கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (32 கேள்விகள் கேட்டவர்)1. முதல்வர் கருணாநிதி ,"என் கருத்தால் பிறர் மனதை புண்படுத்த விரும்பவில்லை"-உங்கள் விமர்சனம்?பதில்: நல்ல காமெடி.
2. ரஜினி, கமலுக்கு சிறந்த நடிகர் விருது-விருதுகள் பகிர்வின் உள்நோக்கம்?பதில்: எல்லாம் ஒரு சம்ச்சீராக்கும் செயல்தான். பல கலைஞர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை பற்றிக் கூறும்போது எம்.ஜி.ஆர். - சிவாஜி, கமல் - ரஜனி, விஜய் - அஜீத் என்று ஜோடி ஜோடியாக சேர்த்து அவர்களை தங்களுக்கு பிடிக்கும் என்று கூறிவிடுவார்கள். அப்போதுதானே ஏதேனும் சந்தர்ப்பம் சம்பந்தப்பட்ட நடிகர்களது கேம்பிலிருந்து கிடைக்கும்?
3. கோவை 9 வது உலகத் தமிழ் மாநாடு-கலைஞரின் திடீர் முடிவு -இலங்கை அரசியல் பிண்ணனி-ராகுல் விசிட்-திசைதிருப்பும் திருப்பணி-இதில் எது சரி?பதில்: ஒன்றுமே சரியில்லை. தன்னைத் துதிப்போருக்கு இன்னொரு வாய்ப்பு தரும் சீரிய நோக்கமே காரணம்.
4. இலங்கைத் தமிழர் படும் இன்னல்கள் பற்றி வரும் தகவல்கள்?பதில்: மனதை உருக வைக்கின்றன. ஆனால் அதே சமயம் இன்னும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றெல்லாம் தமாஷ் செய்து ஈழத்தமிழர்களுக்கு ஆப்பு வைக்கும்வேலையும் அவ்வப்போது நடப்பது கண்டிக்கத்தக்கது.
5. புஸ்வாணமாய் போன நடிகர் விஜயின் அரசியல் விஜயம்- காரணகர்த்தா யார்?பதில்: சரத்குமாருக்கு நேர்ந்த கதியைப் பார்த்து மிரண்டிருக்கலாமோ?
6. தமிழக தென்பகுதி காவலர் மாவீரனுக்கு டெல்லி கசக்குதாமே-இனி?பதில்: அது அவர் பாடு, அவர் குடும்பம் பாடு. நமக்கென்ன இதில் அக்கறை?
7. இந்தியாவின் கண்டுபிடிப்பு -நிலவில் நீர் -உங்கள் பாராட்டு விமர்சனம்?பதில்: இந்தியாவின் பெருமைக்கு அணி சேர்க்கும் செய்தி இது.
8. ராஜராஜ சோழன் புகழ் பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி பற்றி?பதில்: இவர்தானே “குழந்தையும் தெய்வமும்” படத்தில் ஜமுனாவின் அன்னையாக வந்தது? எனக்கு பிடித்த நடிகை. இவர் மல்யுத்தவீரர் அஜித்சிங்கை மணந்தவர் என நினைக்கிறேன். அல்லது அது ஜி.வரலட்சுமியா?
9. சீன ராணுவ உதவியுடன் இலங்கை ராணுவத்தின் தொந்திரவு தமிழக மீனவ்ர்களுக்கு-இது எதில் கொண்டு போய் விடும்?பதில்: இம்மாதிரி செய்தி ஏதும் நான் படித்ததாக நினைவில்லையே? சுட்டி ஏதேனும்?
10. சமீபத்தில் சிவபத அடைந்த பிரபல எழுத்தாளர் தென்கச்சி கோ சுவாமிநாதனை சந்தித்து உள்ளீர்களா?பதில்: இல்லை.
11. கறுப்புப்பண முதலைகள் பற்றிய விக்ரமின் ‘கந்தசாமி’ படம் எப்படி?பதில்: இந்தியன் படத்தைப் பார்க்க பிளாக்கில் டிக்கெட் எல்லாம் விற்று அதன் காரணமாக படத்தை சாடியவர்களுக்கு இப்படத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாது போயிற்று.
12. தொலை தொடர்புத்துறை சாதனையாளர் தயாநிதிமாறன் ஜவுளித்துறையிலும் சாதிப்பாரா?பதில்: அதில் சாதிக்கிறாரோ இல்லையோ, தன் மனைவிக்காக இவரே தனியாக ஜவுளிக்கடைக்குப் போய் புடவை செலக்ட் செய்து மனைவியிடமிருந்து இடிவாங்காமல் இருந்தால்தான் இவர் ஜெயித்ததாக ஒத்துக் கொள்வேன்.
13. சன் டீவி-கலைஞர் டீவி போட்டி தொடர்வது போலுள்ளதே?பதில்: போட்டியா, யார் சொன்னது? சன் டீவியை கலைஞர் காப்பி அடிப்பது தொடர்கிறது என்று வேண்டுமானால் கூறுங்கள். அதை விடுத்து போட்டி எனக் கூறுவது அவதூறானது.
14. முதலில் ஜஸ்வந்த் சிங், பின் அருண்ஷோரி - அடுத்து?பதில்: பா.ஜ.க. சுதாரித்துக் கொள்ளவிலை என்றால் நஷ்டம் அதற்குத்தான்.
15. எல்லா டீவிகளும் கமலின் ஐம்பது வருடத் திரையுலகச் சேவை பற்றித் கலக்குகின்றனவே?பதில்: கலக்க வேண்டிய விஷயம்தானே.
16. ஒரு கலக்கு கல்க்கிய பன்றிக் காய்ச்சல்-அமெரிக்காவின் சதியா?பதில்: கண்டிப்பாக இருக்கவியலாது. இதெல்லாம் ஒருவித சுழற்சியில் வருகின்றன. எல்லா வகைக் கிருமிகளும் காற்றில் உள்ளன. சிலவற்றின் எண்ணிக்கை ஒரு க்ரிட்டிகல் அளவைத் தாண்டியதும், கூடவே அதன் பரவலுக்கு தோதான சீதோஷ்ணநிலையும் இருந்தால், மேலும் வேறுகாரணிகளுக்கான ஷரத்துகளும் பூர்த்தி செய்யப்பட்டால் அது பரவ ஏதுவாகிறது. அதுதான் இந்த விஷயத்திலும் நடந்துள்ளது.
17. மு.க. அழகிரி-ஸ்டாலின் -தமிழரசு இவர்களின் சகோதர உறவு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளதா?பதில்: பஞ்ச பாண்டவர்களும் கௌரவர்களும் சகோதரர்களே. போதுமா?
18. 2 வழிகள் கோபத்தை அடக்க?பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.
19.
2 வழிகள் ஆனந்தத்தை அதிகரிக்க?பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.
20. 2 வழிகள் வாழ்வில் வெற்றி அடைய?பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.
21. 2 வழிகள் எதிரிகளை சமாளிக்க?பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.
22. 2 வழிகள் துரோகிகளை எதிர் கொள்ள?பதில்: உன்னையே நீ அறிவாய், எதிராளியையும் அறிவாய்.
(பின்குறிப்பு: ஒரே பதில் பல கேள்விகளுக்கும் ஏற்றதாய் இருந்தால் வேறு என்னதான் செய்வதாம்)
23. விலைவாசி ஏற்றத்தால் அல்லல்படும் சாதரண மக்களின் நிலை?பதில்: செலவுக்கேற்ப வருவாயை பெருக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. அது எங்கனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அந்த வழிகளின் சாதக-பாதகங்களுக்கும் அவரவரே பொறுப்பு.
24. வாக்குபதிவு எந்திரம் பற்றிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்னாச்சு?பதில்: அந்த எதிர்ப்பு குழந்தைத்தனமானது. அந்த ஏற்பாட்டிற்கு மாற்றாக அக்கட்சிகள் கூறியது பொறுப்பற்றத்தனத்தின் உச்சக்கட்டம்.
25. நல்லச் செயல்களுக்கும் செய்த நன்றிகளுக்கும் மதிப்பு குறைகிறதே?பதில்: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு என்னும் ரேஞ்சில் வள்ளுவரே எழுதியதிலிருந்து இதெல்லாம் ஒன்றும் புதிதில்லை எனத் தெரியவில்லையா?
26. விஜயதசமி அன்று ஒரு கரும்பு விலை 50 ரூபாய்-இனிப்பும் கசக்குமோ?பதில்: கரும்பு கடிக்க முடிகிறது உங்களுக்கு? அது மட்டுமல்ல சர்க்கரை தொல்லை வேறு (எனக்கில்லைதான் என இருந்தாலும்). நான் கரும்பு ஒரு துண்டுதான் பொங்கல் பானையில் கட்ட வாங்குவேன். அவ்வளவே. ஆகவே கரும்புவிலை என்னைப் பொருத்தவரை இர்ரெலவண்ட்தான்.
27. அதிமுகவை வி.காந்த் கட்சி முந்துகிறதா?பதில்: அப்படித்தான் இப்போதைக்கு தோன்றுகிறது.
28. கமலின் அரசியல் பிரவேசம் நடைபெற வாய்ப்புள்ளதா?(அவர் அறிவு ஜீவி)பதில்: கூடவே புத்திசாலியும் கூட. அரசியலுக்கெல்லாம் அவர் வருவார் எனத் தோன்றவில்லை.
29. கமல் இயக்கத்தில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் -இதற்கு உவமையாய் எதைச் சொல்வீர்கள்?பதில்: பிரேக் வண்டியோட்டுகிறது, மோட்டார் பிரேக் அடிக்கிறது என்பது போன்ற எண்ணங்கள் வருகின்றன.
30. இயக்குனர் இமயம் என்ன செய்கிறார்?பதில்: பாலச்சந்தர்தானே, மறுபடியும் நாடகம் எடுக்கப் போவதாகக் கேள்வி.
31. உங்களை கவர்ந்த இளம் திரைப்பட இயக்குனர் யார்?பதில்: அப்படியென்று என்னைப் பொருத்தவரை யாரும் கிடையாது
32. இதுவரை மொத்தம் எத்தனை கேள்விகள் உங்கள் பதிவில் கேட்கப்படுள்ளது?பதில்: யார் இதையெல்லாம் உட்கார்ந்து எண்ணுவதாம்? ஆளை விடுங்கள்/
தமிழ் ஓவியா1. ஓடிப்போன சங்கராச்சாரியார் or ஓடிப்போகாமல் இங்கேயே ஆபாசபடம் பார்த்த்து அக்கிரகார அம்மணிகளை செட்டப் செய்த சின்ன (வீடு) சங்கராச்சாரியார் - இவர்களில் யார் சிறந்த மாமாப் பயல்?பதில்: முதலில் மாமாப்பயல் என்ற சொல்லின் விளக்கத்தில் தெளிவுடன் இருப்பது அவசியம். மாமாப் பயல் என்பவன் மற்றவர்கள் அனுபவிப்பதற்காக பெண்களை ஏற்பாடு செய்பவன். பெரிய அல்லது சின்ன சங்கராச்சாரியர்கள் மேலே வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அதுவல்ல. ஆகவே அவர்களில் யாருமே மாமாப்பயல் என அவர்தம் விரோதிகள்கூட சொல்லிட இயலாது.
மேலும்,
சொந்த மனைவியையே ஊருக்கு வந்துள்ள புது தாசி என தம் நண்பர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை விட்டு அந்த உத்தமப் பெண் நாகம்மையாரை கேலி செய்வித்து, கோவிலுக்கு வந்த மற்ற பெண்டிரை பயம்காட்டி, அவரது மனதையும் நோவடித்த ஈ.வே. ரா. அவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?
இதுதான் போதாது என்றால், ஒரு முறை மனைவிகளும் கள்ள புருஷன் வைத்துக் கொள்ளலாம் என ஈ.வே.ரா. அவர்கள் ஒரு கூட்டத்தில் கூற,
நாகம்மையிடம் தான் செல்லலாமா என ஒருவர் கூட்டத்தில் கேட்டு வைக்க, “நாம் இருவருமே நாகம்மையிடம் இது சம்பந்தமாக பேசுவோம், அவர் கொடுப்பதை வாங்கி வருவோம்” என்று பொருள்பட திருவாய் மலர்ந்தருளினது பற்றியும் என்ன கூறுவீர்கள்?
எம்.கண்ணன்1. வரலாறு, புவியியல் என முன்பெல்லாம் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் தனியாக பரீட்சைகள் இருந்தது. தற்போது
சமூக அறிவியல் (Social Science) என ஒரே பரீட்சையாகவும் வரலாறுக்கு முக்கியத்துவத்தை குறைத்துவிட்டனரா? சேரர், சோழர், பாண்டியர், அசோகர், பாபர், அக்பர் என தற்போது சிறார்கள் படிப்பதில்லையா?
பதில்: தெரியவில்லையே. நான் படிக்கும்போது கூட சமூக அறிவியல் என்றுதான் இருந்தது. சரித்திரம், பூகோளம் இரண்டும் அதில் அடங்கின. நான் பத்தாம் வகுப்பில் பொறியியல் சிறப்புப் பாடமாக எடுத்ததில் சமூக அறிவியலில் பெறும் மதிப்பெண்கள் பள்ளியிறுதி வகுப்பு தேர்வில் கணக்கிடப்படாது எனக்கூறிவிட்டனர். இதில் சோகம் என்னவென்றால், அதை வெளிப்படையாக நான் 11-ஆம் வகுப்புக்கான தேர்வுகளை முடித்தபின்னால்தான் கூறினார்கள். அது தெரியாது மெனக்கெட்டு நான் படித்து 61% வாங்கியிருந்தேன்.
நீங்கள் சொன்ன சுட்டி ரொம்பவும் ஜெனரலாக இருக்கிறது. பாட மாடல்கள் எதையும் பார்க்க இயலவில்லை. ஒரு வேளை நான் தவறுதலாக அந்தச் சுட்டியை கையாண்டேனா எனத் தெரியவில்லை. இங்கு இன்னொரு விஷயம். பாடநூல்களில் சரித்திர சம்பவங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து நான்
இம்சை அரசன் தூண்டிய நினைவுகள் என்னும் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன்.
“நான் சமீபத்தில் எழுபதுகளில் பம்பாயில் இருந்தபோது எனது நண்பன் ஸ்ரீனிவாசமூர்த்தி கூறியது நினைவுக்கு வருகிறது. அவன் ஷிமோகாவைச் சேர்ந்தவன். "கர்னாடகாவில் உள்ள பள்ளிகளில் இப்போது கூட (எழுபதுகளில்) சரித்திரப் பாடங்களில் புலிகேசிதான் ஹீரோ. வாதாபி கொண்டான் நரசிம்மவர்ம பல்லவன் கொடுங்கோல் மன்னனாகவே சித்தரிக்கப்படுகிறார்." எழுபதுகளில் உள்ள நிலைமைதான் தற்போதும் என்று உறுதியாக நினைக்கிறேன்.
இதே போல பழைய சரித்திரங்கள் இன்னும் நமது தற்கால நம்பிக்கைகளின் மீது ஆட்சி செலுத்துகின்றன என்பதையும் பார்க்கிறேன். உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.
இன்னொரு உதாரணம் "தர்பண் (Dharpan)" என்ற தொடரில் காண்பித்த ஒரு கதையே. (பை தி வே, இந்த தர்பண் சமீபத்தில் எண்பதுகளில் வந்த ஒரு அருமையான தொலைக்காட்சித் தொடர். அது பற்றி பிறகு, வேறொரு பதிவில்). அதில் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் வந்த சிறந்த சிறுகதைகள் படமாக்கப்பட்டன. அதில் ஒரு கதை பற்றி இங்கே கூறுவேன்.
அது ஒரு ஒரியமொழிக்கதை. புவனேஸ்வரில் ஓர் அலுவலகத்தில் இரண்டு நண்பர்கள். ஒருவர் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர், இன்னொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இருவரும் ஒரிஸ்ஸாக்காரர் வீட்டில். ஒரிஸ்ஸாக்காரர் கிருஷ்ணதேவராயரை பற்றி இகழ்ச்சியாகப் பேசி தங்கள் பழங்காலத்து கலிங்கதேசத்து மன்னரை உயர்த்திப் பேச சீறி எழுகிறார் ஆந்திராக்காரர். பேச்சு தடித்து விரோதமாகப் போகும் நிலையில், ஒரிஸ்ஸாக்காரரின் மனைவி பேச்சில் குறுக்கிடுகிறார்.
அவர் கேட்கிறார்: "இந்த விஷயங்களெல்லாம் நடந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. உங்கள் வாதத்தில் கிருஷ்ணதேவராயர் அல்லது ஒரிய மன்னர்தான் சிறந்தவர் என்று ஸ்தாபிப்பதால் உங்களில் ஒருவருக்கேனும் ஏதேனும் பிரயோசனம் உண்டா? இப்போதைக்கு பே கமிஷன் அரியர்ஸை கிருஷ்ணதேவராயரோ, கிருஷ்ணராஜுவோ வாங்கித்தர இயலுமோ? என்ன இது சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு." (கடைசி வாக்கியத்தை நிச்சயமாகவே வடிவேலு பாணியில் அவர் கூறவில்லை என்பதை நான் இங்கு கூறிவைக்கிறேன்). இரு நண்பர்களும் சிரிக்க, கதை சுமுகமாக முடிகிறது.
இம்மாதிரித்தான் உள்ளூர் மக்களின் செண்டிமெண்ட்டில் சரித்திரம் தப்ப இயலவில்லை”.2. கோயில் கருவறைக்குள் குஜால் என்றெல்லாம் ஜூவி கவர் ஸ்டோரி போடுகிறதே? அதுவும் பலான சிடி படங்கள் எல்லாம் காட்டி? இதுமாதிரி (அல்லது பாதிரியாரின் செக்ஸ் சம்பந்தப்பட்ட கட்டுரைகள்) செய்திகள் அதிகம் வெளியாவதால்தான் மக்களும் பலவித செக்ஸ் வக்கிரங்களுக்கு தூண்டப்படுகிறார்களா?
பதில்: சம்பந்தப்பட்ட குருக்கள் கடும் தண்டனைக்கு உரியவர். அதில் எந்த சமாதானமும் கூடாது. பாதிரியார்கள் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. இக்கட்டுரைகள் மக்களின் விழிப்புணர்வை தூண்டினால் சந்தோஷமே.
3. வாத்தியார் சுப்பையா சார், ஸ்வாமி ஓம்கார், சாரு நிவேதிதா (நித்யானந்தர்) - யாருடைய ஜோதிட / ஆன்மீக பதிவுகள் சுவாரசியமாக இருக்கிறது (உங்களைப் பொறுத்தவரை) ? யாருடைய எழுத்து நல்ல நடை? படிக்க சுவாரசியம்? (விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் / இல்லாதிருக்கலாம் - அது வேறு)? யாருடைய பதிவுகளில் இருந்து பல நல்ல விஷயங்கள் தெரிய வருகிறது?பதில்: சாரு நிவேதிதா என்னைப் பொருத்தவரை அன்செலக்டட். வாத்தியார் சுப்பையா, ஓம்கார் ஸ்வாமிகள் டபுள் ஓக்கே.
4. மகாராஷ்டிர தேர்தலில் அதிமுக 2 இடங்களில் போட்டியிடுகிறதே? தாராவி / மாதுங்கா / சயான் தமிழர்களை நம்பித்தானே? ஜெயலலிதாவோ இன்னும் கொடநாட்டை விட்டே வர மனமில்லை. இப்படி இருக்கையில் மும்பையில் போட்டியிட்டு என்ன ஆகப் போகிறது ? அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் எதற்காக அதிமுகவுக்கு ஓட்டுப் போடவேண்டும்? ஒரு அவசரம் உதவி என்றால் அவர்களுக்கு உதவப் போவது லோக்கல் கட்சிகள்தானே?பதில்: வெற்றி வாய்ப்பை கணிக்காமலா அவர்கள் இருந்திருப்பார்கள்? மற்றப்படி தாராவியில் தமிழர் எம்.எல்.ஏ.வாக இருப்பதே நல்லது. அவர்களாலும் உள்ளூர் மக்களுக்கு உதவ முடியும்.
5. மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா, பாஜக ஜெயித்து உத்தவ் தாக்கரே முதல்வராகிவிட்டால் - ராஜ் தாக்கரே என்ன செய்வார்? சென்றவாரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்நாப் கோஸ்வாமி கேட்ட ஆங்கிலக் கேள்விகளுக்கு முழுவதும் மராட்டியில் பதிலளித்த (ஆங்கிலம் தெரிந்திருந்தும்) ராஜ் தாக்கரே போன்ற மொழி வெறியர்கள் ஏதாவது ஒரு வகையில் மும்பை சாமானியர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனரே? மக்கள் பாடம் புகட்டுவார்களா? இதில் மருமான் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவின் ஜின்னா என பால் தாக்கரே அறிவித்துள்ளாரே ? பிள்ளைப்பாசம் இந்தளவுக்கா ?பதில்: ராஜ் தாக்கரே நிச்சயம் சிவசேனாவுக்கு தலைவலிதான். அவரை எதிர்க்க சிவசேனாவுக்கு அதுவே போதிய காரணமே.
ஆங்கிலம் தெரிந்திருந்தும் மராட்டியிலேயே பேசுவேன் எனக் கூறுவது இந்த காண்டக்ஸ்டில் அசட்டுத்தனமானது.
6. சீனாவில் மாவோவின் பேரன் ராணுவத்தில் முக்கிய பதவியிலும், அரசியல் கமிட்டியிலும் முக்கிய பதவிக்கு வந்திருப்பது - சீனாவிலும் வாரிசு அரசியல் என்பதைத் தானே காட்டுகிறது ?
http://beta.thehindu.com/news/international/article27209.eceபதில்: வாரிசு அரசியல் எங்குதான் இல்லை? சீனாவில் இருப்பது குறித்து ஏன் வியப்படைய வேண்டும்?
7. தற்போது சாதாரண போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர் போன்றவற்றின் விலை என்ன? சமீபத்தில் யாருக்கேனும் கார்டில் கடிதம் அனுப்பியதுண்டா?பதில்: போஸ்ட் கார்ட் 50 பைசா, ரிப்ளை பெய்ட் 1.00 ரூபாய். இன்லேண்ட் லெட்டர் 2.50 ரூபாய், கவர் 5.00 ரூபாய் (முதல் 50 கிராம்களுக்கு, பிறகு ஒவ்வொரு 50 கிராம்களுக்கும் 3 ரூபாய்). கடைசியாக பதிவுத் தபால்தான் அனுப்பினேன், அதன் விலை முதல் 50 கிராம்களுக்கு 22 ரூபாய், கவர் நீங்கள் கொடுத்தால். இல்லாவிடில் 22.50 ரூபாய். தில்லியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் இன்லேண்ட் லெட்டர்கள் பத்துக்கு குறையாமல் வாடிக்கையாளர்களை பிடிக்க அனுப்பியிருக்கிறேன். அப்போது கணினி இல்லை, மின்னஞ்சலும் இல்லை. இங்கு வந்ததும் லெட்டர் அனுப்புவது சுத்தமாக நின்று போயிற்று. உள்ளூர் தபாலுக்கு கூரியர்கள் 9 ரூபாய் ஆகவே உள்ளூருக்கு அது உத்தமம். அதுவே தில்லி போன்ற இடங்களுக்கு 50 ரூபாய்கள். அங்கு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் லாபகரமானது.
8. ஐடிபிஎல் போன்றே ஏர் இண்டியாவையுவும் மறையவிட வேண்டும் என்றெல்லாம் கட்டுரையாளர்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன? ஐடிபிஎல் என்ன செய்திருக்கவேண்டும் ? ஏர் இண்டியா என்ன செய்யவேண்டும்?பதில்: ஏர் இண்டியா இழுத்து மூடப்பட வேண்டும். ஐ.டி.பி.எல் பற்றி நான்
ஒரு பதிவில் எழுதியது எல்லா அரசு கம்பெனிகளுக்கும் பொருந்தும். அதிலிருந்து சிலவரிகள்:
“ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி மூலம் ஒன்று கற்கலாம். அதாவது ஒரு நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்று. அதற்காக ஐ.டி.பி.எல்லின் உயர் அதிகாரிகளை குற்றம் சொல்வதாக நினைத்து விடாதீர்கள். அதிகாரிகளில் பலர் மிகத் திறமைசாலிகள். ஆனால் ஐ.டி.பி.எல்லை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மினிஸ்ட்ரியின் செயல்கள் அது நல்ல முறையில் செயல்பட முடியாமல் தடுத்துவிட்டது.
உதாரணத்துக்கு ஐ.டி.பி.எல்லுக்கு சொந்தமான கார்களில் ஒன்று மினிஸ்ட்ரி அதிகாரிகள் வசமே இருந்தது. அதன் உபயோகத்தின் மேல் ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அதன் செலவுகள் மட்டும் ஐ.டி.பி.எல் தலையில். அதன் ஓட்டுனர் ஐ.டி.பி.எல்லில் சம்பளம் பெற்றார். அது மட்டுமன்றி ஐ.டி.பி.எல்லில் வேலை செய்த எழுத்தர்கள் நான்கைந்து பேர் மினிஸ்ட்ரியிலேயே நிறுத்திக் கொள்ளப்பட்டனர். அவர்கள் சம்பளமும் ஐ.டி.பி.எல். பொறுப்பிலேயே. அதே போல மினிஸ்ட்ரியில் இருந்த ஜாயிண்ட் செக்ரெடரி வீட்டில் வாஷிங்க் மெஷின் வேலை செய்யவில்லையென்றால் எலெக்ட்ரிஷியனை அழைத்துக் கொண்டு நான் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். நாங்கள் சென்ற காரை அந்த அதிகாரியின் வீட்டினர் தங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கறிகாய் வாங்க எடுத்து சென்றனர், ஏனெனில் அங்கு கிலோவுக்கு அரை ரூபாய் மலிவாம். எங்கு அடித்துக் கொள்வது என்று தெரியவில்லை.
அல்ஜீரிய வேலையைப் பற்றியும் எழுதியிருந்தேன். தோல் பதனிடும் தொழிற்சாலையில் வரும் கழிவு நீரை சுத்தம் செய்யும் ப்ளாண்டை நிறுவும் வேலைக்கு ஒப்பந்தப் புள்ளிகள் தருமாறு ஐ.டி.பி.எல். என்னும மருந்துக் கம்பெனிக்கு அரசியல் ரீதியான நிர்ப்பந்தம். நல்ல வேளையாக அல்ஜீரியாவிலேயே எதோ அரசு கவிழ்ப்பு நடந்து எங்களுக்கு அந்த வேலை கிடைக்கவில்லையோ பிழைத்தோமோ. ஆனால் அதற்குள் ஒரு கணிசமான தொகையும் செலவழிக்கப்பட்டிருந்தது. அத்தனையும் எள்ளுதான்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல 1980களின் தொடக்கத்திலேயே ஐ.டி.பி.எல்லின் சரிவு நிதானமாக ஆரம்பித்தது. அதெல்லாம் இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. நிலைமை மோசம் என்பதை நான் 1990-ல் ஐ.டி.பி.எல். ரிஷிகேஷுக்கு துபாஷி வேலையாய் சென்றபோது உணர்ந்தேன். அதற்கான சில அறிகுறிகள். டௌன்ஷிப்பில் விளையாடிய குழந்தைகள் பெரும்பான்மையினர் வேலை செய்பவர்களின் குழந்தைகள் அல்ல, பேரக் குழந்தைகள். அதாவது வேலை செய்பவர்களின் சராசரி வயது 40-க்கும் மேல். புது ஆள் சேர்ப்பு பல வருடங்களாக நடைபெறாததன் விளைவுதான் இது. வருடா வருடம் பலர் ஓய்வு பெற்று சென்றனர். ஆனால் அதனால் விளைந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. தெரு விளக்குகளில் பாதிக்கு மேல் பல்புகள் இல்லை. தெருக்களின் பராமரிப்பும் மோசம். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் கூடி நின்று வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலைக்கு வந்த பிரெஞ்சுக்காரர் கேட்ட அளவுக்கு மூலப் பொருள்கள் கிடைப்பதில் தாமதம். இன்னும் கூறிக் கொண்டே போகலாம்.
1992-ல் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. டைனமிக்காக வேலை செய்யக் கூடியவர்களில் முக்கால்வாசிப்பேர் விருப்ப ஓய்வு பெற்று சென்றனர். தினசரி உற்பத்திக்கு தேவையான பணம் கிடைப்பதில் சுணக்கம். க்ரெடிட்டில் மருந்துப் பொருட்கள் பெற்ற அரசு மருத்துவமனைகள் பில்கள் செட்டில் செய்வதில் ஆமை வேகம் காட்டினர். இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு கொடுத்துவந்த பட்ஜெட் ஆதரவு சுருங்கிப் போயிற்று. ஒரு நிதி ஆண்டில் 19 கோடி ரூபாய் அரசு ஒதுக்க, அது போதாது என்று தலைமை நிர்வாகி பெரிய நோட் போட்டார், அதை பரிசீலித்த அமைச்சு அதிகாரிகள் விழித்துக் கொண்டு உண்மையில் ஒதுக்கியது 19 கோடி அல்ல 19 லட்சமே என்று கண்டுபிடித்து எங்கள் தலைமை அதிகாரியை நோக அடித்தனர் என்றெல்லாம் வதந்திகள் பரவின. 1993 வாக்கில் இன்னொரு செய்தி அடிபட்டது. அதாவது அந்த ஆண்டு முடிவதற்குள் ரிஷிகேஷிலிருந்து கணிசமான மின்னியல் அதிகாரிகள் ஓய்வு பெறப்போவதால் எங்களில் அனேகம்பேரை அந்த ப்ளாண்டுக்கு மாற்றப் போவதாக அறிந்தேன். அப்போதுதான் நான் விழித்துக் கொண்டு என்னுடைய விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். நல்ல வேளையாக ரிலீவும் செய்யப்பட்டேன். சிறிது தாமதித்திருந்தாலும் காரியம் கெட்டிருக்கும். ஏனெனில் எனக்கப்புறம் என் துறையில் வேலை செய்தவர்களுக்கு விருப்ப ஓய்வு மறுக்கப்பட்டது.
இவ்வளவு ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி எனக்கு மனச் சோர்வை ஏற்படுத்துகிறது”.
9. பா.ரா தவிர எல்லா எழுத்தாளர்களும் பின்னூட்டப் பெட்டி வைக்காமல் கடிதப் போக்குவரத்தையே வைத்து கடிதங்களையும் பதிவுகளை வெளியிட்டு பதிவு எண்ணிக்கை அதிகரித்துக் கொள்கிறார்களே?பதில்: அவர்களில் ஜெயமோகனது பதிவுக்கு வரும் ஹிட்ஸ்கள் அபாரம்.
10. காந்திஜி, லதா மங்கேஷ்கர் போன்ற பலர் தமிழில் எழுதவும் தெரிந்து வைத்திருந்தார்களே (விகடன் பொக்கிஷம்) - தமிழ் மீது அவர்களுக்கு என்ன அப்படியொரு பாசம்?? (அப்பாடா காந்தி பிறந்த நாள், லதா 80 இரண்டையும் சேர்த்து கனெக்ட் பண்ணியாகிவிட்டது)பதில்: சரியாகப் பாருங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் எழுதியிருக்கக் கூடும். அப்படியொன்றும் தமிழ் மீது மட்டும் என்ன பற்று வந்துவிடுமாம்? வேறு கருத்துகள் இல்லை.
சுதாகர்1. டான் புரொனின் புதிய படைப்பான, The Lost Symbol, படித்தீர்களா? அல்லது படிக்க வேண்டுமென எண்ணம் உள்ளதா?பதில்: டான் புரோனின் ஒரு புத்தகம் The Da Vinci Code வாங்கினேன், இன்னும் படிக்க முடியவில்லை. எனக்கு பிடிக்கவில்லை. அதன் ஃபிலிம் கூட அரசில் தடை செய்தார்கள்.
2. இந்திய விமான நிறுவன ஊழியர்கள் வரிசையாக வேலை நிறுத்தம் செய்கிறார்களே, அவர்கள் கோரிக்கை சரியா (அ) அவர்களை கட்டுப்படுத்த முடியாதா?பதில்: இவர்களுக்கெல்லாம் மார்கரெட் தாச்சர்தான் சரி.
சவகிருஷ்ணா1. சிட்டுகுருவி லேகியம் ருசித்துண்டா?பதில்: இல்லை, எனக்கு அதன் தேவை ஏற்படவில்லை. அது இல்லாமலேயே செயல்பாடு அமர்க்களமாக இருந்தது.
கேடியார்1. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சீனா வர சீன அரசு விசா தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறதே, உங்கள் கருத்து என்ன?பதில்: விஷமத்தனமான்ச் செயல். தேசத்துரோகத்தனமாக சீனாவை அடிவருடும் இந்தியக் கம்யூனிஸ்டுகள் இதற்கு என்ன கூறுவார்களாம்?
கேடி/பேடி கண்ணன்1.மத்தியப் பல்கலைகழகம் திருவாரூரில் அமைவதால் என்ன நன்மை? அந்த கல்லூரியில் என்ன பாடங்கள் சொல்லி தருவார்கள்.பதில்: திருவாரூர் தொகுதி முன்னேறும். முதல்வர் குடும்பமும் முன்னேறும். அவ்வளவே.
2. இம்முறை ஏன் பதிவர் சந்திப்பு பதிவு போடவில்லை? பதில்: எனது கார் அங்கு போய் சேரும் முன்னாலேயே நல்ல மழை. பதிவர்கள் மரத்தடியில் ஒண்டிக் கொண்டிருந்தனர். கொட்டும் மழையில் சமுத்திரக் கரையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டேன். திரும்பி வரும்போது எல்லோரும் டீக்கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். கைவசம் நோட்புக் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே நோ ரிகார்ட்ஸ். நோ பதிவு.
மணிGiven a choice where would you like to live among these three places 1. Munich 2. Thenthirupperai 3. Triplicane பதில்: திருவல்லிக்கேணிதான் அதில் என்ன சந்தேகம்?
பிருகு1. சார் அப்படியே இதற்குமொரு பதில் சொல்லிவிடுங்கள்!! வீட்டில் மகாபாரதம் புத்தகத்தைப் படிக்ககூடாது என்கிறார்களே? எந்தளவுக்கு உண்மை. நான் இரண்டு முறை படித்த போதும் விரும்பத்தகாத அதிர்ச்சி செய்தி வந்தது. எனக்கும் அது சரியோ என்று தோன்றி விட்டது. மகாபாரதம் வீட்டில் படிக்கலாமா, கூடாதா?பதில்: பாரதம் படித்தால் கலகம் வரும் என்பார்கள். பகவத் கீதையையும் பாராயணம் செய்யகூடாது என்பார்கள். கடவுள் மிகவும் சோதிப்பார் எனக் கேள்வி.
மகாபாரத நிகழ்ச்சிகள் பல எதிர்மறையான சிந்தனைகளை தூண்டுபவையாக சிலரால் பார்க்கப் படுகின்றன.
ரமணாசுவிஸ்வங்கி நிர்வாகம் மத்திய அரசு விண்ணபித்தால் இந்திய பகாசுரக் கொள்ளையர்கள் கள்ளத்தனமாய் சேர்த்து வத்துள்ள 70 லட்சம் கோடிகள்(வல்லான் பொருள் குவிப்பு அல்ல இது- வழிப்பறி,மொள்ள மாறித்தனம்,மக்களின் உழைப்பை உறிஞ்சிய அட்டைக் கூட்டம், வரிஏய்ப்பு வல்லூறுகள்)பற்றிய தகவல் தரத்தயார் என் அறிவித்துள்ளதே!
1. என்ன நடக்கும்?பதில்: ஒன்றும் நடக்காது. நாசர் பதவிக்கு வந்ததும் ஸ்விஸ் வங்கிகளை இவ்வாறு வற்புறுத்த, அந்த அரசும் எகிப்தின் அத்தனை டிபாசிட்காரர்கள் பெயரையும் பகிரங்கமாக அறிவிக்கப் போவதாக மிரட்டல் விட நாசர் பின்வாங்கினார். என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
2. இதுவும் இன்னொரு கீரி-பாம்பு சணடை காட்டுவேன் என சொல்லி 100 ஆண்டுகளாய் வேடிக்க பார்க்க கூடும் பாமர மக்களை ஏமாற்றும் குறளி/மோடி வித்தையா?பதில்: ஆம்.
3. இந்த சுநலமிகளுக்கு தெய்வ தண்டனையாவது கிடைக்குமா? (அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்)பதில்: பலருக்கு தண்டனை கிடைத்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அதை ரொம்பவுமே ரகசியமாக செய்ய, அவர்கள் திடீரென இறந்ததும் வாரிசுதாரர்களுக்கு அக்கணக்கு இருந்தது கூடத் தெரியாது போன நிகழ்வுகள் உண்டு. அதுதான் தண்டனை என வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
4. இவர்கள் அநியாயமாய் சேர்த்த அட்ட கருப்பு பணம் இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கு உதவமால் போக என்ன நடந்தால் நல்லது?பதில்: மேலே உள்ள பதிலைப் பாருங்கள்.
5. வால் பையனின் கருத்து இதில் என்னவாயிருக்கும்?பதில்: இன்று வியாழன் அல்லது நாளை வெள்ளியன்று அவர் பதில் தருவார். நானும் அதைப் பார்க்கும் ஆவலில் உள்ளேன்.
கிருஷ்ணகுமார்1.Who is more dengerous to World peace u.s.a or china? why?பதில்: சீனாதான். ஜனநாயக நாடான அமெரிக்காவில் இருக்கும் checks and balances அங்கு இல்லாததே முக்கியக்ஜ் காரணம்.
2.Female population always less than male population reason?பதில்: பெண் குழந்தை எனத் தெரிந்தால் கருக்கலைப்பு செய்தல், பெண் குழந்தைகளை சரியாக பராமரிக்காது அவர்களை சாக விடுதல்
3.There is H2O in the moon. will you want to go & live there?பதில்: எனக்கு இங்கு கிடைக்கும் பாலாற்றுத் தன்ணீரே போதும்.
4. tell does LOVE needs SACRIFICE?பதில்: ஆம், ஆனால் அது இரு தரப்பிலிருந்தும் வருதல் அவசியம்.
5. Does your childhood deeds still haunt you ?பதில்: அப்படியென்று சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.
ராகவ்1. Dondu Sir, from your point of view, could you explain more on
this topicபதில்: “சாதி மற்றும் இனத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்கள். ஆகவே, தன்னம்பிக்கை அற்று கற்பனை வாழும் வீணர்களின் கட்டுக்கதைகளுக்கு பதிலளித்தல், ஆதரித்தல், எதிர்த்தல் போன்றவை அவர்களக்கு ஊக்கம் அளித்து சமூக பிரிவினையை வளர்க்கும். கண்டுகொள்ளமல் விட்டுவிட்டால் அவர்கள் தானாகவே மனம் திருந்தி வாழ ஆரம்பிப்பார்கள். சமூகத்தில் சாதி, மத, இன வேறுபாடுகள் மெல்ல மறைந்து விடும்”, என ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. அதை நான் ஆதரிக்கவில்லை. பொய்பிரசாரங்களை எல்லா தளங்களிலும் எதிர்த்தேயாக வேண்டும் என்றுதான் நான் கூறுவேன்
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்