10/20/2012

மொழிபெயர்ப்பாளர்கள் ஒத்துழைப்பதிலையாம், திருவாய் மலர்கிறார் சாரு

சாரு எழுதியதிலிருந்து சில வரிகள்:
என்னுடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி நான் அவ்வப்போது எழுதி வரும் புலம்பல் கட்டுரைகளைப் படித்து நீங்கள் சலிப்படைந்திருக்கலாம்.  அப்படி சலிப்படைந்திருந்தால் இந்த வார்த்தைக்கு மேல் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதை நான் மிகுந்த மன உளைச்சலில் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு மன உளைச்சலை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை.  எப்படியென்றால், மகாநதி என்ற சொல்லுக்கு உதாரணமாக இருக்கக் கூடிய Mekong நதி லாவோஸையும் தாய்லாந்தையும் பிரித்துக் கொண்டு ஓடுகிறது; ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்டது மெக்கோங்.  நான் தாய்லாந்துக் கரையில் நண்பரோடு அமர்ந்து கறுப்புத் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்;  அற்புதமான பேரமைதி கொண்டிருந்த காலை நேரம்.  பட்சிகளின் சப்தம் கூட எப்போதோதான் கேட்டுக் கொண்டிருந்தது.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகு கொண்ட அந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருக்கும் என் மொழிபெயர்ப்பாளர் நண்பரோடு கடும் விவாதம் செய்து கொண்டிருந்தேன்.  2013-ஆம் ஆண்டில் ஏஷியன் மேன் புக்கர் விருதுக்கு என் புத்தகம் ஒன்று அனுப்பப்படாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கத்திக் கொண்டிருந்தேன்.  24 மணி நேரம் கொண்ட உங்கள் ஒரு நாளில் எனக்காக ஒரு மணி நேரம் தினமும் செலவு செய்ய முடியாதா என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். இண்டர்நேஷனல் காலில் இருபது நிமிடம் பேசினேன்.  நண்பர் அலுப்புடன் “நேரில் வாருங்கள்; பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

ஆமாம் சாரு என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறார்? அதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை கேட்க வேண்டும்? மொழிபெயர்ப்பாளருக்கு என்ன தொகை தருவார்? முழுக்க முழுக்க ஓசியில்தான் எதிர்பார்க்கிறார் என்பது எனது துணிபு. இது பற்றி அவரிடம் நேரிடையாகவே கேட்டதற்கு அவர் மழுப்பலாகத்தன் பதிலளித்தார்.

நானும் பார்த்து விட்டேன். இப்படித்தான் எழுத்தாளர் சமுத்திரம் அவர்கள் என்னை அவரது அடுக்குமல்லி நாவலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அணுக, நான் எனது ரேட்டைக் கூறினேன். தான் வெறுமனே 5000 ரூபாய்தான் தர முடியும் என அவர் தெளிவகவே கூறினார். அதற்கு 4 பங்குக்கு மேல் எனது விலை இருக்கும். ஆகவே அதை நான் ரிஜெக்ட் செய்தேன்.

இவராவது பரவாயில்லை, 5000 ரூபாய் தருவதாகக் கூறினார். ஆனால் சாரு? அவர்தான் ஓசிகளுக்கு அலைபவர் ஆயிற்றே. அப்புறம் என்ன மயித்துக்கு தார்மீகக் கோபம் எல்லாம் பட வேண்டும்? இதைத்தான் அதிகாரப் இச்சை என்பார்கள்.

சாருவின் மொழி பெயர்ப்பாளர்களுக்கு எனது அனுதாபங்கள். அடிமாட்டு விலைக்கு க்றவை மாட்டை எதிர்பார்க்கும் இவர்களுக்கு இடமே தரலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன் . 

12 comments:

நிகழ்காலத்தில்... said...

நான் எழுதுறது மட்டும்தான் இலக்கியம். அத உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. இதற்காக
ஏன் தினமும் சில மணி நேரம் ஒதுக்கமுடியாது..?

ஒதுக்கித்தான் ஆகனும். இலவசமாத்தான் செய்யனும். பொண்டாட்டி புள்ளைங்க வேலைன்னு காரணம் சொல்லிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?

அப்ப நான் எலுதற இலக்கியம் என்னா ஆகிறது? காசு கேட்கப்படாது.
ஆனா கரீக்டா சீக்கிரமா பண்ணனும்.
இல்லைன்னா இப்படித்தான் வார்த்தை வாங்கனும்..

----------

Selvakumar said...

ஐயா... ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். சாரு அவரது தளத்தில் பேசுவது வணிகத்தைப் பற்றியல்ல. அவரது மொழி பெயர்ப்புத் தேவைகள் வணிகம் சார்ந்தவையுமல்ல. அவரது எழுத்து மகத்துவமானது என்ற கருத்துடன் வணிக நோக்கின்றி அவருக்கு உதவ நினைக்கும் நண்பர்களிடம்தான் அவர் இப்படி வேண்டுகோள் விடுக்கிறார். ) ... அவர் பிச்சை கேட்பது ரோட்டில் போவோர் வருவோர் அனைவரிடமும் அல்ல. அவரது எழுத்தில் தனக்கு தேவையான ஏதோ ஒன்று உள்ளது என்று நம்பும் அவரது வாசகர்களிடம் மட்டுமே. நீங்கள் ரசிக்கும், வாசித்து இன்புறும், பயன்பெறும் எழுத்தாளனுக்கு புத்தகத்தின் விலையையும் தாண்டி ஒரு வாசகன் செய்ய வேண்டிய உதவியாக, கடமையாக அவர் நினைப்பதை அவர் தளத்தில் பதிவிடுகிறார். தடி எடுத்தவன் தண்டல் காரன் என்பது போல ஆளாளுக்கு அவரைத் திட்டித் தீர்க்க அவசியமில்லை. உங்கள் புரிதல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இருப்பதால் தேவையின்றி விமரிசிக்க நேரிடுகிறது. அவரது கோரிக்கைகள் சரி, தவறு என்பதல்ல விஷயம். அதன் பின்புலம், அவர் உரையாடும் நபர்களுக்கும் அவருக்குமான உறவு என எதையும் கணக்கிடாமல் விமரிசத்தல் முறையல்ல. அவர் உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களிடமோ, எழுத்தாளனுக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து இலக்கியம் வளர்க்க நான் என்ன மறை கழண்டவனா என நினைக்கும் பிழைக்கத் தெரிந்த சாமர்த்திய சாலிகளிடமோ பேசுவதில்லை. நானும் இப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் என்பதையும், அவருக்கு ஒரு பைசா தரவும் நான் தயாரில்லை என்பதையும் நான் மறைக்க விரும்பவில்லை. அதே சமயம் கெட்டிக்காரத்தனத்துடன் அவரைப் பரிகசித்து இன்புறுவதும் சின்னத் தனமாக இருக்கிறது.

வால்பையன் said...

நித்தியானந்தாவின் ஆங்கில புத்தகத்தை சாரு தமிழில் மொழிபெயர்த்தகாக கேள்விப்பட்டுள்ளேன்!

சும்மாவா பண்ணியிருப்பாரு!?

வவ்வால் said...

தோண்டு அவர்களே,

நீங்கள் கேட்டது சரியான கேள்வி, ஆனால் அவர் கேட்டதோ பிச்சை,

//உங்கள் ஒரு நாளில் எனக்காக ஒரு மணி நேரம் தினமும் செலவு செய்ய முடியாதா என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். //

பிச்சை போட முடிந்தவன் தான் போடமுடியும் ,பிச்சை போடாதவர்களை திட்ட பிச்சை எடுப்பவனுக்கு உரிமை இல்லைனு மட்டும் அவருக்கு சொல்லிடுங்கோ :-))

dondu(#11168674346665545885) said...

@Selvakumar
மொழிஎயர்ப்பு என்பது எவ்வளவு உழைப்பை உட்கொண்டுள்ள சேவை என்பது உமக்குத் தெரியுமா?

மேலும் இப்பதிவு சருவுக்காக ஓசியில் வெலை செய்யும் பிரகிருதிகளில் சிலராவது இதைப் படிக்க வேண்டும் என்பதற்காகவும் போட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Arun Ambie said...

//ஆனால் சாரு? அவர்தான் ஓசிகளுக்கு அலைபவர் ஆயிற்றே. அப்புறம் என்ன மயித்துக்கு தார்மீகக் கோபம் எல்லாம் பட வேண்டும்?// தார்மீகக் கோபம் சும்மா உணர்ச்சி தானே. பட்டுவிட்டுப் போய்விடலாமே.. காசா பணமா? அப்படியே தார்மீகக் கோபம் தார்மீகக் கோபம் என்று காட்டியே கெட்ட வார்த்தையிலேயே எழுதி சீன் போட்டுக் கொள்ளலாம். இதெல்லாம் மிகமிகச் சமீபகால (அதாகப்பட்டது 21ஆம் நூற்றாண்டு) பெரிய லெவல் டமில் ரைட்டருக்கான குவாலிட்டீஸ்.

வருண் said...

***இதை நான் மிகுந்த மன உளைச்சலில் எழுதுகிறேன். இந்த அளவுக்கு மன உளைச்சலை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை.***

இதுபோல் உணர்ச்சிமிக்க வரிகளைக்கூட அடிமனதிலிருந்து சொல்லாமல், வெறும் உதட்டளவில் பேச/எழுத முடிகிற ஒரே ஆள் நம்ம "மஹான் சாருநிவேதிதா" அவர்கள்தான். :))))

ப.கந்தசாமி said...

அது யாருங்க சாரு? ஒரு ஆம்பிளை பேர வைக்க வக்கில்லை?

@Ganshere said...

/அதிகாரப் இச்சை /
:)

Ivan Yaar said...

சாரு ஒரு சுயநலவாதி. என்றும் தன்னை பற்றியே புகழ்ந்து கொண்டு இருப்பவர். அவருக்கு தேவை விளம்பரம் தான். உலகில் எல்லோரும் ஏதோ ஒன்றை பாராட்டுகிறோம் என்றால் அவர் அதை எதிர்ப்பார். மேலும் பலரை கெட்ட வார்த்தை கொண்டு திட்டுவதே அவரின் இயல்பாய் உள்ளது. தமிழில் எவ்வளோ நல்ல வார்த்தைகள் இருக்க கெட்ட வார்த்தைகளை கொண்டே பல கருத்துகள் சொல்வார். உலகே போற்றிய வழுக்கு எண் 18 / 9 படத்திற்கு இவர் கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். மேலும் அவர் தண்ணி அடித்தால் அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. ஒரு முறை facebook இல் ஒரு தமிழ் பெண்ணை ஆபாசமாய் கருத்து தெரிவித்து மாட்டி கொண்டார் . உலகில் அவர் மட்டும் தான் பெரிய எழுத்தாளர் என்ற தலை கணம் அவருக்கு.

saturn730 said...


தண்ணி அடிக்க காசு இருக்கும்.. பெரிய பெரிய நாய் வளர்க்க காசு இருக்கும் ஆனா வேல வாங்கின கூலி தர முடியாது.. வேலையெல்லாம் ஒசிலையே நடக்கணும்.. ப்ளூ க்ராஸ்-ல எத்தனை சின்ன நாய்ங்கள பாத்துகரதுக்கு ஆள் இல்லைன்னு விளம்பரம் பண்றாங்க.. அதுல ஒன்னு ரெண்டு வாங்கி வளக்கலாம் தானே.. ஆனா அப்புறம் அமிதாப்பும் நானும் மட்டுமே இந்த மாதிரி நாய் வெச்சிருக்கோம்னு பீத்திக்க முடியாது.. இந்த வெட்டி பகட்டெல்லாம் மூட்டை கட்டி வெச்சாலே மீதி எல்லாத்துக்கும் காசு இருக்கும்..

உசிலை விஜ‌ய‌ன் said...

சாரு உங்கள் பெயரை குறிப்பிடாமல் அவரது வலையில் பதிவிட்டு இருக்கிறார். அது உங்கள் மீதான கோபத்தினை வெளிப்படுத்தி இருக்கலாம், அது உங்கள் இருவருக்கமிடையான அந்தரங்கம் ஆகும். அதை அவர் மீற வில்லை ஆனால் நீங்கள் பட்டவர்த்தனமாக புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். தவறு செய்து விட்டீர்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது