கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
கேடியார்
1. சிங்கப்பூரில் ஆபிசில் ஆங்கிலத்தில் பேச மாட்டேன் தமிழில் மட்டுமே பேசுவேன் என்று லந்து செய்தால் எப்படி அடிப்பார்கள்?
பதில்: ரோத்தன் அடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அதை தந்து வேலையிலிருந்து கல்தா கொடுப்பார்கள், அது தர வேண்டிய தண்டனைதான்.
2. வேலை நேரத்தில் வாங்கும் சம்பளத்திற்க்கு உருப்படியாக ஏதும் செய்யாமல் கேவலமான வலைபூ எழுதிபவர்களை என்ன செய்யலாம்?
பதில்: மாட்டிக் கொள்ளாமல் செயல்படுமாறு அறிவுரை கூறலாம்.
எம்.கண்ணன்
1. கமல்ஹாசன் ஏன் விவேக்கை தன் படங்களில் சேர்ப்பதில்லை ? விவேக்கின் விவகாரங்களினாலா ? (வடிவேலுக்கு தேவர் மகனிலும் (மிக நல்ல), சிங்காரவேலனிலும் சுமாரான ரோல்)
பதில்: நீங்கள் சொன்னபிறகுதான் யோசித்து பார்த்தேன். ஒரு படம் கூடவா இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை? இருவருமே பாலசந்தரின் தயாரிப்புகள்தானே. ஏன் அப்படி? கேபிள் சங்கர், லக்கிக்லுக், உண்மைத் தமிழன் ஆகியோர் இன்னும் ஆதாரபூர்வமாக பதில் தரக்கூடும்.
கேபிளுக்கு ஆகவே ஃபோன் செய்து கேட்டேன். அவரும் என்னைப் போல இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறார். கமல் விவேக் நடுவில் ஏதாவது ஈகோ பிரச்சினை இருக்கலாம் என இப்போது எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் உண்மைத் தமிழனோ அப்படி ஒன்றும் பிரச்சினைகள் ஏதும் அவர்களுக்கிடையே இல்லை, நல்ல வாய்ப்பு அமையவில்லை அவ்வளவுதான் எனக் கூறுகிறார்.
2. எல்லா 2 வீலர் கம்பெனிகளும் ஏன் சில ஸ்டாண்டர்டைசேஷன் செய்வதில்லை? ஒரு வண்டியில் பூட்டும் போது இடது புறம் (ஹேண்டில் பார்) தலை சாய, இன்னொரு வண்டியில் வலது புறம் - பார்க்கிங் லாட்டுகளில் இடம் வேஸ்ட் ஆகிறது, வண்டி விட, எடுக்க மிக கஷ்டமாக உள்ளதே ?
பதில்: ஸ்கூட்டர் கம்பெனிகள் மட்டும்தானா இதில் குற்றவாளி? வீடுகளில் நாம் உபயோகிக்கும் ப்ளக்குகளுக்கும் ப்ளக்டாப்புகளுக்குமே பொருந்துவதில்லையே. பல நேரங்களில் பொருட்களை டிசைன் செய்பவர்கள் தமது கற்பனைத் திறமையை மூட்டை கட்டி வைத்து விடுகின்றனர் என்றுதான் கூற வேண்டும். நீங்கள் கூறிய உதாரணத்தையே எடுத்து கொள்ளுங்கள். மிகவும் உண்மையான, சீரியசான குற்றச்சாட்டு. ரொம்பவும் எளிமையாக தவிர்த்திருக்க வேண்டிய விஷயம், ஆனால் அதிலேயே கோட்டை விட்டிருக்கிறார்களே.
3. அழகிரி திருச்செந்தூர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 2 துணை முதல்வர்கள் அஃபிஷியலாக கிடைப்பார்களா ?
பதில்: ஏன் கூடாது? தென்மாநிலங்களுக்கு அழகிரி, வடமாநிலங்களுக்கு ஸ்டாலின்? செய்தாலும் செய்வார்கள்.
4. அதிமுகவில் உட்கட்சி தேர்தலாமே? நெசமாலுமே ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறதா என்ன?
பதில்: (வ்டிவேலு குரலில்) ஆகககா, அதான் மழை இந்த போடு போட்டதா?
5. ஜெயமோகன் வசனத்தில் பழசிராஜா - மூணேகால் மணிநேரம் உட்கார்ந்து சரித்திரப் படம் பார்க்க மறத் தமிழர்களுக்கு நேரம் இருக்குமா?
பதில்: என் தந்தை நினைவுக்கு வருகிறார். ஒருமுறை லிபர்ட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் போட்டிருந்தார்கள். இவரும் மாலை காட்சிக்கு சென்றிருக்கிறார். பட முடிந்ததும் கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்து மீனம்பாக்கம் வருவதாக அவர் திட்டம். ஆனால் வீட்டுக்கு வர இரவு பத்தரைக்கு மேல் ஆயிற்று. “என்னடா, படம் முடியப்போகிறதா என்றே ஆகிவிட்டது. விடாமல் எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்” என்ற தனது திகைப்பையும் வெளிப்படுத்தினார். பழசிராஜா வீ.பா.க.பொ. விடவா அதிக நீளமானது?.
6. 'கனகவேல் காக்க' படம் வெற்றி பெற்று விட்டால் பா.ரா முழுமூச்சில் சினிமாவில் இறங்கிவிடுவாரா?
பதில்: அவரையே கேட்டு சொன்னால் போயிற்று.
கேட்டாச்சு. தான் முதற்கண் எழுத்தாளர். தனது எழுத்துக்களுக்கு கருவிகளாகத்தான் பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா ஆகிய ஊடங்களை வைத்திருப்பதாக அவர் தெளிவாகவே கூறினார். தனக்கு 25 வயதாகிய போதே திரைப்படங்களுடன் தொடர்பு உண்டென்றும், சில கதைகளில் மாறுதல்கள் செய்ய தன்னைக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். பாண்டியராஜனின் “வள்ளி வரப்போறா” என்ற திரைப்படத்தில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும் கூறினார்.
சுஜாதா, பாலகுமாரன், இரா முருகன் ஆகியோர் பற்றியும் குறிப்பிட்ட அவர், அவர்களல் கதாசிரியனுக்கு மதிப்பு கூடியது என்றார். ”கனகவேல் காக்க” படம் பற்றியும் பேசினார். எது எப்படியானாலும் சினிமாவிலேயே முழு கவனம் செலுத்துவது என்பது இல்லை என்றும் கூறினார்.
7. சோனியா காந்தி ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை அடக்கிவைத்த மாதிரி பிஜேபி டெல்லி தலைகளால் ரெட்டி சகோதரர்களை கர்நாடகத்தில் அடக்க முடியவில்லையே?
பதில்: சோ அவர்கள் ஒரு துக்ளக் ஆண்டுவிழாவில் கூறியது போல, “இத்தருணத்தில் அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி பேச வேண்டும். ஒரு கட்சிக்கு சரியோ தவறோ அம்மாதிரி ஒரு தலைமை மட்டும் இருப்பது கட்சிக்கு நல்லதே. கட்சிக்குள் என்னதான் பேசி விவாதித்தாலும் வெளியில் வரும்போது ஒரே குரலில் பேசுவது நலம்”.
“ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூடாது என நினைக்கிறார்கள். உள்ஜனநாயகம் உள்ள கட்சியில் இது ஒரு கஷ்டம். அதே சமயம் இரண்டாம் நிலை தலைவர்களும் இதனால் உருவாகலாம். பாஜக-வில் அவ்வகையில் பல ஆல்டெர்னேடிவ்கள் உள்ளன. அத்வானி, மோடி, ஜஸ்வந்த்சிங் என பல பேர். ஆனால் இங்கும் உமாபாரதி கலாட்டா இருப்பது வேறு விஷயம். காங்கிரசிலோ சோனியா காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ராகுல் காந்தி இருப்பார். அதாவது நேரு குடும்பத்தினர் மட்டுமே”.
அவ்வளவுதான் விஷயம்.
8. அசினின் அக்குள் வியர்வை பற்றியெல்லாம் கவர் ஸ்டோரி (+ படம்) போடுமளவிற்கு விகடன் வந்துவிட்டதே? முன்பெல்லாம் விகடன் கவர் ஸ்டோரி என்றால் ஒரு நல்ல விஷயம் இருக்கும். ஆனால் கடந்த 4 மாதங்களாக அடாசு விஷயங்களை கவர் ஸ்டோரியில்? என்ன ஆயிற்று விகடன் இணை, துணை, பொறுப்பு மற்றும் முதன்மை ஆசிரியர்களுக்கு?
பதில்: என்னவா? எல்லா நிறுவனங்களிலும் வரக்கூடிய அலுப்புதான்.
9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோமல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வேண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக்குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: மடிப்பாக்கத்தில் வசிக்கும் எனது எழுத்தாளர் நண்பர் வீட்டுக்கு அமெரிக்கவாழ் பதிவர் ஒருவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் சாரு பற்றி பேசும்போது, அவருடன் ஒரு அளவுக்குள் பழக வேண்டும் என கூறினார். கடன் கேட்டுவிடுவார் என்றார்.
அவருடைய வலைத்தளத்திலேயே பார்க்கலாமே, தனது வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு அதற்கு பணம் அனுப்புமாறு கேட்டு கொள்கிறார். அப்படி பெறும் பணத்தை ரொம்ப காஸ்ட்லி பார்களில் குடிக்கத்தான் பயன்படுத்துகிறார் என்பதையும் அவ்வப்போது எழுதி வருகிறார். இந்த விஷயங்களெல்லாம் படிப்பவர் மனதில் ஓர் அவெர்ஷனை உருவாக்கிவிடுகிறது.
இவையெல்லாம் ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.
10. ஒரு எழுத்தாளர் அல்லது படைப்பாளியின் உழைப்பிற்கு, வெற்றிக்கு பின்னால் அவரது மனைவியின் சப்போர்ட் எவ்வளவு முக்கியம் ? (அதாவது பிக்கல் பிடுங்கல்கள், நச்சுத் தொல்லைகள் இல்லாத சப்போர்ட்)
பதில்: எழுத்தாளரோ எழுத்தாளினியோ அவர்களது வெற்றிக்கு அவர்தம் வாழ்க்கைத் துணையின் பங்கு மிக அதிகம். இந்தத் தருணத்தில் பி.ஜி.வோட் அவுஸ் (P.G. Wodehouse) தனது Performing Flea என்னும் புத்தகத்தில் அதை தனது மகளுக்கு அர்ப்பணம் செய்திருப்பார். அதை இவ்வாறு குறிப்பிடுகிறார், “To my dear daughter, without whose dedicated help, this book would have been finished in half the time". (நினைவிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்)
அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை வெறுக்கிறீர்கள்? ஏன்?
பதில்: இலவச டிவி திட்டம். மக்களை முழுமுட்டாளாக்கும் செயல்பாடு இது.
2. தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்? ஏன்?
பதில்: எல்லாமே மக்களை முட்டாளாக்கும் திட்டங்கள், மக்களை பிச்சைக்காரர்களாக்கும் செயல். ஆகவே அவற்றில் எவற்றையுமே ஆதரிக்கவில்லை.
3. அடுத்து என்ன திட்டம் (2011 தேர்தலில்) வரும் என் கணிக்கிறீர்கள்?
பதில்: அதான் ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காங்களே. ஏதாவது செய்வாங்க.
4. மாதம் 30,000 க்குமேல் வாங்கும் அலுவலர்களுக்கு ரேசனில் மலிவு (து.பருப்பு) பொருள் மான்ய விலையில் தேவையா? அடுக்குமா?
பதில்: தேவையில்லைதான். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தாது இருப்பார்களா?
5. இன்றைய நிலவரப்படி உலகில் பெரும் செல்வந்தர் யார்?
பதில்: 40 பில்லியன்களுடன் பில் கேட்ஸ் முதலிடத்தில் நிற்கிறார்.
6. வேலை இல்லா பட்டதாரிகளுக்கு வழங்கப் படும் அரசின் உதவித் தொகை திட்டம் எப்படி உள்ளது?
பதில்: அதன் மேல் எனக்கு நல்லபிப்பிராயம் இல்லை. கிடைத்த வேலையை ஏற்காது சோம்பெறிகளாக திரிய ஊக்கமளிக்கும் திட்டம் இது.
7. வாழும் மனிதனின் அவசியத் தேவைகள் எவை எவை?
பதில்: உணவு, உடை, இருப்பிடம் என்பதை எல்லோருமே அறிவார்களே. கூடவே சுயமரியாதையும் வேண்டும். ஆகவே அவற்றை சொந்த உழைப்பால் பெற முயறசிக்க வேண்டும்.
8. இந்த பரந்த இந்த உலகில் வாழத் தெரிந்தவன் - யார்?
பதில்: கண்ணதாசன் கூறியதுதான்.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும், பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும். கதவு திறந்தால் காட்சி கிடைக்கும், காட்சி கிடைத்தால் கவலை தீரும். கவலை தீர்ந்தால் வாழலாம்
9. இந்த பரந்த இந்த உலகில் வாழத் தெரியாதவன் யார்?
பதில்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடலின் எளிய உண்மையை உணர்ந்து கடைபிடிக்காதவன்.
10. வி.ஆர். எஸ்., திட்டத்தால் வெளியேறியவர்கள் நிலை?
பதில்: ஒரு சீரிய நோக்கத்தை முன்னிறுத்தி வி.ஆர்.எஸ். பெற்றவர் உருப்பட்டனர். மற்றவர் சந்தியில் நின்றனர். அவ்வாறு ஆகிவிடுமோ என பயந்தவர்கள் வேலையிலேயே நின்றனர், ஆனால் அவர்களால் கம்பெனிகளுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.
11. கல்வித்துறையின் வளர்ச்சி எப்படி உள்ளது?
பதில்: வளர்ச்சி எனக் கூற இயலாது. வீக்கம் என்று வேண்டுமானால் கூறலாம்.
12. தன்னை விட படித்த மனைவியுடன் வாழ்க்கை நடத்துவதுபவரின் மனநிலை?
பதில்: சுயபச்சாதாபம், தாழ்வுணர்ச்சி. அதனால் மனைவி மீது சந்தேகம், இருவரது வாழ்க்கையும் நரகமாகிறது பல இடங்களில்.
13. மனதறிந்து துரோகம் செய்தவர்களை/செய்பவர்களை என்ன செய்யலாம்?
பதில்: சமயம் பார்த்து காலை வாரவேண்டும்.
14. பூவுலகில் கவலையே இல்லாத மனிதர் சுயபுத்தியுடன் எவரேனும் உளரோ?
பதில்: வெகுசிலர் இருக்கலாம், நான் பார்த்ததில்லை.
15. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் நிலை எப்படியுள்ளது?
பதில்: முறையாக தமது இந்தியக் கம்பெனிகளால் மாற்றம் செய்யப்பட்டு செல்பவர்களது நலன் உள்ளூர்காரர்களை நம்பில்லை. அதன்றி வேலை ஏஜென்சிகளுக்கு பணம் கட்டி போனவர்கள் பாடு திண்டாட்டம்தான். இது பற்றி நான் போட்ட பதிவில் நான் கூறிய கருத்துக்களை மாற்றிக் கொள்வதாக இல்லை.
16. பொதுவாய் கவிஞர்கள், இயல்பு நிலை தவறி இருப்பது ஏன்?
பதில்: அசாதாரண மனநிலையில் இருப்பவர்கள் கவிஞர்கள். கனவு கண்டு அதற்கு உருவம் தருபவர்கள். இப்படி அப்படி என்றுதான் இருப்பார்கள்.
17. வெளிநாட்டு மோகம் நம் இளைஞர்களிடையே மீண்டும் வருமா?
பதில்: எப்போது அது இல்லாமல் இருந்திருக்கிறது, மீடும் அதுவருமா எனக் கேட்பதற்கு?
18. நாட்டில் பெண் களுக்கு எதிரான, செக்ஸ் - வயலன்ஸ் கூடுவது அடிப்படை காரணம்?
பதில்: பெண்ணின் முன்னேற்றம் பல ஆண்களுக்கு கிலியை ஏற்படுத்துவதும் ஒரு காரணம்.
19. எண் கணித முறைப்படி பெயரை மாற்றும் போக்கு அதிகமாகிறதே?பலன் ?
பதில்: பலனும் ஒரு எண்தான், அதாவது பூஜ்யம்.
20. நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு வழிகள்?
பதில்: இப்படி எல்லா கேள்வி கேட்டால் கிடைத்துவிடுமா? அவரவர் தம் சக்திக்கேற்ப உழைக்க வேண்டும். தகுதிக்கு மீறிய ஆசையை வளர்த்து கொள்ளக் கூடாது.
21. சுகமாக வாழ விரும்புகிறர்வர்களுக்கு வழிகள்?
பதில்: நிம்மதியான வாழ்க்கையே சுகமான வாழ்க்கை.
22. நேரம் போதமாட்டேன்ங்கிறதே என்பவர்கள் பற்றி?
பதில்: அவர்களுக்கு தேவை நேர மேலாண்மை. மா. சிவகுமார் ஒரு பதிவில் எழுதியுள்ளார். அதிலுள்ள பெரிய கற்கள், சிறிய கற்கள், மணல் துகள்கள், தண்ணீர் ஆகிய விஷயங்களை கண்டு கொள்தல் நலம்..“
23. ஒருவரது குறிக்கோளை அடைய எளிய உபாயங்கள்?
பதில்: கவனம் முழுமையையும் அக்குறிக்கோளை அடைவதில் செலுத்த வேண்டும். திசை திருப்பப்படக்கூடாது.
24. உலகில் செழுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
பதில்: எப்போதும் புதுப்புது குறிக்கோள்களை அமைத்து கொள்ள வேண்டும், அதாவது ஒன்றை அடைந்ததும் அடுத்தது அதற்குப் பின் அதற்கடுத்தது என்று செல்தல் நலம்.
25. சித்த மருத்துவம் பிரபலமாய் ஆகிறதா?
பதில்: சித்தர்கள் பலவற்றை பூடகமாக சொல்லியுள்ளனர். அவற்றையெல்லாம் முதலில் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். அது செய்யாதவரை சித்த மருத்துவத்தின் முன்னேற்றம் கடினமானதே.
26. மனிதனுக்கு எதற்கு பொறுமை தேவை?
பதில்: குறிக்கோள்களை அடைவதில்.
27. குடும்பத்தில் அதிகம் உழைப்பது யார்?
பதில்: குடும்பம் என்பது கூட்டு முயற்சி. அனைவருக்கும் கடமைகள் உண்டு. அவரவர் கடமையை செய்தாலே போதும் இதில் எதற்கு இம்மாதிரி ஒப்பிடுதல் எல்லாம்?
28. துரோகம் செய்தவன் எதிர்காலம்?
பதில்: தனக்கு யாராவ்து துரோகம் செய்து விடுவார்களோ என்றே அஞ்சிக் கொண்டிருப்பான்.
29. திறமையும் இல்லாமல், கர்வத்துடன் அலைபவர்கள் ?
பதில்: கர்வபங்கம்தான், வேறென்ன?
30. ஒருவனின் தலை எழுத்து பற்றி சொல்வது உண்மையா? நம்புகிறீர்களா?
பதில்: ஜீன்களில் பொதிக்கப்பட்டுள்ள தகவல்களே அவரவரது தலையெழுத்து. அவற்றில் பல விஷயங்கள் ஒரு விதமான சாத்தியக்கூறையே கூறுகின்றன. அவற்றையும் மீறவியலும் என்பதும் சில சமயங்களில் நிறுவப்பட்டுள்ளது.
31. விதியை மதியால் வென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா?
பதில்: நான் ஐடிபிஎல்-ல் வேலை செய்தபோது என்னை மட்டம் தட்டும் எண்ணத்தில் என்னை ஒரு முக்கியமில்லாத இடத்துக்கு மாற்றினார்கள். நல்லதாய் போயிற்று என நான் அங்கேயே இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளை பார்த்துக் கொண்டது நீங்கள் கேட்ட கேள்விக்கான ஒரு உதாரணமே.
32. கனமழையில் நீலகிரியில் நிலச்சரிவு மனிதனின் பேராசைக்கு இயற்கையின் சாபம் என பார்த்த பிறகும் திருந்தாத ஜென்மங்கள்?
பதில்: திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
கிருஷ்ணா
1. Given the string of defeats and internal issues, what would be the best plan of recovery for BJP?
பதில்: பாஜக இப்போது செல்லும் பாதை அதற்கு நாசத்தையே விளைவிக்கும். சுதாரிக்க வேண்டிய தருணம் இது. செய்வார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி/
2. Reddys Vs BSY is over officially. But I guess this is just temporary fix...Do you think BJP will stay on and complete their term with such threats popping out every now and then?
பதில்: என்ன செய்வது? எடியூரப்பா மோடி இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது.
3. Amma is not quite aggressive as she used to be…Has she kind of given up that I may not make it or is it like I will fight it only during the election days?
பதில்: ஜே என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே தெரியாது என்றுதான் தோன்றுகிறது.
4. Given M K Alagiri is not very convenient handling his central portfolio, Will he switch to state during the next elections?
பதில்: அவ்வாறு நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ரமணா
1. உணவுப்பொருட்களின் அதீத விலை ஏற்றத்திற்கு பதுக்கல் வாணிபம் செய்யும் கயவர்கள்தான் காரணம் எனத் தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரசுகள் பற்றி?
பதில்: வாய்க்கரிசி போட்டபிறகு பிணத்தால் என்ன பயன்? அதனால் என்ன செய்ய இயலும்?
2. தங்கத்தின் விலையை ஆன்லைன் வர்த்தகம் செய்யும் சூதாடிகள்தான் விண்முட்டும் அளவுக்கு ஏற்றுகிறார்கள் எனத் தெரிந்த பிறகும் வாழா இருக்கும் அரசுகள் பற்றி?
பதில்: இல்லை. ஆன்லைன் வர்த்தகம் ஒரு அறிகுறி. உண்மையில் அரசே இப்போது தங்கம் வாங்குகிறது, டாலரின் மதிப்பு விடாமல் வீழ்ந்து கொண்டிருப்பதால்.
3. ஜீனிவிலை இருமடங்காய் உயர்ந்தபிறகும் கரும்புக்கு நியாயமான விலை விவசாயிகளுக்கு கொடுக்க தயங்கும் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கா அரசுகள் பற்றி?
பதில்: தனிப்பட்ட விவசாயிகளிடம் அரசை அசையச் செய்யும் சக்தி ஏதும் இல்லை. ஆனால் ஆலைகளிடம் உண்டு.
4. தொலைதொடர்புத்துறை அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு பற்றி சிபிஐ கண்டுபிடித்தபிறகும், நிலவும் இறுக்கமான இருபக்க மெளனம் பற்றி?
பதில்: சிபிஐ கண்டுபிடிப்பு எல்லாம் ஒரு நாடகம் போலத்தான் இந்த விஷயத்தில் தோற்றமளிக்கிறது. எதையும் முதல் பார்வையில் நம்பலாகாது.
5. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஆப்பு வைக்கபட்டது பற்றி?தொடர்ந்து கேள்விகுறியாகியுள்ள ”நம்பர் ஒன்” ( அடுத்த சூப்பர் ஸ்டார்) பட்டம் பற்றி?
பதில்: ஒரு நேரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்கவியலும். இரண்டு நடிகர்கள்தான் பாப்புலராக இருக்கலாம், இது பற்றி நான் போட்ட இப்பதிவைப் பார்க்கவும்.
அனானி (17.11.2009 மாலை 05.45-க்கு கேட்டவர்)
1. வந்தே மாதரம் பாடக்கூடாது என்று பத்துவா போடும் முசுலீம் அமைப்பை இணைய திராவிட கும்பல் ஏன் ஆதரிக்கவேண்டும்? நாளை தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதை பத்துவா போட்டு நிறுத்தச்சொன்னால் இதே போல் ஆதரிப்பார்களா இந்த திராவிட குஞ்சுகள்?
பதில்: இசுலாமியர் சிறுபான்மையராக இருக்கும் வரைதான் சற்றே சகிப்புத் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையினராக ஆனதன் பிறகு அது இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்தையும் தடுத்து ஃபத்வா போடுவார்கள். திராவிட கும்பல் வாயில் விரலை வைத்துக் கொண்டுதான் உட்கார வேண்டும்.
கந்தசாமி
1. மதுரை அழகிரி, தளபதி, கனிமொழி, மாறன் சகோதரர்கள் இவர்களின் மோதலில் தற்போதைய நிலை?
பதில்: அதுதான் இதயம் நனைந்து விட்டதே, கண்களும் பனித்தனவே.
2. சன் டீவி-கலைஞர் டீவி நிர்வாகங்களின் மோதல், ஆளிழுப்பு விவகாரம் -தற்போதைய நிலை?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
3. ஜெ-நடராசன் மோதல் -தற்போதைய நிலை?
பதில்: ஒரு மாதிரியான தமாஷான நிலை. அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி கூறுவதை நிரூபிக்கிறது.
4. தமிழக காங்கிரஸ் கோஷ்டி மோதல்கள்- தற்போதைய நிலை?
பதில்: எப்போதும் போலவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தொடர்கிறது. திருநாவுக்கரசு கோஷ்டி என ஒன்று புதிதாக வந்தாலும் வியப்படைவதற்கில்லை.
5. வடிவேல்-விஜயகாந்த் மோதல்-தற்போதைய நிலை?
பதில்: திரைமறைவு பேரங்கள் நடந்திருக்கும் என நினைக்கிறேன். அடக்கி வாசிக்கப்படுகிறது.
6. சென்னை சட்டக்கல்லுரி மாணவர் மோதல் -வழக்கின் -தற்போதைய நிலை?
பதில்: கிணற்றில் போட்ட கல். சம்பந்தப்பட்ட மாணவர்களின் படிப்பு பாழானது பாழானதுதான்.
7. போலீஸ்-வக்கீல் மோதல் -வழக்கு-தற்போதைய நிலை?
பதில்: சோ சொன்னது போல இதில் தலைகுனிவு போலீசுக்கோ, முதல்வருக்கோ இல்லை. யாருக்கு என்பதை நானும் சோவைப் போலவே ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
8. நடிகர்-பத்திரிக்கையாளர் மோதல் விவகாரம்-தற்போதைய நிலை?
பதில்: விவேக்குக்கு ஆப்பு வைக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். அவரது புகைப்படங்கள் எடுக்கப்படாமல் அவரை தவிர்க்கிறார்கள் என்றும் படித்தேன்.
9. இரு பிரபல பிளாக்கர்களின் மோதல்-தற்போதைய நிலை?
பதில்: யார் அவர்கள்?
10. டோண்டு-வினவு (பெரியார் கொள்கைகள்) கருத்து மோதல்கள்-தற்போதைய நிலை?
பதில்: ஆ ஊ என்றால் பாப்பானைத் தாக்கு என இருக்கும் வினவு கும்பல்களுடன் என்ன மண்ணாங்கட்டி கருத்து மோதல் வேண்டியிருக்கிறது? அவர்களை இக்னோர் செய்கிறேன்.
கேள்விகள் ஏதேனும் இருந்தால் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
9 hours ago
26 comments:
//வேலை நேரத்தில் வாங்கும் சம்பளத்திற்க்கு உருப்படியாக ஏதும் செய்யாமல் கேவலமான வலைபூ எழுதிபவர்களை என்ன செய்யலாம்?//
”புதிய தலைமுறை” பத்திரிக்கையில் வேலை கொடுக்கலாம்!
//கமல்ஹாசன் ஏன் விவேக்கை தன் படங்களில் சேர்ப்பதில்லை //
பெரும்பாலும் பெரிய நகைச்சுவை நடிகர்கள் கமல் படத்தில் இருப்பதில்லை, மேலும் அது இயக்கனிரின் வேலையும் கூட,
சிங்கார வேலன், இந்தியன் படங்களில் கவுண்டமணி நடித்தது அறிந்திருக்கலாம்,
தற்போதய கமல் படங்களை பொறுத்தவரை வசனம் தான் நகைச்சுவையே தவிர நடிகர்கள் தேவையில்லை
அந்த கிரிடிட் கிரேஸி மோகனையே சேரும்!
// தென்மாநிலங்களுக்கு அழகிரி, வடமாநிலங்களுக்கு ஸ்டாலின்? செய்தாலும் செய்வார்கள்.//
தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து ஆளுக்கு பாதியா கொடுத்துருவாரா!?
மு.க.முத்து பெத்த பிள்ளை இல்லையா!?
அவருக்கு எதை கொடுப்பாராம்!
//தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை வெறுக்கிறீர்கள்? ஏன்?//
நேரடி இலவ்ச திட்டங்கள் நிச்சயமாக கண்டிக்கதக்கது!
அரசுக்கு யார் மூலம் பெரும் வருவாய் வருகிறதோ அவர்களுக்கு சிறிய வரி சலுகைகள் வழங்கலாம்,
மருத்துவமனை கட்டலாம், பள்ளிகள் கட்டலாம், ஆனா இதெல்லாம் பண்ணி அவுங்களுக்கு புத்தி வந்துட்டா அரசியல் பண்ண முடியாதே!
//தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்? ஏன்?//
இலவ்ச கல்வி, மருத்துவதத்தை மட்டும் ஆதரிக்கிறேன்!
காரணம் அங்கே தான் பண முதலைகள் நிறைய இருக்கின்றன! அவர்களுக்கு காயடிக்க இஅவை இரண்டும் அரசு மயமாக்கப்பட்டு முழுவதும் இலவசமாக்கப்பட வேண்டும்!
//மாதம் 30,000 க்குமேல் வாங்கும் அலுவலர்களுக்கு ரேசனில் மலிவு (து.பருப்பு) பொருள் மான்ய விலையில் தேவையா? அடுக்குமா?//
எந்த ரேஷன் கார்டிலாவது அவ்வளவு சம்பளம் போட்டிருக்கிறார்களா!?
நீங்க முதல்ல உண்மையான சம்பளத்தை போட்ருக்கிங்களா?!
ரூம் போட்டு யோசிச்சு முடிச்சாச்சு!
”வசதியில்லாத” அனைவருக்கும் செருப்பு இலவசமாக வழங்க!
//மனதறிந்து துரோகம் செய்தவர்களை/செய்பவர்களை என்ன செய்யலாம்?
பதில்: சமயம் பார்த்து காலை வாரவேண்டும்.//
ரெண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை!
பிடிக்கலைனா ஒதுங்கி போறதே நல்லது!
//நாட்டில் பெண் களுக்கு எதிரான, செக்ஸ் - வயலன்ஸ் கூடுவது அடிப்படை காரணம்?//
நாம் பேச தெரிந்த சமூக விலங்குகள் என்பதே காரணம்!
//கமல்ஹாசன் ஏன் விவேக்கை தன் படங்களில் சேர்ப்பதில்லை //
அப்பறம் ஜெயராம், ரமேஸ் அரவிந்த், கெட்டப் சேன்ஜ் கமலஹாசன் இவுங்க நெலமை எல்லாம் என்ன ஆகறது ?
//தங்கத்தின் விலையை ஆன்லைன் வர்த்தகம் செய்யும் சூதாடிகள்தான் விண்முட்டும் அளவுக்கு ஏற்றுகிறார்கள் எனத் தெரிந்த பிறகும் வாழா இருக்கும் அரசுகள் பற்றி?//
ஆன்லைனலுயும் காசு கொடுத்து தான் வாங்குறாங்க!
அமெரிக்க பொருளாதாரத்தின் தொடர் வீழ்ச்சியே தங்கம் விலை ஏறக்காரணம், போன வாரம் மட்டும் 6 வங்கிகள் திவால், இதுவரை 124 வங்கிகள் அமெரிக்காவில் திவால்.
முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என எண்ணுகிறார்கள்! ஆன்லைன் ஏன் உங்க கண்ணை உறுத்துது!
கச்சா எண்ணையும், இயற்கை எரிவாயு கூடத்தான் ஆன்லைனில் வர்த்தகம் நடக்குது, அது என்ன விலையேறியா போச்சு!
தெரிஞ்சிகிட்டு பேசுங்க சாமியோ!
// திராவிட கும்பல் வாயில் விரலை வைத்துக் கொண்டுதான் உட்கார வேண்டும்.//
இப்ப மட்டும் எப்படி இருக்காமாம்!
//இரு பிரபல பிளாக்கர்களின் மோதல்-தற்போதைய நிலை?//
பல பிராபலங்கள் இங்கே மோதிகிட்டு தான் இருக்கு! நீங்க யாரை சொல்றிங்க!?
//மு.க.முத்து பெத்த பிள்ளை இல்லையா!?
அவருக்கு எதை கொடுப்பாராம்!//
கலைஞர் : அவ்வவ்வ்வ்வ் !
அழகிரி : தூக்கிருட்டுமா!
ஸ்டாலின் : ம்ம்ம் ... அவசரப் படாத ! பொறுமையா இரு !
கலைஞர் : அந்தக் கண்மணிக்கு
இதயத்தில் இடம் உள்ளது !
ஸ்டாலின் : உன் மைன்ட் வாச நான் கேச் பண்ணிட்டேன் !
அழகிரி : தூக்கிரட்டுமா !
வால்பையன் said...
//நாட்டில் பெண் களுக்கு எதிரான, செக்ஸ் - வயலன்ஸ் கூடுவது அடிப்படை காரணம்?//
நாம் பேச தெரிந்த சமூக விலங்குகள் என்பதே காரணம்!
விடை சீரியசாகவே தவறு வால்ஸ்!விலங்குகளுக்குக் காம உணர்வு ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே வரும். இனப்பெருக்கத்திற்காக, இயற்கை அப்படி ஒரு சுழல் முறையை உருவாக்கி வைத்திருக்கிறது.
மனிதனுக்கு மட்டுமே 24x7x365 lifetime டாக் டைம் மாதிரி ஃபீல் டயமாக இயற்கை கொடுத்திருக்கிறது. ஃபீலிங்க்சை வைத்தே காசுபார்க்கும் மனநல மருத்துவர்களும், சேலம், பழனி இன்னபிற சித்த பைத்தியர்களும்,பிழைக்க வேண்டாமா?
Raghavan Sir,
Thanks for your time and answers..
////தங்கத்தின் விலையை ஆன்லைன் வர்த்தகம் செய்யும் சூதாடிகள்தான் விண்முட்டும் அளவுக்கு ஏற்றுகிறார்கள் எனத் தெரிந்த பிறகும் வாழா இருக்கும் அரசுகள் பற்றி?//
ஆன்லைனலுயும் காசு கொடுத்து தான் வாங்குறாங்க!//
அமெரிக்க பொருளாதாரத்தின் தொடர் வீழ்ச்சியே தங்கம் விலை ஏறக்காரணம், போன வாரம் மட்டும் 6 வங்கிகள் திவால், இதுவரை 124 வங்கிகள் அமெரிக்காவில் திவால்.
முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என எண்ணுகிறார்கள்! ஆன்லைன் ஏன் உங்க கண்ணை உறுத்துது!
கச்சா எண்ணையும், இயற்கை எரிவாயு கூடத்தான் ஆன்லைனில் வர்த்தகம் நடக்குது, அது என்ன விலையேறியா போச்சு!
தெரிஞ்சிகிட்டு பேசுங்க சாமியோ!//
Vaal Sir,
If I am not wrong in online you actually do not make full payment towards the article you are speculating...In this way you are not exactly buying the stuff but holding it for purchase...You may sell this to someone at an increased price and make money without the full investment...Please understand I am not in to this or a Pro who does such a business all of these are things I know abt it...Please correct me if I am wrong :)
Reference: http://www.tkfutures.com/basics.htm
Raghavan Sir,
I agree with your comment on Charu...I read his work as a reader and like his way of writing...In fact I bought almost all his works in "Uyirmmai" last year without a second thought...I am not comfortable giving him some money knowing that he might just spend it in a costly Pub or fancy stuff....
//If I am not wrong in online you actually do not make full payment towards the article you are speculating...In this way you are not exactly buying the stuff but holding it for purchase...You may sell this to someone at an increased price and make money without the full investment...Please understand I am not in to this or a Pro who does such a business all of these are things I know abt it...Please correct me if I am wrong :)//
ஆன்லைன் வர்த்தகம் செபியில் கோடிகணக்கில் டெபாசிட் வைத்திருக்கிறது, பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் அதில் பங்குதாரர்கள், இப்போ மேட்டருக்கு வர்றேன்!
ஆன்லைன் வர்த்தகம் சும்மா பேப்பர்ல எழுதி இது தான் சாமான் என்று தருவதில்லை,
ஈரோட்டில் ஒரு விவசாயி மஞ்சள் பயிரிடுகிறார், சீசன் முடிந்த தருணம் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கிறது, அவர் எதிர்பார்த்ததை விட அதிகம் என்றே சொல்லலாம், அதனால் அவரது விஐச்சலை அங்கே விற்று வைக்கிறார், அதை ஒருவர் அந்த விலைக்கு வாங்கினால் மட்டுமே அதை விற்க முடியும் என்பதை கருத்தில் கொள்க(எல்லா கமாடிடிக்கும் இது பொருந்தும்), ஆகா கையில் வெண்ணையில்லாமல் இங்கே நெய் எடுக்க முடியாது!
இந்தியாவில் இருக்கும் ஆன்லைனில் வருடத்திற்கு 100 டன் தங்கம் கட்டிகளாக கை மாறுகிறது, அதாவது ஒருவர் விற்க, ஒருவர் வாங்கிறார், அது காண்ட்ராக்ட் பேஸில் இருப்பதால் நாம் முன் கூட்டியே முழுப்பணமும் தரவேண்டியதில்லை, பொருள் வாங்கும் போது மீதிப்பணம், இது மார்க்கெட்டில் பரவலாக நடக்கும் முறை தான்!
ஒரு பொருளின் விலையேற்றம் suply & demand ஐ பொருத்தது!
//
விடை சீரியசாகவே தவறு வால்ஸ்!விலங்குகளுக்குக் காம உணர்வு ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே வரும். இனப்பெருக்கத்திற்காக, இயற்கை அப்படி ஒரு சுழல் முறையை உருவாக்கி வைத்திருக்கிறது.
மனிதனுக்கு மட்டுமே 24x7x365 lifetime டாக் டைம் மாதிரி ஃபீல் டயமாக இயற்கை கொடுத்திருக்கிறது. ஃபீலிங்க்சை வைத்தே காசுபார்க்கும் மனநல மருத்துவர்களும், சேலம், பழனி இன்னபிற சித்த பைத்தியர்களும்,பிழைக்க வேண்டாமா? //
சரியா சொன்னிங்க சார்!
அந்த நண்பரின் கேள்விக்கு, அவ்வாறு வன்முறையில் ஈடுபடும் நபர்கள் தனது மி(மு)ருக குணத்தை இழக்காதவர்கள் என்று நான் குறிப்பிட்டிருக்க வேண்டும்!
//மு.க.முத்து பெத்த பிள்ளை இல்லையா!?
அவருக்கு எதை கொடுப்பாராம்!//
வால் பையன் அய்யா,
என்ன கொடுமை இது?கவிதாயினிக்கு ஒன்றும் பங்கு இல்லையா?என்னதான், துணைவி பெத்து போட்ட சமாசாரம் என்றாலும், இப்படி பெண்ணுக்கு துரோகம் ப்ண்ணுவது, சமூகநீதியா என்று கேட்கிறோம்.
பாலா
//என்ன கொடுமை இது?கவிதாயினிக்கு ஒன்றும் பங்கு இல்லையா?என்னதான், துணைவி பெத்து போட்ட சமாசாரம் என்றாலும், இப்படி பெண்ணுக்கு துரோகம் ப்ண்ணுவது, சமூகநீதியா என்று கேட்கிறோம்.//
நியாயமான கேள்வி தான்!
ஆனால் மன்னர் ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாதே!
//என்ன கொடுமை இது?கவிதாயினிக்கு ஒன்றும் பங்கு இல்லையா?என்னதான், துணைவி பெத்து போட்ட சமாசாரம் என்றாலும், இப்படி பெண்ணுக்கு துரோகம் ப்ண்ணுவது, சமூகநீதியா என்று கேட்கிறோம்.
//
அப்பிடி போடு !
வந்துட்டாங்கைய்யா செல்வ சீமாட்டி !
அஞ்சு வெச்ச பத்து
பத்து வெச்சா இருவது
வாங்க ! வாங்க !
1.பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்னாச்சு?
2.திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை என்னவாகும்?
3.நிரந்தரமான கொள்கை உடைய அரசியல்வாதி யாரும் உளரோ?
4.வாழ்வில் வெற்றி பெற படிப்பறிவு மட்டும் போதுமா?
5.காமம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எது மோசமான பலனைத்தரும்?
6.வாய்விட்டு சிரித்தால் மூளை வளரும்; ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா?
7. வழக்கத்தில் இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் எந்த ஊரைவத்து சொல்லப்படுகிறது? காரணம்?
8.எப்போதும் பதவி, பட்டம், புகழுக்காக அலைபவர்கள்?
9.செல்வாக்கு, அந்தஸ்து, பணம் இருந்தும் அரசியலில் ஈடுபடாத மனிதர்கள்?
10.எப்போதும் லொட லொட வென பேசும் ஒரு சிலரின் பழக்கம்?
11.வாழும் மனிதர்களைச் சுற்றி எப்போதும், ஏதாவது பிரச்னை இருந்து கொண்டிருக்கிறதே?
12.உலகில் நல்லவர் யார்?
13.உலகில் கெட்டவர் யார் ?
14.வாழும் மனிதனின் திகட்டாத விருந்தாவது யாது?
15.பம்பாய் வாழ் பார்சிகள் இனத்தின் பழக்கவழக்கங்கள் தொடர்கிறதா?
16.பொதுவாய் தற்பெருமை ஒரு மனிதனிடம் எப்போது உண்டாகிறது?
veli nattil velai parkkum inthiyarkalin nilai patri thankal korri ullathu unmaie. sariyaka visarikkathu vanthavarkal ematrapadukirakal, mukkiyamaka kalvithakuthi illathu varvor. enave velinadu sellum mun thera visarithu sellunkal. nandri Dondu iya.
//8. அசினின் அக்குள் வியர்வை பற்றியெல்லாம் கவர் ஸ்டோரி (+ படம்) போடுமளவிற்கு விகடன் வந்துவிட்டதே? முன்பெல்லாம் விகடன் கவர் ஸ்டோரி என்றால் ஒரு நல்ல விஷயம் இருக்கும். ஆனால் கடந்த 4 மாதங்களாக அடாசு விஷயங்களை கவர் ஸ்டோரியில்? என்ன ஆயிற்று விகடன் இணை, துணை, பொறுப்பு மற்றும் முதன்மை ஆசிரியர்களுக்கு?
பதில்: என்னவா? எல்லா நிறுவனங்களிலும் வரக்கூடிய அலுப்புதான்//
அன்பின் டோண்டு, விகடன் தனது வியாபாரத்திற்காக என்ன வேண்டுமானால் செய்யட்டும். ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்கையுடன் கேவலமாக விளையாட வேண்டாம்.
-டோண்டுவின் வாசகன்
Post a Comment