9/08/2011

டோண்டு பதில்கள் - 08.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி

பதில்: எட்டு ஆண்டுக்ளில் விலைவாசிகளும் உயர்ந்திருக்கும் அல்லவா?

கேள்வி-2. "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணம் ரூ.5 கோடி வீண்
பதில்: இப்போதாவது தமிழக மக்கள் திமுகவை தூக்கியெறிந்து அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்கள் என மகிழ்வோமாக.

கேள்வி-3. அப்சல் குருவுக்கு வக்காலத்து: ஒமருக்கு பா.ஜ., கண்டனம்
பதில்: வெறுமனே கண்டனம் செய்தால் போதாது, கடுமையாகவே கண்டனம் செய்ய வேண்டும்.

கேள்வி-4."மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம்
பதில்: தப்பி ஓடியவரையும் பிடித்து கம்பி எண்ண வைப்பார்களா?

கேள்வி-5. பா.ஜ.,வில் ஐக்கியமாகிறார் ஆந்திரா ஜெகன் : காங்கிரசை காலி செய்ய "மாஸ்டர் பிளான்'
பதில்: எனக்கென்னவோ இதில் பாஜகாவும் காலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

கேள்வி-6. DID YOU EVER WONDER WHY DIMES, QUARTERS AND HALF DOLLARS HAVE NOTCHES (MILLING), WHILE PENNIES AND NICKELS DO NOT?
பதில்: The US Mint began putting notches on the edges of coins containing gold and silver to discourage holders from shaving off small quantities of the precious metals. Dimes, quarters and half dollars are notched because they used to contain silver. Pennies and nickels aren't notched because the metals they contain are not valuable enough to shave.....

அதெல்லாம் இருக்கட்டும், முன்பெல்லாம் நம்மூர் ஒரணாக்கள், அரையணாக்கள், ஓட்டை காலணாக்கள், மேலும் மர்ற நாணயங்கள் அளவிலும் சரி வடிவிலும் சரி ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருந்தன. ஆகவே ஒன்றுக்கு இன்னொன்றை குழப்பிக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆனால் இப்போதோ 50 பைசா, ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்கள் குழப்பம் விளைவிக்கும் அளவுக்கு ஒன்று போலவே காட்சியளிக்கின்றன. மிண்ட் நாதாரிகள் என்ன மயிரையா பிடுங்குகிறார்கள்?

கேள்வி-7. WHY ARE MANY COIN BANKS SHAPED LIKE PIGS?
பதில்: They are actually shaped like pigs because they are called piggy banks. You see, In Middle English, "pygg" referred to a type of clay used for making household objects, such as jars. People often saved money in kitchen pots and jars made of pygg, called "pygg jars". By the 18th Century, the spelling of "pygg" had changed and the term "pygg jar" had evolved to "pig bank." This name caught on because the pig banks were mostly used by children, and a pig is a child-friendly shape that is easy to make out of clay. Once the meaning had transferred from the substance to the shape, piggy banks began to be made from other substances, including glass, plaster, and plastic.

கேள்வி-8.IN GOLF, WHERE DID THE TERM 'CADDIE' COME FROM?
பதில்: Back in the 16th century, Mary, Queen of Scotts ruled supreme. As such, she used to employ young nubile soldiers (cadets) as porters. God knows what else she employed them for, I could make some guesses but that's neither here nor there.

Anyhow, she must have been pretty cool because she liked to golf. Of course, while she was golfing she wasn't about to carry her own clubs so she used the young cadets to carry them for her. These cadets became known as her "caddies" and the word has stuck ever since.

கேள்வி-9.WHY IS SOMEONE WHO IS FEELING GREAT 'ON CLOUD NINE'?
பதில்: "The expression 'up on cloud nine' to describe a feeling of euphoric exaltation is based on actual terminology used by the U.S. Weather Bureau. Clouds are divided into classes and each class is divided into nine types. 'Cloud nine' is the cumulonimbus cloud that you often see building up in the sky in a hot summer afternoon. It may reach 30,000 to 40,000 feet, so if one is up on 'cloud nine,' one is high indeed. The popularity of 'cloud nine' as a catch phrase, though, may be credited to the 'Johnny Dollar' radio show of the 1950s. There was one recurring episode, like Fibber McGee's famous opening of the closet door. Every time the hero was knocked unconscious - which was often - he was transported to 'cloud nine.' There Johnny could start talking again." From "Morris Dictionary of Word and Phrase Origins" by William and Mary Morris (HarperCollins Publishers, New York, 1997).
See here.

கேள்வி-10.WHY ARE PEOPLE IN THE PUBLIC EYE SAID TO BE 'IN THE LIMELIGHT'?
பதில்: Limelight refers to a system of lighting invented in 1825 by a British army officer named Thomas Drummond. Drummond's
light was called "limelight" because it was produced by burning a cylinder of lime (calcium oxide) in an oxyhydrogen flame.
As the lime was oxidized by the flame, it produced an intense, brilliant light that could be directed into a beam by a glass lens.

Drummond's light was originally used to make distant survey stations more visible at night, but later it was also used in
lighthouses and for stage lighting. In the theatre it was used as a spotlight to direct the audience's attention to the most
important activities taking place on stage. Performers in this light were said to be "in the limelight," and when the expression
passed into general usage, it meant anyone at the centre of public attention. See here:

கேள்வி-11. WHY DO PEOPLE CLINK THEIR GLASSES BEFORE DRINKING A TOAST?
பதில்: ஆனந்த விகடனில் இது பற்றி ஒரு அட்டைப்பட ஜோக் வந்தது. எல்லோருக்கும் விஸ்கி/பீர்/வைன் சமமான அளவுல இருக்கான்னு பாத்துக்கறாங்க போலிருக்கு.

கேள்வி-12. WHY IS SHIFTING RESPONSIBILITY TO SOMEONE ELSE CALLED 'PASSING THE BUCK'?
பதில்: In card games, it was once customary to pass an item, called a buck, from player to player to indicate whose turn it was to deal. If a player didn't wish to assume the responsibility, he would 'pass the buck' to the next player.

அமெரிக்க குடியரசு தலைவரின் மேஜை மேல் “The buck stops here" என்னும் வாசகம் இருப்பதாக நான் படித்திருக்கிறேன்.

கேள்வி-13.WHY DO X'S AT THE END OF A LETTER SIGNIFY KISSES?
பதில்: This tradition started with the Medieval practice of allowing those who could not write to sign documents with an "X". This was done before witnesses, and the signer placed a kiss upon the "X" to show sincerity. This is how the kiss came to be synonymous with the letter "X", and how the "X" came to be commonly used at the end of letters as kiss symbols. இங்கு பார்க்கவும்.

கேள்வி-14. WHY ARE ZERO SCORES IN TENNIS CALLED 'LOVE'?
பதில்: வாத்தியார் மாணவர்களுக்கு பரீட்சை பேப்பரில் தரும் முட்டையிலிருந்து வந்தது இது. முட்டைக்கு ஃபிரெஞ்சில் l'oeuf என்பார்கள்.

கேள்வி-15. WHY DO MEN'S CLOTHES HAVE BUTTONS ON THE RIGHT WHILE WOMEN'S CLOTHES HAVE BUTTONS ON THE LEFT?
பதில்: சிரமம் பார்க்காது இங்கு போய் படித்து விடுங்களேன்.


ரமணா
கேள்வி-16. தயாநிதி அப்பழுக்கற்றவர் என சிபிஐ சொல்லிவிட்டது பற்றி?
பதில்: சிபிஐக்கு என்ன நிர்ப்பந்தமோ.

கேள்வி-17. தூக்குத் தண்டனை விசயத்தில் முதல்வரின் திடீர் மன மாற்றம்?
பதில்: இந்த விசயத்தில் எல்லோருமே தத்தம் இமேஜுக்காகத்தான் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

கேள்வி-18. கலைஞரின் பாராட்டு முதல்வருக்கு நல்ல மாற்ற‌மில்லையா?
பதில்: ஒரு சமயம் டோண்டு ராகவன் யாருக்காவது நன்றி சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் போலி டோண்டுவின் திட்டுகளுக்கு பயந்து அலறுவார்கள். அது போல இங்கு இருந்து தொலைக்கப் போகிறது!!!

கேள்வி-19. அழகிரி விசயத்தில் அடுத்து என்ன நடக்கும்?
பதில்: கைதுகள் எல்லாம் சரிதான். சட்டுபுட்டென்று வழக்குகளையும் முடிக்க வேண்டாமா. அதெல்லாம் நடந்தால் அழகிரி ஜெயிலுக்குள் நடக்கும் வாய்ப்பு உண்டு.

கேள்வி-20. ஆந்திராவில் பாஜகவின் தாமரை பெரிய அளவில் மலரும் போலுள்ள‌தே?
பதில்: கர்நாடகாவில் உள்ள எடியூரப்பா ஆட்சி அமைத்ததுபோல இல்லாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-21. அமெரிக்காவின் முதல் பொருளாதார வீழ்ச்சி சமயம் இந்தியா தப்பித்தது இந்த அடர் கருப்பு பணத்தால்தான் என்பது பற்றி?
பதில்: ரூபாய் டாலர் மாற்றங்களை முழுமையாக அனுமதிக்காததாலும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார்மயமாக்காததாலும், மற்ற சில காரணங்களாலும்தான் இந்தியா தப்பித்தது என நான் படித்துள்ளேன்.

கேள்வி-22. அஜித்தின் மங்காத்தாவின் வசூல் எந்திரனை மிஞ்சி விட்டதாமே?
பதில்: கேபிள் சங்கர் போன்றவர்களுக்கு போக வேண்டிய கேள்வி இது.

கேள்வி-23. சன் டீவி இல்லா அரசு டீவி ?
பதில்: சபாஷ் சரியான போட்டி.

கேள்வி-24. லேப்டாப்,மிக்ஸி,கிரண்டர்,ஃபேன் விலை குறையுமா தமிழகத்தில்?
பதில்: அரசு கொடுக்கும் இலவச பொருட்களை விற்பவர்களுக்கு குறைந்த விலைதான் கிடைக்கும். அதி குறிப்பிடுகிறீர்களா?

கேள்வி-25. சுப்பிரமணிய சாமியின் தொடர் மெளனம் தயாநிதி விசயத்தில் ?
பதில்: அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரே இன்னும் முடிவு செய்யவில்லை என நினைக்கிறேன்.


BalHanuman
கேள்வி-26. தமிழகத்தின் புதிய கவர்னர் ரோசய்யா பற்றி?
பதில்: ஆந்திராவின் நெடுஞ்செழியன்.

கேள்வி-27. தி.மு.க. சமச்சீர் கல்வி வெற்றிவிழா கொண்டாடுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?
பதில்: சமச்சீர் கல்வி அதிமுக திமுக இரண்டுக்குமே சருக்கல்தான்.


மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.ரேஷன்கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
2.டில்லி ஐகோர்ட் வாசலில் பயங்கர குண்டு வெடிப்பு
3.திருச்சி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியில்லை: ராமதாஸ் தகவல்
4.புற்றுநோய்க்கு மலச்சிக்கலும் காரணம்: டாக்டர்கள் தகவல்
5.மார்ட்டின் வீட்டில் சி.பி.ஐ., "ரெய்டு'

வஜ்ரா said...

ஐந்தாம் கேள்வி ஏன் அப்படியே ரீடிஃப் தளத்திலிருந்து பதிலுடம் கப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது ?

BalHanuman said...

'அரசு மாற்றினாலும், எங்களுக்கு (தி.மு.க. வினருக்கு) தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு’ – என்ற கருணாநிதி உளறல் பற்றி ?

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
ஐந்தாம் கேல்வி மட்டும்தானா?

கேள்வி கெட்டாவர் பதிலளித்தவர் இருவருமே கூகளாண்டவரை நாடியுள்ளனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@பாலஹனுமான்
அதுதான் உளறல் என கூறி விட்டீர்களே. மேலும் என்ன சொல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்

BalHanuman said...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ‘மூன்றாவது குற்றப் பத்திரிகை’, ‘மூன்றாவது குற்றப் பத்திரிகை’ என்று ஸி.பி.ஐ. படம் காண்பித்துக் கொண்டே அதைத் தாக்கல் செய்யாமல் டபாய்க்கிறதே ?

dondu(#11168674346665545885) said...

@Balhanuman
Only Sonia Gandhi knows.

Regards,
N. Raghavan

ரமணா said...

1.சட்டசபையில் அதிமுக முதல்வரின் பாய்ச்சல் தேமுதிக உறுப்பினர்மீது சரியா?
2.சட்ட சபையில் ஜால்ரா சத்தம் அதிகமாவது நல்லதற்கா?
3.விஜயகாந்த் இப்படி இருந்தால் எப்படி அடுத்து ஆட்சியை பிடிப்பது?
4.திமுகவின் சட்டசபை நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தை பாதிக்காதா?
5.தயாநிதி விசயத்தில் சிபிஐயின் மன்மாற்றம் ஏன்?

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.மத்திய அரசு நம்பகத் தன்மையை இழந்துவிட்டது: பாஜக
7.முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
8.ஜன் லோக்பால் மசோதாவை எதிர்ப்பவர்களை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்காதீர்: அண்ணா
9.திட்டத்தை மாற்றும் யாரும் இனி ஆட்சிக்கு வரமாட்டார்கள்: ஜெ.,
10.வழக்கு செலவிற்கு தலைமையை எதிர்பார்க்கக் கூடாது: கருணாநிதி

Arun Ambie said...

சமச்சீர்கல்வி திமுக அதிமுக இரு கட்சிகளுக்குமே சறுக்கல் எனும் வாதம் சரியல்ல. அதிமுகவுக்கு மட்டுமே சறுக்கல். திமுகவுக்கு அதலபாதாள வீழ்ச்சி. ஊடகங்களின் துணையுடன் திமுக வீழ்ச்சியை எழுச்சியாகக் காட்டியுள்ளது, வழக்கம் போல. அதிமுக இதை தேவையான வேகத்துடன் எதிர்க்காமல் இந்தப் பிரச்சாரத்தில் கோட்டை விட்டுள்ளது. 'சோ'ர்வு ஏனோ தெரியவில்லை.

"முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு, சுயவிளம்பரம் செய்துகொண்டு, தன்னுடைய கொள்கை, வழிமுறைகளை தேவையற்ற முறையில் உயர்த்திக்காட்டி இளம் சிறார்களையும் இளைஞர்களையும் தேவையற்ற முறையில் வசப்படுத்த முயன்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அதற்காக, மொத்தமாக சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதை விட, இதுபோன்ற ஆட்சேபிக்கத்தக்க விஷயங்களை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாம்" (Undoubtedly, there had been a few instances of portraying the personality by the leader of political party [M. Karunanidhi] earlier in power, i.e. personal glorification, self publicity and promotion of his own cult and philosophy, which could build his political image and influence the young students, particularly in the books of primary classes. Such objectionable material, if any, could be deleted, rather than putting the operation of the Act 2010 in abeyance for indefinite period.) என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இது கருணாநிதியாலும் அவரை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களாலும் வசதியாக மறைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் கருணாநிதியின் சமச்சீர் கல்வியை அங்கீகரித்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மாயை என்றும் திருக்குவளை மாயை என்றும், இதை வகைப்படுத்தலாம்.

BalHanuman said...

@Arun Ambie

நீங்கள் கூறியிருப்பது மிகச் சரியே.
On a related note, கருணாநிதியின் சுயமோகம் பற்றி துக்ளக்கில் துர்வாசர் கட்டுரை....

சமச்சீர் கல்வியை அமல்படுத்திய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அவரது தி.மு.க. தொண்டர்களோ, பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். கடந்த ஆட்சியில் தி.மு.க.வினர் அடாவடியில் ஈடுபட்டு அமைச்சர்கள் முதல், வட்ட, மாவட்டம் வரை நில அபகரிப்பு வழக்குகளில் ஜாமீன் கேட்டு நீதிமன்றங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிற நிலையில், இந்தச் சமச்சீர் கல்வித் தீர்ப்பு, தி.மு.க.வினரைப் புனிதர்களைப் போல் காட்டிக் கொள்ள உதவுகிறது.

கருணாநிதி அரசு திரும்பவும் பதவிக்கு வந்திருந்தால், கவிதை என்ற பெயரில் கருணாநிதி எழுதிய, அவரது கடமுடா உரைநடையில் அமைந்த ‘செம்மொழியான…’ என்ற புதுக் கவிதையைத்தான், மாணவ – மாணவிகள் தினசரி பள்ளி துவங்குவதற்கு முன் ‘கருணாநிதி வணக்கப் பாடலாக’ பாட வேண்டும் என்று கூடக் கட்டளை இட்டிருப்பார்கள். தமிழகமும், தமிழரும் செய்த புண்ணியத்தால் கருணாநிதி பதவிக்கு வரவில்லை.

இப்போது கருணாநிதி, சுத்த சுயம் பிரகாசமான நேர்மையாளரைப் போல் வேஷம் போடுகிறார். சமச்சீர் கல்விப் பாட நூல்களை எழுதியவர்கள் யாரும் கட்சி சார்பில்லாத கல்வியாளர்கள் அல்ல. எல்லோரும் கருணாநிதிக்குச் சதா சர்வகாலமும் ஜால்ரா தட்டுவதற்கு ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று முண்டியடிக்கிற ஆசிரியத் திலகங்கள்தான். அப்படிப்பட்டவர்களைத்தானே கருணாநிதி அரசும் பாடநூல் புத்தகத்தை எழுதச் சொல்லும்? தான் கொண்டு வந்த சமச்சீர் கல்விப் பாடங்கள், தமிழர்களின் கல்வித் தரத்தை உயர்த்தோ உயர்த்து என்று உயர்த்துவதற்காகக் கொண்டு வரப்பட்டவை என்பது போல் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் எழுதி எழுதி மாய்ந்து போகிறார்.

சமீபத்தில் அவர், தன் உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், தனக்கு ஜால்ரா போடும் சில ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டக் குழுவினர் எழுதிய பாடங்களில் தனது புகழ், எந்தெந்தப் பாடங்களில் எல்லாம் இடம் பெற்றிருந்தன என்பதைப் பட்டியலிட்டு, அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உலகத் தமிழ் மாநாட்டை எம்.ஜி.ஆரும்தான் முதல்வராக இருந்தபோது நடத்தினார். பிறகு ஜெயலலிதா அரசும் ஒரு உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. ஆனால், அவற்றை எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ, தங்களது தலையாய சாதனைகளாக விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. ‘எங்கே புகழ், எங்கே புகழ்’ என்று தேடியலையும் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டைப் பற்றிய தகவலை, 3-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் அந்தக் குழு சொருகி விட்டது. பின்னே? அவ்வளவு சிறு வயதிலேயே மாணவர்கள் கருணாநிதி என்ற மகாத்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இதேபோல, 4-ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் செம்மொழி மாநாட்டுப் படங்களும், அதற்குரிய விளக்கங்களும் சொருகப்பட்டுள்ளன.

‘கருணாநிதி தமிழை வளர்த்தார்’ என்று தமிழ்ப் பாடப் புத்தகத்தில் அவரது புகழை நிலைநிறுத்தியாயிற்று. அவரது மகள் கனிமொழி ஜகத்கஸ்பருடன் இணைந்து நடத்திய சென்னைச் சங்கமம் பற்றிய தகவல்களை மாணவர்கள் அறியாவிட்டால், அது தமிழ்ச் சாதிக்குப் பின்னடைவாகி விடாதா? இதையும் 4-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நுழைத்து, கனிமொழியின் புகழ் பாடியது.

6-ஆவது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ‘தைப்புத்தாண்டே வருக’ என்று கருணாநிதி செய்த தமிழ்ப் புத்தாண்டுப் புரட்சிகர மாற்றத்தை வரவேற்கும் கவிதை, 10-ஆம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இடம் பெற்ற கருணாநிதியின் கவிதை என்று, சந்தடிசாக்கில் நுழைக்கப்பட்ட தனது வீர தீரப் பிரதாபங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

‘இப்படியெல்லாம் என்னைப் பற்றி இத்தனை விஷயங்களுடன் பாடங்கள் எழுதப்பட்டிருக்கக் கூடாது’ என்று கருணாநிதி வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர்தான் இத்தனை புகழுக்கும், பெருமைக்கும் தான் தகுதியானவன் என்று கருதிக் கொண்டிருக்கிறாரே! அவரா வருத்தம் தெரிவிப்பார்? நாம்தான் இப்படிப்பட்ட சுயமோகியைத் தலைவராக அடைந்ததற்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். தனது உடன்பிறப்புக்கு அவர் எழுதியுள்ள அந்தக் கடிதம் கூட ஒருவிதமான சுயமோகத்தில் எழுதப்பட்டதுதான்.

ரமணா said...

6.சமச்சீர் கல்வி பாடங்கள் நன்றாக இருப்பதாய் மெட்ரிகுலேசனில் படிக்கும் பிள்ள‌‌களின் தாய்மார்கள் சொல்வது பற்றி?உண்மை என்ன?
7.ஜான் பாண்டியன் முன்னாளில் அதிமுக ஆதரவாளராய்த் தானிருந்தார்?
8.திமுக பெரும் புள்ளிகளின் கைது தொடர்கிறதே ஏதாவது உள் நோக்கம்?
9.பரமக்குடி கலவரம் அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பாதிக்குமா?
10. இறுதிச் சடங்கில் காந்திமதியை ஆத்தா ஆத்தா என வாய் நிறையக் கூப்பிட்டு வந்த கமல் மிஸ்ஸிங்?

BalHanuman said...

ஆ.ராசா எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துவிடுவார். பிரதமர், கபில்சிபல் போன்றவர்கள் எல்லோரும் ஆ.ராசாவைக் காப்பற்றுவதற்காகவே செயல்படுகிறார்கள் என்கிறாரே அருண் ஷோரி ?

Simulation said...

You may like this.

http://thatstamil.oneindia.in/news/2011/09/14/modi-is-king-governance-says-us-congress-report-aid0091.html

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது