9/15/2011

டோண்டு பதில்கள் - 15.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. ரேஷன் கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

பதில்: நல்ல முயற்சிதான். ஆனால் முதலில் ரேஷன் கார்டுகளில் சரியான முகவரியை பதிப்பது பற்றி யோசிக்கட்டும். முகவரிச் சான்றாக பயன்பட வேண்டிய இந்த ஆவணம் ரேஷன் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொல்லையைத்தான் அதிகரிக்கிறது. எனது ரேஷன் கார்டில் ஏதோ ஒரு நாதாரி டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் முகவரியை தவறாகக் குறிக்க, அதை செக் வேண்டிய நாதாரி அதிகாரி கண்ணை மூடிக் கொண்டு டிக் செய்ய, சரியான முகவரியை நான் பதிக்க படாதபாடு பட வேண்டியதாயிற்று.

தண்ணீர் வரி மதிப்பிடல் விஷயத்திலும் இதுவே நடந்தது பற்றி எழுதியுள்ளேன்.

கேள்வி-2. டில்லி ஐகோர்ட் வாசலில் பயங்கர குண்டு வெடிப்பு
பதில்: தேசத் துரோகி அஃப்சல் குருவை முன்னமேயே தூக்கில் போட்டிருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திராது என்றுதான் கூற வேண்டும். அப்படித்தான் மக்ஃபூல் பட் என்னும் தீவிரவாதியை தூக்கு தண்டனைக் கைதியாக வெகு நாட்களுக்கு இழுக்கடித்து தூக்கில் போட்ட கூத்து பற்றியும் நான் எழுதியுள்ளது அப்படியே இருக்கிறது.

கேள்வி-3. திருச்சி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியில்லை: ராமதாஸ் தகவல்
பதில்: பாவம் என்னதான் செய்வார் அவர். எவ்வளவு நாளைக்குத்தான் அடி வாங்கியும் அழாமல் நடிப்பதாம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்.

கேள்வி-4. புற்றுநோய்க்கு மலச்சிக்கலும் காரணம்: டாக்டர்கள் தகவல்
பதில்: உண்மைதான், முக்கியமாக குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என கேள்விப்பட்டுள்ளேன். மருத்துவர் புரூனோ இது பற்றி சரியான தகவல் தர இயலும்.

கேள்வி-5. மார்ட்டின் வீட்டில் சி.பி.ஐ., "ரெய்டு”
பதில்: லாட்டரி அதிபர் லாட்டரி அடிக்கிறாரா?

கேள்வி-6. மத்திய அரசு நம்பகத் தன்மையை இழந்துவிட்டது: பாஜக
பதில்: எடியூரப்பா போன்றவர்களால் பாஜகாவும் நம்பகத் தன்மையை இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

கேள்வி-7. முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
பதில்: ஏட்டில் பார்க்க நன்றாகத்தான் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வைணவக் கோவில்களுக்கு நான் எனது கார்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் காரில் செல்லும்போதும் முதன் முறை பார்த்த வயல்களில் பிளாட்டுகளுக்கான குட்டிக் கற்கள் அதற்கு அடுத்த முறை படிப்படியாக குடியிருப்புகளாக மாறி வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆக, விவசாயத் தொழில் மெதுவாக க்ஷீணிக்கிறது. யார் காரணம்?

கேள்வி-8. ஜன் லோக்பால் மசோதாவை எதிர்ப்பவர்களை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்காதீர்: அண்ணா
பதில்: அடேங்கப்பா, ரொம்பத்தான் ஆசை அந்த மனிதருக்கு.

கேள்வி-9. திட்டத்தை மாற்றும் யாரும் இனி ஆட்சிக்கு வரமாட்டார்கள்: ஜெ.
பதில்: மாறுதல்கள்தான் மாறாமல் இருக்கின்றன என்பதை யாரேனும் அவருக்கு எடுத்துரைத்தால் சரிதான்.

கேள்வி-10. வழக்கு செலவிற்கு தலைமையை எதிர்பார்க்கக் கூடாது: கருணாநிதி
பதில்: அதான் பணம் கொள்ளையடித்தார்களே, அதிலிருந்து எடுத்து வழக்குகளை சந்திக்கட்டும் என அவர் நினைக்கிறாரோ என்னவோ.


ரமணா
கேள்வி-11. சட்டசபையில் அதிமுக முதல்வரின் பாய்ச்சல் தேமுதிக உறுப்பினர்மீது சரியா?
பதில்: தேமுதிக என்பது பிரதான எதிர்கட்சி. அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த நிலைக்கு வந்ததாலேயே அவர்கள் ஜெயலைதாவுக்கு ஜால்ரா அடிக்க அவர்கள் என்ன 1991-ல் எதிர்கட்சியாக வந்த காங்கிரசா என்ன? அந்த ஜால்ரா அடிக்காததால்தான் இந்தப் பாய்ச்சல்.

கேள்வி-12. சட்ட சபையில் ஜால்ரா சத்தம் அதிகமாவது நல்லதற்கா?
பதில்: இல்லை

கேள்வி-13. விஜயகாந்த் இப்படி இருந்தால் எப்படி அடுத்து ஆட்சியை பிடிப்பது?
பதில்: அவருக்கே அந்தக் கவலை இருப்பதாகத் தெரியவில்லையே.

கேள்வி-14. திமுகவின் சட்டசபை நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தை பாதிக்காதா?
பதில்: கும்.

கேள்வி-15. தயாநிதி விசயத்தில் சிபிஐயின் நடவடிக்கை
பதில்: சொதப்பல், ஆனால் திட்டமிடப்பட்ட சொதப்பல்.

கேள்வி-16. சமச்சீர் கல்வி பாடங்கள் நன்றாக இருப்பதாய் மெட்ரிகுலேசனில் படிக்கும் பிள்ள‌‌களின் தாய்மார்கள் சொல்வது பற்றிய உண்மை என்ன?
பதில்: பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

கேள்வி-17. ஜான் பாண்டியன் முன்னாளில் அதிமுக ஆதரவாளராய்த் தானிருந்தார்?
பதில்: ஆமாம், ஆனால் அதுதான் அரசியல்.

கேள்வி-18. திமுக பெரும் புள்ளிகளின் கைது தொடர்கிறதே ஏதாவது உள் நோக்கம்?
பதில்: பெரும் புள்ளிகள் பெருங்கேடிகளாகவும் இருந்தால் என்ன செய்வதாம்.

கேள்வி-19. பரமக்குடி கலவரம் அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பாதிக்குமா?
பதில்: அது அக்கலவரத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து அமைவது.

கேள்வி-20. இறுதிச் சடங்கில் காந்திமதியை ஆத்தா ஆத்தா என வாய் நிறையக் கூப்பிட்டு வந்த கமல் மிஸ்ஸிங்?
பதில்: அப்படியா, வரவில்லையா? என்ன காரணமோ தெரியவில்லையே.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டி: கருணாநிதி
2.தயாநிதி, கலாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை
3.அரசு ஊழியர் மாதச் சம்பளத்துக்கு ரூ.25,751 கோடி: நிதியமைச்சர்
4.பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயரும்?
5.சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்

aotspr said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
சூப்பர்..

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ரமணா said...

1.முன்னாள் முதல்வரின் இலவச திட்டம் இன்னாள் முதல்வரின் விலை இல்லாத் திட்டம் என்ன வேறுபாடு?
2. பெரியவர் கருணாநிதியை தேர்தலில் கைவிட்ட இலவச‌ டீவி யின் கதையை பார்த்த பிறகும் தமிழக் அரசின் விலை இல்லாத்திட்டம் ஜெயிக்க வைக்குமா அதிமுகாவை?
3.ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால் என்ன வாகும் இந்த விலை இல்லாத்திட்டம்?
4.இதில் செலவளிக்கப் படும் 10,000 கோடியை அடிப்படை கட்டுமானத்திற்கு செல்வளித்தால் தமிழகம் இன்னுமொரு குஜராத் மாறுமே?
5.உங்கள் மோடி பிரதமரானால்?
6.ஜான் பாண்டியன் விசயத்தில் சிபிஐ விசாரணை கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம் சரியா?
7.மதிமுகவின் மாநாடு பற்றி?
8.பெட்ரோல் விலை உயர்வு லிட்டர் ரூ. 100 ஆகிவிடும் போலுள்ளதே?
9.சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால்?
10. அஜித்தின் மங்காத்தா பார்த்தீர்களா எப்படி உங்கள் பார்வையில்?

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்றநிலை: பிரதமர் கவலை
7. பிரதமர் வேட்பாளராக மோடி: அமெரிக்க அறிக்கைக்கு அத்வானி ஆதரவு
8.கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்: சி.பி.ஐ. எதிர்ப்பு
9.வெளிச்சந்தைக்கு சவால் விடும் அரசின் இலவசப் பொருள்கள்
10.கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம்: ஜெயலலிதா

Anonymous said...

வணக்கம் உங்களுடைய படைப்புகள் அருமை என்னுடைய சித்தர்கள் ரகசியத்தை பாருங்கள்

சுழியம் said...

ஜான்பாண்டியனை வைத்து சாதிக்கலவரம், அப்புறம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை வைத்து பரபரப்பு. இவை எல்லாம், கோயில் நிலங்கள், புறம்போக்கு நிலங்களை சர்ச்சுகள் கையகப்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவும், பாதிரியார்கள் மேல் போடப்படும் பாலியல் வழக்குகளைக் காவல் நிலையங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும்தான் என்று தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதா பணிந்து போவதற்கு என்னென்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது