11/03/2011

டோண்டு பதில்கள் - 03.11.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா
பதில்: இப்போதே டூ லேட்டாக இருக்குமோ எனக் கவலையாக இருக்கிறது.

கேள்வி-2. மத்திய அமைச்சர்களின் எரிபொருள் செலவு ரூ.3.67 கோடி
பதில்: அது பற்றி படிக்கும் மக்களின் வயிறும் எரிகிறதே.

கேள்வி-3. பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'
பதில்: தண்ணீர் விஷயத்தில் அண்டை மாநிலம் என்ன, அண்டை மாவட்டத்தையே நம்ப முடியாதுதானே.

கேள்வி-4. மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது : அணுஉலை எதிர்ப்பு குழு தலைவர் பேச்சு
பதில்: அரசியல் கலந்தால் இம்மாதிரி நடத்தைகளும் அவற்றுக்கான எதிர்வினைகளும் வரத்தானே செய்யும்.

கேள்வி-5. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
பதில்: நல்ல விஷயம்தான், ஆனால் விவரங்களை பதிக்கும்போது ஏனோ தானோ என பதிக்காமல் கவனத்துடன் இருப்பது நலம். முகவரி பதிப்பதிலேயே கோளாறு செய்துதானே ரேஷன் கார்டு, எலெக்‌ஷன் அடையாள அட்டை எல்லாவற்றிலும் பிரச்சினை வருகிறது. அம்மாதிரி இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதுமே.

கேள்வி-6. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில் "ஊழல்': 3 மாதங்களில் "பல்' இளித்த ரோடுகள்
பதில்: வழமையான செய்திதானே.

கேள்வி-7. ஒன்றிய தலைவர் பதவி அ.தி.மு.க., வில் குடுமிபிடி
பதில்: பிணம் கிடக்கும் இடங்களில் கழுகுகள் வட்டமிடும் என்னும் பொருள்பட ஆங்கிலச் சொலவடை உண்டு. (Wheresoever the carcase is, there will the eagles be gathered together).

கேள்வி-8. பயணிகளுக்குக் கொடுத்த அறிவுரையை ஆஸ்திரேலியா திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்
பதில்: இவ்வாறு கேட்பது இந்தியாவுக்கு அவமானம். தமது பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகள் கவலைப்படாமல் வேறு யார் படுவார்களாம்?

கேள்வி-9. லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி வரை நம்பினார் கடாபி: பாதுகாவலர்
பதில்: ராஸ்புடீன் என்னும் போலி குரு ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னனை தன் கைப்பொம்மையாக்கி ஆட்டினான். அப்போதைய பல ரஷ்ய பிரபுக்கள் அவனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர்.

அப்போது என்ன நடந்தது என்பதை Richard Armour என்னும் ஆங்கில எழுத்தாளர் தனது It all started with Marx என்னும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார் நினைவிலிருந்து தருகிறேன்).

They stabbed him, Rasputin did not die.
They gunned him, he did not die.
They poisoned him, he did not die.
They drowned him and then he died of broken heart, suddenly aware of his unpopularity.

கேள்வி-10. கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்
பதில்: இவருடைய பயண ஏற்பாடுகளை கவனிக்க என ஒரு தனி ஏஜென்சியா? என்னவோ இடிக்கிறதே.


ரமணா
கேள்வி-11. அஜித் சிங்கின் வருகை அழகிரிக்கு சிக்கலா?
பதில்: ஏன், கருணாநிதி அவரையும் வாரிசாகத் தேர்ந்தெடுத்து விட்டாரா என்ன?

கேள்வி-12. பருவ மழை இந்த ஆண்டு எப்படி?
பதில்: போன ஆண்டை விட இந்த ஆண்டு பரவாயில்லை என்று கூறுகிறார்கள்.

கேள்வி-13. டெல்லியில் தீபாவளி குடிகாரர்களில் 40 % பெண்களாமே?
பதில்: அவர்களில் கணிசமானோர் தத்தம் கணவரால் கம்பெல் செய்யப்பட்டு, பார்ட்டிகளில் குடிக்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களும் இப்போது குருவையே மிஞ்சிய சிஷ்யைகளாகிவிட, கணவர்கள் பேய் முழி முழிக்கிறார்கள்.

கேள்வி-14. அடுத்த தேர்தலில் உதிரிக்கட்சிகளின் நிலை?
பதில்: அவரவர் பலம் தெரிந்தால் தெளிவு என்பது தானே பிறந்து விடுமல்லவா?

கேள்வி-15. வைக்கோ திருந்தவில்லை எனும் திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டு பற்றி?
பதில்: பூட்ட கேசெல்லாம் மற்றவர்கள் திருந்துவது பற்றி கவலைப்படுவது செனிலிடியையே காட்டுகிறது.

கேள்வி-16. உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை என சொல்லும் உண்மைத் தமிழன்?
பதில்: அவருக்கு ஏதேனும் பின்னணி தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கேள்வி-17. கேபிடலிஸம் தோல்வியை நோக்கியா?
பதில்: மனவாடு கேப்பிடலிசத்துக்கு தோல்வி என வேண்டுமானால் கூறுங்கள்.

கேள்வி-18. விலைவாசி குறையுமா?
பதில்: யானை வாயில் போன கரும்பு திரும்பக் கிடைக்குமா?

கேள்வி-19. மக்கள் பெருக்கம் இப்படி போனால் பூமி தாங்குமா?
பதில்: தாங்காமல் கீழே விழுந்து விடுமா? அப்படியானால் எங்கே விழும்?

கேள்வி-20. ஊரை ஏமாற்றி பகல் கொள்ளை அடிக்கும் வல்லான்களுக்கு வால் பிடிக்கும் ஊழல் சக்திகளுக்கு இனி எதிர்காலம்?
பதில்: வல்லான்கள்தானே! தப்பிக்க வழி தேட மாட்டார்களா என்ன?

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//இவ்வாறு கேட்பது இந்தியாவுக்கு அவமானம்//

வெளியுறவுத்துறை அமைச்சராக, சுட்டுப் போட்டாலும் தன்னுடைய துறையைப் பற்றித் தெரிந்து கொள்ளத் துப்பில்லாதவராக, எஸ் எம் கிருஷ்ணா இருப்பதை விடவா?

cnsone said...

Regarding Q number 10 - The resignation from the Trust was because of the disagrement to Kiran's stand and her attitude. Travel Agency was that person's business which was used [rather misused] by Kiran. He did not make money other than the standard agency commission on the actual air ticket sale [ not at the ''inflated'' rate from which Kiran made profits, brazenly.]
She was told to take her travel business to any other agency in future.

ரமணா said...

1.கனிமொழி இனி?
2.திமுகவில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பா?
3.கமாடிடி ஆன்லயின் டிரெடிங் தடை செய்யப்படுமா?
4.மிண்டும் அமைச்சரவை மாற்றம் பற்றி?
5.அதிகாரிகளின் அடிக்கடி மாறுதல் பற்றி?
6.பெங்களூர் வழக்கு என்னவாகும்?
7. அடுத்து மம்தா என்ன செய்வார்?
8.சீமானின் புரட்சிப் பேச்சு மக்களை கவர்கிறதா?
9.கூடன்குளம் சுமுகமாய் முடியுமா?
10. பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க திடீர் எதிர்ப்பு ஏன்?

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.பெட்ரோல் விலை உயர்வு சரியே: மன்மோகன்
2.நூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பு''
3.இந்தியா
மத்திய அரசில் இருந்து வெளியேறுவோம்: மம்தா பானர்ஜி
4.
டீசலுக்கும் விலைக் கட்டுப்பாடு கூடாது: முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கருத்து
5.லோக்பால் மசோதாவை சிதைக்காதீர்கள்: ஹசாரே குழு

pt said...

KINDLY ANSWER THE FOLLOWING QUESTIONS IN DONDU'S STYLE:

1. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
2. If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
3. If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
4. How can you lift an elephant with one hand?
5. How can a man go eight days without sleep?
6. If you throw a red stone into the blue sea what it will become?
7. What looks like half apple?
8. Bay of Bengal is in which state?

radhakrishnan said...

அசத்தல் கேள்வி பதில்(கலைஞர் ஸ்டைல்) .மிகவும் சுவாரஸ்யமாக
உள்ளது.

BalHanuman said...

உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதாக இருந்தால் எதற்காகப் பாராட்டிக் கொள்வீர்கள்?

BalHanuman said...

? குடும்ப அதிகார மையப் போட்டியில் கனிமொழி வீழ்ந்துவிட்டால்...?

? கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் தான் நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஜெயிலில் இருந்து வருகிறேன் என்று கனிமொழி கூறியிருக்கிறாரே?

dondu(#11168674346665545885) said...

@BalHanuman
பத்தாம் தேதிக்கான பதிவு ஃபுல் ஆகிவிட்டதால் உங்கள் கேள்விகள் 17-ஆம் தேதிக்கான வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன், டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது