12/14/2008

புதுக் கோட்டுக்கு ஜூட்!

இப்பதிவு எனது இந்த ஆங்கிலப் பதிவின் அப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. ஆகவே அதில் குறிப்பிட்டுள்ள வழக்கின் முழுவிவரங்கள் தேவைப்பட்டால் அங்கே போய் பார்த்து கொள்ளலாம்.

வழக்கின் சாராம்சம் பின்வருமாறு:
Airports Authority of India (AAI) மேலாண்மை internationally branded car rental services-களுக்கு விமான நிலையத்தில் செயல்படும் உரிமம் சம்பந்தமாக டெண்டர் விட்டிருந்தது. இந்த சேவை அளிப்பைத் தரும் உள்ளூர் நிறுவனமான Fast Track (P) Ltd. இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அவர்கள் கூறுவது என்னவென்றால், எந்த அடிப்படையில் ஏ.ஏ.ஐ. சர்வதேச பிராண்ட் கார் வாடகை நிறுவனங்களுக்கு மட்டும் இந்த டெண்டர் விடப்பட்டதென கேள்வியை எழுப்பியது. ஆகவே சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தருவிக்குமாறும், இந்த ஆணையை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தொடர்ந்தது.

A.Xavier Arulraj, AAI-வழக்குரைஞர் என்ன கூறினார் என்றால் internationally branded car rental சேவைகள் சம்பந்தமான இந்த டெண்டரில் உள்ள ஷரத்துகள் AAI-யின் வணிக கொள்கை மற்றும் அத்தரிட்டியின் board of directors ஒப்புதல் பெற்றது என்பதே ஆகும்

நீதியரசி கே. சுகுணா அவர்கள் வாதியின் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். அவர் என்ன சொல்கிறார் என்றால், சம்பந்தப்பட்ட டெண்டர் ஷரத்தின் “plain reading”-படி உள்ளூர் டாக்சி நிறுவனங்கள் போட்டி போட தடை ஏதும் இல்லை. ஆனால், இந்த ஷரத்தை (internationally branded car rental services) பூர்த்தி செய்தால் போதும் என்பதே.


இப்போது டோண்டு ராகவன்:

என் முதல் கேள்வி: "plain reading" என்றால் என்ன? அதற்கு பொருள் "prima facie" (முதல் பார்வையில்) என மதிப்புக்குரிய நீதிபதி கருதுகிறாரா? அப்படியென்றால் இதற்காகத்தான் வழக்கே போடப்பட்டது என கருதுகிறேன். மேற்படி செய்தியிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஏன் இந்த முடிவை அத்தாரிட்டி எடுத்தது என்பதைத் தெரிந்து கொள்ள கால் டாக்சி நிறுவனம் முயன்றுள்ளது என்பதே. மேலும், "internationally branded" என்ற சொற்றொடர் எதை சுட்டுகிறது? வண்டியையா அல்லது வாடகை சேவை அளிக்கும் நிறுவனத்தையா? இதுவும் தெரிய வேண்டும், "internationally branded" என்றால் என்ன? சம்பந்தப்பட்ட ஆவணங்களில் இதற்கெல்லாம் விடை கண்டிப்பாக கிடைத்திருக்கும். தேவையான definitions கிடைத்திருக்கும். இல்லையென்றால், இதற்காகவே இந்த டெண்டரை ரத்து செய்திருக்க வேண்டும். ஆவணங்களை ஒரு வேளை நீதிபதியின் பார்வைக்கு வைத்திருக்கலாம். ஆனால் இது பற்றி இந்த ரிப்போர்ட்டில் ஒன்றும் கூறப்படவில்லை. (இதனால் எல்லாம் நான் இந்தத் தீர்ப்பை கேள்வி கேட்கிறேன் என பொருள் கொள்ளலாகாது. ரிப்போர்ட்டில் முழுவிவரம் இல்லாத நிலையில் அவ்வாறு கேள்வியும் கேட்கக் கூடாது என்பதும் நிஜமே).

ஆனால் அத்தாரிட்டியை கேள்வி கேட்கலாம். எது எப்படி இருந்தாலும் ஏன் internationally branded car rental services மட்டும்தான் டெண்டர் தரமுடியும் எனக் கூறவேண்டும்? சேவையில் ஈடுபடுத்தப்படும் கார்களுக்கு தரநிர்ணயம் செய்யலாம், அவற்றை ஓட்டப் போகும் டிரைவர்கள் பலான பலான திறமைகள் இருக்க வேண்டும் எனக் கூறலாம். கார்கள் குறிப்பிட்ட நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட வேண்டும் என ஷரத்து போடலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணை மேல் வை என்னும் ரேஞ்சில் internationally branded car rental services எனத் தொங்குவது சந்தேகத்தை அளிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே போல ஒரு டெண்டர் பற்றி படித்துள்ளேன். அது மினிவேன்களுக்கான டெண்டர். அதை வரைவு செய்த கிளார்க் மினிவேன் என்பதற்கு பதிலாக Matadors என குறிப்பிட்டு விட்டார். அவருக்கு புரிந்தவரை மினிவேன்கள் எல்லாமே Matadors போலும். ஆனால் அவை ஒரு பிராண்ட் மட்டுமே. இதற்காக "Dynaclippers" (இன்னொரு மினிவேன் பிராண்ட்) வாடகைக்கு தரும் வேறொரு சேவை அளிப்பவர் கோர்ட்டுக்கு சென்று, நீதிபதி plain reading காரணத்தை கூறி Dynaclippers தரும் நிறுவனம் Matadors-ம் தரலாம் என முடிவு கூறினால் எப்படியிருக்கும்?

வழக்கறிஞர்களாக செயல்படும் பதிவர் யாரேனும் எனது சந்தேகத்தை தீர்த்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

அது கிடக்கட்டும், இந்தப் பதிவுக்கு ஏன் இந்தத் தலைப்பு என திகைப்புடன் கேட்கும் முரளி மனோஹருக்காக இப்போது மேலும் எழுதுவேன்.

சிறுவயதில் பம்பரம் ஆடுபவர்கள் இப்போதெல்லாம் அருகிவிட்டனர் என நினைக்கிறேன். ஆகவே நான் கூறப்போவதை டி.பி.ஆர். ஜோசஃப், சிவஞானம்ஜி, ராதாகிருஷ்ணன், இராமகி ஐயா ஆகியோர்தான் புரிந்து கொள்ள இயலும்.

ஒரு வட்டம் வரைந்து அதில் பம்ப்ரங்களை வைப்பார்கள். ஒருவன் தன் பம்பரத்தை அவற்றின் மேல் “ஜூட்” என கத்தியவண்ணம் செலுத்த வேண்டும். பம்பரங்கள் சில வெளியில் சிதறும். அவற்றுக்குரியவர்கள் அவற்றை அவசர அவசரமாக எடுத்து, செலுத்தி அப்பீட் செய்ய வேண்டும், முதலில் பம்பரம் விட்டவரும் அப்பீட் எடுக்க வேண்டும். முதலில் அப்பீட் எடுப்பவர் தவிர மீதிப்பேருடைய பம்பரங்கள் மறுபடியும் வட்டத்துக்குள செல்லும். மறுபடி ஜூட் என கத்திக் கொண்டு பம்பரம் செலுத்த வேண்டும், இத்யாதி, இத்யாதி.

இந்த ஜூட் சொல்வதற்கு ஒரு விதிமுறை உண்டு. வட்டம் சில சமயம் அழிந்து விடும். ஆகவே பம்பரம் செலுத்தும் முன்னர் யாராவது அந்த கோட்டை மீண்டும் வரைவர். இப்போது பம்பரம் செலுத்துபவன் “புதுக்கோட்டுக்கு ஜூட்” என கத்திக் கொண்டே பம்பரம் செலுத்த வேண்டும். அப்படி கூறாவிட்டால் அவனது பம்பரமும் வட்டத்துக்குள் பிடிக்கப்படும். இப்போது எல்லோரும் அவனவன் பம்பரத்தை எடுத்து அப்பீட் எடுக்க வேண்டும். இப்படியே விளையாட்டு செல்லும்.

இங்குதான் எனது பெரியப்பா பிள்ளை அம்பி ராகவன் ஒரு வேலை செய்வான். அவன் பம்பரம் உள்ளிருக்கும்போது கேஷுவலாக பம்பரம் செலுத்தப் போகிறவன் பார்க்காதபோது அந்த வட்டத்தை திரும்பப் போடுவான். அதை கவனிக்காத அச்சிறுவன் புதுக்கோட்டுக்கு ஜூட் சொல்லாது வெறுமனே ஜூட் என்றால் அவன் பம்பரம் பிடித்து வைக்கப்படும். ஆகவே இம்மாதிரி வேலைகளுக்கு எங்கள் குடும்பத்தில் புதுக்கோட்டுக்கு ஜூட் விட்டுவிட்டார்கள் எனக் கூறுவோம்.

இப்பதிவை எழுதும்போது அம்பி ராகவன் நினைவுக்கு வந்தான். ஆகவே இத்தலைப்பை வைத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

Unknown said...

//சிறுவயதில் பம்பரம் ஆடுபவர்கள் இப்போதெல்லாம் அருகிவிட்டனர் என நினைக்கிறேன். ஆகவே நான் கூறப்போவதை டி.பி.ஆர். ஜோசஃப், சிவஞானம்ஜி, ராதாகிருஷ்ணன், இராமகி ஐயா ஆகியோர்தான் புரிந்து கொள்ள இயலும்.//

சார் உண்மைதான்.

சுமார் 40,45 வருடங்களுக்கு முன்னால்
பருவ காலங்கள் மாறுவது போல்
தெருவில் விளையாட்டுகள் ஒன்று ஒன்ராய் வரும் என்று வயதில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
அவர்கள் விளையாண்டதாய் சொன்ன விளையாடுக்களில் சில:

பம்பரம்-சிங்கிலி கோஸ்
கோலிக்குண்டு-
கிட்டிப் பல் அல்லது செல்லாங்குச்சி
எறி பந்து
ஐஸ்பால் அல்லது கண்ணாமுச்சி
கல்லா? மண்ணா?
திருடன் போலிஸ்
கோ கோ


இப்போது எல்லா விளயாட்டும் எங்கே போச்சு
எல்லாம் கிரிக்கெட்டுக்குள் போயே போச்சு

Ramesh said...

Sir,

Questioning a courts judgment, falls under the ambit of contempt, if you don't mind.

But you can always file a revision petition in the higher courts, till you are satisfied.

Here in this particular case, I presume the judge has given the verdict of information "as is supplied", i.e., plain speaking, any one owning foreign make cars, could have provided similar service.

dondu(#11168674346665545885) said...

@ரமேஷ்
இதனால் எல்லாம் நான் இந்தத் தீர்ப்பை கேள்வி கேட்கிறேன் என பொருள் கொள்ளலாகாது. ரிப்போர்ட்டில் முழுவிவரம் இல்லாத நிலையில் அவ்வாறு கேள்வியும் கேட்கக் கூடாது என்பதும் நிஜமே.

ஆனால் அத்தாரிட்டியை கேள்வி கேட்கலாம். அதைத்தான் செய்கிறேன்.

எதற்கும் இருக்கட்டும் என பதிவிலும் மேலே உள்ள வரிகளை சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1.What happened to the mega tender of bsnl in respect of gsm expansion ?
2.What is ADC charges hitherto paid by private operators to bsnl?
3.After the abolition of that,it is told by controlling authorities that the cell rate will come down.isn't?
4.In the news papers (frequently) it is being written that the private operators are not paying the due amounts to bsnl( for using the network of bsnl) in due dates ,quoting some legal points.Is it justificable ?
5.Having huge infrastructure , plenty of trained work force and executives ,when bsnl will become the leader in mobile sector?

Anonymous said...

அய்யா,

எனக்கு ப்ரெஞ்ச் ஒரளவு எழுத, படிக்க தெரியும். நல்ல பரிச்சயம் ( Fluency) கிடைக்க மீண்டும் ஆசிரியர் துணை தேவையா? அல்லது புத்தகங்கள் அகராதி துணையுடன் படிப்பதன் மூலம் கற்றுக் கொள்ள முடியுமா? உச்சரிப்பு பற்றிய சந்தேககங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாமா?

Josh

ரவி said...

நீங்கள் பம்பரம் ஆடும்போது அபீட் எடுப்பது என்ற சொல்லாடல் உண்டா ?

dondu(#11168674346665545885) said...

@செந்தழல் ரவி:
உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
@செந்தழல் ரவி:
உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

பம்பரம்-சிங்கிலி கோஸ்
கோலிக்குண்டு-
கிட்டிப் பல் அல்லது செல்லாங்குச்சி
எறி பந்து
ஐஸ்பால் அல்லது கண்ணாமுச்சி
கல்லா? மண்ணா?
திருடன் போலிஸ்
கோ கோ//

Respected dondu sir,
In your school days ,have you played the above said games? If so say something about
கோலிக்குண்டு-
கிட்டிப் பல் அல்லது செல்லாங்குச்சி, as these are new terms for this younger generation.
ramakrishnahari

T.V.ராதாகிருஷ்ணன் said...

விளையாட்டுகளை விடுங்கள்..இன்றைய அடுக்ககங்களில் வளரும் குழந்தைகள்..பௌர்ணமி முழு நிலைவைக்கூட ரசித்திருப்பார்களா என தெரிய வில்லை.

Sethu Raman said...

When you used the word 'apeet' in one of your previous posts, I concluded you are one of the Top players of the bygone days - the tops are still available in the temples' vicinity but we have to search for the players. I still love this game, as this, and a ground ball (which has some similarity with the American base ball) were the games we used to play in the olden golden days. the bat - from the coconut tree mattai, and the ball cloth bound stone!! we could not afford either a bat or a ball! nakkeeran pandian - adhu kittip pal illai, kittip puL

dondu(#11168674346665545885) said...

@சேதுராமன்
மன்னிக்கவும். அந்த விளையாட்டுகளை ஆடியிருக்கிறேன். ஆனால் அதிகம் சோபிக்கவில்லை. எனக்கு அவற்றுக்கான லாகவம் எப்போதுமே வந்ததில்லை. கண்டிப்பாக டாப் விளையாட்டுக்காரன் இல்லை. பீச்சுக்கு விளையாடப் போவதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்துக்கு ஓடுவதுதான் எனது வழக்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு ஓட, பீச்சிற்கு போகிறேன் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்?

ஒருவேளை ஏதேனும் ஒரு பழக்கத்தை பீச்சில் போய் தலைமுழுக போனதாக வீட்டில் நினைத்துக்கொண்டார்களோ?

dondu(#11168674346665545885) said...

//அக்வேரியம் பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு ஓட, பீச்சிற்கு போகிறேன் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்?//
இல்லாவிட்டால் அப்பா அம்மா கோபித்து கொள்வார்கள். பீச்சுக்கு விளையாட மட்டுமே போக வேண்டும், அப்போதெல்லாம் அதிலும் சாயங்கால வேளைகளில் படிக்கக் கூடாது என்பதை அவர்கள் திடமாக நம்பினர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சாயங்கால வேளைகளில் படிக்கக் கூடாது என்பதை அவர்கள் திடமாக நம்பினர்.
//

Weird!! Usually parents will say 'study in the evening'!!! Is there any reason behind advising 'not to study in the evening'? May be becuase, you should do physical activities such as games, sports etc. in the evening to stay healthy?

Ram

dondu(#11168674346665545885) said...

//Is there any reason behind advising 'not to study in the evening'?//
நான் எப்போதுமே புத்தகமும் கையுமாக இருப்பவன். அப்புத்தகம் கூட வெறும் பாடப் புத்தகங்கள் அல்ல. கதை புத்தகங்களும் அடங்கும். வீட்டில் கல்கி மற்றும் விகடன் மட்டும்தான் வாங்குவார்கள். குமுதம் எனக்கு ரீடிங் ரூமில்தான் கிடைக்கும்.

எனது தந்தையோ மாலை என்றால் விளையாடத்தான் வேண்டும் என கண்டிப்பு காட்டுவார். அம்மாவும் அப்பா கட்சிதான். வேறு என்ன செய்திருக்க முடியும் நான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Giridharan V said...

To Dondu's Q&A section:

1) Have you read in Thuglak (24/12/2008 edition) for Mr. S. Gurumorrthy's article on comparing the America's economic strength in 1930 with 2008 on the basis of their social culture? What is your opinion on that?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது