9/24/2011

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் - 2

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய எனது இன்னொரு பதிவு இங்கே

அப்பதிவை இட்டபோது அவரது நாடகமேடை நினைவுகளிலிருந்து எனது நினைவிலிருந்து எடுத்து எழுதினேன். ஆனால் சில நாட்களுக்கு முன்னால் எனக்கு அப்புத்தகமும், பலகாலமாக தேடி வந்த வேறு சில புத்தகங்களும் கிடைத்தது என் பாக்கியமே.

அவரது நாடக மேடை நினைவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்த புத்தகத்துக்கும் இப்போதுதான் படித்து முடித்த புத்தகத்துக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேலே உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

இப்போது படித்து முடித்தப் புத்தகம் 1932 வாக்கில் எழுதப்பட்டது, ஆனால் நான் முன்னால் படித்த புத்தகத்திலோ அதற்கு பிந்தையக் காலக் கட்டங்களும் சுட்டப்பட்டுள்ளன. மறுபடியும் கடையில் போய் பார்க்க வேண்டும். அது பற்றி பிறகு.

இப்போது இந்தப் புத்தகத்தை படித்ததும் எனது நினைவுகள் கிட்டத்தட்ட சரி என்ற நிலைக்குத்தான் வந்தேன். நாடக அரங்கங்களில் ஆபாசங்கள் என்னும் பதிவில் குறிப்பிட்ட ரோலக்ஸ் வாட்ச் ஒன்றுதான் எனது நினைவுகளுடன் ஒத்துப் போகவில்லை.

சம்பந்தம் முதலியாருக்கு துணைவி/காதலி பாத்திரங்களில் வந்த ரங்கவடிவேலு முதலியார், நாகரத்தினம் ஐயர் ஆகியோர் பற்றி அவர் தரும் விவரங்கள் புருவங்களைத் தூக்க வைக்கின்றன.

மனோகரன் நாடகத்தில் இவர் மனோகரனாக நடித்ததாலேயே ரங்கவடிவேலு விஜயாள் வேடம் தரித்தார், கர்ணன் நாடகத்தில் பானுமதியாக நாகரத்தினம் ஐயர் நடித்ததாலேயே இவர் துரியோதனன் வேடம் ஏற்க நேர்ந்தது, இவரும் அவரது பெண் ஜோடிகளாக வேடம் தரித்த ரங்க வடிவேலுவும் ஊடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது உண்மையான க்ணவன் மனைவி, நிஜக் காதலர்கள் கெட்டார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வரிகளை ஒரு மனோதத்துவ நிபுணர் படித்தால் என்ன நினைப்பார் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. சங்கடமாக உள்ளது.

இப்புத்தகத்தை படித்த போது இப்போது தோன்றிய விஷயத்தைக் கூறும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன்.

பிரபல ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டன் பற்றிப் பேசுகையில் அவர் தனது சமகாலத்தில் நடந்த பிரெஞ்சு, அமெரிக்க மற்றும் தொழிற் புரட்சிகள் பற்றி தனது நாவல்களில் ஒன்றுமே கூறவில்லை. அது பற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன. அவை இப்போதைக்கு இங்கு வேண்டாம்.

அதே போல பாரதியார் கூட வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றி ஒன்றுமே எழுதாதற்கும் காரணங்கள் இருந்திருக்கும் அல்லவா? அது பற்றி இம்சை அரசன் புலிகேசி தூண்டிய நினைவுகள் என்னும் தலைப்பில் நான் இட்ட இடுகையில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.

சிறு டைவர்ஷன் முடிந்தது.

இப்புத்தகத்தில் முகத்தில் அறையும் எண்ணம் இதுதான். சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு குறிப்புமே இல்லை. பல தமிழ் நாடகக் கலைஞர்கள் (கே.சாரங்கபாணி, கே.பி.சுந்தராம்பாள், நாகையா, டி.கே.சண்முகம், எஸ்.வி.சகஸ்ரநாமம், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர்) தத்தம் உயிரைப் பயணம் வைத்து சுதந்திர தாகம் எழுப்பும் நாடகங்களை போட்ட கால கட்டத்தில் இவரது குழு சௌகரியமாக அரசு சார்பில் இருந்து, கவர்னர் துரை மற்ற அரசு அதிகாரிகள் மனம் மகிழும் நாடகங்கள் போட்டு, ராவ் பகதூர், திவான் பகதூர், சர் பட்டங்களைப் பெறுவதிலேயே காலம் கழித்திருக்கிறது. இவரும் அரசு உத்தியோகத்தில் ஜட்ஜாக எல்லாம் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார்.

இது பற்றியும் மனோதத்துவ நிபுணர்கள் இப்போது என்ன கூறுவார்கள் என்பதை நினைத்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

அது சரி, பம்மல் சம்பந்த முதலியார் அறிவார்ந்த சுயநலத்துடன் செயல்பட்டுள்ளார். அதில் என்ன குற்றம் காண இயலும் என்னால்? நானே அப்படித்தானே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

pt said...

6. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires. The second is full of assassins with loaded guns. The third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?


7. A woman shoots her husband. Then she holds him under water for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?


8. What is black when you buy it, red when you use it, and grey when you throw it away?


9. Can you name three consecutive days without using the words Wednesday, Friday, or Sunday?


10. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!

Anonymous said...

என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்? நான் சமீபத்தில்தான் இதைப் படித்தேன். (பல மின் புத்தகங்களை இங்கே காணலாம் - http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-25.htm)

vijayan said...

பம்மல் சம்மந்த முதலியார் ஒரு pro -british .வெள்ளை அரசாங்கத்திடம் நீதிபதி உத்தியோகம் பார்த்தவர்.பல விடுதலை போராட்ட வீரர்களை சிறைக்கு அனுப்பியவர்.இந்தகால amature நாடக சபாக்கள் போல வெள்ளை அரசாங்கத்தில் வேலை பார்த்த கருப்பு துரைமார்களின் சாயுங்கால பொழுதை கழிக்க அரசின் மனம் கோணாத வகையில் ஆழமில்லாத தமாஷாக்களை எழுதியவர்.

வஜ்ரா said...

enlightened self interest = அறிவார்ந்த சுயநலம் ? நல்ல மொழிபெயர்ப்பு.

ரமணா said...

6.அரசியல் உலகில் சனிப்பெயர்ச்சி பெரியா பாதிப்பை யாருக்கு கொடுக்கும்?
7.கடைசியில் 2ஜி விவகாரம் ?
8.அதிமுக தனி ஆவர்த்தனம் ஜெயிக்குமா?
9.மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் உலகம் முழுவதும்?
10. உள்ளாட்சித் தேர்தலில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் பிரகாசித்தால்?

dondu(#11168674346665545885) said...

@ரமணா
மன்னிக்கவும், நாளை வரவேண்டிய பதில்கள் பதிவு ஃபைனலைஸ் ஆகிவிட்டது. உங்கள் கடைசி 5 கேள்விகள் அடுத்த வாரம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ம.தி.சுதா said...

மிகவும் ஆழமான விடயங்களைக் கொண்ட பகிர்வு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது