கோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம்! என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல மேலும் கூற எண்ணினதாலேயே அதையே பதிவாகவும் மாற்றத் துணிந்ததாலேயே இந்த இடுகை. “ஆக, பெரிசு இன்னொரு மொக்கை இடுகை இட்டதற்கு கோவி கண்ணனே காரணம்” எனப் பொருமும் முரளி மனோகர் அமைதி காப்பானாக. இப்போது பின்னூட்டம்.
வைரம் ராசகோபால் எழுதியது ஒரு பார்வை கோணத்தில். நீங்கள் பதிவு போட்டது இன்னொரு பார்வை கோணத்தில்.
மகாபாரதத்தை இன்னும் ஆழமாகப் பார்த்தால் இக்கதை ஆரம்பம் மட்டுமே.
கலிகாலம் வர இருப்பதை அறிந்த பரீட்சித்து மகாராஜா அவன் மேல் அஸ்திரங்கள் விட்டு அவனைத் தடுக்க, கலியும் தான் எங்காவது புகலிடம் பெற ஓர் இடத்தை கூறுமாறு அரசனை கேட்டார். கலிபுருடன் தங்கம் இருக்கும் இடத்தில் இருக்கலாம் என அரசர் கூற, அவரும் அரசனின் கிரீடத்தில் புகுந்து கொண்டதால்தான் மன்னன் மதி கலங்கி தவத்தில் இருக்கும் முனிவன் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்டு அப்பால் செல்கிறான்.
அதை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவரின் மகன் பரீட்சித்து பாம்பு கடித்து சாகுமாறு சாபம் இடுகிறான். தவம் கலைந்த பின்னால் முனிவர் நல்ல அரசனுக்கு ஏற்பட்ட சாபத்தை கண்டு வருந்த் அவனிடமே போய் விஷயத்தைக் கூறி அவனை தற்காத்து கொள்ளுமாறு கூற, அதற்குள் தான் செய்த அடாத செயலை குறித்து வருந்திய அரசனும் ஜாக்கிரதையாக இருக்கும் தருணத்தில்தான் நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்ட விஷயம் வருகிறது.
இதில் யாருமே குற்றவாளி அல்ல, விதியின் விளையாட்டுதான் அது என்று சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் சிஷ்யரும் தி.நகர் ராமகிருஷ்ணா உயர்நிலை பல்ளியில் வடமொழி ஆசிரியராக பணியாற்றிய ராமகிருஷ்ண சாஸ்திரிகள் தனது உபன்யாசத்தில் கூறியுள்ளார்.
பிறகு அரசன் தட்சகனால் தீண்டப்பட்டு உயிர் இழக்க, அவனது மகன் ஜனமேஜயன் வெகுண்டு பாம்புகளைக் கொல்ல சர்ப்ப யாகம் செய்ய என கதை போகிறது. அவ்வாறு யாகம் நடக்கும் சமயத்தில்தான் சுகமுனிவரால் மகாபாரதக் கதை அரசனுக்கு கூறப்படுகிறது. ஜனமேஜயனின் தந்தை பரீட்சித்து அபிமன்யுவின் மகன், அபிமன்யுவோ அருச்சுனனின் மகன்.
மகாபாரதம் இதிகாசம். இதிகாசம் என்றால் இப்படி நடந்தது என்னும் பொருள் வரும். நைசில் பவுடர் எல்லாம் எதற்கு தேட வேண்டும்?
எந்தக் கதையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இம்மாதிரி கேள்விகள் வருதல் எளிது, அவ்வாறே அவையும் எழுப்பப்படுகின்றன. உபநிஷத்துகள் என்று பார்த்தால் அவை அனைத்தும் இம்மாதிரி கேள்விகளாலும் அவற்றுக்கான பதில்களாலும் நிரம்பியவையே. அந்த பதில்களும் நிரந்திரம் என்றெல்லாம் இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்கான பதில்களே அவை. மீண்டும் சூழ்நிலைகள் மாறும்போது வேறுவித விடைகள் காணப்படும்.
பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ஒரு மாணவன் பல ஆண்டுகள் கழித்து தான் படித்த அக்கல்லூரிக்கு சென்று தன் பேராசியரை பார்த்து பேசுகிறான். அச்சமயம் பேராசிரியர் ஒரு தேர்வுக்கான வினாத்தாளை தயார் செய்து கொண்டிருக்கிறார். அதை அவன் பார்க்கிறான். அத்தனை கேள்விகளும் அவன் மாணவனாய் இருந்த போது கேட்கப்பட்ட கேள்விகளே. அவன் திகைப்புடன் “ஏன் எல்லாமே பழைய கேள்விகள்” எனக் கேட்கிறான். பேராசியர் அலட்டிக் கொள்ளாமல் “ஆனால் விடைகளோ புதியவைதானே” எனக் கூறுகிறார்.
மது உயிர்களைக் கொல்லும் என்பதை நிரூபிக்க ஆசிரியர் மதுக் கிண்ணத்தில் ஒரு புழுவைப் போட்டு அது இறப்பதை மாணவர்களுக்கு காட்டிவிட்டு அவர்கள் இந்த பரிசோதனையால் அறிந்தது என்ன எனக் கேட்க, வயிற்றில் புழு இருந்தால் மதுவருந்துவது நலம் என ஒரு மாணவன் பதிலளிக்கும் துணுக்கும் இம்மாதிரி மாறுபட்ட பார்வைக் கோணத்தால் வருவதே.
ஊதாரிப் புதல்வன் திரும்ப வந்ததால் நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்யும் தந்தையைக் கண்டு மனம் வருந்துகிறான் தந்தையின் கூடவே இருந்து நல்லச் செயல்களை புரிந்துவரும் மூத்த மகன். விவிலியத்தில் வரும் இக்கதைஅயை படித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நல்லதுக்கு காலமேயில்லை என கூறுபவர்களும் உண்டு.
மொக்கைகள் தொடரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
18 hours ago
10 comments:
நல்ல பதிவு இது. நன்றி.
Raghavan Sir,
What happened to you these days? More on a friendly node, why so less no of blogs? Now that you have a lappie, I was expecting you to be publishing more...May be I was a little greedy :) It is definitely disappointing to see no new blogs as I am still stuck at "Enge Brahmanan" days where I get an update everyday...I know you have a business to do, but as an ardent fan of "Dondu", I hope you don’t mind me asking this...Some question for you this week. Since you are closely following National & local politics, some questions on these lines.
1. Given the string of defeats and internal issues, what would be the best plan of recovery for BJP?
2. Reddys Vs BSY is over officially. But I guess this is just temporary fix...Do you think BJP will stay on and complete their term with such threats popping out every now and then?
3. Amma is not quite aggressive as she used to be…Has she kind of given up that I may not make it or is it like I will fight it only during the election days?
4. Given M K Alagiri is not very convenient handling his central portfolio, Will he switch to state during the next elections?
Krishna
இந்த
mega mall மாதிரி
இல்லன்னாலும் ஒரு
பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
நான்,
ஒரு முட்டு சந்து ஓரமா
புதுசா கட விரிச்சிருக்கேன்.
http://vaarththai.wordpress.com/
அப்டியே
அந்தான்ட…இந்தான்ட
போறசொல
நம்ம கடையான்ட வந்து
எட்டி பாருங்கோ… Senior
இது கோவி கண்ணனுடைய பதிவுக்கு எழுதிய பின்னூட்டம் தான்! இங்கேயும் அதே கேள்வி வேறு விதமாக வந்திருந்தாலும், பதில் பொருந்திப்போகவே இங்கேயும்:
முதலில், இதை எழுதி வரும் வைரம் ராஜகோபால் காலமாகி இரண்டு அல்லது மூன்று வருடமாகிறது என்று படித்த நினைவு. பழையதே மீள்பிரசுரமாகி வருகிறது போல இருக்கிறது.
இறந்துபோனவருடன் வம்புவழக்கு எதற்கு?
பிரசுரிக்கும் தினமலர், இதை ஒரு பார்ப்பன ஆதரவுப்பத்திரிகை, அல்லது பார்ப்பனப் பத்திரிக்கை என்று சொல்வதே கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. அவர்கள் செய்வது வியாபாரம்! அங்கே பார்ப்பனன், அல்லது பார்ப்பனரல்லாதவன் என்ற கேள்வியே இல்லை. முழுக்க முழுக்க லாபம் ஒன்று மட்டும் தான் குறி என்பதை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டியதே இல்லை.
கடைசியாக, சொல்லப்பட்டிருக்கும் கதை! இதிகாசம் என்பது, டோண்டு ராகவன் சார் முதலில் சொன்னது போல இப்படி நடந்தது என்பது மட்டும் அல்ல, இப்படியும் நடக்கும் என்பதைச் சொல்வதற்காகவும் தான்!
தடம் பிறழ்வது என்பது எல்லோருக்குமே ஏற்படுவது தான். இந்தக் கதையில் கூட, தட்சகன் என்ற அந்தப் பாம்பு, விதியின் பாதையை எடுத்துச் சொல்வதாக, விதியின் போக்கில் குறுக்கிடுவதற்கான அதிகாரி தான் அல்ல என்று உணர்ந்து விலகிப்போனதாக மட்டும் பார்த்தால், கதையில் பார்ப்பனனும் இல்லை, பார்ப்பனீயமும் இல்லை.
விதியின் போக்கில் தலையிடுவது எவ்வளவு பெரிய அனர்த்தமாகிப்போய் விடும் என்பதை என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றிலேயே தெரிந்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் பார்க்கும் போது இந்தக் கதை சொல்ல வருகிற உண்மையான அர்த்தம் தான் முன்னிற்கிறதே தவிர இரண்டு இடுகைகளாகத் தொடர்ந்து நீங்கள் கொதித்துப் போயிருப்பது போல அல்ல.
அவர் எழுதுவது பிடிக்கவில்லையா? படிக்காதீர்கள்! புறக்கணித்து விடுங்கள்! அவ்வளவுதானே! இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக்கலாமா?
லோடுக்கு என்ன சொல்ல வர்றார்னு பார்க்கப்போனா அங்கே அவர் சொல்வது:
தட்டச்சு பழகுகிறேன்…..
தட்டச்சுப் பழகுவதற்கு ப்ளாக் எழுதோதை விட வேறு நல்ல வழிகளும் இருக்கின்றன!
1.உணவுப்பொருட்களின் அதீத விலை ஏற்றத்திற்கு பதுக்கல் வாணிபம் செய்யும் கயவர்கள்தான் காரனம் எனத் தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரசுகள் பற்றி?
2.தங்கத்தின் விலையை ஆன்லைன் வர்த்தகம் செய்யும் சூதாடிகள்தான் விண்முட்டும் அளவுக்கு ஏற்றுகிறார்கள் எனத் தெரிந்த பிறகும் வாழா இருக்கும் அரசுகள் பற்றி?
3.ஜீனிவிலை இருமடங்காய் உயர்ந்தபிறகும் கரும்புக்கு நியாயமான விலை விவசாயிகளுக்கு கொடுக்க தயங்கும் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கா அரசுகள் பற்றி?
4.தொலைதொடர்புத்துறை அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு பற்றி சிபிஐ கண்டுபிடித்தபிறகும், நிலவும் இறுக்கமான இருபக்க மெளனம் பற்றி?
5.நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஆப்பு வைக்கபட்டது பற்றி?தொடர்ந்து கேள்விகுறியாகியுள்ள ”நம்பர் ஒன்” ( அடுத்த சூப்பர் ஸ்டார்)பட்டம் பற்றி?
அடுத்த வாரத்திற்கு கேள்வி:
வந்தே மாதரம் பாடக்கூடாது என்று பத்துவா போடும் முசுலீம் அமைப்பை இணைய திராவிட கும்பல் ஏன் ஆதரிக்கவேண்டும் ?
நாளை தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதை பத்துவா போட்டு நிறுத்தச்சொன்னால் இதே போல் ஆதரிப்பார்களா இந்த திராவிட குஞ்சுகள் ?
1. மதுரை அழகிரி, தளபதி,கனிமொழி,மாறன் சகோதரர்கள் இவர்களின் மோதலில் தற்போதைய நிலை?
2.சன் டீவி-கலைஞர் டீவி நிர்வாகங்களின் மோதல், ஆளிழுப்பு விவகாரம் -தற்போதைய நிலை?
3.ஜெ-நடராசன் மோதல் -தற்போதைய நிலை?
4.தமிழக காங்கிரஸ் கோஷ்டி மோதல்கள்- தற்போதைய நிலை?
5.வடிவேல்-விஜயகாந்த் மோதல்-தற்போதைய நிலை?
6.சென்னை சட்டக்கல்லுரி மாணவர் மோதல் -வழக்கின் -தற்போதைய நிலை?
7.போலிஸ்-வக்கீல் மோதல் -வழக்கு-தற்போதைய நிலை?
8.நடிகர்-பத்திரிக்கையாளர் மோதல் விவகாரம்-தற்போதைய நிலை?
9.இரு பிரபல பிளாக்கர்களின் மோதல்-தற்போதைய நிலை?
10.டோண்டு-வினவு(பெரியார் கொள்கைகள்) கருத்து மோதல்கள்-தற்போதைய நிலை?
கந்தசாமி
kelvi-pathil arumai.
nandru
Post a Comment