நண்பர் நக்கீரன் பாண்டியன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திருப்பதி ஏழுமலையான் குறித்து பலருக்கும் தெரியாத சில விவரங்களை பார்த்தேன். இதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. இதில் உள்ள பல விஷயங்களை நானும் முதன்முறையாகத்தான் பார்க்கிறேன் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன். நக்கீரன் பாண்டியனுக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம் (செப்டம்பர் 2009) இதழுக்கும் என் நன்றி.
திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலைவாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவற்றில் சில.........
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல்சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறன.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
23. திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.
நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம்(செப்டம்பர் 2009). டாக்டர்.இந்தர்சந்த்சுரானா
அன்புடன்,
டோண்டு ராகவன்
சென்னை புத்தகவிழா, ஒரு பழைய கேள்வி
-
அன்புள்ள ஜெ, சென்னை புத்தகவிழா சென்னையின் மிகப்பெரிய பண்பாட்டு நிகழ்வு.
ஆனால் என் குடும்பத்தில் எவருக்கும் அது என்ன என்றே தெரியாது. என்
நண்பர்களிலேயே பலருக...
1 hour ago
53 comments:
நண்பர்கள் பலருக்கும் தகவல்கள் அளித்த உங்களுக்கு நன்றி.
நக்கீரன் பாண்டியன்
மிக மிக அருமையான தகவல்கள்..... மிக்க நன்றி
Srini
நல்ல சுவையான தகவல்கள். நான் சிலா தோரண வாயிலைத் படங்களில் பார்த்து இருக்கின்றேன். நன்றி. தகவல் தந்தமைக்கும், உங்களுக்குத் தந்தவருக்கும்.
நல்ல தொகுப்பு. மிக்க நன்றி.
ராகவன் சார், இவற்றில் சில தவறான தகவல்களும் உள்ளன..
//ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.//
இல்லை.. திருமலையான் திருமேனி முழுதும் சாலக்ராமக் கற்களால் ஆனவை.
// ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது//
காரணம்.. உள்ளே எந்நேரமும் நெய்த்திரி ஏற்றப்படுவதால்
//வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. //
வில்வ இலை தாயாருக்கு அர்ச்சனையின் போது பயன்படுத்தப்படுவது..
//. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது.//
இதை உளறல் என்றே சொல்லலாம்.. பெருமானுக்கு திருமண் தவிர வேறொன்றும் சார்த்தப்படுவதில்லை.
//அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.//
தவறு..
// ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்//
இதுவும் தவறு..செண்பக மரம்
//ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. //
சங்கு சக்கரம் உண்டு.. சிலப்பதிகாரப் பாடலிலும் இதைக் காணலாம்.. தொண்டைமான் சக்ரவர்த்தியிடம் பெருமாள் அன்பு பூண்டிருந்ததால், அவருக்குக் கொடுத்தார்.. பிற்காலத்தில் ஏழுமலையான் சிவன் என்று ஒருசாரார் வாதிக்க.. எம் இராமானுஜர் எம்பெருமானிடமே இதை தீர்த்து வைக்கக்கோரி ஏழுமலையான் மீண்டும் சங்கு சக்கரம் தரித்துக் கொண்டார்.. இப்போதும் திருமஞ்சனத்தின் போது நான்கு கைகளையும் தரிசிக்கலாம்
//. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.//
எந்தக் காலத்திலும் அப்படி நடந்ததாக தகவல் இல்லை.. எல்லாக் காலங்களிலும் அவன் நாராயணனே !!
//ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.//
என்னமோ தன் பக்கத்து வீட்டு மனிதரை ஆண்டாள் வாழ்த்தி வணங்கியது போல் எழுதப்பட்டுள்ளது.. அனைவருக்கும் அவன் அருள் மழை பொழியும் கடவுளே..
டோண்டு சார், முடிந்தால் இதை பிரசுரித்த பத்திரிக்கையாரின் முகவரி தாருங்களேன்.. சரியான தகவல்களோடே சில தவறான தகவல்களை சேர்த்திருப்பது எவ்வளவு பெரிய பிழை என்று தெரியப்படுத்தலாம் அவர்களுக்கு.
தகவல்கள் படித்து பிரமித்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தேன்; மிகவும் நன்றி.
இதோ எனக்குத் தெரிந்த சில விசேஷ தகவல்கள்.
1. பொதுவாக அனைத்துக் கோவில்களிலும், பெருமாளுடன் தாயார், ஆழ்வார் ஆசார்யர்கள் விக்ரகம் உண்டு.. ஆனால் திருமலையில் அவன் ஒருவன் மட்டுமே.. இராமானுஜருக்கு மட்டும் தனிச்சிறப்பாக அவரின் சிலை உண்டு.. வேறு ஆசார்யர்களுக்கோ, ஆழ்வாருக்கோ. ஏன் தாயாருக்கு கூட மார்பில் மட்டுமே இடம்.
பெருமாளுக்கு சார்த்தப்படும் புஷ்பங்கள் இராமானுசரின் சிஷ்யரான அனந்தாழ்வான் கட்டிய நந்தவனத்தில் இருந்து பறிக்கப்படும் பூக்களிலிருந்து மட்டுமே தொடுக்கப்படும். வெளி ஆட்கள் கொண்டு வரும் பூக்கள் அணிவிக்கப்படாது.
திருவரங்கம் இஸ்லாமிய படையெடுப்பினால் சூழப்பட்டபோது.. அங்கிருந்த வைணவர்கள் உற்சவர் ரங்கநாதரை காப்பாற்ற ஊர் ஊராக சுமார் 40 வருடம் சுற்றினர்.. அப்போது திருப்பதியிலும் சில காலம் இருந்தார்.. அது திருமலையினுள் ரங்கமண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
Really very useful....
Wah!Thanks for sharing.
Ragahav- Thanks for the corrections.
Informative & Fantastic post. No, doubt 'Perumaal' has something special always.
thanks
தகவல்கள் நிஜமாகவே பிரமிக்கவைத்தன.
பகிர்வுக்கு நன்றி!
இத்தனை செலவு! அதை, தேவைப்படும் ஏழைகளுக்கு அவர்கள் வாழ்க்கை முன்னேற வழிவகை செய்யலாமே? இப்போது இலவச லட்டு கூட கட்டு. அங்கு விநியோகிக்கப்படும் ஆறின சாப்பாடு வாயில் கூட வைக்க முடியாது!
//அங்கு விநியோகிக்கப்படும் ஆறின சாப்பாடு வாயில் கூட வைக்க முடியாது!//
என்ன உளறல். சுடச்சுட சாதத்தை அப்படியே கொட்டுவார்கள். குழம்பு கைவைக்க முடியாத அளவு சூடு. நானே சாப்பிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கொட்டாவி கொட்டாவியா வருது!
@வால்பையன்
உங்க கிட்டேருந்து கன்னாபின்னான்னு சரமாரியா 28 புல்லட்டுகளுக்கு 30 பின்னூட்டங்கள் வரும்னு எதிர்பார்த்தேன். இப்போதே தூங்கி வழிந்தால் எப்படியாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக இந்தியா வர அனுமதிக்க வேண்டும்: பாஜக---மீண்டும் தமிழர் பாசம்!
2.புலிகளின் ஆயுதக் கப்பலை கைப்பற்றியது இலங்கை---இது என்ன புதுக்கதை!
3.தெலங்கானா விவகாரம்: பிரதமர் நாளை முடிவு- --நல்லதா யாருக்கு!
4.திருச்செந்தூர் தொகுதியில் 79.17% வாக்குப்பதிவு : பெண்களே அதிகம்---கொடுத்த பரிசுகள் கை கொடுத்துவிட்டதா!
5.மக்களவை பாஜக துணைத் தலைவராக கோபிநாத் முண்டே நியமனம் ---இதுவாவது பலன் கொடுக்குமா!
6.கொடநாடு எஸ்டேட் பகுதியில் வேலி அமைப்பது தொடர்பாக மோதல் --கொடநாடு செய்தி இல்லாத நாளும் இனி உண்டோ!
7.இரண்டு மணி வரை உழைக்கிறேன்: மம்தா --பாராட்டுவோம்!
8.ஜெ., வீடு முன் அ.தி.மு.க.,வினர் முற்றுகை --இது கொஞ்சம் ஓவராயில்லை!
9. இடையூறாக இருந்த சிலைகள் அகற்றம் __சபாஷ் தலைவருக்கு!
10.மம்தா புகாருக்கு லாலு பதில் --சிவப்பு சாயம் வெளுத்து போச்சா!
அது காளி தான் என்பதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாத்சாரி நிரூபணம் செய்துள்ளார். விக்ரஹத்தை சுற்றி வந்த பொழுது பின் கூந்தல் இருப்பதை ஊர்ஜிதம் செய்துள்ளார்.
விஜய்
Many Thanks to Thiru Dondu, Nakeeran Pandian and Raghav for sharing the news of My LORD.
Regards
-Venkat
PS: Thirupathi devasthanam helps lot of poor people throught the Devasthanam trust. Anony guy who said this is a waste of money should google for the same.
//அது காளி தான் என்பதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாத்சாரி நிரூபணம் செய்துள்ளார்.//
இது இன்னுமொரு உளறல். ராமானுஜ தாத்தாசாரி, பைத்தியக்காரன் போல உளறியது உங்கள் கண்ணில் படுகிறது.. ஆனால் ஜெகதாசார்யர்களான ஆதி சங்கரரும், ஸ்வாமி இராமானுஜரும் நிரூபித்தது கண்ணில் படவில்லை.. ம் எல்லாம் திருமலையானின் நேரம்.
முதலில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்று அவரது புத்தகத்தை படித்து பாருங்கள். வேதம் உபநிஷதுகளில் கரைகண்ட, மறைந்த ஒருவரை அனாவசியமாக பைத்தியக்காரன் என்று இகழாதீர்கள். இதுதான் உங்கள் பொறுமையா ?
ஆதிசங்கரர், ராமனுஜருக்குமுன் உள்ள வரலாறு என்ன ?
என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது ?
விஜய்
//முதலில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்று அவரது புத்தகத்தை படித்து பாருங்கள். //
எனக்கு அந்த அவசியமே இல்லை.. ஒரு சாரார் ஏழுமலையானை முருகன் என்றும், சிலர் புத்தர் என்றும் உள்றுகின்றனர்.. அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் எம் இராமானுஜரின் நிருபணம் ஒன்றே.. மற்ற அனைவரின் வாதமும் குப்பைகளே.
//உபநிஷதுகளில் கரைகண்ட, மறைந்த ஒருவரை அனாவசியமாக பைத்தியக்காரன் என்று இகழாதீர்கள்//
வேதம் படித்து விட்டு அதற்கு தவறாக அர்த்தம் கூறுபவர்களை கழுதை என்று வேதமே கூறும்போது, அவரின் செயல் பைத்தியக்காரத்தனமானது என்று நான் சொல்லியதில் தவறே இல்லை.. வேதம் படித்திருப்பினும் தவறு தவறு தான்.. அவர் இன்னும் என்னென்ன உளறினார் என்றும் படித்துருக்கிறேன்.
//ஆதிசங்கரர், ராமனுஜருக்குமுன் உள்ள வரலாறு என்ன ?
என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது ?//
ஐயா, சிலப்பதிகாரத்திலும் அவன் திருமாலே என்று உள்ளது.. அதுவும் போதவில்லையா, ஆழ்வார் பாசுரங்களும், புராணங்களும் ஏழுமலையான் நாராயணனே என்று நன்றாக சொல்லியுள்ளன.. இதற்கு மேல் என்ன வேண்டும். ஏதோ ஒருவர் பின்னால் சென்று பார்த்தாராம் காளி என்று “நிரூபித்தாராம்” அந்த உளறலை நீங்கள் வேண்டுமானால் நம்பலாம்.. எனக்கு சிரிப்பு தான் வருகிறது
//ஒருவர் பின்னால் சென்று பார்த்தாராம் காளி என்று “நிரூபித்தாராம்” அந்த உளறலை நீங்கள் வேண்டுமானால் நம்பலாம்.//
அந்த காலத்துல தான் பேண்ட்,சர்ட்டு இல்லேலங்க,
பின்னாடி இருந்து பாக்குறப்ப காளி மாதிரி தெரிஞ்சிருக்கலாம்!
//வேதம் படித்து விட்டு அதற்கு தவறாக அர்த்தம் கூறுபவர்களை கழுதை என்று வேதமே கூறும்போது, //
சரியா சொல்றவங்க குதிரைங்களா!?
இப்படி ஈரோட்டு நிகழ்ச்சியில கேள்வி கேட்டு தான் டேமேஜ் ஆகி உட்கார்ந்திருக்கேன்! அப்பவும் புத்தி வரலயே!
//ஒரு சாரார் ஏழுமலையானை முருகன் என்றும், சிலர் புத்தர் என்றும் உள்றுகின்றனர்.//
தண்ணி போட்டா, தண்ணி போடாமலா!?
//இதுதான் உங்கள் பொறுமையா ?//
நான் பொறுமைசாலி தான்.. என்னை நேரடியாக சொல்லும்போது சிரித்துக்கொண்டே தான் பதிலளிப்பேன்..
ஆனால் உண்மையை திரித்துக் கூறும்போது.. பூசி மொழுகி.. “தாத்தாசாரி” சொல்லியது தவறு அவர் அவ்விதம் சொன்னது துரதிருஷ்டம் என்று வழவழா கொழகொழா எல்லாம் கிடையாது.. உளறலை உளறல் என்று தான் சொல்வேன்..
ஹா ஹா.. வால்பையன், நல்லா சிரிச்சேன்..
//வால்பையன் said...
இப்படி ஈரோட்டு நிகழ்ச்சியில கேள்வி கேட்டு தான் டேமேஜ் ஆகி உட்கார்ந்திருக்கேன்! அப்பவும் புத்தி வரலயே//
புரியல வால்பையன் அண்ணா..
//வால்பையன் said...
இப்படி ஈரோட்டு நிகழ்ச்சியில கேள்வி கேட்டு தான் டேமேஜ் ஆகி உட்கார்ந்திருக்கேன்! அப்பவும் புத்தி வரலயே//
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. இந்த பின்னூட்டம் வெளிவராது, ஏன்னா டோண்டு க்கு லெக்பிஸ் குவட்டார் எல்லாம் யாரு தருவா
ராமானுஜர் என்ன அதாரிடியா
அவர் சொல்லறத மட்டும் நம்புறதுக்கு
http://www.youtube.com/watch?v=ybLBma5KwEo&feature=related
watch this
சாமியே இல்லைனா இவனுக நம்பமாட்டாங்க
காளியா பெருமாளான்னு சண்டை வேற
கொடுமைடா சாமியோவ்
கொடுக்கு
மிக மிக அருமையான தகவல்கள்..... மிக்க நன்றி
தாத்தாச்சாரி எல்லாம் ஒரு ஆளுன்னு... ஹூம் எல்லாம்
நேரம்.
அந்தாள கண்டுக்க யாரும் இல்லன்னதும் இப்படி எல்லாம்
லுசுத்தனமா ஏதாவது உளரிக்கிட்டே இருக்குது.
அதுக்கு நக்கீரன் பத்திரிகை துணையாக இருக்கு.
அவர் சொன்னத கொஞ்சம் சீர் தூக்கிப் பார்த்தா உளரலா-
த்தான் தெரியும்.
சங்கராச்சாரியார் மற்றும் ஆதி சங்கரர் 10 நூற்றாண்டுகளுக்கு
முன் வாழ்ந்தவர்கள். அவர்கள் திருமலை தெய்வத்தை
பெருமாளாகவே பாவித்து சேவித்துள்ளார்கள்.
தாத்தாச்சாரியின் அந்த புத்தகம் - இந்து மதம் எங்கே போகிறது
எ - படித்தால் ஒரு இந்து பைத்தியமாவது நிச்சயம்.
ஏதோ தான் தான் எல்லாம் அறிந்தவன் போல் எழுதியிருப்பார்
அவர்.
இவர் தான் 15 ஆண்டுகளுக்கு முன் ராமாயணம் உண்மையா-
க நடந்த நிகழ்ச்சி. ஆனால் இப்போது உள்ளது போலல்ல.
ஹனுமார் கடலைத் தாண்டி இலங்கையை அடையவில்லை
என்றெல்லாம் உளறியிருப்பார்.
////வால்பையன் said...
இப்படி ஈரோட்டு நிகழ்ச்சியில கேள்வி கேட்டு தான் டேமேஜ் ஆகி உட்கார்ந்திருக்கேன்! அப்பவும் புத்தி வரலயே//
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. இந்த பின்னூட்டம் வெளிவராது, ஏன்னா டோண்டு க்கு லெக்பிஸ் குவட்டார் எல்லாம் யாரு தருவா //
வெளிவரும்!
விடிஞ்சா இல்ல!
அன்னைக்கு நைட்டே போச்சு!,
அதையெல்லாம் நான் ஸ்டோர் பண்ணிகிறதில்ல,
டோண்டுவுக்கு மட்டுமில்ல, உங்களுக்கும் வாங்கிதருவேன்! அட்ரஸுடன் வந்தால்!
கடவுளை நம்புறவன் எல்லாமே பைத்தியம் தான்
அதுல நீயும் ஒண்ணு
டோண்டு குறளுக்கு பொருள் எழுதினால்?
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
@அனானி
குறள் க்ர்ர்ள்விகள் 31.12.2009 பதிவுக்கான வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Raghav sir...en ivlo veri ;)...
Aalvarkadiyaan blog comment eludhra madiriye irunduchu...
Ariyum Sivanum Onnum Ariyadhavan Vaaila....
No hard feelings...
இங்கே பலர் பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. கடவுள் "உங்கள் உள்ளே" இருக்கிறார். அதை விட்டு பட்டை, எந்த நாமம், எந்த நகை, எந்த அபிஷேகம், எந்த கல், இதை பற்றி என்ன விவாதம் .
-சுவாமிநாதன்
//Ariyum Sivanum Onnum Ariyadhavan Vaaila....
No hard feelings...
//
No feelings.. only deelings. ithu madhiri eththanayo pazhamozhi irukku.. kundru irukkum idamellam kumaran irukkum idam nu.. appo parangi malai la irukkurathum kumaran thaan nu solluveengalaa.. :)
Kovilnu varum pothu anthantha sannathi theivangalai avaraaghath thaan vanangha vendum... palani murugan thaaney thavira.. avar enakkku perumaal thaaannu oruththar nirubanam panni irukkarnu sonnaa oththuppengalaa.. athu madhiri thaan tirumalayum..
Tirumalai iraivan narayananey.. veru evarendru sonnaalum athu thavaru thaan..
//இங்கே பலர் பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. கடவுள் "உங்கள் உள்ளே" இருக்கிறார். அதை விட்டு பட்டை, எந்த நாமம், எந்த நகை, எந்த அபிஷேகம், எந்த கல், இதை பற்றி என்ன விவாதம் .
-சுவாமிநாதன்//
SuvaamiNathan Sir,
Enakkum sirippu thaan varuthu.. sangu chakkaram, abhaya hastham, thiruman ippudi makkalukku therinja "adayaalam" irunthey perumaala kaali nnu sonna siruppu varath thaaney seyyum. :)
(Sry, i am out of town, so not able to type in Tamil)
ஒங்களையெல்லாம் திருத்த ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்த மாட்டீங்க
சங்கு சக்கரம் திருமண் எவ்வளவு காலம் தான் ஓட்டுவீங்க
சாமியை உங்க பக்கத்தில வச்சுக்குவீங்க
அதுக்கு ஒரு கதை கட்டுவீங்க
கொஞ்ச நாளைக்கும் வேற ஆள்கிட்ட கொடுங்களேன் பார்ப்போம்
கொடுமையப்பா
Post a Comment