எபிசோட் - 3 (16.12.2009) (சுட்டி 1) மற்றும் (சுட்டி 2)
சோ அவர்களது ஆழ்வார் பாசுரங்கள் பற்றி விளக்கங்கள் தொடர்கின்றன. பாச்சா கூறுவதாக சாரியார் கற்பனை செய்யும் பாசுரம் திருமங்கை ஆழ்வாருடையது. அது இவ்வாறு செல்கிறது.
“கருமாமுகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அருமாகடலமுதே உனது அடியே சரணாமே” (இப்பாடலை சேட்டில் வந்த எனது நண்பர் வரதகணேஷ் அனுப்பினார். அவருக்கு என் நன்றி).
அவர் ஒரு குறுநில மன்னர். வைணவபக்தியில் அவர் எல்லாவற்றையும் பெருமாள் கைங்கரியத்துக்கே செலவழித்தவர். கப்பம் கட்ட மறுத்ததால் சோழமன்னன் அவரை சிறையில் வைக்க, பெருமாள் அருளால் ஆற்றுமணலை நெல்லாக மாற்றி கப்பம் தர சோழமன்னனும் அவரை விடுதலை செய்கிறான்.
அதன் பின்னாலும் கோவில் திருப்பணிக்காக கொள்ளை அடிக்க, ஒரு மணமகன் மற்றும் மணமகளாக அவரை ஆட்கொள்ள வந்த பெருமாள் மற்றும் தாயாரிடமிருந்தே பணம் கொள்ளையடிக்க முயன்று, பிரும்மோபதேசமும் பெறுகிறார். மொத்தத்தில் ஒரு முரட்டு பக்தர்.
சாரியார் இரண்டாம் முறையாக ஓதும் பாசுரம் தொடரடிப்பொடி ஆழ்வார். அது இவ்வாறு செல்கிறது, “ஊரிலேன் காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை, பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி, காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேனே, ஆருயிர் கடைக்கண் அம்மா அரங்கமாநகருளானே”.
அவர் இயற்பெயர் விப்ரநாராயணர். தனது நந்தவனத்திலிருந்து மலர்கள் பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் பணி செய்பவர். அவர் தேவதேவி என்னும் தாசியின் மையலில் வீழ்ந்து, எல்லா சொத்தையும் இழக்கிறார். கோவிலிலிருந்து ஒரு பாத்திரம் களவாடப்பட்டு விப்ர நாராயணர் அனுப்பியதாக கூறப்பட்டு தாசியின் வீட்டுக்கு வரும் பழியும் அவர் மேல் விழ, பிறகு எல்லாம் பெருமாளின் லீலை எனத் தெரியவந்து சுபமாக முடிகிறது.
நிலகண்டன் வீட்டில் பர்வதம் பூஜை செய்கிறாள். நாத்திகராக இருந்த நீலகண்டன் பரம ஆத்திகராக மாறியிருக்கிறார். அவர் பிள்ளை அவர் செய்து வந்த நாத்திகவாதத்தைத் தொடர்கிறான். நீலகண்டன் தனக்கு சகுனத்தடை ஏற்பட்டதால் பஸ்ஸில் பயணம் செய்ததை தவிர்க்க, அந்த பஸ் விபத்துக்குள்ளானதை கூறுகிறார். அவர் பையனோ அதே பஸ்ஸில் சென்ற மற்றவர்களுக்கு ஏன் அம்மாதிரி சகுனத்தடை வரவில்லை என வாதம் புரிகிறான்.
“அதானே” என்கிறார் சோவின் நண்பர். சோ அவரிடம் ஹிந்துக்களின் கர்மா தியரி பற்றி விளக்குகிறார். பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் இம்மாதிரி நல்லது நடக்கலாம், இல்லாவிட்டால் நடக்காது என்கிறார். உமாவுக்கு சீமந்தம் வைக்கப்போவது பற்றி பேச்சு வருகிறது. ஐந்தாம் மாதம் உமாவுக்கு கருப்புப் புடவை வாங்கித் தந்தது பற்றி உமா மகிழ்ச்சி தெரிவித்ததாக பர்வதம் கூறுகிறாள். அது சம்பிரதாயம் என நீலகண்டன் கூற, அந்த நம்பிக்கை அவர் தான் உமாவை கருவில் சுமந்த போது அவரிடம் இல்லாமல் போயிற்றே என சஞ்சலம் அடைகிறாள்.
தோட்டத்தில் அசோக் அங்குமிங்கும் நிம்மதியின்றி நடக்கிறான். அதைப் பார்த்து நாதனும் வசுமதியும் கவலையடைகின்றனர். வசுமதி அசோக் பீச்சில் சன்னியாசியை சந்தித்தது பற்றி கூற, அதைக் கேட்டு நாதனின் கவலை மேலும் அதிகரிக்கிறது. அப்போது பாகவதர் வருகிறார். அசோக் அவரை வணங்குகிறான். அவர் வேறு வந்து இப்போது அசோக்கை குழப்பப் போவதாக வசுமதி கோபப்பட நாதன் அவளை சமாதானப்படுத்துகிறார்.
பாகவதர் உள்ளே வந்து நாதனுடன் பேசுகிறார். அவர் மகனும் மருமகளும் சென்னைக்கே மாற்றல் வாங்கி விட்டதாகவும், அவரது இரண்டாம் மகனுக்கும் சென்னையிலேயே வேலை தேடப்போவதாகவும், ஆகவே எல்லோருமே ஒன்றாக சென்னைக்கே வந்து குடிபுகப்போவதாக பாகவதர் கூறுகிறார். இங்கு நல்ல ஜாகை தேடவே வந்ததாக அவர் கூற, நாதன் தனது ஃபிளாட்டை தர முன்வருகிறார். வசுமதி அதை நாசுக்காக தவிர்க்கிறாள். நீலகண்டன் வீட்டுக்கருகில் ஜாகை பார்க்கலாமா என நாதன் கேட்க, வேண்டவே வேண்டாம் என பாகவதர் மறுக்கிறார். தனக்கு ஏழரை நாட்டுச்சனி நடப்பதால் இம்மாதிரி விஷப்பரீட்சை வேண்டாம் என அபிப்பிராயப்படுகிறார்.
அது என்ன ஏழரை நாட்டுச்சனி என சோவின் நண்பர் கேட்க, அது பற்றி சோ விளக்குகிறார். ஒரு ஜாதகரின் ராசிக்கு முந்தைய ராசி, ஜாதகரின் ராசி, அவரது ராசிக்கு அடுத்த ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சனி தலா இரண்டரை ஆண்டுகள் குடிகொள்வதாக கூறுவார்கள். இது ஒருவரது வாழ்நாளில் இருமுறை ஒரு சுழற்சியாக வருமாம். அதனால்தான் 30 ஆண்டுகாலம் வாழ்ந்தோரும் இல்லை, 30 ஆண்டுகாலம் தாழ்ந்தோரும் இல்லை என கூறப்படுகிறது.
எபிசோட் - 4 (17.12.2009)
(சுட்டி - 1) மற்றும் (சுட்டி - 2)
நீலகண்டன் வீட்டுப் பக்கத்தில் தனக்கு ஜாகை வேண்டாம் என பாகவதர் பதற, நீலகண்டன் இப்போது முழுக்க முழுக்க ஆத்திகராக மாறியதை கூறி அவரை நாதனும் வசுமதியும் சமாதானப்படுத்துகின்றனர். பாகவதர் ஆச்சரியப்படுகிறார். நீலகண்டன் இப்போது நீலகண்டன் ஐயர் ஆகிவிட்டானா என்கிறார். ஆனால் அவர் பிராமணன்னு அசோக் ஒத்துக்கலையே. அவன் உங்களையே பிராமணன் இல்லைன்னு சொல்ல வச்சுட்டானே என நாதன் கூறுகிறார். இதை அசோக் சொல்லவில்லையென்றும் தானே யோசித்து தான் வர்ணரீதியான பிராமணன் இல்லையென தெளிந்ததாகவும் பாகவதர் கூறுகிறார். அதோடு கூட சாரியார், சாம்பு சாஸ்திரிகள் ஆகியோரும் பிராமணர்கள் இல்லை என அவர்களையே ஒத்துக் கொள்ள வைத்து விட்டான் என நாதன் மேலும் கூறுகிறார். அதையெல்லாம் தான் சுயபரிச்சயம் என பார்ப்பதாக பாகவதர் கூறுகிறார். விளக்கில் ஒளி குறைந்தால் திரியை தூண்டிவிடும் செயல்தான் அசோக் செய்தது என்கிறார் அவர்.
அதனால் என்ன லாபம் என நாதன் திகைக்க, எல்லார் மனத்திலும் பகவான் குடிகொண்டுள்ளது உண்மைதான். அதே சமயம் மனிதர்களுக்குள் உள்ள வெளிச்சத்தின் தீவிரம் மனிதருக்கு மனிதர் மாறுகிறது. பலவித வாட்டேஜ் உள்ள பல்புகள் போலத்தான் என்கிறார் பாகவதர். அவரே அவ்வாறு கூறினால் தான் என்ன சொல்வது என நாதன் திகைக்க, இதில் பெரியவர் சிறியவர் என்ற பேதமே கிடையாது என பாகவதர் ஆணித்தரமாகக் கூறுகிறார். எல்லாமே கடவுள் அருளாலேயே நிகழும் என்றும் கூறுகிறார்.
சாரியார் வீட்டில் அவரைப் பார்க்க அவரது சம்பந்தி முதலியார் வந்திருக்கிறார். தனது மாட்டுப்பெண்ணின் பெருமைகளை சாரியார் அடுக்க அவளது தகப்பனார் முதலியார் மகிழ்கிறார். முதலியாரின் மகள் பார்வதி மற்றும் அவள் கணவன் நிரஞ்சனை பற்றி சாரியார் விசாரிக்கிறார். பார்வதிக்கு ரத்தப் புற்றுநோய் என்னும் செய்தியால் முதலியார் கலங்குகிறார். சாரியார் அவரைத் தேற்றுகிறார். தனது மாப்பிள்ளை பாச்சாவுக்கு ஒரு ஆடியோ கேசட் கடை வைத்துக் கொடுக்கும் தனது எண்ணத்தை முதலியார் தெரிவிக்கிறார். சாரியார் அதற்கு பாதி பணம் தான் போடுவதாகக் கூற, முதலியார் மறுத்து விடுகிறார்.
உமா வீட்டில் அவளது மாமியாரும் மாமனாரும் அவளுக்கு சீமந்தம் செய்ய வேண்டியது பற்றி பேசுகின்றனர். சீமந்தத்தை சிம்பிளாக ஆத்துலேயே வைத்துக் கொள்ளலாம் என அசோக் கூறியதாக உமா கூற, அந்த ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். யார் யார் என்னென்ன செலவு செய்வது என்பது பற்றியும் பேசப்படுகிறது. அதற்கான சம்பிரதாயங்கள் அலசப்படுகின்றன. இது என்ன எதற்கெடுத்தாலும் சம்பிரதாயம் எனக்கூறுகிறார்கள், அதற்கெல்லாம் முடிவே கிடையாதா என சோவின் நண்பர் அலுத்துக் கொள்கிறார். மனிதனுக்கு தேவையான எட்டு ஆத்மகுணங்கள் அவனிடம் வந்ததும் சம்பிரதாயங்கள் தேவை இல்லை என்கிறார் சோ. சம்பிரதாயங்கள் அவற்றை அடைவதற்கான படிகளே என்றும் அவர் கூறுகிறார். இவை எல்லா சாதியினருக்கும் விதிக்கப்பட்டவை என்றும் அவர் கூறுகிறார்.
கௌதமர் எழுதிய தர்மசாத்திரத்தில் 40 சம்ஸ்காரங்கள் எட்டு ஆத்மகுணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த எண்குணங்களாவன, தயை, சாந்தி, பொறாமையின்மை, சுத்தம், அலட்டிக்கொள்ளாமை, மங்களம், கருமித்தனம் இல்லாமை மற்றும் பற்றின்மை. ஒவ்வொன்றையும் அவர் சுருக்கமாக விளக்குகிறார்.
உமா சம்பந்தமாக அவள் மாமியார் தன் கணவனிடம் சற்றே சிடுசிடுக்கிறாள். அவர் அவளை அடக்குகிறார்.
கோவிலில் நீலகண்டனும் பர்வதமும் பாகவதரை சந்திக்கின்றனர். நாத்திகரான நீலகண்டன் ஆத்திகரானதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறார். பாகவதர். நாத்திகர் ஆத்திகராவது போலவே ஆத்திகர்களில் சிலரும்கூட நாத்திகர்கள ஆனதை பாகவதர் விளக்குகிறார். 100% நாத்திகரோ 100% ஆத்திகரோ கிடையாது என பாகவதர் கூற, சோவின் நண்பர் திகைக்கிறார்.
அதற்கு சான்றாக குமரிலபட்டரின் கதையை சோ அவர்கள் கூறுகிறார்கள். புத்தமதத்தரப்பு வாதங்களை பற்றி அறிய தானும் புத்தமதத்தில் சேர்வது போல நடித்த குமரில பட்டர், கடைசியில் புத்தபிக்குகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார். அவர்கள் அவரை உயரத்திலிருந்து கீழே தள்ள, “வேதம் பொய்யென்றில்லாமல் இருந்தால் அவை என்னைக் காக்கட்டும்” என்னும் கத்தலுடன் கீழே விழ, அவர் உயிர் பிழைக்கிறார். ஆனால் ஒரே ஒரு கண் மட்டும் பார்வையிழந்தது. அதற்கு காரணம் வேதம் பொய்யாக இல்லாமல் இருந்தால் என சந்தேகத்துடன் கூறியதற்கான கூலி என அசரீரி அவருக்கு சொல்கிறது. ஆக, துளி சந்தேகம் வந்தாலும் அது ஒருவகை நாத்திகமே என கூறப்படுகிறது.
(தேடுவோம்)
எங்கே பிராமணன் பார்ட் 2 ஜெயா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை (நான்கு நாட்கள்) இரவு எட்டு மணி முதல் 08.30 வரை ஒளிபரப்பாகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
7 comments:
What Thirumangai Azhwar obtained from Sriman Narayanan (Vayalali Manavalan) at Thiruvali Thirunagari is not exactly "Brahmoupadesam". It is in fact "Thiru Manthiram" also called "Manthra Rajam" which is 8 lettered "Om Namo Narayanaya".
Thanks.
V. Raghavan
i missed 1st portion of episode # 4. Thanks for ur updates. Plz.. continue the story here.
Thanks.
WHAT IS THE RESPONSE/HITS FOR YOUR "சோவின் எங்கே
பிராமணன் பார்ட் - 2 "?
6.புதுமுக நடிகர் ஷக்தி திரையுலகில் பிரகாசிப்பாரா?
7.தமிழகத்தில் சீரியஸ் இலக்கியங்களையும் வாசகர்கள் படிக்க ஆரம்பித்துவிடது போல் தெரிகிறதே?
8.தற்கால சூழ்நிலயில் இன்றைய கணவன்மார்களைப் பற்றி?
9.தற்கால சூழ்நிலயில் இன்றைய மனிவிமார்களைப் பற்றி?
10.தற்கால சூழ்நிலயில் இன்றைய ஆண்பிள்ளைகளைப் பற்றி?
11.தற்கால சூழ்நிலயில் இன்றைய பெண்பிள்ளைகளைப் பற்றி?
12.தற்கால சூழ்நிலயில் இன்றைய மூத்த குடிமக்கள் பற்றி?
13.குரு பெயர்ச்சி யோகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு வருமா?
14.சொத்து மதிப்பாக மு.கருணாநிதி 43.8 கோடி, மாயாவதி 52 கோடி,ஜெயலலிதா 24.6 கோடி எனச் சொல்லப்படுகிறதே-இவர்கள் எப்படி இவ்வளவு சம்பாதித்தார்கள்?
15.வருமான வரித்துறை சட்டங்கள் கெடுபிடிகள் எல்லாம் சாமனியர்க்கு மட்டும்தானா?
16. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்று சொல்கிறார்களே அது சும்மவா?
17.லஞ்சம் வாங்கி பணத்தை குவித்து-தேர்தலில் மக்களிடம் பண விதையாய் விதைத்து-வெற்றியும் பெற்று சாதனை வெற்றி எனக் கொண்டாடும் போக்கு நாட்டை எங்கே கொண்டு போகும்?
18.கைகள் கட்டப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் பாவம் இல்லையா?
19.இந்தக் கலி நீங்க மீண்டும் ஒரு சேஷன் வருவரா?
20.செல் பேசியில் எஸ்.எம்.எஸ். என்ற பெயரில் இளைஞர் உலகம் நேரத்தை வீணாக்குகிறதே?
21.வாழும் அரசியல் தலைவர்களைவிட நாட்டில் சிறந்தப் பத்துப் பேரைச் சொல்லுங்களேன்?
22.உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன் )படித்துவிட்டு ,தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல்
நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால் ?
Please note this carefully:
If you receive a phone call on your Mobile from any person saying that they are checking your mobile line or going to give you some offer/ prize, and ask you to press #90 or #09 or any other number. End that call immediately without pressing any Number. There is a company in Pakistan that is using a device that once you press #90 or #09 they can access your SIM card and make calls at your expense. They are misusing it to make calls from Indian numbers. Forward this message to as many friends as u can, to stop it. This information has been confirmed by both Motorola and Nokia. There are over 3 million mobile phones affected by this.
V. Raghavan
23.புரட்சிப்புயல் வைகோவும் வழக்குகளும் ஒரு தொடர் கதையா?
24.மீண்டும் திமுகவிடம் லட்சிய (பதவி)உறவுகொள்ள எடுக்கபட்ட மருத்துவரின் முயற்சிகள்?
25.போகிற போக்கை பார்த்தால் 2011இல் விஜயகாந்த்?
26.அரசால் போடப்பட்ட ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் எல்லாம் என்னவாச்சு?
27.இடைத்தேர்தல் பரிசளிப்பை(மது,மாமிசம்) பார்க்கும் போது அடுத்து என்ன செய்வார்கள்,வரவர இனி வாக்குரிமை?
28.ஒரு ரூபாய் அரிசிதிட்டம்,இலவச டீவி,இலவச கேஸ்,இலவச வீட்டுமனை,பட்டா, கலைஞர் மருத்துவத்திட்டம், 50 ரூபாயில் பலசரக்கு,இட ஒதுக்கீட்டு கொள்கையில் 100 % உறுதி இவை எல்லாம் நம்மை காப்பாற்றாது என எண்ணி, இடத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கும் திமுக பற்றி?
29. அதற்கு சற்றும் சளைக்காமால் இதே பாணியில் செயல்படும் அதிமுக பற்றி?
30.ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது எனப் புலம்பும் பிற கட்சிகள் பற்றி?
31.ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றுவிட்டால்( அல்லது ஓட்டு வித்யாசம் குறைந்து விட்டால்) கலைஞர்/ஸ்டாலின்/அழகிரி என்ன சொல்லி சமாளிப்பார்கள்?
32.உங்களின் ஆரம்ப கால பதிவுகளுக்கும் ,தற்போதைய பதிவுகளுக்கும் என்ன வித்யாசம்?
Post a Comment