10/26/2010

ராஜன் திருமணம் பற்றிய விவாதம்

நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். முதலில் பதிவு எதுவும் போடுவதாகவே இல்லை, ஏனெனில் ரொம்ப நேரத்துக்கு நான் மட்டும்தான் யாருமில்லாத கடையில் டீ ஆற்றும் மனநிலையில் இருந்தேன். லக்கிலுக் மற்றும் அதிஷா சிறிது நேரம் கழித்து வந்தனர், அதில் அதிஷா உடனேயே சென்று விட்டார்.

பலரும் கேட்டனர், பதிவு எப்போது வரும் என. அவர்களிடமும் நான் பிடி கொடுத்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் நான் சொன்னது போல பதிவர் சந்திப்பு என்ற ஒரு விஷயம் சீரியசாக நடக்கவே இல்லை. இருப்பினும் வீட்டுக்கு வந்து ரிகார்டுக்காக ஒரு பதிவு போட்டு அதற்குள் கும்மி எனக்கு அனுப்பியிருந்த படங்களையும் போட்டேன். அது ராஜன் அவர்களது பகுத்தறிவு எண்ணங்கள் சம்பந்தமாக பல பின்னூட்டங்களுக்கு இடம் கொடுக்கவே எனது தன்னிலை விளக்கத்தையும் பின்வருமாறு தந்தேன்.

ராஜன் சம்பந்தமான பகுத்தறிவு கேள்விகளை கமெண்ட் ஏதும் இல்லாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஏனெனில் நான் மண்டபத்திற்கு சென்றதுமே சம்பிரதாயத் திருமணம்தான் அது என்பதை உணர்ந்து கொண்டேன். வால்பையன் மற்றும் ராஜன் எனக்கு நண்பர்கள், ஆகவே நான் அவர்களை இது சம்பந்தமாக தோண்டித் துருவி கேள்விகள் எல்லாம் கேட்கவில்லை.

வால்பையனுக்கு ஃபோன் போட்டு கேட்டதற்கு அவர் அடுத்த நாள் திருமண முகூர்த்தம் சமயத்தில் ஐயரால், ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திர உச்சாடனங்களுடன், எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்ததை உறுதி செய்தார்.

ராஜனின் தாய் தந்தை இப்போது உயிருடன் இல்லை. மணமகள் அவரது பெற்றோருக்கு ஒரே பெண். இது காதல் திருமணம். பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம்.

ராஜன் பெரியவர்களது விருப்பத்துக்கு பணிந்து போனது எனக்கு பிடித்தது. அவ்வளவே. அவர் வயதில் மிகவும் சிறியவர். மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார். அவருக்கும் அவர் மனைவிக்கும் என் ஆசிகள்.


பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நான் அந்த கமெண்டுகளை மாடரேட் செய்து தடுத்திருக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார். அதை நான் ஏற்பதற்கில்லை. தனது நம்பிக்கைகளை, நாத்திகக் கொள்கைகளை இவ்வளவு வெளிப்படையாக, முக தாட்சண்யம் பார்க்காமல் பல தளங்களில் பேசி வருபவர், தானும் சமயம் வந்தால் அம்மாதிரி சங்கடமான கேள்விகளை எதிர்க்கொள்ள வேண்டும்தானே. அவர்கள் என்ன சிறு குழந்தைகளா? அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்.

ராஜன் திருமணம் நடந்த மண்டபம் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ளது. நகரின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களும் அருகில் உள்ள அண்ணாசாலையிலிருந்தே கிடைக்கும். அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு என அவரிடம் கேட்டதற்கு அவர் அதெல்லாம் பெண் வீட்டார் ஏற்பாடு, தனக்குத் தெரியாது எனக்கூறிவிட்டார். சற்றே அதிர்ந்து போனேன். காதல் திருமணம் புரிபவர் திருமணச்செலவில் பாதியை ஏற்பதுதானே சரியாக இருக்கும்?

அடுத்த நாள் வால்பையனிடம் இது பற்றி போனில் கேட்டபோது, அவர் திருமணச்செலவை இரு தரப்பினரும் சரி பாதியாக பங்கேற்பதையும் உறுதி செய்தார். நான் கேட்ட நேரத்தில் ராஜனுக்கு அந்த வாடகை எவ்வளவு எனத் தெரிந்திருக்காது இருந்திருக்கலாம். இன்னேரத்துக்கு அதை அறிந்து, அச்செலவையும், மற்றச் செலவுகளையும் இரு தரப்பினரும் சரிசமமாகவே பங்கேற்றிருப்பார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

ஆனால் எல்லோருமே ராஜன் மாதிரி இருப்பதில்லையே. காதல் என்றெல்லாம் அமர்க்களப்படும். கிட்டிமுட்டி திருமணப் பேச்சு என்று வந்ததும் மாப்பிள்ளைப் பையன் சமர்த்தாக தன் பெற்றோருக்கு அப்போது மட்டும் அடங்கிய பிள்ளையாகப் போய் விடுவான். பிள்ளைவீட்டார் விடாது பட்டியல் போடுவார்கள். அது இங்கு நடக்கவில்லை என நம்புகிறேன்.

பை தி வே, சம்பிரதாய திருமணத்தில் தாலி கட்டினால் மட்டும் போதாது, சப்தபதி சடங்கும் நடந்திருக்க வேண்டும். அந்த மந்திரங்களை அவதானித்தால் பலர் ஆச்சரியப்படுவது திண்ணம்.
அதை இங்கே தருகிறேன்.

மணமகன் மணமகளிடம் சொல்வது:
ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்

ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
மணமகள் மணமகனிடம் சொல்வது:
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.


ஓக்கே ராஜன், திருமண மண்டபத்துக்கு வாடகை எவ்வளவு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

251 comments:

«Oldest   ‹Older   201 – 251 of 251
வால்பையன் said...

//நீ அறியாமலேயே கேவலமா எழுத வச்சிடுச்சிடுச்சில்லையா ! உன் துடுக்கு புத்தி ! உன் மனது கிடந்து இப்படி எழுதிட்டமேன்னு துடிப்பது எனக்கு புரியுது.//


மாமனார் காசா? என நோண்ட தெரிஞ்ச பரதேசிகளுக்கு அந்த பதில் கேவலமா தெரியுதோ!

அட ஆண்மையற்றவனே வந்து வேடிக்கை யார் என் ஆண்மையை என சவால் விடுத்தலுக்கு சமமான வாக்கியம் அது!

நீ வந்து விளக்கு புடிக்க நாங்க என்ன கற்காலத்துலயா இருக்கோம்!, அனானி கோழைகளா நீங்க செஞ்சாலும் செய்விங்கடா பன்னாடைகளா!

வால்பையன் said...

//டோண்டுசாரிடம் சொல்லி அதை அழிக்க சொல்லிடு! அது எதுக்கு அசிங்கமா ! எப்படி இருந்தாலும் அவர் உன் நண்பேன் தானேப்பா! //

அதை அழிப்பதால் நான் சொல்லலைன்னு ஆகிருமா! எனக்கு தில் இருக்கு, உங்க எல்லாத்துக்கு சூத்துலயும் அடிச்சு ஓட ஓட விரட்ட!, அது இருக்கட்டும்!

டோண்டு நண்”பேன்” தான், இப்ப தான் அரிக்க ஆரம்பிக்குது!

பொன்கார்த்திக் said...

வால் அவர் பார்ப்பானா இல்லையா என்றதெல்லாம் அடுத்த விஷயம்.
ராஜனும் ரேவதியும் புது தம்பதி. அவரால் இங்கு வந்து பதில் கூற முடியாது இது அனைவரும் அறிந்தது தானே?
ஏன் டோண்டுவும் திருமணம் முடிந்தவர் தானே மற்றவரை விட ராஜனை பற்றி நன்கு தெரிந்தவரும் கூட? ராஜன் நண்பரும் கூட?
உண்மையான நண்பன் இதையா செய்வனா? நண்பன் வேண்டாம் மற்றவரை புரிந்து கொள்ளும் சாதாரண மனிதன் செய்யும் செயலா இது?
அவர் இல்லாத நேரத்தில் அவரை பற்றி பேசுவது அநாகரீகம்? தயவு செய்து இந்த விவாதத்தை ராஜன் அடுத்த பதிவில் வைத்துக்கொள்வோம்?

@டோண்டு
// அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்//
அவர் மட்டும் அல்ல யாரும் இதை எதிர் எதிர்பார்க்கவில்லை?
நீங்கள் செய்தது சரியா?

வால்பையன் said...

//பிரச்சனை ராமனைப் பற்றி அல்ல ராஜனைப் பற்றி. //

ராஜன் அந்த பெண்ணின் விருப்பத்தை தானே நிறைவேற்றினார்!

எதிலும் எங்கேயும் கட்டாயப்படுத்தலையே!.

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார்.// //

ஹா... ஹா... சந்தல சிந்து பாடுற மாதிரி நைசா கட்டை குடுக்குறீங்க...

யதார்த்தம் என்பது என்ன? பார்ப்பான மேன்மைக்கு அடிபணிவதா?

Anonymous said...

//அட ஆண்மையற்றவனே வந்து வேடிக்கை யார் என் ஆண்மையை என சவால் விடுத்தலுக்கு சமமான வாக்கியம் அது!

நீ வந்து விளக்கு புடிக்க நாங்க என்ன கற்காலத்துலயா இருக்கோம்!, அனானி கோழைகளா நீங்க செஞ்சாலும் செய்விங்கடா பன்னாடைகளா!//

கண்னு என்ன கண்ணு உன் தலையில் நீயே மண்ணை அள்ளி அள்ளி போட்டுக்கிற!!

இதுக்கு இவ்வளவு நேரம் அமைதிகாத்த மாதிரி அப்படியே இருந்திருக்கலாம்.

அசிங்கமான கமெண்டுக்கு பொருளுரை வேறயா ? தம்பி ரொம்ப அசிங்கமா எழுதுவதும் பேசுவதுமே “டிபன்சிவ்” மோட்-ல் நீ இருப்பதை உலகுக்கே பறை சாற்றுமே!

கோபப்படாதே ! சாந்தமாயிரு!

புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் பொறமை கூடாது என ஏ.பி. நாகராசன் சொன்னதை நினைவில் கொள்.

Anonymous said...

//அட ஆண்மையற்றவனே வந்து வேடிக்கை யார் என் ஆண்மையை என சவால் விடுத்தலுக்கு சமமான வாக்கியம் அது!//

அட வாலப்பா !! நிதானத்தில் இருக்கியா !! இல்ல மப்புல எதையாவது கிறுக்கிறியா ?

இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக் ”கொல்”கிறேன் என்று சொல்வர்களே அது நிஜம் தான் போலருக்கு.

ஏனப்பன்

வால்பையன் said...

//அசிங்கமான கமெண்டுக்கு பொருளுரை வேறயா ? தம்பி ரொம்ப அசிங்கமா எழுதுவதும் பேசுவதுமே “டிபன்சிவ்” மோட்-ல் நீ இருப்பதை உலகுக்கே பறை சாற்றுமே!//

எனக்கு அடிச்சி ஆடி தான் பழக்கம்!

அருள் said...

வஜ்ரா said...

// //கண்டபடி பேசினால் திருப்பிப் பேசுவார்கள் அதை வாங்கிக்கொள்ளவும் தைரியம் இருக்கணும்.// //

"கண்டபடி பேசினால் திருப்பிப் பேசுவார்கள்" என்றால் தாராளமாக பேசட்டுமே. யார் வேண்டாம் என்றது?

ஆனால். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று - கூறப்படும் கருத்து. அடுத்தது - கூறும்தன்மை (அதாவது உங்கள் கருத்துப்படி 'கண்டபடி') - இவை இரண்டையும் பிரித்துப்பார்க்க வேண்டும்.

ஒரு கருத்தைப்பற்றி பேசும்போது - அதில் கண்டபடி பேசினால், பதிலுக்கு நீங்களும் 'உங்களால் முடிந்தவரை' கண்டபடி பேசலாம் (அதாவது நீங்கள் விரும்பினால்). ஆனால், இந்த கண்டபடி பேசும் சண்டை அந்த பதிவுடன் முற்றுப்பெறுவதே நல்லது. (வேறொரு கருத்தில் வேறொரு சண்டையை அப்புறம் போட்டுக்கொள்ளலாம்).

ஆனால், முன்பு எப்போதோ "அவர் என்னை இப்படி பேசினார்" என்பதை அடிப்படையாக வைத்து - இன்னொரு சமயத்தில் சண்டைப்போடுவது என்ன நியாயம்? இதில் யாருக்கு என்ன இலாபம்? இது என்ன சொத்துத்தகராரா? உறவினர்கள் பஞ்சாயத்தா?

இதனால் ஒரு "கருத்து" அல்லது "நிகழ்வுக்கு" ஏற்ப பேசுவதற்கு மாறாக - ஆளுக்கேற்ப பேசுவதாக ஆகவில்லையா?

"நீதி, நியாயம்" என்பதெல்லாம் ஆளுக்கேற்ப மாறுமா?

Anonymous said...

//இதனால் ஒரு "கருத்து" அல்லது "நிகழ்வுக்கு" ஏற்ப பேசுவதற்கு மாறாக - ஆளுக்கேற்ப பேசுவதாக ஆகவில்லையா?

"நீதி, நியாயம்" என்பதெல்லாம் ஆளுக்கேற்ப மாறுமா?//

அருள் உங்கள் பதிவுலக வராலாற்றில் முதல் முதலாய் கொஞ்சம் சத்தான கேள்வி கேட்டு இருக்கீங்க.

வெல்டன் அருள் வெல்டன்.

ஏனப்பன்

வால்பையன் said...

@ வஜ்ரா!

மறைந்திருந்து அனானியாக வந்து தமது கோழைதனத்தை காட்டும் பன்னாடைகளை தான் நான் திட்டி கொண்டிருக்கிறேன் என்பதை ஒருமுறை ஞாபகபடுத்துகிறேன்!

அடிப்படை நேர்மையுடன் விவாதிக்க நான் தயாராக தான் இருக்கிறேன், விவாதம் செய்பவர்களுக்கும் அது இருக்கும் பட்சத்தில், அது அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் ...த்தடித்து சுண்ணாம்பு தடவால் பேன் பார்த்து கொண்டா இருப்பார்கள்!

அருள் said...

வஜ்ரா said...

// //பிரச்சனை ராமனைப் பற்றி அல்ல ராஜனைப் பற்றி.// //

நானும் ராமனைப் பற்றி பேச வரவில்லை.

சீதாதேவியின் கற்பு நெறியை போற்றிப்புகழும் அதே கூட்டம் - திரு. ராஜனை மட்டும் இப்படி கேவலப்படுத்துவது ஏன்? என்பதுதான் எனது கேள்வி.

சாமிக்கு ஒரு நீதி, ஆசாமிக்கு வேறொரு நீதியா?

Anonymous said...

டோண்டு ரிசப்சனுக்கு போனதே வேவு பார்க்க தானா? இப்படி பத்த வச்சுட்டியே பரட்டை. ஒரே குஜாலா தான் டோண்டு இருக்குறார் போல. வால்ஸ் அன்ட் ராஜன் ஏதோ தப்பு பண்ணிட்டாங்க. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்ருக்கலாம். அதை வுட்டுட்டு வாலை போட்டு இப்படி நசுக்க இடம் கொடுக்கிறீங்களே டோண்டு. யப்பா பதிவுலக நாத்திகருங்களா யாரும் உங்க கண்ணாலத்துக்கு டோண்டுவை கூப்பிடாதிங்க. கூப்டா இந்த கதிதான்.

Anonymous said...

வால்,

நோ அழுவாச்சி, வீரன் போல தொம்பா நிமிர்ந்து நில்லு.

நீங்க என்ன அப்படி தப்பூ செஞ்சிட்டீங்க!! தப்பை தப்பில்லாமல் செய்வது தப்பே கிடையாது.

டோண்ட் கிரை மை பிரண்ட்

தெம்பளிப்பவர்களிடம் சொம்பு நிறைய தெம்பு வாங்கி வைச்சுக்கோ.

Anonymous said...

என் பேரு டோண்டு
இப்போ தீர்ந்துருச்சு காண்டு

வால் நீ இப்போ நசுங்கிய சொம்பு
எதுக்கு உனக்கு இன்னும் வீம்பு?

மஞ்சள் முகத்தோன் முகத்துல
மஞ்சள் கரை இப்போ
அப்பப்போ

Anonymous said...

வால்கிட்ட எனக்கு புடிச்சதே எவ்வளவு அடிச்சாலும் தாங்குற அந்த தயாள குணம் தான். ஹேட்ஸ் ஆப் வாலு

வால்பையன் said...

//டோண்ட் கிரை மை பிரண்ட்//

ட் போட்டிங்க பாருங்க, அது டோண்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதுங்க பிரதர்!

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் டோண்டு இனி கிரையிங் தான்!

வால்பையன் said...

//தெம்பளிப்பவர்களிடம் சொம்பு நிறைய தெம்பு வாங்கி வைச்சுக்கோ. //


ஓ! அவனா நீ.

நேர்ல பார்த்தா சப்பவேண்டியது(விரலை) பின்னூட்டத்தில் தாடிகாரன் என எழுதும் அனானி தானே நீ!

வால்பையன் said...

//வால்கிட்ட எனக்கு புடிச்சதே எவ்வளவு அடிச்சாலும் தாங்குற அந்த தயாள குணம் தான். ஹேட்ஸ் ஆப் வாலு //

உண்மை தான் நண்பா!
வர்றவனுங்க எல்லாத்தையும் அடிச்சி அடிச்சி எனக்கும் லேசா களைப்பா தான் இருக்கு! ஆனா பாப்பானுங்களை அடிக்கும் போது ஒரு குஷி வருது பாரு, அதுல களைப்பெல்லாம் ஓடி போயிருது!

(எந்த பால் போட்டாலும் அடிப்பேண்டா டோய்ய்ய்ய்ய்ய்ய்)

Anonymous said...

கருமம் கருமம் வால்பையன் ஏன் இவ்வளவு விகாரமா பேசுறீங்க? இது பொது இடம். கொஞ்சம் அடக்கி வாசிக்க கூடாதா வாலு? தும் ததா. இங்கே மஞ்சள் முகத்தோன் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு பீல் பண்ணுறேன் டோண்டு. அம் ஐ ரைட்டு?

Anonymous said...

என் வாலுக்கு என்ன தெரியும்-அது தான் பாட்டுக்கு இழுத்ததே வம்பு
அதானாலா நல்ல் நசுங்கிச்சே சொம்பு
தாடியண்ணா தந்தது தனித் தெம்பு
என் பிரண்டுக்கு இல்லை கொம்பு
வயலில் விளைவது கம்பு
வாழ்க்கைக்கு வேனுமே அன்பு
அதுக்கு முதலில் விட்டுடனும் வீம்பு
கீரிக்கும் பிடிக்காது பாம்பு
வருஷத்தில் ஒரு மாசம் இருக்க்னுமே நோம்பு.

வாழ்த்துக்கள் வால் மற்றும் நண்பர்கள்.

வஜ்ரா said...

வால்,
உங்கள் நேர்மை எத்தகயைது என்பது எல்லோருக்கும் தெரியும், தனியாக அதைப்பற்றி உங்களுடன் விவாதிக்க ஒன்றுமில்லை.

அருள்,
மறுபடியும் அதே தானா ?

சீதை பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அதை யாராவது ஆன்மீகவாதியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

ராஜன் என்பவர் பெரிய பருப்பாட்டம் நாத்திகம் பேசித் திரிந்தவர் தான். தனக்கு என்று வரும் போது ஆத்திகரானது நாத்திகத்திற்கும் பகுத்தறிவுக்கும் அவர் இழைத்த துரோகம். அது இருக்க, கண்ட இடத்திலெல்லாம் இந்து மதத்தை மட்டுமல்ல எல்லா மதத்தையும் இஷ்டத்துக்கு திட்டியவர் அவர். அவர் இப்பதிவில் பின்னூட்டம் போட்டாலும் இப்படித் தான் அவருக்கு பதில் திட்டு விழுந்திருக்கும். அது ஏனென்றால் அவர் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் எதிர் தரப்பினரை "...த்தடிச்சு சுண்ணாம்பு தடவும்" மனநிலையில் தான் பதிவுலகில் உலாவிக்கொண்டிருந்தார்...! இப்பொழுது எதிராளிகள் கை ஓங்கியுள்ளது. வினை விதைத்தால் வினை தான் கிடைக்கும் (எதிர் வினை என்று வைத்துக்கொள்ளுங்கள்.)

இன்நிலையில் அவருக்காகப் பேசவருபவர்கள் "ஆம், ராஜன் சொந்தங்களுக்காகக் கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டார்... கொள்கைப்படி அது தவறு தான்" என்று ஒத்துக்கொள்வது நல்லது.

அதை விட்டு, சீதை கற்புடையவளா, அப்ப ராஜனும் அக்மார்க் நாத்திகன் என்றெல்லாம் ஒப்பீட்டு இலக்கிய ஆராய்ச்சி கட்டுரை எழுதினால் இன்னும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசவுகள் விழத்தான் செய்யும்.

நாத்திகத் தரப்பு தோல்வியை ஏற்றுக்கொண்டு மேலும் பிரச்சனையை பெரிது படுத்தாமல் கொஞ்சம் அடங்குவது தான் நல்லது.

வால்பையன் said...

//நாத்திகத் தரப்பு தோல்வியை ஏற்றுக்கொண்டு மேலும் பிரச்சனையை பெரிது படுத்தாமல் கொஞ்சம் அடங்குவது தான் நல்லது. //


பாப்பானுக்கும், பாமரனுக்கும் நடந்தது போட்டியா?
இதில் தோல்வியடைய என்னயிருக்கு, நாங்க என்ன போட்டி போட்டோம் இதில்?

Anonymous said...

கண் தானம் மூலம் கண் பார்வை இழந்தவர் பார்வை பெறலாம்!!

வால் இழந்த வறியவருக்கு வால் தானம் கிடைக்க கடவுள் “அருள்” புரியட்டும்.

பை தி வே சிங்கவால் குரங்குக்கு ஏன் குட்டி வால் ?

Anonymous said...

//ராஜன் என்பவர் பெரிய பருப்பாட்டம் நாத்திகம் பேசித் திரிந்தவர் தான். தனக்கு என்று வரும் போது ஆத்திகரானது நாத்திகத்திற்கும் பகுத்தறிவுக்கும் அவர் இழைத்த துரோகம். அது இருக்க, கண்ட இடத்திலெல்லாம் இந்து மதத்தை மட்டுமல்ல எல்லா மதத்தையும் இஷ்டத்துக்கு திட்டியவர் அவர். அவர் இப்பதிவில் பின்னூட்டம் போட்டாலும் இப்படித் தான் அவருக்கு பதில் திட்டு விழுந்திருக்கும். அது ஏனென்றால் அவர் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் எதிர் தரப்பினரை "...த்தடிச்சு சுண்ணாம்பு தடவும்" மனநிலையில் தான் பதிவுலகில் உலாவிக்கொண்டிருந்தார்...! இப்பொழுது எதிராளிகள் கை ஓங்கியுள்ளது. வினை விதைத்தால் வினை தான் கிடைக்கும் (எதிர் வினை என்று வைத்துக்கொள்ளுங்கள்.)

இன்நிலையில் அவருக்காகப் பேசவருபவர்கள் "ஆம், ராஜன் சொந்தங்களுக்காகக் கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டார்... கொள்கைப்படி அது தவறு தான்" என்று ஒத்துக்கொள்வது நல்லது.//

ரிபீட்டு.

அன்வர் ஹுசேன்

Anonymous said...

வால்,

ஆனது ஆச்சு. சும்மா வரிக்கு வரி பதில் போட்டுக்கிட்டு இருக்காது , நல்லப்பா (dts) தியேட்டர் -ல் தில்லால்ங்கடி பார்க்கவும்.

மனதுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்கப்பா ? சும்மா ஓவர் டைம் வேலை வாங்காதீங்க.

dondu(#11168674346665545885) said...

@அருள்
இவ்வளவு வாய் கிழிய சுயமரியாதை திருமணத்தை ஸ்பான்சர் செய்த ஈவேராமசாமி நாயக்கர் தான் மட்டும் ரிஜிஸ்டர் கல்யாணம்தானே செய்து கொண்டார்?

சும்மா அவரை ஏன் சம்பந்தமில்லாமல் கோட் செய்கிறீர்கள்?

நீங்கள் கூறலாம், சட்டப்படி சொத்து வாரிசு விஷயத்துக்காக பதிவு திருமணம் செய்தார் என்று.

அதே அறிவு மற்றவர்களுக்கு அத்திருமணத்தை நடத்தி வைத்தபோது இருந்திருக்க வேண்டாமா?

தான் உபதேசித்ததை தானே செய்ய துப்பில்லாதவரின் மானத்தை நீங்கள் வேறு அவரை சம்பந்தம் இல்லாது கோட் செய்து கப்பலில் ஏற்றுகிறீர்கள்.

நாயக்கர் பாவம்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
(பின்னூட்டம் அருளின் பதிலுக்காக ரிபீட் செய்யப்படுகிறது)

வால்பையன் said...

http://allinall2010.blogspot.com/2010/10/blog-post_28.html

வால்பையன் said...

//நல்லப்பா (dts) தியேட்டர் -ல் தில்லால்ங்கடி பார்க்கவும். //

நல்லப்பா தியேட்டர் எந்த ஊர்!?

Anonymous said...

//
நல்லப்பா தியேட்டர் எந்த ஊர்!?
//

பெரியார் பஸ் ஸ்டாண்டு
ஈரோடு பெரியார் மாவட்டம்
சமத்துவபுரம் குருக்கு சந்து
ஆல் இன் ஆல் அழகு ராஜா சைக்கிள் கடைக்கு நேர் எதிரில் உள்ளது.

அருள் said...

"சீர்திருத்த திருமணம் - தந்தை பெரியார்"

டோண்டு ராகவன் Said...

// //(ராஜன்) மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார்.// //

Anonymous said...

// //வால்ஸ் அன்ட் ராஜன் ஏதோ தப்பு பண்ணிட்டாங்க. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்ருக்கலாம்.// //

வஜ்ரா said...

// //தனக்கு என்று வரும் போது ஆத்திகரானது நாத்திகத்திற்கும் பகுத்தறிவுக்கும் அவர் இழைத்த துரோகம். // //

"சிறிய விஷயம், இயல்பான நிகழ்வு, தவறோ குற்றமோ எதுவும் இதில் இல்லை" என்றுதான் நான் கூறவருகிறேன்.

இங்கே "யதார்த்தம்" என்ற பெயரில் - ஏதோ எல்லோரும் ஒருநாள் பார்ப்பானிடம் மண்டியிடத்தான் வேண்டும் என்கிற பொருளில் டோண்டு சார் பேசுகிறார். திரு.ராஜன் செய்தது தப்பு, துரோகம் என்றெல்லாம் பேசுகிறீர்கள்.(இதில் பழைய பகையோடு பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது...அது போகட்டும்).

சீர்திருத்த திருமணம் என்கிற பதத்தை பரவலாக்கியவர் தந்தை பெரியார்.

சீர்திருத்த திருமணம் என்றால் "இருக்கின்ற நிலைமையிலிருந்து மாற்றம் செய்வதையே சீர்திருத்தம் என்றும், நாகரீகமென்றும் சொல்கிறோம்" என்கிறார் தந்தை பெரியார்.

அதாவது ஏற்கனவே பார்ப்பான் வகுத்து வைத்திருக்கும் விதிமுறைகளை "எவ்வளவு முடியுமோ அவ்வளவு" மீறினால் - அது சீர்திருத்த திருமணம்தான்.

""ஒவ்வொரு காரியத்திற்கும் பார்ப்பான் கட்டிவைத்திருக்கும் ஒவ்வொரு கட்டும் இப்போது உடைந்து வருகிறது. சாதகம் பார்ப்பதில்லை; ஒரு கட்டு உடைந்தது. முகூர்த்தம் பார்க்கவில்லை; இன்னொரு கட்டு உடைந்தது; இராகு காலத்தில் நடந்தது; இன்னொரு கட்டு உடைந்தது. இப்படிப் படிப்படியாகப் பக்குவமான (perfect) பகுத்தறிவுவாதியாக வரவேண்டும்."" என்கிறார் தந்தை பெரியார்.

இப்படி தந்தை பெரியாரே "படிப்படியாக" மாற்றம் வந்தால் போதும் என்கிறார்.

இத்தகைய சீர்திருத்தங்களில் நான் முக்கியமாக கருதுவது "பூணூல் போடாமல்" திருமணம் செய்வதைத்தான். அதாவது, ஒரு திருமணத்தில் மணமகன் பூணூல் போடாவிட்டால் - அதுவே பெரியார் காட்டிய சீர்திருத்த திருமணம்தான்.

""புராணப்படி சூத்திரர்களுக்குத் திருமண முறை கிடையாது, நமக்குப் பார்ப்பான் வந்து கலியாணம் செய்து வைப்பது புரோகிதம் என்ற முறை ஆகும். புரோகிதம் என்றால், புராண முறைப்படி நடக்கும் திருமணம் ஆகும்...

சூத்திரர்கள் என்பவர்களுக்குத்தான் திருமண ஏற்பாடே கிடையாது. நீங்கள் சிந்திக்க வேண்டும். திருமண ஏற்பாடு இல்லை என்பது மாத்திரம் அல்ல, வேறு எந்த ஏற்பாடும் கிடையாது. சூத்திரருக்குத் திருமணமே இல்லை என்றால் - வேறு எப்படி நடக்கிறது என்றால், நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். சாதாரணமாகத் திவசம் முதலியவைகளைச் செய்யும்போதுகூட, சூத்திரன் என்பவனை வேறு சாதியாக மாற்றித்தான் பார்ப்பான் காரியம் செய்கிறான்.

அதாவது, அவனுக்கு அந்தச் சமயத்தில் பூணூல் போட்டு அவனை சத்திரியனாகவோ, வைசியனாகவோ மாற்றித்தான் காரியங்கள் செய்கிறான். அதைத் தவிர, சூத்திரனுக்கு எந்தக் காரியமும் செய்யத் தனி ஏற்பாடு எதுவும் இல்லை."" (தந்தை பெரியார், வாழ்க்கை துணை நலம் நூல் 1958 )

எனவே, தமிழர்களை கேவலப்படுத்தும் பூணூலை மாப்பிள்ளைப் போடாமல் ஒரு திருமணம் நடந்தாலே - அது பெரியார் காட்டிய சீர்திருத்த திருமணம்தான்.

Anonymous said...

//ஆனால், பத்திரிகைகளில் வரும் செய்திகள், ப்ளாக்கில் வரும் செய்திகள் - இதையெல்லாம் பார்த்து வேதனைப் பட தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது.//

ஒரு விஷயம் கீழ்த்தரமாக செல்லும் போது அதனை சார்ந்தவர்கள் அதனை எதிர்த்து போராடவேண்டும். ராமதாஸ் அவர்களை அந்த கோணத்தில் ஒரு பத்திரிகை படம் வெளியிட்டால் உங்கள் அமைப்பினர் சும்மா சென்று விடுவீர்களா? இது தவறு என்று போராட மாட்டீர்களா? விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்..அல்பத்தனமாக இருக்க கூடாது.

dondu(#11168674346665545885) said...

1. //இங்கே "யதார்த்தம்" என்ற பெயரில் - ஏதோ எல்லோரும் ஒருநாள் பார்ப்பானிடம் மண்டியிடத்தான் வேண்டும் என்கிற பொருளில் டோண்டு சார் பேசுகிறார்.//
நான் கூறவில்லை. நீங்கள்தான் இப்போது கூறுகிறீர்கள்.

2. //"சீர்திருத்த திருமணம் - தந்தை பெரியார்"//
நான் குறிப்பிட்டது சுயமரியாதைத் திருமணத்தை. இது 1967-க்கு பிறகுதான் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டது. அதுவரை அங்கீகாரம் இல்லாத மணமே அது. அதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்துரிமை கிடையாது, மனைவியும் சட்டப்படி மனைவி இல்லை. ஆகவே அதை பெரியார் செய்து கொள்ளாததை புரிந்து கொள்ள முடியும் என்றாலும், அதை அவர் தாராளமாக தன் திருமணத்திற்கு முன்னரே பலருக்கு செய்வித்துள்ளார். பலர் இதை செய்து கொண்டால் தானாகவே சட்ட அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவர் பிளான். ஆனால் தன் விஷயம் என்று வரும்போது மட்டும் அதை அவர் தவிர்த்தார். அதைத்தான் நான் குறிப்பிட்டேன். நீங்கள் வேறெதசியோ எடுத்துக் கொண்டு திசை திருப்புகிறீர்கள்.

3. //"சிறிய விஷயம், இயல்பான நிகழ்வு, தவறோ குற்றமோ எதுவும் இதில் இல்லை" என்றுதான் நான் கூறவருகிறேன்.//
நானும் அதையேதான் இப்பதிவிலும் முந்தைய பதிவிலும் கூறினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அதேசமயம் இந்திய நாட்டில் எல்லாவிதமான விமர்சனங்களையும் இந்திய சட்டம் - பேச்சுரிமை என்கிற அடிப்படையில் அங்கீகரிக்கிறது//

அப்படியென்றால் மதுவைக்கூடத்தான் அரசாங்கம் அங்கீகரிக்கின்றது. அப்புறம் எதற்காக நீங்கள் மதுவை ஒழிப்போம் என்று போராடுகின்றீர்கள்? அரசாங்கம் சொல்லி விட்டது என்று சென்று விட வேண்டியது தானே.

Anonymous said...

ராமதாஸ் அவர்கள் விபச்சாரத்தை எதிர்த்து கடுமையான முறையில் பிரச்சாரம் செய்கிறார் என்று வைத்து கொள்வோம். அப்போது ஒரு தொண்டர் வந்து "ஐயா, என்னால் என் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை, அதனால் தாங்கள் இந்த ஒரு முறை மட்டும் என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நான் 'அங்கு' சென்று வர அனுமதிக்க வேண்டும்" என்று கூறினால், உங்கள் தலைவர் என்ன கூறுவார்?

"சரிப்பா, உன் உணர்வுகளை நான் மதிக்கின்றேன், நீ சென்று வா" என்று கூறுவாரா? அப்படி கூறினால் அவர் தன் கொள்கைக்கு செய்யும் துரோகமல்லவா அது?

தொண்டனும் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் "சென்று" வந்தால் அவனும் அல்லவா நம்பிக்கை துரோகியாகி விடுகின்றான்.

இனி ராமதாஸ் அவர்களும், அந்த தொண்டனும் அந்த பிரச்சாரத்தை செய்ய முடியுமா? அதற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களா?

Anonymous said...

வாலின் புதிய வால் (போர்வாள்) அருளுக்கு பாய்மாருங்க வேற கேள்வியா வச்சிருக்காங்க. அக்கட கொஞ்சம் ராவண்டி அருள் சார்.

Anonymous said...

அப்பாடா, வாலு தில்லாலங்கடி பார்க்க போய்ட்டாரு! படம் செம் கிக்--ஓ-கிக் ஆக இருக்கும் அவருக்கு.

இங்க வந்து வாரவன் போறவன்கிட்ட எல்லாம் ஆப்பு வாங்கிறதை சகிக்க முடியலை. எப்படி இருந்த புள்ள இப்படி ஆயிருச்சு !!

Anonymous said...

\\எனக்கு ஒரு சந்தேகம். கமென்ட் போட்டவுடனே அனானிங்க பதில் கொடுக்குராங்களே? எப்படி? அவங்கதான் comments follow-up வச்சிக்கமுடியாதே? ஒருவேளை கமென்ட் மாடரேட் பண்ண கையோட அனானியை ஆளனுப்பிக் கூப்பிடுவாங்களோ?//

மேலே உள்ளது கும்மி சைக்கிள் ரிப்பேர் கடையில் போட்ட பின்னூட்டம்.

அட கூறு கெட்ட குப்பா, டோண்டு இந்த மாதிரி சூடா பதிவு போட்டா 10 நிமிசத்துக்கு ஒரு தடவ அவரோட வலைபக்கத்துக்குப் போவேன். என்னய மாதிரி வலைப்பதிவு இல்லாம எத்தினி பேரு அனானி கமெண்ட் போடறாங்களோ (நான் இது வரை வால்பையன் உட்பட யாரையும் தவறாக எழுதியதில்லை)? எல்லோரையும் உங்க பஞ்சர் ஒட்டுற கடை மாதிரியே நினைக்காதீங்க.

பாப்பானுக்கும், பாமரனுக்கும் நடந்தது போட்டியா?
இதில் தோல்வியடைய என்னயிருக்கு, நாங்க என்ன போட்டி போட்டோம் இதில்?

அப்புறம் என்ன பெரிய புடுங்கி மாதிரி அசிங்க அசிங்கமா எழுதுறீங்க? நீங்க எழுதினதையோ, ராஜன் எழுதினதையோ உங்க வீட்ல, குறிப்பா மனைவிகிட்ட குடுத்து ப்ரூஃப் பார்க்கச் சொல்லுங்க. அப்போ தெரியும் நீங்க எந்த அளவுக்கு கீழ எறங்கியிருக்கீங்கன்னு. கீழன்னா கீழ்த்தரம்னு அர்த்தம். வழக்கம்போல கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ள மாதிரி அசிங்கமா கற்பன பண்ணி வெளக்குப் புடிக்கப் போயிராதீங்க வால்பையன் சார்.

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //இவ்வளவு வாய் கிழிய சுயமரியாதை திருமணத்தை ஸ்பான்சர் செய்த ஈவேராமசாமி நாயக்கர் தான் மட்டும் ரிஜிஸ்டர் கல்யாணம்தானே செய்து கொண்டார்?// //

பதிவுத் திருமணம் என்பது சுயமரியாதைக்கு எதிரானதா? உங்கள் புரிதல் இவ்வளவுதானா?

""திருமணம் செய்துகொள்கிறவர்கள் கட்டாயம் ரிஜிஸ்டரில் பதிவுசெய்து கொள்ளவேண்டும். பதிவு செய்துகொள்ள முதலில் ஆரம்பித்துவிட்டால் நாளாக ஆக மற்ற சடங்குகள் தானாக மறைந்துவிடும். பதிவு செய்துகொள்வதால் உள்ள நன்மையை தாய்மார்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். பதிவு செய்துகொள்வதால் - கணவனுக்குச் சரிசமமான அந்தஸ்து மனைவிக்கும் கிடைக்கிறது.""

தந்தை பெரியார், 'விடுதலை' 24.10.1948

""டாக்டர். அம்பேத்கர் ஒரு சட்டம் கொண்டு வருகிறார் (1951). அதன்படி நீங்கள் எல்லாம் பதிவு செய்துகொள்ள வேண்டியதுதான். இதற்குப் பார்ப்பனர்கள் இப்பொழுது எதிர்ப்பாக இருக்கிறார்கள். ஏன் என்றால், இந்தத் திருமணம் மதச் சம்பந்தமாக, மதத்திலேயே உள்ள சாத்திரம் சம்மதமாக, சாத்திரத்திலே உள்ள சடங்கு முறையாக நடக்கிறதனாலே பார்ப்பானுக்குப் பிழைப்பு உண்டு. அந்தமுறை போய்விட்டால் அவனுக்குப் பிழைப்புப் போய்விடும். ஆனதனாலே, அவர்கள் இன்னமும் மதச் சம்பிரதாயப்படி நடக்கவேண்டும் என்று வழக்குப் போடுகிறார்கள்.""

தந்தை பெரியார், 'விடுதலை' 17.02.1951

எனவே, தந்தை பெரியார் 1948 லேயே எல்லோரும் பதிவு செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். உங்கள் கட்டுக்கதையை அள்ளிவிடாதீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//எனவே, தந்தை பெரியார் 1948 லேயே எல்லோரும் பதிவு செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். உங்கள் கட்டுக் கதையை அள்ளி விடாதீர்கள்.//
பதிவுத் திருமணமே சுயமரியாதைத் திருமணமாக இருக்க, பின்னே எந்த மயித்துக்கு சுயமரியாதைத் திருமணத்தை வலியிறுத்தினார். பலருக்கு செய்வித்தும் வைத்தார்.

முதல் மனைவி இருக்கும்போதே பலருக்கு ரெண்டாம் கல்யாணம் வேறு செய்வித்து அழகு பார்த்தார்.

ஆகவே நாயக்கருடைய நியாய உணர்வு என்னும் புருடாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

டோண்டு ராகவன்

Anonymous said...

ஒரு சந்தேகம். இத்திருமணம் தாலிகட்டி நடந்ததா? அப்படியென்றால் (1) தாலி என்றால் என்ன? (2) தாலி கட்டுவதன் அர்த்தம் என்ன? (3) தாலியைப் பற்றியோ, அது எதற்காக கட்டப் படுகிறது என்பதோ தெரியாமல், யாரோ ஒருவருக்காக அதைக் கட்டியதும், யாரோ சொன்னார்கள் என்பதற்காக "அதை"த் தின்பதும் ஒன்றாகாதா? தாலியைப் பற்றி ராஜனும் வால்பையனும் அடித்த கும்மி நினைவுக்கு வந்ததால் இந்தக் கேள்விகள்.

Anonymous said...

\\முதல் மனைவி இருக்கும்போதே பலருக்கு ரெண்டாம் கல்யாணம் வேறு செய்வித்து அழகு பார்த்தார்.

ஆகவே நாயக்கருடைய நியாய உணர்வு என்னும் புருடாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

//

டோண்டு சார், எதுக்கு இப்படி அருளோட மல்லுக் கட்டுறீங்க? அவர் ஈ வெ ரா பத்தி ஒத்துக்கவே மாட்டார். லூஸ்ல விடுங்க சார். எது எப்படியோ, சமயம் பார்த்து வால்பையனுக்குக் காயடிக்க களம் அமைச்சுக் குடுத்துட்டீங்க, ஆளாளுக்கு சும்மா அடிச்சு நசுக்குறாங்க, சொம்பைத்தான்.

Anonymous said...

கும்மி, நான் கூட இன்னைக்கு இதோட அஞ்சாறு கமெண்ட் போட்டிருக்கேன். இதெல்லாம் டோண்டு போட்டார்னு நீயா எதையாவது கற்பனை பண்ணி பஞ்சர் கடைல வாந்தி எடுக்காத.

அருள் said...

Anonymous said...

// //
//அதேசமயம் இந்திய நாட்டில் எல்லாவிதமான விமர்சனங்களையும் இந்திய சட்டம் - பேச்சுரிமை என்கிற அடிப்படையில் அங்கீகரிக்கிறது//

அப்படியென்றால் மதுவைக்கூடத்தான் அரசாங்கம் அங்கீகரிக்கின்றது. அப்புறம் எதற்காக நீங்கள் மதுவை ஒழிப்போம் என்று போராடுகின்றீர்கள்? அரசாங்கம் சொல்லி விட்டது என்று சென்று விட வேண்டியது தானே.// //

எல்லாம் தெரிந்த மாதிரி பிதற்றக்கூடாது.

எல்லா சட்டங்களுக்கு அடைப்படை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்தான்.

அரசியல் சாசனத்தின் 47 ஆம் பிரிவு "போதையூட்டும் மதுவகைகளையும். உடலுக்குத் தீங்கிழைக்கும் நச்சுப்பொருட்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும்" என்கிறது.

எனவே மதுவிலக்குதான் சட்டத்தின் அடிப்படை. மது விற்பனை அல்ல.

அருள் said...

Anonymous said...

// //"சரிப்பா, உன் உணர்வுகளை நான் மதிக்கின்றேன், நீ சென்று வா" என்று கூறுவாரா?// //

hypothetical question

Vidhoosh said...

உங்கள் விவாதங்களைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை.

ஆனால், என் அனுமதி இல்லாமல் என் பதிவொன்றுக்கு லிங்க் கொடுத்துள்ளீர்கள். அதை நீக்கி விடுங்கள். அனாவசியமாக என் பதிவுகளை உங்களுடைய தனிப்பட்ட எந்த விவகாரத்துக்கும் பயன்படுத்த வேண்டாம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

Vidhoosh said...

follow up.

dondu(#11168674346665545885) said...

@விதூஷ்
உங்கள் பதிவுக்கான லிங்கை நீக்கி விட்டேன். அதை குறித்த பின்னூட்டங்களையும் நீக்கி விட்டேன்.

மந்திரங்கள் பொதுவானவை. அவற்றை வைத்துக் கொண்டுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

problogger said...

கல்யாணத்துக்கு போனோமா வந்தோமா எண்டு இல்லாம இந்த டோண்டு வயசான காலத்தில செய்ற வேலை ...இதெல்லாம் தேவையா ?? எழுதுறதுக்கு வேற ஒண்டுமே இல்லையா ??

முகமூடி said...

அனேகமாக இப்போதிலிருந்து பதிவுலகில் அமோகமாக பிரயோகப்படுத்தப்படப்போகும் என்று நான் நினைக்கும் “மாகேமாகோ” (மாமனார்கிட்ட கேட்டுட்டீங்களா, மாமனார் கோச்சிக்க போறாரு) என்ற வார்த்தை பிரயோகத்தை என் பெயரில் காப்பிரைட் செய்துகொள்கிறேன். கொள்கை விரோத கருத்துக்கு எதிர்ப்பிரயோகமாக உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எத்தனை தரம் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம், அனுமதி இலவசம்.

dondu(#11168674346665545885) said...

பன்னிக்குட்டி ராம்சாமியின் இப்பதிவில் முரளி மனோகர் இட்ட பின்னூட்டம் கீழே:

இத்தனை நாளா கட்டிக்காத்து, மத்தவங்களுக்கும் வழிமொழிந்த சீர்திருத்த எண்ணங்களுக்கு மாறா பெரியவங்க கொள்கைக்கு மதிப்பு கொடுக்கறதுக்காக மாத்தி செஞ்சா அதை பேசாம தங்களுக்குள்ளேயே செஞ்சுக்கோணும்.

அதை விட்டுட்டு முதல்ல பதிவர் மீட்டிங்குன்னு வச்சுட்டு முக்கிய ஆளுங்க அந்த இடத்திலே அந்த நேரத்துல மேனர்ஸ் இல்லாம போகக்கூடாது.

பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும்.

போட்டோ எடுத்தா பின்புலத்துல சாமி படங்கள், மங்கலச் சின்னங்கள் எதுவும் இல்லாம பாத்துக்கோணும்.

எதார்த்தமா தகவலுக்காக அவ்வளவு அருமையான மண்டபத்துக்கு வாடகை எவ்ளோன்னு பெரிசு கேட்டா, இன்னும் பில் வரல்ல, பாத்து சொல்லறேன்னு சொல்லணும் இல்லேனாக்க உண்மையைச் சொல்லணும். ஆனால் அதே உண்மை சங்கடம் தருவதாக இருந்தால் பாலிஷ்டா சொல்லணும். ராபணான்னு பெண் வீட்டார் தலையில்தான் அச்செலவுன்னு சொல்லறது (அது உண்மையோ பொய்யோ) எப்போதுமே ஒரு பெண்ணியவாதி செய்யக்கூடாத விஷயம்.

பெரிசுக்கும் ஒரு வார்த்தை. பதிவர் மீட்டிங் யார் கூப்பிடறாங்கன்னு தராதரம் பார்த்து போகணும். தன் வீட்டுக்கு தேவையில்லாத பதிவர்கள் வருவதை தடுக்கணும். இந்தப் பின்னூட்டத்தையும் அது தன்னோட பதிவில் சேஃப்டிக்காக போடறது நல்லது.

ஆக எல்லோருக்குமே பாடம்தான்னு வச்சுண்டா டேமேஜ் லிமிட்டாகும்.

முரளி மனோகர்

நன்னி முரளி மனோகர். ராஜன் திருமலை மாதிரி பலர் சொன்னாங்க, நான் கேட்காமல் விட்டது தப்புத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

«Oldest ‹Older   201 – 251 of 251   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது