4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)
நான் ஏற்கனவே கூறியபடி இந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதுவரை கிடைக்காத வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு மனமாச்சரியமும் இன்றி ராஜாஜி அவர்களும் காமராஜ் அவர்களும் ஒரே அணியில் நின்றனர். அவர்களுக்கு படுதோல்வி. இந்திரா காங்கிரசுக்கு தமிழகத்திலிருந்து நிறைய எம்.பி.க்கள் கிடைத்தனர். அசெம்பிளி தேர்தலில் ஒரு சீட்டிலும் நிற்கக் கூட வாய்ப்பு தரவில்லை கருணாநிதி அவர்கள். ஆக காங்கிரசுக்கும் நீண்ட காலத் திட்டத்தில் ஒரு பின்னடைவே. அதற்கு பிறகு இன்று வரை காங்கிரஸ் சிந்துபாத் கதையில் வரும் கிழவன் போல திமுக அல்லது அல்லது அதிமுகவின் முதுகிலேயே சவாரி செய்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு செய்தி இப்போதைக்கு. ரே பரேலியில் இந்திராவிடம் தோல்வியுற்ற ராஜ் நாராயண் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அது பற்றி அப்புறம்.
இங்கு ஒரு சிறு டைவர்ஷன். இதே சமயத்தில்தான் சோ அவர்கள் இயக்கி தயாரித்த முகம்மது பின் துக்ளக் படமும் வந்தது. அதில் துக்ளக் அடித்த கூத்துக்கள் பலரால் வெறும் மிகைபடுத்தப்பட்ட கற்பனையாகவே மக்களால் பார்க்கப்பட்டன. ஆனால் இப்பதிவின் காலக் கட்டத்திலேயே இந்திரா அவர்கள் துக்ளக் மாதிரி உருவாகும் எல்லா சாத்தியக் கூறுகளும் தெரிய ஆரம்பித்து விட்டன. அடுத்தப் பதிவில் அவசர நிலை பற்றி எழுதும்போது இன்னும் விரிவாக எழுதுவேன். இதில் என்ன விசேஷம் என்றால், அப்படம் வந்து 36 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை இப்போது பார்த்தாலும் காலத்துக்கு பொருத்தமானதாகவே இருப்பதுதான். ஏனெனில் மனித இயல்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக ஒருபோலத்தான் இருந்து வந்திருக்கின்றன.
1971 மார்ச்சிலேயே வங்கதேசப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அதற்கு சற்று முன்புதான் (1970) பாக்கிஸ்தான் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்த வங்க தேசத்தில் ஷேக் முஜிபூர் கட்சியான அவாமி லீகுக்கும் மேற்கு பாகிஸ்தானில் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் அதிக சீட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வங்க தேச எம்பிக்கள் முழுமையான பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்றிருந்ததால் முஜிபூர்தான் பிரதமராகியிருந்திருக்க வேண்டும். ஆனால் பஞ்சாபியர் டாமினேட் செய்த பாக்கிஸ்தானுக்கு ஒரு வங்க தேசத்தவர் பிரதமராக வருவது அவர்களால் சகிக்க முடியாமல் இருந்தது.
ஆகவே மேற்கு பாகிஸ்தானியர் முஜிபூர் ரஹ்மானின் கட்சி பதவி ஏற்க முடியாதபடி அழுகினி ஆட்டம் ஆடினர். யாஹ்யா கான் முஜிபுரை மார்ச் 25, 1971-ல் கைது செய்து மேற்கு பாக்கிஸ்தானுக்கு கொண்டு சென்றார். அதற்கு அடுத்த நாளிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானில் அகோர அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் கசாப்புக்காரன் என்று பெயர் பெற்ற டிக்கா கானின் அட்டூழியம் கொடி கட்டி பிறந்தது. மதத்தால் மட்டும் நாட்டை ஒன்றாக வைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து இசுலாமியர் பாகிஸ்தானை பிரித்து சென்று 1947-48-ல் நடந்த கலவரங்கள் எல்லாமே தவிக்கப்பட்டிருக்கக் கூடியவை என்பதும் நிரூபணமாயிற்று. வெவ்வேறு நாடுகளில் இருந்த பாகிஸ்தான் தூதரகங்களிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் சாரி சாரியாக வெளியேறி இந்தியத் தூதரகங்களில் அடைக்கலம் புகுந்தனர். பாகிஸ்தான் மானம் கப்பலேறியது. நாட்டைப் பிரிவினை செய்த இரு தேசக் கோட்பாடு அடிப்படையிலேயே தவறு என்று அப்போது அவர்களில் பலர் கூறினர்.
இசுலாமியரே இசுலாமியரைக் கொன்ற கூத்தும் நடைபெற்றது. இந்தியாவோ சுமார் 100-120 லட்சம் அகதிகள் வருகையால் மூச்சு திணறியது. இந்த தருணத்தில் இந்திரா அவர்கள் திறமையாகச் செயல்பட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். யாஹ்யா கான் திமிருடன் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் இந்திராவை நேரில் பார்த்தால், "வாயை மூடு பொட்டச்சி. எங்க அகதிகளை திருப்பி அனுப்பு" (shut up woman, and let my refugees return) என்று கூறப்போவதாகக் கூறினார். இதைவிட ஒருவர் ஆணாதிக்கத்துடன் பேசியிருந்திருக்க முடியாது. ஆனால் அதே திமிர் பிடித்த ஆண் இந்த வலிமையான பெண்மணியிடம் மண்டியிட நேர்ந்தது.
டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த யுத்தம், கிழக்கு பாகிஸ்தானில் 16-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனெரல் நியாஜி இந்திய ராணுவத் தலைவர் அரோராவிடம் சரணடைந்தார். பாக்கிஸ்தானின் சுமார் 93000 துருப்புகள் இந்தியரிடம் போர் கைதியாக மாட்டிக் கொண்டனர். இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார். பாக்கிஸ்தான் மிகுந்த மனகிலேசத்திலும் அவமானத்திலும் இருந்தது. அதற்கு மேலே யுத்தம் செய்யும் தைரியம் இல்லை. ஆகவே போர் நிறுத்தம் கடைசியில் அமுலுக்கு வந்தது. அப்போதைய ஜெர்மானிய பத்திரிகையான Der Spiegel Niederlage gegen Indien (இந்தியாவிடம் படுதோல்வி) என்ற தலைப்பில் ஒரு இஷ்யூவே போட்டது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வங்க தேசம் இந்தியா வழியாக சென்றார். ஆக, வங்க தேசம் உருவாவதில் இந்தியாவின், முக்கியமாக இந்திராவின், பங்கு ஒரு சரித்திர உண்மை. இந்தியாவைப் பொருத்தவரை 1962-ல் சீனாவிடம் தோல்வி, 1965-ல் பாகிஸ்தானுடன் ஒரு மாதிரி குழப்பமான சண்டை. அதற்கு பிறகு முதன் முறையாக சந்தேகத்துக்கிடமேயில்லாத ஒரு வெற்றி. அப்போது இந்திரா அவர்கள் புகழ் உச்சியில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பேயீ அவர்கள் இந்திராவை துர்க்கா என்றார்.
ஜூலை 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது பற்றி விக்கிபீடியாவில் பார்க்கலாம். ஆனால் அக்காலக் கட்டத்தில் குமுதத்தில் வந்த ஒரு செய்தித் துணுக்கை இங்கே கூறுவேன். புட்டோவுடன் அவர் தூதுக் குழுவில் ஆகா ஷஹி (அல்லது இலாஹி?) என்ற ஒரு மந்திரி வந்தார். வந்தவர் சும்மா இல்லாமல் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ராமமூர்த்தியைப் பார்க்க ஆவல் தெரிவித்திருக்கிறார். ராமமூர்த்திக்கோ ஒரேதிகைப்பு. இருந்தாலும் போய்ப் பார்த்திருக்கிறார். அந்த மந்திரிக்கு முகமன் கூறி ஹிந்தியில் பேச ஆரம்பித்து இருக்கிறார். (நம்ம தேசத்தவர் ஹிந்தி பேசினால் உருது பேசும் பாக்கிஸ்தானியர் எளிதில் புரிந்து கொள்வர். உருதுக்கும் ஹிந்திக்கும் அவ்வளவு ஒற்றுமை). அந்த மந்திரியோ ஹாஹாஹா என்று சிரித்து விட்டு, "என்ன சார் தமிழ் பேசணும்னு ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டா, நீங்க ஹிந்தீலே பேசறீங்களே என்று ஸ்பஷ்டமானத் தமிழில் கூறினார். ராமமூர்த்திக்கு மூச்சே நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அவர் பிரிவினைக்கு முன்னால் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் குடியிருந்தார் என்று.
1971 முடிவில் இந்திரா அவர்கள் பாப்புலாரிட்டியின் உச்சத்தில் இருந்தார். ஆனால் அதன் பிறகு மெதுவாக அவரது புகழ் மங்க ஆரம்பித்தது. 1973 மற்றும் 74-ல் பணவீக்கம் தலைவிரித்தாடியது. மக்கள் சுதந்திரங்களில் கைவைக்கு வகையில் பல அரசியல் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த நேரத்தில்தான் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்தார். பதவி அதனால் வரும் பொறுப்பு ஒன்றுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்தார். இந்திரா காந்தியே அவரைப் பார்த்து நடுங்கியதாகவும் கூறுவர்.
தமிழகத்தைப் பொருத்தவரை எம்ஜீஆர் திமுகாவிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அதிமுக உருவானது. அக்கட்சி முதன்முறையாகப் போட்டியிட்ட திண்டுக்கல் இடைதேர்தலில் அவர் கட்சி அமோக வெற்றி பெற்றது. காமராஜரின் பழைய காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் இந்திரா காங்கிரஸ் நான்காம் இடத்திலும் இருந்தன. காமராஜ் தனது கட்சிப்பணிகளை செய்து வந்தாலும் பழைய உற்சாகம் எதுவில்லை. ராஜாஜி 1972 மற்றும் அவரது உயிர்த் தோழர் பெரியார் சரியாக ஓராண்டு கழித்து 1973லும் மறைந்தனர்.
1972 ம்யூனிக் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய தடகள வீரர்கள் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அப்போது மௌனம் காத்த இந்தியா, இஸ்ரேலியர் எதிர் நடவடிக்கை எடுத்த போது மட்டும் கண்டித்தது. இம்மாதிரி வெளியுறவு விவகாரங்களில் பல சொதப்பல்கள் அவை பாட்டுக்கு நிகழ்ந்தன.
நாட்கள் சென்றன. நான் முதலில் குறிப்பிட்டிருந்த இந்திரா காந்தியின் தேர்தல் வழக்கு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. 1975 ஜூன் மாதத்தில் இடி போன்ற தீர்ப்பு வந்தது. இந்திரா காந்தியின் தேர்வு ரத்து செய்யப்பட்டு ராஜ் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அடுத்த 6 ஆண்டுகள் இந்திரா அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதே காலக் கட்டத்தில் திமுகாவும் இந்திரா காங்கிரஸும் கருத்து வேறுபாடுகளால் ஒன்றை விட்டு இன்னொன்று தூரச் சென்றது. கருணாநிதியை ஊழல் ராஜா என்று இந்திரா வர்ணிக்க, அப்போது ஊழல் ராணி யார் என்று அவர் எதிர்க் கேள்வி கேட்டார். தமிழக அரசு கொண்டு வந்த விதவைகள் மறுவாழ்வுத் திட்டத்தில் இந்திரா காந்தி வேண்டுமானால் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆக இரு கட்சிகளுக்குமிடையில் பூசல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தன. மத்திய அரசை தாக்கி எழுதும் பத்திரிகைகளின் கைகள் கட்டப்பட்டன. அதே சமயம் தமிழக அரசைத் தாக்குபவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.
இந்த இடத்தில் நம்ம சோ ஒரு காரியம் செய்தார். எப்போது மத்திய அரசை எதிர்க்க முடியாமல் போயிற்றோ மானில அரசையும் தான் விமரிசனம் செய்யப்போவதில்லை என்று துக்ளக்கில் கொட்டை எழுத்தில் அறிவித்தார். அதனை நிகழ்ச்சிகளும் ஜூன் 12 முதல் ஜூன் 25 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏற்பட்டது.
ஜூன் 25-க்கு பிறகு நடந்தவற்றை அடுத்தப் பதிவில் காண்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
23 hours ago
30 comments:
டோண்டு சார்! காதைக் கொஞ்சம் கொடுங்க, நேரு மாமாவுக்கும் எட்வீனா ஆன்டிக்கும், அதுதான் நம்ம மவுண்பார்ட்டன் பிரபு சம்சாரத்திற்கும் ஏதோ கசமுசா இருந்துடிச்சு என காத்துவாக்கில கேட்டேன். உம்மையா சார்? ரெம்ப பெரிய இடத்து சாமச்சாரம் அக்கம் பக்கம் பாத்து சொல்லுங்க சார்!
புள்ளிராஜா
//நேரு மாமாவுக்கும் எட்வீனா ஆன்டிக்கும், அதுதான் நம்ம மவுண்பார்ட்டன் பிரபு சம்சாரத்திற்கும்//
முற்றிலும் உண்மை. The Great Indian Novel by Sashi Tharoor புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படிக்கவும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் மகாபாரதக் கதை ரேஞ்சில் எழுதப்பட்ட நாவல் அது.
அதில் வரும் பாத்திரங்கள்:
1. வியாசர்/பீஷ்மர் வெவ்வேறு இடங்களில் ராஜாஜி, பட்டேல் மற்றும் காந்திஜி
2. திருதிராஷ்டிரன்: நேரு
3. அவன் மகள்: பிரிய துரியோதனி
4. கர்ணன்: முகம்மது அலி ஜின்னா (அவர் நியமித்த தனி ராஜ்யம் கர்ணீஸ்தான்)
5. ஜனநாயகம்: நேருவுக்கும் எட்வீனாவுக்கும் பிறந்த குழந்தை
6. வியாசர் சொல்ல மகாபாரதம் எழுத அவர் கணபதி என்னும் தென்னிந்திய ஸ்டெனோவை நியமிக்கிறார்.
இதில் என்ன திகைப்பளிப்பது என்றால், இந்த புத்தகம் எப்படி தடை செய்யப்படுவதிலிருந்து தப்பித்தது என்பதே.
அதே போல காத்தரீன் க்ளெமெண்ட் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் எட்வீனா என்று ஒரு நாவல் எழுதியுள்ளார். அப்புத்தகத்தை நான் மூல மொழியிலே வாசித்துள்ளேன். அதிலும் நேருவுக்கும் எட்வீனாவுக்கும் இடையில் இருந்த உறவு வெளிப்படையாகக் கூறப்பட்டது. நேரு சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடுவுடனும் உறவு வைத்திருந்தார். நேருவின் காரியதரிசி மத்தாய் அது பற்றி எழுதியுள்ளார். குஷ்வந்த் சிங் நேரடி சாட்சியாகவே இருந்தார்.
இதனாலெல்லாம் நேருவின் புகழ் மங்கிவிடாது.
அன்புடன்
டோண்டு ராகவன்
//இதனாலெல்லாம் நேருவின் புகழ் மங்கிவிடாது.//
இவன் பிறந்த நாள போய் குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டுமா? இவருக்கு குழந்தைகள் பிடிக்குமா அல்ல குழந்தைகளை உற்பத்தி செய்ய பிடிக்குமா?
நம்மை ஆன்ட அரசர்கள் முதல் இன்று ஆளுபவர்கள் வரை நிறைய பேர் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற விதியை அடிக்கடி மீறியவரிகள். இதுவும் நம் நாடு உருப்படாமல் இருப்பத்ற்கு ஒரு காரணம்.
//மதத்தால் மட்டும் நாட்டை ஒன்றாக வைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டது. //
சரியா சொன்னீங்க தலைவா.
நீங்கள் R.S.S செய்யும் நல்ல காரியங்களை எடுத்து சொன்னதால்்து உங்களை பலர் வேண்டுமென்றே பாசிசவாதி என்றனர். இனிமேலாவது எல்லோருக்கும் புரியட்டும் எங்கள் டோண்டு ஐய்யா பாசிசவாதி இல்லை என்று.
டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்
தயவு செய்து நேரு அவர்களை இகழ வேண்டாம். மாரல்ஸை பற்றிப் பேச நாம் ஒன்றும் பண்பாட்டு காவலர்கள் அல்ல. நாட்டுக்காக உழைத்து ஜெயிலுக்கெல்லாம் சென்றவர் நேரு அவர்கள். மனைவியுடன் அவர் வாழ்ந்தது மிகக் குறைந்த காலமே. சிறையில் இருந்த போது தன் அருமை மகளுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாக வெளி வந்துள்ளது. ஒரு காவிய ரேஞ்சுக்கு அவை இருப்பதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.
சாச்சா நேரு என்று குழந்தைகளால் பிரியத்துடன் அழைக்கப்பட்டவர் அவர். ஆகவே அவர் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவது முர்றிலும் பொருத்தமே.
மற்றப்படி அவருக்கும் சில பெண்மணிகளுக்கும் இடையில் இருந்த நட்பு முற்றிலும் அவரது தனிப்பட்ட விஷயம். சுய விருப்பத்தில் இருவர் நட்பு பேணுவதை மற்றவர்கள் விமரிசனம் செய்யலாகாது. கூறப்போனால் அவர்களும் ர்ரத்தமும் சதையும் உணர்வுகள் கொண்ட மனிதர்கள்தான் என்பதே இங்கு முக்கியமாகக் காட்சி தெரிகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதரமராக இருந்து அவர் ஆற்றிய சாதனைகள் அதனால் எல்லாம் மறைக்கப்படலாகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மற்றப்படி அவருக்கும் சில பெண்மணிகளுக்கும் இடையில் இருந்த நட்பு முற்றிலும் அவரது தனிப்பட்ட விஷயம். சுய விருப்பத்தில் இருவர் நட்பு பேணுவதை மற்றவர்கள் விமரிசனம் செய்யலாகாது.
..................உணர்வுகள் கொண்ட மனிதர்கள்தான் என்பதே இங்கு முக்கியமாகக் காட்சி தெரிகிறது.//
நீங்கள் சொல்வது 100% சரி, இருந்தாலும் ஒருவருக்கு சாச்சா நேரு, தேசிய தலைவர் ஏன்றேல்லாம் பில்டப் கொடுத்த பிறகு, ரொம்ப நல்லவன் போல இருந்தது, ஆனால் இப்படி கசமுசா செய்தவர் என்றால் அவர் மீது இருந்த மரியாதை குறைகிறது. இவருக்கு பில்டப் கொடுக்காமல் இருந்தால் இவர் இமேஜ் டூமில்தான் நினைக்கிறேன்.
எந்தப் பெரிய மனிதனுமே அவனுடைய காதலிக்கு ஹீரோவாக இருக்க முடியாது என்று பொருள் வரும் ஆங்கில வாக்கியம் உண்டு.
க்ளிண்டனைப் பற்றித் தெரியும். ஆனால் கென்னடி? லியோ டால்ஸ்டாய்?
சரோஜாதேவி ரேஞ்ச் புத்தகங்கள் விரும்பிப் படிக்காத இளைஞர்கள் மிக அரிது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒருவரது தனிப்பட்ட விஷயத்தை நாம் அலசி ஆராய வேண்டிய அவசியம் இல்லை என்றே நானும் நினைக்கிறேன். எத்தனை பெண்களுடன் நேரு கள்ள உறவு வைத்திருந்தால் நமக்கென்ன? அவர் மனைவியும், குடும்பத்தினரும் அப்போது கவலைப்பட்டிருக்க வேண்டிய விஷயம் அது. ஆனால், நாட்டுப் பணி செய்த போது அதற்கு தடங்கலாக இந்த உறவுகள் இருந்திருந்தால் அதனை நாம் ஆராய்வோம். இல்லையெனில் அதைப் பற்றி பேசி ஆராய்வதால் என்ன பயன் விளையப்போகிறது?
"பரிசோதனை" என்று கூறிக்கொண்டு காந்தியடிகள் கூட தான் ஏதேதோ செய்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. அது போல தானே கண்ணதாசனும். அது அவர்களது தனிப்பட்ட விஷயம்.
அவர்கள் எவ்வளவோ அரிய காரியங்களை ஆற்றியுள்ளனர். அதனை மட்டும் நாம் பார்ப்பது நலம்.
//ஆனால், நாட்டுப் பணி செய்த போது அதற்கு தடங்கலாக இந்த உறவுகள் இருந்திருந்தால் அதனை நாம் ஆராய்வோம்.//
சொல்ல வேண்டாம் என நினைத்ததை இப்போது கூறவேண்டி வந்துவிட்டது.
லேடி மவுண்ட்பேட்டன் பற்றி "எட்வீனா" என்ற பிரெஞ்சு நாவல் காத்தரீன் க்ளெமெண்ட் என்பவர் எழுதியது. அதில் நேரு எட்வீனா உறவு கூறப்பட்டுள்ளது மட்டுமல்ல ஒரு ஸ்டெப் மேலே சென்றது. அதாவது லார்ட் மவுண்ட்பேட்டனுக்கு இந்த விஷயம் தெரியுமாம் இருந்தாலும் கண்டு கொள்ளவில்லையாம். மாறாக எட்வீனாவை நேருவிடம் பேசச் செய்து, காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல செய்தாராம். படேல் பாகிஸ்தானியரை காஷ்மீரிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்தது இன்னும் நமக்கு பிரச்சினை உண்டாக்கி வருகிறது.
பிரெஞ்சு மூலத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு நாவல். ஆகவே இச்செய்தி தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு. அப்படி தவறு என்று நிரூபணம் ஆனால் என்னை விட அதிகமாக சந்தோஷப்படுபவன் வேறு யாரும் இருக்க முடியாது, ஏனெனில் நேருவின் மேல் நிறைய விமரிசனம் இருந்தாலும் அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சரோஜாதேவி ரேஞ்ச் புத்தகங்கள் விரும்பிப் படிக்காத இளைஞர்கள் மிக அரிது.//
அப்ப 61 வயது இளைஞனுமா?
நான் என்னையும் சேர்த்துத்தான் கூறினேன். நான் ஒன்றும் முனிவன் அல்லவே.
1971-74-ல் பம்பாயில் இருந்த போது அங்கு மாதுங்காவில் இருந்த துரை லெண்டிங் லைப்ரரி எனக்கு நிரம்பப் பிடிக்கும். அதன் உரிமையாளர் துரைக்கு என்னிடம் ஒரு அபிமானம். ஒரு முறை எதிர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த என்னை ஆள் விட்டனுப்பிக் கூப்பிட்டார். என்னடாவென்று பார்த்தால் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell-லின் புத்தகம் அவரிடம் புதிதாக வந்திருந்தது! நானும் அங்கு பலவகைப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.
சீரியஸ் புத்தகங்கள், வேடிக்கை புத்தகங்கள், காமிக்ஸ் (ஆர்ச்சி காமிக்ஸ், டாட், லோட்டா, காஸ்பர், வெண்டி த குட் விட்ச், ரிச்சி ரிச் முதலியன, அவற்றைக் கட்டுக் கட்டாக எடுத்துப் போய் படிப்பேன்.). திடீரென்று ஒரு நாள் துரையிடம் போய் "ரொம்ப போர் அடிக்கிறது துரை, சரோஜாதேவி புத்தகம் ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டால் கூட அசர மாட்டார். தமிழிலும், ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலத்திலும் அம்மாதிரி புத்தகங்கள் ஏராளம். என்ன, "உங்களை புரிஞ்சுக்கவே முடியல சார்" என்று கூறிக் கொண்டே கேட்டப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார்.
இதை எனது இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/blog-post_11.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu Sir,
Nehru was no fool to be controlled by his women. Edwina could not and did not affect his polices.
Pls refer the excellent book :
"Reminescences of Nehru Age " by
M.O.Mathai who was very close to
Nehru and his private secratary and
confidant from 1946 to 59.
And have you read Sujatha's gripping novel "14 naattkkal" about
a pilot shot down in Bangaladesh
during the short war ? it was also
tranlated in Hindi. the narrative is vivid and gripping...
Our Kamaraj's greatest blunder is
making Indira the PM, instead of
the more sober and honest Morarji
in 1966. He wanted to be a king maker and we all paid to dear price
for it.. She ultimately stabbed him
in the back too. But for his efforts and stance, she would never have become PM. Rajinder's Puri's Crisis of Conscience is an
excellent book about the happennings in 1969, etc.
Also Kuldip Nayyar's Judgement is
a good book about emergency.
Anbudan
K.R.Athiyaman
athiyaman.blogspot.com
நன்றி அதியமான் அவர்களே. நேரு எட்வினாவின் பேச்சைக் கேட்டு காஷ்மீர் விஷயத்தை சொதப்பியது உண்மை என்று கூறுவது எனக்கு மட்டும் சந்தோஷமா என்ன?
மத்தாய் புத்தகத்தை நான் படித்ததில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி எட்வீனா பிரெஞ்சு மூலத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு நாவல். ஆகவே இச்செய்தி தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு. அப்படி தவறு என்று நிரூபணம் ஆனால் என்னை விட அதிகமாக சந்தோஷப்படுபவன் வேறு யாரும் இருக்க முடியாது, ஏனெனில் நேருவின் மேல் நிறைய விமரிசனம் இருந்தாலும் அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும்.
சுஜாதாவின் 14 நாட்கள் குமுதத்தில் தொடர்கதையாக வந்த போது படித்துள்ளேன். அருமையான புத்தகம்.
காமராஜர் 1966-ல் செய்ததவற்றைப் பற்றி நாம் இருவரும் ஒரே கருத்தைத்தான் கூறியுள்ளோம்.
குல்தீப் நய்யார் புத்தகம் படித்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu Sir,
The French are a romantic lot and
we need to not take that novel seriously. I wonder from where the author got the infor about Edwina
influencing Nehru on Kashmir. there is no definte proof so far.
Nehru was never faithful to any one women and he had many affairs
simultaneously.
He offered plebiscite in Kashmir and referred it to UN because he was too much of a democrat and Gandhian. Having fought the British in a democratic, Gandhian way for 30 years, he belived in the basic rights of people in choosing their nation. He was too good and inexpereicned in statehood and belived in the goodness of men.
Ideally we should have kept the Hindu majority Jammu and left the muslim majority Kashmir to Pak. that was the logic of partition. But a Hindu ruling the province signed with India, while it was vice versa in Hyderabad and Junagath. they were Hinddu majority
areas (and landlocked within India)
ruled by muslim rulers, who wanted to merge with Pakistan. We forcefully integrated them with us,
which was the logical and right thing to do.
Kashmir issue has become a huge liabiilty for both our nations and is bleeding us white. We cannot reason with fanatic sucide bombers.. and the economic cost is
staggering.
Pls refer to this excellent article by Tavleen Singh :
http://www.logosjournal.com/issue_4.1/singh.htm
Athiyaman
ஒன்று மட்டும் நிச்சயம் அதியமான் அவர்களே. நேரு காஷ்மீர் விஷயத்தில் பயங்கரமாக சொதப்பியுள்ளார். ஆக காஷ்மீர் பிரச்சினை அவருடைய லெகசியாக இன்னும் தொடர்கிறது.
அதே சமயம் நீங்கல் நினைப்பதுபோல பிரெஞ்சுக்காரர்கள் அவ்வளவு ரொமாண்டிக் எல்லாம் கிடையாது. மேலும் அந்த முக்கியக் காலக்கட்டட்ர்ஹ்தில் நேரு எட்வீனாவுடன் அந்த தொடர்பை பராமரித்திருக்கக் கூடாது. It is not enough if you are just. You should also appear to be just.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் கொஞ்சம் இங்கிட்டு பாருங்க, நேரு மாமா றோஸ் மலரை அடிக்கடி அவருடைய படிப்பறையில் வைத்துவிட்டு போவாரம். காலப்போக்கில றோஸ் மலர் நெஞ்சில தாங்கிற அளவிற்கு காதல் அதுதான் லவ்வு வந்திடுச்சாம். ஆனா சார், எட்வீனா ஆண்டி தனது பிணத்தை இந்தியக்
கடல்லதான் போடனும் என உயில் எழுதி வைச்சிடுச்சாம். அந்த ஆண்டி இந்தியாவை டீப்பா நேசிச்சிருக்கா. கெனடிக்கு ஒரு மார்லின்,
கிளிங்டனுக்கு ஒரு சிறுக்கி.
ஆனா, பிறன்மனை நயத்தல் தப்புத்தானே சார்?. சத்தியமா உங்க மீது எனக்கு நம்பிக்கையிருக்கு சார்!!
புள்ளிராஜா
//ஆனா, பிறன்மனை நயத்தல் தப்புத்தானே சார்?. சத்தியமா உங்க மீது எனக்கு நம்பிக்கையிருக்கு சார்!!//
ஆனால் நேரு விஷயத்தில் இந்தப் பிறன் மனை தன் சொந்த விருப்பத்தில் வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இந்த இடத்தில் நம்ம சோ ஒரு காரியம் செய்தார். எப்போது மத்திய அரசை எதிர்க்க முடியாமல் போயிற்றோ மானில அரசையும் தான் விமரிசனம் செய்யப்போவதில்லை என்று துக்ளக்கில் கொட்டை எழுத்தில் அறிவித்தார். அதனை நிகழ்ச்சிகளும் ஜூன் 12 முதல் ஜூன் 25 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏற்பட்டது."
அப்ப அடுத்தப் பதிவு சோ பஜனைன்னு சொல்லுங்க.
கண்ணபிரான்
Dondu Sir,
The current Kashmir problem with
violence was the creation of Indira
and Rajiv Gandhis. Before 1980s, we
were only arguing with Pak and it was all talk, talk ; no violence.
even if Nehru had not referred the issue to UN or not promised the plebisite, the cynical actions of
Indira and Rajiv would have led us to the current mess...
Pls see this :
http://www.logosjournal.com/issue_4.1/singh.htm
Anbudan
Athiyaman
நீங்கள் தந்துள்ள சுட்டியில் பல உண்மைகள் உள்ளன. இருப்பினும் நான் சொன்னதும் உண்மைதான். அதாவது நேருவின் அசட்டு நம்பிக்கையால்தான் பிரச்சினையே ஆரம்பமாயிற்று.
அசாம் அருகில் சில்சார் (அல்லது சில்ஹெட்) மாகாணத்தில் பிரிவினை சமயத்தில் மக்கள் வாக்கெடுப்பு நடந்தது. பாகிஸ்தானுக்குத்தான் வெற்றி. இசுலாமியர் அதிகம் இருந்த பகுதி.
அதே போல ஹைதராபாத்தில் வாகெடுப்பு நடத்தியிருந்தால் தெற்கு பாகிஸ்தானும் உருவாகி இருந்திருக்கும். நல்ல வேளை அவ்வாறு நடக்கவில்லை.
நேரு மேல் கோபம் அதிகமாகிறது.
அன்புடன்
டோண்டு ராகவன்
1971 சண்டை முடிவில் அருமையான சந்தர்ப்பம் வந்தது. ஜம்முவை நாம் வெஇத்து கொண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தானுக்கு கொடுத்திருக்கலாம். அப்போது பாக் இருந்த பலவீனமான நிலையில் அதுவும் ஒத்து கொண்டிருக்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir,
Only Hyderabad city has a sizeble
muslim population. Rest of Andhra
doen;t have that much density, same
as all Southern states.Hence no
question of partition in south.
Rajaji foresaw the inevitablity of
partition long before in 1942 and
earned the wrath of many for his bold stands. But in the end he was proved right.
Personally i belive that fundamental rights are paramount than any concrept of nationhood or religious identity. People have the right to choose their alignment or nationhood in a democratic way. So what is wrong in
holding a plebisicte ? It is like
a brother wanting to go "thanikudithanam" after partitioning his family property..
See the terrible violations of human rights in Chechenya when Russia tried to forcibly stop seccession. No one cares for the
victims and the dead...
I am not sure if the nation and politicans would be ready to give away Kashmir in 1971, esp when India seemed powerful.
If only Indira and Rajiv hadn't acted in that way, then there would have been no current problem.
Alientation from India and loss of
credibilty of New Delhi, etc...
And pls note the manner in which the world media refers to Kashmir
problem and terrorism : ...Indian
held Kashmir, Pak held Kashmir,
Separatists, insurgency, rebels..."
The rest of the world, (esp UK, since they are historically connected with us)see the problem
with different eyes. And there is
no denying that Indian army sometimes violates human rights.
It is inevitable in such occasions.
It is impossible to identify the
terrorits from innocent villagers
and many get killed in the cross fire. Pls remember the hundreds of
innocent villagers imprisioned in
camps by STF in Sathyamangalam area, as they were suspected to be helping Veerappan.
We, living cozly in chennai can never understand the plight of the
innocent victims. Only when we or our relations are directly affected
will we understand the agony.
As long as Kashmir, Palestine issues remians alive and is not
settled fairly and honestly, the
so called Islamic terrorism will
not subsidise..
Quite interesting Athiyaman, keep it up. I eagerly look forward to your coments in the next post dealing with emergency.
Regards,
Dondu N.Raghavan
டோண்டு சார்! இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இந்திய வம்சாவளி 250000 பேர் இந்தியாவுக்கு திருப்பி எடுத்தல் மீதி 250000 இலங்கை வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி இந்திய வம்சாவளிகளை நாடற்ற கூலிகளாக இன்னும் வைத்திருக்கின்றார்கள்.
நேரு மட்டுமல்ல சாஸ்திரி, இந்திரா என எவருமே அக்கறை கொள்ளவில்லை. இந்திக்காரர்கள் என்றால் கவனம் எடுத்திருப்பார்களோ?
புள்ளிராஜா
Reg. Athiyaman's comment:
Rajaji foresaw the inevitablity of
partition long before in 1942 and
earned the wrath of many for his bold stands. But in the end he was proved right.
- Yes. This has been detailed in recent book "Shameful Flight" by Stanley Wolpert.
I have taken some notes from this book so I can write my thoughts and one thing that struck me most was Churchill felt very awkward in splitting India - though he never gave respect to India and Indians -and according to the author, Mountbatten was the catalyst for the disaster.
One of the good books that I have come across regarding Indian Partition.
Anyway, coming back to the topic, yes, I am eagerly waiting for your post on Emergency.
And by the way : the term Pakistan
was coined as an acronymn ;
P for Punjab, a Baluchistan and the K stands for Kashmir. no wonder they are vehement about Kashmir.
And some thoughts about India that
was Bharath :
A hypothetical question :
If there were no foreign or alien invasions and empires in India (incl Alexander)and esp the Muslim and Bristish invasions , would India be a political union as formed in 1947 ?
My view is that we would have become a cluster of nations like Africa or Europe with a common culture and heritage but no political union.
even in 1947, with mass movements
of Congress and awareness of people, Sardar Patel had a very
tough time in integrating the
reluctunt and rebellioous Princes
and Maharajas with India (or Pak).
Nawab of Hyderabad and Junagedh ;
and Travancore Maharaja with
C.P.Ramasamy Iyer's help
declared independence.....
It is inconceivable that these
warring states (like Chola, Cheras)
would have willingly united to
form unified India.
the British Raj created some very
useful and fruitful institutions
as a side effect. English language,
common civil service, Railways,
Macaluay system of education and
independent judiciary ; and the
rudiments of paliament. We use
the Westminister model of parliamentary democracy with universal adult franchise.
the Bristish empire was bad and
exploitative no douubt. But it
gave us political unity like
never before....
athiyaman.blogspot.com
//P for Punjab, a Baluchistan and the K stands for Kashmir. no wonder they are vehement about Kashmir.//
"a" stands for Baluchistan? I would have never guessed it. Pray, where is Bengal (East) in all this? :)
//the Bristish empire was bad and
exploitative no douubt. But it
gave us political unity like
never before....//
Well, that was not the intention of the British colony seekers. I read somewhere that some of them rued the day Macaulay made Indians learn English.
The speculation as to what would have happened had such and such thing taken place or not taken place is interesting and at the same time an exercise in futility.
Regards,
Dondu N.Raghavan
ஹிஸ்டரி சானலில் ஒரு நீண்ட டாக்குமெண்டரி பார்த்த எஃபெக்ட் இருந்தது. உங்களுக்கு நல்ல நியாபக சக்திதான் சார்.
"இந்தியாவோ சுமார் 10 லட்சம் அகதிகள் வருகையால் மூச்சு திணறியது."
1971சல் பங்களாதேசத்திலிருந்து இந்தியாவிற்க்கு வந்த அகதிகள் எண்ணிக்கை 100-120 லட்சம், அதாவது 10-12 மில்லியன். 9 மாதங்களில் பாகிஸ்தான சேனையினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. இது ஹிட்லரின் ரெகார்டை விட தூக்கியடிக்கிறது.
அப்பொழுது வெளியான பத்திரிக்கைகளின் கணக்கு. 1971 டிசம்பர் வரவர எண்ணிக்கை அதிகமாகுவதை கவனிக்க.
> Who reported When Number in
> reported millions
> The Baltimore Sun 5/14/71 0.5
> The Momento, Caracas 6/13/71 0.5 - 1.0
> Washington Daily News 6/30/71 0.2
> World Bank Report June, 71 0.2
> Die Zeit, Bon 7/9/71 0.5
> New York Times 7/14/71 0.20 - 0.25
> Wall Street Journal 7/23/71 0.2 - 1.0
> The Christian Sci. Mon 7/31/71 0.25 - 1.00
> Newsweek 8/2/71 0.25
> Time 9/2/71 0.2 - 1.0
> Newsweek 3/27/72 1.5
> National Geographic Sept. 1972 3
விஜயராகவன்
//1971சல் பங்களாதேசத்திலிருந்து இந்தியாவிற்க்கு வந்த அகதிகள் எண்ணிக்கை 100-120 லட்சம், அதாவது 10-12 மில்லியன்.//
நன்றி. திருத்தி எழுதி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
தங்களின் "ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy " தொடர் பதிவினை படித்தேன்.
நேரு, இந்திரா காந்தி போன்றோரை பற்றி மிக குறைவாகவே அறிந்த எனக்கு தங்களின் பதிவு பயனுள்ளதாக இருந்தது. ஏன் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்? இல்லை வேறு லிங்க் ஏதாவது உள்ளதா? தயவுசெய்து பதில் கூறவும்..
நன்றியுடன்
கமல்காந்த்.
Post a Comment