"விதியுடன் இந்தியாவின் சந்திப்பு" என்று பொருள்பட நேரு அவர்கள் 1947-ஆம் வருடம் நள்ளிரவு 12 மணிக்கு வானொலியில் உரை ஆற்றியதை நேரடியாகக் கேட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இப்போதுள்ள தலைமுறையினருக்கு சாதாரணமாக நேரு அவர்களை பற்றிய அறிமுகம் வாய் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்கள் மூலமுமே கிடைக்கிறது. அவ்வகை அறிமுகங்கள் அவற்றை வெளியிடுபவர் விருப்பு வெறுப்புக்கேற்ப வேவேறு வகை பிம்பங்களை அளிக்கின்றன.
நாடு விடுதலை ஆன சமயம் பிரிவினையால் அகதிகளின் பிரச்சினை தலை தூக்கி ஆடியது. முக்கியமாக பஞ்சாப், வங்காளம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மக்கள் சுதந்திரத்தை கொண்டாடும் மனநிலையிலேயே இல்லை என்றுதான் கூறவேண்டும். முதல் சுதந்திர தினத்தன்று காந்தியடிகள் கிழக்கு வங்கத்தில் நவகாளியில் சமாதானப் பயணம் மேற்கொண்டிருந்தார். ராஜாஜி அவர்கள் வங்காள கவர்னராக இருந்து நிலைமையை திறமையாக சமாளித்து கொண்டிருந்தார்.
மேலே உள்ள இரு பத்திகள் இப்பதிவின் அறிமுகத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் (சமீபத்தில் 1950) பிரதம மந்திரி என்றால் நேரு என்றே பல ஆண்டுகளாக எண்ணி வந்திருக்கிறேன். 1964-ல் அவர் இறந்தவரை அவரைத் தவிர வேறு யாரையும் யாரும் பிரதம மந்திரியாக நினைத்ததில்லை. 1962 தேர்தல் முடிவுகள் வெளியான சமயம் ஒரு தமிழ் பத்திரிகையில் நேரு ராஜினாமா என்று வர எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தால். நேருவின் பழைய மந்திரிசபை மரபுப்படி ராஜினாமா செய்திருக்கிறது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அதை ஏற்று, மாற்று ஏற்பாடுகள் வரை நேருவையே பிரதமராக செயல்படச் சொல்லியிருக்கிறார். அவ்வளவே. அன்று மாலையே நேருவின் புது மந்திரி சபை பொறுப்பேற்றுக் கொண்டது. இப்போது கூட பல பதிவர்கள் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி பரபரப்பான தலைப்பை போட்டு விட்டு பதிவை க்ளிக் செய்து படிக்க ஆரம்பிக்கும்போது ஹி ஹி ஹி என்று கூறுவதைப் போல இல்லை?
நேரு அவர்கள் சோஷலி்சத்தில் ரொம்ப நம்பிக்கை கொண்டவர். சுதந்திரம் வந்த புதிதில் பலருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆகவே சோஷலிச பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல அவர் முடிவு செய்ததை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் நாட்டில் கட்டமைப்புகள் ரொம்ப பலவீன நிலையில் இருந்தன. அவற்றை பலப்படுத்தத் தேவையான முதலீடுகளைச் செய்ய தனியாரிடம் நிதி இல்லை என்பதே நிஜம். நேரு அவர்கள் மிக துரிதமாக நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வரத் திட்டமிட்டார். ஆகவே கனரகத் தொழில்களில் அதிக அக்கறை செலுத்தினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒன்றுக்கும் உபயோகமில்லாத கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சோவியத் மாடலில் திட்டங்கள் தீட்டி, அகலக் கால் வைத்து நாட்டின் பொருளாதாரத்தையே குட்டிச்சுவராக்கினார். அதே காலக் கட்டத்தில் "அபார முன்னோக்கித் தாவல்" என்ற முயற்சியை செய்து கம்யூனிஸ்ட் சீனா காலை முறித்துக் கொண்டது. அந்த அளவுக்கு திவாலாகாவிட்டாலும் உள்ளூரப் புறையோடி புண்களுடன் இருந்து 1991-ல் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போயிற்று சோவியத் யூனியன். அதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னால் கிழக்கு ஜெர்மனி மறைந்தது. ஆனால் இவையெல்லாம் ஐம்பதுகளில் எதிர்ப்பார்த்திருக்க முடியாத ஜவஹர்லால் நேரு அவர்கள் நம் நாட்டையும் அதே மாதிரி கோர்ஸில் நிலைநிறுத்தி விட்டு போய் சேர்ந்தார். அவரது மகளும் பேரனும் அந்தக் கூத்தை தொடர்ந்து நிகழ்த்தினர்.
அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர். இந்திரா மற்றும் ராஜீவ் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம். இப்போது நேருவின் ஆட்சிகாலத்தின் மீது கவனம் செலுத்துவோம்.
அவர் செய்த முதல் குளறுபடி காஷ்மீர பிரச்சினையை கையாண்ட விதமே. பட்டேல் உறுதியாக நடவடிக்கை எடுத்து பாக் படைகளை காஷ்மீரத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மனிதர் ராபணா என்று பாதுகாப்பு கவுன்சிலுக்கு போனார். அவர்கள் இட்ட ஷரத்துப்படி போர்நிறுத்த எல்லை என்று "தற்காலிகமாக" உருவாக்கப்பட்டது. அது இப்போதும் அப்படியே இருப்பதுதான் இந்த தற்காலிகத்தின் லட்சணம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்தெல்லாம் யாரும் கேட்காமலேயே இந்த மனிதர் கொடுத்துள்ளார். மக்கள் வாக்கெடுப்புக்கும் ஒத்துக் கொண்டார். அதாவது எல்லாமே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக அமைந்தது. இதில் என்ன துரதிர்ஷ்டமான நிலை என்றால். இவர் ரொம்ப நல்லவர். எல்லோரும் தன்னைப் போல என நினைத்தவர். ஆனால் இந்தியாவுக்கு தேவை நல்லவர் அல்ல, ஒரு வல்லவர். இவர் அது அல்ல.
இன்னொரு குளறுபடி சைனாவை அப்படியே நம்பியது. அதிலும் பாதுகாப்பு துறைக்கு தன் நண்பர் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கிருஷ்ணமேனன் என்ற பிரயோசனமில்லாத மந்திரியை நியமித்து அவரை பாதுகாத்தும் வந்திருக்கிறார். இந்தக் குளறுபடியால் நாம் இழந்தது ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் உள்ள இந்தியப் பிரதேசங்கள்.
அணிசேரா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியவர் நேரு அவர்கள். இதனால் நாம் இழந்ததுதான் அதிகம். போகிறவர் வருவருக்கெல்லாம் தர்ம உபதேசம். எடுப்பது என்னவோ பிச்சை. அதுவும் அமெரிக்கா என்றால் தீவிரமாகத் தாக்குவார். அதுவே சோவியத் யூனியன் என்றால் விளக்கெண்ணை பேச்சுத்தான். 1956-ல் ஹங்கேரியை சோவியத் யூனியன் ரத்தக் களறியாக்கியபோது வாயடைத்து நின்றார். 1962-ல் சைனாவுடன் யுத்தத்தை சமாளிக்க முடியாத நிலை வந்த போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துணைக்கு வந்தன. சைனாவும் தாக்குவதை நிறுத்திற்று. ஆனால் பேச்சு என்னவோ அமெரிக்காவுக்கு உபதேசம் செய்யும் ரேஞ்சுக்குத்தான் இருக்கும். இந்த ஆஷாடபூதித்தனத்தால் இந்தியாவை எல்லோருமே பரிகாசம் செய்தனர்.
1948-ல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் கான்ஸல் அளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் கொடுத்தது. ஏனெனில் இசுலாமிய அரேபியர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். அப்போதே சூட்டோடு சூடாக இஸ்ரேலுக்கு முழு ராஜரீக அங்கீகாரம் தந்திருந்தால் பல நன்மைகள் விளைந்திருக்கும். இஸ்ரேல் செய்த விவசாயப் புரட்சிகளை நம்மூரிலும் கொண்டு வந்திருக்கலாம். தேவையில்லாமல் பயந்ததால் நமக்கு பல கெடுதிகள்தான் ஏற்பட்டன. அதே சமயம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நடந்தால் சக இசுலாமியரான பாகிஸ்தானத்தைத்தான் பாலஸ்தீனர்கள் ஆதரித்தனர். அப்போதும் இந்தியாவுக்கு புத்தி வரவில்லை. பிறகு எகிப்தே இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும்தான் இந்தியா விழித்து கொண்டது. அதற்குள் எவ்வளவு கால விரயம்? இதற்கான முதல் பொறுப்பும் நேருவுக்கே.
அவர் இறந்த பிறகு நடந்ததுதான் அபத்தத்தின் உச்சக் கட்டம். பிரதம மந்திரியின் இல்லமாகிய தீன்மூர்த்தி பவனை நேரு மியூசியமாக மாற்றினர். என்ன அபத்தமான செயல்? பிறகு பார்த்தால் இந்திரா காந்திக்கும் அதுவே நடந்தது. நல்ல வேளையாக ராஜீவ் காந்தி இறந்தபோது அவர் அதிகாரத்தில் இல்லை என்ப்து கடவுள் அருளே. இதற்கெல்லாம் நேருவை பொறுப்பாக்க முடியாது என்றாலும் இதுவும் அவரது லெகஸிதான். இதற்காக விளக்கெண்ணெய் சப்பைக்கட்டுகள் வேறு எனது இப்பதிவில் அளிக்கப்பட்டன..
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
19 hours ago
18 comments:
Quite interesting. Do you mean to say that the first prime minister was useless?
V. Gopalaswamy
//Do you mean to say that the first prime minister was useless?//
கிடையவே கிடையாது. நேரு நாட்டுக்கு செய்த நல்லதுகளை மறக்கவில்லை. ஆனால் அதே சமயம் அவரால் உண்டான குளறுபடிகளும் அனேகமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
1948-ல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் கான்ஸல் அளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் கொடுத்தது. ஏனெனில் இசுலாமிய அரேபியர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். அப்போதே சூட்டோடு சூடாக இஸ்ரேலுக்கு முழு ராஜரீக அங்கீகாரம் தந்திருந்தால் பல நன்மைகள் விளைந்திருக்கும். இஸ்ரேல் செய்த விவசாயப் புரட்சிகளை நம்மூரிலும் கொண்டு வந்திருக்கலாம். தேவையில்லாமல் பயந்ததால் நமக்கு பல கெடுதிகள்தான் ஏற்பட்டன. அதே சமயம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நடந்தால் சக இசுலாமியரான பாகிஸ்தானத்தைத்தான் பாலஸ்தீனர்கள் ஆதரித்தனர். அப்போதும் இந்தியாவுக்கு புத்தி வரவில்லை. பிறகு எகிப்தே இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும்தான் இந்தியா விழித்து கொண்டது. அதற்குள் எவ்வளவு கால விரயம்? இதற்கான முதல் பொறுப்பும் நேருவுக்கே.
//
சோவியதுடனான கூட்டினால் நாமக்குக் கிடைத்ததைவிட நாம் இழந்தது தான் அதிகம்.
அதனால், நடந்த பல முக்கிய சம்பவங்களில் இஸ்ரேலும், இந்தியாவும் எதிர் எதிர் தரப்புகளாகவே இருந்து வந்துள்ளது இதுவரை. இதற்கு முக்கிய காரணம், நேரு மற்றும் அவரது வாரிசுகள். அதே நிலையில் தான் இப்பொதும் இருக்கவேண்டும் என்று அறிவாள் சுத்தி கோஷ்டிகள் வேண்டுகின்றன.
நீங்கள் சொன்னது முற்றிலும் சரி வஜ்ரா அவர்களே. சோவியத் யூனியன் அழிந்த பிறகும் அதன் லெகஸி தொடர்ந்தது. செயற்கையாக்க ஒரு ரூபிளுக்கு இத்தனை ரூபாய்கள் என்ற கணக்கில் கடன்கள் தரப்பட்டன. சோவியத் யூனியன் மறைந்த புதிதில் ஒரு ரூபிள் என்பது மிக தாழ்ந்த மதிப்புக்கு சென்றது. சர்வதேச அளவில் ஒரு ரூபிள் என்பது ஓரிரு டாலர் செண்டுகளே. ரூபாயிலும் சில பைசாக்களே. ஆயினும் ஒரு ரூபிளுக்கு அதே பழைய, செயற்கையாகக் கணிக்கப்பட்ட அளவில் நாம் ரூபாய்கள் கொடுத்தோம். எல்லாம் விதி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர்//
neenga sonna sariyathan irukkum. bpcl il govt sambalam vaangikondu neengal officil translation velai seydhadhaga eludhi irundheergal. idharku karanamum indra gandhidhan.
//bpcl il govt sambalam vaangikondu neengal officil translation velai seydhadhaga eludhi irundheergal. idharku karanamum indra gandhidhan.//
இதுல வேடிக்கை என்னன்னாக்க நான் மிக நல்ல இஞ்சினியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தவன் என்ற நல்ல பெயரையும் பெற்றேன்.
என்னோட கம்பெனி பேரை தவறா சொல்லியிருக்கீங்க. ஆகவே சரியான பெயரை 100 தடவை இம்போசிஷனா எழுதுங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நேரு குடும்பத்தை பற்றி பதிவு போட்டதற்க்கு எங்கள் பாராட்டுக்கள். இந்திரா பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
டோண்டு ரசிகர் மன்றம்
- தலைமை கிளை, நங்கநல்லுர்
பி.கு- இந்திரா லண்டனில் செய்த கூத்தையும் போட்டால் நல்லா இருக்கும்.
"இதில் என்ன துரதிர்ஷ்டமான நிலை என்றால். இவர் ரொம்ப நல்லவர். எல்லோரும் தன்னைப் போல என நினைத்தவர். ஆனால் இந்தியாவுக்கு தேவை நல்லவர் அல்ல, ஒரு வல்லவர். இவர் அது அல்ல."
இப்ப இருக்கும் மான்புமிகு பிரதம மந்திரி மன்மோகன் சிங்'க்கும் இது பொருந்தும்.
ஒரு வேளை இவர்தான் மொக்கை மோகன் போல இருக்கு.
//ஒரு வேளை இவர்தான் மொக்கை மோகன் போல இருக்கு.//
நேருவின் பேரனின் மனைவி என்பதைத் தவிர வேறு யோக்கியதை இல்லாதவர்கள் அன்னை என அழைக்கப்படுகிறார்கள். அவரோட குடும்ப நண்பரான அந்த க்வாட்ரோக்கி தன்னொட முடக்கப்பட்ட பேங்க் கணக்கை விடுவிச்சுண்டு உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்று போய் விட்டான்.
என்ன செய்வது எல்லாமே நேருவின் லெகஸிதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கத்தியை வைத்துக்கொண்டு சகட்டுமேனிக்கு சுழட்டுவதுபோல் திறமையை அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் வெட்டியாகக் கழிக்கும் ஜெயலலிதாபோன்று இல்லாமல், சோசலிசம் என்ற ஒரு கொள்கையின்மீது அமர்ந்து செயலாற்றிய ஒரு பெண் தலைவர் என்ற முறையில் இந்திராவை எனக்குப் பிடிக்கும் - கொள்கை சரியா தவறா என்பது விவாதிக்கப் படவேண்டியது என்றாலும்.
தெற்காசிய அரசியலில் வேறு எந்தப் பெண் தலைவர்களாவது இந்திராபோல் சித்தாந்த அறிவுடன் செயல்பட்டனரா என்று தெரியவில்லை.
அனானி அவர்களே,
மன்னிக்கவும் உங்கள் முதல் இரண்டு வரிகளை வெட்டி விட்டேன்.
டோண்டு ராகவன்
It's Okay. That's why I put it as an anony :)
இந்திராவை பற்றி அவருக்கு பாடம் நடத்திய லண்டன் ஸ்கூல் அஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் சொன்னது, "இந்திரா ஒரு மக்கு மாணவி, இவர் கிளாசில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை." இந்திராவை போய் சித்தாந்த அறிவாளினு சொன்னா அது உங்களுக்குதான் அவமானம். இல்லைனா நீங்க இந்திராவ வெச்சி காமெடி பண்ண பாக்குறிங்களா?
{சோசலிசம் - கொள்கை சரியா தவறா என்பது விவாதிக்கப் படவேண்டியது என்றாலும். }
நன்றாக ஜல்லி பின்னுட்டம் போட்டதற்கு அ.மு.க பாரட்டுக்கள்!
2 ஜல்லி போடுபவர்களுக்கு இலவசமாக ஒரு மூட்டை சிமென்ட் வழங்கப்படும் - அ.மு.க தலைவர்
அ.மு.க இலவச திட்டம்
இந்திரா காந்தி அவர்கள் அடுத்த பதிவில் வருவார். அப்போது அவரைப் பற்றிப் பார்க்கலாமே. நேரு அவர்களைப் பற்றி ஏதேனும் எழுத வேண்டுமென்றால் பின்னூட்டமிடுங்கள் ப்ளீஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
sir, well said about Nehru
Sir,if You Write about sonia"s double nationality i will be happy.
சோனியா விஷயம் கண்டிப்பாக எழுதுவேன் அதற்கான சமயத்தில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment