என் கணினி குரு முகுந்தனிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதை கீழே தமிழாக்கித் தந்துள்ளேன்.
"இது எப்படி இருக்கு?
தந்தை: "நான் சொல்லும் பெண்ணைத்தான் நீ கட்ட வேண்டும்"
மகன்: "எனது மனைவியை நானே தேர்ந்தெடுத்து கொள்வேன்!"
Father: "நான் சொல்லும் பெண் பில் கேட்ஸின் மகளாயிற்றே."
Son: "ஓ அப்படியா, ... சரிப்பா. நீங்கள் சொல்லற மாதிரி நடந்து கொள்வேன்"
இப்போது - தந்தை பில் கேட்ஸிடம் செல்கிறார்.
தந்தை: "உங்கள் பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கொண்டு வந்துள்ளேன்."
பில் கேட்ஸ்: "ஆனால் என் பெண் இன்னும் சிறுமிதான். கல்யாண வயதில்லை அவளுக்கு!"
தந்தை: "ஆனால் நான் சொல்லும் வரன் உலக வங்கியின் வைஸ் பிரசிடெண்ட்."
பில் கேட்ஸ்: "ஓ, அப்படீன்னாக்க... சரி"
கடைசியில் தந்தை உலக வங்கியின் பிரசிடண்டை காணச் செல்கிறார்.
தந்தை: "வைஸ் பிரசிடண்டாக வருவதற்கு ஒரு அருமையான இளைஞன் தயார்."
பிரசிடெண்ட்: "சரியாப்போச்சு. இருக்கற வைஸ் பிரசிடண்டுகளே எதேஷ்டம்!"
தந்தை: "ஆனால் நான் சிபாரிசு செய்பவன் பில் கேட்ஸின் மாப்பிள்ளையாச்சே."
பிரசிடெண்ட்: "ஓ, அப்படீன்னா...சரி"
இப்படித்தான் பிசினஸ் செய்யோணும்!!
நீதி: உங்க கிட்டே ஒண்ணுமேயில்லேன்னாலும் நீங்கள் முயன்றால் எதை வேண்டுமானாலும் பெறலாம். ஆனாக்க அதற்கு நேர்மறை எண்ணங்கள் அவசியம்.
நாம் என்னவாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும்....பிறகு..... அதைத் திட்டமிட வேண்டும்....நிறைவேற்ற வேண்டும்.....
பகல் கனவோ இரவுக் கனவோ, அவற்றால் பலன் என்ன?
முயற்சி...முயற்சி....துவக்கு...துவக்கு .துவக்கு.......
வெற்றிதான் கிடைக்கும் ...நல்ல விளைவுகள்தான் கிட்டும்.....
முயற்சித்துத்தான் பாருங்களேன்…"
சற்று ஓவர் கற்பனைதான், வெறுங்கை முழம் போடும் வேலைதான். இல்லையென்று சொல்லவில்லை. இருப்பினும் கதையின் நீதி நன்றாக உள்ளது. நான் முன்பொருமுறை சொன்ன கதையின் நீதியை விட நன்றாகவே உள்ளது.
டால்ஸ்டாய் கதை ஒன்று. ஒரு போர்வீரன் போர்முனையிலிருந்து வீட்டுக்கு திரும்புகிறான். நீண்ட பயணம். ரொம்ப தூரம் நடக்க வேண்டும், ஊர் ஊராக. சாப்பாட்டு வேளையில் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த பெண்மணியிடம் தன்னிடம் ஒரு அதிசயக்கல் இருப்பதாகவும் அதை வைத்து நல்ல சூப் தயாரிக்க முடியும் என்றும் கூறுகிறான். அவளும் சரியென்று உள்ளே அனுமதிக்கிறாள். அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைக்கிறான். பாதியளவு தண்ணீர் விடுகிறான். சிறிது உப்பையும் போட்டு விட்டு, பெண்மணியிடம் பேச்சு கொடுக்கிறான். சற்று வெங்காயம் இருந்தால் அவன் தயாரிக்கும் சூப் இன்னும் சூப்பராக இருக்கும் எனக் கூற அவளும் கறிகாய் கூடையை எடுத்து வருகிறாள். விறுவிறுவென வெங்காயத்தை உரித்து அரிந்து பாத்திரத்தில் இட்டு கலக்குகிறான். பிறகு "அடேடே கொத்தமல்லியும் இருக்கிறதே" என்று அதையும் சேர்க்கிறான். பேசிக் கொண்டேயிருக்கையில் அப்பெண்மணி ஏற்கனவே வேக வைத்து கொண்டிருந்த உருளைக்கிழங்கு வாசனை அறையில் நிறைகிறது. அவளிடம் கேட்டு ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கையும் உதிர்த்து சூப்பில் போடுகிறான். சூப் தயார். பெண்மணிக்கு சந்தோஷம். போர் வீரனோ அவளுக்கு அக்கல்லைப் பரிசாகத் தந்து விட்டு தன் வழியே செல்கிறான். அடுத்த ஊருக்கு செல்லும் முன்னால் இதே மாதிரி இன்னொரு கல்லித் தேர்ந்தெடுக்கிறான். அடுத்த ஊரில் இதே மாதிரி இன்னொரு வீட்டின் கதவைத் தட்டுகிறான்.
இதுவும் ஓவராக இருக்கிறது என்று நினைப்பவருக்கு எனது அனுபவத்தையும் கூறுவேன்.
சமீபத்தில் 1971-ல் பம்பாயில் வசித்த போது ஒரு திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கிராஸ் செய்ததற்காக ஸ்க்வாடிடம் மாட்டிக் கொண்டேன். என்னையும் இன்னும் பத்து பேரையும் ரயில்வே மேஜிட்ரேட்டிடம் அழைத்து சென்று அவர் முன்னால் நிறுத்தினர். அவரும் எனக்கு ஐந்து ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று நாள் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கினார். என் பாக்கெட்டில் இருந்தது வெறும் 95 பைசாக்கள் மட்டுமே. கூடவே சீசன் டிக்கெட் அவ்வளவே. என் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து யாராவது நண்பரை வரவழைக்கலாம் என்றால் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது கனக் ராய் என்னும் ஒருவர் என்னை அணுகினார். ஐந்து ரூபாயை தான் எனக்கு அளிப்பதாகவும் நான் வெளியில் சென்றதும் அவர் தந்த போன் எண்ணில் பேசி அவர் மாட்டிக் கொண்டிருப்பதைக் கூற வேண்டும் என கேட்டு கொண்டார். அத்தனை பேரையும் விட்டு என்னை ஏன் தொடர்பு கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு எத்தனை அபராதம் என்று கேட்க அவர் தான் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறியதால் 15 ரூபாய் அபராதம் என்றும், தன்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்ததால் வெளியே செல்ல இயலவில்லை என்றும் கூறினார்.
அதே போல வெளியில் வந்து நேரே அலுவலகம் சென்றேன். எனது மேஜை இழுப்பறையில் இருந்த 15 ரூபாயை எடுத்து திரும்ப கனக் ராய் இருந்த இடத்துக்கு வந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் ஆவலுடன் நான் தொலைபேசியில் செய்தி அனுப்பினேனா எனக் கேட்டார். நான் அவரிடம் 15 ரூபாயைக் கொடுத்து பேசாமல் வெளியில் வந்து விடுமாறு கூறினேன். அவரும் நன்றியுடன் வாங்கிக் கொண்டார். அவர் என்னிடம் கொடுத்திருந்த அவர் பெயர் முகவரி அடங்கிய சீட்டை அவரிடமே திருப்பித் தந்தேன். நான் அவருக்கு எனது முகவரி அடங்கிய சீட்டைக் கொடுத்து பாக்கி பத்து ரூபாயை மணியார்டர் செய்யுமாறு கூறிவிட்டு வந்து விட்டேன். இரண்டே நாளில் மணியார்டர் வந்தது, "நன்றியுடன் கனக் ராய்" என்று.
காலத்தினால் எனக்கு கனக் ராய் செய்த உதவி ஞாலத்திலும் மாணப் பெரிது. அதற்கு எதிர் மரியாதையே அவரை முழுக்க நம்பியது. அவரும் எனது நம்பிக்கையை காப்பாற்றினார். பிறகு அவரை நான் எப்போதுமே பார்க்கவில்லை. இருப்பினும் அவர் என் நினைவில் எப்போதும் இருப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
7 hours ago
26 comments:
அருமையான கதை ,
நம்பிக்கை அளிக்கும் கதை ,
நானும் உங்களது படைப்புகளுக்கு ஒரு வாசகன் ,
அன்புடன்
இரா. செந்தில் நாதன்
நம்பிக்கைதானே வாழ்க்கை.
ஒரு டவுட்டு சார்!!
" நான் அவருக்கு எனது முகவரி அடங்கிய சீட்டைக் கொடுத்து பாக்கி பத்து ரூபாயை மணியார்டர் செய்யுமாறு கூறிவிட்டு வந்து விட்டேன். இரண்டே நாளில் மணியார்டர் வந்தது, "நன்றியுடன் கனக் ராய்" என்று. "
அந்தப் பத்து ரூபாவை அனுப்ப அந்த உயர்ந்த மனிதன் செலவுசெய்த பணம் எவ்வளவு?
அந்தப் பத்து ரூபாவை அனுப்புமாறு நீங்கள் கேட்டபோது உங்க உள் மனசு என்ன சொல்லிச்சு?
புள்ளிராஜா
புள்ளிராஜா அவர்களே,
அச்சமயம் என் மனம் நன்றியால் நிரம்பியிருந்தது. நான் அவரை நம்பியது பெரிய விஷயமே அல்ல. அவர் என்னை முதலில் நம்பியதுதான் மிகவும் பெருமை வாய்ந்தது. பூஜ்யத்திலிருந்து தைரியமாக காரியத்தைத் துவக்கியது அவரே.
அவர் கொடுக்காமல் போய் விடுவார் என்ற எண்ணம் எனக்குள் கிஞ்சித்தும் வரவேயில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். இது ஒரு நல்ல உதாரணம்.
புள்ளிராஜா
நம்பிக்கை கொள்வதற்கு ஆதாரம் தேவையில்லை என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
நம்பிக்கை இருப்பின் ஆதாரங்கள் தேடி வரும் என்பதையும் விளக்கியுள்ளீர்கள்.
நான் ஏற்கனவே கேட்டிருந்த வேண்டுகோளை ஏற்று, பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
ஏற்கனவே, தன்னம்பிக்கை மிக்கவர்கள் நம்பிக்கையோடு வேலையை ஆரம்பிப்பது எளிதுதான்.
ஆனால், தன்னம்பிக்கையை இழந்தவர்கள் அதை அடைய என்ன செய்யவேண்டும்?
நீங்கள் நம்பிக்கை இழந்த சூழல் எதேனும் இருந்து, அதிலிருந்து நீங்கள் வெற்றிகரமாக வெளியேறியது குறித்து நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள்.
அல்லது, உங்களுக்குத் தெரிந்த நம்பிக்கை இழந்த ஒருவர் நம்பிக்கையைப் பெற்று வாழ்வில் முன்னேறியது எங்கனம் என்பதை நீங்கள் சொல்லலாம்.
மீண்டும் நன்றிகள் !
உண்மைதான் டோண்டு சார். தேவைப்படும்போது தமிழ் ஆகா ஒகோ என்று பேச வேண்டும். ஆனால் பைசா என்று வரும்போது பிற மொழிகளில் மொழிபெர்யர்ப்பு செய்து பாக்கெட்டை ரொப்பிக்கொண்டுவிட்டு தமிழையும் தமிழுக்காக பாடுபட்டு வரும்
பகுத்தறிவாளர்களை திட்ட வேண்டும். மனதிருந்தால் எப்படி வேண்டுமானாலும் கருத்து பல்டி அடித்து வெற்றி பெறலாம். பைசாதானே முக்கியம்?
//ஆனால் பைசா என்று வரும்போது பிற மொழிகளில் மொழிபெர்யர்ப்பு செய்து பாக்கெட்டை ரொப்பிக்கொண்டுவிட்டு...//
சரிதான், உமக்கு தமிழே தகராறுதான் போலிருக்கிறது. என்னிடம் 6 மொழிகள் உள்ளன. அவை அத்தனையிலும் மொழிபெயர்ப்பேன், அவற்றில் இத்தாலியனைத் தவிர மீதி மொழிகளில் துபாஷி வேலை செய்வேன். ஏனெனில் அது என் வேலை. அந்த மொழிகளில் தமிழும் முக்கிய இடம் வகிக்கிறது.
அதுவும் நான் தமிழ் மணத்தில் இருப்பதற்கு ஒரு காரணம் என்றெல்லாம் எழுதியுள்ளேனே பல பதிவுகளில். அவற்றையெல்லாம் படிக்கவில்லையா? போய் படியுங்கள்.
நான் என்ன ஊருக்கு மட்டும் தமிழ் படி என்று கூறி விட்டு என் பேத்திகளை மட்டும் டில்லி மேட்டர்டே ஆங்கில மீடியம், இந்தி இரண்டாம் மொழி பள்ளியில் சேர்த்தேன்?
இல்லை நான் என்ன டி.வி.யில் மட்டும் தமிழ்ப்பாடம் நடத்தி "என் பேரப்பசங்கள் ஆங்கிலம் படிப்பது எனது பிரச்சினை இல்லை" என்று சொன்ன பேராசிரியர் நன்னனா?
போய் சரியாக வீட்டுப்பாடம் படித்து விட்டு வாருங்கள் உண்மையான அடையாளத்துடன். அப்படியில்லை கருத்துதான் முக்கியம் என்று கூறினால் நீங்கள் கூறிய கருத்து காலணாவுக்கும் பிரயோசனமில்லாத கருத்து.
டோண்டு ராகவன்
A Joke:
George Bush was sitting in his office wondering whom to invade next when his telephone rang.
"Hello, Mr. Bush!" a heavily accented voice said, "This is Gurmukh from Phagwara, District Kapurthala, Punjab . I am ringing to inform you that we are officially declaring the war on you!"
"Well, Gurmukh," Bush replied, "This is indeed important news! How big is your army"
"Right now," said Gurmukh, after a moment's calculation, "there is myself, my cousin Sukhdev, my next door neighbor Bhagat, and the entire kabaddi team from the gurudwara. That makes eight"
Bush paused. "I must tell you, Gurmukh that I have one million men in my army waiting to move on my command."
"Arrey O! Main kya..." said Gurmukh. "I'll have to ring you back!"
Sure enough, Gurmukh rang again the next day.
"Mr. Bush, the war is still on! We have managed to get ourselves airborne.... .. We've modified Amrik's tractor by adding a couple of shotguns, sticking on some wings and the pind's generator. Four school pass boys from Malpur have joined us as well!"
Bush was silent for a minute and then cleared his throat. "I must tell you, Gurmukh, that I have 10,000 bombers and 20,000 fighter planes. My military complex is surrounded by laser-guided, surface-to-air missile sites. And since we last spoke, I've increased my army to TWO MILLION!"
"Tera pala hove....." said Gurmuk, "I'll have to ring you back."
Sure enough, Gurmukh called again the next day.
"Kiddan, Mr.Bush! I am sorry to tell you that we have had to call off the war."
"I'm sorry to hear that," said Bush. "Why the sudden change of heart"
"Well," said Gurmukh, "we've all had a long chat over a couple of lassi's, and decided there's no way we can feed two million prisoners of war!"
NOW THAT'S CALLED CONFIDENCE.
//நீங்கள் நம்பிக்கை இழந்த சூழல் எதேனும் இருந்து, அதிலிருந்து நீங்கள் வெற்றிகரமாக வெளியேறியது குறித்து நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள்.//
இதற்கு தனிப் பதிவே போட வேண்டும். ஆயினும் உடனடி பதிலாக எனது முரட்டு வைத்தியங்களையே முதலில் சுட்டுவேன். அவை மேற்கொண்ட சமயங்கள் நெருக்கடி மிகுந்தவை.
எப்படியும் இன்னும் விரிவான பதிவு ஒன்றையும் போடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எப்படியும் இன்னும் விரிவான பதிவு ஒன்றையும் போடுவேன்.
//
என்ன கொடுமை டோண்டு சார் இது?
பிரகாஷ்.
//என்ன கொடுமை டோண்டு சார் இது?//
பெங்களூர் ரசிகரைக் கேளுங்கள்.
:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
idhu varai kelviye padadha nalla kathai.Idhai ungal kanini guru solli irukkamattar.Adhuvum neengale vidum kadhai
TVR
ராதாகிருஷ்ணன் அவர்களே,
இக்கதை முகுந்தன் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பியது, மின்னஞ்சல் மூலமாக. தினமும் 5 மின்னஞ்சல்களுக்கு குறையாமல் அவனிடமிருந்து வருகின்றன. சுவையாக இருப்பதை தமிழ்ப்படுத்துவேன் அவ்வளவே.
இதே கதை அவனுக்கும் மின்னஞ்சல் மூலமாகத்தான் வந்திருக்கும் என நினைக்கிறேன்.
இது சாதாரணமாக ஆணி பிடுங்குபவர்கள் செய்யும் வேலைதானே. :))
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனைத்தும் அருமையான கதைகள். ஆனால், எல்லாம் ஏற்கனவே படித்த கதைகள்...
ஆம் சீனு அவர்களே.
http://sirippu.blogspot.com/2007/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ungalai nambi eppadi 10 rupee koduthaar oruvar?!! (just kidding sir... dont mistake me!!)
Selvan
//இல்லை நான் என்ன டி.வி.யில் மட்டும் தமிழ்ப்பாடம் நடத்தி "என் பேரப்பசங்கள் ஆங்கிலம் படிப்பது எனது பிரச்சினை இல்லை" என்று சொன்ன பேராசிரியர் நன்னனா?//
Did Nannan really say that?!!! aacharyam!!
Selvan
<===
decided there's no way we can feed two million prisoners of war!" ==>
ஹா ஹா ஹா
இதுதான் சூப்பர்
//சரிதான், உமக்கு தமிழே தகராறுதான் போலிருக்கிறது. என்னிடம் 6 மொழிகள் உள்ளன. அவை அத்தனையிலும் மொழிபெயர்ப்பேன், அவற்றில் இத்தாலியனைத் தவிர மீதி மொழிகளில் துபாஷி வேலை செய்வேன். ஏனெனில் அது என் வேலை. அந்த மொழிகளில் தமிழும் முக்கிய இடம் வகிக்கிறது.
அதுவும் நான் தமிழ் மணத்தில் இருப்பதற்கு ஒரு காரணம் என்றெல்லாம் எழுதியுள்ளேனே பல பதிவுகளில். அவற்றையெல்லாம் படிக்கவில்லையா? போய் படியுங்கள்.
நான் என்ன ஊருக்கு மட்டும் தமிழ் படி என்று கூறி விட்டு என் பேத்திகளை மட்டும் டில்லி மேட்டர்டே ஆங்கில மீடியம், இந்தி இரண்டாம் மொழி பள்ளியில் சேர்த்தேன்?
இல்லை நான் என்ன டி.வி.யில் மட்டும் தமிழ்ப்பாடம் நடத்தி "என் பேரப்பசங்கள் ஆங்கிலம் படிப்பது எனது பிரச்சினை இல்லை" என்று சொன்ன பேராசிரியர் நன்னனா?
போய் சரியாக வீட்டுப்பாடம் படித்து விட்டு வாருங்கள் உண்மையான அடையாளத்துடன். அப்படியில்லை கருத்துதான் முக்கியம் என்று கூறினால் நீங்கள் கூறிய கருத்து காலணாவுக்கும் பிரயோசனமில்லாத கருத்து.
டோண்டு ராகவன்
//
உங்களை குறிப்பிட்டு சொல்லாதபோதே 'நான் இப்படி நான் அப்படி' என்கிறீர்களே!!! ஒரு பழமொழி உண்டு!! "எங்கப்பன் குதிருக்குள் இல்லை"!!!
//உங்களை குறிப்பிட்டு சொல்லாதபோதே..//
என்னுடைய இப்பதிவில் நான் மட்டும்தானே மொழிபெயர்ப்பாளன். என்னைக் குறிப்பிடாது ஆனந்தரங்கம் பிள்ளையையா குறிப்பிட்டிருப்பீர்கள்?
டோண்டு ராகவன்
Sorry for asking this question here. May I know what is the equivalent tamil word for "Simulation"? It is needed for a student to provide in his final year project. Thanks in advance.
Simulation `= பாவிப்பு, உருப்போலி, போலி நிகழ்வு
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா
பேராசிரியர் நன்னன் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் தவறான தகவல். அவர் மருமகன் தனது காரில் தமிழில் நம்பர் எழுதி வைத்திருக்கும் அழவுக்கு தமிழ்ப் பற்றாளர். அவர் பேத்தி சிறந்த மேடைப் பேச்சாளர். அவர் பேரன் ஐ.டி திறையில் வேலை பார்த்தாலும் நன்றாக தமிழில் கவிதை கட்டுரை எழுதக்கூடியவர். அவரது கொள்ளு பேரனையும் அவ்வாறே வளர்த்து வருகின்றனர்.
அன்புடன்
அசோகன்
பி.கு.எனது மிக நெருங்கிய தோழர் சரவணன் பேராசிரியர் நன்னன் வீட்டில் தரைத் தளத்தில் 15 வருட காலமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அசோகன் அவர்களே,
எண்பதுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். அப்போது தமிழக அரசு கட்டாயத் தமிழ்க்கல்வியை தமிழகத்தில் இருந்த பள்ளிகளுக்கெல்லாம் விஸ்தரிக்க முயன்றது. அதை ஆதரித்து நன்னன் அவர்கள் பேசினார். அச்சமயம் ஒரு பத்திரிகையில் வெளிவந்த ஒரு கலந்துரையாடல் போது அவரது பேரக்குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வி பெற்றுவருவதை பற்றி கேட்க, நன்னன் அவர்கள் அது இங்கு சம்பந்தமில்லாத விஷயம் எனக் கூறியதை நானே அக்காலக்கட்டத்தில் படித்துள்ளேன்.
அதேபோல அன்புமணி அவர்களே கோடைக்கானைலில் உள்ள கான்வெண்டில் படித்தவர். அவர்து பெண்கள் கிட்டத்தட்ட 13 14 வயது வரை சென்னையில்தான் இருந்திருக்கின்றனர். பிறகுதான் டில்லிக்கு சென்றனர். அங்கு சென்ற பிறகுதான் பல கேள்விகள் எழவே, லோதி காலனியில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் அவர்கள் தமிழ் கற்க சென்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான பதிவு! ரசிக்கும்படியாக இருக்கிறது!!
அன்புடன்,
ஜோதிபாரதி.
Post a Comment