்டேன். அவர்தான் எனது வலையுலக இன்ஸ்பிரேஷன் என்பதை ஏற்கனவே டைம் பத்திரிகையில் போட்டு விட்டார்கள்.
//
இதெல்லாம் உங்க லெவலுக்கே டூ மச் என்பது என் கருத்து :)
//28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பதில்: முன்கோபம்.
//
தெரியாத தகவல் ! இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கிறேன் !!!
//பதில்: ஜெரூசலம். பாஸ்போர்ட் இல்லை, ஆகவே போக முடியாதுன்னு தெரியும், ஆனாலும் ஆசை விடவில்லையே.
//
நான் இஸ்ரேல் சென்றிருப்பது உங்களுக்குத் தெரியும். அடுத்த முறை உங்களையும் கூட்டிச் செல்கிறேன், உங்கள் யூத அபிமானத்தை சம்பந்தப்பட்டவரிடம் எடுத்துரைத்து :)
எ.அ.பாலா
நல்ல தொடர்.
நிறைய பதிவர்களை அடையாளம் காண உதவுகிறது.
//எனது தாத்தாவின் பெயர் ராகவன், ஆகவே அவரது பெயரைச் சொல்லும் பேரனான நான் ராகவன் ஆனேன்.//
தப்பு, மற்றவர்கள் அவர் பெயரை சொல்ல நீங்கள் ராகவன் ஆனீர்கள்!
//எனது பெரியப்பா பிள்ளையும் ராகவனே.//
சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷுக்கு ஒரு வசனம்.
டே! சுந்தரம் என்னாடா ஆச்சு!
யாரடா நீ!?
டே நாந்தாண்டா ராகவன்!
எந்த ராகவன், ஸ்ரீனிவாச ராகவனா, கோதண்டராகவனா, இல்ல தசரதன் பெற்றானே அந்த ராகவனா
(உங்களோட சேர்ந்தா போன ஜென்மத்து ஞாபகமே வரும்போல)
இது மாதிரி எல்லா பேர்லயும் பின்னாடி சேர்த்துகிறது தானே ராகவன்!
பிராணர்களுக்கு அது பொது பெயர்ன்னு கூட சொல்லலாம்!
//எளிய ஐயங்கார் ஆத்து சாப்பாடு, //
சுத்த பொய், ஆசிப் அண்ணாச்சி கல்யாணத்தில் ரவுண்டு கட்டி அடித்தது ஞாபகம் இல்லையா!
//இந்த லுங்கி திருப்பாற்கடல் என்னும் வைணவ தலத்துக்கு சென்றபோது உள்ளூர் தறி ஒன்றில் காரை நிறுத்தி வாங்கியது.//
நல்லவேளை ஜட்டி போடல, இல்லைனா அதுக்கும் ஒரு தலபுராணம் வந்துருக்கும்!
//சரியாக 8 மணிக்கு எங்கே பிராமணன் தொடர் வருமே. அதைப் பார்க்க வேண்டும்.//
போட்டியாக கலைஞர் டீவீயில் ”தொலைந்தான் பிராமணன்” என்ற தொடர் வரப்போகுதாமே! அதையும் பார்பீர்களா!
//பிடித்த மணம்?
பதில்: திருவல்லிக்கேணி கடற்கரையில் வரும் மீன் வாசனை.//
நல்லா பாருங்க அது கருவாட்டு வாசனை!
//வயது 42 வரை கிட்டப்பார்வை கண்ணாடி போட்டேன். பிறகு தூரப்பார்வை வந்து ரெண்டும் கேன்சலாகி விட்டன. இப்போ கன்ணாடி லேது.//
ப்ளஸ் இண்ட்டு மைனஸ் சமம்ன்னு இப்போ தான் கேள்வி படுறேன்!
எங்க பாஸுக்கு ஒருகண்ணுல ப்ளஸ், ஒரு கண்ணுல மைனஸ்!
:(
@வால்பையன்
தாத்தாவின் பெயரை சொல்பவன் என்பதாலேயே அந்த உறவுக்கு பேரன் என்னும் பெயர்.
ப்ளஸ் இண்டு மைனஸ் எப்போதுமே மைனஸ்தான் என்பது கணித விதி. நான் கூறுவது ப்ளஸையும் மைனசையும் கூட்டுவது. எனது விஷயத்தில் அது பூஜ்யம் ஆயிற்று.
ஆசிஃப் வீட்டு சாப்பாட்டை சொன்னால் வீட்டில் ரவுண்ட் கட்டி உதைப்பார்களே.
துக்ளக்குக்கு எதிராக கிக்ளக் என்னும் பத்திரிகையும் நடத்தி பார்த்தார்களே. திவாலானதுதான் மிச்சம். நீங்கள் சொல்லும் கலைஞர் சேனலில் அம்மன் பற்றி ஏதோ சீரியல் வரப்போவதாக பரபரப்பாக பேசுகிறார்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
பதில்: நல்ல குடும்பப் படங்கள் ஹாஸ்ய ரசத்துடன்.//
”ஹாஸ்ய சாம்பார்” படம் தானே உங்களுக்கு பிடிக்கனும்!
very nice.
கேள்விகள்:
1. அதென்ன - முப்பத்தி இரண்டு கேள்விகள் -
சாமுத்திரிகா இலட்சணமா?
2. ஆற்காட்டாருக்கும், துரைமுருகனுக்கும்
கிடைக்காத ஷொட்டு, துணை முதல்வருக்கு
எத்தனை சீக்கிரம் கிடைத்தது பார்த்தீர்களா?
3. பா.ஜ.க. இரேழிக் கேஸ் தானா?
4. லால்கார் விஷயத்தில், ப.சி.யின் அணுகுமுறை
சரிதானா? மானில அரசையும், மாயிஸ்டுக்களையும்
மோத விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இல்லை?
//
முதலில் ஒரு பதிவர் எனக்கு இக்கேள்விகளை அனுப்பினார், அவரிடம் எனது இயலாமையை கூறி தப்பித்தேன். ஆனால் இப்போது கேட்பது எனது அருமை நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா. முதலில் அவருக்கும் மறுப்பைத்தான் தெரிவித்தேன். இருப்பினும் அவர் அன்புடன் வற்புறுத்துகிறார்.
//
எப்படியோ பதில்கள் வந்துவிட்டது!.
மிகவும் ரசித்தேன்.
நன்றி (பாலாவுக்கும்).
”மெனக்கெட்டு” நீங்கள் கேள்விகள் அனுப்பியபோது மறுத்த நான் இன்னொரு பதிவர் கேட்டதற்கு பதிகள் போட்டதில் உங்களுக்கு கோபம் இல்லை என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
ஆனாலும் இந்த பாயிண்ட் என்னை உறுத்தியது நிஜம். மன்னித்து விடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதில்கள் எல்லாம் சூப்பர்
//கேரட் தான் போட்ட மோர்க்குழம்பு, சேனைக் கிழங்கு கறியமுது, மைசூர் சாத்தமுது, மாங்காய் பச்சடி, தயிர், ஊறுகாய் மிளகாய் ஆகியவற்றுடன் கூடிய எளிய ஐயங்கார் ஆத்து சாப்பாடு //
*******
Idha padichaa, pasikkadhavangalukku kooda pasikkumey Dondu Sir.......
///11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
பதில்: அரையில் ஒரே ஒரு லுங்கி. உள்ளாடைகள் ஏதும் இல்லை. சட்டை கூட போடவில்லை. இந்த லுங்கி திருப்பாற்கடல் என்னும் வைணவ தலத்துக்கு சென்றபோது உள்ளூர் தறி ஒன்றில் காரை நிறுத்தி வாங்கியது.////
சூப்பர்..இதை விட மொக்கையாக பதில் சொல்ல முடியாது. என்ன கலர் ? என்ற கேள்விக்கு அதைத்தவிர அனைத்து விதமான வியாக்யானமும் கொடுக்கப் பட்டுள்ளது
சங்கர்
//////11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
பதில்: அரையில் ஒரே ஒரு லுங்கி. உள்ளாடைகள் ஏதும் இல்லை. சட்டை கூட போடவில்லை. இந்த லுங்கி திருப்பாற்கடல் என்னும் வைணவ தலத்துக்கு சென்றபோது உள்ளூர் தறி ஒன்றில் காரை நிறுத்தி வாங்கியது.////
சூப்பர்..இதை விட மொக்கையாக பதில் சொல்ல முடியாது. என்ன கலர் ? என்ற கேள்விக்கு அதைத்தவிர அனைத்து விதமான வியாக்யானமும் கொடுக்கப் பட்டுள்ளது
சங்கர்/////
What is your answer for this comment ???????
@சங்கர்
இதில் என்ன பிரச்சினை? கேனத்தனமான கேள்விக்கு கேனத்தனமா பதில் என்ற வகையில் கேள்வியும் சரி பதிலும் சரி மேட்ச் ஆகின்றன.
அம்புடுத்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///இதில் என்ன பிரச்சினை? கேனத்தனமான கேள்விக்கு கேனத்தனமா பதில் என்ற வகையில் கேள்வியும் சரி பதிலும் சரி மேட்ச் ஆகின்றன.
அம்புடுத்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்////
Very Good . I expected this. See your one own proclamation below
""உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பதில்: எவ்வளவு லாஜிகலாக பேசினாலும் அதை புரிந்து கொண்ட பின்னரும் எதிராளி மொண்டித்தனமாக விவாதம் செய்வது.""
Are you not contradicting the above statement by giving reasoning like "kenaththanamaana keelvi etc?? for your "kenaththanamaana pathil" which is again your own acceptance only ?????
You may define your anwer as "Kenaththanamaana pathil ". But you don't have right to say "Kenaththanamaana kelvi " and belittle the person who asked the question to you.Even if so , you should have told it in the first place rather than giving "Kenaththanamaana pathil " and then justifying it now by telling that the Kelvi is " Kenaththanamaana kelvi"
Post a Comment