தினகரன் இணையதளத்தில் வந்தது இந்த செய்தி
சென்னை : பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் இன்று (அதாவது நேற்று 16.05.2010) மாலை மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 62. இறுதிச் சடங்கு நாளை மாலை (அதாவது இன்று, 17.05.2010) நடக்கிறது. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக்கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய, 'சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்' உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. இவரது, 'மழைக்கால மல்லிகைகள், சந்திப்பு தொடரும்' நாவல்கள் பிரபலமானவை. அவரது எழுத்துக்கள் பல விருதுகளை அவருக்குப் பெற்றுத்தந்தன. சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் ராஜகோபால் முதல் தெருவில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒருவாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர், இன்று மாலை மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் இரவு வால்மீகி நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு சுதா, சுபா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அனுராதா ரமணனின் இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
அவரது சிறை மற்றும் கூட்டுப் புழுக்கள் என்னைக் கவர்ந்தன. மாத நாவல்களை நிறைய வாங்கி வந்த காலகட்டத்தில் ஏதேனும் புதிய நாவல் அனுராதா ரமணனுடையதாக காணப்பட்டால் புரட்டிக்கூட பார்க்காமலேயே வாங்கி விடுவேன். ஏனெனில், எனக்கு அவரது கதைகள் சொதப்பாது என்பதில் அவ்வளவு நம்பிக்கை. கல்கியில் தொடர்கதையாக வந்த “மாம் ஃப்ரம் இண்டியா” ஒரே தமாஷாக விறுவிறென சென்றது.
பிரபல கேரக்டர் ஆக்டர் பாலசுப்பிரமணியத்தின் பேத்தி அவர். அவரது இளமை நினைவுகளை சுவைபட பல இடங்களில் எழுதியுள்ளார். அவரது திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது. கணவர் மோசமாக அமைந்து விட்டார். நல்ல வேளையாக சீக்கிரமே மண்டையை போட்டார். தனது இருமகள்களையும் நல்லபடி வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்து தனது வாழ்க்கைக் கடமைகளை நல்லபடியாகவே முடித்தார்.
ஆம்பல்மலர் என்னும் பெயருடைய வலைப்பூவில் பார்த்த வரிகள் இங்கு இடுவது பொருத்தமாக இருக்கும். அவை அவர் அனுராதா ரமணனுக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளன.
சகோதரி அனுராதா ரமணன் அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் கைவண்ணத்தால் உருவான எத்தனையோ கதைகளை படித்திருந்தாலும், தினமலர் வாரமலர் ''அந்தரங்கம்'' பகுதியில் தாங்கள் அளிக்கும் ஆறுதலும், அரவணைப்பும், வழிக்காட்டலும் எம்மை மெய்மறக்கச் செய்யும். அதன் தாக்கம் தான் இக்கடிதம்.
தவறுகள் பல விதமாய்
தறிக்கெட்ட பாதைகளில்
தவளும் நினைவுகளோ
தகிக்கிறது எழுத்துக்களில்.
பயமாய், பாவமாய்,
நடுக்கமாய், நாசரமாய் (நாரசமாய் )
உணர்வுகள் எத்தனையோ
அத்தனையும் எழுத்துக்களில்.
பரவசமோ உணர்வினிலே,
தடுமாற்றமோ மனதினிலே.
சீரமைத்துக் கொள்ளவே,
வழிகளைத் தேடியே,
உமை நாடி வருகின்றார்,
அந்தரங்கத்தை வெளிப்படுத்தி.
ஆறுதல் அளிக்கும் அம்மாவாய்,
வழி நடத்தும் சகோதரியாய்,
தட்டிக் கொடுக்கும் தோழியாய்,
ரணம் அகற்றும் மருத்துவராய்,
பாவப்பட்ட ஜென்மங்களுக்கு
கடவுளாய்,
உமை நினைத்து
வெள்ளைத் தாட்களில்
கோடுகளை கிறுக்கி வைப்பார்
கோளங்களாய் மாற்றச் சொல்லி.
கழிவுகளை கழித்து விட்டு,
சுகமென்னும் நினைவுகளை
மனத்தினிலே சுமந்திடவே,
மனச்சுமைகளை உம்மிடமே
இறக்கியே வைக்கின்றார்.
நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும்
வாசிக்கின்ற எங்களையே
வருத்தெடுக்கும் எண்ணங்கள்.
மனத்தையே உறைய வைக்கும்.
உடலையும் சிலிர்க்க வைக்கும்.
கண்களை கரைய வைக்கும்.
வந்து உமை தாக்கும்
வேதனை அம்புகளால்
ஆறா ரணமாய்
நிற்கா குருதியுடன்
நித்தமும் துடிப்பீரோ.
அவர் வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக ரசிப்பவர் என்பதை பல முறை பலவிதமாகக் கூறியுள்ளார். உதாரணத்துக்கு:
சந்திப்பு : மாயன் (குமுதம் ஜங்ஷன்): “நான் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையின் பக்தை. அன்னைக்காக தினமும் நூறுரூபாய் வரை பூக்கள் வாங்குவேன். தாமரைப்பூ, செண்பகப்பூ என்று பலவிதமான பூக்கள்.
எழுதுவதற்காக உட்கார்ந்தால் எழுத்துகள், வார்த்தைகள், வரிகள், பக்கங்கள், அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது என் பழக்கம். எழுதிக் கொண்டிருக்கிறபோதே முன்பின் தெரியாத சிநேகிதிகள் எனக்கு போன் செய்வார்கள். அவர்களின் பிரச்னையை எடுத்துச் சொல்வார்கள். அவர்களின் பிரச்னையை போனிலேயே தீர்த்து வைப்பேன்.
பகல் நேரத்தில் என்னை யாராவது பார்த்தால் புல் மேக்கப்பில் இருப்பேன். ‘மேடம், எங்கேயாவது வெளியே போறீங்களா?’ என்று என்னைப் பார்த்து நிச்சயம் கேட்பார்கள். இந்த அலங்காரத்தை நான் வேஷமாக நினைப்பதில்லை. உற்சாகமாக இருக்க இதுவும் அவசியம் என்று எனக்குப் படுகிறது.
அவரது பூதவுடல் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் மூலம் சாவா வரம் பெற்றவராகவே இருப்பார் என்பது ஒரு க்ளீஷேவாக பட்டாலும், இங்கு முற்றிலும் பொருந்துகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
14 hours ago
50 comments:
௨
அன்னாரின் வாழ்க்கை பல போராட்டங்கள் நிறைந்தது.அனைத்தையும் துணிவுடன் சந்தித்து வெற்றி கொண்டவர்.
அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
அவரது நடை என்னைப் பெரிதும் கவர்ந்ததில்லை. ஆனால் அவரது உழைப்பு பிரம்மிக்கத்தக்கது. கிட்டத்தட்ட 1000 சிறுகதைகளும் 800 நாவல்களும் எழுதியுள்ளாராமே!
அவர் வெளிகொணர இருந்த பல ரகசியங்கள் அவருடன் மறைந்து போனது துரதிர்ஷ்டமே!
- சிமுலேஷன்
டோண்டு சார் ...
62 ஒன்றும் விடை பெறும் வயதல்ல தான் ...என்ன செய்வது ?...
அனுராதா அவர்களின் படைப்புகள் என்னை ஒருபோதும் வசீகரித்ததில்லை என்றாலும் சமூகத்திற்கு அதற்கான தேவை இருந்தது என்றும் அவரால் பலரும் உத்வேகமும் ஆறுதலும் அடைந்தனர் என நன்றாகவே அறிவேன் ...
தின மணி கதிரில் அவர் எழுதிய தொடரின் சில பகுதிகள் என் மன ஊஞ்சலில் ஆடுகின்றன ...
அனுவின் வாரமலர் அந்தரங்கம் பகுதியின் மறைமுக தொணி எனக்கு உவப்பானதல்ல... மஜா மல்லிகா?
அப்புறம் ...
//கணவர் மோசமாக அமைந்து விட்டார். நல்ல வேளையாக சீக்கிரமே மண்டையை போட்டார்//
ஏனிந்த குரூரம் மிஸ்டர் டோண்டு ?
வேறென்ன சொல்ல ......
உச்ச அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட தானே வணங்கி வந்த காஞ்சி மடாதிபதி அவர்களின் மீது அவர் வைத்த குற்றசாட்டுகள் மிகவும் தைரியமானவை ... அதற்கான நீதியை பெற முடியாமலே விடை பெற்று விட்டார் ....
விபச்சாரி கூட தன் மகளை கூட்டிக் கொடுக்க மாட்டார் என அவர் கூறியதின் வலி இன்னமும் என் நெஞ்சில் இருக்கின்றது ....
பிடித்தவரோ பிடிக்காதவரோ , நம் மொழியோ பிற மொழியோ , நம் தேசத்தவரோ அயல் நாட்டவரோ , எந்தவொரு
எழுத்தாளரின் மறைவின் போதும் கண்ணில் நீர் எட்டிப் பார்க்கிறது ...
வருகிறேன் டோண்டு சார் ...
@நியோ
குரூரமே இல்லை. அந்த மனிதரால் அப்பெண்மணி அடைந்த துயரங்களை படித்திருந்தால் நீங்களும் அந்த எண்ணத்துக்கே வந்திருப்பீர்கள்.
அவரது பல கதைகளில் குடும்பத்தை நிர்வகிக்கும் லாயக்கே இன்றி குடித்து ஊர் சுற்றி வந்து பெற்றோர்களை படுத்திய பிள்ளைகளுக்கு திருமணம் செய்தால் திருந்தி விடுவான் என்ற குருட்டு நம்பிக்கையில் பல அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையை பலியாக்கிய பல சம்பவங்கள் வரும். அவையனைத்தும் அவரது சொந்த அனுபவமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் ...
எனக்கு அனுவின் குடும்ப வாழ்கையின் வேதனைகள் தெரியாத ஒன்று...
குரூரமே இல்லை என்று உறுதியாக நீங்கள் கருதுவீர்களன்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை...
ஆனால் எவருடைய இறப்பையும் மண்டையை போட்டு விட்டான் என நான் ஒருபோதும் கூற மாட்டேன் ...
காஞ்சி பெரியவர் மீது அனு வைத்த குற்றச்சாட்டுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள் ...
நிச்சயமாய் விவாதத்துக்காய் கேட்கவில்லை ...
உங்கள் கருத்தை அறியும் ஆவல் தவிர வேறொன்றுமில்லை ...
9 மணிக்கு power cut ஆகி 12 மணிக்கு தான் இங்கு வரும் ...
பின்னர் வருகிறேன் ....
//காஞ்சி பெரியவர் மீது அனு வைத்த குற்றச்சாட்டுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள் ...//
அனு பொய்யுரைப்பார் என்பதை நான் நம்பவில்லை. அதுவும் இம்மாதிரியான விஷயங்களை பெண்கள் ஜாக்கிரதையாகவே கையாளுவார்கள். ஏனெனில் இது சம்பந்தமாக அவர்கள்மீதும் சேறடிக்க முயற்சிகள் நடக்கும்.
இந்த விவகாரத்தை நான் இங்கு அடக்கி வாசிக்கும் காரணமே ஜெயேந்திரருக்காக இல்லை. காலன்சென்ற அனுவின் மேல் வேறு யாரும் அவதூறு செய்யக்கூடாது என்பதாலேயே.
நீங்கள் யோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது, அவ்வாறான தோற்றத்தையும் அளிக்க வேண்டும் என்று பொருள் வருமாறு ஆங்கிலத்தில் It is not sufficient that you are honest, you should also appear to be honest ஒரு சொலவடை உண்டு.
அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை. மீதி விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி மேலே பேச விருப்பம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I agree with neo when he says Dondu Ragavan uses undignified Tamil.
இறத்தலை மண்டையைப்போடுதல் என்பது undignfified expression.
next,the word, சுடுகாடு.
It is also undignified. Please find out a better word for this.
About the late writer.
அனுராதா அவர்கள் இளம் வயதில் விதவையானவர். ஆனால், தம் விதவைத்தனம் தம்மோடு என்ற கொள்கையுடையவராதலால், தன்னைப் பூவும், பொட்டோடே வெளியுலகத்திற்கு காட்டிக்கொண்டவர்.
இது முதற்கொண்டோ, பார்ப்பனீய, சனாதனவாதிகளுக்கும், இவருக்கும் பிரச்ச்னையிருந்துகொண்டே வந்தது. பலபொதுமேடைகளில் இவர் பழிக்கப்பட்டார்.
இப்போது அவர்கள் நிம்மதியடைவார்கள்.
As a writer, she appeasl to common people, not for literary readers. இலக்கியவாதிகள் இவரைபெரிய எழுத்தாளர் என ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், மற்றவர்கள் இவரைப்படித்து மகிழ்ந்தார்கள். ஜனரஞசக பத்திரிக்கைகள் இவரை வைத்துப்பிழைப்பைத் தேடிக்கொண்டன.
It is a death of a famous modern-day anti-brahmin, that too, a woman anti-brahmin (anti-brahminism).
It is a loss for people like us, the anti-brahmins. Our brigade has lost one indomitable warrior.
She should have lived longer to make the orthodox brahmins like sankarachaariyaar etc restless.
//அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை. மீதி விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி மேலே பேச விருப்பம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
ஒரு இடத்தில் குண்டு வெடித்தாலோ, மலேக்கான் உட்பட குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டாலோ அது இஸ்லாமிய தீவிரவாதியின் வேலையாகத்தான் இருக்கும் என்று நம்பும் மனம் (உங்களைச் சொல்லவில்லை) சங்கரராமன் வழக்கில் பெரியவா குற்றவாளியாக இருக்காது, கோர்ட் முடிவுச் சொல்லட்டும் என்று கூறுவது வியப்பே இல்லை.
*******
எழுத்தாளர் அனுராதா அம்மா சிறந்த எழுத்தாளர் என்பதைவிட பெண்ணிய புரட்சிகர சிந்தனையாளர் என்பதால் அன்னாருக்கு வணக்கங்கள்.
//சங்கரராமன் வழக்கில் பெரியவா குற்றவாளியாக இருக்காது, கோர்ட் முடிவுச் சொல்லட்டும் என்று கூறுவது வியப்பே இல்லை.//
இதிலும் அவர் என்னைப் பொருத்தவரை (you should also appear to be honest) தேறவில்லை என்றுதான் கூறவேன்.
அதாவது கோர்ட்டே அவரை விடுவித்தாலும் என் மனதில் அவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏதும் வராது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//I agree with neo when he says Dondu Ragavan uses undignified Tamil.//
அந்தாள் இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்திருந்தால் அவன் செய்த டார்ச்சருக்கு இப்பெண்மணி தற்கொலை கூட செய்து கொடிருப்பார், ஒரு நல்ல எழுத்தாளர் நமக்கு கிடைக்காமல் போயிருப்பார்.
ஆகவே கூறுகிறேன், good riddance.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதிலும் அவர் என்னைப் பொருத்தவரை (you should also appear to be honest) தேறவில்லை என்றுதான் கூறவேன்.
அதாவது கோர்ட்டே அவரை விடுவித்தாலும் என் மனதில் அவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏதும் வராது.//
கொலை செய்யப்பட்டவர் ஒரு ஐயங்கார் என்பதால் கொலை செய்தத் தூண்டியவர் ஐயர் என்பதால் பார்பனர்களுக்குள் உள்பிரிவு பாலிடிக்ஸ் படி ஐயங்காருக்கு ஆதாரவாக இதைச் சொல்கிறீர்கள் என்று கொள்ளலாமா ?
நீங்கள் போடும் பலிஜா நாயிடு முடிச்சுப் போன்றது கொஞ்சம் எதிர்மறையானது.
"கொலை செய்யப்பட்டவர் ஒரு ஐயங்கார் என்பதால் கொலை செய்தத் தூண்டியவர் ஐயர் என்பதால் பார்பனர்களுக்குள் உள்பிரிவு பாலிடிக்ஸ் படி ஐயங்காருக்கு ஆதாரவாக இதைச் சொல்கிறீர்கள் என்று கொள்ளலாமா ?"
கொலை செய்யப்பட்டவர் அய்யங்கார் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்; வரதராஜ பெருமாள் கோயிலில் செத்தார் என்பதால் அவர் அய்யங்கார்தான் என்று முடிவுகட்டி விட்டீர்களோ!
-கண்ணன்.
///அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை///
Parava illai anna...
Neengal en manathil theriviteer
R Kanthasamy
@கோவி கண்ணன்
நிச்சயமாக இறந்தவர் ஐயங்காராகவே இருந்திருந்தாலும் அது நான் கூறியதை மாற்றியிருக்காது. (சங்கர என்று பெயரில் வருவதால் ஐயங்கார் பெயராக இருக்கும் வாய்ப்பு குறைவு).
சோ அவர்களை பற்றி நான் இட்ட இந்த இடுகையின் ஒரு பின்னூட்டத்தில் நான் கூறிய இந்த வரிகளை எதற்கும் பாருங்கள்.
//சோவின் ஒரு தனித்தன்மை என்று நான் கருதுவது என்னவென்றால் அது அவருடையத் தன்னம்பிக்கை நிறைந்தத் துணிச்சல் என்பதுதான். சங்கராச்சாரியாரின் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். தருமபுரி வழக்கை இழுத்தடிக்கும் அம்மாவின் அரசு இதில் இவ்வாறு முனைவது ஏன் என்று அவர் கேட்பதில் என்னத் தவற்றைக் கண்டீர்கள்? அதை விடுங்கள். உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். போலீஸார் வேண்டுமென்றே எல்லா விவரங்களையும் பத்திரிகைகளுக்கு லீக் செய்யவில்லையா? சங்கராச்சாரியார் ஒப்புதல் வாகுமூலம் கொடுத்து மன்னித்து விடுமாறுக் கதறி அழுததாக நக்கீரன் எழுதியது முன்னால். இப்போது பேச்சு மூச்சே இல்லை. உச்ச நீதி மன்றத்தில் துளசி வழியாத அசடா? இப்பொது? தமிழக அரசின் செயல்பாட்டில் குறையிருப்பதால்தானே வழக்குகள் பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டன?
சங்கராச்சாரியார் குற்றம் செய்தாரா இல்லையா என்பதை கோர்ட் பார்த்துக் கொள்ளும் அதற்கு முன்னரே நம்முடைய கிசு கிசு பத்திரிகைகள் அவரைப் பற்றி நாக்கூசாமல் எழுதின. எந்த அடிப்படையில்? சோவிற்கு இவ்வாறு எல்லோரும் சேர்ந்து ஒரு பட்சமாக ஒருவருக்கு தர்ம அடி கொடுப்பது பிடிக்காது. அதனால் அவர் தன் தரப்பிலிருந்து எழுதுவது ஒரு பேலன்ஸிங் செயலாகத்தான் இருக்க முடியும். குற்றச்சாட்டுகளில் இருக்கும் முரண்பாட்டுக்கு அரசால் என்னச் சமாதானம் கூற முடிந்தது?
சங்கரராமன் ஒரு ப்ளாக்மெயிலர் என்று ஜனவரி 2005 மீட்டிங்கில் குறிப்பிட்டார். அவர் கொல்லப்பட்டார் என்றுக் கூறியதற்கு "அதனால் அவர் ப்ளாக்மெயிலர் என்பது பொய்யாகி விடாது" என்று கர்ஜித்தார். ம்யூஸிக் அகாடெமி ஹாலில் இது எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. இக்கேஸைப் பற்றிய அவருடையப் பேச்சுக்களிலும் எல்லாத் தரப்பையும் பார்த்துத்தான் அவர் பேசினார். நான் அதற்கு நேரடி சாட்சி. இந்த நியாயமான அணுகுமுறை எவ்வளவு பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் என நினைக்கிறீர்கள்?//
பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
பிளாக்மெயிலர்களை எனக்கு பிடிக்காது என்பது வேறு விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hi Dondu,
Congrats!
Your story titled 'பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைந்தார்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th May 2010 05:14:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/252168
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி தமிழிஸ்,
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அனுராதா மறைந்தார்" என்று சொல்லி தமிலிஷ் உங்க போட்டோவை காட்டுது. என்ன கூத்து இது?
மேலதிகத் தகவல்கள்.
கடந்த 10 வருடங்களாக அனுராதா ரமணன் ஜக்கி வாசுதேவ் (ஈஷா யோக மையம்)ஐ பின்பற்றியவர்.
அனுராதாவின் தங்கை ஜயந்தி - எழுத்தாளர் சு(ரேஷ்)பாவின் மனைவி. (விகடனில் ஜக்கிவாசுதேவ் கட்டுரைகளை எழுதிவந்தவர்கள் சுபா.)
அனுராதாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதம் தாக்கியபோது, நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். ஜக்கிவாசுதேவ் யோகமுறைகளில் மீண்டு வந்தார். அவர் ஒரு சர்க்கரை நோயாளியும் கூட. அதைப்பற்றி மங்கையர் மலரில் தொடராகவே (நகைச்சுவையாக) எழுதிவந்தார்.
ஜயேந்திரர் விஷயத்திற்குப் பின்னும் தினமலர் (வாரமலரில்) அவரது 'அந்தரங்கம்' பகுதி தொடர்ந்தது ஆச்சரியம். அந்தரங்கம் பகுதி மடல்கள் பெரும்பாலும் அடல்ட்ரி பற்றியே இருக்கும்.ஆனாலும் (அதனாலும்?!) வாரமலரின் டாப்-10ல் இந்தப்பகுதி முதல் 3 இடங்களில் இருக்கும் என நினைக்கிறேன்.
Suresh
SAD NEWS
அன்னாரின் மறைவுக்கு வருந்துகின்றேன். ஆத்மசாந்திக்கு பிரார்த்தனைகள்.
அன்பு டோண்டு ...
// கோர்ட்டே அவரை விடுவித்தாலும் என் மனதில் அவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏதும் வராது //
பதிவுக்காக ஒட்டு போடுவதே என் வழக்கம் ; பின்னுட்டத்திற்காய் போடுவது இதுவே முதன் முறை ...
நண்பர்களே ...
எனது பிராமண இன நண்பர்கள் அனைவரும் ஜெயேந்திரர் அவர்கள் மீது அனு கூறிய குற்றச்சாட்டு குறித்து மிகுந்த மழுப்பலாகவோ அல்லது அனு மீது சேற்றை வாரியிரைப்பதாகவோ தான் என்னிடம் கருத்து சொன்னார்கள்.....
டோண்டு அவர்கள் ஏதேனும் மாற்று கருத்துக்கள் கூறும் போது பார்ப்பான் என கும்மி அடிப்பவர்கள், எந்த ஒரு பார்ப்பானும் சொல்ல துணியாத முற்போக்கு பார்வையை < " கோர்ட்டே அவரை விடுவித்தாலும் என் மனதில் அவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏதும் வராது " >டோண்டு கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்களோ மகிழ்ச்சியோ தெரிவித்தாலென்ன?
அப்புறம் டோண்டு சார் ...
// பிளாக்மெயிலர்களை எனக்கு பிடிக்காது என்பது வேறு விஷயம் //
ஆனால் ...
எனக்கு பிளாக்மெயிலர்களை ரொம்ப பிடிக்கும் ; நான் அவ்வாறு ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன் எனினும் ...
அவர்கள் மூலம் சில மறைக்கப்பட்ட உண்மைகளேனும் வெளியாகக் கூடும் என்பதால் ...
சங்கராமன் அவர்கள் பிளாக்மெயிலராகவே இருந்து விட்டு போகட்டும் , அதனால் என்ன குறைந்து போய் விட்டது... எதில் தான் ethics பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ...?
//சங்கரராமன் ஒரு ப்ளாக்மெயிலர் என்று ஜனவரி 2005 மீட்டிங்கில் குறிப்பிட்டார். அவர் கொல்லப்பட்டார் என்றுக் கூறியதற்கு "அதனால் அவர் ப்ளாக்மெயிலர் என்பது பொய்யாகி விடாது" என்று கர்ஜித்தார் சோ//
இதில் கர்ஜிப்பதற்க்கு என்ன சார் இருக்கிறது ? மியாவினார் என்பது தான் பொருத்தமாக இருக்கக் கூடும் ...
//இந்த நியாயமான அணுகுமுறை எவ்வளவு பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் என நினைக்கிறீர்கள்//
எது சார் நியாயமான அணுகுமுறை ? உங்கள் வரி மிகவும் அருவருப்பாக இருக்கிறது ...
அப்புறம் சார் ...
அனுவின் அஞ்சலி பதிவில் சோ அவர்களை பற்றிய பின்னூட்டத்தை மீள் பதிவு செய்வதின் அவசியம் தான் என்ன? மரண வீட்டில் அரசியலுக்கு இடமிருக்கக் கூடாது என்பது என் வேண்டுகோள் ...
பின்னர் வருகிறேன் ....
அனுராதா மரணத்துக்கு வலையுலகில் எவனாவது கவலைபட்டானா
பாப்பான்னா பாப்பாந்தான்யா
//எது சார் நியாயமான அணுகுமுறை ? உங்கள் வரி மிகவும் அருவருப்பாக இருக்கிறது ...//
உங்கள் கருத்து உங்களுடையது, நோ கமெண்ட்ஸ். சம்பந்தப்பட்ட பதிவை காண்டக்ஸுடன் பார்த்து கொள்ளவும்.
நான் ஏற்கனவேயே சில கருத்துக்களை கூறியிருந்தால் அவர்றை சுட்டியுடன் தருவேன், அதில் வந்ததுதான் இது. கோவி கண்ணனுக்கும் பதிலளிக்க வேண்டியிருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் யோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது, அவ்வாறான தோற்றத்தையும் அளிக்க வேண்டும் என்று பொருள் வருமாறு ஆங்கிலத்தில் It is not sufficient that you are honest, you should also appear to be honest ஒரு சொலவடை உண்டு.
அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை. மீதி விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி மேலே பேச விருப்பம் இல்லை.
//
அது எப்படி தோற்றமளிப்பது. உடையிலா.
தற்போதைய காமகோடி இதழில்(போனவருஷம் என்று நினைக்கிறேன்). அவர் அதிமுகவுக்கு சப்போட் பண்ணி எழுதினார். அதாவது கைது விஷயம் நீர்த்துப்போய் விட்டது என்று எழுதினார். இது சரியா.
சிலபேர் தன் யோக வல்லமையால் சில அற்புதங்களை சாதிக்கலாம். அதுக்காக அவர் எப்படி ஞானிஆக முடியும்.
அவரால் நூற்றாண்டுகால பாரம்பரிய மடம் கேலிப்பொருளாகிவிட்டது. அவரின் பேட்டிகூட காமகோடியில் காமடியாக இருக்குது.(நான் காமகோடியின் வாசகன் பல வருடமாக்). இப்போது அந்த இதழப்படிப்பது தப்புன்னு தோணுது.
அந்த ஆள் சரியில்லை என்று சொன்ன உங்களூக்கு நக்கீரன் பட்டம் தரலாம்.
அனுராதா சொன்னது சரியாகத்தான் இருக்கும்.
அவர் படைப்புகள் எனக்கு பிடிக்காதுதான். ஆனாலும் அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்
//next,the word, சுடுகாடு.
It is also undignified. Please find out a better word for this.
the word சுடுகாடு is didnt sound undignified.
சுடுகாடு - சவத்திற்கு நெருப்பிட்டு சாம்பலாக்கும் இடம்.
இடுகாடு - சவத்தை புதைக்குமிடம்.
நம்ம தமிழ்நாட்டானுகிட்ட இருக்குற குறையே இதுதான்; கொஞ்சூண்டு தெரிஞ்சிகிட்டு தொண்டை நரம்பு தெறிக்க கத்தி போராடுவானுங்க.
Even if dondu would have told it in a rude sense nothing is wrong. பொண்ண கேவலமா இழிவா பாக்குறவன், பொண்ண கொடுமை படுத்துறவன் இவனுங்கல்லாம் இருக்குறதுக்கு அகாலமா செத்த்போறது எவ்வளவோ மேல்.
// அனுராதா மரணத்துக்கு வலையுலகில் எவனாவது கவலைபட்டானா
பாப்பான்னா பாப்பாந்தான்யா //
இதிலும் ஏன் துவேசம் அனானி சார் ...
அனுவின் வாசகர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர் அல்லாதோர் என்பது என் ஊகம் ...
படைப்பாளியை பிடிக்காமலிருப்பது என்பது வேறு ....
குறைந்த பட்ச நாகரீகங்கள் நம்மிடையே பெருகட்டும் ...
சமீபகால பதிவுகள் சச்சரவுகள் தவிர்க்க - கேள்வி-பதில் பதிவுகளை மீள்-துவக்கம் செய்யுங்களேன்.
டோண்டு சார்....
//எதில் தான் ethics பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ...?//
விவஸ்தை என்ற வார்த்தை என் கவனக் குறைவின் காரணமாக இடம் பெற்றதற்காக வருந்துகிறேன் ...
உங்கள் பதிவில் சில பின்னூட்டங்களை இட்டதும் உங்கள் பதிலும் மகிழ்ச்சியாக உள்ளது ...
வரும் பதிவுகளில் சந்திப்போம்....
" கோர்ட்டே காஞ்சி பெரியவரை விடுவித்தாலும் என் மனதில் அவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏதும் வராது " என்ற தங்களின் கருத்துக்கு மீண்டும் மகிழ்ச்சி தெரிவிக்கிறேன் ....பிற நண்பர்களும் தங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியை தெரிவிக்க வேண்டுமென விரும்புகிறேன் ...
விடை பெறுகிறேன் சார் .... சந்தோசம் !
//ஆகவே கூறுகிறேன், good riddance.//
இதை முதல்லேயே எழுதியிருக்கலாமில்ல!
sorry Dondu!
தேவையில்லாத அத்தனை விஷயங்களிலும் தன் மூக்கை நுழைக்கும் வழக்கம் உள்ள சோ,சங்கராச்சாரியார் விஷயத்தில் மௌனம் சாதித்தது unexplainable and a black mark for him too.Matter subjudice என்பதெல்லாம் வெறும் சப்பை கட்டு.
blackmailer என்றால் என்ன, கொடூரமாக கொலை செய்துவிடலாமா?இதில் என்ன கர்ஜனை வேறு வேண்டியிருக்கு !! சுத்த உளறல்
@வலைஞன்
பார்க்க:
http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி திரு.ராகவன்.அதை படித்துப்பார்த்தேன்.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என இன்னும் புரியவில்லை.
சங்கரராமன் என்பவர் ஒரு unknown blackmailer.But Swamigal is a well known Mutt head.So yardstick would bound to differ.
எது எப்படியோ,M/s வெங்கட்ராமன்,சேஷன் and சோ இவ்வழக்கை அணுகியவிதம் மிகவும் அதிருப்தி அளிப்பதாக இருந்தது
I was really hurt by the indifference shown by these gentlemen
@வலைஞன்
நான் சொல்ல வந்ததை அப்பதிவில் சரியாகச் சொல்லவில்லை என நினைக்கிறேன்.
ஜெயேந்திரரை அரெஸ்ட் செய்தது பற்றிப் பேசுகையில் அவர் அரசுக்கு வேறு வழியில்லை எறு தெளிவாகவே கூறினார்.
அதே சமயம் அரசு வேறு பல கோமாளி வேலைகள் செய்து தனது செயல்பாட்டை நீர்க்கச் செய்ததும் என்றும் கூறினார்.
ஆனால் இப்போது? 5 ஆண்டுகளுக்கு மேலும் ஆகிவிட்டது. திமுகாவும் ஆட்சிக்கு வந்து விட்டது. இன்னும் ஏன் இந்த இழுபறி என்று கேட்டால் அவாறு கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெயேந்திரனுக்கும்,ஜெய்லலிதாவிற்க்கும் இப்ப ரொம்ப ஸ்ந்தோஷமா இருக்கும்.கேஸ் நேர்மையா நட்ந்திருந்தால் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அ,ரமணன் அவ்வாறு குர்ற்ச்சாட்டு கூறினாறா அல்லது ஜெயேந்திரன் உண்மையாகவே பாலியல் குற்றத்தை புரிந்தானா என்பது தெளிவாகியிருக்கும்.
ஒரு நல்ல எழுத்தாளர்.அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
டோனண்டு சார்
இப்போதெல்லாம் உங்க்கள் பதிவுகளில் அநாகரீக வார்தைகள் நிறய வ்ருகின்றன.(உ.ம்)"சில்லுண்டிபயல்","சீக்கிரமே மண்டையை போட்டார்"," கரடி ராஜேந்தர்"
இவைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன் உங்கள் வாசகன் ஒருவன்
அனுராதா ரமணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரின் கதைகள் சுமார் ரகம் தான்
அவரின் அகனி ஆண்ட்டி (Agony Aunty) சேவை பலருக்கு உதவியிருக்கும் பட்சத்தில் அது ஒரு நல்ல சேவை என நான் நினைக்கிறேன்.
அவர் ஜெயந்திரரைப் பற்றி சொன்ன குற்றசாட்டினால் என் மதிப்பில் அதள பாதளத்திற்கு தள்ளபட்டார்.
ஜெயந்திரர் குற்றவாளி என நீதி மன்றம் தீர்பளித்தாலும், பாரம்பரிய மடத்தை (அதனால் இந்து மதத்தை) தலித் மக்களுக்கு கொண்டு சென்றதால் அவரை நான் தலை வணங்குவேன்
கல்காரி சிவாவின் அணுகுமுறையே சரி; காலம்தான் தர்மத்தைத் தீர்மானிக்கிறது.
-கண்ணன்.
I agree with Calgary Siva too.
Arun
>>>>>>>>>>>>>>>>>>>>>>
மங்கை என்ற மாத இதழில் "விஜயாவின் டைரிக்குறிப்பு" என்று தேதி,மாதம்,வருடம் வாரியாக ஒரு டைரியையே வெளியிட்டு இருந்தார்.அது ஒரு நீண்ட தொடராக வெளிவந்தது."இது உண்மையில் நடந்த டைரிக்குறிப்பு" என்றும் குறிப்பிட்டு இருந்தார்.ஒரு சிறுமி தன் தாத்தா,பாட்டியிடம் வளர்ந்தது முதல்,அவளது இளம்பிராயத்து குறும்புகள் கலாட்டா என்று வெகுசுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த டைரிக்குறிப்பு திருமண வாழ்க்கையை பற்றி எழுத ஆரம்பித்ததும் படிப்பவரை சோகம் அப்பிக்கொள்ளசெய்துவிட்டது .சந்தேகப்பட்ட கணவனால் பட்ட அடி,உதை,கொடுமைகளை விவரிக்க,விவரிக்க பலமுறை கண்கள் குளமாக கட்டிக்கொள்ள வாசித்து இருக்கின்றேன்.இத்தனை மோசமான படுபாவி யார்?இத்தனையும் தாங்கிகொண்ட அந்த அப்பாவிப்பெண் யார்?என்ற ஆர்வம் படிப்பவரை யெல்லாம் தொற்றிக்கொண்டது.பலமாதங்களாக வந்த,பலரின் ஏகோபித்த பாராடுகளையும்,ஆர்வத்தையும் தூண்டச்செய்த அந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் "டைரிக்குறிப்பில் வந்த விஜயா வேறு யாரு அல்ல.நானேதான்" என்று அதிரவைத்தார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>
http://shadiqah.blogspot.com/2010/05/blog-post_18.html
இந்த மேடையை ஜெயேந்திரருக்கு எதிராக குற்றம் சுமத்த நான் பயன்படுத்தியதாக நினைக்க வேண்டாம். யாரிடமிருந்தும் எந்த ஆதாயத்தையும் நான் எதிர் பார்க்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் நான் அவர் மீது வழக்கு தொடரவில்லை. .......
இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்கள் சொல்லவில்லை?
பதில்:- சங்கரமடத்தின் கவுரவத்தை பாதிக்கும் என்று புகார் கொடுக்க தயங்கினேன். அதோடு தொடர்ந்து மிரட்டல்கள். என்னை கொலை செய்ய நடந்த முயற்சிகள் எனது மகள்களின் எதிர்காலத்தை நினைத்து போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன்.
..........
போலீசில் வாக்குமூலம்
கேள்வி:- ஜெயேந்திரர் நடந்து கொண்டது பற்றி இப்போது போலீசில் புகார் செய்துள்ளீர்களா?
பதில்:- போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார், இன்ஸ்பெக்டர் சரசுவதி ஆகியோர் என்னிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த விஷயம் பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளேன்
...........
http://www.yarl.com/forum/index.php?showtopic=2315&mode=threaded&pid=47640
டோண்டு சார்,
எனக்கு வந்த ஒரு போலி பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறேன்.
http://rishaban.blogspot.com
//ஜெயந்திரர் குற்றவாளி என நீதி மன்றம் தீர்பளித்தாலும், பாரம்பரிய மடத்தை (அதனால் இந்து மதத்தை) தலித் மக்களுக்கு கொண்டு சென்றதால் அவரை நான் தலை வணங்குவேன்//
சிவா!
இஃது ஒரு ஆபத்தான லாஜிக்.
குற்றம் - அதன் டிகிரியை வைத்தே நிர்ணயிக்கப்படும்.
கொடுங்குற்றமாயின் அஃது எதைவைத்துப் பார்ப்பினும் தன் கொடுமைத்தன்மையை இழக்காது.
There can no mitigating circumstances for a cold blooded and premeditated murder, as in the case of Sankararaaman.
In case the seer is guilty of abetting or provoking the murder, no circumstances, such as தலித்துகளுக்கு மடத்தை திறந்து வைத்தார் - can mitigate the severity of the crime.
உங்கள் லாஜிக் சரியென்றால், ச்பெக்ட்ரம் ராசா செய்ததை, அவர் தலித்து, தினகரன் செய்ததை, அவர் தலித்து என்றெல்லாம் சொல்லி, விட்டு விடலாம்.
Gurumurthy interview excerpt:
After starting to investigate the Madaadipathis in a murder case, simultaneously, sleazy rumors were started up about women issues.
I want to tell one truth in this matter. Writer Anuradha Ramanan started stirring up complaints that Jayendrar tried to misbehave with her privately.
But last year, March 21st, in a meeting arranged by Kanchi Kamakoti Sankara Medical Trust in Rathnagiriswar Temple in Besantnagar, the same Anuradha Ramanan has spoken in that meeting praising Jayendrar to the heavens. 'I was suffering from paralysis. If I am able to walk and talk before you, the reason is Jayendrar only,' - like this she talked. Many highly placed people heard this with their own ears.
An Elder whom she had respected 8 months before, today, the same woman is suddenly making shocking accusations against. What is the background behind this? Did someone instigate her against Jayendrar? This is enough to say the police investigation is not going on the proper path.
--Anyway, I think this was the same lady once used to write in varamalar(?), she would name evry big shot in the society were trying to molest her. COrrect me if any one knew it well.
வெங்கட்ரமணனின்…மற்றுமொரு துளையுள்ள பானை! (http://selections.wordpress.com/) என்ற பிளாக்கின் ஸ்தீரி ரத்னம் என்ற பதிவுக்கு நான் அனுப்பிய பின்னூட்டம். தங்கள் பார்வைக்கு:
அனுராதா ரமணன் மறைந்தது உங்கள் மூலமாகத்தான் தெரிகிறது. எழுத்தாளர் அல்லது நமக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகள் இறந்ததை எண்ணிப் பெரிதாகத் துக்கம் கொள்கிறவனில்லை. சுஜாதா இல்லாவிட்டால் என்ன அவர் எழுதியது இருக்கிறதே என்று தோன்றுகிறது. நிற்க. நான் ஒரு இ.கோ.மு.சிங்கம் என்று விளம்பிக்கொள்ள இது அல்ல. உண்மையில் அனுராதா ரமணன் பற்றி நீங்கள் எழுதியதும் அதில் குறிப்பிட்ட தொடர்பு-சுட்டிகளும் (டோண்டு ராகவன்) அதில் படித்ததும் மனதை இளக்கி விட்டது.
அனுராதா எழுத்துகளை நிச்சயம் படித்திருப்பேன் என்று நம்புகிறேன். மனவசம் அதன் நினைவுகள்தான் இல்லை. அப்பாவைக் கேட்டால் ஒருவேளை ஒப்பிக்கக்கூடும். என் நினைவுக்கு வரும் அனுராதா வெள்ளிக் கொலுசு போட்ட ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்போது அவருக்கு பக்கவாதம். வல அல்லது இடது கால் முழுமையாகச் செயல்படவில்லை. அந்தக் காலை இயக்க அவர் அதோடு தொடர்பு கொண்ட விதம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. என்னருமைக் காலே, ஏன் இப்படி எதுவும் செய்யாம இருக்கேடா? எப்பயும் போல செயல்படு. உனக்கு என்ன வேணாலும் வாங்கித் தர்றேன். பாத்தியா இப்பக் கூட உனக்கு கொலுசு போட்டிருக்கேன் – என்ற விதத்தில் காலுடன் பேசிப்பேசி மனோதிடத்தை காலுக்குக் கற்பித்து பழைய நிலைமையை அடைந்தவர்.
நம்முடலின் எந்தவொரு பாகமும் தனித்தில்லை.. ஒவ்வொன்றும் நம்முடன் தொடர்பு (communicate) கொள்கிறது – உணர்வாக சிலசமயம் வலியாக. நாம்தான் தொடர்பு கொள்வதில்லை. அல்லது தொடர்பு கொள்ளத் தெரியவில்லை. அப்படி மனதாரத் தொடர்பு கொண்டால் உடலின் எந்தக் குறைபாட்டையும் களையலாம் என்ற உண்மையை எனக்கு உணர்த்தியவர். பொறுக்கமுடியாத உடல்வலி என்று ஏதாவது வந்தபோது நான் பலமுறை அனுராதா-வின் இந்த உடலுடன் பேசும் வழக்கத்தைக் கையாண்டு மீண்டிருக்கிறேன்.
Kill Bill என்ற ஆங்கிலப்படத்தில் (டொரண்டினோ இயக்கம்; உமா தர்மன் – மையக் கதாபாத்திரம்) உமா தன் சுவாதீனமில்லாத இயக்கமிழந்த கால்களை மீட்டெடுக்க கிட்டத்தட்ட 3 மணிநேரம் (ஒரு காரினுள் அமர்ந்தவாறே) காலுடன் பேசி (wake up wake up) ஜெயிக்கிறார். இந்தக் காட்சியில் எனக்கு அனுராதா ரமணன்தான் நினைவுக்கு வந்தார்.
எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அவர் படைப்பை அணுகுவது சரியா என்று தெரியவில்லை (அல்லது சொல்லமாட்டேன்) ஆனால் அனுராதாவின் (இந்த) மறைவு அவரின் அந்தரங்க வாழ்வை பல இடங்களில் இடுகையாக்கியிருப்பதை உணர்கிறேன். அதன் மூலம் நான் பெறும் தரிசனங்கள் அனுராதா ரமணன் என்பவரின் எழுத்தை மறைத்து அனுராதா என்ற தனிப்பட்ட மனுஷிக்காக மனதை வருத்துகிறது. பாரமாக உணர்கிறேன். எனக்கு தெரிந்த அவரின் முகம் தன்னம்பிக்கை மிக்கது.. காலுக்குக் கொலுசு அணிவித்து அதை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது. அந்த முகத்தின் பின்னடர் துயரங்கள் எனக்குள் துயரத்தை விதைக்கிறது.
இது நல்ல லாஜிக் ?
அல்லது
ஆணாதிக்க எண்ணங்களின் வெளிப்பாடு?
/கணவர் மோசமாக அமைந்து விட்டார். நல்ல வேளையாக சீக்கிரமே மண்டையை போட்டார்/
/குரூரமே இல்லை. அந்த மனிதரால் அப்பெண்மணி அடைந்த துயரங்களை படித்திருந்தால் நீங்களும் அந்த எண்ணத்துக்கே வந்திருப்பீர்கள்./
/அனு பொய்யுரைப்பார் என்பதை நான் நம்பவில்லை. அதுவும் இம்மாதிரியான விஷயங்களை பெண்கள் ஜாக்கிரதையாகவே கையாளுவார்கள்/
ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை, சுயகௌரவம் கிடயாது .
பெண் பச்சதபதுக்கு ஏங்குபவள்.
இப்படி உருவாக படுத்தினால் பெண்களிடம் ஆதாயம் பெறலாம் என்பது ஆணாதிக்க சிந்தனை மட்டுமே.
Referring to Suresh Ram's latest, i post my sequel.
The husband was long dead. When the wife, the writer came to our knowledge, she was already a widow. She wrote about him and people like Dondu Ragavan took every word spoken against the man as truth, nothing but truth. So, he justifies his மண்டையைப்போட்டார்.
It is general and conventional thinking of people to take the side of a woman in her sob story. We never know what happened between them; and why the marriage was on the rock.
It is unfair to animadvert about the man, when our knowledge is based on the statements of the petitionar only.
Is it fair, Mr Dondu?
அனுராதா கணவருக்கு ஒரு நீதி ...
498a வலை பதிவருக்கு ஒரு நீதி!
இது என்ன ஜொள்ளு நீதி !
ஆணாதிக்க, பெண் ஈர்ப்பு மன நிலையின் வெளிப்பாடு என கொள்ளலாம். ஆண் ஒழிப்பு என்பது பெண் ஆதரவு என்கிற நிலையை டோண்டு எடுத்துள்ளார்!
http://dondu.blogspot.com/search?q=498a
//அப்பெண்மணியை பற்றி ஒருவிஷயமும் தெரியாது அனுமானங்களின் அடிப்படையில் இவர் எழுதியிருப்பது பொறுப்பற்ற அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் கூற இயலவில்லை//
//இதுதான் உண்மையா அல்லது உங்கள் அனுமானமா? இந்த கேஸ் பற்றி ஏதேனும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரியுமா? தெரியாது என்றால் இவ்வாறு எழுதுவது என்ன நியாயம் என நினைக்கிறீர்கள்”?//
//சகட்டுமேனிக்கு மனைவியின் தரப்புதான் தவறு செய்கிறது என அடிப்படையே இல்லாமல் பேசக் கூடாது.//
கூறியவர் டோண்டு!!!!!
பெருமைக்கு உரியவர் அனுராதா ரமணன். எழுத்துலகில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்.
அவர் இறக்கவில்லை. எத்தனையோ பேர்கள் பதிவுலகில் அவர் பாதிப்பில் எழுதுவதன் மூலம் தமிழ் இருக்கும் வரையிலும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
செய்தி கேட்டதும் கலங்கிய என் மனம் போல் எத்தனையோ பேர்கள் கலங்கியிருப்பார்கள்.
அது தான் அவருக்கு கிடைத்த அஞ்சலி.
இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெயந்தி சுரேஷ் (எழுத்தாளர் சு(பா)ரேஷின் மனைவி) அவரது அக்காவைப் (அனும்மா என்றே அழைக்கிறார்!) பற்றிய சித்திரம்.
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=258&ncat=2
அன்புடன்
வெங்கட்ரமணன்
அனுராதா ரமணன் என்றொரு மனுஷி - அம்பை
அன்புடன்
வெங்கட்ரமணன்
Post a Comment