கர்னாடகாவில் ஒரு கேவலமான அரசியல் குதிரை பேரம் நடந்து முடிந்தது. அது வெற்றி பெறவில்லை என்ற ஒரு எண்ணம் மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட 3 கட்சிகளுமே, அதாவது பா.ஜ.க., மத சார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ், கேவலமாக நடந்து கொண்டன. ஆயினும் கேவலத்திலும் கேவலமாக நடந்து கொண்டது பா.ஜ.க. மட்டுமே.
தேவ கௌடா தன் கட்சி முதலில் செய்த ஒப்பந்தத்தை மீறியபோதே சுதாரித்திருக்க வேண்டும். அவர்களிடம் அதற்கு மேல் அரசியல் நாகரிகம் எதிர்ப்பார்த்திருக்கக் கூடாது. பிறகு அவரே வந்து பேசும்போதாவது மறுத்திருக்க வேண்டும். அந்த மனிதர் நம்பிக்கை துரோகம் செய்வதில் வல்லவர் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த புத்தியும் இல்லாததால் பா.ஜ.க. அவமானப்பட்டு நிற்கிறது. நன்றாக வேண்டும் அதற்கு என்றுதான் கூறத் தோன்றுகிறது.
இம்மாதிரி குதிரை வியாபாரங்கள் நடப்பது இது முதல் தடவை அல்ல. குதிரை வியாபாரத்திலும் சில விதிகள் உண்டு. சம்பந்தப்பட்ட எல்லோருமே சந்தர்ப்பவாதிகளாயினும் இம்மாதிரி வார்த்தை மீறுபவர்கள் முதற்கண் தமது நலனுக்கே விரோதமாக நடக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான் படவேண்டும்.
மேலும் அவமானப்படாது (பட்டதே மிக அதிகம்) போனதற்காக பா.ஜ.க. நன்றியுணர்ச்சிதான் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 19 மாதங்களில் அந்த தேவகௌடா கோமாளித்தனமாக நிபந்தனைகள் என்னவெல்லாம் போட்டு படுத்தியிருப்பாரோ தெரியாது.
இதில் என்ன கொடுமை என்றால் பா.ஜ.க.வுக்கு இம்மாதிரி ஏமாறுவதெல்லாம் புதிதல்ல. ஜெயலலிதாவிடம் கேவலப்பட்டதை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அப்படித்தான் 1996-க்கு அப்புறம் நடந்த தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா குடியரசுத்தலைவரிடம் பா.ஜ.க.வுக்கு தனது ஆதரவு தருவதில் இல்லாத அழும்பெல்லாம் செய்தார். அவர்களே வெறுத்து போய் வேண்டாம் மந்திரி சபை அமைத்தல் என்று கைவிட்ட நிலையில் தனது தூதுவர்களை அனுப்பி இன்னொரு முறை தன்னைக் கேட்டால் தான் ஆதரவு தருவதாகக் கூற அதையும் இவர்கள் நம்பினர். அடுத்த 13 மாதங்களுக்கு ஒரே டார்ச்சர். பிறகு சோனியா காந்தி மற்றும் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருடன் சேர்ந்து மந்திரி சபையைக் கவிழ்த்தார்.
இந்த விஷயத்தில் கருணாநிதி அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. கூட இருக்கும் வரை கபர்தார் எல்லாம் செய்யவில்லை. ஜெயலலிதாவிடம் பட்டும் புத்தி வராமல் மீண்டும் அவருடன் கூட்டு வைத்தது பா.ஜ.க. அவர் பா.ஜ.க. கட்சி சார்பில் திருநாவுக்கரசு நிற்கக் கூடாது என்றெல்லாம் தலையிட்டு செய்த அமர்க்களத்தையெல்லாம் பொறுத்த பின்னரும் எலெக்ஷனில் பிளாங்கி அடித்தது.
இப்போது கர்நாடகா விவகாரம். புத்தியே வராதா இவர்களுக்கு?
1979-லிருந்தே இம்மாதிரி கவிழ்ப்பு வேலைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டன. முதலில் அதைத் துவக்கி வைத்தது இந்திரா காந்தி. போயும் போயும் அவரை நம்பிய சரண்சிங்கைத்தான் சொல்ல வேண்டும். எடியூரப்பாவுக்கு இப்போது ஆனது போலவே சரண்சிங்குக்கும் நடந்தது. பதவி மோகம் வேண்டாம் என்று அரசியல்வாதியிடம் கூறவியலாதுதான். ஆனால் புத்தி வேண்டும் அல்லவா. அடுத்து சில மூவ்களைக் கூடப் பார்க்க வேண்டாமா, சொந்த நலனுக்காகவாவது?
இம்மாதிரி நிலையில் இருந்த எல்லோரிலும் சிறப்பாகச் செயல்பட்டு தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொண்டவர் சந்திரசேகர் மட்டுமே. அவருக்கு அளித்த ஆதரவை ராஜீவ் திடீரென விலக்கிக் கொள்ள, மனிதர் அயரவில்லையே. ஒரு நிமிடம் கூட ராஜீவைக் கெஞ்சவில்லை. வேறு குதிரைப் பேரமும் செய்யவில்லை. நேராகப் போய் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார் குடியரசுத் தலைவரிடம். பிறகு இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ராஜீவ் காந்தியே சந்திரசேகருக்கு பல தூதுகளள அனுப்பி ராஜினாமாவை வாபஸ் வாங்கச் செய்ய முயற்சித்தார். ஆனால் மனிதர் பிடிகொடுக்கவேயில்லை.
சந்திரசேகருக்கு முன்னாலும் சரி அப்புறமும் சரி அவரளவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு மேன்மையாகச் செயல்பட்ட யாருமே இல்லை.
என்ன செய்வது, எல்லோருமே சந்திரசேகர் ஆக முடியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
18 hours ago
42 comments:
ராஜீவ் காந்தி தூது அனுப்பினாரா? பீம்சிங் இது என்ன புதுக்கதை. கவுக்கவேண்டும் என்றுதானே உளவு பார்ப்பதாக பொய் சொல்லி கவிழ்தார்கள். அம்பது நாலு எம்பிய வச்சிக்கிட்டு ராஜினாமா பண்ணாம என்ன சோவுக்கு பேனா பாக்கமுடயும்
ஆம், அனுப்பினார். அக்காலக் கட்டத்தில் நான் டில்லியில்தான் இருந்தேன். நேரிடையாகவே இதையெல்லாம் பேப்பர்களில் நான் படித்தவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
நேரிடையாகவே இதையெல்லாம் பேப்பர்களில் நான் படித்தவன்.
//
அப்ப மத்தவங்கள்ளாம், என்ன மறைமுகமாகவா பேப்பரில் படித்தார்கள் ?
நேரடியாக பேப்பரில் படித்தேன் என்பது ஒரு நல்ல oxymoron.
"ஆம், அனுப்பினார். இதைப் பற்றி அக்காலக் கட்டத்தில் நான் டில்லியில்தான் இருந்தேன். நேரிடையாகவே இதையெல்லாம் பேப்பர்களில் நான் படித்தவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்"
ஏதோ டில்லி என்றதும் " மத்திய அமைச்சரவை" என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். பேப்பரில் வருகிற செய்தியைப் படிக்க டில்லிக்கு போக வேண்டியதில்லை சார். புழல் சிறையில் இருப்பவனும் பேப்பர் வாசிக்கிறான்.
புள்ளிராஜா
டோண்டு அவர்களே, ப.ஜ.க விடம் ஜனதா தளம் (செகுலர்) தலைவர் அனுப்பிய தூதர், ஐயா எங்கள் கட்சியை காங்கிரஸ் உடைக்கப் பார்க்கிறது, நாங்கள் உங்களுக்கு 21 மாதங்கள் முன்பு செய்த வாக்குறுதியை நிரைவேற்றுகிறோம் என்றெல்லாம் சொல்லி, தனித் தனியாக தங்கள் எம் எல் ஏக்கள் அனைவரும் ஆதரவுக் கடிதம் கவர்னரிடம் கொடுத்தது எல்லாம் எதற்காக.
21 மாதங்கள் முன்பு, என்ன portfolioக்கள் ஜனதா தளம் எடுத்துக் கொண்டதோ அதை ப.ஜ.க விடமும் என்ன portfolioக்கள் ப.ஜ.க விடம் இருந்ததோ அது ஜனதா தளமும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதைச் செய்யாமல் எனக்கு அது வேண்டும் அப்பத்தான் ஆதரவு என்றெல்லாம் புதிய கண்டிஷன் போட்டால் ? என்ன கூட்டணி தருமம் (கருமம்) இது ?
கர்னாடகத்தில் நிலவும் இந்தச் சூளலுக்கு முழுக்க முழுக்க ஜனதா தளம் (செகுலர்) தான் காரணம். இதில் காங்கிரசையோ, ப.ஜ.க வையோ குறை கூறுவது இயலாது.
ப.ஜ.க முதல்வர் ராஜினாமா செய்ததன் மூலம் தேவ கவுடாவின் இன்ன பிற நச்சரிப்புகளிலிருந்து விடுதலை பெற்றார் என்பதில் மட்டும் தான் உங்கள் கருத்துடம் நான் ஒத்துப் போகிறேன்.
தேவ கவுடாவையும், அவரது வாரிசு அரசியலும் ஒழிய வேண்டும். அதற்கு கர்னாடக மக்கள் தான் தீர்ப்பு வழங்கவேண்டும்.
இங்கே இன்னொன்றை கவனித்தீர்களா ?
ப.ஜ.க ஆட்சிக்கு வருகிறது என்று தெரிந்த உடனே ஊளையிட்ட ஞான "பீடை"கள் காங்கிரஸுடம் ஜனதா தளம் (செகுலர்) இணைந்து ஆட்சிக்கு வந்தால் வாய்மூடி அமைதி காப்பதை !
இந்த நிகழ்ச்சிகள் நடந்த காலக் கட்டத்தில் பள்ளியில் படித்தவர்கள், சிறுவர்களாக இருந்தவர்கள் ஆகியோரில் பலர் இப்போது பதிவர்கள். அவர்கள் நேரிடையாக பேப்பர்களில் படிக்கவில்லை.
1947-ல் நடந்ததைப் பற்றி நான் நேரிடையாக பேப்பர்களில் அக்காலக்கட்டத்தில் படித்திருக்க இயலாது. அதைத்தான் கூறினேன்.
மற்றப்படி ராஜீவ் சந்திரசேகருக்கு தூதுகள் அனுப்பியது உண்மை. துக்ளக்கிலும் அதைப் பற்றி படித்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஏதோ டில்லி என்றதும் " மத்திய அமைச்சரவை" என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். பேப்பரில் வருகிற செய்தியைப் படிக்க டில்லிக்கு போக வேண்டியதில்லை சார். புழல் சிறையில் இருப்பவனும் பேப்பர் வாசிக்கிறான்.//
டில்லியில் இருந்த போது பல தலைநகர் வம்புகள் நேரிடையாகவே கேட்க இயலும்.
மற்றப்பசி புழல் சிறையில் அவ்வளவு சுலபமாக பேப்பர்கள் எல்லாம் படிக்கக் கிடைக்குமா என்று தெரியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ, இந்த மாதிரி நடந்தால், இதற்கு காரண கர்த்தாவாகியவர்களிடம், தேர்தலுக்கு ஆகும் செலவை பைசா குறையாமல் வசூல் செய்து விடவேண்டும். அப்புறம் பாருங்கள் கௌடா போன்றவர்களின் 'கோடா' பேரங்கள் 'சாதா'வாகி விடும்.
Democracy அது இது என்று பம்மாத்து பண்ணாமல் அதிரடியாக செய்யவேண்டும். எங்கே கூப்பிடுங்கள் சேஷனை!
ps: கர்நாடகா காரர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
//கர்னாடகத்தில் நிலவும் இந்தச் சூழலுக்கு முழுக்க முழுக்க ஜனதா தளம் (செகுலர்) தான் காரணம். இதில் காங்கிரசையோ, ப.ஜ.க வையோ குறை கூறுவது இயலாது.//
இவ்வாறுதான் நடக்கும் என்பதை சிறு குழந்தை கூட கூறியிருக்கும். மேலும் நான் பா.ஜ.க. ஆதரவாளன். இம்மாதிரி முட்டாளாக்கப்பட்டதற்காக அதனிடம் மிகுந்த கோபத்தில்தான் இப்பதிவையே போட்டேன்.
ஜனதா தளம் தண்ணி தெளித்த கேஸ். அதைப் பற்றி எனக்கு என்ன பேச்சு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சந்திரசேகருக்கு முன்னாலும் சரி அப்புறமும் சரி அவரளவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு மேன்மையாகச் செயல்பட்ட யாருமே இல்லை.//
Why not? V.P. Singh did not beg BJP to continue support. It is due to this principled position of VP, Chandrasekhar got a chance to become PM.
//Why not? V.P. Singh did not beg BJP to continue support. It is due to this principled position of VP, Chandrasekhar got a chance to become PM.//
தவறான தகவல். வி.பி. சிங் உடனேயே ராஜினாமா எல்லாம் செய்யவில்லை. பாராளுமன்றத்தில் எப்படியாவது பெரும்பான்மையை காட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கடைசி வரை எங்கேங்கோவெல்லாம் ஆதரவு திரட்ட முயன்றார்.
அவர் ராஜீவின் முதுகில் குத்தியதால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கிட்டவில்லை. இருப்பினும் எல்லாவற்றையும் முயன்று, முடியாமல் கடைசியில் அழுவாச்சியுடன் ராஜினாமா செய்தார்.
பா.ஜ.க. விடம் எப்படி ஆதரவு கேட்க முடியும்? அப்போதைய அரசியல் சூழ்நிலைகள் அதற்கு ஆதரவாக இல்லை.
மேலும் அவர் பிரதமரானதே ஒரு மோசடியின் பேரில்தான். முதலில் ஹ்டலைவர் தேர்தல் நடப்பதாக இருந்தது. சந்திரசேகரும் கோதாவில் இருந்தார். பிறகு தேவிலாலை பிரதம மந்திரி ஆக வி.பி. சிங் முன்மொழிய அதை சந்திரசேகரும் வழி மொழிந்தார். ஆனால் ஏற்கனவே பேசி வைத்து கொண்டபடி தேவிலால் வி.பி. சிங்கையே தேர்ந்தெடுத்து விட்டார். இதை அக்கால டி.வி. நிகழ்ச்சியில் பார்த்தவன். சந்திரசேகர் நன்றாக ஏமாற்றப்பட்டார். அவர் முகத்தில் எல்லா உணர்ச்சிகளும் தாண்டவமாடின.
வி.பி. சிங் என்னும் மனிதர் அரசியலில் ஒரு திருஷ்டி பரிகாரமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பாராளுமன்றத்தில் எப்படியாவது பெரும்பான்மையை காட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கடைசி வரை எங்கேங்கோவெல்லாம் ஆதரவு திரட்ட முயன்றார்.//
Did VP try to import MPs from overseas or what?
Other than left parties, only BJP or Congress was in a position to save his government. He did not seek support from either of them to stay in power. He went through the constitutional obligation of seeking vote of confidence. When he lost he resigned. That is not azuvaachi method it is a due process. If he really wanted to stay in power, he could have compromised with BJP and would have asked his party CM Lalu Prasad not to arrest Advani.
Chandrasekhar could have been the contender for PM but how many MPs were willing to support him? Not even Devi Lal. Sekhar might have been the President of Janata Dal, but it was VP's popularity at that time that made National Front victorious not the other way around. For that matter Chandrasekhar was President of Janata Party even in 1977 but Morarji was chosen as Prime Minister.
//Other than left parties, only BJP or Congress was in a position to save his government. He did not seek support from either of them to stay in power.//
Fact was, he was hoping against hope and was banking on the TINA (There is no alternative) factor. I was closely follwoing the shenanigans at that time and being in Delhi, there were many things that I could know. That he waited till the last moment showed only his desperation and he was covered with ridicule for the trouble.
//Chandrasekhar could have been the contender for PM//
Then what was the necessity for the rigmarole of proposing Devilal first and then furetively slipping in at the last moment?
As for Chandrasekahar's case, his prompt resignation took everybody by surprise, especially Rajiv Gandhi. And when he was PM he boldly took steps which any other PM in his position would have hesitated to do. He just governed the country.
Regards,
Dondu N.Raghavan
At least V.P.Singh was firm in his position of implementing Reservation.
His loosing power showed every one that BJP does not care for HINDUS, but cares only for a subset of Hindus :) :)
As far as I know, the act of Vajpayee, who went at 10 AM to Rashtrapathi Pawan in May 2004 when he saw the Results Trend was the most impressive.
(Not the Vajpayee of 1996 or 1998)
//
His loosing power showed every one that BJP does not care for HINDUS, but cares only for a subset of Hindus :) :)
//
What does, VP singh losing power and never gaining it again showed ?
//
இவ்வாறுதான் நடக்கும் என்பதை சிறு குழந்தை கூட கூறியிருக்கும். மேலும் நான் பா.ஜ.க. ஆதரவாளன். இம்மாதிரி முட்டாளாக்கப்பட்டதற்காக அதனிடம் மிகுந்த கோபத்தில்தான் இப்பதிவையே போட்டேன்.
//
ப.ஜ.க பட்டுத் தெரிந்து கொள்ளட்டுமே. எப்பத்தான் அந்தப் பாழாய்ப்போன experience வந்துது தொலைப்பது ?
இனி தேவ கவு (க்கும்) டா வை எந்த நாயாவது சீந்துமா ?
//At least V.P.Singh was firm in his position of implementing Reservation.//
அது வெறுமனே ஒரு அரசியல் ஸ்டண்ட் அவ்வளவே. அத்வானியின் ரதயாத்திரை அடைந்த வெற்றியை அவரால் பொறுக்க இயலவில்லை. ஆகவே 20 ஆண்டுகளாக தூசி படிந்து கிடந்த மண்டல் கமிஷன் அறிக்கைக்கு அது நிகழ்காலத்துக்கும் பொருந்துகிறதா என்றெல்லாம் பார்க்காமல் உயிர் கொடுத்தார். அதன் பலன் இன்றுவரை தொடர்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///மற்றப்பசி புழல் சிறையில் அவ்வளவு சுலபமாக பேப்பர்கள் எல்லாம் படிக்கக் கிடைக்குமா என்று தெரியாது.///
டோண்டு சார். மற்றபசி புழல் சிறையில் எல்லா பேப்பருமே கிடைக்கிறது...துக்ளக் புத்தகம் கூட வருகிறது...
தொலைக்காட்சியில் திரைப்படங்களும் போட்டுத்தொலைக்கிறார்கள்...
தீபாவளிக்கு வந்த பொல்லாதவன் கூட திருட்டு வி.சி.டியில் போடப்பட்டுவிட்டது தெரியுமோ ?
மற்றபடி சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது நான் பேப்பர் நேரிடையாக படித்தேன்...டில்லி செய்திகளை படிக்க டில்லிக்குத்தான் போகவேண்டும் என்று இல்லையே...உலகத்திலேயே சிறந்த நாளிதழான தினமலர் எங்கள் வீட்டில் வருவது வழக்கம்...அதில் பொய் கலப்பில்லாத செய்திகள் மற்றும் வாசகர் கடிதம் போன்றவற்றை எழுத்துக்கூட்டி வாசித்தேன்...
வாஜபேயி பிரதமராக இருந்தபோது வீட்டில் எனக்கு ஓரளவு வாய்ஸ் வந்தபோது, தினமலர் பிடிக்காமல் தினத்தந்தி போடவைத்தேன்..ஏன் என்றா கேட்கிறீர்கள்....தினமும் காலையில் அந்த 'கிழ' மூஞ்சை (நான் அப்படித்தான் சொல்வேன்) முதல் பக்கத்தில் போட்டு கொடுமைப்படுத்தியது தினமலர்...
அதுவும் வாஜபேயிக்கு மூட்டு ஆப்பரேஷன் நடந்தபோது அந்த மூட்டை கூட க்ளோஸப் போட்டாவாக போட்டு மகிழந்தது தினமலர்...ஒரு கட்டத்தில் நெஞ்சு எரிச்சல் தாங்க முடியாமல் காலையில் வந்த தினமலரை கசக்கி தூக்கி எறிந்துவிட்டேன்...
பிறகு நடந்த பஞ்சாயத்தில் தினமலருக்கு பதில் தினத்தந்தி போடும்படி தீர்ப்பெழுதினார் நாட்டாமை...
சந்திரசேகர் பற்றி எனக்கு தெரிந்தது என்னவென்றால் (எல்லாம் பழைய பேப்பர் படித்து தெரிந்துகொண்டது) - எப்போது பிரதமர் பற்றி பேச்சு வருகிறதோ அப்போதெல்லாம் நானு நானு எனக்கு எனக்கு என்று அல்ப்பையாக அலையுவாராமே ? உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க டோண்டு சார்...
//தீபாவளிக்கு வந்த பொல்லாதவன் கூட திருட்டு வி.சி.டியில் போடப்பட்டுவிட்டது தெரியுமோ ?//
போடட்டுமே. அழகிய தமிழ் மகன் போட்டார்களாமா? :))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//போடட்டுமே. அழகிய தமிழ் மகன் போட்டார்களாமா? :))))))))//
ஏன் ? சிறையில் இருக்கும் அனைவரையும் கூண்டோடு கொல்லவா ?
சிறையில் திரைப்படங்களை பார்த்தும் பேப்பரை படித்தும்தான் குற்றவாளிகள் அப்டேட் ஆகிறார்கள்..
மேலும் கடந்த இரண்டு மாதமாக மைனாரிட்டி தி.மு.க அரசு அனைத்து அ.இ.அ.திமுகவினரையும் உள்ளே தள்ளுகிறது ( ரபி பெர்னாடு அதைத்தான் ரெண்டு மாதமாக செயா டிவியில் புலம்பிக்கொண்டுள்ளார், இதுல லோக்கல் கவுன்ஸிலர்கள் லோக்கல் பாஷையில் கொடுக்கும் பேட்டி வேறு...கொடுமைடா சாமி)
இதுபோன்ற அரசியல் குற்றவாளிகள் எப்படி பொழுதை கழிப்பது ?
ஆனால் தி.மு.க அரசியல் குற்றவாளிகள் கொஞ்சம் கொடுத்துவைத்தவர்கள் தான்...முரசொலியில் கலைஞர் பக்கம் பக்கமாக எழுதி வருகிறார் கடந்த ஒரு வாரமாக...
அதை எழுத்துக்கூட்டி படித்துகொண்டிருந்தால் பாதி நேரம் போயிரும்...
மேலும் சிறையில் கம்புயூட்டர் இருக்கிறது...அதை ஆப்பரேட் செய்யத்தெரிஞ்சவங்க அங்கே சென்று டாஸ் பேஸுடு கேம்ஸ் கூட விளையாடலாம்...
புரட்சித்தளபதி விஷால் மட்டும் முதலமைச்சாராவட்டும்...சிறையில் சினிமா ஷூட்டிங்கே வைக்கும்படி கோரிக்கை விடுக்கலாம்...
/*
அவர்களே வெறுத்து போய் வேண்டாம் மந்திரி சபை அமைத்தல் என்று கைவிட்ட நிலையில் தனது தூதுவர்களை அனுப்பி இன்னொரு முறை தன்னைக் கேட்டால் தான் ஆதரவு தருவதாகக் கூற அதையும் இவர்கள் நம்பினர். அடுத்த 13 மாதங்களுக்கு ஒரே டார்ச்சர்.
*/
athu enna taarchchar enRum solli irukkalaamee...
/* எல்லோருமே சந்திரசேகர் ஆக முடியுமா? */
உண்மைதான். எல்லோராலும் சந்திரசேகர் ஆகவும் முடியாது.. உம்மைபோல் உண்மையாக (!!!) யாரும் பதிவும் எழுத முடியாது..
"சந்திரசேகர் என்ற சந்தர்ப்பவாதி!" லக்கியின் பதிவு --
http://madippakkam.blogspot.com/2007/11/blog-post_21.html
துக்ளக்கின் எதிர்கால ஆசிரியருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
<==
துக்ளக்கிலும் அதைப் பற்றி படித்துள்ளேன்.==>
என்னமோ இங்கே விவாதிக்கிறவர்களெல்லாம் துக்ளக்கில் வருவன எல்லாம் அப்படியே அக்மார்க் உண்மை என்று ஒத்துக்கொண்டுவிடப்போகிறார்களா
<==
செந்தழல் ரவி said...
டோண்டு சார். மற்றபசி புழல் சிறையில் எல்லா பேப்பருமே கிடைக்கிறது...துக்ளக் புத்தகம் கூட வருகிறது... ==>செந்தழல் ரவி,
அப்படியா, எப்போது புழல் சிறையிலிருந்து (பெயிலில்) வந்தீர்கள்(சும்மா ஒரு தமாசுக்குத்தான்)
//What does, VP singh losing power and never gaining it again showed //
That BJP is hell bent on acting against the majority of indians safe guarding only one sect.
நான் கர்நாடக சென்றிருந்த போது எனது பொட்டி(computer) துறை நண்பர் ஒருவர் சொன்னது,
கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தளம், மிக அருமையான ஆட்சி செய்தது போல் அவர்களுக்கு நினைப்பு,
முதலில் அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியது தேர்தலை தான், பின் நடந்த பேரம்?!!
ப.ஜா.க. விற்கு ஆட்சியை கொடுக்க முன் வந்தார்களாம், பின் ஏனோ தெரியவில்லை,
(பேரம் படிய வில்லை போலிருக்கு ) ஆதரவை விளக்கி கொண்டார்கள்,
ஒரு தேர்தலுக்கு ஆகும் செலவை அவர்களே கொடுப்பதென்றால் எத்தனை தேர்தல் வேண்டுமாலும் நடத்தி கொள்ளடும்,
யார் அப்பன் விட்டு காசு ?
வால்பையன்
//ப.ஜா.க. விற்கு ஆட்சியை கொடுக்க முன் வந்தார்களாம், பின் ஏனோ தெரியவில்லை, (பேரம் படியவில்லை போலிருக்கு ) ஆதரவை விலக்கி கொண்டார்கள்..//
இப்பதிவு பா.ஜ.க.வையே முக்கியமாக சாடினாலும் ஜனதா தளமும் லேசுப்பட்டதல்ல. 40 மாதங்கள் அடுத்த தேர்தலுக்கு இருந்த நிலையில் இரு கட்சிகளும் ஒப்பந்தம் போட்டன. அதன்படி முதல் 20 மாதங்களுக்கு தேவகௌடாவின் மகன் முதன் மந்திரியாகவும் எடியூரப்பா உதவி முதல் மந்திரியாகவும் இருந்தனர். அடுத்த 20 மாதம் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஆரம்பம்.
இப்போதூ ஜனதா தளம் இந்த ஒப்பந்தத்தை ஒரு தலைபட்சமாக நிராகரித்தது. பா.ஜ.க. மந்திரிகள் ராஜினாமா செய்து, கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதாக கவர்னரிடம் அறிவிக்க ஜனதாதள அரசு மைனாரிட்டி அரசு ஆயிற்று. இந்த நிலையில் ஜனதா தளம் காங்கிரஸ் ஆதரவுடன் அரசு அமைக்க நினைத்தது. காங்கிரஸோ ஜனதா தள சட்டசபை கட்சியையே உடைக்க முயற்சி செய்தது. பிறகு பதறிப் போய் தேவகௌடா மறுபடியும் பா.ஜ.க.விடம் வந்து பழைய ஒப்பந்தத்தை ஏற்குமாறு கெஞ்சினார். அப்போதே பா.ஜ.க.வின் நலனில் அக்கறை கொண்ட சோ அக்கட்சி இதை ஏற்கக் கூடாது என கேட்டு கொண்டார்.
அதை கேட்காததால் பா.ஜ.க. அசிங்கப்பட்டு நிற்கிறது. அதுதான் எனது இப்பதிவுக்கு அடிப்படை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கருணாநிதியை விட சந்திரசேகர் ஒன்றும் பெரிய சந்தர்ப்பவாதி அல்ல என்று நான் போட்ட பின்னூட்டம் எங்கே டோண்டு அவர்களே? இப்பதிவுக்கு சம்பந்தமானதுதானே அது.
லக்கி எதிரி பாசறை
மூன்றாம் மூத்திர சந்து
மடிப்பாக்கம்
"சந்திரசேகர் கருணாநிதியை விட பெரிய சந்தர்ப்பவாதி அல்ல! அல்ல!! அல்ல!!!"
என்று ஒரு முறை சொன்னால் போதாதா? அதை ஏதோ ஏலக்கடைக்காரன் போல ப்லமுறை கூற வேண்டுமா? அதனால்தான் அதை வெலியிடவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
That BJP is hell bent on acting against the majority of indians safe guarding only one sect.
//
The question was about VPSing and not BJP.
Let BJP be the Brahmin janata party, why did OBC's not vote for VP singh in the next election ? What prevented them to vote for their "messiah" of "social justice" ?
Why are you blaming BJP for VP singh's failure ?
//Why are you blaming BJP for VP singh's failure//?
அதுதான் போலி மதசார்பற்ற வியாதிகளின் கலாச்சாரத்தின் பரிமாண வளர்ச்சி.
முச்லிம் லீக்குடன் கூட்டு வைத்து கொள்வது மட்டும் மதசார்பற்ற நடவடிக்கை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெலியிடவில்லை. ?
முச்லிம் லீக் ?
என்ன டோண்டு சார், வயதாகிவிட்டதா ? வார்த்தை தடுமாறுகிறது ?
லக்கி நன்பர் பாசறை
இந்த சந்திரசேகர்தான் கலைஞர் ஆட்சியை சதி செய்து கலைத்தவர். அதை சொல்ல மாட்டீரே??! தன்னலமற்ற ஒப்பற்ற தலைவர் கலைஞரை பற்றி மட்டும் குறை சொல்ல கை நீளுகிறது உமக்கு.
சின்ன கொயந்த. எந்த புத்துல எந்த பாம்புன்னு தெரியாது. சாம்பார்வடைய பேம்ஸ் ஆக்க போஸ்டு போடுவாரு.
லக்கி எதிரி பாசறை.
கடந்தவாரமாக அறிக்கை மேல் அறிக்கையாக வருகிறது கவனித்தீரா ?
1. வயதானவர்கள் போட்டோவை அடைத்துக்கொண்டு போஸ்கொடுக்கிறார்கள். அது தப்பு(ஹி ஹி)
2. இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும். (இதை சொன்னதுக்கு எப்படி கும்முனீங்க நானிய.)
3. ரோமானிய அறிஞர் சாக்குரட்டீஸ் வரலாறு ( நாங்களும் அறிஞர், எங்களுக்கும் ஸ்பார்ட்டகஸ் பற்றி தெரியும் ஓமம்.)
அப்கமிங் அறிக்கைஸ்.
4. ஸ்டாலின் நல்லவர் இளைஞர்
5. இளைஞர்கள் முதல்வர் பதவிக்கு வருவது நல்லது.
6. வயதான எனக்கு ஓய்வு தேவை. இப்படித்தான் ஆபிரகாம் லிங்கனும் சொன்னார் ( கதை)
7.கவிதை (வெறுமனே)
8.வர்ட்டா ?
டோண்டு ஐயா,
உங்களை குறை சொல்லும்வகையில் முகமூடியின் பதிவில் பின்னூட்டம் வந்திருக்கிறதே. பார்த்தீர்களா?
முகமூடி ஒரு பார்ப்பனராக இருந்தும் மற்றொரு பார்ப்பனரைப் பற்றிய இந்தப் பின்னூட்டத்தை வெளியிடுவது சரியா?
>Anonymous said...
>வெலியிடவில்லை. ?
>முச்லிம் லீக் ?
>என்ன டோண்டு சார், >வயதாகிவிட்டதா ? வார்த்தை >தடுமாறுகிறது ?
>லக்கி நன்பர் பாசறை
"நன்பர்" umakku iLa vayathulEyE வார்த்தை தடுமாறுகிறது
Shift l, Shift s போடாது வெறும் l அல்லது s போட்டதால் வந்த வினை. வேகமாகத் தட்டச்சு செய்யும்போது இம்மாதிரி தவறுகள் சகஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்களை குறை சொல்லும்வகையில் முகமூடியின் பதிவில் பின்னூட்டம் வந்திருக்கிறதே. பார்த்தீர்களா?//
பார்த்தேன். அது பற்றி கருத்து கூற ஏதுமில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://eelabarathi-1.blogspot.com/2007/11/blog-post_5679.html
அதுக்கு என்ன இப்போ ராஜேஷ் அவர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment